புதிய பதிவுகள்2

கிளிநொச்சி மகப்பேற்று வைத்தியசாலையினை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை

3 months 2 weeks ago
Published By: VISHNU 05 JUN, 2025 | 08:59 PM கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையில் புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வியாழக் கிழமை (5) அளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டியமைக்கப்பட்ட புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், மனிதவள பற்றாக்குறை, குறிப்பாக செவிலியர்கள் (Nurses) பற்றாக்குறை காரணமாக இப்போதுவரை இயக்கப்படாமல் இருக்கிறது. மிகவும் அவசியமான ஒரு மருத்துவமனையாக கட்டி முடிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது. இருந்தும் இதுவரை குறித்த மகப்பேற்று மருத்துவமனை இன்று வரை செயற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை. ஆளனி இன்மையே இதற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவித்துள்ள நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர். பணியாளர் எண்ணிக்கை அட்டவணை (cadre) உடனடியாக திருத்தி, தேவையான ஊழியர்களை நியமித்தால், கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையின் புதிய மகப்பேறு வளாகத்தை சிறப்பாக இயங்கச்செய்து, வடமாகாணத்தில் நிலவும் நீண்டகால சேவைப் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வரலாம். இது தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தரமான சிகிச்சையை வழங்க ஒரு அவசியமான நடவடிக்கையாகும். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியாளர் அனுமதியும் நியமனமும் மேற்கொண்டு, கிளிநொச்சி புதிய மகப்பேறு மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/216727

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 2 weeks ago
செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை Published By: RAJEEBAN 05 JUN, 2025 | 08:08 PM செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேசநடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வெளிப்படைதன்மையை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது. செம்மணியின் இரண்டாவது மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இது அமையலாம்.எனினும் இதற்கு சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி அகழ்வு இடம்பெறுவது அவசியம். மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு இலங்கை அதிகாரிகள் உரிய நிதியை ஒதுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் ஊடகங்களிற்கும் அந்த பகுதிக்கு செல்வதற்கான போதிய அனுமதியை வழங்கினால் ,இநத விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விசாரணைகளின் போது இடைக்காலத்தில் தெரியவந்துள்ள விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக தெரிவித்து வந்தால் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் வெளிப்படையான விதத்தில் இடம்பெறும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் செயற்பாட்டிற்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் அவசரத்தை கருத்தில் கொள்ளும்போது இது இடம்பெறவேண்டும். அந்த பகுதியின் நேர்மைதன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/216724

“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்

3 months 2 weeks ago
Published By: VISHNU 05 JUN, 2025 | 07:53 PM உலக சுற்றாடல் தினமான வியாழக்கிழமை (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் இசுரு அநுராத மற்றும் Clean Sri Lanka செயலகம் மற்றும் சிபெட்கோ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, முத்துராஜவெல பகுதியில் இன்று (05) மரம் நடுகை நிகழ்வொன்றையும் நடைமுறைப்படுத்தியது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ஏ.எஸ். ராஜகருணா, முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயுர நெத்திகுமாரகே, பதில் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/216723

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு

3 months 2 weeks ago
இவர்கள் கூறும் கருத்துக்களும் விளக்கங்களும் ஏற்புடையவையாக இருக்கின்றன ......... பறக்கட்டும் பார்க்கலாம் . ........ ! 😁

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்

3 months 2 weeks ago
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பு : டக்ளஸை சந்தித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் பேச்சு Published By: DIGITAL DESK 3 05 JUN, 2025 | 05:24 PM ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (5) யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தாவுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216705

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு

3 months 2 weeks ago
புதிய விமானம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டது - அமைச்சர் பிமல் சபையில் விளக்கம் 05 JUN, 2025 | 05:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் எயார் பஸ் விமானம் குத்தகை அடிப்படையிலானது. 8 வருடங்களில் அதனை மீண்டும் திருப்பிக்கொடுக்க வேண்டுமென போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கில்ஸ் நெல்சன் உரையாற்றுகையில், விமான சேவைக்கு அரசாங்கம் புதிதாக கொண்டுவந்திருக்கும் விமானத்தின் தரம், அதன் வசதி வாய்ப்புக்கள், அது பழைய விமானம் என்றாலும் அதன் மறுசீரமைப்பின் தரம் தொடர்பில் தெரிவிக்க வேண்டும் என கேண்டுக்கொண்டார். அதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பிரமல் ரத்நாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவந்திருக்கும் எயார் பஸ் விமானம், மாதத்துக்கு 1000 டொலர் என்ற அடிப்படையில் குத்தகைக்கே கொண்டுவந்திருக்கிறோம். 8 வருடங்களில் அதனை மீண்டும் குறித் கம்பனிக்கு திருப்பிக்கொடுக்க வேண்டும். இந்த விமானம் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை. புதிய விமானம் கொள்வனவு செய்வதற்கு இப்போதைக்கு எங்களுக்கு முடியாது. புதிய விமானம் கொள்வனவு செய்ய 1.3 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும். தற்போது நாங்கள் கொண்டுவந்திருக்கும் விமானம் மிகவும் நல்ல முறையில் மறுசீரமைத்தே கொண்டுவந்திருக்கிறோம். விமானத்தின் பாகங்கள்,இன்ஜின் மிகவும் முறையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. விமானத்தின் தரம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இந்த விமானத்துக்கான குத்தகையை நல்லமுறையில் செலுத்தி, 8 வருடங்களில் மீள ஒப்படைக்க இருகிறோம். எதிர்காலத்தில் மேலும் விமானங்களை கொண்டுவந்து இந்த சேவையை அபிவிருத்தி செய்யவே திட்டமிட்டிருக்கிறோம். அதனால் இந்த விமானம் தொடர்பில் தரம் குறைவாக கதைப்பது நல்லதில்லை என்றார். https://www.virakesari.lk/article/216691

உலகம் முழுவதும் கடல்கள் கருமையானதாக மாறி வருவது ஏன்?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று 'குளோபல் சேஞ்ச் பயாலஜி' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், எல்லியட் பால் பதவி, பிபிசி நியூஸ் 5 ஜூன் 2025, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரிட்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த இருபது ஆண்டுகளில் உலகப் பெருங்கடலின் ஐந்தில் ஒரு பகுதி கருமையானதாக (darker) மாறியுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. "கடல் அடர் நிறமடைதல்" என்று இந்தச் செயல்முறை அழைக்கப்படுகின்றது. கடலின் மேல் அடுக்கில் ஏற்படும் மாற்றங்கள், நீருக்குள் ஒளி ஊடுருவுவதை கடினமாக்கும் போது இந்த நிலை உருவாகிறது. இந்த மேல் பகுதி, 'ஃபோட்டிக் மண்டலம்' (photic zone) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் தான் கடல் உயிரினங்களில் 90% உயிர்கள் வசிக்கின்றன. உலகளாவிய உயிர் வேதியியல் சுழற்சி ஆரோக்கியமாக இயங்குவதற்கும் இந்த மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2003 முதல் 2022க்கு இடைபட்ட காலத்தில், உலகப் பெருங்கடலின் 21% பகுதி, அடர் நிறம் அடைந்திருந்தது என்று 'குளோபல் சேஞ்ச் பயாலஜி' ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. கடல்கள் கருமையானதாக மாறி வருவது ஏன்? இந்த ஆய்வின் படி, பாசித் திரள் பரவலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களே, கடல் கருமையானதாக மாறுவதற்கு முக்கிய காரணங்கள் என நம்பப்படுகிறது. பெரும்பாலும், ஊட்டச்சத்து நிறைந்த நீர், கடலோரப் பகுதிகளின் மேற்பரப்புக்கு எழும்பும் இடங்களில், கடல் அடர் நிறமடையும் தன்மை காணப்படுகிறது. மழைப் பொழிவு அதிகரிக்கும் போது, நிலத்திலிருந்து விவசாயக் கழிவுகள் மற்றும் மண்ணில் படிந்துள்ள அடர்த்தியான பகுதிகள் கடலுக்குள் செல்லும். இவை பிளாங்க்டன்களுக்கு உணவளிக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக, உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாகவும், கடுமையாகவும் நிகழும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. திறந்த கடல் பரப்புகளில், கடல் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரித்ததால், ஒளியைத் தடுக்கும் வகையில் பிளாங்க்டன்களின் அளவு அதிகரித்திருக்கலாம். இதுவும் கடல் கருமையடைய ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படுகின்றன? பட மூலாதாரம்,UNIVERSITY OF PLYMOUTH படக்குறிப்பு,உலகளவில் கடலின் மேற்பரப்பு 2003 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையில் எவ்வாறு மாறியுள்ளது என்பதை விளக்கும் படம். கடல் அடர் நிறமாவதை சிகப்பு நிறமும் அதன் சூரிய ஒளி அதிகரிப்பதை (lightening) நீல நிறமும் குறிக்கின்றன கடலின் 9%க்கும் அதிகமான பகுதியில், அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தின் பரப்பளவுக்குச் சமமான அளவில், 164 அடி (50 மீட்டர்) வரை ஒளி குறைந்திருப்பது குறித்து ஆய்வில் தெரியவந்துள்ளது. கடலின் 2.6% பகுதியில், 328 அடி (100 மீ) வரை ஒளி குறைந்துள்ளது. வளைகுடா நீரோடையின் மேற்பகுதியிலும், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஃபோடிக் மண்டலத்தின் ஆழம் (கடலின் சூரிய ஒளி படரும் மேல் அடுக்கு) மாறிவிட்டது என்று அந்த ஆய்வு கூறுகிறது. இந்த பகுதிகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக பெரியளவில் விளைவுகளை எதிர்கொள்கின்றன. கரையோரப் பகுதிகள் மற்றும் பால்டிக் கடல் உட்பட சுற்றிலும் நிலப்பகுதிகளால் சூழப்பட்ட கடல்களிலும் கடல் அடர் நிறமடைந்துள்ளது. ஆனால், கடலின் எல்லாப் பகுதிகளும் அடர் நிறமடையவில்லை என்று ஆய்வு கூறுகிறது. அதே காலகட்டத்தில், சுமார் 10% கடல்பரப்பு அதிகமாக நிறம் மங்கியுள்ளது. இந்த கலவையான சூழல், கடல் அமைப்புகளின் சிக்கலான தன்மையையும், நீரின் தெளிவை பாதிக்கும் பல காரணிகளையும் பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துருக்கியின் இஸ்மிரில் பிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் படர்ந்திருக்கும் காட்சி கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? இந்த மாற்றங்கள் எதற்கு வழிவகுக்கின்றன என்பது குறித்து துல்லியமாக கூற முடியாத நிலையிலும், உலகின் பல கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் சூழல்கள் பாதிக்கப்படக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். "கடந்த 20 ஆண்டுகளில் கடலின் மேற்பரப்பு எவ்வாறு நிறம் மாறியுள்ளது என்பதைக் காட்டும் ஆராய்ச்சி உள்ளது. இது பிளாங்க்டன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம்" என்று பல்கலைக்கழகத்தின் கடல் பாதுகாப்பு இணைப் பேராசிரியர் முனைவர் தாமஸ் டேவிஸ் தெரிவித்தார். "இதுபோன்ற மாற்றங்கள் பரவலான இருளை ஏற்படுத்துகின்றன என்பதற்கான ஆதாரங்களை எங்கள் முடிவுகள் வழங்குகின்றன. இதனால், சூரியன் மற்றும் சந்திரனைச் சார்ந்து உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளுக்கு தேவைப்படும் கடலின் பரப்பளவு குறைகிறது". நீரின் இந்த மேல் அடுக்கு பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களின் வாழிடமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கில் இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள் - எங்கே செல்கின்றன? பருவமழையை கணிக்க வேளாண் பல்கலைக்கழகம் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பம் இத்தாலியில் 5 கிமீ உயரத்துக்கு சாம்பலை கக்கிய எட்னா எரிமலை எவரெஸ்ட் உச்சியில் ஹிலாரி, டென்சிங் எவ்வளவு நேரம் இருந்தனர்? என்ன செய்தனர்? இங்கு பைட்டோபிளாங்க்டன் எனப்படும் தாவரங்களைப் போன்ற நுண்ணுயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்கின்றன. இவை உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்கும் முக்கிய உயிரினங்கள். ஒளிச்சேர்க்கைக்கு போதுமான சூரிய ஒளி தேவைப்படுவதால் அவை நீரின் மேற்பரப்புக்கு அருகில் காணப்படுகின்றன. இதனால் பல கடல்வாழ் உயிரினங்கள் உணவு கிடைக்கும் ஒளி மண்டலங்களில் வேட்டையாடி இனப்பெருக்கம் செய்கின்றன. வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின் பாதியை உருவாக்கும் பைட்டோபிளாங்க்டன்கள், கார்பன் சுழற்சி மற்றும் கடல் உயிர்வளத்துக்கும் அவசியமானவையாக உள்ளன. 'கவலைக்கு உண்மையான காரணம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பானின் கனகாவா மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் பைட்டோபிளாங்க்டன் நிகழ்வு கடல் அடர் நிறமாவதால், மனிதர்கள் சுவாசிக்கும் காற்றுக்கும், அவர்கள் உண்ணும் மீனுக்கும், உலகின் காலநிலை மாற்றத்தை சரிசெய்யும் போராட்டத்துக்கும் பாதிப்பு உண்டாகும் என்று டேவிஸ் கூறுகிறார். "எங்கள் கண்டுபிடிப்புகள் கவலைக்கான உண்மையான காரணத்தைக் குறிக்கின்றன". பிளைமவுத் மரைன் ஆய்வகத்தின் கடல் உயிரி வேதியியல் மற்றும் கண்காணிப்புகளுக்கான அறிவியல் தலைவரான பேராசிரியர் டிம் ஸ்மித் கூறுவதன் படி, அங்கு ஏற்படும் மாற்றங்களால் ஒளி தேவைப்படும் சில கடல் விலங்குகள் மேற்பரப்புக்கு நெருக்கமாக வரலாம். இதனால் உணவு மற்றும் பிற வளங்களுக்கான போட்டி அதிகரிக்கும். "இது முழு கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்" என்று பேராசிரியர் ஸ்மித் கூறினார். ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? 'Darkening of the global Ocean' என்ற ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் மேம்பட்ட கடல் மாதிரியுடன் சேர்ந்து, சுமார் இருபது ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்தனர். நாசாவின் ஓஷன் கலர் வெப் தரவு, உலகப் பெருங்கடலை 9 கிலோமீட்டர் அளவுடைய பிக்சல்களாகப் பிரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு பிக்சலிலும் கடல் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க, அந்தத் தரவு உதவியது. அதே சமயம், கடல் நீரில் ஒளியை அளவிட உருவாக்கப்பட்ட அல்காரிதம் ஒவ்வொரு இடத்திலும் ஒளி மண்டலத்தின் ஆழத்தை கணக்கிட பயன்படுத்தப்பட்டது. சூரிய மற்றும் சந்திர கதிர்வீச்சு மாதிரிகள் பகலிலும் இரவிலும் ஒளி நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் கடல் உயிரினங்களை எப்படி பாதிக்கக்கூடும் என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டன. இரவு நேரத்தில் ஒளி அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் பகல் நேரத்தை விட குறைவாக இருந்தன, ஆனால் அதுவும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yx7d0yr10o

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
மிகவும் கொடூரமான பைத்தியக்காரத்தனமான கொலை இது. இவ்வுலகில் இனிமையாக வாழ ஆயிரம் வழிகள் இருக்கும்போது.....? ஆனால் அவரவருக்கு இந்த நிலை வராத வரை நாம் என்னவும் சொல்லலாம். நம்பிக்கை துரோகம் குடும்பவாழ்க்கை பூச்சியமாகல் என்னுடையது மட்டுமே என்பதில் விழுந்துள்ள ஆழமாக ஏமாற்றப்பட்டுவிட்ட தோல்வி இவற்றை தாண்டி செல்வது எல்லா மனிதர்களாலும் முடியுமா???? (இங்கே ஆண் பெண் என்ற வேறுபாடில்லை) ஆனால் உலகம் அதிலும் மேற்குலகம் இதை தாண்டிச் செல்கிறது. பட்டறிவு மட்டுமே துணை.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களின் முன் சுமதி என்னும் பெயரில் அல்லது கறுப்பி என்னும் பெயரில் (என்று தான் ஞாபகம்) அவர் பழைய திண்ணை இணைய இதழ்கள் உட்பட பல இடங்களில் சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தார். நான் முன்னரோ, பின்னரோ தமிழில் அப்படியான கதைகளை எங்கும் காணவில்லை. அவருடைய பல கதைகளில் வரும் பெண்ணின் பார்வைகள் என்னை நிலைகுலைய வைத்தன. இந்த சம்பவம் போன்றே ஒரு கதையும் அவர் எழுதியிருந்தார். கதைக்களமாக கனடா இருந்தது. அந்தக் கதையில் இறுதியில் அந்தப் பெண் இறந்து போகின்றார். தற்கொலை என்று சொல்லுகின்றார்கள். இரு ஆண்களும் இறுதி ஊர்வலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அந்தக் கதையில் வரும் அந்தப் பெண்ணுக்காக இதை எழுதும் போதும் கண்கள் கலங்குகின்றன. அரவிந்தனின் 'சிதம்பரம்' படத்தை இளைய வயதில் ஒரு தடவையும், பின்னர் சில வருடங்கள் முன் ஒரு தடவையும் பார்த்தேன். இதே போன்ற நிகழ்வுகள். ஒரு ஆண் அவ்ராகவே இறந்து போகின்றார். அடுத்தவர் சித்தம் இழந்து அலைகின்றார். உயிர் தப்பிய பெண் வழியற்று கோவில் ஒன்றின் வாசலில் வாழுகின்றார். எங்களின் சமூகத்திலும், இன்னும் பல சமூகங்களிலும் நான் உட்பட ஆண்களின் புரிதல்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை என்றே எனக்குத் தோன்றுகின்றது. விலகிப் போய்க் கொண்டே இருக்கலாம். இதில் என்ன தன்மானம், தற்பெருமை, வீரம் குறைந்து போகின்றது.

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

3 months 2 weeks ago
உங்கள் அபிப்பிராயத்திற்கு நன்றி அண்ணா. அரசியல் எனக்கு சரிவராது அண்ணை. உடல்நிலை அதற்கு ஒத்து வராது. எனது எண்ணங்களை பொருத்தமான வகையில் வெளிப்படுத்தி சரியான இடங்களிற்கு தெரியப்படுத்த முயல்கிறேன். தனியார் மருத்துவமனைகள் நியாயமான கட்டணத்தில் தரமான மருத்துவத்தை வழங்கினால் மேற்கு நாடுகளில் தாமதமாகும் மருத்துவ சிகிச்சைகளை இங்கே பெற்று பயனடையலாம். இன்று நண்பர்களுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் சிசேரியன் மூலமான பிரசவத்திற்கு கோழிகுறஸ் மருத்துவமனையில் 3.5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனை சுகப்பிரசவத்திற்கு 5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். அரச மருத்துவமனையை ஏன் நாடவில்லை என வினவியபோது அங்குள்ள தாதியர்களின் அணுகுமுறை தவறாக உள்ளதாகவும், ஒரே நேரத்தில் 5 - 6 அம்மாக்கள் பிரசவத்திற்கு கட்டில்களில் வரிசையாக இருக்க விடப்படுவார்களாம். ஒருத்தரை ஒருத்தர் பார்க்காத வண்ணம் மறைப்பு(தனியுரிமை) இல்லையாம்.

தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

3 months 2 weeks ago
என்ன வாடகைக்கு எடுக்கப்போறியள் போலை கிடக்கு

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
அடிக்கடி பல தடவைகள் எனது கருத்துக்களுக்குள் வந்து, அதற்கு தர்கக ரீதியில் பதில் சொல்லாமல் என்னை முஸ்லீமாக இனம் காட்டி வசைமாரி பொழிவதில் மும்முரமாக உள்ளீர்கள். அதற்கான காரணம் என்ன? இதற்கு பதில் கூறும் கருத்தியல் நேர்மை உங்களிடம் இல்லை என்பது எனக்கு தெரியும். இருந்தாலும், சக உறவுகளும் அறியவேண்டும் என்பதற்காக கேட்கிறேன்.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
ஆண்கள் எல்லோரையும் உங்களமாதிரியே நினைத்துவிட்டீர்கள்போல இருக்கு! ஆனால் உங்களுக்குத்தான் அந்தப்பிரச்சனையே இல்லையே. மூன்றுதரம் தலாக் சொல்லீட்டு நாலுபேரோட இருக்கலாமே!

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 2 weeks ago
முதல் காட்சி படம் பார்த்தாச்சு... படம் செம மொக்கையா இருக்கு. எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு கமல், மணிரத்னம், ரஹ்மான், சிம்பு, திரிஷா... இந்த பட்டியல் கூட்டணியோடு வரும் படமாக இருப்பதால், பேசப்படும் படமாக இருக்கும் என்ற நினைப்பில் தான் போனேன். படத்தை சிம்பு மட்டுமே தூக்கி பிடித்து இருக்கிறார். வேறு பிரமாதமாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. திரைக்கதை - அப்படி எதுவும் இருந்ததாக தெரியவில்லை. பின்னணி இசை - ரஹ்மான் இந்த படத்தில் வேலை செய்தாரா என்று நினைக்க தோணுகிறது. பாடல்கள் - ஆடியோவில் கேட்ட எதுவும் திரையில் சோபிக்கவில்லை. முக்கிய பாடல் "முத்த மலை" படத்திலேயே இல்லை. விண்வெளி நாயகா ... வயலில் களைபிடுங்கும் போது ஒரு பாடலாக வருகிறது... பால் டபா பாடிய மாறா பாட்டு ஒரு சண்டை காட்சிக்கு BGM ஆகா போட்டு தொலைத்து இருக்கிறார்கள். திரிஷா 2 ஆண்களால் அவர்கள் இச்சைக்கு தொட்டுக்கொள்ள பயன்படும் பிச்சையாக இருக்கார். பார்த்து பார்த்து எடிட் செய்து வெளியிடப்பட்ட படமாக தோணவில்லை. சீரியஸ் வசனங்கள் கமல் பேசும் போது தியேட்டரில் சிரிப்பு சத்தம் தான் கேட்டது... "கமல் சொல்ல என்ன இருக்கு .... நீ திரிஷா ஹூக்கை கலட்டு..." கன்னடா ரசிகர் காசு தப்பியது, அப்பாவி கனடாகாரன் மாட்டிக்கிட்டான்.

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 2 weeks ago
சிங்களம் திட்டமிட்டு செய்கிறது என்றே எடுக்க வேண்டி இருக்கிறது.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 2 weeks ago
‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் - மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா? டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார். தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார். ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சக்திவேலுக்கு நெருடுகிறது. தன் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலுக்கும் கூட அமரன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இது இருவருக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘தக் லைஃப்’ படத்தின் திரைக்கதை. (படத்தில் இடம்பெறும் சிறிய ஸ்பாய்லர்கள் இதில் அலசப்பட்டுள்ளதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்ளவும்.) சில நேரம் நாம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செல்லும் படங்கள் நம்மை மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாக்கி நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வேறு சில படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்லும் பார்வையாளர்களை ஏமாற்றி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதில் ‘தக் லைஃப்’ இரண்டாவது வகை. காரணம், கமல்ஹாசன் - மணிரத்னம் என்ற இந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இருந்தும் இப்படத்தை ஓரளவுக்கு கூட பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாமல் போனது பேரதிர்ச்சி. படம் ஒரு ஃப்ளாஷ்பேக் உடன் தொடங்குகிறது. படத்தின் ஒரு சில நல்ல அம்சங்களில் இந்தக் காட்சியும் ஒன்று. கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சர்யம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் நன்று. ஆனால், இதன்பிறகு சமகாலத்துக்குப் படம் வந்ததும் திரைக்கதை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி தட்டையாக நகரத் தொடங்குகிறது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. மணிரத்னம் படங்கள் என்றாலே வசனங்கள் மூலமாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதில் வல்லவர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவர். ஆனால், அதற்காக ‘போதும் போதும்’ என்று சொல்லும் அளவுக்கு எல்லா காட்சியையுமே வசனத்திலேயே நகர்த்தி இருக்கிறார். கமலுக்கும் சிம்புவுக்குமான பிணைப்பு, அதன் பிறகு இருவருக்குள்ளும் எழும் சின்ன ஈகோ, சிம்பு மீது கமலுக்கு ஏற்படும் பொறாமை, நாசருக்கும் கமலுக்கும் அப்படி என்ன பகை என எந்த காட்சியிலும் அழுத்தமோ, மெனக்கெடலோ இல்லை. போகிற போக்கில் வசனத்திலேயே அவரவர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சொல்லிவிட்டு போகிறார்கள். த்ரிஷா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. த்ரிஷா வீட்டில் இருந்து கமல் தன் வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சியில் முகத்தில் வெறுப்பை காட்டுகிறார் த்ரிஷா. அதன் பிறகு இரண்டாம் பாதி முழுக்க கமலை நினைத்து உருகுகிறார். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன, அவர் யார் என எதிலும் தெளிவில்லை. இதே கதைதான் அபிராமி - கமல் இடையிலும். கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்துவிட்டு வந்து கொஞ்சம் எமோஷனலாக பேசியதுமே விழுந்து விடுகிறார் அபிராமி. திடீரென சம்பந்தமே இல்லாமல் நேபாளம் செல்கிறார் கமல். அங்கு இடைவேளை வைக்கவேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட ஒரு காட்சி. அடிபட்டு, குண்டடி வாங்கி, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பித்து… உஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. ஒருகணம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மணிரத்னம் படம்தானா என்ற சந்தேகமும் பல இடங்களில் சற்று அதிகமாகவே வருகிறது. நேபாளத்தில் இரண்டு வருடம் கமல் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வதாக காட்டுகிறார்கள். (அதுவும் வசனத்திலேயே வந்துவிடுகிறது) அதற்காக போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த தற்காப்பு உடையையே அணிந்துதான் செல்ல வேண்டுமா? முதல் பாதியில் ரங்கராய சக்திவேலாக இருந்த கமல், இரண்டாம் பாதியில் ‘இந்தியன்’ தாத்தா மோடுக்கு மாறிவிடுகிறார். படத்தில் இருந்த வெகுசில நல்ல காட்சிகளில் ஒன்றாக கமலும் ஐஸ்வர்யா லட்சுமியும் பேசிக் கொள்ளும் காட்சியை சொல்லலாம். ஒரு படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டால், அதில் இடம்பெறும் நல்ல விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்கு இந்தப் படமே சரியான உதாரணம். கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ரஹ்மானின் பாடல்கள், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு என பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும் இவை எதுவும் நம்மை படத்துக்குள் இழுக்கவில்லை. இந்தப் படத்தில் எதற்காக ஜோஜு ஜார்ஜ், ‘மிர்சாபூர்’ அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் போன்ற நல்ல நடிகர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. வழக்கமாக நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர்களாக வருகின்றன என்று சொல்வோம். ஆனால், இங்கு ஏற்கெனவே தொங்கி துவண்டு போயிருக்கும் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள்தான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் சிறப்பு. சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்று அதை தூக்கி கடாசியிருக்கிறார் இயக்குநர். மற்றொரு வைரல் பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது. முன்பே குறிப்பிட்டத்தை போல கமல் - மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம். ‘க்ளாசிக்’ அந்தஸ்தை பெற்றுவிட்ட ‘நாயகன்’ அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும். ‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா? | Thug Life Movie Review - hindutamil.in

”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன” - ராமநாதன் அர்ச்சுனா

3 months 2 weeks ago
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். "பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பிரபாகரனுடையது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் இதைச் சொன்னதற்காக நான் சுடப்படலாம்," என்று எம்.பி. கூறினார். "பிரபாகரன் 2009 க்கு முன்பு தாய்லாந்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றார்," என்று அவர் மேலும் கூறினார். இதற்கு பதிலளித்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். "அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம், ஆனால் அவர் பைத்தியம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது," என்று எம்.பி. மேலும் கூறினார். Tamilmirror Online || ”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன”

வவுனியாவில் வீட்டு வளாகத்தில் 9 அடி நீளமான முதலை மீட்பு

3 months 2 weeks ago
05 Jun, 2025 | 06:41 PM வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள வீடொன்றின் வளவிலிருந்து 9 அடி நீளமான முதலையொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் புதன்கிழமை (4) அவ்வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று இருந்ததை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். அவர் அதனை துரத்த முற்பட்டபோது, அக்காணியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது. இதனையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர், இன்றைய தினம் (5) அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து முதலையினை பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் வீட்டு வளாகத்தில் 9 அடி நீளமான முதலை மீட்பு | Virakesari.lk

தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

3 months 2 weeks ago
உறவுகளின் தகவல்களுக்கு நன்றி.😀
Checked
Tue, 09/23/2025 - 17:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed