புதிய பதிவுகள்2

பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர்

3 months 2 weeks ago
பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர் பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பிள்ளைகள் ஒரு அரசின் அடிப்படை பொறுப்பாகும். இலங்கை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் ஊடாக சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் உச்சகட்ட நலனிற்காக செயற்படுவதற்கும் கடமைப்பட்டுள்ளது. இதனூடாக குறித்த பொறுப்பு அரசிற்கும், பாடசாலை கட்டமைப்புக்கு பொறுப்பாக செயற்படும் அரச பிரதிநிதிகளான அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளது. அண்மைக்காலமாக பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை கண்ணோக்கும் போது, பாடசாலை கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் முகம்கொடுக்க நேரிட்டுள்ள துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. எனினும் வீடு உட்பட பாடசாலையும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சூழலாக அமைய வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர். இதனால் பாடசாலை சூழல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. பாடசாலை கட்டமைப்பிற்குள் பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் எந்த வகையிலான சித்திரவதையும் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாதெனவும், பாடசாலைக்குள் பிள்ளை முகம்கொடுக்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், வேறு வகையிலான புறக்கணிப்பு, உள ரீதியான துஷ்பிரயோகம் என எதுவாக இருந்தாலும் அதனை மறைத்து அல்லது புறக்கணிப்பு செய்வதை மேற்கொள்ளக் கூடாது. அது மறைப்பதற்கு அல்லது புறக்கணிப்பதற்கான விடயம் அல்ல. பாடசாலையின் பிரதான அதிகாரம்மிக்க நபராக பாடசாலை அதிபரினால் அவை குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளை அலட்சியப்படுத்துவது முழு பாடசாலை கட்டமைப்பும் தோல்வியடைவதற்கு காரணமாக அமைகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிக விரைவாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பதிலளிப்பு தாமதமடையும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு முகம்கொடுத்த பிள்ளை உடல், உள ரீதியாக வழமைக்கு திரும்ப முடியாத அளவிற்கு பாதிப்பை எதிர்கொள்ளும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரித தலையீடு செய்வதன் ஊடாக உயிரைக் காப்பாற்றுவதற்கும், சுய கௌரவத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையிலுள்ள ஏனைய அதிகாரிகள் சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையிலுமான வன்முறைகளை அடையாளம் காண்பதற்கும், தடுப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும் தேவையான அறிவு மற்றும் அது தொடர்பில் செயற்படுவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தான அறிவைக் கொண்டிருப்பதும் மிக முக்கியமானது. தொடர்ச்சியாக பிள்ளைகளுடன் தொடர்புபடும் உங்கள் அனைவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், சட்டரீதியிலான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அறிந்திருத்தல் வேண்டும். சிறுவர் உள்ளங்களை புரிந்துகொள்வதற்கும், சிறுவர்களுடன் சரியான முறையில் செயற்படுவதற்கும் உதவும் சிறுவர் உளவியல் கல்வியை பெற்றிருப்பதும் மிகவும் முக்கியமானது. சிறுவர்களுக்குள் ஏற்படும் அழுத்தங்களை அடையாளம் காண்பதற்கும், சிறுவர்களுக்குள் ஏற்படும் அதிருப்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் விதத்தை புரிந்துகொள்வதற்கும் சிறுவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் கருணையுடனும் பழகி அவர்களுக்கு பதிலளிப்பதற்கு கல்வித் துறையில் சேவையாற்றும் அதிகாரிகள் பயிற்சிகளைப் பெற்றிருப்பது உட்பட தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த அறிவைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமானது. சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்து வகையிலான சித்திரவதைகளிலிருந்து அவர்களை பாதுகாப்பது அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் நீதிபதி எல்.டீ.பீ.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா, ஆணையாளர் பேராசிரியர் டீ.தனராஜ், மேல் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர்களும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1433466

5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானம்!

3 months 2 weeks ago
5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானம்! 5ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், வலுவான உள்நாட்டு விண்வெளி தொழில்துறையை வளர்க்கும் விதமாக பாதுகாப்புத்துறையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படும் 5ம் தலைமுறைக்கான போர் விமானங்களை உருவாக்கும் இந்த திட்டத்தில், தனியாரும் பங்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், சுயாதீனமாகவோ அல்லது கூட்டு முயற்சியாகவோ இந்த திட்டத்திற்கான ஏலத்தில் பங்கேற்கலாம். அரசின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு இயங்கும் ஒரு இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 5ம் தலைமுறை போர் விமானம், 2035ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தெரிவித்துள்ளது. ‘இந்தத் திட்டத்திற்கு 2024ம் ஆண்டு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433435

“கோல்டன் டோம்” திட்டத்தில் இணைய கனடாவுக்கு அமெரிக்கா விசேட சலுகை!

3 months 2 weeks ago
“கோல்டன் டோம்” திட்டத்தில் இணைய கனடாவுக்கு அமெரிக்கா விசேட சலுகை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தான் முன்மொழிந்த “கோல்டன் டோம்” ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் கனடா இணைவதற்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ளார். மேலும், அந்த செயல்பாட்டில் தனது இணைப்பு அச்சுறுத்தலையும் புதுப்பித்துள்ளார். இது குறித்து செவ்வாயன்று (27) சமூக தளத்தில் டரம்ப் இட்ட பதிவில், அவர்கள் (கனடா) ஒரு தனி தேசமாக இருந்தால், கோல்டன் டோமில் சேர கனடாவுக்கு 61 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். ஆனால், அவர்கள் எங்கள் நேசத்துக்குரிய 51 ஆவது மாநிலமாக மாறினால் அவ்வாறு எந்த செலவும் இருக்காது என்று கூறினார். கனடா இந்த சலுகையை “பரிசீலனை செய்து வருகிறது” என்றும் அவர் கூறினார். கனடாவின் இறையாண்மையை வலியுறுத்திய மன்னர் சார்லஸ், நாடாளுமன்றத்தில் அரியணை உரை நிகழ்த்திய அதே நாளில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மேலும், பிரதமர் மார்க் கார்னி தனது அரசாங்கத்தை ஒரு பெரிய ஐரோப்பிய பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் சேர உறுதியளித்தார். கடந்த வாரம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்திற்கான திட்டங்களை வெளியிட்டார். இது 175 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான, பல அடுக்கு அமைப்பாகும், இது முதல் முறையாக அமெரிக்க ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும். ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், இந்த அமைப்பு 2029 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும், “அவை விண்வெளியில் இருந்து ஏவப்பட்டாலும் கூட” ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறினார். கோல்டன் டோம் திட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஒப்புக்கொண்டுள்ளார். கனடாவிற்கு இது நல்ல யோசனையா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆம், கனடியர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது நல்லது என்று கடந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கார்னி கூறினார். இருப்பினும், கனடா இன்னும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. இந்த மாத தொடக்கத்தில், கனடாவின் இறையாண்மை “விற்பனைக்கு இல்லை” என்று ட்ரம்பின் முன்னிலையில் கார்னி தெளிவுபடுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1433489

சீனாவின் EV சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய BYD விலைக் குறைப்பு!

3 months 2 weeks ago
சீனாவின் EV சந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய BYD விலைக் குறைப்பு! BYD பல மொடல்களின் விலையைக் குறைத்து சீனாவில் மற்றொரு மின்சார வாகன விலைப் போரைத் தூண்டியுள்ளது. இதனால், சீனாவில் மின்சார வாகன உற்பத்தியாளர்களின் பங்குகள் சரிந்தன. உலகின் மிகப்பெரிய புதிய ஆற்றல் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம் (NEV), பல மொடல்களில் 10-30% வரை விலைகளைக் குறைத்துள்ளதாக cnevpost அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மலிவு விலையில் கிடைக்கும் BYD சீகல் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் போன்ற மொடல்களுக்கு, இப்போது குறிப்பிட்ட காலத்திற்கு $A7,736க்கும் குறைவான விலையில் விலை தொடங்குகிறது. அதாவது அதன் வழக்கமான தொடக்க விலையான சுமார் $A9,670 இலிருந்து கிட்டத்தட்ட $A1,934 விலைக் குறைப்பு. சீனா உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாகும். சீன மின்சார வாகன உற்பத்தியாளர்கள் பல சந்தைகளில் போட்டியிட அனுமதிக்கப்படாததால், இது மிகப்பெரிய மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மின்சார வாகன சந்தையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433421

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அடாவடி இல்லாமல் இருக்கவேணும் என்று வாத்தியாரே சொல்லிப் போட்டார். ஒன்றும் சொல்லாமலே இருக்கவேண்டும் போல. ஊரில சொல்லுலினம். எவ்வளவு அமைதியான பிள்ளை என்று.

வவுனியாவில் விபத்து; கணவன் பலி; மனைவி, மகன், மாமனார் படுகாயம்

3 months 2 weeks ago
நெல்லியடி IIS இல் O/L எடுத்த பின்னர் இவரிடம் கணனி படித்திருக்கிறேன். அநியாயச் சாவு. ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். மனைவியினதும் மகனினதும் நிலை மிகவும் கவலைக்கிடம் என கேள்விப்பட்டேன். பூரண சுகமடைய வேண்டுகிறேன். விமானத்தால் இறங்கி காரை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டிருக்கிறார்கள். கட்டுநாயக்க பகுதியிலேயே பல அறைகள், சிறிய கொட்டல்கள் மலிவாக எடுக்கலாம். தங்கி வெளிக்கிட்டிருக்கலாம். யாழ் கொழும்பு தனி வாகனப் பயணங்கள் இரவில் கூடவே கூடாது. இங்கிருந்து போகும் எம்மவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வான் எடுப்பிச்சு உடனேயே கிளம்புவார்கள். வான் சாரதி அப்போது தான் யாழில் இருந்து எட்டு மணித்தியாலம் ஓடி வந்திருப்பார். இன்னொரு எட்டு மணித்தியாலத்துக்கு அவரால் எப்படி ஓட முடியும்?

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

3 months 2 weeks ago
எனக்கு மற்றையோர் பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. கஜேந்திரகுமாரே முதலில் குரல் கொடுத்ததாக நினைக்கிறேன். இப்போ இதில உங்களுக்கு எங்க நோவு எடுக்குது? ஏனையோர்களின் விபரங்கள் தெரிந்தால் நீங்களும் எழுதலாம். நாங்களும் பாராட்டலாம். அதைவிட்டுட்டு எங்க பிழை பிடிக்கலாம் என்று காத்திருப்பதை தவிர்கலாமே.

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
அவர்கள் சேர்சசை தாண்டி வெளியே வந்து மக்களின் வாழ்வியலின் தனிப்பட்ட சுதந்திரங்களின் தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாமிய, இந்து, சைவ தலிபான்கள் அப்படியல்ல. மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களில் தலையிடுபவர்களே தலிபான்கள் ஆவர்.

கோட்டாவின் ஆட்சியை தொடரும் அனுர அரசாங்கம்! தமிழ் முஸ்லீம் மக்கள் இணைவு!

3 months 2 weeks ago
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்றக் குழு கண்டன காணி சுவிகரிப்பு வர்த்தமானியை அரசாங்கம் மிளபொற்றமை வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று கஜேந்திரகுமார் பென்னம்பலம் தற்போதைய அரசாங்கம் உப்பை மையமாகக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு யாழில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்தறிவு நிகழ்வு

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நமக்கு நடந்ததும் அதேதான். குருடன் யானை கீறினமாதிரி கீறி விட்டது. சென்னைதான் களத்தைக் கவிட்டுவிட்டுது. இல்லாவிட்டால், நாமெல்லாம் கீழையிருந்து இதே நிலைமில் இருந்திருப்போம். தோனியின் காலம் முடிந்தது என்ற ஒரு எண்ணத்தோட செய்த தெரிவுகள் நம்மளோடது. RCB எதிர் MI இறுதிப்போட்டி எப்படி இருக்கும்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அதுதான் எனக்கும் விளங்கவில்லை, எனது பதிலுக்கு நேர்மாறாக எழுந்துங்கள் என கூறியிருந்தேன் பல தடவை எதிர் எதிர் அணியில் இருந்தும் கடைசியாக இப்படி பக்கத்தில் பக்கதில் வந்துள்ளோம்? அடுத்த ஐ பி எல் இல் ஓரளவு புரிந்துணர்வு இருக்கும் என கருதுகிறேன், போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கலந்து கொண்டேன் எங்கு வந்தாலும் சந்தோசம், ஆனால் எதிர்பார்த்தது கடைசியாக வரக்கூடும் என ஆனால் இன்னமும் போட்டி முடியவில்லை, அதனால் எதுவும் நிகழலாம், பையன் வேறு கூறினார் போட்டியின் முடிவில் பாருங்கள் எங்குள்ளேன் என அது போல இப்போது இருக்கும் நிலை தடாலடியாக சரியுமோ தெரியவில்லை?

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
நீங்கள் அடிக்கடி தலிபான்ஸ் எனும் சொல்லை பாவிப்பதால் உங்கள் உருட்டல் பிரட்டல்களை வறட்டல்களை வத்திக்கான் நோக்கியும் திசை திருப்ப வேண்டியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கூட்டி கழித்து பார்த்தால் பெரிய தலிபான்கள் வத்திக்கானில் தான் இருக்கின்றார்கள்.

தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது

3 months 2 weeks ago
தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது. தலைமை பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்று தருவேன்
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed