புதிய பதிவுகள்2

Bond Master(பொண்ட் மாஸ்ரர்.

3 months 2 weeks ago
பொண்ட் மாஸ்ரர், ஆரியகுளத்தடிக்கு அண்மையில் என நினைக்கிறேன், பொண்ட் இன்ஸ்ரிரியூற் என்ற ரியூசன் சென்ரர் (உள்ளூர் மாணவர்களின் பாசையில் "கொட்டில்" என்பார்கள்😂) ஒன்றை பல காலமாக நடத்தி வந்ததால் இந்தப் பெயர் வந்தது. இன்றுதான் இவரது உண்மையான பெயர் எனக்குத் தெரியும். "பொண்டர்" என அழைக்கப் படும் இவர், தான் தனியாக அல்லாமல், யாழ்ப்பாணத்தில் இருந்த பல ஆசிரியர்களின் உதவியோடு மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு, மாணவர்களிடம் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு பரீட்சை வைத்து, அதை மேலும் சில ஆசிரியர்களின் உதவியோடு திருத்தி பெறுபேறுகளை வெளியிடுவார். "பொண்டர் அச்சிடும் கேள்விகள் பரீட்சையிலும் வருகின்றன" என்ற ஆச்சரியம் கொண்டோர், தாமாக கடந்த கால வினாத்தாள்களைக் (past papers) கண்கொண்டும் பார்க்காத மாணவர்களாக இருந்திருக்கின்றனர் என்று அர்த்தம். ஏனெனில், இலங்கையில் இவரது காலத்தில் இரசாயனவியல் போன்ற விஞ்ஞானப் பாடங்களுக்காக பரீட்சை வினாக்களைத் தயாரிப்போர் தெற்கில் இருக்கும் குறிப்பிட்ட சில பேராசிரியர்களாகத் தான் இருந்தனர் - இவர்களின் பெயர்கள் கூட யாழ்ப்பாண மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியும். கேள்விகளை இந்தப் பேராசிரியர்கள் மீள் சுழற்சி செய்வதும் அடிக்கடி நடக்கிற விடயம். ஆனால், இந்தத் தகவல்கள் கிடைக்காத ஒரு மாணவர் குழுவினரிடம் இருந்து, இந்த மாதிரிப் பரீட்சைகள் மூலம் பணம் சேர்க்கும் ஒரு முறையை பொண்டர் செய்து வந்தார். அவருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொட்டில் அமைத்துக் காசு பார்த்தவர்கள் இப்படி செய்ய முடியாமைக்கு, மாணவர்களின் சுயமான தேடலுல், பயிற்சியும் காரணமாக இருந்தன. கடைசியாக பொண்ட் மாஸ்ரர் பற்றி நான் அறிந்தது 1999 இல் என்று நினைவு. தன் மாதிரிப் பரீட்சை முயற்சியை வடக்கிலிருந்து மத்திய மாகாணத்தின் கண்டி வரை விஸ்தரித்து, அதற்கு உதவ பேராதனையில் என் அறை நண்பனாக இருந்த ஒருவரை நாடியிருந்தார். அந்த அறை நண்பருக்கு உதவியாக நான் கண்டியில் ஒரு மண்டபத்தில் நடந்த மாதிரிப் பரீட்சையில் உதவி செய்திருந்தேன். அந்த வேளையில் தான், பொண்டர் தீவிரமான நோயினால் பாதிக்கப் பட்டு, மீண்டிருப்பதாக அறிந்தேன். புற்று நோயா, அல்லது பக்க வாதமா என்பது இப்போது நினைவில் இல்லை.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
The quiet couple from Weybridge behind £1.7bn Prax PetroleumThere is nothing remarkable about Horizon Business Village, a collection of squat redbrick offices off a roundabout in Weybridge, Surrey. Yet it is home to an2017 இலேயே எச்சரிக்கை மணி அடிக்கப் பட்டிருக்கிறதே? அதன் பிறகா இவர்களை றோல் மொடல்களாகச் சித்தரித்தார்கள்?

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

3 months 2 weeks ago
இந்த தாயார் எழுதியது சுத்த அலப்பறைதான்…. மகளின் திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதை போட்டோ எடுத்து போடலாம்….அதற்குள்ளும் பூர்வகுடி, பூர்ஷுவா குடி என தனது இடதுசாரி அரசியலை நுழைத்த்திருக்க தேவையில்லை. ஆனால்….விமர்சனம் அதை விட்டு விட்டு, மாப்பிள்ளையின் இனம் சார்ந்து குரோதமாக அமைவது ஏற்புடையதல்ல.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 months 2 weeks ago
எழுதினதையே ஏன் திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள் என விளங்கவில்லை😂! "அப்படித் தான் எல்லோரும் செய்கிறார்கள், சீமானும் செய்தார்" என்றால் ஏன் அவருக்கு "புனிதர்" பட்டம் கொடுத்து தலையில் காவும் தேவை? அவர் "சின்னக் கருணநிதி" என்று கோசான் உட்பட பலர் சொல்லி விட்டார்கள். ஆனாலும், கருணாநிதியிடம் கூட இரண்டு மனைவியரை பகிரங்கமாக வைத்திருக்கும் வெளிப்படைத்தன்மை இருந்தது. "திரள் நிதி" குறைந்து விடும் என்ற அச்சத்தில் சீமானிடம் அதுவும் இல்லாமல் தானே இருந்தது? இப்ப மூலையில் முடக்கப் பட்ட பின்னர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதில் பெருமை எதுவும் இல்லை!

சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.

3 months 2 weeks ago
வெண்கல கடைக்குள் யானை புகுந்தது போல் ட்ரம் செய்யும் கூத்துகளால் சும்மா கிடந்த தங்க விலை பறக்க தொடங்கி விட்டது எனகென்னவோ வேண்டும் என்றே தங்க விலை கூடுகிறது போல் உள்ளது தங்கத்தின் மதிப்பு உயர உயர அமெரிக்க கடன்கள் குறைவாகும் . ஏனென்றால் அவர்களின் தங்க இருப்பு அப்படி .

ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
இரண்டு வருடங்கள் போராடியும் மீட்க முடியாமல் போன இஸ்ரேலிய பணயக்கைதிகளை, ஹமாஸிடமிருந்து மீட்டுக் கொடுத்து அமைதியை ஏற்படுத்தி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பின் சாதனையை பாராட்டி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு தங்கத்திலான புறா ஒன்றை வழங்கிய காட்சியே இது! நோபல் கிடைக்காவிட்டாலும் தங்கப்புறாவை பெற்று ரம்ப் மனமகிழ்ந்தார். Almashoora Latest News

கடல்வளம் குன்றுகிறது!

3 months 2 weeks ago
இதைத்தானே பலவருட காலமாய் இலங்கையின் வடகிழக்கு போரினால் பாதிக்க பட்ட தமிழ் மீனவர்கள் உங்களிடம் இரந்து கேட்கிறார்கள் . இது புரியாமல் எங்களுகதுகளும் ஆளாளுக்கு விசைபலகையில் விசமிட்டு செல்கிறார்கள் இவ்வளவு காலமும் அரசல் புரசலாய் இருந்த நிலை தற்போது நேரடியாக இந்திய மாநில மீனவர்களிடையே பிரிவினையை உருவாக்கும் அளவுக்கு கடல் வள கொள்ளை தாண்டவம் ஆட தொடங்கி விட்டது ஒரே வழி உலகளவில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளை ஒரேயடியாக பாரபட்சம் பார்க்காமல் தடை செய்வதே .

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
உறவுகளுக்கு நினைவிருக்கும்… மேற்படியாரை புலம்பெயர் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி என கள உறவு நாதமுனி முன்னர் பிரஸ்தாபித்து இருந்தார். யாராவது நாதத்துக்கு ஒரு @ போட்டு விடவும் 🤣

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை. இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது. இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இருந்து தமது சொந்த வருமானமாக எடுத்துள்ளனர். பிரித்தானிய திறைசேரி, இன்னும் பல நிறுவனக்களுக்கும் இவர்கள் பல மில்லியன் ஆப்பை செருகி உள்ளனர். நிறுவனதின் சொத்து 150 மில்லியனை கோர்ட் முடக்கி உள்ளது. ஆனால் இது இவர்களின் கடனில் 10% மட்டுமே. இவர்களின் நீச்சல்தடாகம், சோனா, ஸ்பா வசதிகளுடனான, வேபிரிஜ் எனும் அதீத செல்வந்தர் வாழும் இடத்தில் உள்ள 5 மில்லியன் பெறுமதியான வீட்டை விற்கபோட்டுள்ளனராம். இவர்கள் இலங்கைக்கு தப்பி ஓடி இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. (மூலம் - பிரித்தானிய ஊடகங்கள் + யாழ்கள நிருபர் கோஷான் களத்தில் இருந்து🤣 ) https://www.theguardian.com/business/2025/sep/04/uk-court-freezes-150m-of-assets-of-collapsed-prax-lindsey-oil-refinery-owner https://www.theguardian.com/business/2025/aug/20/loan-irregularities-collapse-prax-lindsey-oil-refinery https://finance.yahoo.com/news/couple-behind-doomed-oil-refinery-070000350.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAEZhFmvvT-Q_g2dpoByQb88U5CLGaHOs6eKHVGfyQG1TemU60KuopVeWlK8Pp3WXx84mkZfOJIrh-0HKWxKKfgRoGpVoDqH6WCvCC4ao7KTBMevyKJB03V1x2Cp9ffzD-DfoN8KWJl9XRKg70LBfxjSEJ1YSS131b2y_Xb6pIJLd

ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! - இஸ்ரேல் இராணுவம் தகவல் 13 Oct, 2025 | 04:35 PM காசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று (13) கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, ஹமாஸினால் இரண்டு ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் இன்று விடுவிக்கப்பட்டுவிட்ட செய்தி, அவர்களது குடும்பத்தினரையும் இஸ்ரேல் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று முன்னதாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு சென்றார். அடுத்து, எகிப்து நாட்டுக்குச் சென்று அங்கு, போர்நிறுத்த இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்வில் கலந்துகொள்வார். அத்துடன் எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதிக்கான உச்சி மாநாட்டிலும் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட அறிவிப்பு இஸ்ரேலிய மக்களை பெரும் ஆரவாரப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/227627

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

3 months 2 weeks ago
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 04:14 PM 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக ஜோயல் மோகிருக்கும், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக (The theory of sustained growth through creative destruction) அகியோன் மற்றும் ஹோவிட்டுக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227624

சீனாவில் நடைபெறும் பெண்கள் உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர்

3 months 2 weeks ago
பெண்களின் உரிமைகள், சமத்துவத்திற்கான எமது கூட்டு உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம் - பிரதமர் Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 12:28 PM பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) இன்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இன் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தேசிய மாநாட்டு மையத்திற்கு வருகை தந்த பிரதமரை, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் ஜனாதிபதியின் பாரியார் திருமதி. பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் வரவேற்புரையை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் உரை உட்பட, அரச மற்றும் அரசாங்கத் தலைவர்கள் தமது உரைகளை முன்வைத்தனர். மன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், 1995 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் பற்றிய உலக மாநாட்டினதும், பாலின சமத்துவத்திற்கான ஒரு விரிவான கட்டமைப்பாகிய பீஜிங் செயல்பாட்டுத் தளத்தினதும் மரபை நினைவுகூர்ந்ததோடு, கடந்த மூன்று தசாப்தங்களில் அடையப்பட்ட முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டார். குறிப்பாக, பெண் எழுத்தறிவு அதிகரிப்பு, தாய்மாரின் இறப்பு வீதம் கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்திருப்பது, மற்றும் ஆயுட்கால அதிகரிப்பு (1995 இல் 69 வயதாக இருந்த ஆயுட்காலம் 2023 இல் 76 வயது வரை அதிகரித்திருக்கின்றது) ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.அதே நேரத்தில், தொடர்ந்தும் காணப்படுகின்ற இடைவெளிகள் குறித்தும் அவர் கவனத்தைச் செலுத்தினார். ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைவான தொழிலாளர் பங்கேற்பு (48.7% - 73%). அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குறைந்த பிரதிநிதித்துவம் (பட்டதாரிகளில் சுமார் 35%). பெண்களை விகிதாசார ரீதியில் அதிகமாகப் பாதிக்கும் தொடர்ச்சியான உணவுப் பாதுகாப்பின்மை (ஆண்களை விட 47.8 மில்லியன் அதிகமான பெண்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்). மற்றும் அரசியல் சமத்துவத்தை நோக்கிய மெதுவான முன்னேற்றம் ஆகிய குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, பெண்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தி என்பது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான செயல்முறையாகும், ஆகையினால் இதற்கு நமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது எனப் பிரதமர் தெரிவித்தார். தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களை இயற்றுதலில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல், ஒவ்வொரு மட்டத்திலும் அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், CEDAW (பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாடு) மற்றும் UNSCR 1325 (ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1325) இணங்க பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த தேசியக் கொள்கை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தேசியச் செயல் திட்டத்தை (2023–2027) செயல்படுத்துதல் உள்ளிட்ட இலங்கையின் தேசிய உறுதிப்பாடுகளைப் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், உழைக்கும் வர்க்கம் மற்றும் விளிம்புநிலைச் சமூகங்கள் உட்பட, பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். ஆரம்ப விழாவை அடுத்து, ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) ஏற்பாடு செய்திருந்த உத்தியோகபூர்வ விருந்துபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/227598

இணைய நிதி மோசடிகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

3 months 2 weeks ago
13 Oct, 2025 | 11:57 AM இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான முறைப்பாடுகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார். இந்த நிதி மோசடிகள் மூலம் 10 இலட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வகையான இணைய நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேசிய அடையாள அட்டை விபரங்கள், வங்கி விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227594

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

3 months 2 weeks ago
'நாங்கள் ஓடவில்லை': ஆதவ் அர்ஜூனா பேச்சும் உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றிய திமுக எம்.பி. விளக்கமும் பட மூலாதாரம், X/aadhavarjuna & P.Wilson படக்குறிப்பு, ஆதவ் அர்ஜூனா மற்றும் வில்சன் (வலது) 13 அக்டோபர் 2025, 08:24 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தவெகவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "வலி மிகுந்த நாட்களை கடந்து வருகிறோம், எங்களுக்கு நெருக்கடியான காலகட்டம் இது. எங்கள் உறவுகள், எங்கள் குடும்பம் துக்கத்தில் உள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எழுச்சி இருந்தது. கரூரில் நடைபெற்றது முதல் கூட்டம் கிடையாது. திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர் என பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். எனவே கரூரில் அன்று என்ன நடந்தது என்ற உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் பிரசாரங்களுக்கு செல்லும் போது காவல்துறை பெரிதாக உதவி செய்வதில்லை. அரியலூரில் உதவி செய்தனர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சில தகவல்களை கொடுத்து உதவினார். அதனால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தோம். ஆனால் அன்றைய தினம் நாமக்கல்லில் கூட்டத்தை முடித்து விட்டு, கரூரில் உள்ளே நுழையும் போது கரூர் காவல்துறை எங்களை வரவேற்றார்கள், திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நின்று பேசுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் நிறுத்திய இடத்தில் தான் பேசினோம்." என்றார். "விஜய் தாமதமாக வரவில்லை" மேலும் பேசிய ஆதவ் அர்ஜூனா, "எங்கள் தலைவர் (விஜய்) தாமதமாக வந்தார் என்று வதந்திகள் பரப்பப்பட்டன. கரூரில் காவல்துறை வழங்கிய நேரம் மதியம் 3 மணி முதல் இரவு -10மணி வரை. அந்த நேரத்துக்குள் அங்கு வந்துவிட்டோம். தவறுகள் இருந்தால் கரூர் காவல்துறை ஏன் மாவட்ட எல்லையில் வரவேற்றது? கூட்டத்தில் தண்ணீர் கேட்ட போது விஜய் தண்ணீர் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வழி விட வேண்டும் என்ற போது அதற்கும் வழிவிட்டார். இந்த இடத்தை எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்தார்கள் என்ற ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்." என்று கூறினார். " நாங்கள் ஓடவில்லை" தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்று கூறிய ஆதவ் அர்ஜூனா, " சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல. கரூர் எல்லையில், நான், நிர்மல் குமார், அருண் ராஜ், ஆனந்த் ஆகியோர் காத்திருந்தோம். எங்கள் மொபைல் நெட்வொர்க் – தரவுகளை சரி பார்த்து அதை தெரிந்துக் கொள்ளலாம். காவல்துறையினர் எங்களை வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும், பிரச்னை உருவாகும் என்று கூறினார்கள். அதையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். திட்டமிட்டு, தவெக வரக்கூடாது என்று ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் மீது தீவிரவாதிகள் போல தடியடி நடத்தினார்கள். இறப்பு ஏற்பட்ட மூன்று -நான்கு நாட்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் முதலில் மனிதர்கள். பிறகு தான் அரசியல்வாதிகள். எங்கள் வீட்டில் யாராவது இறந்து போனால் உடனே ஊடகங்களுக்கு வந்து பேட்டி அளிக்க முடியுமா? கடந்த மாதம் 27-ம் தேதி முதல் அடுத்த ஞாயிறு வரை விடுமுறை, எனவே நீதிமன்றம் செல்ல முடியவில்லை. சமூக ஊடகங்களில் உண்மை பேசிய நபர்களை கைது செய்தார்கள். நீதிமன்றம் செல்ல முடியாத ஒரு வாரத்தில் திமுக தவெக மீது எப்படி குற்றம் சுமத்தி, பொய் பரப்பினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்" என்றார். பட மூலாதாரம், Getty Images "அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நடைபெறும் போதே அரசு விளக்கம் ஏன்? " ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அரசு உயர் அதிகாரிகள், அரசு செயலர்கள் அரசு தவறு செய்யவில்லை என்று எப்படி சொல்வார்கள் என கேள்வி எழுப்பினார் ஆதவ் அர்ஜுனா. "ஒரு விசாரணை நடைபெறும் போது எப்படி அரசு இதை செய்ய முடியும்." என்றார். மேலும், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூட்ட நெறிமுறைகள் குறித்து வழக்கு நடக்கும் போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறார். அந்த விசாரணை வெளிப்படையாக நடைபெறுமா என்று தெரியாது. ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையாக கருத்துகளை, தவெக தான் தவறு செய்தது மாதிரி கருத்துகளை பதிவு செய்தார். தவெகவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள், தலைவரின் தலைமை பண்பு, அரசியல் வருகை குறித்து எல்லாம் பேசப்பட்டது. என்ன கோபம் உங்களுக்கு?" என்று அவர் தெரிவித்தார். "சிபிஐ விசாரணைக்கு ஏன் கொண்டாடுகிறார்கள்? " - திமுக படக்குறிப்பு, திமுக வழக்கறிஞர் வில்சன். இந்த வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். "தவெக சிபிஐ விசாரணை கேட்கவேயில்லை, பிறகு ஏன் நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றியை போல் பேசுகிறார்கள்" என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், " இது இடைக்காலத் தீர்ப்பு. இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தவெக என்ன செய்தது என்றால் ஒன்றும் இல்லை. வாய்க்கு வந்த படி பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தொடரும். சிறப்பு புலனாய்வு குழு இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையை ஒப்படைக்க சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் இதுவரை நடந்தது சரியே. " என்றார். சிபிஐ விசாரணை கோரிய இரண்டு மனுதாரர்கள் தங்களுக்கு தெரியாமல் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தது குறித்து கேட்ட போது, " தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட இரண்டு பேர் வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் பேசினார்கள். அவர்களை மனு அளிக்க சொல்லியிருக்கிறது நீதிமன்றம். மோசடியாக ஒரு தீர்ப்பைப் பெற்றால், நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்யும். இன்று கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு தெரியட்டும், புரியட்டும் இதுபோன்ற பிரச்னை உள்ளது என்று. இது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. " என்றார். வீடியோ கால் மூலம் வழக்கில் ஷர்மிளா, செல்வராஜ் ஆஜர் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தங்கள் பெயரில் தங்களுக்கு தெரியாமல் மனு கொடுக்கப்பட்டதாக ஷர்மிளா மற்றும் செல்வராஜ் ஆகியோர் இன்று கூறியிருந்தனர். அவர்கள் இந்த விவகாரம் குறித்து கரூர் சட்ட உதவி மையத்தை நாடியதாகவும், எனவே சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து இன்று இந்த வழக்கில் வீடியோ கால் மூலம் உச்சநீதிமன்றத்தில் தங்கள் கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர் என்று சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த தமிழ்முரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyw59nxzro

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
காசா போர் நிறுத்தம் : 7 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் - இஸ்ரேல் மக்கள் மகிழ்ச்சி! Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 12:29 PM காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித் தவிக்கின்றனர். இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அமைதிக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலுக்குப் புறப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பிடம் சுமார் 20 பிணைக் கைதிகள் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில், 7 பிணைக் கைதிகளை போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு திங்கட்கிழமை (13) விடுவித்துள்ளது. இந்தப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட தகவல் இஸ்ரேல் தொலைக்காட்சிகளில் வெளியானதும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். இந்தக் பிணைக்கைதிகள் பரிமாற்ற நிகழ்வு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227597
Checked
Sat, 01/31/2026 - 10:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed