3 months 2 weeks ago
கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்...கடற்கரும்புலிகள் கப்டன் சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்ட...முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு சித்தா பாலசிங்கம் சிற்றூபன் சுழ...கடற்கரும்புலிகள் கப்டன் சித்தா பாலசிங்கம் சிற்றூபன் சுழி...முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு
3 months 2 weeks ago
இதில் பாதியளவு தான் உண்மை. ஐக்கிய அரபு நாட்டில் (UAE) முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு பன்றி இறைச்சி விற்கின்றனர். அதற்கென்றே தனி அறை போன்ற ஒன்றை ஏற்பாடு செய்து ஒரு சில பல்பொருள் அங்காடிகளில் விற்கின்றனர். நான் வாங்கி சமைத்துள்ளேன். UAE தவிர கட்டார், பஹ்ரெயின், எகிப்து, ஓமான், லெபனான் ஆகிய அரபு நாடுகளிலும் விற்கின்றனர். முஸ்லிம் நாடுகளில் பெரிய நாடான இந்தோனேசியாவிலும் விற்கின்றனர்.
3 months 2 weeks ago
அப்பிடியாங்க. அப்ப சரி.😁
3 months 2 weeks ago
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 என்ன வியப்பு!நானும்நந்தனும் இறுதியாக வரும் அணியைும் ஒரேமாதிரி DC கணித்திருக்கிறோம்.
3 months 2 weeks ago
குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @நந்தன் க்கு வாழ்துக்கள்
3 months 2 weeks ago
நான் நல்லூரில் இருக்கும் தீவக மக்கள் அங்கே அரசியல் செய்ய கூடாது என சொல்லி இருந்தால் - நீங்கள் சொல்வது சரி. ஆனால் தமிழகத்தை பற்றி 50 வருடம் முன் குடி பெயர்ந்த வட இந்தியருக்கோ, தெலுங்கருக்கோ அதிகம் தெரியாது இருக்க வாய்புண்டா என கேட்பின் என்பதில் உண்டு என்பதே. இதை முன்பே பியூஸ் மானுஷ் விடயத்தில், பாண்டே விடயத்தில் கூறி உள்ளேன். இருவரும் அண்மையை குடியேறிகள். ஆகவே அவர்களுக்கு மண்சார்ந்த புரிதல் குறைவு என. அடிக்கடி மொழிவழி மாநில பிரிப்புக்கு முன், பின் என நான் வகுப்பதை நீங்கள் முன்னர் அவதானித்திருக்க கூடும். இதே காரணம் தான். ஆனால் இதே காரணத்தை வைத்து தமிழில் பேசி, 600 வருடமாக தமிழ் நாட்டில் வாழ்வோர் மீது நாம் பயன்படுத்த கூடாது. ஏன் என்றால் அவர்கள் வந்தான் வரத்தான் அல்ல. தமிழர்கள். இன்னும் 100 வருடத்தில் தீவகத்தோடு தொடர்பே அற்று போய், தம்மை நல்லூரான்களாக அவர்கள் உணரும் போது உங்கள் உறவினரின் சந்ததியும் வந்தான் வரத்தானாக இருக்காது. அவர்களுக்கு அப்போ நல்லூரின் வழமை அல்லது வழமை என ஏற்கபட்டவை பற்றி தெளிவு இருக்கும்.
3 months 2 weeks ago
நந்தனுக்குக் கோபம் வந்து பார்த்ததில்லை போல. போன கிழமை நடந்ததப் பார்த்தீங்கள் என்றால் தெரியும். அவரின் தெரிவுகள் எல்லாம் இம்முறை அந்தமாதிரி. என்ன மாயமோ மந்திரமோ 41 போட்டிகளைச் சரியாக தெரிவு செய்திருக்கிறார்.
3 months 2 weeks ago
குழுநிலைப் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளமையால் கேள்விகள் 71) - 73) வரைக்கும் புள்ளிகள் வழங்கலாம் 😃 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) ஒருவரும் முதலாவது இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி play-off போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படும் எனக் கணிக்கவில்லை! 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்தில் வரும் என நான்கு பேர் கணித்துள்ளனர். மற்றைய அணிகளின் நிலைகளை ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! ஒருவரும் இறுதி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிற்கும் எனக் கணிக்கவில்லை!
3 months 2 weeks ago
நிச்சயமாக பாதிக்கும் ஆனால் இனி அவர் ஜனாதிபதியாக இங்கே வாய்ப்பில்லை.
3 months 2 weeks ago
அதச் சொல்ல வேற வேணுமா. இக்களத்தில் எத்தினை பேரின் மனது புண்பட்டிருக்கும். கடைசி என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்.
3 months 2 weeks ago
அரசியலில் தோற்றப்பாடு முக்கியம். நீங்கள் சொல்வது போல் நாட்டின் முதன் மகனுக்கு இப்படி நிகழ்வது என்ன இருந்தாலும் அவரின் இமேஜை பாதிக்கும்.
3 months 2 weeks ago
இனிமேல் தமிழகத்தை ஆள வந்தான் வரத்தானுக்கு அருகதை இல்லை அவர்களுக்கு இந்த மண் மற்றும் மக்கள் சார்ந்த அறிதல் இருக்கவாய்ப்பில்லை என்பதை சாட உங்களால் முடியாது.
3 months 2 weeks ago
அதுதான் அவர்களை தாலிபான்ஸ் என்றும் … அதே மடைமையை நாமும் பின் பற்ற வேண்டும் எனும் தமிழர்களை தமிழ் தாலிபான்ஸ் என்றும் அழைக்கிறோம். பொய்களை உருட்டியது வேலைக்கு ஆகவில்லை என்பதால் - அர்த்தமே இல்லாமல் சீமானை இழுத்து இரெண்டு வரியை சொல்லி விட்டு …. உண்மையின் உக்கிரம் தாங்காமல் டொட் வைத்துள்ளீர்கள். இப்போதும் சொல்கிறேன் … நல்லூருக்கு தீவக பகுதியில் இருந்து 50 வருடத்தில் வாழ வந்தவர்கள் வந்தான் வரத்தான்களே…. எப்படி நான் இலண்டனில் ஒரு வந்தான்வரத்தானோ அப்படி… ஆகவே இவர்களுக்கு நல்லூரின் நடைமுறை தெரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் அல்ல.
3 months 2 weeks ago
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 எந்த அடாவடியும் இல்லாமல் மக்களோடு மக்களாக தலமைப் பதவியில் அமர்ந்து நல்லாட்சி செய்பவரே எங்களுக்குத் தேவை . 😇 ஆதலால் தொடர்ந்தும் முதல்வர் பதவியை உங்கள் கையில் ஒப்படைக்க நாம் தயார்.😂
3 months 2 weeks ago
டீச்சர் அடிச்சது இங்கேயும் தெரியுது. வீட்டில் நடப்பது விமானத்தில் நடந்ததால் வெளியே வந்து விட்டது. குடும்பம் என்றால் அடிதடி இல்லாமலா ஆனால் நாட்டின் முதல் மகன்???? நான் அண்மையில் இங்கே ஒரு கதை எழுதினேன். அதில் விரும்பியதை அடைந்தவரும் நிம்மதியாக இல்லை விரும்பியது கிடைக்காதவனும் நிம்மதியாக இல்லை என்று எழுதினேன். இவர் இதில் முதல் ரகம். ஆனால் காதல், இல்வாழ்க்கை மற்றும் திருமணம் சம்பந்தமாக எனக்கு இருக்கும் அத்தனை அனுமானங்கள் மற்றும் பட்டறிவுகள் அனைத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டது உந்தாளின் மணவாழ்க்கை.😭
3 months 2 weeks ago
குழுநிலைப் போட்டிகளின் நிறைவின் பின்னர் அணிகளின் நிலைகள்: பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி இடத்தையும் பிடித்துள்ளன!
3 months 2 weeks ago
நிஸாம் காரியப்பர் 🙏 அத்தனை ஆணித்தரமாக இந்தச் சட்டம் மீழப் பெறப்பட வேண்டும் என்று பாராளுமன்றில் சகல தமிழ்ப் பா ஊக்களுக்கும் எடுத்துரைத்தது மறக்கப்படக் கூடிய செயல் அல்ல. இவரைப் போன்ற மனிதர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.
3 months 2 weeks ago
Playoff Qualifier - தெரிவாகும் அணி - RCBயா PBKSஆ Eliminator - நீக்கப்படும் அணி - MIயா GTயா
3 months 2 weeks ago
வசி... என்ன பின்னால வந்து நிக்கிறியல். நல்ல வேளை, இன்றோடு, போட்டிகள் முடிஞ்சுது. இனி இடக்கு முடக்கு கேள்விகள்தான் பதில் சொல்ல வேணும்.
3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் மிச்சல் மார்ஷின் அதிரடியான 67 ஓட்டங்களுடனுன் ரிஷப் பந்தில் புயல்வேக சதத்துடனும் (ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்கள்) 3 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சவாலான ஓட்ட இலக்கை எட்டும் நோக்கில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆட்டத்தில் இறங்கினர். விராட் கோலியின் 54 ஓட்டங்களுடனும், மயங் அகர்வாலின் 41 ஓட்டங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் மின்னல்வேகத்தில் 33 பந்துகளில் எடுத்த 85 ஓட்டங்களுடனும் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed