3 months 2 weeks ago
யாழ். போதனா வைத்தியசாலைக்கு 208 பெரும்பான்மையின தாதியர்கள் புதிதாக நியமனம் 28 MAY, 2025 | 03:54 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் புதன்கிழமை (28) நியமனம் வழங்கப்பட்டுள்ளன. தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/215908
3 months 2 weeks ago
கேரளாவில் சர்ச்சையில் சிக்கியிருக்கும் வேடன்: இந்து அமைப்புகள் இவரைக் குறிவைப்பது ஏன்? பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 29 நிமிடங்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. பா.ஜ.கவைச் சேர்ந்த தலைவர் ஒருவர், வேடனை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். யார் இந்த வேடன்? கடந்த சில நாட்களாக கேரளாவின் சமூக ஊடகங்களிலும் தமிழ்நாட்டின் யூடியூப் சேனல்களிலும் பரவலாக அடிபடும் பெயர் வேடன். கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகரான வேடனை பா.ஜ.கவும் இந்து அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பதால், ஒரு பெரிய சர்ச்சையின் மையப்புள்ளியாக உருவெடுத்திருக்கிறார் அவர். வேடனை தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகத்திற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியது தேசிய அளவில் இவர் மீது கவனத்தைத் திருப்பியிருக்கிறது. 'வேடன்' என்ற பெயர் பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM படக்குறிப்பு, ஒரு பாடகராக உருவெடுக்க முடிவுசெய்த பிறகு, தனக்கு 'வேடன்' என்ற பெயரை அவர் தேர்வுசெய்துகொண்டார். கேரளாவின் திருச்சூரில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, சில காலம் கட்டுமானத் தொழிலாளராக வேலை பார்த்த ஹிரந்தாஸ், ஒருகட்டத்தில் திரைப்பட இயக்குநரும் எடிட்டருமான பி. அஜீத் குமாரின் ஸ்டுடியோவில் பணியாற்ற ஆரம்பித்தார். இந்த காலகட்டத்தில்தான் அமெரிக்க ராப் பாடகரான ட்யுபக் ஷகூரின் தாக்கம் ஏற்பட்டதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வேடன். ஒரு பாடகராக உருவெடுக்க முடிவுசெய்த பிறகு, தனக்கு 'வேடன்' என்ற பெயரை அவர் தேர்வுசெய்துகொண்டார். 2020ஆம் ஆண்டில், கோவிட் பெருந்தொற்று உச்சகட்டத்தில் இருந்தபோது அகில் ராமச்சந்திரன், ஹ்ரித்விக் சசிகுமார் என்பவர்களோடு இணைந்து Voice of the Voiceless என்ற தனது முதல் பாடல் வீடியோவை யூடியூபில் வெளியிட்டார் வேடன். சாதி பிரச்சனை, நிறம் சார்ந்த ஒதுக்கல், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டம் ஆகிவற்றை அந்தப் பாடலில் சுட்டிக்காட்டியிருந்தார். குறுகிய காலத்திலேயே அந்தப் பாடல் 6,00,000 பார்வைகளைக் கடந்தது. (தற்போது 13 மில்லியன் பேர் அந்தப் பாடலைப் பார்த்திருக்கின்றனர்). இதற்கடுத்ததாக Bhoomi Njan Vazhunidam என்ற பாடலை வெளியிட்டார். அதுவும் பிரபலமான நிலையில், கேரளாவில் ஒடுக்கப்பட்டோருக்கான குரல்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டார் வேடன். பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM அதே ஆண்டில் கொச்சி மியூசிக் ஃபவுண்டேஷனின் ஹிப் ஹாப் இசைத் திருவிழாவில் பங்கேற்று கவனத்தை ஈர்த்தார். இதற்குப் பிறகு அவரது இசைத் தொகுப்புகள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. 2021ஆம் ஆண்டில் நாயாட்டு படத்தில் "நரபலி" என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன். இதற்குப் பிறகு மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் 'குதந்திரம்' என்ற பாடலை எழுதிப் பாடினார் வேடன். இந்தப் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாகின. டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலையும் எழுதி பாடியிருக்கிறார் வேடன். கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் (எல்டிஎஃப்) எதிர்க்கட்சியான காங்கிரசும் வேடனை ஆதரித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்து அமைப்புகள் பாடகர் வேடன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளன. தேசிய பாதுகாப்பு முகமைக்கு அனுப்பப்பட்ட கடிதம் பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM 2021ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று எல்டிஎஃப் மீண்டும் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கேரள அரசு பல நிகழ்வுகளை நடத்தியது. அப்படி நடத்தப்பட்ட பல நிகழ்வுகளில் வேடன் பங்கேற்றார். கடந்த மே 18ஆம் தேதியன்று பாலக்காட்டின் கோட்டை மைதானத்தில் வேடனின் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மாநில அரசின் எஸ்.சி. - எஸ்.டி. மேம்பாட்டுத் துறை இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்கு பெருமளவில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, அந்த மைதானத்தில் சேதமடைந்த நகராட்சி சொத்துகளுக்கு மாநில எஸ்.சி. - எஸ்.டி மேம்பாட்டுத் துறை உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் உள்ள பாலக்காடு நகராட்சி கூறியுள்ளது. இதற்குப் பிறகு, பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.கவின் கவுன்சிலரான வி.எஸ். மினிமோல் என்பவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தேசியப் பாதுகாப்பு முகமைக்கும் (என்ஐஏ) வேடன் குறித்து கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், வேடனின் பாடல்களில் பிரதமர் நரேந்திர மோதி குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும் சாதியை முன்வைத்து இந்து சமூகத்தைப் பிளக்க வேடன் முயல்வதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரை தேசிய பாதுகாப்பு முகமை விசாரித்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருக்கிறார். வேடன் மீது ஏற்கனவே சில வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மினிமோல், இருந்தபோதும் ஜாமீனில் வெளிவந்திருக்கும் வேடன் பெரிய அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வன்முறையையும் வெறுப்பையும் தூண்டுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். வேடன் மீதான வழக்குகள் பட மூலாதாரம்,VEDAN/INSTAGRAM மினிமோல் குறிப்பிடும் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. ஏப்ரல் 28ஆம் தேதியன்று, கொச்சியில் ஒரு ஃப்ளாட்டில் தங்கியிருந்த வேடனும் அவரது நண்பர்கள் எட்டுப் பேரும் கேரள மாநில கலால் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதற்குப் பிறகு காவல்துறை அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, அவரது சங்கிலியில் புலிப் பல் (அது சிறுத்தையின் பல் என்றும் குறிப்பிடப்படுகிறது) பதிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சங்கிலி தாய்லாந்தில் வாங்கப்பட்டதாக வேடன் தெரிவித்தார். கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேடனை, புலிப் பல் விவகாரத்தில் கேரள வனத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். பிறகு இந்த வழக்கிலும் வேடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த கைது விவகாரங்கள் அனைத்திலும் கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாகவே வேடனுக்கு ஆதரவாக நின்றது. அக்கட்சியின் மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன், வனத் துறை அவசரப்பட்டு கைதுசெய்ததாகக் குறிப்பிட்டார். அதேபோல வனத்துறை அமைச்சர் இதுபோன்ற விவகாரங்களில் பொதுமக்களின் உணர்வுகளையும் மனதில் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார். இந்து அமைப்புகள் குறிவைக்க காரணம் என்ன? இந்து அமைப்புகள் அவரைக் குறிவைக்க, அவரது பாடல்களில் இருக்கும் அரசியல்தான் முக்கியக் காரணம் என்கிறார் கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான எம்.ஜி. ராதாகிருஷ்ணன். "அவரது பாடல்கள் தீவிரமான அரசியல்தன்மை உள்ளடக்கமும் கொண்டவை. தலித்துகளின் குரலை வலுவாக வெளிப்படுத்துபவை. பிராமண மேலாதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்துபவை. அதனால்தான் இந்து அமைப்புகள் ஆத்திரமடைகின்றன." என்கிறார் அவர். வேடன் பிரதமர் மோதி குறித்து நேரடியாக விமர்சித்திருக்கிறாரா, இல்லையா என்பது ஒருபுறமிருக்க, சாதிய அடக்குமுறை குறித்து அவர் தொடர்ந்து கேள்வியெழுப்புகிறார், அதுதான் அவர்கள் வேடனைக் குறிவைக்கக் காரணம் என்கிறார் எம்.ஜி. ராதாகிருஷ்ணன். இது ஒருபுறமிருக்க, பாலக்காட்டில் நடந்த இந்து ஐக்கிய வேதி கூட்டத்தில் பேசிய அதன் தலைமை டிரஸ்டி பி. சசிகலா, பட்டியல் இன மக்களின் வலுவான நாட்டுப் புற பண்பாட்டில் விழுந்த கறைதான் வேடனின் இசை எனக் குறிப்பிட்டிருக்கிறார். வேடனை சாதி தீவிரவாதி எனக் குறிப்பிட்டதற்காக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் இதழான கேசரியின் ஆசிரியர் என்.ஆர். மது மீது கொல்லம் நகரக் காவல்துறை மே 17ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ldq0pdgjzo
3 months 2 weeks ago
28 MAY, 2025 | 03:22 PM (எம்.நியூட்டன்) அநுர அரசும் ஏனைய அரசுகளைப் போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வினை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலை தான் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்தார். அத்துடன், மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு அதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கனடாவில் அமைக்கப்படுள்ள இனப்படுகொலை நினைவுத் தூபி தமிழ் மக்களுக்கான நீதிகோரலுக்கான உலகின் அங்கீகாரமாகும். இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் சட்டம் பாயும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது. அத்துடன் முள்ளிவாய்க்கால் அழிவுகள் இராணுவத்தின் மீது வீண்பழி சுமத்தும் செயல் எனவும் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியதை ஏற்க முடியாது. அனுர அரசும் ஏனைய அரசு போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலைதான். வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்று குவித்தார்கள். இவை எல்லாம் என்ன? இன அழிப்பில்லையா? இது ஆதாரம் இல்லையா? மோசமான பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாது செய்கின்றது. இதை நாம் ஏற்க முடியாது. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/215902
3 months 2 weeks ago
அண்ணா பல்கலை வளாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு 28 மே 2025, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக அறிவித்த நீதிபதி எம். ராஜலட்சுமி, ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளார். தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. காவல் துறை தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஞானசேகரன் மீது குற்றம் சுமத்தப்பட்ட 11 பிரிவுகளிலும் அரசுத் தரப்பு வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஞானசேகரன் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார், தனது குடும்பம் தன்னை நம்பியுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு அரசுத் தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டது," என்றார். தீர்ப்பை வரவேற்ற அதிமுக, பாஜக இந்தத் தீர்ப்பை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது? ஞானசேகரன் வீட்டுப் படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்? SIT-ல் பணியாற்றிய டிஎஸ்பி ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, "சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். வழக்கின் பின்னணி என்ன? சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் இன்று (மே 28) தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் டிசம்பர் 23ஆம் தேதியன்று இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து காவல்தறையினர் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை மாணவி அடையாளம் காட்டினார். இதையடுத்து டிசம்பர் 25ஆம் தேதியன்று 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கோட்டூர்புரத்தில் உள்ள நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் என காவல்துறை தெரிவித்தது. இந்தச் சம்பவத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் கண்டனம் தெரிவித்தன. வெளியான முதல் தகவல் அறிக்கை Play video, "அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு : குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என தீர்ப்பு", கால அளவு 5,26 05:26 காணொளிக் குறிப்பு, இதற்கிடையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று காலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது. மாணவிக்கு நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள் மட்டுமின்றி, அவரது பெயர், அலைபேசி எண், படிக்கும் பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரது தனிப்பட்ட விவரங்கள் தவிர்த்து, எந்தெந்தப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை ஒளிபரப்பின. பாதிப்பிற்கு உள்ளான மாணவி, தன்னைத் துன்புறுத்திய நபர் செல்போனில் யாருடனோ பேசியதாகவும் அவரை 'சார்' என அழைத்ததாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இதை வைத்து எதிர்க்கட்சிகள் "யார் அந்த சார்?" எனக் கேள்வியெழுப்பின. ''எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம், அது வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இது தொடர்பான அவருடைய செய்தியாளர் சந்திப்பே சர்ச்சைக்கு உள்ளானது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி அ.தி.மு.க. வழக்கறிஞர் வரலட்சுமி, பா.ஜ.க. வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்குப் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை நகர காவல் ஆணையர் கடந்த ஜனவரி 5ஆம் தேதி உத்தரவிட்டார். வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதியன்று சைதாப்பேட்டை ஒன்பதாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கு மார்ச் 7ஆம் தேதியன்று சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஞானசேகரனுக்கு என வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத நிலையில், சட்டப் பணிகள் குழுவின் சார்பில் அவருக்காக இரு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்குப் பிறகு, தனக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே அவர் மீதான குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், சட்டவிரோதமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் 23ஆம் தேதியன்று மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பாக சாட்சிகளின் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்குப் பிறகு மே 20ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதிவரை இரு தரப்பிலும் தங்கள் இறுதி வாதங்களை முன்வைத்தனர். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கபட்டு இருப்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய ஒரு பாலியல் குற்ற வழக்கில் ஆறு மாதங்களுக்குள் புலனாய்வும் நீதிமன்ற விசாரணையும் முடிவடைந்து தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக மேலும் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kqp20vq80o
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2025 | 05:37 PM இலங்கையின் ஓய்வூதியத் திணைக்கள தரவுகளை க்ளோக் ரான்சம்வேர் (Cloak ransomware) குழுவால் திருடப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு தளமான FalconFeeds.io தெரிவித்துள்ளது. இந்த குழுவால் ஏதேனும் தரவு திருடப்பட்டதா அல்லது மீட்டெடுப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டாலும், ஓய்வூதியத் திணைக்களம் சைபர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பகிரங்கமாக எந்தவொரு அறிவிப்பும் விடுக்கவில்லை. அண்மைய அச்சுறுத்தலைத் தொடர்ந்து அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு ஆலோசகர் அசேல வைத்தியலங்கார வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மார்ச் மாதம் கார்கில்ஸ் வங்கியின் தரவு திருடப்பட்டமை தொடர்பில் கண்காணிப்பு தளம் (FalconFeeds.io) கண்டறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த சம்பவங்களை மேற்கொண்டதாக அடையாளம் காணப்பட்ட க்ளோக் ரான்சம்வேர் குழு, முக்கியமான தரவை குறியாக்கம் செய்வதற்கும், மறைகுறியாக்க விசைகளுக்கு மீட்கும் தொகையை கோருவதற்கும், திருடப்பட்ட தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்கும் பெயர் பெற்றது. தரவு குறியாக்கம்: Ransomware பயன்பாடுகள் உங்கள் தரவை என்க்ரிப்ட் செய்து அதன் வெளியீட்டிற்கு மீட்கும் தொகையைக் கோரலாம், இது மீட்கும் தொகை செலுத்தப்படாவிட்டால் தரவு இழப்புக்கு வழிவகுக்கும். https://www.virakesari.lk/article/215910
3 months 2 weeks ago
ஜப்பானை விஞ்சியதா இந்திய பொருளாதாரம்? நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரியின் கூற்று சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் சாய் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் சனிக்கிழமையன்று, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்தியா ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று கூறினார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, திங்களன்று, நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறினார். நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறுவது குறித்த கூற்றுகளுக்கு மத்தியில், இந்தியா ஒரு பெரிய மக்கள்தொகையுடன் பொருளாதார ரீதியாக சரியான திசையில் முன்னேறி வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். அதே நேரத்தில் சில பொருளாதார வல்லுநர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றிய கூற்றுகளில் உள்ள அவசரத்தை சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம், சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது உலக பொருளாதார கண்ணோட்டம் என்ற அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில், இந்தியா 4.187 டிரில்லியன் டாலருடன் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறக்கூடும் என்று மதிப்பிட்டிருந்தது. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி என்ன கூறினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் சனிக்கிழமை ஒரு பொது நிகழ்ச்சியில் சுப்பிரமணியம் பேசுகையில், "நாம் இப்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம், நாம் 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரம், இது எனது தரவு அல்ல. இது சர்வதேச நிதியத்தின் தரவுகள். இன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) அடிப்படையில் ஜப்பானை விட இந்தியா பெரியது" என்று பேசினார். இருப்பினும், இந்தக் கூற்று சற்று முன்னதாகவே கூறப்பட்டுள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாமினல் ஜிடிபி (nominal GDP) அடிப்படையில் ஜப்பானை முந்திக்கொண்டு நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாற உள்ளது என்று தான் சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுகிறது. நாமினல் ஜிடிபி உண்மையில் பணவீக்க விகிதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு மதிப்பிடப்படுகிறது, அதே நேரத்தில் அது இல்லாமல் செய்யப்படும் கணக்கீடு உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி என்று அழைக்கப்படுகிறது. நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் முயற்சியில் உள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடக்கும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் நிதியாண்டின் அனைத்து 12 மாதங்களுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு தேவைப்படுகிறது. எனவே அதுவரை இது ஒரு முன்னறிவிப்பாகவே இருக்கும்" என்றார். பட மூலாதாரம்,@NITIAAYOG படக்குறிப்பு, இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் முயற்சியில் உள்ளது என்று நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி கூறுகிறார். சுப்பிரமணியனின் பேச்சு குறித்து, "இது ஒரு சிக்கலான கேள்வி, அவர் குறிப்பாக என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. சில வார்த்தைகள் விடுபட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவதாக இருந்திருக்கலாம்" என்று விர்மானி தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தியா விரைவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். "இந்தியா சரியான பாதையில் நகர்கிறது" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் பங்குச் சந்தைகள் சமீப காலமாக சிறப்பாக இயங்கி வருகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை விட வேகமாக (சதவீத அடிப்படையில்) வளர்ந்துள்ளது என்று கொள்கை மற்றும் புவிசார் அரசியல் நிபுணர் சித்தார்த் கூறுகிறார். "ஒவ்வொரு முறையும் இந்தியாவின் பொருளாதாரம் வளரும்போது, 'ஆனால் தனிநபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) குறைவாக உள்ளது' என்று கூறப்படும். இந்தியா மொனாக்கோ அல்ல (மேற்கு ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய ஆனால் பணக்கார நாடு). இது வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை கொண்டுள்ளது, 1.4 பில்லியன் மக்களைக் கொண்டுள்ளது" என்றார். மேலும், "2023ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 9.2% அதிகரித்துள்ளது, இது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளை விட அதிகம். சிறிய அளவீடுகளுடன் ஒரு பெரிய நாட்டை அளவிடக் கூடாது. நீங்கள் அதை வேகம், அளவு மற்றும் மூலோபாய தாக்கத்தால் அளவிட வேண்டும். இந்தியா நகர்ந்து கொண்டு மட்டுமில்லை, முன்னேறியும் வருகிறது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார். மற்றொரு பதிவுக்கு பதிலளித்த சித்தார்த், "இந்தியா சரியான பாதையில் செல்கிறது, அதன் தனிநபர் வருமானம் இன்னும் வளர்ந்து வருகிறது, தேக்கமடையவில்லை. ஒரு பெரிய மக்கள்தொகை இருப்பதை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும்." என்றார். இருப்பினும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழக முன்னாள் பொருளாதார பேராசிரியர் அருண் குமார், பிபிசியிடம் பேசுகையில், நாமினல் ஜிடிபி ஜப்பானை விஞ்சும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு என்றும், இந்த கூற்றை வெளியே சொல்வதில் அவசரம் காட்டப்பட்டதாகவும் கூறினார். பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான ஒரு பொதுவான வழி, மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுவதாகும். இது பொதுவாக டாலர்களில் கணக்கிடப்படும். அதே நேரத்தில் சர்வதேச நாணய சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும். பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், "2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.19 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜப்பானின் பொருளாதாரம் 4.186 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகள் டாலர்களில் உள்ளன மற்றும் வேறுபாடு மிகவும் சிறியது. ஆனால் ஜப்பானிய நாணயமான யென்னுக்கு எதிராக ரூபாய் ஏற்ற இறக்கம் அடைந்தால், இந்த வேறுபாடும் போய்விடும்." என்று விளக்குகிறார். இது தவிர, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2 சதவீதமாகவும், பணவீக்க விகிதம் 4.2 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் நிலையானதாக இல்லாவிட்டால், நிலைமை அப்படியே மாறும். நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் கூறுகையில், இந்தியா அதன் திட்டமிடல் மற்றும் சிந்தனைக்கு ஏற்ப செயல்பட்டால், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற 2-3 ஆண்டுகள் மட்டுமே ஆகும். சர்வதேச நாணய நிதியத்தின் ஏப்ரல் மாத அறிக்கையின்படி, தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், 2028 ஆம் ஆண்டில் நாமினல் ஜிடிபி அடிப்படையில் ஜெர்மனியை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாற முடியும். அமெரிக்காவும் சீனாவும் உலகின் இரண்டு சிறந்த பொருளாதாரங்களாக இருக்கப் போகின்றன. ஈயத்தை இனி தங்கமாக மாற்றலாம் - விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு25 மே 2025 அடிக்கடி டீ, காபி குடிப்பது உள்பட இந்த 7 பழக்கங்கள் உங்கள் பற்களை பாதிக்கலாம்?24 மே 2025 பேராசிரியர் அருண் குமார், சர்வதேச நாணய நிதியம் ஒரு தரவு சேகரிக்கும் அமைப்பு அல்ல, அந்த நாடுகள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் அது கணிப்புகளை உருவாக்குகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். அவர், "மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் சரி செய்யப்படுகின்றன. இது தவிர, முழுமையான புள்ளிவிவரங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்றன. சரியான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் காலாண்டு தரவுகளில் கிடைக்கவில்லை, மேலும் புள்ளிவிவரங்களில், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் என்ன நடக்கிறதோ, அது அமைப்புசாரா துறையிலும் நடக்கிறது என்று கருதப்படுகிறது" என்கிறார். மேலும் "ஆனால் பணமதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, வீழ்ச்சியடைந்த துறை வளர்ந்து வருகிறது என்று நாம் கருதுகிறோம். இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது, இதுதான் தரவுகளின் சிக்கல்" என்கிறார். பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், "டிரம்பின் வரிவிதிப்பு போர் உலகப் பொருளாதாரத்திற்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பது மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவையும் பாதிக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு ஏப்ரல் 2025-க்கானதாகும். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார். ஜிடிபியில் சமத்துவமின்மை பட மூலாதாரம்,GETTY IMAGES மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் நாட்டின் செழிப்பிலும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை குறித்து சமூக ஊடகங்களில் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது. எக்ஸ் தளத்தில் துஃபைல் நௌஷத் என்பவர் தனது பதிவில், "பொருளாதாரத்தில் முதல் 1%, 5% மற்றும் 10% ஐ விலக்கினால் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) என்னவாக இருக்கும். பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் உள்ள 50% மக்களின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னவாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். பல பொருளாதார வல்லுநர்கள் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது தனிநபர் வருமானம் சரியான அளவீடாக இருக்கும் என்று கருதுகின்றனர், மேலும் இந்தியா இந்த விஷயத்தில் உலகில் 140வது இடத்தில் உள்ளது. பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், "சில நேரங்களில் ஈலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஒரு மைதானத்திற்குச் சென்றால், அங்குள்ளவர்களின் தனிநபர் வருமானம் திடீரென 1 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று நகைச்சுவையாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் $100 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஒருபுறம், தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது. மறுபுறம், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள் என்பதையும், ஏழைகளின் நிலை பெரிதாக மாறவில்லை அல்லது குறைந்து வருகிறது என்பதையும் இது காட்டுகிறது." என்று கூறுகிறார். "தனிநபர் வருமானமும் உண்மையான நிலைமைகளை காட்டவில்லை, ஏனெனில் சராசரி புள்ளிவிவரங்கள் சமத்துவமின்மையை மறைக்கின்றன" என்றும் அவர் கூறுகிறார். ஜிடிபி குறித்த கூற்றில் ஏன் அவசரம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதில் இந்தியா பலன் அடைந்துள்ளது. சனிக்கிழமை, நிதி ஆயோக்கின் கூட்டம் நடைபெற்றது, அதில் மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோதி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். பேராசிரியர் அருண்குமார் கூறுகையில், பாகிஸ்தானுடனான சமீபத்திய பதற்றத்தின் போது திடீரென போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஒரு வலுவான பொருளாதார சக்தி என்ற பிம்பத்தை உருவாக்கவும், தன்னைப் பற்றி விவாதிக்கப்படவும் அரசு விரும்புகிறது என்று கருத்து தெரிவிக்கிறார். ஜிடிபி கூற்று குறித்து அவர் கூறுகையில், "இது முற்றிலும் அரசியலாகத் தெரிகிறது. பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதல் மற்றும் போர் நிறுத்தத்திற்குப் பிறகு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது இருக்கலாம். அதேசமயம் இந்தியாவின் தனிநபர் வருமானம் ஜப்பானின் தனிநபர் வருமானத்தில் பதினைந்தில் ஒரு பங்கு மட்டுமே" என்று சுட்டிக் காட்டுகிறார். ஜப்பானின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2010 ஆம் ஆண்டில், இது 6 டிரில்லியன் டாலர்களாக இருந்தது, ஆனால் வயதான மக்கள் தொகை, உற்பத்தியில் தேக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக இது சுருங்கிவிட்டது. அதே நேரத்தில், இந்தியா அதன் நாமினல் ஜிடிபியை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. இது உலக தரவரிசையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. Worldometers வலைத்தளத்தின்படி, ஜப்பானின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 33,806 டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 2,400 டாலராக இருக்கும், இது கென்யா, மொராக்கோ, லிபியா, மொரீஷியஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை விட குறைவு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4q03327kko
3 months 2 weeks ago
28 MAY, 2025 | 08:45 PM தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கை பயணத்துக்கு மாறாக, பொது மக்களின் நலனுக்கான பயணத்தை அனைத்து பிரஜைகளும் தொடர வேண்டுமெனவும், கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 வருட வாழ்க்கை மற்றும் 64 வருட துறவு வாழ்க்கை அதற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை ருஹூனு மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற "கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 ஆவது ஜனன தின" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒழுக்கயீனத்தின் எல்லை வரை சென்றுகொண்டிருந்த நாட்டை மீண்டும் ஒழுக்க நிலைக்கு கொண்டுச் செல்லவதற்கான வேலைத்திட்டத்தில், மகா சங்கத்தினருக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும், அரசாங்கம் என்ற வகையில் அதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் உரிய வகையில் முன்னெடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டிற்குள் எதிர்பார்க்கப்படும் ஒழுக்கத்தின் புதிய திருப்பத்தை அரசியல் முறையின் மாற்றத்தில் மாத்திரம் செய்ய முடியாதெனவும், பெறுமதி மிகுந்த ஒழுக்க கட்டமைப்பு மற்றும் பெறுமதியின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட சமூக பிணைப்புக்களுக்கும் அந்த பணி சார்ந்துள்ளதெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அதேபோல் தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது தொடர்பிலான கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் குணத்தை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 75 வருட பிக்கு வாழ்வில் அவர் பெற்றுக்கொண்ட அறிவுபூர்மான விடயங்களை வாழ்வில் இணைத்துக்கொள்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்வான கௌரவமாகும் என்றும் தெரிவித்தார். இலங்கை ராமண்ய மகா நிகாயவின் தென்னிலங்கை பிரதான சங்கநாயக எம்பிலிபிட்டியே ஸ்ரீ போதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகருமான கலாநிதி வண.ஓமல்பே சோபித நாயக்க தேரர், தேசிய நெருக்கடி காலங்களில் அச்சமின்றி முன் நின்று நாட்டுக்காகவும், பௌத்த சாசனம் மற்றும் தேசத்திற்காகப் போராடிய ஒரு தேரர் ஆவார். அவர் ஆற்றிவரும் தேசிய, சமூக, சமயப் பணியைப் பாராட்டி, அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்தி, இந்தப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாநிதி வண.ஓமல்பே சோபித நாயக்க தேரரால் இதன்போது ஜனாதிபதிக்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. கம்போடிய சங்கராஜ தேரர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசை வழங்கியதுடன், போதிராஜ வித்தியாலயம் மற்றும் ஸ்ரீ போதிராஜா தர்ம நிலைய அறநெறிப் பாடசாலையின் மாணவன் துலித மேனுஜ பாடிய “கலாநிதி வண.ஓமல்பே சோபித தேரர்” பாடல் அடங்கிய இறுவட்டும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க வண.மகுலேவே விமல தேரரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க வண.கரகொட உயங்கொட மைத்திரிமூர்த்தி தேரர், மகாவிஹார வாங்சிக ஷியாமோபாலி மகா நிகாயவின் சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம சங்கநாயக ஸ்ரீபாதானாதிபதி, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண.பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர் உட்பட மகாசங்கத்தினர், கொரியாவின் ஜொகே மஹா நிகாயவின் பிரதான சங்கநாயக்க மற்றும் சங்கெசா பௌத்த விகாரையின் விகாராதிபதி யொந்தம் தேரர் உட்பட வெளிநாட்டு அதிதிகள் குழு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ராமன்ய மகா நிகாய பரிபாலன சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/215940
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,@RKFI 28 மே 2025, 09:29 GMT புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருந்த நடிகர் கமல் ஹாசன், தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோருகின்றனர். இந்நிலையில், இன்று (மே 28) இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் கமல் ஹாசன், "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, "கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல் ஹாசன்) தெரியாது." என்று தெரிவித்துள்ளார். கமல் பேசியது என்ன? பட மூலாதாரம்,@RKFI மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றிருந்தார். மேடையில் பேசிய கமல்ஹாசன், "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்" என்று பேசியிருந்தார். கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன? பட மூலாதாரம்,KAMALHAASAN/X கமல் ஹாசனின் பேச்சு சர்ச்சையான நிலையில், இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த தக் லைஃப் திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த விஷயத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் அன்பினால் தான் அப்படி சொன்னேன்." என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பல வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழியின் வரலாற்றை பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நான் எதையும் குறிப்பாக அர்த்தப்படுத்த விரும்பவில்லை. தமிழ்நாடு அடிப்படையில் தனி சிறப்பு கொண்டது. இங்கு ஒரு மேனன், ஒரு ரெட்டி, மாண்டியாவிலிருந்து வந்த ஒரு கன்னட ஐயங்கார் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஒரு முதலமைச்சரால் எனக்கு ஒருமுறை சென்னையில் பிரச்னை வந்தபோது, கர்நாடக மக்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். எனவே தக் லைஃப் படத்தையும், எனக்கு எதிரான மொழி பிரச்னையையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மொழியைப் பற்றி பேச தகுதியில்லை, நான் உள்பட. இத்தகைய மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டுவிடுவோம்." என கூறினார். மேலும், "நான் அளிப்பது விளக்கம், பதில் அல்ல. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது" என்றும் கூறினார். கர்நாடக பாஜக என்ன கூறுகிறது? பட மூலாதாரம்,VIJAYENDRA YEDIYURAPPA படக்குறிப்பு, கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், "ஒருவர் தனது தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் ஆணவம் காட்டுவது நாகரிகமற்ற நடத்தை. குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவராஜ்குமாரை தனது தமிழ் மொழியைப் புகழ்வதில் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம். இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் கன்னடம் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது. மேலும், "எந்த மொழி எந்த மொழியிலிருந்து தோன்றியது என்பதை வரையறுத்து கூற கமல்ஹாசன் வரலாற்றாசிரியர் அல்ல. ஆனால் இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கன்னட மொழி, இந்திய வரைபடத்தில் செழிப்பையும் நல்லிணக்கத்தையும் குறிக்கிறது. கன்னடர்கள் மொழியை வெறுப்பவர்கள் அல்ல, ஆனால் கன்னட நிலம், மொழி, மக்கள், நீர் மற்றும் கருத்துக்களைப் பொறுத்தவரை ஒருபோதும் சுயமரியாதையை தியாகம் செய்ததில்லை என்பதை ஒரு உண்மையான ஞானியைப் போலப் பேசிய கமல்ஹாசன் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். திரைப்படத்தை வெளியிட விட மாட்டோம் என எச்சரிக்கை பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி (கோப்புப் படம்) கன்னட அமைப்புகள் சிலவும் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கமலை எச்சரித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது என்றும் கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா? இன்று நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்திருந்தால், உங்கள் மீது நாங்கள் கருப்பு மை பூசி இருப்போம். நீங்கள் தப்பிவிட்டீர்கள். கர்நாடகாவுக்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்றும் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். செவ்வாய்கிழமை பெங்களூருவில் கமல் ஹாசன் ஒரு நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. அந்த இடத்தில் கன்னட அமைப்பினர் சிலர் கூடி கன்னடத்தில் கோஷங்கள் எழுப்பினர். தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவை மட்டுமல்லாமல் கன்னட அமைப்பினர் பலர் சமூக ஊடகங்களில் கமல் ஹாசனுக்கு கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyr17pd5rpo
3 months 2 weeks ago
மனிதப்பேரவலத்திலும் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களா?!
3 months 2 weeks ago
எந்த தமிழ் பா.உ/ அரசியல்வாதியின் முயற்சி பற்றியும் நான் மெனக்கெட்டு எழுதப் போவதில்லை! ஏனெனில், அதற்குத் தானே மக்கள் தெரிவு செய்து அனுப்பி பாராளுமன்றக் கன்ரீனில் "சத்தான" உணவைச் சாப்பிட அனுமதித்திருக்கிறார்கள்😂? பிறகேன் தனியாக நன்றி பாராட்டுதல் இவர்களுக்கு? ஆனால், உங்களைப் பொறுத்த வரை, நன்றி பாராட்டுவதிலும் குறை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினேன். சுமந்திரன் இதைப் பற்றி பாராளுமன்றத்திற்கு வெளியே பேசியதும், பேட்டிகள் கொடுத்ததும், முயற்சிகள் செய்ததும் யாழிலேயே செய்தியாக இருக்கிறது. ஆனால், கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் பேசியது மட்டும் தான் உங்கள் பார்வைக்குத் தெரிந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சியின் பயன், ஆனால் அதைக் கூட ஒரு ஒற்றைப் பா.உ வின் resume யில் போடும் அவசரம் உங்களிடம். இது உங்களிடமும், ஏனைய "சுமந்திரன் லவ்வர்சிடமும்" அடிக்கடி நான் காண்பது தான். சில ஆண்டுகள் முன்னர், கண்ணதாசன் என்ற யாழ் பல்கலை விரிவுரையாளரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள். அவருக்காக மன்றில் ஆஜராகி அவரை விடுதலை செய்ய உதவியது சுமந்திரன். அங்கேயும் "இதற்காக உழைத்த எல்லோருக்கும் நன்றி" என்று மட்டும் நீங்கள் எழுதிய போதும் இதே போல "சில பெயர்களை உச்சரிக்கக் கூடாது" என்ற கட்டுப் பாட்டுடன் இருக்கிறீர்கள் என அறிந்து கொண்டேன்😂!
3 months 2 weeks ago
சிவன் ஒரு புறம் இருக்க.....63 நாயன்மார்களும் ஒரு புறம் இருக்க.... சைவசமயம் இயற்கையோடு ஒட்டிய மதம். சைவர்கள் இயற்கையையும் வழிபடுபவர்கள்.
3 months 2 weeks ago
இந்த செய்தியில் இந்த " மனிதாபிமான உணவு வினியோகம்" 😎 என்பதன் பின்னணியைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. காலாகாலமாக, காசாவிற்கு உணவு வினியோகம் செய்வது ஐ.நாவின் தொண்டு அமைப்புகள் தான். இஸ்ரேல், காசாவின் மீதான தாக்குதலை ஆரம்பித்த பின்னர், இந்த உணவு வினியோகத்தை மிகவும் குறைத்து விட்டது (ஒரு நாளைக்கு 500 லொறிகள் என்பதில் இருந்து 5 லொறிகள் என்ற நிலை தற்போது). உணவை ஆயுதமாகப் பிரயோகிக்கும் இந்த மிருகத் தனத்திற்கு பைடன் ஆட்சியில் ஆதரவு இருக்கவில்லை. எனவே, கொஞ்சமாவது லொறிகளின் எண்ணிக்கையை உயர்வாக வைத்திருந்தார்கள். இப்போது ட்ரம்ப் ஆட்சி வந்தவுடன், புதிதாக மீண்டும் தாக்குதலையும், உணவுத் தடுப்பையும் அமல் படுத்தி விட்டார்கள். இந்தப் பட்டினிப் பின்னணியில், பணம் பார்க்கும் ஆசையில் அலையும் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்களும் (security contractors), சில உணவு முகவர்களும் ட்ரம்பை அணுகியிருப்பார்கள் என ஊகிக்கிறேன். அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான் அமெரிக்க ஒப்பந்தக் காரர்களால், இஸ்ரேல் படையின் பாதுகாப்புடன் உணவை வினியோகிக்கும் GHF என்ற அமைப்பு. பெயரில் "மனிதாபிமானம்" இருந்தாலும், இது ஈராக்கிலும், ஆப்கானிலும் செய்தது போல, அமெரிக்க ஒப்பந்தக் காரர்களுக்கு வருமானம் தேடும், காசா மக்களை மந்தைகள் போல அலைய விடும் ஒரு திட்டம் என்பது பலருக்கும் தெரியும். எனவே, ஐ.நா அமைப்புகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்து விட்டன. "செய்து காட்டுகிறோம் பார்" என்று நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் நாளே இப்படியாக ஆகி விட்டது. என்றாலும் மீண்டும் மீண்டும் இப்படி செய்வார்கள், காசா மக்கள் அள்ளுப் படுவர், இஸ்ரேல் படைகள் சுடும். இறுதியில் "காசா மக்களின் பட்டினிக்கு அவர்கள் இப்படி நடந்து கொள்வது தான் காரணம்" என்று பிரச்சார வீடியோக்களை வெளியிட்டு விட்டு, கடையை மூடி விட்டுப் போவார்கள்! இந்த GHF பற்றிய மேலதிக தகவல்கள்: https://www.bbc.com/news/articles/cev41em3r9lo
3 months 2 weeks ago
சைவசமயத்தில் - சைவம் என்று ஒரு தெய்வமும், கடவுளும் இல்லை (அப்படி உணவு முறை, கலாசாரமே இருக்கிறது). அதில் - சைவசமயத்தில் - சைவம் குறிப்பது சிவத்தை. நாவலர் குழப்பியதால் வந்த விளைவு.
3 months 2 weeks ago
ஒரு சிறிய வீட்டிற்குள் சாமி அறை ஒரு பக்கம். நாலு காலடி தூரத்தில் இருக்கும் சமையலறையில் பறப்பன,ஊர்வன,நீந்துவன என விதம் விதமான சமையல்கள் தூள் கிளப்பும். 😂 வேறு எந்த மதங்களிலும் இல்லாதவாறு சைவசமயத்தில் மட்டும் தான்..... காளி தெய்வத்திற்கும் வைரவர் தெய்வத்திற்கும் மாமிச படையல்கள் இருக்கின்றது.எமது முன்னோர்களின் நினைவு தினங்களுக்கு பிதிர் எனும் நாளில் மச்ச உணவுகள் மிக முக்கியமாக படையலாக படைக்கப்படுகின்றது. இந்து மதத்தில் தான் அதாவது பார்ப்பனர்களால் அவர்கள் பிழைப்பிற்காக கொண்டுவரப்பட்டது தான் ஒரு சில நடைமுறைகள்.
3 months 2 weeks ago
பல முக்கிய வெளிநாட்டு வீரர்கள் playoffக்கு இல்லையாம். பஞ்சாபுக்கு மாக்கோ ஜென்சன் மும்பைக்கு வில் ஜாக்ஸ் குஜராத்துக்கு ஜொஷ் பட்லர் பெங்களூருக்கு லுங்கி எங்கிடி இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். பெங்களூருக்கு ஜொஷ் ஹேசுல்வுட் திரும்ப வந்திருக்கிறார். அவர்களுக்கு இது பெரும் பலம். மற்றவர்களுக்கு அந்த அந்த வீரர்கள் இல்லாதது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
3 months 2 weeks ago
நீண்ட காலத்திற்கு பின்னர் காதுக்கு இனிமையான அமைதியான பாடலை கேட்கின்றேன்.😍 https://youtu.be/QJ-4za89Y6k?si=J7im5V7LmBCF6pfY பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை ஆண் : ………………………………. தீம் தோம் த தீம் தன தோம் தன தோம் பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம் இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம் பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் மற்றும் குழு : கண் விழித்தேன் அவன் காணவில்லை கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் : என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வழி தீரவில்லை பெண் மற்றும் குழு : கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் மற்றும் குழு : போதும் போதும் என சென்றாயா ஆண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா உறவும் நீ வேண்டியெங்கும் ஆண் : …………………………….. பெண் : ……………………………….. ஆண் : ஓ….. பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண் : மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண் : நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண் மற்றும் பெண் : வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண் : காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண் : மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண் : காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ…. பெண் : இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை
3 months 2 weeks ago
இது கலாசாரம். சமயம் அல்ல. (சும்மா நாவலரின் பேய்க்காட்டும் கதை.) சைவசமயம் பிள்ளைக்கறி, மாமிச நைவேத்தியதுக்கு இடம் அளிக்கிறது. அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம். அப்படி உண்ணாதவர்கள் சைவசமயிகளாக இருப்பது வேறு விடயம். சைவம் (உணவு அல்லது உணவு கலாசாரம் என்பதால் ), சைவ சமயம் என்று ஒரு சமயமே இல்லை என்று வரும். சைவம் குறிப்பது சிவத்தை. (சிவனும் ஆரம்ப ஒரு வடிவத்தில் சுடலையில் போசிப்பவன், பூசிப்பவன் - இது இப்போதும் இருப்பது அகோரிகளில்.)
3 months 2 weeks ago
தமிழர்கள் பின்பற்றும் சமயங்கள் ஒன்றல்ல. இந்துசமயம், சைவசமயம், கிறித்தவ சமயம் என்று பல்வேறு சமயங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். அவைகளில் சைவசமயத்தை தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் மச்சம், மாமாமிசம் உண்பதில்லை. இருந்தும் தமிழர்கள் எந்தமதத்தவரின் கோவில்களையும் கடந்து செல்லும்போதும் அவைகளுக்குரிய கடவுள்களை வெளிப்படையாக இல்லாவிடினும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாக வணங்கிச்செல்வார்கள். அந்த வழக்கம் அனேகமாகத் தமிழர் அனைவரிடத்தும் உறைந்து உள்ளது .🙏
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed