புதிய பதிவுகள்2

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிள்ளையான் முன்பே அறிந்து இருந்ததாகவும், விரைவில் இலங்கை புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

3 months 2 weeks ago
குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை; அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - உதய கம்மன்பில 13 JUL, 2025 | 05:12 PM (இராஜதுரை ஹஷான்) இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரசதரப்பு எதிர்பார்க்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை பிள்ளையான் சிறையில் இருந்தவாறே முன்கூட்டியதாகவே அறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால 2025.04.10 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல விடயங்களை விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளதாக' தெரிவித்தார். இதனை நம்பி ஜனாதிபதியும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துதாக குறிப்பிட்டார். பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையானிடம் விசாரணை அதிகாரிகள் ஏதும் கேட்கவுமில்லை, அவரும் ஏதும் குறிப்பிடவுமில்லை. ஆகவே அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைத்தார் என்பதை ஊடகங்களுக்கு குறிப்பிட்டேன். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடுவது பொய், அவ்வாறு குறிப்பிடுபவர்களுக்கு பைத்தியம்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தரை கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துக்காகவே பிள்ளையாள் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சுனில் அந்துனெத்தி குறிப்பிட்டிருந்தார். ஆகவே சுனில் அந்துனெத்தி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும், ஜனாதிபதிக்கும் பதிலளித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த அண்மையில் பாராளுமன்றத்தில் பிள்ளையான் பற்றி குறிப்பிட்டது முற்றிலும் பொய்யானது. பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பிள்ளையான் தமிழ் மொழியில் வழங்கிய வாக்குமூலத்தின் பிரதியை பொலிஸார் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளனர். தமிழ் மொழிமூல வாக்குமூலம் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த வாக்குமூலத்தில் எவ்விடத்திலும் குண்டுத்தாக்குதல்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. உபவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றியே கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன். இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என்றார். https://www.virakesari.lk/article/219891

நடிகை சரோஜா தேவி காலமானார்!

3 months 2 weeks ago
கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்... சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் சினிமாவின் 69, 70 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகை சரோஜா தேவி. இன்றும் அவரது நடிப்பு பேசப்பட்டுதான் வருகின்றது. அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற உச்சகட்ட நடிகர்களுடன் நடித்தவர் இவர். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த சரோஜா தேவி, மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்றாலும் 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண பரிசு படத்தில் நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் சரோஜாதேவி. எம்ஜிஆர் உடன் கிட்டத்தட்ட 26 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதைப்போல சிவாஜி கணேசன் உடன் 22 படங்களில் நடித்திருக்கிறார். பார்த்திபன்கனவு, அன்பேவா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அடுத்தடுத்து சரோஜா தேவி நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தியில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சரோஜா தேவி. அதிகளவு சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி. சரோஜா தேவிக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகும் பல படங்களில் நடித்து அசத்தி வந்தார் சரோஜா தேவி. ஆதவன் படத்தில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்தது. எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் சரோஜா தேவி. மேலும் தனது திறமை மிக்க நடிப்பால் கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://kalkionline.com/entertainment/cinema/actress-saroja-devi-passed-away-fans-shocked

சிஸ்ட்டர் அன்ரா

3 months 2 weeks ago
ஒரு கன்னியாஸ்திரி கரவெட்டியை சேர்ந்தவர். அவரும் அந்நேரம் மக்களோடு மக்களாக மக்களுக்காக சேவை செய்தவர். இன்னொருவர் சிவந்தமேனி அழகான முகத்தோற்றமுடையவர் பெயரை மறந்துவிட்டேன் இவர்கள் இருவரும் எனக்கு அநேகமாக தெரிந்தவர்கள் இதிலொருவர் அல்லது அவர்கள் ஒருவருமே இல்லாமல் வேறொருவராக இருக்கலாம் உங்கள் அன்ரா. அவர் யாராக இருந்தாலும், இறைவனில் ஆறுதலடைவாராக!

பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து!

3 months 2 weeks ago
பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து! அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன். நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். https://newuthayan.com/article/பிள்ளையான்_ஊடாக_சாட்சியத்தை_பெறவே_அரசு__முயற்சி_-_உதய_கம்மன்பில_கருத்து!

வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில்

3 months 2 weeks ago
வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது. குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது கொக்குத்தொடுவாய்-முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது. அதன்தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசு தேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் 52 மனித என்புத்தொகுதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அத்துடன் ஆடைகள், துப்பாக்கி ரவைகள் உட்பட வேறு தடயப்பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத் தொகுதிகளின் பகுப்பாய்வு அறிக்கையில் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள்? என்ன காரணத்தால் இறந்தார்கள் அவர்களின் வயது போன்ற விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வயது எல்லை 12 முதல் 53 வயது வரை உள்ளது. அதேநேரம் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக்காயம் காரணமாகவுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் வெடிப்புக் காயங்களால் ஏற்பட்டுள்ளன என்பது பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/வெடிப்புச்_சம்பவங்களில்_இறந்தோரே_கொக்குத்தொடுவாய்_புதைகுழியில்

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்!

3 months 2 weeks ago
மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்! adminJuly 14, 2025 மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த கள விஜயம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது குறித்த கள விஜயதில் வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் வீடு அமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ,நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் கிராம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் தொடர்ந்து அரச திணைக்கள அதிகாரிகளால் திட்டம் தொடர்பான விளக்கம் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த திட்டம் நடை முறைப் படுத்தப்படும் பிரதேசத்தினை அமைச்சர் குழுவினர் சென்று பார்வையிட்டனர் https://globaltamilnews.net/2025/217843/

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்!

3 months 2 weeks ago
பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்! தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. “பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த பிரமிட் திட்டங்கள் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நிதி நுகர்வோரின் நல்வாழ்வை மேம்படுத்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் அவை தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தேசிய நிகழ்ச்சியின் இலக்காகும். https://athavannews.com/2025/1438963

2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது!

3 months 2 weeks ago
உண்டியல் மூலம் அனுப்புகின்ற பணம் இந்தக் கணக்கில் வராது. 😂 வங்கி மூலம் அனுப்பினால்... வரும். 🙂

தன் உயிரை மாய்த்த மொடல் அழகி: மரணத்திற்கான காரணம் வெளியானது!

3 months 2 weeks ago
தன் உயிரை மாய்த்த மொடல் அழகி: மரணத்திற்கான காரணம் வெளியானது! கருப்பழகி பிரிவில் பட்டம் வென்ற புதுவை மாடல் அழகி சான்ரேச்சல் காதல் திருமணம் செய்த ஓராண்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான அவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் விருதுகளை குவித்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாது புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ‘மொடலிங்’ (பேஷன் ஷோ) பயிற்சி வகுப்புக்களையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இதேவேளை சான்ரேச்சல் தனது திருமணத்திற்காகவும், பேஷன் ஷோ நடத்துவதற்காகவும் பலரிடம் லட்ச்சக்கணக்கில் கடன் பெற்றிருந்ததாகவும் இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் வீட்டில் இருந்த சான்ரேச்சல் தனது தந்தைக்கு அழைப்பினை ஏற்படுத்தி தான் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த (பி.பி.) மாத்திரைகளை தின்று விட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை மகளது வீட்டுக்கு விரைந்து சென்று அங்கு மயங்கிக் கிடந்த மகள் சான்ரேச்சலை மீட்டு புதுச்சேரி அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சான்ரேச்சல் பரிதாபமாக உயிரிழந்தார். இதேவேளை சான்ரேச்சல் இறப்பதற்கு முன்னர் தனது கணவர், தந்தை மற்றும் மாமியார் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தார். அக் கடிதங்களில் ‘தான் தனது குடும்பத்திற்கு தெரியாமல் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதாகவும், அக் கடனை தன்னால் திரும்ப செலுத்த முடியவில்லை எனவும், தனது உறவினர்கள் உதவுவார்கள் என்று எண்ணியதாகவும், ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை எனவும், தற்கொலைக்கு தன்னை அனைவரும் மன்னித்து விடவேண்டும் எனவும் தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார். சான்ரேச்சல் கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் எனவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1439001

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

3 months 2 weeks ago
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்! இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். ஜூலை 13 ஆம் திகதி அதிகாலையில், ஏழு மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார். மேலும், தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் உணர்ச்சி ரீதியான கஷ்டங்களை மேலும் அதிகரிக்கிறது என்றும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1438998

சிஸ்ட்டர் அன்ரா

3 months 2 weeks ago
வாசிக்க கடினமான பதிவு. சில தகப்பன்மாரின் கடுமையான போக்குகளால் பிள்ளைகளின், குறிப்பாக மகன் மாரின் வாழ்க்கைகள் அழிந்து போகின்றன. எனது நெருங்கிய நண்பன்/ வகுப்புத் தோழன். அவனது அப்பா நீதிமன்றத்தில் வேலை செய்பவர், கொஞ்சம் கடுமையான போக்குடையவர். அவனது அண்ணா உயர்தரம் படிக்கும் போது ஒரு பிள்ளையை காதலிக்க தொடங்கினார். அந்த அண்ணா படிப்பிலே மிகவும் திறமைசாலி. மருத்துவம் போகக்கூடியளவு கெட்டிக்காரன். ஒருநாள் தந்தை இந்தக் காதல் விவகாரத்தால் அவருக்கு அடித்து விட்டார். அந்த அண்ணாவும் கோவத்தில் இயக்கத்திற்கு போய்விட்டார். இறுதியாக அவர் வீரச்சாவு. எனது நண்பனும் கெட்டிக்காரன், ஆனால் உயர்தரத்தில் பல்கலை போக முடியவில்லை. இறுதியாக வெளிநாடு போய்விட்டான். அந்த தகப்பனின் நடவடிக்கையால் இறுதியில் கிடைத்த பலன் ஒன்றுமில்லை. காதல், குழப்படி, குடி, புகை தாண்டிதான் அனைவரும் வளரவேண்டும். எனக்கு கிடைத்த அப்பா ஒரு வரம். நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள். எங்களை அவர் டேய் என்று கூட ஒருநாளும் கூப்பிட்டது கிடையாது. அடித்திருக்கிறார், ஆனால் அது காரணத்தோடான அடி. இண்டைக்கும் எனக்கு ஏதாவது ஆலோசனை தேவை என்றால் முதலில் கேட்பது அப்பாவைத்தான். இன்னும் இருபது வருடங்களின் பின்னர் அவர் போய்விடுவார். அந்த வெற்றிடத்தை நினைக்கக் கூட முடியவில்லை. உங்கள் அன்ராவின் இறுதி நிகழ்வுக்கு நீங்கள் கண்டிப்பாக போயிருக்க வேண்டும். உங்கள் வாழ்விற்கு ஒளியேற்றி வைத்த அந்த தெய்வத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கக் கூடிய இறுதி மரியாதை அது. அது உங்களுக்கும் ஒரு முடிவினை, ஆத்ம திருப்தியினை கொடுத்திருக்கும்.

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

3 months 2 weeks ago
இருவரும் தனியாக நிற்கப்போவகாகவே தெரிகிறது. பார்ப்போம்… சொதப்புவது யார்… சாதிப்பது யார் என… (2026 சீமான் வாக்கு வங்கி பற்றிய என் சவாலை ஏற்ற ஒரே மானஸ்தன் வாத்தியார் அண்ணா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது 🤣).

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
ஆதாரம்… என்ன ஆதாரம் வேண்டும்… தமிழ் தேசிய முகமூடியை போட்டு கொண்டு அப்படியே ஆர் எஸ் எஸ் கொள்கைகளை முன் தள்ளியமைக்கான எத்தனையோ ஆதாரங்கள் யாழில் கொட்டி கிடக்கிறன. நான் சீமானை பற்றி இதுவரை எழுதியதை எல்லாம் மீள படித்துபார்க்கவும். ஆதாரம் போதியளவு கிடைக்கும் 🤣.

2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது!

3 months 2 weeks ago
இதில் நாங்கள் ஊருக்கு அவ்வப்போது அனுப்புகின்ற நிதியும் அடங்குகின்றதோ? வெளிநாடுகளுக்கு செல்லும் இலன்கையர்கள் தாய்நாட்டுக்கு நிதி அனுப்புகின்றார்கள். ஆனால், பலரின் வாழ்க்கைத்தரம் மோசமான நிலையில் உள்ளது. அதிகளவு குடும்ப உறவு விரிசல்கள் என தொடங்கி கொலைகள் வரை பிரச்சனைகள் செல்கின்றன. இவை பற்றி அவ்வப்போது செய்திகளில் அறிகின்றோம்.

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

3 months 2 weeks ago
https://i2.res.24o.it/pdf2010/Editrice/ILSOLE24ORE/ILSOLE24ORE/Online/_Oggetti_Embedded/Documenti/2025/07/12/Preliminary%20Report%20VT.pdf ஏயார் இந்தியா விபத்து ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை.

குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
கிந்தியா என்பது யாருக்குமே உதவாத நாடாக போய் விட்டது. சொந்த நாட்டு மக்களுக்கும் பிரயோசனமில்லை. அயல் நாடுகளுக்கும் பிரயோசனமில்லை.
Checked
Fri, 10/31/2025 - 23:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed