3 months 2 weeks ago
27 MAY, 2025 | 02:33 PM (எம்.மனோசித்ரா) அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 4 மாகாண சபைகள் மற்றும் 2 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சிற்காக ஆசிரியர் பற்றாக்குறைக்காக 199 நியமனங்கள், சப்ரகமுவ மாகாணத்துக்கு ஆசிரியர் பற்றாக்குறைக்காக 3661 நியமனங்கள் உட்பட சுமார் 6000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும் பொது நிர்வாக அமைச்சின் கீழ் 1658 நியமனங்களும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு மற்றும் தபால் சேவை என்பவற்றுக்கு சுமார் 300 நியமனங்களும் வழங்கப்படவுள்ளன. இவற்றை உள்ளடக்கி 15,073 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215809
3 months 2 weeks ago
வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் வட மாகாண ஆளுநரை சந்தித்தார் Published By: VISHNU 27 MAY, 2025 | 07:44 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட தனுஜா முருகேசன் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக கடந்த செவ்வாய்க்கிழமை (20.05.2027) ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து நியமனம் பெற்ற திருமதி தனுஜா முருகேசன், கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215848
3 months 2 weeks ago
சட்டத்தரணி நோகாமல் நொங்கு சாப்பிட்ட கதை...
3 months 2 weeks ago
மன்னார் மாவட்டத்தில் இந்திய நன்கொடை ஆதரவுடன் நிர்மாணிக்கப்பட்ட ஜிம் பிறவுண் நகர் மாதிரி கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு Digital News Team 27 மே, 2025 மன்னார் ஜிம் பிறவுண் நகர் மாதிரி கிராமத்தினை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் டிபி சரத் ஆகியோர் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து 24 பயனாளி குடும்பங்களிடம் கையளித்தனர். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு ரஞ்சித் ஆரியரத்ன, மன்னார் மாவட்ட செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகாரசபை தலைவர் மற்றும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகள், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், வடக்கு மாகாண சபை மற்றும் மன்னர் மாவட்ட நிர்வாகத் துறை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்திய அரசாங்கத்தின் நன்கொடை மூலமாக இலங்கை அரசின் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து கூட்டாக முன்னெடுக்கப்படும் குறித்த மாதிரி கிராம வீடமைப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. மாவட்ட வீடமைப்பு குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளுக்கு அமைவாக இலங்கை முழுவதிலும் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்கள் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு மாவட்ட வீடமைப்பு சபைகளால் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் 24 வீடுகள் இம்மாதிரிக் கிராம வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்றன. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318469
3 months 2 weeks ago
25 MAY, 2025 | 10:01 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு புதன்கிழமை (28) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறது. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்வதாக தெரிவித்தள்ள சீன தரப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இலங்கை - சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்ப விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் ஊடாக இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்தவும், வணிகப் தொடர்புகளை எளிதாக்கவும், மேலும் பல்வேறு துறைகளில் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வழிகளை அடையாளம் காணவும் முடியும் என குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்த விஜயத்தில் இரு நாடுகளுக்க இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்தவம் பெறுகிறது. ஏனெனில் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும் என்பது சீனாவின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பிராந்தியத்தின் வணிக இராஜதந்திரம் சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு தொடர்ந்தும் சவால்களை ஏற்படுத்துவதாக உள்ளது. வரி கட்டண அளவீடுகள் மற்றும் வர்த்தக தாராளமயமாக்கலின் அளவு குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆறு சுற்றுகளுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முடங்கின. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்ய ஒப்புக்கொண்டாலும், இந்த விடயத்தில் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்க வில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான பெய்ஜிங்கின் முக்கிய செய்தியுடனேயே சீன அமைச்சர் இலங்கை வருகிறார். https://www.virakesari.lk/article/215610
3 months 2 weeks ago
முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். அடுத்த தடவை எல்லோரும் நந்தனை பின்பற்றுங்கள் . ( கொப்பியடியுங்க)😄
3 months 2 weeks ago
ஆனால் அவர்களுக்கு நல்லூரின் வரலாறு தெரியாமல் இருப்பது வியப்பல்ல என்றே கூறினேன். நல்லூரின் வந்தான், வரத்தானுகள் உங்களுக்கும் பிரதேசவாத முத்திரை குத்த கூடும். இந்தளவுக்கு சீமான் கூட பேசியதில்லை. டொட்.
3 months 2 weeks ago
இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு’ தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலி முகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318449
3 months 2 weeks ago
ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஈழத் தமிழர்கள் இருவர் தெரிவு ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் 100 பேரில், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசி ரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். சிங்கப்பூரை தளமாகக் கொண்டு வெளியாகும் ‘ஆசிய விஞ்ஞானி’ என்ற சஞ்சிகை ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் -100 பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். அதன்படி விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில், துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது, தேசிய விஞ்ஞான மன்றத்தினால் வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது, மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன. சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதேவேளை ஆசிய பிராந்தியத்தின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் பெருமையுடன் பட்டியலிடப்பட்டுள்ள கணிதத் துறையின் மூத்த பேராசிரியர் எஸ்.திருக்கணேஷின் குறிப்பிடத்தக்க சர்வதேச சாதனையை இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், கணிதத் துறையில் மூத்த பேராசிரியர் திருக்கணேஷ் ஆற்றிய விதிவிலக்கான ஆராய்ச்சிப் பங்களிப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் ஆசியாவின் முன்னணி அறிவியல் சிந்தனையாளர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை அங்கீகரிக்கிறது. https://thinakkural.lk/article/318413
3 months 2 weeks ago
இதில் தனிப்பட்ட தடுப்பு இல்லை. பொதுக அங்கு இருப்பவர்கள் திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை. கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வீட்டில் உண்பதை ஒருவரும் தடுப்பது இல்லை. அனால், பொதுவாக அவர்களும் அப்படியே. ஒன்றும் வலுக்கட்டாயமாக இல்லை. அப்படி திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை என்பது, மிகவும் பெரிய பிரதேசம், இருபாலையையும் தாண்டி அந்த (பொது) வழக்கம் இருக்கிறது. அதே போல அங்கேயே பூர்வீகம் என்றால் திருமணம் கூட செய்வது இல்லை. முருகனுக்கு பூங்காவனத்தில் திருமணம் முடிந்ததே திருமணம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. ஒன்றில் திருவிழா ஆரம்பம் ஆக முதல் அல்லது திருவிழா முடிந்து திருமணங்கள் நடப்பது. வெளியில் இருந்து வந்தவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருக்கலாம். சொன்னது போல, சமயம், கலாசாரம், சூழல், நம்பிக்கை கலந்த பிரச்சனை.
3 months 2 weeks ago
காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: VISHNU 27 MAY, 2025 | 06:57 PM காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபெற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது என தெரிவித்தார் . யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடமாகாணத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு மிக மோசமான பின்னடைவை ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து இந்த வர்த்தமானி வாபஸ்பெற வைத்தது பெரும் வெற்றி என்றே செல்லவேண்டும். அந்த வகையில் பாராளுமன்றத்தில் இதனை கொண்டுவந்து பாரிய அழுத்தத்தை எற்படுத்துவதற்கு பலர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதில் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேணை கொண்டுவந்தபோது அதனை வழிமொழிந்து அதனை ஆதரித்த இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் எனைய தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கும் நன்றியைக் கூறுவதுடன் நாங்கள் தமிழ்த்தேசிய பேரவையாகக் கொழும்பில் இருக்கக் கூடிய வெளிநாட்டு தூதரங்களுக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் வர்தகமானியை வாபஸ்பொறவைக்கவேண்டும் என்று கூறியிருந்தோம். அவர்களும் எமக்கு வாக்குறுதியளித்திருந்தார்கள். நாங்கள் இவற்றைக் கலந்துரையாடுவோம் என்று அவர்களும் இதனைச் செய்திருக்காவிட்டால் இவற்றைச் செய்திருக்க முடியாது எனவே இவர்களுக்கும் எமது நன்றிகள். இந்த அரசாங்கம் எங்கள் கருத்துகளைக் கேட்டு இவற்றைச் செய்யும் என்றால் இனப்பிரச்சினையே இருக்காது. பாராளுமன்றத்தில் இவற்றை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த அழுத்தங்களை வழங்காது விட்டால் இதனைச் செய்திருக்க முடியாது. மேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி நிசாம் காரியப்பர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் றவுப் ஹக்கிம் அவர்களுக்கும் விசேட நன்றிகள். பிரதமருடன் சந்திப்பில் இவர்கள் இருவரும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தி இருந்தார்கள். இதில் முக்கியமாக இந்த வர்தகமானி வாபஸ் பெறப்பட்டமையானது தமிழ்பேசும் மக்களாக நாங்கள் இணைந்து விவாதித்தது கூட்டு முயற்சியாக வெற்றியளித்தது. இதனைத் தமிழ், முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களித்தார்கள் என்று கூறுவது மட்டுமல்லாது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பொருன்பான்மைக்கு அதிகமாக அவர்கள் இருக்கும் நிலையில் தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைந்து செயற்பட்டதன் வெற்றியாகும். சிங்கள மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள மக்களுக்கு நாம் கேடுதல் செய்யவில்லை என்பதைச் சிங்கள மக்கள் உணரவேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்களுக்கு எதிராக நடக்க வேண்டும் என்பது எமது அடிப்படை கோட்பாடு அல்ல. முஸ்லிம் மக்களையும் நாம் இணைத்துச் செயற்படுவதன் மூலம் நாம் அசைக்க முடியாத பலத்தை வெற்றியை அடையலாம். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன், மற்றும் அருந்தவபாலன் கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/215846
3 months 2 weeks ago
சீ சீ இவன் இப்படி சாகக் கூடாது..
3 months 2 weeks ago
நேற்று சுமந்திரன் இது சம்பந்தமாக சட்ட ஆலோசனை மற்றும் பதிவுகளை செய்திருந்தார். இது பெரும்பாலும் அரசுக்கே உதவும் என்ற கருத்து நிலவுகிறது ( குறைந்தளவு மக்கள் மட்டுமே உரிமை கோரும் போது)
3 months 2 weeks ago
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் டூக் பந்து பாவிக்கின்றது இது குக்கபாரா பிங்க் பந்தினை விட அதிக விசம் கொண்டது, இந்தியணியிற்கு பந்தும் ஆடுகளமும் உயிர்ப்புடன் இருந்தால் தலைவலியாக இருக்கும் இந்த மாதிரியான சூழ்நிலையில் ராகுல் போன்ற ஆட்டக்காரர்கள் சிறப்பான தேர்வு சாய் சுதர்சனும் நல்ல தெரிவாக இருக்கும் என கருதுகிறேன், நமது கில் கூட இந்த சூழலுக்கு மிகவும் சிரமப்படுவார் (பிச்சை வேண்டாம் நாயை பிடி). ஏற்கனவே பாகிஸ்தானுடனான போரில் ஏற்பட்ட தோல்விக்கு பாவம் எனது இந்திய நண்பர்கள் கடும் ஆற்றாமையில் இல்லாத பொல்லாதது எல்லாம் சொல்லி பைத்தியகாரர் போல் அலைகிறார்கள், இந்த தோல்வியினை (விளையாட்டில் கூட தோற்க விரும்பாத) எப்படி எதிர்கொள்ளப்போகிறார்களோ? கடவுள்தான் ஏதாவது அதிசயம் நிகழ்த்தி இந்தியணி வெல்ல வைத்து என்னை காப்பாற்ற வேண்டும்.☹️
3 months 2 weeks ago
ஆரம்பத்தில் இருந்தே இதனை சாத்தியமான வழிகளில் எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சிக்கும் சுமந்திரனுக்கும் பாராட்டுகள். இந்த வர்த்தமானியை பிரசுரிக்கும் வரைக்கும் அரசுக்கு முடிந்தளவு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும். விமல் வீரவன்சவுக்கு இன்னொரு விடயம் கிடைத்து விட்டது இனவாதத்தை கக்குவதற்கு.
3 months 2 weeks ago
சீனாவின் கடந்த ஆண்டிற்குரிய மொத்த தேசிய உற்பத்தி 18.2 (2024)டிரில்லியன் கொண்டுள்ளது. 17.79 டிரில்லியன் 2023 ஆண்டிற்கான மொத்த தேசிய உற்பத்தி உள்ளது எனகருதுகிறேன், சீனாவின் இந்த ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி விகிதம் 5% ஆக வரலாம் என கருதப்படுகிறது. அவ்வாறாயின் மொத்த தேசிய உற்பத்தி 19.11 டிரில்லியனாக வர வாய்ப்புள்ளது. 2023 சீனாவின் தனிநபர் வருமானம் 12.614 அமெரிக்க டொலராகவும் இந்தியாவின் தனிநபர் வருமானம் (GDP Capita) 2480 அமெரிக்க டொலராக உள்ளது.
3 months 2 weeks ago
@வீரப் பையன்26, @செம்பாட்டான் இந்த திரியில் ஈ ஓடுகின்றது. @ஈழப்பிரியன்
3 months 2 weeks ago
இதற்காக பாடுபட்ட கஜேந்திரனுக்கும் மற்றையோர்களுக்கும் பாராட்டுக்கள்.
3 months 2 weeks ago
சாத்தான், இந்தக் கட்டுரையில் சிங்கள இனவாதிகளை பற்றி மட்டுமல்ல, தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்துக் கொண்டு சிங்கள இராணுவத்தால் இலகுவாக படுகொலை செய்ய ஏதுவான சூழ் நிலையை உருவாக்கியவர்களை கண்டிக்காமல், உள்ளுக்கை வரவிட்டு அடிப்போம் என்று சூளுரைத்த தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
3 months 2 weeks ago
அவர் போன வருசத்துடன் போய்விட்டார்!
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed