3 months 2 weeks ago
ஒரு 20 ஓவர்கள் என்றாலும் விளையாடினால், நியூசிலாந்து ஒரு அதிரடி காட்டுவார்கள் என்று பார்த்தால் திரும்பவும் மழை தூறுது.................. இடிமழையால் தப்பியது இலங்கை........................🤣. இன்றைக்கு இங்கே லாஸ் ஏஞ்சல்ஸிலும் மழை பெய்கின்றது. நல்ல மழை........... வருசத்தில் ஐந்தோ ஆறோ நாட்கள் தான் இங்கே மழை இப்படிப் பெய்யும்..........
3 months 2 weeks ago
மேலே உள்ள செய்தியில் எத்தனை பிழைகள் உள்ளன என பார்த்த போது…. எனது கண்ணில் பட்டவை. வெளிநாட்டு அனுப்புவதாக — வெளிநாட்டுக்கு அனுப்புவதாக தெரியவருகையில் — தெரிய வருகையில் ஏற்கனே — ஏற்கனவே அந்தவகையில் — அந்த வகையில் நேற்றையதினம் — நேற்றைய தினம் விளக்கம்மறியலில் — விளக்க மறியலில் தமிழில் ஒரு சிறிய பந்தியை… பல எழுத்துப் பிழைகளுடன், பிரசுரிக்கும் போக்கு அதிகரித்து காணப் படுகின்றது. அதில் 100 ஆண்டுகளை கடந்த பிரபல பத்திரிகைகளில் இருந்து இணையம் மூலமாக செய்திகளை வெளியிடும் தளங்கள் வரை அதிகரித்து காணப்படுகின்றது. மற்றைய மொழிகளில் இப்படி அதிகப் படியான பிழைகள் இருக்கும் என நான் நினைக்கவில்லை. தமிழில் இப்படி இவர்கள் அதிக பிழை விடுவதற்கு இவர்களின் அரைகுறை படிப்பா….. அல்லது, இவர்களுக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சரி இல்லையா என்று தெரியவில்லை.
3 months 2 weeks ago
இவர் கடைசி சனிக்கு எள் எண்ணை எரிக்கேல்ல என்று நினைக்கிறேன் ........! 😇
3 months 2 weeks ago
முதலில் யாரைச்சொல்லி நைட்டி வாங்கினீர்கள், அது வரவு செலவு முடிந்த கணக்கு இல்லையா ......அதை சொல்லலாம்தானே ........! 😂
3 months 2 weeks ago
தொடர்ந்து மழை பெய்வதால் விளையாட்டு கைவிடப் படும் , ஓவர்கள் குறைக்கப் படுவது பிறக்கு மழை பெய்வது இன்றையான் விளையாட்டு இப்படியாக போகுது............................
3 months 2 weeks ago
ஆனாலும் ஆனாலும் இஷாரா கைதானது எனக்கு இனிப்பான செய்தியே அல்ல.. இப்படிக்கு, அகில உலக இஷாரா விசிறிகள் சங்கத் தலைவர் நிழலி
3 months 2 weeks ago
சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை: சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகள் மற்றும் இளைய ராஜாவின் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளைய ராஜாவின் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமி வீடு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று சோதனை நடத்தினர். இதேபோல், இளையராஜா அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த மர்ம பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, புரளி கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், கர்நாடக முதல்வர் வீட்டுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து அம்மாநில போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாநில போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கும் எந்த மர்மப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே அதுவும் புரளி என உறுதி செய்யப்பட்டது. இந்த மிரட்டல் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோன்று புரளியைக் கிளப்பும் கும்பல் வெளிநாட்டில் இருந்து செயல்படுவதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக போலீஸ் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக நாள்தோறும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளிகள், வணிக நிறுவனங்கள், விமான நிலையங்கள், முதல்வர், அமைச்சர்கள் வீடு, கட்சி அலுவலகங்கள், டிஜிபி அலுவலகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb Threat for Edappadi Palaniswami, Seeman Houses - hindutamil.in
3 months 2 weeks ago
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சித்திரவதை செய்து கொலை உடற்கூறாய்வில் திடுக்கிடும் தகவல் யாழ்ப்பாணம் சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப் பட்ட நிலையில், அந்தப்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா (வயது -36) என்ற பெண்ணே நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, அந்தப்பெண் கல் அல்லது அது போன்ற பொருளால் தலையில் பலமாகக் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரது முகத்தில் எரியக்கூடிய திரவமொன்று ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. அந்தப் பெண் வீட்டைவிட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகைகளை அணிந்து சென்றுள்ளார். எனினும், சடலத்தில் நகைகள் காணப்படவில்லை. அவர் வீட்டை விட்டு புறப்பட்டபோது, சிலருடன் இணைந்து வவுனியாவுக்குச் செல்வதாகக் கணவரிடம் கூறியுள்ளார். எனினும், தனது கணவரிடம் குறிப்பிட்டுக் கூறியவர்களுடன் அவர் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சித்திரவதை செய்து கொலை
3 months 2 weeks ago
யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி! பலரிடம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!
3 months 2 weeks ago
நாங்கள் ஏற்கனவே வீசாவை இணையத்தளத்தில் விண்ணப்பித்து அதை ஓரிரு நாட்களில் பெற்றுக்கொண்டு தானே இலங்கையில் இறங்குகின்றோம். இது முன்னைய வீசாவை பெறுவதை விட, அதற்கு நிகரான இலகுவான குறுகிய காலத்தில் பெறக்கூடிய அனுமதியா? அவுஸ்திரேலியா பயணிக்கும்போது வீசாவை பெறுவதில் இந்த சொற்பிரயோகம் உள்ளது, இதை இணையத்தில் விண்ணப்பித்து, அனுமதி பெற்ற பின்பே பயணிக்கின்றோம்.
3 months 2 weeks ago
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி! சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார். பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!
3 months 2 weeks ago
4 Oct, 2025 | 01:04 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும். அந்த கட்டிடம் குறித்து நேற்று திங்கட்கிழமை (13) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். அந்த கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமும் வழங்கி உள்ளேன். அந்த கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ஜி ராஜபக்ஷ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆவணத்தில் எனது கையொப்பம் இல்லை. அந்த ஆவணத்தில் உள்ள எழுத்துக்களும் தெளிவற்று காணப்படுகிறது. எனவே கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல என நான் உறுதியாக கூறுகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது. கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல - கோட்டாபய | Virakesari.lk
3 months 2 weeks ago
இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர். “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையானது பல மாத காலமாக திட்டமிடப்பட்டதாகும். இந்த கைது நடவடிக்கைக்கு நேபாள அரசாங்கமும் சர்வதேச பொலிஸாரும் ஒத்தழைப்பு வழங்கியிருந்தனர். வெளிநாடுகளில் உள்ள பாதாள உலக கும்பலை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் தொடர்ந்தும் எமக்கு உதவி செய்து வருகின்றனர். இஷாரா செவ்வந்தியுடன் மேலும் ஒரு பெண்ணும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதுசெய்யப்பட்டவர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார். இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கையாகும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk
3 months 2 weeks ago
14 Oct, 2025 | 05:28 PM மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை. இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக்கி தரப்படவில்லை. குறித்த பிரச்சினைக்கு எவ்வித தீர்வு கிடைக்கவில்லை.சின்னக்கடை வட்டாரத்தில் ஒரு இடத்திலேயே அகழப்படுகின்ற குப்பைகளை கொட்டி வந்தோம். அவ்விடத்தில் பாரிய தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவ்விடத்தில் குப்பை கொட்டுவது உடனடியாக நிறுத்தப் பட்டுள்ளது. மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற குப்பைகளை கொட்ட ஒரு இடம் ஒதுக்கி தருமாறு, மாவட்ட செயலாளர், வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். மக்களின் தேவைகளுக்காக இடம் ஒதுக்கி தர முடியாத நிலையில் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் இடத்தை ஒதுக்குகிறார்கள். ஆனால் மன்னார் மக்களின் தேவைக்காக இடம் ஒதுக்க மறுக்கின்றார்கள்.குப்பை அகழ்வு செய்தாலும், கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை காணப்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை (13) அகழ்வு செய்யப்பட்ட குப்பைகள் வாகனத்துடன் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (14) குப்பை அகழ்வு செய்யப்படவில்லை. நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மன்னாரில் கழிவு அகற்றல் இடம் பெறாது. இது வரை இடம் ஒதுக்கி தரவில்லை. மன்னார் மக்களின் தேவைகளுக்காக 2 ஏக்கர் நிலப் பரப்பை வழங்க முடியாத வன பாதுகாப்பு திணைக்களம் மன்னார் மக்களுக்கு இனியும் தேவைதானா? என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் 30 வருட யுத்தம் இடம்பெற்று முடிவடைந்து ஒரு அமைதியான சூழல் இந்த மன்னாரில் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு இவன இலாகா மற்றும் பறவைகள் சரணாலயம் போன்றவை காரணமாக அமையப் போகிறது. கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எக் காரணம் கொண்டும் அவ்விடத்தில் இருந்து எடுக்க மாட்டோம் என்றார். குறித்த பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,. மன்னார் நகர சபை பிரிவில் கழிவகற்றல் பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகின்றது.ஏற்கனவே பாப்பாமோட்டை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மன்னார் நகர சபையினர் தமது பிரிவில் அகழ்வு செய்யப்பட்ட குப்பைகளை கொட்டி வந்தனர். குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக கொழும்பை தளமாக கொண்ட சூழலியல் அமைப்பு மேன்முறை நீதிமன்றத்தில் வளக்கு தொடுத்ததன் காரணமாக குறித்த இடத்தில் தற்போது கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மன்னார் நகர சபையினர் அண்மைக்காலமாக மன்னார் மையப்பகுதியில் ஒரு இடத்தில் கழிவுகளை கொட்டி வந்தார்கள். ஆனால் குறித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதோடு,சூழல் மாசடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் திங்கட்கிழமை (13) பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் குறித்த கழிவுகள் கொட்டும் இடத்தையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பை போட இடம் இல்லாத காரணத்தால் மன்னார் நகர சபையினர் கழிவுகளை சேகரித்த வாகனங்களை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறுத்தியுள்ளனர். தற்போது சேகரிக்கும் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சனை எழுந்துள்ளது.கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் கூடுதலான நிலப்பகுதி வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் கீழ் இருப்பதன் காரணத்தினால் அவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து அடையாளம் கண்டு அவ்விடத்தில் கழிவுகளை கொட்ட தீர்மானிக்கப்பட்ட போதும் கலப் பரிசோதனையின் போது இணக்கமான நிலை ஏற்படவில்லை. வன பாதுகாப்பு திணைக்களத் தினால் முன் மொழியப்பட்ட இடத்தை நாங்கள் அடையாளம் காண முற்பட்ட போது குறித்த இடம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இடமாகவும், குறித்த இடம் மக்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட இடமாகவும் காணப்படுகின்ற மையினால் குறித்த இடம் பொறுத்தமற்ற இடமாக காணப்படுகின்றது. இதனால் கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற பிரச்சினை தற்போது காணப்படுகிறது.குறித்த பிரச்சினை குறித்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக சகல தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவரை தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.தற்போது மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு பகுதி அதில் ஏற்கனவே கழிவுகள் கொட்டப்படும் இடமாக காணப்படுகின்றது. குறித்த பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அடையாளப்படுத்தப்பட்ட இடமாக உள்ளது. அதை விட பாப்பாமோட்டை க்கு அருகில் உள்ள இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.தற்போது உரிய தரப்பினர் ஊடாக அந்த இடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த இடங்களை பார்வையிட்டு இனக்கமான முறையில் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நிரந்தரமான குப்பைகளை கொட்ட முடியும். தற்போது மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளமையினால் மாவட்ட செயலக வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார். கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை கழிவுகளுடன் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படமாட்டது – மன்னார் நகரசபை முதல்வர் | Virakesari.lk
3 months 2 weeks ago
நானும் இதைத் தான் நினைத்தேன். நிச்சயம் அனுரா அரசை பாராட்டியே ஆகணும்.
3 months 2 weeks ago
ஆழ்ந்த அனுதாபமும் புகழ் வணக்கங்களும்... ஒம் நமச்சிவாய 🙏
3 months 2 weeks ago
கொழும்பு மைதானத்தில் மழை பெய்யுது இலங்கை மகளிர் நல்ல ஸ்கோர் அடிச்சு இருக்கினம் 258.....................இதை நியுசிலாந் மகளிரால் உந்த மைதானத்தில் அடிக்க முடியாது................பாப்போம் போட்டி முழுதா நடக்குதான்னு..............................
3 months 2 weeks ago
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா
3 months 2 weeks ago
https://youtu.be/sKA3eueyBj8?si=GzDPzhlyPuQduciY
3 months 2 weeks ago
கொஞ்சம் காசு வேறு எந்த தேவைக்கும் அல்லாமல் இருந்தால் இந்த பங்குகளை 5x leverage இல்க் short பண்ணி பார்க்கலாம். வந்தால் மலை, போனால் எச் ராஜா.
Checked
Sat, 01/31/2026 - 16:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed