புதிய பதிவுகள்2

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 2 weeks ago
1 தொடக்கம் 9 வரையிலான எண் சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. காரணம் எனது அனுபவத்தில் அந்தந்த எண்களுக்குரியவர்களுக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு என்பதை அவதானித்துளேன். உதாரணத்திற்கு திகதி எண் 1ல் பிறந்தவர்கள் எல்லா விடயங்களிலும் உச்சத்தில் இருப்பார்கள். இதே போல் ஏனைய திகதிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களை நான் பார்த்துள்ளேன். ஐரோப்பியர்கள் 13ம் இலக்கத்தை கொஞ்சம் ஒதுக்கி வைப்பார்கள்.பல விடுதிகளில் 13ம் இலக்க அறை இருக்காது.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
இந்தக் கொலை மூலம் தனது மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டுள்ளார் என்பதை உலகம் முழுவதும் பறைசாற்றியுள்ளார். இப்போது அந்தத் தன்மானம் எங்கே போனது ? இன்று போட்டோக்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் இலகுவாக உருவாக்கிக் கொள்ளலாம். இறந்தவரின் கருவின் டிஎன்ஏ அப்குப்பாய்வு மூலம் இக் குழந்தை கணவரினுடையது தான் என்று நிரூபித்தால் மனைவிக்கு உயிர் கொடுக்க முடியுமா ? கோபத்தில் நிலைகுலைந்து ஒரு கொலை செய்வது வேறு. தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போகுமளவுக்குக் குரூரமான இந்தத் தன்மானத்தான் ஒரு மிருகமே.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
இப்படியான செயல்களை நவநாகரீக மேற்குலகத்தினர் சர்வ சாதாரணமாகத்தானே செய்கின்றனர்? அங்கே தலை வெட்டோ அல்லது கைகால் முறிப்புகளே இல்லை. ஒருவருக்கு பிடிக்கவில்லை இல்லையே ஒத்து போகவில்லை என்றால் விலகி போகின்றார்கள். மறு வாழ்வை,மறு துணையை தேடுகின்றார்கள். துணைவிக்கு தன்னை பிடிக்கவில்லை. இன்னோருவருடன் தொடர்பு என்றால் தலையெடுப்பது தீர்வல்ல.அது காட்டுமிராண்டித்தனம் என்பது என் கருத்து.

மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!

3 months 2 weeks ago
முருகன் அருள்பெற்ற மாம்பழம் பணம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். இனிமேல் வெளிநாட்டிலிருந்து போனவர்களுக்கே கிடைக்கும். உள்ளூர்காரர்களுக்கு உள்ளங்கையில் பஞ்சாமிர்தம் மட்டும்தான்.

புதிய கூட்டானது சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!

3 months 2 weeks ago
கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் சந்தித்து பேசிக்கொண்டனரே?

ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்

3 months 2 weeks ago
அது மட்டுமின்றி Usaid மூலம் வறிய நாடுகளுக்குக் கிடைத்த உதவிகளும் 90 வீதம் நிறுத்தப்பட்டுள்ளது. பூமி மாசுபடுதல், வெப்பமாகுதலுக்கு எதிரான வேலைத்திட்டங்களுக்கும் டிரம்ப் அவர்கள் முட்டுக்க்கட்டை போட்டுள்ளார். வரி அதிகரிப்பினால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அபிவிருத்தித் தேங்கல் பற்றிச் சொல்லவே வேண்டாம். டிரம்ப் ஆட்சி வந்தால் உலகத்துக்கே நல்லது என்று எங்கோ எதிரொலி கேட்கிறது. 😂

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 2 weeks ago
80 வீதம் ஏமாற்று வேலை இருப்பதை நீங்களே சொல்கிறீர்கள். ஒரு விடயம் இருக்கிறதா இல்லையா என்பதை நிறுவ வேண்டுமானால் இருக்கின்றது என்பதையே நிறுவ வேண்டும். சுலபமானதும் கூட. இல்லாததை இல்லை என்று நிறுவுவது கடினம். இதே திரியில் எழுதியவர்களில் அரைவாசிப் பேர் நம்பிக்கை இல்லை என்கிறார்கள். 50 வீதம் என்பது உண்மை ஆகாது, அது நிகழ்தகவு.

ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்

3 months 2 weeks ago
அவர்களின் வளங்களை சுரண்டி அவர்களை பிச்சைக்கார நாடாக மாற்றியதே இவர்கள்தானே!
Checked
Tue, 09/23/2025 - 17:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed