புதிய பதிவுகள்2

கமலுக்கு ராஜ்யசபா இடம், வைகோவுக்கு இல்லை : மு.க.ஸ்டாலின் எடுத்த கறாரான முடிவு - அ.தி.மு.க. முகாமில் நிலவரம் என்ன?

3 months 2 weeks ago
ராஜ்ய சபாவுல எங்களுக்கு தெரியாத இந்தி மொழியிலையா பேசறீங்க இருங்கடா என்ன பேசினாலும் புரியாத மாதிரி ஒரு ஆளை அனுப்புறோம் பாருங்க...!!!

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன?

3 months 2 weeks ago
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து ஈலோன் மஸ்க் வெளியேறுகிறார் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் தனது நேரம் "முடிவுக்கு வருகிறது" என்று கோடீஸ்வரர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் சமூக ஊடக தளத்தில், டோஜ் (DOGE) என்று அழைக்கப்படும் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்த வாய்ப்பு அளித்தமைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். மஸ்க் ஒரு "சிறப்பு அரசாங்க ஊழியர்" ஆக நியமிக்கப்பட்டிருந்தார்- ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டால், மே மாத இறுதியில் அவரது பணிக்காலம் முடிவடைகிறது. டிரம்பின் பட்ஜெட் மசோதாவை விமர்சித்திருந்த நிலையில், மஸ்க் வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதா டிரம்ப் நிறைவேற்ற நினைக்கும் முக்கியமான மசோதாவாகும். "ஒரு சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக் காலம் முடிவடையும் நிலையில், வீண் செலவுகளைக் குறைக்க வாய்ப்பளித்த அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று மஸ்க் எக்ஸ் தளத்தில் எழுதினார். "DOGE பணி காலப்போக்கில் வலுப்பெறும், ஏனெனில் இது அரசாங்கம் முழுவதுமான ஒரு வழக்கமாக மாறும்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் மசோதா மீது மஸ்க் அதிருப்தி வெள்ளை மாளிகை புதன்கிழமை இரவு ஈலோன் மஸ்க்கை சிறப்பு அரசு ஊழியர் பொறுப்பிலிருந்து விலக்கும் பணிகளை தொடங்கும் என்று பிபிசி நம்புகிறது. பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் "ஏமாற்றம்" அடைந்ததாக அண்மையில் கூறியிருந்த நிலையில் மஸ்கின் வெளியேற்றம் நடக்கிறது. ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா உரிமையாளரான மஸ்க் பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளி சிபிஎஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், "இந்த மசோதா அரசின் பற்றாக்குறையை அதிகரிக்கும்" என்றார். இது தன்னால் வழிநடத்தப்படும் டோஜ் துறையால் செய்யப்படும் "வேலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்று அவர் நினைத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES குடியரசுக் கட்சியின் மெகா நன்கொடையாளரான மஸ்க், குழப்பம் நிறைந்த நிலையற்ற அரசியல் ஈடுபாட்டில் இருந்து விலகுகிறார். இந்த அரசியல் நுழைவு தான் அவரை டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக மாற்றியது. அதேநேரத்தில் அவரது டெஸ்லா மின்சார கார் நிறுவனம் பின்னடைவை சந்தித்தது. டெஸ்லா சமீபத்தில் இதே நிலைமை தொடரக்கூடும் என்று முதலீட்டாளர்களை எச்சரித்தது. வளர்ச்சிக்கான கணிப்பை வழங்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது. ஈலோன் மஸ்க் கடந்த மாதம் முதலீட்டாளர்களிடம் டோஜுக்கு ஒதுக்கும் நேரம் "கணிசமாகக் குறையும்" என்றும், "எனது அதிக நேரத்தை டெஸ்லாவுக்கு ஒதுக்குவேன்" என்றும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8615pe51zdo

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அதன் அதுதான் இறுதி வெற்றியாளர் என்றும் கணித்திருந்தேன்.சென்னைப் பாசம் காரணமாக.ஆனால் சென்னை அண் என்னை வைச்சு செய்து விட்டது.

தினமும் 520 மில்லியன் ரூபாய் சிகரெட்டுக்காக செலவிடப்படுகின்றது - மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 11:16 AM எமது நாட்டில் மாத்திரம் தினமும் 520 மில்லியன் ரூபாய் சிகரெட் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. அத்தோடு, கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு புகைத்தலினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனை தெரிவித்துள்ளது. எமது நாட்டில், புகைத்தல் பாவனையினால் பொதுசுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சூழல் ஆகிய அனைத்திற்கும் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச புகைத்தல் கணக்கெடுப்பின் படி உலகளாவிய ரீதியில் 19.4 வீதமானோர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர் (3.2 மில்லியன் பேர்), இவ் ஆய்வறிக்கையில் இலங்கையில் புகைத்தலில் ஈடுபடுவோரின் சதவீதம் 9.1வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது (1.5 மில்லியன் பேர்) என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. எமது நாட்டில் இடம்பெறுகின்ற புகைத்தல் விழிப்புணர்வு செயற்றிட்டங்களின் பிரதிபலனாக புகைத்தல் பாவனையின் வீதம் படிப்படியாக குறைவடைந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் புகைத்தல் பாவனையினால் எமது சாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணிகின்றனர், இந்நிலைமையானது நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. மேலும் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு புகைத்தல் பிரதான முதன்மை காரணியாக விளங்குகின்றது, இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுள் 83வீதமான மரணங்கள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்ற மரணங்களாகும். இவை ஒரு நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும். புகைத்தல் பாவனையினால் பாரியளவான பொருளாதார தாக்கங்கள் ஏற்படுகின்றன. தினமும் சுமார் 4.9 மில்லியன்கள் சிகரட் வடிப்பான்களும் (cigarette filters) ஒரு வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன. இதனூடு 7000 நச்சுப்பொருட்கள் சூழலுடன் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது, இதனால் சூழல் மாசுபடுவதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது. "சிகரெட்டுகளுக்கான வரியைக் குறைப்பது அதிக சிகரெட் கடத்தலுக்கு வழிவகுக்கும் என மக்கள் நினைக்கிறார்கள், இது முற்றிலும் உண்மையல்ல" என தேசிய புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதாக தேசிய அதிகாரசபை தலைவர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை புகையிலைக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் அடைந்து வருகின்றதொரு நாடாகும். பல்வேறு சமூக செயற்பாடுகளினால் புகையிலை நிறுவனத்தின் தலையீடுகள் வெளிக்கொணரப்படுகின்றன மேலும் அவை சமூகக் குழுக்களினால் நிறுத்தப்படுகின்றன. 2003ஆம் ஆண்டு புகையிலைக்கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தை எமது நாட்டிற்குள் அங்கீகரித்தமையும், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகார சபை சட்டமும் புகையிலைக் கட்டுப்பாடில் இந்த சாதகமான நிலைமைக்கு பெரிதும் பங்களிக்கின்றன. இலங்கையின் தவறான சிகரட் வரிவிதிப்புக் கொள்கையின் விளைவாக, 2024 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்க வேண்டிய ரூபா 6 பில்லியன்கள் இழக்கப்பட்டுள்ளது. வெறிட்டா ஆய்வுகளின் படி, சிகரட்டுகளுக்கான வரி-விலை விகிதம் 15 கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாரியளவில் சரிவை சந்தித்துள்ளது. அவ்விகிதாசாரம், தற்போது 67வீதம் முதல் 69வீதம் வரை காணப்படுகின்றது, இது உலக சுகாதார ஸ்தாபனத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 75வீதத்தை விடவும் குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215944

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

3 months 2 weeks ago
அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் விதித்த வரி - தடைவிதித்தது அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் 29 MAY, 2025 | 11:01 AM அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏப்பிரல் மாதம் விதித்த வரிகளை தடுக்கும் உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உலக நாடுகளின் இறக்குமதிகள் மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிகளிற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களிற்கு மேலதிக வரிகளை விதிப்பது என்ற தீர்மானத்தை அறிவித்ததன் மூலம் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறினார் என மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. புதிய வரிகளிற்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளிக்கவேண்டும். ஆனால் இது தேசிய அவசரநிலை என்பதால் தனக்கு அதற்கான அதிகாரம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்பிரல் மாதம் விடுதலை தினத்தன்று டிரம்ப் அறிவித்த புதிய வரிகளிற்கே நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி சில மணிநேரங்களிற்குள் டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரம் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டிரம்பின் துணைத் தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர் சமூக ஊடகங்களில் நீதிமன்றத்தை விமர்சித்து எழுதினார்: "நீதித்துறை சதி கட்டுப்பாட்டை மீறிவிட்டது."என தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை : "தேசிய அவசரநிலையை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளின் வேலை அல்ல என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/215957

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!

3 months 2 weeks ago
திரையுலகில் பொன்விழா கண்ட நடிகர் ராஜேஷ் காலமானார்! 29 May 2025, 10:34 AM கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நடிகராக திகழ்ந்த நடிகர் ராஜேஷ் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (மே 29) காலை காலமானார். அவருக்கு வயது 75. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1949ஆம் ஆண்டு பிறந்த அவர், சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக அவர் பணியாற்றி வந்த நேரத்தில், முதன்முறையாக 1974ஆம் ஆண்டு மூலம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அவள் ஒரு தொடர் கதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனையடுத்து அவரது இரண்டாவது படமாக 1979ஆம் ஆண்டு வெளிவந்த ’கன்னிப் பருவத்திலே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி ஆச்சரியம் அளித்தார். அதன்பின்னர் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாப்பாத்திரையும் ஏற்று முத்திரை பதித்தார். தமிழில் இதுவரை தாய்வீடு, சிறை, சத்யா, ஜெய்ஹிந்த், நேருக்கு நேர், தீனா, ரமணா, விருமாண்டி, தர்மதுரை, சர்க்கார் என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இந்த நிலையில் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த ராஜேஷ், திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை 8.15 மணிக்கு காலமானார். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்து பார்த்த மருத்துவர்களும் அவரது இறப்பை உறுதி செய்தனர். ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://minnambalam.com/actor-rajesh-died-today-may-29/

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

3 months 2 weeks ago
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் May 29, 2025 10:57 am யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. யாழ். மாவட்டத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதற்கான மேற்படி வேலைத்திட்டத்துக்கு ‘மீண்டெழும் அலைகள்‘ பெயர் சூட்டப்பட்டுள்ளது. தூரநோக்கை அடிப்படையாக கொண்டு செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2025 மற்றும் 2035 காலப்பகுதியை மையப்படுத்தியதாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எவை, அவை எவ்வாறு முன்னெடுக்கப்படும், அதன்மூலம் மக்களுக்கும், நாட்டுக்கும் கிடைக்ககூடிய அனுகூலங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணத்திற்கான திணைக்கள அதிகாரிகளால் மேற்படி கலந்துரையாடலின்போது தெளிவுபடுத்தப்பட்டது. யாழ். மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றாடல், சுற்றுலா உட்பட சகல விடயங்களுக்கும் மீண்டெழும் அலைகள் என்ற தூர நோக்கத்திற்குள் உள்வாங்கப்பட்டு, கட்டியெழுப்படவுள்ளன. இதன்மூலம் யாழ்.மாவட்டம் மறுமலர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நகர அபிவிருத்தி சபை அதிகாரிகளின் திட்டத்தை கண்காணித்த பின்னர், தமது தரப்பிலுள்ள யோசனைகளையும் அமைச்சர் முன்வைத்தார். வளமானதொரு யாழ்.மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு இத்திட்டம் பக்கபலமாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேற்படி சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இணைப்பாளர் ஸ்ரீ வாகீசன், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் விரிவுரையாளருமான சு.கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். https://oruvan.com/special-discussion-on-major-development-projects-to-be-implemented-in-jaffna-district/

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

3 months 2 weeks ago
ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'டாஜ்' என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுக்ள்ளார். டாஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தது டிரம்புக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக அமைந்து இருக்கிறது. இதனால் ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டு பின்னடவுகளை ட்ரம்ப் எதிர்கொண்டுள்ளார். அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பு, பரஸ்பர வரி விதிப்பு என பல கெடுபிடிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வந்தார். அதேபோல, அமெரிக்காவில் வாங்குவதை விட அதிகம் விற்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் ட்ரம்ப் வரி விதித்தார். ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்க நிறுவனங்கள், கடுமையான பாதிப்பை சந்தித்தன. எனவே ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmb8sk34g0136qpbsrqjrezte

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!

3 months 2 weeks ago
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த ராஜேஷ், திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம் ஆனைக்காடு, தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய இடங்களில் படித்தவர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ். 'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். . சிறந்த குணச்சித்திர நடிகரான ராஜேஷ், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்ல சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றார். 47 ஆண்டுகளுக்கும் மேலாக 'கன்னிப் பருவத்திலே' தொடங்கி 'சர்க்கார்' திரைப்படம் வரை நடித்து இருக்கிறார். ஹீரோ முதல் குணச்சித்திர வேடங்கள் வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய பாத்திரங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். https://tamil.news18.com/entertainment/cinema-famous-tamil-actor-rajesh-died-due-to-illness-nw-mma-ws-l-1816937.html

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன?

3 months 2 weeks ago
அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன? 29 MAY, 2025 | 10:19 AM அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலன்மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த ஜனாதிபதிடொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். பின்னணி என்ன? - ட்ரம்ப்பின் புதிய வரி சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். ‘ஏமாற்றமடைந்தேன்’ என அதை விமர்சித்திருந்தார். இந்நிலையில் அந்த விமர்சனத்தை வெளிப்படுத்திய மறுநாளே அரசு பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார். புதிய வரி மசோதாவின் சில அம்சங்களில் தனக்கு விருப்பம் இல்லை என ஊடகத்துடனான பேட்டியில் மஸ்க் தெரிவித்திருந்தார். இனி ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு சார்ந்து மஸ்க் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட செயல் திறன்துறையில் மஸ்க்கை நியமித்தார் ட்ரம்ப். தேர்தலில் ட்ரம்ப்புக்கு மஸ்க் உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது. செயல்திறன் துறையானது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை வழிகாட்டுதலை வழங்கும். அதேபோல பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க தொழில்முனைவோர் அணுகுமுறையை உருவாக்கும் என்றும் வெள்ளை மாளிகை மேலாண்மை அலுவலகம் மற்றும் போன்ற விவகாரங்களில் இந்த துறை பங்கு கொள்ளும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/215948

’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’

3 months 2 weeks ago
’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’ உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும், வாய் மூலமான மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாகவும் அமைய வேண்டும் என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/எம்-ஏ-சுமந்திரன்-கஜேந்திரகுமார்-நாளை-பேச்சு/175-358211

தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ?

3 months 2 weeks ago
தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ? வி.ரி.சகாதேவராஜா மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இன சௌஜன்யத்தை, நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார். கல்லாற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்... பெரிய கல்லாறு பாலத்தின் அருகே பிரதான வீதியில் இராணுவ சூழல் இருந்த காலகட்டத்தில் இந்த புத்தர் சிலை ஒரு தனியார் காணியில் வைக்கப்பட்டிருக்கின்றது . சின்னவத்தை பிரதேச பிக்கு ஒருவரினால் இந்த சிலை அடாத்தாக அந்த காணியிலேயே வைக்கப்பட்டதாக அறிகிறேன். அந்த காலகட்டத்திலே இராணுவம், பொலிஸார் ஆட்சி நிலவிய காலம் என்ற காரணத்தினால் பொது மக்களாலோ ஏனைய அரசியல் வாதிகளாலோ எதுவும் செய்ய முடியாத ஜனநாயக மற்ற ஒருசூழ்நிலை இருந்தது . ஆனால், இன்று சகல இன மக்களையும் அனுசரித்து சாதி, இன,மத பேதம் இல்லாமல் ஊழல் ஒழிப்போம் என்று வந்த அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. எனவே, முழு தமிழ் மக்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் வாழ்கின்ற இந்த கல்லாற்றில் அதுவும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக தனியார் காணியில் அடாத்தாக வைக்கப்பட்டது. இன்று அங்கு எந்த பௌத்தர்களும் இல்லை. வணங்குவதற்கு கூட யாருமில்லை. இன்று அது அங்கு அவசியமா? என்ற கேள்வி எழுகின்றது. இது தொடர்பாக இந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வாய்திறப்பதாகவும் இல்லை . எதற்கெல்லாமோ குரல் எழுப்புகிறார்கள். ஆனால், எமது உரிமையோடு இருப்போடு மண்ணோடு கூடிய இந்த விஷயத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதேபோல் உகந்தமலையிலும் புத்தர் சிலை முளைத்துள்ளது. இந்துவாகப் பிறந்த புத்த பகவான் எந்த இடத்திலும் தன்னை கொண்டு இப்படி ஏனைய இன வேறிடத்தில் நிறுத்தி இன உறவை சீரழிக்குமாறு கூறவில்லை .உகந்த மலையில் அதே செயல்பாடு தான் தொடர்ந்திருக்கிறது. எனவே, நல்லிணக்க அரசாங்கம் இதை கவனத்தில் கொண்டு இவ்வாறு தனித் தமிழர்கள் வாழ்கின்ற இடங்களில் இருக்கின்ற இந்த புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கொள்கிறேன் என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/தனித்தமிழர்-வாழும்-கல்லாற்றில்-புத்தர்-சிலையா/175-358224
Checked
Tue, 09/16/2025 - 01:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed