புதிய பதிவுகள்2

கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு

3 months 2 weeks ago
காஸா மக்களின் பசி தீர்க்க உணவுப் பொருட்களுடன் விரையும் கிரெட்டா துன்பெர்க் <iframe width="400" height="500" frameborder="0" src="https://www.bbc.com/ws/av-embeds/articles/c8e68xdkz38o/p0lgl5nc/ta"></iframe> 8 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் பஞ்சம் மற்றும் பட்டினி ஏற்பட்டுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரையும் பாலத்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க் மற்றும் மேலும் சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படகு ஒன்றில் காஸாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். பால், பழச்சாறு, டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், ப்ரோட்டின் பார் என்று உணவுப் பொருட்களை அந்த படகில் வைத்து அவர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த பயணமானது ஞாயிறு அன்று சிசிலியில் துவங்கியது. பயணம் துவங்கி, இரண்டு நாட்கள் கழித்து பேசிய அவர், இஸ்ரேலின் சாத்தியமான தாக்குதலையும் யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மனிதநேய உதவிகள் பாலத்தீனர்களிடம் சேர்வதை தடுக்கும் இஸ்ரேலியப் படையின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e68xdkz38o

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ........ ! பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது பெண் : மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன் நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ பெண் : மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன் தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன் பெண் : முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ உன்னைப் போலே ஆண் இல்லையே நீயும் போனால் நான் இல்லையே நீர் அடிப்பதாலே மீன் நழுவ வில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை பெண் : நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு பெண் : நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன் பெண் : நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை காதலோடு பேதம் இல்லை ..... ! --- உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது ---

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 2 weeks ago
‘மொத்த உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது’: Gaza சூழல் குறித்து BBC நேர்காணலில் Red Cross Chief சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மிர்யானா ஸ்போல்யாரிச் Gaza-வில் நிலைமை நரகத்தை விட மோசமாக உள்ளது என எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் உலக தலைவர்களை விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய மீனவர்களை சுட்டு பிடியுங்கள் - இலங்கை மீனவர்கள் கடற்படையிடம் ஆவேசமாக வேண்டுகோள்!

3 months 2 weeks ago
06 JUN, 2025 | 04:29 PM எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது. இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது கடற்பரப்புக்குள் வரப்போகின்றார்கள். அவர்களது அட்டூழியங்களால் இதுவரை காலமும் எமது யாழ்ப்பாண மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தும் எமது அரசாங்கத்தாலோ அல்லது இந்திய அரசாங்கத்தாலோ எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை. கடப்படையானது தோளோடு தோள் நின்று எமக்கு பக்கபலமாக செயல்பட வேண்டும். இந்திய இழுவைமடிப் படகுகளை வராமல் தடுக்க வேண்டும். இரண்டு நாட்டு அரசாங்கமும் இனிமேலாவது கதைத்து எமக்கு ஒரு நல்ல முடிவை கூற வேண்டும். அத்துடன் நமது கடற்படைக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுகின்றோம். அதாவது இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் சுட்டாவது அவர்களை பிடியுங்கள். இவ்வாறு பிடித்து அவர்களை சிறையில் அடைத்து விட்டு படக்குகளை கைப்பற்றுங்கள். எமது மீனவர்களையும் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்கு இதனைத் தவிர வேறு வழி இல்லை என்றார். https://www.virakesari.lk/article/216790

நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!

3 months 2 weeks ago
டிரம்ப் vs மஸ்க்: அதிகாரமும் செல்வமும் சேர்ந்த சக்தி வாய்ந்த கூட்டணியில் பிரிவு ஏன்? அடுத்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர் பதவி, பிபிசி செய்தியாளர் 6 ஜூன் 2025, 08:37 GMT மிகப்பெரிய பணக்காரருக்கும், மிகவும் சக்திவாய்ந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் போது என்ன நடக்கும்? அத்தகைய ஒரு காட்சியைத் தான் நாம் காண்கிறோம். டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே, தங்களுக்கான சொந்த சமூக ஊடக தளங்களை வைத்திருப்பதால் பரஸ்பரம் எதிர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் 'ஏமாற்றம்' அடைந்ததாக ஈலோன் மஸ்க் அண்மையில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, மே மாத இறுதியில், அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (டோஜ்- DOGE) வழிநடத்தும் தனது பதவிக்காலம் 'முடிவுக்கு வருகிறது' என்று ஈலோன் மஸ்க் தெரிவித்தார். பின்னர் தனது எக்ஸ் தளத்தில், டோஜ் துறையை வழிநடத்த வாய்ப்பு அளித்தமைக்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்து, 'சிறப்பு அரசாங்க ஊழியர்' எனும் பொறுப்பிலிருந்து வெளியேறினார். ஆனால், டிரம்பின் பட்ஜெட் மசோதாவை விமர்சித்திருந்த நிலையில், மஸ்க் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் (One big beautiful bill) எனப்படும் அந்த மசோதா டிரம்ப் நிறைவேற்ற நினைக்கும் முக்கியமான மசோதாவாகும். அதன் பிறகு, அந்த மசோதா குறித்தும், டிரம்ப் குறித்தும் பல விமர்சனங்களை முன்வைத்தார் மஸ்க். இந்த மோதல் நேற்று (ஜூன் 5) உச்சக்கட்டத்தை எட்டியது. டிரம்ப் மிரட்டலுக்கு மஸ்கின் பதிலடி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈலோன்- டிரம்ப் இடையே மீண்டும் இயல்பான சூழல் ஏற்படலாம் என்பதை கற்பனை செய்வது கடினம். அமெரிக்க அரசாங்கத்துடனான மிகப்பெரிய வணிக ஒப்பந்தங்கள் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்திற்கு உயிர்நாடியாக உள்ளன. இப்போது அவற்றை ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். "நமது பட்ஜெட்டில் பில்லியன்கணக்கான டாலர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான எளிதான வழி, ஈலோனின் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும்" என்று டிரம்ப் தனது சொந்த சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். டிரம்ப், அமெரிக்க அரசாங்க இயந்திரத்தை மஸ்க்கிற்கு எதிராகத் திருப்பினால், அது மஸ்க்கிற்கு வேதனை தரக்கூடிய ஒரு நகர்வாக இருக்கும். இந்த மோதலைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூன் 5) அன்று டெஸ்லாவின் பங்கு விலை 14% சரிந்தது. இருப்பினும், இது ஒரு வழிப் பாதை அல்ல. இந்த வார்த்தை மோதல்களைத் தொடர்ந்து, டிரம்பை பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்த மஸ்க், தனது நிறுவனங்களுக்கான நிதியைத் தடுக்க முடியுமென்றால், அதைச் செய்யுமாறு டிரம்புக்கு சவால் விடுத்தார். அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்ல, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலங்களை சார்ந்துள்ளது அமெரிக்கா (நாசா). டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக, நாசாவிற்கான தனது டிராகன் விண்கல சேவையை நிறுத்தும் பணியை துரிதப்படுத்தவிருப்பதாக மஸ்க் தெரிவித்தார். மஸ்க் முன் உள்ள வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்புக்கு பதிலடி தர மஸ்க்கிற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, அடுத்த வருட தேர்தல்கள் மற்றும் முதன்மைத் தேர்தல்களில், குடியரசுக் கட்சியின் எதிர் தரப்பு வேட்பாளர்களுக்கு அவர் நிதியுதவி அளிக்கலாம். வியாழக்கிழமை பிற்பகலில், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், 'ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய செய்தியை சொல்ல வேண்டிய நேரம்' என்று பதிவிட்ட மஸ்க் - மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வெளியிடப்படாத கோப்புகளில் டிரம்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது எனக் கூறினார். ஆனால் தனது கூற்றுக்கு ஆதாரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை. மஸ்க்கின் கூற்றுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு லேசான மறுப்பை மட்டுமே வழங்கினார். "ஒன் பிக் பியூட்டிஃபுல் மசோதாவின் மீதான ஈலோனின் அதிருப்திக்குக் காரணம், அதில் அவர் விரும்பிய கொள்கைகள் இல்லை என்பது தான். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்" என்று கூறினார். டிரம்பின் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டத்தில் மஸ்க் வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பை அவரால் ஏற்படுத்த முடியும். இதை நன்கு அறிந்த டிரம்ப், நேற்றைய நாளின் (ஜூன் 5) இறுதிக்குள் பதற்றத்தை சற்றே தணித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற காவல்துறை பாராட்டு நிகழ்வில் பொதுவில் தோன்றியபோது மஸ்க் குறித்து கருத்து தெரிவிப்பதை அவர் தவிர்த்தார். பின்னர் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் "அவருக்கு (மஸ்க்) எதிராகத் திரும்புவதில்" தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், ஆனால் பல மாதங்களுக்கு முன்பே அரசாங்க வேலையிலிருந்து மஸ்க் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவர் தனது 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதா மற்றும் செலவுச் சட்டத்தை ஆதரித்து பேசுவதில் கவனம் செலுத்தினார். இருப்பினும், வியாழக்கிழமை நடந்த மோதல்களைத் தொடர்ந்து, ஈலோன்- டிரம்ப் இடையே மீண்டும் இயல்பான சூழல் ஏற்படலாம் என்பதை கற்பனை செய்வது கடினம். டிரம்ப் குற்றச்சாட்டுக்கு மஸ்க் பதில் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதாவை மஸ்க் விமர்சித்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப். கடந்த வாரம் தொடங்கிய இந்த மோதல், புதன்கிழமை தீவிரமடைந்து, வியாழன் அன்று அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் உச்சகட்டத்தை எட்டியது. அன்றைய தினம், விருந்தினராக வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த ஜெர்மனியின் அதிபர் ஃபிரீட்ரிக் மெர்ஸ் சங்கடத்துடன் மௌனமாக அமர்ந்திருந்த போது, அதிபர் டிரம்ப் ஒருவித விரக்தியுடன் பேசுவதைக் காண முடிந்தது. தன்னுடைய 'ஒன் பிக் பியூட்டிஃபுல்' மசோதாவை மஸ்க் விமர்சித்தது குறித்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார் டிரம்ப். 'மஸ்க்கின் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதியுதவி இல்லையென்றால் கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றிருப்பார்' என்ற கருத்துக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான குடியரசுக் கட்சியின் அழுத்தத்தால் மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லா பாதிக்கப்படும் என்பதே மஸ்க் தனக்கு எதிராக திரும்ப காரணம் என டிரம்ப் கூறினார். இதற்கு உடனடியாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிலளித்தார் மஸ்க். அவரை எக்ஸ் தளத்தில் 22 கோடி பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கார் மானியங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும், தேசியக் கடனைக் குறைக்க விரும்புவதாகவும், அது நாட்டின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார். தனது உதவி இல்லாமல் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் மற்றும் அவரது கட்சியினர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். "டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை" என்று அவர் விமர்சித்தார். பின்னர், நேற்று பிற்பகலில், ஈலோன் மஸ்க் தனது தொடர்ச்சியான எக்ஸ் தள பதிவுகள் மூலம் டிரம்புக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களைத் தொடங்கினார். அதன் பிறகு தான் இந்த மோதல் தீவிரமடையத் தொடங்கியது. மஸ்க் - டிரம்ப் சக்தி வாய்ந்த கூட்டணி பிரிந்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் டிரம்ப், மஸ்க் மஸ்க்கும் டிரம்பும் ஒரு சக்தி வாய்ந்த ஆனால் சாத்தியமற்ற கூட்டணியை உருவாக்கினர். அதன் விளைவாக டிரம்பின் நிர்வாகத்தில் அரசின் பட்ஜெட்டைக் குறைக்கும் திட்டத்தில் ஒரு முக்கிய பதவியைப் பெற்றார் மஸ்க். அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் பொறுப்பு ஈலோன் மஸ்க்கிடம் கொடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்பின் 'முதல் 100 நாட்கள்' என்ற பிரசாரத்தில் இந்த செலவுக் குறைப்பு பணிக்குழு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அது பல நிறுவனங்களை மூட வழிவகுத்தது, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. சிறந்த நண்பர்களாக டிரம்பும் மஸ்க்கும் தங்களை காட்டிக்கொண்ட போதும், இந்த இரு ஆளுமைகள் எங்கே, எப்போது வேண்டுமானாலும் மோதிக் கொள்ளக் கூடும் என்பது பற்றிய ஊகங்கள் சமீபத்தில் தான் வெளிவரத் தொடங்கின. அந்த கணிப்புகள் தொடக்கத்தில் தவறாகத் தோன்றின. மஸ்க்கின் புகழ் குறைந்து வந்தாலும், நிர்வாகத்தில் அதிகாரிகளுடன் அவருக்கு பகைமைகள் இருந்தபோதிலும் டிரம்ப் மஸ்க்கிற்கு ஆதரவாகவே இருந்தார். ஒரு பிரிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஒவ்வொரு முறையும், ஓவல் அலுவலகத்திலோ, அமைச்சரவை அறையிலோ அல்லது மார்-எ-லாகோவிற்கு அதிபர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கும் போதோ மஸ்க் உடனிருப்பார். அமெரிக்க அரசில், மஸ்க் ஒரு "சிறப்பு அரசாங்க ஊழியர்" ஆக நியமிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற அவர் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 20-ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கணக்கிட்டால், மே மாத இறுதியில் அவரது பணிக்காலம் முடிவடைந்தது. மஸ்க்கிற்கு ஓவல் அலுவலகத்தில் ஒரு ஆடம்பரமான 'ஃபேர்வல்' விழா நடத்திய டிரம்ப் வெள்ளை மாளிகைக்கான தங்கச் சாவியை பரிசளித்தார். மஸ்க் எப்போதாவது திரும்பி வரக்கூடும் என்ற குறிப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இனி திரும்பி வருவதற்கான அழைப்பு வராது என்பதையும், தங்கச் சாவிக்கு பயன் இருக்காது என்பதையும் நாம் இப்போது சொல்ல முடியும். "ஈலோனுக்கும் எனக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருந்தது," என்று டிரம்ப் வியாழக்கிழமை கூறினார். இங்கு அவர் 'இருந்தது' என்ற கடந்த கால வார்த்தையை குறிப்பிட்டது முக்கியமானது. புதன்கிழமை இரவு டிரம்ப் திடீரென அறிவித்த 12 நாடுகளுக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகள், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மீதான கூடுதல் தடைகள் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தொடர்பான விசாரணை ஆகியவை மஸ்க்கின் விமர்சனத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கான முயற்சிகள் என்று சிலர் கருதினர். மஸ்க்கின் முந்தைய விமர்சனங்களுக்குப் பிறகு, வெள்ளை மாளிகையும், அதன் ஆதரவாளர்களும் மஸ்க்கை மேலும் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர். பின்னர் டிரம்ப் பேசினார், அதற்குப் பிறகு மஸ்க்கிடமிருந்து எதிர்வினைகள் குவிந்தன. அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செலவுக் குறைப்பு பணிக்குழுவை (DOGE) வழிநடத்தும் பொறுப்பிலிருந்து மஸ்க் விலகியபோது, அவருக்கு ஒரு நினைவுப் பரிசை டிரம்ப் அளித்தார் இப்போது மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்தப் பதற்றம் அடுத்து எந்தத் திசையில் செல்லும் என்பதுதான். ஈலோன் மஸ்க்கின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு மத்தியில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சித் தலைவர்கள் டிரம்பின் மசோதாவை ஆதரிப்பது சற்று கடினம். குறிப்பாக, அவ்வாறு எதிர்ப்பவர்களுக்கு வாய்மொழியாக மட்டுமல்லாது, நிதி பாதுகாப்பையும் மஸ்க் வழங்க முடியும். மஸ்க் உடனான அரசாங்க ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இருப்பினும், அவர் செலவுக் குறைப்பு பணிக்குழுவில் (DOGE) மஸ்க்கின் முன்னாள் நண்பர்களை குறிவைக்கலாம் அல்லது பைடன் அதிபராக இருந்தபோது மஸ்க்கின் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளை மீண்டும் தொடங்கலாம். தற்போது, அவருக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இதற்கிடையில், இருவருக்கும் இடையே நடந்து வரும் மோதலைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களால் எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. மஸ்க் இதற்கு முன்பு ஜனநாயகக் கட்சிக்கு நன்கொடை அளித்தவர் என்பதைக் கருத்தில் கொண்டாலும், மிகச் சில ஜனநாயகக் கட்சி தலைவர்களே மஸ்க்கை மீண்டும் தங்கள் முகாமிற்கு வரவேற்க விரும்புகிறார்கள். ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்று ஒரு பழைய பழமொழி உண்டு. "ஆனால் இந்த விளையாட்டில் இருவருக்குமே லாபம் இல்லை" என்று ஜனநாயக கட்சியின் மூலோபாய நிபுணர் லியாம் கெர், பொலிட்டிகோ எனும் டிஜிட்டல் நாளிதழிடம் கூறினார். "அவர் ஜனநாயகக் கட்சியினரை நோக்கி எந்த வகையில் காய் நகர்த்தினாலும், அது குடியரசுக் கட்சியினருக்கு தீங்கு விளைவிக்கும்" என்கிறார். இப்போதைக்கு, ஜனநாயகக் கட்சியினர் இந்தப் பிரச்னையில் அமைதியாக இருக்க விரும்புவதாகவும், டிரம்ப்- மஸ்க் இடையிலான மோதல் தொடர்வதை அனுமதிப்பதாகவும் தெரிகிறது. இருவருக்கும் இடையிலான இந்த கூச்சல், குழப்பம் அடங்காத வரை, அமெரிக்க அரசியலில் உள்ள மற்ற அனைத்து விஷயங்களும் இருட்டடிப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மோதல் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்க முடியாது. "டிரம்பின் அதிபர் பதவி என்பது இன்னும் மூன்றரை ஆண்டுகள் தான், ஆனால் எனக்கு இன்னும் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது" என்று எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq85127ewdqo

தமிழரசுக்கட்சி கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

3 months 2 weeks ago
ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 01:41 PM ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன , நாங்கள் இணங்கியமைக்கான பிரதான காரணம் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்தேசியத்திற்கான ஒரு பெரும் ஆணையை வழங்கியிருந்தார்கள். தனித்தனியாக எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை எந்தவொரு சபையிலும் வழங்கியிருக்காவிட்டாலும், தமிழ்தேசிய தரப்பிற்கு தங்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள் தமிழ்தேசியம் பேசி வாக்குகளைகோரிய ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்தேசிய பேரவை தமிழரசுக்கட்சிக்கு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளை மக்கள் வழங்கியிருந்தார்கள். ஆகவே உண்மையிலே நடக்கவேண்டியது என்னவென்றால் ,எவ்வாறு தமிழரசுக்கட்சியும்ஜனநாயக தேசிய கூட்டணியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு வந்தனவோ அதேபோன்று,தமிழரசுக்கட்சியும் அந்த இணக்கப்பாட்டிற்கு வந்து அதன் ஊடாக ஒவ்வொரு சபையிலும் ஒரு ஸ்திரதன்மையை உருவாக்குவதுதான் பொருத்தமாகயிருக்குமே தவிர,அதனை விட்டுவிட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மாறாக, செயற்படுகின்ற தரப்புகளுடன் கூட்டு சேர்வதும், அதுவும் தமிழ் தேசியத்துடன் இருக்ககூடியஈ ஏற்கனவே இருக்ககூடிய ஒரு பலமான கூட்டை தோற்கடிப்பது அதற்காக செயற்படுவது உண்மையிலே பொருத்தமற்றது. இது தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும், மக்களிற்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும். எம்மை பொறுத்தவரையில் நாங்கள் இந்த கூட்டில் கைச்சாத்திட்டவேளை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்திருந்தோம்,எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் ஒன்றிணைந்து இருப்பது,இது தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு கூட்டல்ல, மாறாக, இந்த கூட்டின் ஒப்பந்தத்தை படித்து, எவரும் பிழைகண்டுபிடிக்க முடியாத வகையிலேயே அந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது, ஆகவே தமிழரசுகட்சி அதனை ஏற்றுக்கொள்வதற்கு எந்த விதமான தயக்கம் இருக்க முடியாது. உண்மையிலே தமிழ்தேசியத்தை நேசித்து அதற்கு நேர்மையாக நடப்பதாகயிருந்தால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விடயத்தையும் எதிர்க்க முடியாத நிராகரிக்க முடியாத நிலைதான் இருக்கின்றது. இண்டைக்கும் நாங்கள் கேட்கின்றோம், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். https://www.virakesari.lk/article/216765

14 வயது சிறுமியை மணம் முடித்த 25 வயது நபர் விடுதலை - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? போக்சோ வழக்கு என்ன ஆனது?

3 months 2 weeks ago
கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போக்சோ வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்ட இளைஞரை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்துள்ளது. மே 23 அன்று உச்ச நீதிமன்றத்தின், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு போக்சோ குற்றவாளி ஒருவரை விடுதலை செய்து அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. போக்சோ வழக்கின் தன்மை, அதன் நிலை, குழந்தை திருமணங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நிகழ் நேர (real time dash board) கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி, குற்றவாளியை விடுதலை செய்த நீதிமன்றம், "இந்த வழக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கக் கூடாது. இருக்காது. இது, நம்முடைய சமூகம் மற்றும் நீதித்துறையின் தோல்வியின் பிரதிபலிப்பு," என்று மேற்கோள்காட்டியது. (2018-ஆம் ஆண்டில்) 14 வயது சிறுமியைத் திருமணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க நபர் வழக்கில் இருந்து வெளிவந்தது எப்படி? பாலியல் கல்வியை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டிய கட்டாயம் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்தது என்ன? இந்த வழக்கில் நடந்தது என்ன? இது ஏன் மாறுபட்ட வழக்காக கருதப்படுகிறது? 2018-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில், 25 வயது மதிக்கத்தக்க ஆணுடன், 14 வயது சிறுமி வாழ்ந்து வந்துள்ளார். அவரின் தாயார் அந்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அந்த மகளை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த பெண் குற்றம் சுமத்தப்பட்ட நபருடன் சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டனர். விரைவில் அவர் பெண் குழந்தைக்கு தாயானார். ஆனால் 2021-ஆம் ஆண்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் செய்த குற்றங்களுக்காக போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் மொத்தமாக 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைக்கு எதிராக அந்த சிறுமி, சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை மீட்பதற்காக ரூ. 1,35,000 வரை செலவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில், "சட்டம் இதை ஒரு குற்றமாக கருதுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் அவ்வாறு கருதவில்லை. அவருக்கு இழைக்கப்பட்ட குற்றம் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், வழக்கிற்கு பிறகு காவல் மற்றும் நீதித்துறை, அந்த நபரை விடுதலை செய்வதற்காக அப்பெண் நடத்திய போராட்டம், மகளுக்கு சிறப்பானதை செய்ய வேண்டும் என்ற எண்ணம், பொருளாதார சிக்கல்கள் போன்றவை தான் அவரை பாதித்துள்ளது. தன்னை "பாதிக்கப்பட்ட பெண்ணாக" கருத விரும்பாத பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய வேண்டும். இது அவரின் குடும்பத்தை பாதுகாக்கும் என்றால், அந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அந்த உதவிகள் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாயால் தனித்துவிடப்பட்ட அவர் பிறகு, குற்றஞ்சுமத்தப்பட்ட நபருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். வழக்கில் நடந்தது என்ன? மேற்கு வங்க மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயது மகளைக் காணவில்லை என்று பெண் ஒருவர் புகார் மனு அளிக்கிறார். விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட 25 வயதான நபரின் தூண்டுதலின் பேரிலே அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியேறியதாக தெரிய வந்தது. புகார் அளித்து விசாரணை துவங்கிய பிறகு, அந்த சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து அழைத்துவரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் எந்த வித பாதுகாப்பும் அந்த சிறுமிக்கு வழங்கப்படாத சூழலில், அவருடைய தாயார் அவரை அரசு இல்லத்தில் இருந்து அழைத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறார். ஆனால் 2019-ஆம் ஆண்டு அந்த சிறுமி, குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்று வாழ ஆரம்பித்திருக்கிறார். இந்த சூழலில் அவர் கர்ப்பம் அடைந்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதே சமயத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதி, விசாரணைக்குப் பிறகு குற்றவாளிக்கு போக்சோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 363-ன் கீழ் (கடத்தல் குற்றங்களுக்காக பதிவு செய்யப்படும் பிரிவு) 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 366-ன் கீழ் (18 வயது பூர்த்தி அடையாத பெண்ணை கடத்துதல் மற்றும் திருமணம் செய்ய நிர்பந்திக்கும் குற்றங்களுக்காக பதியப்படும் பிரிவு) ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் வழங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது தண்டனையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்புக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் குற்றவாளி. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்து, குற்றவாளியை வழக்கில் இருந்து விடுதலை செய்து அறிவித்தது. இது தொடர்பான தீர்ப்பை வழங்கும் போது, கொல்கத்தா உயர் நீதிமன்றம், சில அவதானிப்புகளை கவனத்தில் கொண்டது. முதலில் இந்திய தண்டனைச் சட்டம் 363 மற்றும் 366 பிரிவில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் இருந்து குற்றவாளியை விடுதலை செய்தது. " போக்சோ சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நீதிபதி, குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தை திருமண சட்டம் 2006, பிரிவு 9-ன் கீழ் அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஐ.பி.சி. 363 மற்றும் 366 - ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து குற்றவாளி விடுவிக்கப்படுகிறார்," என்று குறிப்பிட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனை கருத்தில் கொண்டு போக்சோ வழக்கில் இருந்து குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாகவும் அறிவித்தது உயர் நீதிமன்றம். அதில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அவரின் மகளையும் பேத்தியையும் கைவிட்டுவிட்டார். வேறு வழியேதுமின்றி, அந்த சிறுமி குற்றவாளியின் குடும்பத்தினருடனே வாழ்ந்து வந்தார்," என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது. வழக்கறிஞர்கள் மாதவி திவான் மற்றும் லிஸ் மேத்யூ ஆகியோரை "அமிக்கஸ் கியூரியாக" நியமனம் செய்து வழக்கின் தன்மை குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அமிக்கஸ் கியூரியின் பரிந்துரைகள் "பெற்றோர் மற்றும் அரசிடம் இருந்து சிறுமிக்கு தேவையான எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்கும் பொறுப்பை சரியாக செய்ய அரசாங்கம் தவறிவிட்டது. தன்னுடைய எதிர்காலம் குறித்து எந்தவிதமான முடிவையும் எடுக்க வாய்ப்புகள் ஏதுமற்ற சூழலில் அவர் குற்றவாளியின் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது," என்று குறிப்பிட்டிருந்தனர். "முறையான விழிப்புணர்வு இருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமலே தவிர்த்திருக்க இயலும். சாத்தியா சாலா, ஹெல்லோ ஷஹேலி போன்ற டிஜிட்டல் தளங்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப உருவாக்கப்பட்டது. இத்தகைய முன்னெடுப்புகள் இந்தியாவில் இருந்தும் கூட, யுனெஸ்கோவின் தி ஜேர்னி டுவார்ட்ட்ஸ் காம்ப்ரெஹென்சிவ் செக்சுவாலிட்டி எஜூகேஷன்: க்ளோபல் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் (2021) அறிக்கையின் படி, எச்.ஐ.வி மற்றும் பாலியல் சார்ந்த கல்விகள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது. முறையான கொள்கை சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் பாடத்திட்டங்கள் இல்லையெனில் இந்தியா பதின் பருவ ஆரோக்கிய சீர்கேடுகள், தவறான தகவல்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான கல்வி குறித்து நிலவும் தவறான பார்வையால் இந்தியா அவதிப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே விரிவான பாலியல் சார் கல்வியை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும்," என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான குழு ஒன்றை உருவாக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வாயிலாக மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். பாலியல் கல்வியை செயல்படுத்தல், ஆலோசனை சேவைகள், போக்சோ வழக்குகளின் நிலை, குழந்தை திருமணங்கள் போன்றவற்றை கண்காணித்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களின் நிகழ்நேரத் தரவைச் சேகரிப்பதன் மூலம், அரசு இது போன்ற முக்கியப் பிரச்சினைகளைக் கையாள்வதில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த இயலும்," என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுனெஸ்கோ 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் சார்ந்த கல்வி இந்தியாவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டியது. மனித உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கப்பட்ட வழக்கு "பொதுவாக இது போன்ற வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, குற்றவாளிக்கு கடுமையான தண்டனையே உறுதி செய்யப்படும். ஆனால் இந்த வழக்கை ஒரு குற்றவழக்காக கருதாமல், மாறாக மனித உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கப்பட்ட வழக்காக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மன நலனையும் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது," என வழக்கறிஞர் சுவகதா ரகா தெரிவித்தார். கர்நாடகாவில் போக்சோ வழக்குகளில் வாதிடும் அவர், உச்ச நீதிமன்றம் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்றார். "பதின் பருவ குழந்தைகள், தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கும், 'ரொமாண்டிக் உறவில்' ஈடுபட்ட காரணத்திற்காக சிறை செல்வதை குறைக்கவும் பாலியல் கல்வி கட்டாயம் உதவும். மத்திய அரசு இதற்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்து, இது போன்ற விவகாரங்களில் குழந்தைகள் சிக்கிக் கொள்வதை தடுக்க உதவ வேண்டும்," என்று தெரிவித்தார். இது தொடர்பாக மேற்கொண்டு பேசிய, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றும் ஆர்த்தி பாஸ்கரன், "சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம் அடையும் போதோ, அல்லது அவருக்கு குழந்தை பிறக்கும் போதோ சிக்கல்கள் நீடிக்கின்றன. இது போன்ற தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்க, இத்தகைய கல்வி கட்டாயம் உதவும்," என்று கூறினார். "போக்சோ சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும்" போக்சோ வழக்குகளைப் பொருத்தமட்டில், சென்னை நீதிமன்றங்கள் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டுகிறார் ஆர்த்தி. "சிறார்/சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் வன்முறை போன்ற வழக்குகள் மட்டுமே போக்சோ நீதிமன்றங்களில் நடைபெறுகின்றன. ஆனால் வீட்டில் இருந்து வெளியேறும் பதின்பருவ காதலர்கள் தொடர்பான வழக்கை தீர்த்து வைக்கவே அவர்கள் மகளிர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். பதின்ம வயதில் தோன்றும் காதல்கள் குறித்து சென்னை நீதித்துறையில் ஒரு நல்ல புரிதல் இருக்கின்ற காரணத்தால், இதில் சம்பந்தப்பட்ட சிறார் மற்றும் சிறுமிகளுக்கு தேவையான மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. சிலர் 18 வயதான பிறகு திருமணம் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர். சில பெற்றோர்கள், அவசரப்பட்டு வழக்கு பதிவு செய்துவிட்டோம் குழந்தைகளின் எதிர்காலம் கெட்டுவிடும் என்று கோரிக்கை வைத்து வழக்கை ரத்து செய்ய முன்வருவார்கள். சில நேரங்களில் வழக்கில் சம்பந்தப்பட்ட பதின்பருவ பெண், பதின்பருவ ஆணைக் காட்டிலும் வயதில் மூத்தரவாக இருப்பார். இது போன்ற 'க்ரே ஏரியாக்கள்' வரும் போது, இரு தரப்பின் நலனையும் கருத்தில் கொண்டே வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது," என்று கூறுகிறார் ஆர்த்தி. 2021-ஆம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் நோக்கம் காதல் வயப்படும் பதின்ம வயதினரை சிறையில் அடைப்பதில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்த வண்ணம் இருக்கின்றனர். எனவே இந்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியது. "ஆனால் எக்காரணம் கொண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக சுரண்டுபவர்கள், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட நபர் குற்றவாளியாக கைது செய்யப்படும் போது, சரித்திர பதிவேட்டுக் குற்றவாளியாக இருக்கும் போது, கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு உறுதி செய்யப்படும்," என்றும் ஆர்த்தி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போக்சோ வழக்குகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 2021-ஆம் ஆண்டு தெரிவித்தது "கொள்கை அளவிலான மாற்றங்கள் நன்மை அளிக்கும்" "உச்ச நீதிமன்றம் தரவுகளை சேகரித்து, போக்சோ வழக்குகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கக் கூடியது," என்று கூறுகிறார் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் பணியாற்றும் ஹஃப்சா. "பதின்பருவ காதல் விவகாரங்களில் சிறார் பள்ளிகளுக்கு செல்லும் பதின்ம வயது ஆண்களின் நிலையும் பிரச்னைக்குள்ளானதாகவே உள்ளது. அவர்கள் சிறார் சீர் திருத்தப் பள்ளியில் இருக்கும் போதும் சரி, வெளியே வந்து பிறகும் சரி அவர்களை பார்க்கும் சமூகத்தின் பார்வை அவர்களை குற்றவாளிகளாகவே கருதுகிறது. இயற்கையாக நடக்கும் ஒரு உறவில், அவர் குற்றவாளியாக கருதப்படுதல் காலத்திற்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். அது போன்று 'கம்யூனிட்டி அவுட் ரீச்' திட்டங்களையும் செயல்படுத்துகின்றோம். இது பதின்பருவத்தில் காதல் வயப்படும் இரு தரப்பினரையும் இயல்பான மக்களாக நடத்த பெரிய அளவில் உதவும் என்று நம்புகின்றோம். உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள் செயல்முறைக்கு வரும் போது, பெரிய அளவில் மாற்றங்களை அது உருவாக்கும்," என்றும் ஹஃப்சா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd90zjj2dgko

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 2 weeks ago
சிங்களவன் விற்றால் ஏன் வாங்கி பாவிக்கின்றார்கள்? கனடா / இங்கிலந்து போன்ற நாடுகளிலும் இப்படி பாவித்து சீரழிகின்றார்கள்தாதனே. அவரவர் தெரிவு.

பாத்ஃபைண்டர் - அக்ஷய பத்ரா இணைந்து கொழும்பு பாடசாலைகளில் இலவச பகல் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 06 JUN, 2025 | 01:33 PM கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இலவச பகல் உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இந்தியாவின் அக்ஷய பத்ரா அறக்கட்டளையுடன் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை உத்தியோகபூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட அக்ஷய பத்ரா அறக்கட்டளையானது பாடசாலைகளில் இலவச உணவு வழங்கும் உலகின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் 3 முக்கிய நகரங்களில் செயல்படும் இந்த அறக்கட்டளையானது, தற்போது 23,581 பாடசாலைகளில் நாளாந்தம் 2.25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு போசாக்கான பகல் உணவை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தினூடாக 78 மத்திய மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் இருந்து உணவு வழங்கப்படுகிறது. அங்கு சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்திய அரசாங்கத்தின் முதன்மையான "PM POSHAN" ஊட்டச்சத்து திட்டத்தில் அக்ஷய பத்ரா முக்கியமானதொரு பங்காளியாகவும் உள்ளது. இதற்கு முக்கிய நன்கொடையாளர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். பெங்களூரில் உள்ள அறக்கட்டளையின் தலைமையகத்தில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட மற்றும் அக்ஷய பத்ரா அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ மது பண்டித் தாசா இடையே அண்மையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சந்திப்பின் போது, இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் முன்னோடியாக பகல் உணவு திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இரு இரு தரப்பினரும் கலந்துரையாடினர். புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பாத்ஃபைண்டர் அறக்கட்டளையினால் செயல்படுத்தப்படும் கொழும்பில் பாடசாலைகளில் பகல் உணவு வழங்கும் திட்டத்துக்கு அக்ஷய பத்ரா உணவு தயாரித்தல் மற்றும் விநியோகத்திற்கான தொழில்நுட்ப செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் MMBL பாத்ஃபைண்டர் குழுமத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கே. பாலசுந்தரம் மற்றும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தலைவர் பெர்னார்ட் குணதிலக்க ஆகியோர் கையெழுத்திட்டனர். அக்ஷய பத்ராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக அதிகாரிகள் சஞ்சலபதி தாசா மற்றும் சிவா சுவீர் சனிதாஸ் ஆகியோர் பெங்களூருவிலிருந்து மெய்நிகர் வழியாக கையெழுத்திட்டனர். https://www.virakesari.lk/article/216764

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 2 weeks ago
I'm நேரடியாகவே விடயத்துக்கு வருகிறேன் வடமாகாணத்தின் பொறுப்புள்ள அரச பதவியில் இருக்கும் ஒருவரது மகள் புருஷன் திருமணத்துக்கு முன்பு கஞ்சா போதை வஸ்து பாவித்தது நான் அறிவேன். யாழ் கூடாநாட்டில் போதை மற்றும் ரவுடிகளை பணத்துக்காக வெளியில் எடுத்துவிடும் பெண் வக்கீலின் மகளை அதே ரவுடிக்கும்பல் அப்பெண் காதலித்தவனையே கல்யாணம் செய்யச்சொல்லி தெருவில் மிரட்டப்பட்டார் பெண்ணின் தந்தை நீதிவான் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இதில் தலையிட மாட்டார்கள் காரணம் எல்லா கட்சிகளுக்கும் ரவுடிக்கும்பல் தேவை

தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!

3 months 2 weeks ago
போர் முடிந்தபின் எல்லோரும் திட்டமிட்டுத் தையிட்டியை அடுத்த இன மோதல் களமாகக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 2 weeks ago
ஐரோப்பியர்கள் 13 இனை ஒதுக்கக் காரணம் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கை. அது அப்படியே பரவி விட்டது. எங்கள் ஊரில் 13 இப்படி இல்லையே. சீனாவில் 13 கூடாத இலக்கம் இல்லையாம். மாறாக 4 இனை ஒதுக்குகிறார்கள். பழைய எகிப்த், கிரேக்கத்தில் 7 ஒதுக்கப்பட்டதாம். இந்தியாவில் 8 இனை ஒதுக்குகிறார்கள். எண் சாத்திரம் இருக்கும் இடத்தைப் பொறுத்து அல்லது மதத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடுமா ? 😂

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 2 weeks ago
சொல்லாமலே அறிவார் கிழவர். அஜித் படம் போட்டாலே அன்ரிமாரைப் பார்க்கப் போகிற ஒருவர், விண்வெளி நாயகன் படம் போட்டால் பாட்டிமாரைப் பார்க்க கண்டிப்பாகப் போகத்தானே செய்வார். கிருபன் இது உள்ளங்கை நெல்லிக்கனி.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months 2 weeks ago
யாழ்க்கள கணிப்பு போட்டி கேள்விகள் நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Steven Smith போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Mitchell Starc போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்ரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்ரேலியா

காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - வீட்டோவை பயன்படுத்தியது அமெரிக்கா

3 months 2 weeks ago
ஐந்தென்ன ஐம்பது தடவையும் இஸ்ரேலை காப்பாற்ற வீற்றோவை பாவிக்கும்.
Checked
Tue, 09/23/2025 - 20:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed