3 months 2 weeks ago
விரைவில் அதனை… திராவிடமும், ஆரியமும் செய்யும். 😎
3 months 2 weeks ago
இந்தத் திரிப்பக்கம் எட்டியும் பார்க்காமல் இருக்க வைத்துவிட்டது! நானும் மடைத்தனமாக CSK ஐ play-off க்கு வரும் என்று கணித்திருந்தேன்😩
3 months 2 weeks ago
அன்னையர் தினத்துக்கு பிள்ளைகள் பரிசுகளுக்காக செலவிட்ட தொகை இந்த வருடம் 1.02 பில்லியன் யூரோக்கள் என அறிவித்திருக்கறார்கள். தந்தையர் தினமா? ஓரிருவர் "அப்பா, இதோ சொக்கிளேட்!" எனக் கொடுப்பார்களா என்பதே சந்தேகம். அதுவும் தந்தையர்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்களுக்குப் பரிசாக வேண்டியது ஒன்று தான்—வீட்டிலிருந்து ஒரு நாள் விடுதலை! ஆனால் அதற்கும் ஒரு பஞ்சம். தந்தையர் தினத்துக்கு யாரும் விடுமுறை விடுவதில்லை. ஆனாலும் "இயேசு விண்ணுக்குச் சென்ற தினம்" என்ற பெயரில் உள்ள பொது விடுமுறை நாளை, தந்தையர் தினமாகவே ஆண்கள் யேர்மனியில் கொண்டாடுகிறார்கள். தந்தையர் தினம் என்றால் என்ன? நண்பர்களுடன் சேர்ந்துச் சைக்கிளில் சுற்றி, பியர் குடித்து மகிழ்வதே. மாலை 6 மணி வரைக்கும் தான் இந்தக் கொண்டாட்டமும். வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதே அதன் காரணம். சில புத்திசாலிகள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுத்து வியாழன் முதல் ஞாயிறு வரை நான்கு நாட்கள் மகிழ்ந்திருப்பார்கள். பலருக்கு இன்று தந்தையர் தினம்தான் என்பது வந்தது, போனதே தெரியாது. எதுவானாலும்... தந்தையர் தின நல்வாழ்த்துகள்! 🎉👨🍼🍻
3 months 2 weeks ago
அந்த "சார்" ரை பாதுகாக்க வேண்டும் என்றால் துரித கதியில் வழக்கை முடித்து இவரையும் ஒரு 6-7 மாதம் ஏசி ரூமில் வைத்து எடுக்க வேண்டும்.
3 months 2 weeks ago
உன்மைதான். கொடுத்துக் கெடுத்தது. ஒன்று எனக்கு. மற்றது மற்றவர்களுக்கு.
3 months 2 weeks ago
இவர் தமிழ் சார்ந்தும் புலி சார்ந்தும் கொஞ்சம் ஓவராக பாடுகிறார் அவரின் கையை பிடித்து இழுத்தார் என்று ஒரு விபச்சாரியை கண்ணகி ஆக்கினால்தான் என் தாகம் தீரும்
3 months 2 weeks ago
அப்படி இல்லையே? அது யாராலும் மறுக்க முடியாத கருத்து, உண்மையான கருத்து அல்லவா?
3 months 2 weeks ago
கொடுத்ததில்ல கெடுத்தது.
3 months 2 weeks ago
இங்கு பலரது நோக்கம் புலிகளின் தியங்களை அர்பணிப்புக்களை மறைத்து நடந்து முடிந்த சில தற்செயல்களையும் சில தன்னிச்சையான முடிவுகளையும் வைத்து அவர்களை பயங்கரவாதிகளாகவே தக்க வைத்துக்கொண்டால் தாங்கள் மகாத்மாக்கள் மக்களுக்கா வெட்டி புடுங்கியவர்கள் என்ற எண்ணத்தில் மிதப்பதுதான். புலிகள் முள்ளிவாய்களில் இருந்த அத்தனை மக்களையும் கொன்றிருந்தால்கூட .... எதிர்கால தற்கால நல்லிணக்கங்களுக்கும் ஒற்றுமைக்கும் என்ன வில்லங்கங்கம் இருக்கப்போகிறது? இல்லாத புலிகளின் ஆதிக்கம் இப்போ எந்த வகையில் இப்போதைய அரசியல் முடிவுகளை தடுத்து நிறுத்த போகிறது? இருவராலும் பாதிக்கப்பட்ட்து தமிழ் மக்கள்தானே ? எங்களை நாங்களே சுட்ட்து தப்புதான் அது மாபெரும் குற்றம் என்று சிங்களவர்களுக்கு சென்று சொலவதில் ........ அதில் சிங்கள தரப்பிற்கு என்ன வில்லங்கம் / வியாக்கினம் இருக்கிறது? ஐநா சபை யாப்பிற்கு எதிரான முழுதான இனவழிப்பை ௩௦ வருடமாக செய்தவர்கள் சிங்களவர்களும் அவர்கள் அரசுகளும் இராணுவமும். அதுக்கு இணையாக எங்கள் காணி சண்டை வேலி சண்டையையும் ஆக்கினால்தான் ........ சிங்களவர்கள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவார்கள் என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுக்கு என்ன பெயர் என்று எனக்கு தெரியவில்லை
3 months 2 weeks ago
புலிகளும் வேண்டாம், இராணுவமும் வேண்டாம் என்று இடம்பெயராமல் தங்கள் வீட்டிலிருந்தவர்களையே இராணுவம் கொலை செய்து குழிதோண்டி புதைத்ததும் கிணறுகள் மலசல குழிக்குள் மூடியதும் தாங்கள் அறியாதது வியப்பே எனக்கு. தங்கள் காணிகளை, வீடுகளை பார்க்க சென்றவர்களை சுட்டுக்கொன்றதும் தெரியாததும் ஆச்சரியமே. கோவில்களிலும் வைத்திய சாலைகளிலும் தஞ்சம் புகுந்தவர்கள் மேல் குண்டுமழை பொழிந்ததும் கேள்விப்படாதது உங்கள் தவறே. எங்கெங்கோ வாழ்ந்தவர்களை விரட்டி புலிகளின் பின்னால் குவித்தது யார்? புலிகள் உருவாகமுதலே தமிழரை தேடித்தேடி கொன்றவர்கள் யார்? ஏதோ புலிகள் மக்களை தடுத்ததால்தான் இராணுவம் மக்களை கொலைசெய்ததுபோல் கதை பேசக்கூடாது. தங்கள் கைகளால் இராணுவத்திடம் கையளித்த தந்தையர், பிள்ளைகள், கணவன்மார் எங்கே? இவர்களை நம்பித்தானே கையளித்தார்கள்? பாடசாலைகள், வீடுகள் எல்லாம் ஏன் குண்டு வீசினார்கள்? புலிகளினாலா? புலிகளை அழித்தபின் தீர்வு என்று சொன்னார்களே, அந்த தீர்வு எங்கே? இன்னும் ஏன் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்? விகாரைகளை எழுப்புகிறார்கள்? தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, போர்நிறுத்த கண்காணிப்பு குழுவை ஏன் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்? சிறுவன் பாலச்சந்திரன்! அவன் ஆயுதம் ஏந்தவில்லை, அரசியல் பேசவில்லை, தனக்கு என்ன நிகழப்போகுது என்பதையே அறியாதவன். அவனை ஏன் கொன்றார்கள்? புலிகள் பயங்கரவாதிகள் என்கிறார்கள், இவர்கள் மனிதரை மீட்க போர்புரிந்தவர்கள், பொறுப்புள்ளவர்கள் இவ்வாறு செய்யலாமா? எங்கு போனாலும் தங்களுக்கு பாதுகாப்பில்லையென மக்களே புலிகள் பின்னால் ஓடினார்கள். மக்களை மீட்பதற்காக போர் புரிந்தவர்கள் அந்த மக்களை தங்க வைக்க வசதிகள் செய்திருந்தார்களா? அடிப்படை வசதியேதும்......? மக்கள் வெளியேறா வண்ணம் பாதைகளை, உணவு மருந்து விநியோகத்தை தடுத்தவர் யார்? யாரையும் உள்ளே அனுமதிக்காததன் நோக்கம் என்ன? மக்கட்தொகையை குறைத்து சொன்னதன் காரணம் என்ன? எப்படியாகிலும் அங்குள்ள மக்களை ஒரே இடத்தில் கூட்டி கொன்றுவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என்று பரப்புரை செய்வதற்கே. அதைத்தான் இன்றுவரை சொல்கிறார்கள். ஆயுத விநியோகம் தடை செய்யப்பட்டுவிட்டது, புலிகள் சரணடைய வெள்ளைக்கொடியோடு செல்ல பேச்சுவார்த்தை, காத்திருப்பு நடந்திருக்கிறது. இதில உள்ளுக்கை வரவிட்டு அடிப்போமென யாரிடம் புலிகள் சொன்னார்கள்?
3 months 2 weeks ago
ஆமால்ல. சென்னை மீதான அன்புதான் எல்லாம். அதே சென்னைதான் நமக்கும் புள்ளிகளைக் கொடுத்தது.😁
3 months 2 weeks ago
உங்கட பதில்கள் செமையா இருக்கும். அடிக்கடி வாங்க. அத்தி பூத்தது போல வாறியல். வாத்தியார் என்றால் சும்மாவா. அகத்தியர் ஒரு பக்கம் போனால் உலகம் சரிந்து விடும். பிறகு விசுவாமித்திரரை தான் கொண்டு வர வேண்டும்.
3 months 2 weeks ago
வெளிநாடுகளுக்கு மருத்துவத் தொழில்களாக அனுப்புவதற்கும் தேவையான மருத்துவர்களை உருவாக்க அரசாங்கம் திட்டம்
தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவது தொடர்பில், அனுர அரசும் முந்தைய அரசுகளையும் போலவே பின்வாங்கி வருகின்றது என்று குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்ட சமீபத்திய பதிவு தொடர்பாக பரவலான விவாதம்
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் நிலை உருவானால், மீட்டெடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்த்தன கருத்து
3 months 2 weeks ago
ஏற்றுமதித் தொழிற்துறையைச் சுற்றியுள்ள சவால்கள் தொடர்பாக அநுரகுமார திசாநாயக்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல்
அரசாங்கம் கவிழும் என்ற பிரச்சாரம் நகைச்சுவைத் தனமாகும் – அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவிப்பு
வடக்கில் இராணுவத்திடமிருந்த காணிகள் விடுவிக்கப்படும் சில சந்தர்ப்பங்களில், தென்பகுதி அரசியல்வாதிகள் சிலர் அதற்கு எதிராகக் இன்றும் கருத்துத் தெரிவிப்பதாக வட மாகாண கருத்து
தற்போதைய அரசின் மீதான நம்பிக்கை சீர்குலைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்
3 months 2 weeks ago
இந்த மனிதன் நேரத்திற்கு ஒரு கதை பேசுபவர், இதனாற்தான் சிறையிலும் அடைக்கப்பட்டார். இவர், தான் போரை முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று வேறை பங்கு கேட்க்கிறார். தமிழர் எல்லோரும் வந்தேறு குடிகள் என்று சொன்னவருள் இவரும் ஒருவர். அமெரிக்கா சென்றபோது, தொலைக்காட்சி பேட்டியோ பத்திரிகைப் பேட்டியோ ஒன்றில் இவரது பேச்சுப்பற்றி கேள்வி கேட்டபோது, தான் அப்படி சொல்லவேயில்லை என மறுத்து விட்டார். சிறிது நாட்களில் நாடு திரும்பியவர் பின் அமெரிக்கா பக்கம் செல்லவேயில்லை. இவ்வளவுக்கும் இவர் அமெரிக்காவில் கிறீன் அட்டை பெற்றவர். வடக்கில் புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று முரசு கொட்டிக்கொண்டு பாதுகாப்பு பிரச்சினையாம். அப்போ தெற்கு, ஒரே கலவரமும் சூடுமாக இருக்கிறதே, நீதிமன்றத்துக்குள் சூடு நடத்தப்படுகிறதே, அதற்கு என்ன சொல்லப்போகிறார்? இவரை யாரும் தென்பகுதியில் கண்டுகொள்வதேயில்லை, ராஜபக்ஸக்கள் எடுக்கும் போர் வெற்றி விழாவிலேயே இவருக்கு அழைப்பு கிடைப்பதில்லை. போர்முடிந்த கையோடேயே சிறைக்குள் போடப்பட்டவர், அவமானப்படுத்தப்பட்டவர். இவருக்குத்தான் தேர்தலில் நம்ம தலைவர்கள் ஆதரவு வழங்கியவர்கள். பார்த்தீர்களா நன்றிக்கடனை? வெகு விரைவில் மஹிந்தா, நாமலோடு இணைவார் போலுள்ளது. பாலாய் வார்த்து தேனாய் ஊற்றினாலும் பாம்பு கடிச்சுக்கொல்லுமே.
3 months 2 weeks ago
மன்னிப்பு கேட்காத கமலுக்கு பாராட்டுக்கள்
3 months 2 weeks ago
அப்படியானால் இனிமேல் விரும்பி வரும் பெண்களுடன் படுக்கமாட்டரரா ?? 🤣🤣
3 months 2 weeks ago
'என்னுடைய பேச்சால் கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். நான் அங்கே மேடையில் பேசியது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அதை நான் அங்கே அப்படி சொல்லியிருக்கக்கூடாது.......................' இப்படி வழவழா கொழகொழா என்று அடிக்கடி மன்னிப்பு கேட்பது அங்கு மிகச் சாதாரணம். மேலும் சீமான் இப்பொழுது கொஞ்சம் தணிந்து இருக்கின்றார். நாலு ஊர்களில் நாலு வழக்குகள் என்று அவரை கொஞ்ச நாளாக பாடாய்ப்படுத்திவிட்டார்கள்.
3 months 2 weeks ago
சில வாரங்களின் முன் மக்கள் நீதி மய்யத்தின் ஏழாவது வருட விழா நடந்தது என்று நினைக்கின்றேன். அதில் பேசிய கமல் எங்களில் ஒருவர் நாடாளுமன்றம் போகின்றார், எங்களின் குரல் அங்கே ஒலிக்கும் என்றார். கடந்த லோக்சபா தேர்தலில் திமுக - மநீம உடன்பாடு வைத்துக்கொண்டதன் பிரகாரம் மநீமவிற்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று ஏற்கனவே தெரியும். ஆனால் யார் அந்த ஒருவர் என்பது தான் கேள்வியாக இருந்தது............... கடைசியில் கமலே அந்த ஒருவர் ஆகிவிட்டார் என்பது ஆச்சரியம் தான். தமிழ்நாட்டின் முதலமைச்சராக எண்ணி முடிவில் ராஜ்யசபா எம்பி ஆகியிருக்கின்றார். ராஜ்யசபாவிற்கு எவராவது போகின்றார்களா, ஏதாவது கதைக்கின்றார்களா என்ற செய்திகள் பொதுவாக வருவதில்லை. சச்சின் இருந்தார், இளையராஜா இருக்கின்றார் என்று நினைக்கின்றேன், இன்னும் ஏராளமான பிரபலங்கள் அங்கு இருந்திருக்கின்றார்கள். ஒரு meet and greet இடம் போல........
3 months 2 weeks ago
ஆமாம் சரி தெரியும் எனக்கு தெரியாதது சுஹாசினி கன்னடம் என்பது கமலின் தமையின். மகள் எப்படி கன்னடமாக. முடியும்??? அல்லது பின்புலமுடையவர் ஆகலாம்??? மன்னிப்பு கேட்டால் தமிழில் இருந்து கன்னடன் வரவில்லை என்று சொல்வதாகும். தமிழ்நாட்டில் சும்மா விடுவார்களோ??? சீமானின். படை பட்டி தொட்டி. எல்லாம் தாக்க தொடங்கி விடும்
Checked
Tue, 09/16/2025 - 01:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed