புதிய பதிவுகள்2

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
இந்தியா புதிய வீரர்களோடு இறங்குகிறது. கேப்டன் உட்பட அனைவருக்கும் தம்மை டீமில் நிலை நிறுத்த சாதித்து காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது இந்தியாவுக்கு பாரிய அனுகூலமாக இருக்கும். அதேபோல் இந்த வசந்த காலம் வரலாற்றில் இல்லாத வரட்சியான வசந்த காலம். இதுவும் இந்திய ஸ்பின்னர்களுக்கு வசதியாக இருக்கும். இங்கிலாந்தில் சொகைப், லீ இருவரும் இந்த அனுகூலத்தை எந்தளவு சாதமகா பயன்படுத்துவார்கள் என்பதும் சந்தேகமே. இங்கிலாந்து டங் , க்ரோலி போன்ற கவுண்டி தரத்துக்கு மேல் எழும்பி சர்வதேச தரத்தில் ஆட முடியாத இருவரை உள்வாங்கி உள்ளனர். அண்மைய சிம்பாப்வே போட்டியை கண்டு களித்தேன். பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக பந்து வீசினார். 1981 Botham Ashes, 2005 Flintoff Ashes போல இந்த தொடரில் ஸ்டோக்ஸ் தனி ஆளாக பிரகாசிப்பார் என நினைக்கிறேன். சிம்பாவ்வேயில் பென்னட் எனும் ஒரு 21 வயது பையன் விளையாடுகிறார். அருமையான மட்டை அடி. ஆனால் பவுண்சருக்கு தடுமாறுவது போல படுகிறது.

பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்

3 months 2 weeks ago
தகவலுக்கு நன்றி அப்புறம். Jürgen. இல்லையா??? இவர் முன்னாள் Dortmund இன் பயிற்ச்சியாளர் இவர் ஏழு வருட ஒப்பந்தம் உடன் வந்தவர். Liverpool க்கு 2021. இல் முடிந்தது தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது என்று செய்தி பார்த்தேன்

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

3 months 2 weeks ago
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ். வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433387

வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் மூலமாக இந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான 2,064 வீதி விபத்துகளில் சுமாமர் 7,000 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1433399

நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!

3 months 2 weeks ago
நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா! உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது பிடிக்கும் என்று இந்திய நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், 2025-26 (FY26) நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.187 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. இது 2025 நிதியாண்டில் ஜப்பானின் $4.186 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை முந்தியுள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான IMF-இன் கணிப்பு, இந்தியாவிற்கும் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான பரந்த இடைவெளியைக் காட்டுகிறது. 2026 ஆம் ஆண்டில் ஜப்பானின் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.373 டிரில்லியனாக இருக்கும் என கணிக்கப்படும் நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டு 2027 ஆம் ஆண்டில் $4.601 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1433219

உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா?

3 months 2 weeks ago
கிழவி தடக்குப்பட்டு விழும்போது கை முகத்தில் பட்டிருக்கும்! விசுகர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்! பிரான்ஸ் நாட்டில் மேக்ரோனுக்கு வேறு பெண்களே கிடைக்கவில்லையா!!

தோனி ஐபிஎல் ஓய்வை அறிவிக்க தடையாக இருப்பது என்ன? - 2 முக்கிய காரணங்கள்

3 months 2 weeks ago
எல்லாம் பணத்தாசைதான்! தொனிக்கும், சென்னை சூப்பர்கிங்ஸ் நிர்வாகத்திற்கும்! டோனி இல்லாவிட்டால் CSK வெல்லாது என்பதெல்லாம் சும்மா உருவாக்கப்பட்ட மாயை! ரூடராஜ் இம்முறை தொடரிலிருந்து விலக்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன! டோனி, ஜடேஜா, அஸ்வின், ஹூடா, திருப்பார்த்தி, விஜய் ஷங்கர், கோட்ச் பிளெமிங் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா?

3 months 2 weeks ago
உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா? பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றிருந்த நிலையில், அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் வேளை அவரது மனைவி மக்ரோன் மீது அறைவது போன்றும் அதனை அவர் சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போன்றதுமான காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது. இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இமேனுவல் மெக்ரோன்” தானும் தனது மனைவியும் நகைச்சுவை செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷடமாகும் எனத் தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 47 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் 72 வயதான தனது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் மெக்ரோனுக்கும் அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433368

பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்

3 months 2 weeks ago
லிவர்பூலின் வெற்றி அணிவகுப்பில் கார் மோதி விபத்து; 50 பேர் காயம்! இங்கிலாந்து நகரில் லிவர்பூல் கால்பந்து கழகத்தின் பிரீமியர் லீக் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட இந்த விபத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 53 வயதான கார் சாரதியான பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக நம்பப்படவில்லை என்று பொலிஸாரின் ஆரம்ப அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. விபத்தினை அடுத்து சம்பவ இடத்தில் குறைந்தது 20 பேர் சிகிச்சை பெற்றனர். மேலும் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் நான்கு பேர் குழந்தைகள்/சிறுவர்கள் என்றும் அம்பியூலன்ஸ் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெரியவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், தெருவில் வரிசையாக நின்றிருந்த ரசிகர் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்துவதை காண்பிக்கின்றது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் சிலரை முதலில் மோதிய பின்னர் கார் நின்றது. தொடர்ந்து மக்கள் வாகனத்தை நோக்கி விரைந்து வந்து, அதன் கண்ணாடிகளை உடைத்ததாகவும், சாரதி தொடர்ந்து காரை செலுத்தி பலர் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. கார் நின்றதும், ஆத்திரமடைந்த ரசிகர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு, அதன் ஜன்னல்களை உடைத்தனர், பின்னர், காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு சாரதியை அவர்கள் அடையவிடாமல் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் மிகவும் புகழ்பெற்ற ஆண்கள் கால்பந்து அணியான லிவர்பூல் மற்றும் ஊழியர்கள் பிரீமியர் லீக் கிண்ணத்துடன் நகர மையத்தில் திறந்த மேல் பேருந்தில் அணிவகுத்துச் சென்றபோது இலட்சக்கணக்கான ரசிகர்கள் தெருக்களில் வரிசையாக நின்றபோது இந்த சம்பவம் நடந்தது. https://athavannews.com/2025/1433345

சவுதி அரேபியாவில் மது தடை நீக்கப்பட்டதா?

3 months 2 weeks ago
சவுதி அரேபியாவில் மது தடை நீக்கப்பட்டதா? சவுதி அரேபியா, 73 ஆண்டுகால மது தடையை நீக்கும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை திங்களன்று (26) அந் நாட்டு ஒருவர் மறுத்தார். இது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார். 2034 கால்பந்து உலகக் கோப்பையை நடத்த நாடு தயாராகி வருவதால், சுற்றுலா அமைப்புகளில் மதுபான விற்பனையை அனுமதிக்க சவுதி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலுக்கான நம்பகத் தகுந்த ஆதாரம் சுட்டிக்காட்டப்படவில்லை. ஒரு காலத்தில் தீவிர பழமைவாத நாடாக இருந்த இந்த இராச்சியம், தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்தவும், எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் ஒரு இலட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளையும் சர்வதேச வணிகங்களையும் ஈர்க்க சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. சவுதி அரேபியாவின் நடைமுறைத் தலைவரான, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 2017 ஆம் ஆண்டில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவந்தது, பொது இடங்களில் பாலினப் பிரிவினை குறித்த சில விதிகளைத் தளர்த்தியது மற்றும் மதக் காவல்துறையின் அதிகாரத்தைக் குறைத்தது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில் வெளியான மதுபான விதிகள் பற்றிய அறிக்கை இராஜ்ஜியத்தில் ஒரு தீவிரமான விவாதத்தைத் தூண்டியது. சவுதி அரேபியா மற்றும் குவைத் மட்டுமே மது விற்பனையைத் தடை செய்யும் வளைகுடா நாடுகள். சவுதி அரேபியாவில் மதுபானங்களை உட்கொள்ள அனுமதிக்கும் ஒரு சிறிய நடவடிக்கை, கடந்த ஆண்டு தலைநகர் ரியாத்தில் முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் முதல் மதுபானக் கடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பு, இராஜதந்திர அஞ்சல் மூலமாகவோ அல்லது கறுப்புச் சந்தையில் மட்டுமே மதுபானம் கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433365

மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்

3 months 2 weeks ago
லெப்.கேணல் வினோதன் தம்பிப்பிள்ளை பத்மநாதன் பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு வினோதன் தம்பிப்பிள்ளை பத்மநாதன்...லெப்.கேணல் வினோதன் தம்பிப்பிள்ளை பத்மநாதன் பழுகாமம், பெர...தரவைக்குளம் படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ

3 months 2 weeks ago
27 MAY, 2025 | 10:55 AM "நாங்கள் விளையாட்டுக்கு சண்டைபிடித்துக்கொண்டோம்" - விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அளித்த விளக்கம் இதுதான். வார இறுதியில் தென்கிழக்காசிய பயணத்தை ஆரம்பிப்பதற்காக விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்னர் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி பிரிஜிட் கணவரின் முகத்தில் கைவைத்து தள்ளிவிடுவதை காண்பிக்கும் வீடியோ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தருணம் பிரான்சின் தலைப்புச்செய்திகளில் வேகமாக இடம்பிடித்தது. அப்போதுதான் திறந்த விமானக்கதவு ஊடாக வீடியோக்கள் பார்த்த விடயத்தை பிரான்ஸ் ஊடகங்கள் அர்த்தப்படுத்த முயன்றன. பிரான்சின் லு பரிசியன் நாளேட்டின் இணையத்தளம் அறையா அல்லது சண்டையா என கேள்வி எழுப்பியது. பிரான்ஸ் ஜனாதிபதி தனது மனைவியுடன் விமானத்திலிருந்து இறங்கும் படத்திற்கு பலர் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது பற்றி பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி நான் மாணவனாகயிருந்த வேளை அவர் ஆசிரியராகயிருந்தார், நாங்கள் விரும்பி திருமணம் செய்துகொண்டோம், நாங்கள் விமானத்தில் வேடிக்கையாக விளையாடினோம் என தெரிவித்துள்ளார். நாங்கள் விளையாட்டுக்கு சண்டை பிடித்துக்கொண்டோம், இந்த விடயத்தை அளவுக்கதிகமாக ஏதோ புவிகிரக பேரழிவு போல ஊதிப்பெருப்பிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். ஏபிஊடகவியலாளர் எடுத்த வீடியோவில், பிரான்ஸ் ஜனாதிபதி வியட்நாமிற்கு விமானத்தில் வந்து இறங்குவதையும், சீருடை அணிந்த நபர் ஒருவர் விமானத்தின் கதவை திறந்து பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளே காணப்படுவதை காண்பிப்பதையும் ஜனாதிபதி யாருடனோ கதைத்துக்கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது. பிரிஜிட் மக்ரோனின் கரங்கள் ( சிவப்பு ஆடை) மக்ரோனை தள்ளிவிடுவதையும், ஒரு கை மக்ரோனின் வாயையும் மூக்கின் ஒரு பகுதியையும் மூடுவதையும், மற்றை கை அவரது தாடையை பிடித்திருப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி பின்வாங்கி, தலையை திருப்பிகொள்கின்றார், பின்னர் கமராக்கள் தன்னை பதிவு செய்வதை பார்த்ததும், புன்னகைத்து கை அசைக்கின்றார். அதன் பின்னர் ஜனாதிபதியும் மனைவியும் விமானப்படிகளில் காணப்படுகின்றார், ஜனாதிபதி தனது கரங்களை மனைவியை நோக்கி நீட்டுகின்றார், ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை, இருவரும் விமானத்திலிருந்து இறங்குவதையும் வீடியோ காண்பித்துள்ளது. இந்த படங்களும் அதற்கான எதிர்வினைகளும், தவறான தகவல்கள் குறித்து ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, கடந்த சிலவாரங்களாக தன்னை பற்றி வதந்திகளிற்காக வேறு வீடியோக்களும் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215789

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 2 weeks ago
முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் - மோதப்போவது யாருடன்? ஆர்சிபி, குஜராத் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்தெந்த நிலையில் விளையாடப் போகின்றன என்பதற்கான முதல்கட்ட தெளிவு கிடைத்துள்ளது. அதன்படி எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுவது உறுதியாகியுள்ளது. மும்பை அணியைப் பொறுத்தவரை 3 அல்லது 4வது இடத்தைப் பிடித்த ஆண்டுகளில் ஒருமுறைகூட கோப்பையை வென்றது இல்லை. மும்பை கோப்பையை வென்ற 5 முறைகளிலும் அந்த அணி டாப் 2 இடங்களையே பெற்று வந்துள்ளது. பஞ்சாப் அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பை, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பெற்றுள்ளது. ஆனால், ஆர்சிபி அணி இன்று நடக்கும் கடைசி லீக்கில் வென்றால் அந்த அணி முதல் தகுதிச் சுற்றில் விளையாடும். இல்லையெனில் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதவேண்டிய சூழல் ஏற்படும். ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சேர்த்தது. 185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தகுதிச் சுற்றில் வரும் 29ஆம் தேதி மோதவுள்ளது உறுதியாகியுள்ளது. பஞ்சாப் மோதப் போவது குஜராத் அணியுடனா அல்லது ஆர்சிபியுடனா என்பது இன்றிரவு நடக்கும் ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும். இன்றிரவு நடக்கும் கடைசி லீக்கில் லக்னெள அணியை ஆர்சிபி வென்றால், முதல் தகுதிச்சுற்றில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும். ஆர்சிபி தோல்வியடைந்தால், 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் அணி பஞ்சாப் அணியுடன் முதல் தகுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணி, 2வது தகுதிச்சுற்றில் மோதும். அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். ஆர்சிபி என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னெள அணியை வென்றாலே முதல் தகுதிச்சுற்றில் இடம் பெற்றுவிடும். ஒருவேளை முதலிடத்தில் இருந்து பஞ்சாப் அணியைக் கீழே இறக்க வேண்டுமெனில், ஆர்சிபி அணி 200 ரன்கள் சேர்த்து, லக்னெள அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அல்லது 200 ரன்கள் சேர்த்து 21 பந்துகள் மீதம் இருக்கும் வகையில் லக்னெள அணியை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். லக்னெள அணியிடம் ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றாலே முதல் தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுவிடும். ஒருவேளை ஆர்சிபி அணி, லக்னெள அணியை வென்றுவிட்டால், குஜராத் அணி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, எலிமினேட்டர் சுற்றில் மும்பையுடன் மோதும். முதல் தகுதிச் சுற்றில் குஜராத் அணி பஞ்சாப் உடன் விளையாட வேண்டுமெனில், அதற்கு இருக்கும் ஒரே வழி ஆர்சிபி தோல்வி அடைவதுதான். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பிரியன்ஸ் ஆர்யா(63), ஜாஸ் இங்கிலிஸ்(73) ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப். 2வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையிடம் இருந்து வெற்றியைப் பறித்தனர். ஐந்தாவது ஓவரில் சேர்ந்த இருவரையும் பிரிக்க முடியாமல் சிரமப்பட்ட மும்பை பந்துவீச்சாளர்கள் 15வது ஓவரில்தான் பிரித்தனர். வெற்றிக்குத் தேவையான அற்புதமான ஆட்டத்தை வழங்கி, 42 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்த ஜாஸ் இங்கிலிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வேறுமுகம் காட்டிய ஆர்யா, இங்கிலிஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது பிரியன்ஸ் ஆர்யா இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராக அதிரடி பேட்டிங்கில்தான் தன்னை அடையாளப்படுத்தி இருந்தார். முதலில் பேட் செய்த போதெல்லாம் ஆர்யாவின் பேட்டிலிருந்து சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்கும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் பிரியன்ஸ் ஆர்யாவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருந்தது. அணியின் சூழலை உணர்ந்து, மிகுந்த பொறுப்புடன் நிதானமாகத் தன்னால் ஆங்கர் ரோல் எடுத்தும் விளையாட முடியும் என்பதை வெளிப்படுத்திய ஒரு முதிர்ச்சியடைந்த பேட்டராக ஆர்யா இருந்தார். தொடக்கத்தில் போல்ட் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய ஆர்யா, பிரப்சிம்ரன் ஆட்டமிழந்ததும் நிதானத்திற்கு வந்தார். ஜாஸ் இங்கிலிஸ் வழக்கத்திற்கு மாறாக 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியைத் தொடக்கத்தில் இருந்தே இங்கிலிஸ் சிறப்பாகச் செய்தார். இங்கிலிஸ், அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியதும் ஆர்யா நிதானமாக பேட் செய்து, மோசமான பந்துகளில் மட்டுமே பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். ஹர்திக் பாண்டியா ஓவரில் பவுண்டரி, லாங்ஆனில் சிக்ஸர் விளாசி 27 பந்துகளில் அரை சதத்தை விளாசினார். அதுமட்டுமின்றி பும்ரா பந்துவீச்சுக்கும் அஞ்சாத ஆர்யா ஃபைன் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். அஸ்வனி குமார் பந்துவீச்சில் இங்கிலிஸ் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். சான்ட்னர் ஓவரை கதறவிட்ட இங்கிலிஸ், சிக்ஸர், பவுண்டரி என 2 ஓவர்களில் 23 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக பேட் செய்த இங்கிலிஸ் 29 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். பவர்ப்ளேவில் 47 ரன்கள் சேர்த்த பஞ்சாப் அணி அதன் பின்னர் சீராக ரன்ரேட்டை உயர்த்தி 6 ஓவர்களில் 50 ரன்களையும், 10 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டி வெற்றியை நோக்கி ஓடியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜஸ்பிரித் பும்ரா இங்கிலிஸ், ஆர்யா கூட்டணியைப் பிரிக்க ஹர்திக் பாண்டியா பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் 10 ஓவர்களாக இருவரையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியாக சான்ட்னர் வீசிய 15வது ஓவரில் யாதவிடம் கேட்ச் கொடுத்து, ஆர்யா 62 ரன்களில்(2 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ், இங்கிலிஸுடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி உந்தித் தள்ளினார். இங்கிலிஸ் தொடரந்து அதிரிடியாக ஆடி ரன்களையும், பந்துகளையும் சமன் செய்தார். சான்ட்னர் வீசிய 18வது ஓவரில் கால்காப்பில் வாங்கி இங்கிலிஸ் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலிஸ் ஆட்டமிழக்கும்போது பஞ்சாப் வெற்றிக்கு 15 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. களத்தில் இருந்த ஸ்ரேயாஸ், அடுத்து களமிறங்கிய நேகல் வதேரா இருவரும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 26 ரன்களிலும், வதேரா 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பையை காப்பாற்றிய ஸ்கை அரைசதம் இந்த ஆட்டத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கவில்லை. ரிக்கல்டன், ரோஹித் கூட்டணியின் தொடக்கம் பெரிதாக அமையவில்லை. தனது கடைசி லீக்கில் ஆடிய ரிக்கில்டன் 27 ரன்களில் யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3வது வீரராகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித்துடன் சேர்ந்து வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூர்யகுமார் வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 24 ரன்களில் ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா ஒரு ரன்னில் வைஷாக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார், வில் ஜேக்ஸும் 17 ரன்களுடன் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், சூர்யகுமார் தனது வழக்கமான ஆட்டத்தை வழங்கி அரைசதத்தை எட்டினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா கேமியோ ஆடி 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 26 ரன்களில் ஆட்டமிழந்தார். நமன் திர் 20 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த சூர்யகுமார் 57 ரன்களில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். மும்பை அணிக்கு நேற்று ரோஹித், ரெக்கில்டன் கூட்டணி எதிர்பார்த்த தொடக்கத்தை வழங்கவில்லை, நடுவரிசை பேட்டர்களும் ஏமாற்றினர். இதனால் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுத்தத்துடன் ஆடினார். பஞ்சாப் அணி தரப்பில் யான்சென், அர்ஷ்தீப், வைஷாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 'எங்களுக்கு வெற்றி பெறத் தெரியும்' மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில் "நாங்கள் 20 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். இதுவரை நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். இன்று இரவு அவ்வாறு ஆடாததால், அதற்கான விலையைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் 5 முறை கோப்பையை வென்றுள்ளோம். ஆகையால், எப்படி வெற்றி பெறுவது எனத் தெரியும். போட்டி கடினமாகத்தான் இருக்கும். எங்கள் அணியின் முன்னோர்களுடைய வழியைப் பின்பற்றினால், மற்ற அணிகளை வெல்ல முடியும். கடந்த காலங்களில் மும்பை பெற்ற வெற்றியின் வழிகளைப் பின்பற்றினாலே போதுமானது, நாக்-அவுட் சுற்றுக்குள் செல்லலாம்" என்று தெரிவித்தார். மேலும், "எங்கள் பேட்டிங்கில் இன்னும் 20 ரன்கள் கூடுதலாகத் தேவை, எங்கள் பந்துவீச்சும் இன்று சிறப்பாக இல்லை. ஆனால், பஞ்சாப் பேட்டர்கள் சிறந்த ஷாட்களை ஆடினர். அதிகமாக பதற்றப்படத் தேவையில்லை, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்" எனத் தெரிவித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy90pe2nzxyo

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடல்

3 months 2 weeks ago
Published By: VISHNU 27 MAY, 2025 | 04:18 AM குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215773

யாழில் சமையலில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண் தீப்பற்றியதால் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
Published By: VISHNU 27 MAY, 2025 | 04:02 AM யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன்போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியவேளை அது அவரது ஆடையிலும் பட்டு தீப்பற்றியது. பின்னர் அவர் குளியலறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, எரிகாயங்களுக்கு பற்பசை பூசியுள்ளார். இதன்போது அங்கு வந்த கணவர் அயல்வீட்டு பெண்ணொருவருடன் அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மானிப்பாய் பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர். தீ காயத்தால் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/215770

பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்

3 months 2 weeks ago
இதன். பயிற்றுவிப்பாளராக ஜேர்மன்கார். இருக்கிறார் ஒரு மிகச்சிறந்த பயிற்ச்சியாளர் 👍
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed