3 months 2 weeks ago
அவர்கள் விரும்பினாலும் அவ்வாறு தனிமனித சுதந்திரத்தில் தலையிட முடியாத அளவுக்கு அந்த மதத்தை பின்பற்றும் மக்களிடையே விழிப்புணர்வும் அறிவியலும் மேம்பட்டுள்ளது. அதனால் அவர்களால் தலிபான்களாக மாற முடியாமல் உள்ளது. ஆனால் எம்மவரிடையே காவியையும பட்டையையும் போட்டாலே வேலன் போன்ற டுபார்கூர் பயல்களாலேயே எளிதாத சொந்த மக்களுக்கே பட்டை நாமம் சூட்டக் கூடிய நிலையே இன்னும் உள்ளது. இந்த தலிபான்களின் வாலும் ஒட்ட நறுக்கப்படல் வேண்டும்.
3 months 2 weeks ago
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி… மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு! 28 May 2025, 10:52 AM அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் வழக்கில் இன்று (மே 28) சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது ஆண் நண்பருடன் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு, இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் இருவரையும் மிரட்டி, அந்த ஆண் நண்பரை விரட்டிவிட்டு அம்மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி 100 க்கு போன் செய்து புகார் தெரிவிக்க, இந்த தகவல் கோட்டூர்புரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபர் யார் என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனை கடந்த டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், ஞானசேகரன் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட போது தொலைபேசியில் ‘சார்’ என்று ஒருவரை அழைத்து பேசியதாகவும் தகவல் வெளியானது. இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறி அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின் ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல. திமுக அனுதாபி தான் என்று விளக்கமளித்திருந்தார். இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதோடு ஞானசேகரன் மீது திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து ஞானசேகருக்கு எதிராக 100 பக்க குற்ற பத்திரிக்கையை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சைதாப்பேட்டை 9ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த சூழலில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்றும் ஆதாரம் இல்லாமல் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. அதாவது பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழித்தல், கல்லூரி மாணவியை மிரட்டி நிர்வாணப்படுத்துதல், புகைப்படம் எடுத்து வெளியிடுதல் போன்ற பாலியல் குற்றங்களுக்காக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு சாட்சி விசாரணை தொடங்கியது. இதில் மொத்தம் 29 பேர் சாட்சியம் அளித்தனர். ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அரசு சார்பில் 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மே 20 முதல் 23 வரை இறுதி வாதங்கள் நடைபெற்றன. காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேரி ஜெயந்தி, “ஞானசேகரனுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் வலுவாக உள்ளது. குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவர் குற்றவாளி” என அறிவித்தார். சிறப்பு விசாரணை குழு அறிக்கையை ஏற்று இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி தண்டனை விவரத்தை ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏற்கனவே சென்னை பெருநகர முதலாவது கூடுதல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இட மாறுதல் செய்யப்பட்டார். தற்போது இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் புதிய பொறுப்பை அவர் ஏற்க உள்ளார். ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/anna-university-student-sexual-assault-case-verdict/#google_vignette
3 months 2 weeks ago
அவர்களும் சேர்ச்சை தாண்டி தலையிட முடிந்தால், வாய்ப்பு இருப்பின் கலையிடுவார்காள்…அண்மையில் கூட சில தனிமனித சுதந்திர விடயங்களில் இலங்கையில் பிக்குகளும், மெளலவிகளும், மல்கம் ரஞ்சித்தும் ஒரே குரலாக ஒலித்ததை கண்டோம். மதம் என்பதே by definition தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு பிற்போக்குவாத கட்டமைப்பே. ஆகவேதான் அவரவர் மதங்களின் பிற்போக்கை அவரவர் எதிர்ப்பதும், அதற்கு ஏனையோர் துணை நிற்பதும் அவசியமாகிறது. குறிப்பாக இல்லாத ஒன்றை உருவாக்கி, அதை ஊர் வழமை என காதில் பூவைக்க முனைந்தால் - அந்த பின்னோக்கி செல்லும் முயற்சியை, அல்லது தமிழ் சங்கி மயப்படுத்தலை, அல்லது தமிழ் தாலிபான்களின் செய்கையை எதிர்க்க வேண்டியது நாகரீகம் அடைந்து விட்ட ஒவ்வொரு தமிழனதும் கடமை.
3 months 2 weeks ago
கூட்டி கழித்து எல்லாம் பார்க்கத்தேவையில்லை - நேரடியாக பார்த்தாலே உலக வரலாற்றில் மதத்தின் பெயரால் நடந்த மனிதகுல விரோத நடவடிக்கைகளில் பாரிய பங்கு வத்திகானுக்கும் உள்ளது. எமது ஊரில் நல்லூர் ஏன் அதன் பூர்வீக அமைவிடத்தில் அல்லாமல் புதிய இடத்தில் உள்ளது, கேதீஸ்வரம், கோணேஸ்வரம் என்ன ஆகின. சந்திரசேகர ஈச்சரம் எங்கே? மாத்தறையில் இருந்த விஷ்ணுகோவில் எங்கே? தென்னமரிக்க சுதேச மொழி, கலாச்சாரம், இனங்கள் எங்கே? இப்படி பலதில் இதை காணலாம். இதுகூட கொஞ்சம்தான், இன்னும் சிலுவையுத்தம், ஐரோப்பாவில் பேகன் குடிகளின் அழிப்பு என பலது உள்ளது. இது உலகபோர்களில் ஜேமனிக்கு கண்டும் காணாத ஆதரவு வரை தொடர்ந்தது. ஆனால் இன்றைய உலகில் வத்திகான் காலமாற்றப்படி அடக்கியே வாசிக்கிறது. ஆனால் தாலிபான்ஸ், சங்கிகள் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்கே நிற்கிறார்கள். நிற்க, தாலிபான்ஸ், வத்திகான்ஸ் அப்படி என்பதால்….நாமும் தமிழ் தாலிபான்கள் போல் நடக்க வேண்டுமா?
3 months 2 weeks ago
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?' Today at 6 AM தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது. 2019, ஜூலை 25-ம் தேதி, தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் மாநிலங்களவை எம்.பி-க்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில், வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க கூட்டணி சார்பாகவும் தேர்வாகினர். அதேபோல, அ.தி.மு.க-விலிருந்து சந்திரசேகர், அந்தக் கட்சியின் ஆதரவுடன் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களின் இடத்துக்கு தான் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது திமுக தனது மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக வெளியிட்ட பட்டியல் அந்தப் பட்டியலில் திமுக வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் என்கிற கவிஞர் சல்மா இடம்பெற்றிருக்கிறார்கள். மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மையத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என்று அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மநீம சார்பில், கமல் களமிறங்குவார் என அக்கட்சி செயற்குழு சார்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது இதில் வில்சன் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பியாகத் தான் இருந்தார். தற்போது அவர் பதவிக்காலம் முடிய இருக்கும் நிலையில், மீண்டும் எம்.பி வேட்பாளாராக களம் இறங்குகிறார். https://www.vikatan.com/government-and-politics/kamalhasan-rajya-sabha-mp-dmk
3 months 2 weeks ago
வசீயும் குற்றுப் போட மறந்து விட்டாரோ??
3 months 2 weeks ago
உகந்தை முருகன் ஆலய புனித பூமியில் புத்தர் சிலை!!!! தொடரும் சர்ச்சைகள் May 28, 2025 11:31 am தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம் கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறிய வருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவு தென் எல்லையில் அமைந்துள்ள தமிழர்களுடைய தொன்மையும் புராதனமும் வரலாறும் கொண்ட உகந்தை முருகன் ஆலய புனித பிரதேச பகுதியில் காணப்படும் ஒரு மலையில் திடீரென அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரால் ஸ்தாபிக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான விவகாரம் தொடர்பில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன. இந்த விடயத்தை ஆராயும் விதமாக எமது ஊடகவியலாளர் உட்பட சக செயற்பாட்டாளர்கள் குழு அப்பகுதிக்கு சென்று குறித்த புத்த சிலை நிர்மாணம் குறித்து ஆராய்ந்துள்ளது. இதற்கமைய ஆலயத்தில் காணப்பட்டவர்களிடம் பேசுகின்ற போது இந்த புத்தர் சிலை நிறுவுகின்ற விடயம் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 2023ல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் 2024 இல் ஒரு புத்தர் சிலை இங்கே நிறுவப்பட்டது என்றும் கூறப்பட்டது. அத்தோடு கடந்த இரண்டு மாதங்களாக இந்த புத்தர் சிலை பெரிய அளவிலே இங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டது. முருகன் ஆலயத்திற்கு முன்பாக கடற்கரை பிரதேசத்தில் வலது புறம் வள்ளியம்மன் மலை தோணிமலை போன்றவைகளும் இடது புறம் கடற்படை முகாமோடு இணைந்ததாகக் காணப்படுகின்ற ஒரு மலையும் அந்த மலையில் தான் இந்த புத்தர் சிலையும் நிறுவப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நாங்கள் அவதானித்த போது இந்த புத்தர் சிலை கடற்படை முகாமில் இருந்து வந்த சிவில் உடை தரித்த இருவரால் அந்த சிலையுள்ள மலை துப்பரவு செய்யப்பட்டது. இந்த சிலை அவர்களுக்கு தெரியாமல் அங்கு வேறு யாரும் நிறுவியிருக்க முடியாது, இது அவர்களுடைய கடற்படை முகாமுடன் காணப்படும் மலை பிரதேசம் என்பதையும் நாங்கள் அறிந்து கொண்டதோடு இது அவர்கள் வழிபடுவதற்காக நிறுவியிருக்கலாம் என்றொரு கருத்தும் அங்கு கூறப்பட்டது. அவ்வாறு கடற்படையினர் வணங்குவதாக இருந்தால் அதை அவர்களது முகாமினுள் வைத்திருக்கலாமே ஏன் அதை பொது வெளியில் அதுவும் உகந்தை முருகன் திருவம்பாவை காலத்தில் தீர்த்தமாடுகின்ற அந்த பிரதேசத்தில் நிறுவினார்கள் எனும் கேள்வியும் எழுகிறது. மேலும் உகந்தை முருகன் திருவெம்பாவை காலத்தில் தீர்த்தம் ஆடுகின்ற அந்த பிரதேசத்தில் இதற்கு முன்னர் ஒரு சூலம் நிறுவப்பட்டிருந்தது என்றும் இப்போது அந்த சூலம் அகற்றப்பட்டிருக்கிறது என்றும் அது யாரால் ஏன் அகற்றப்பட்டது எனும் கேள்வியும் எழுகிறது. இன்றைய தினம் ஆலயத்திற்கு புலனாய்வுத் துறையினரும் வந்து தங்களிடம் இதை யார் புகைப்படம் எடுத்தது யார் ஊடகங்களில் வெளியிட்டது என்று கேட்டிருந்தார்கள் என்றும் இந்த இடத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அவர்கள் வருகை தந்து நின்றார்கள் என்று இரு பொலீசாரும் வந்திருந்தார்கள் எனவும் கூறப்பட்டது. அந்த பொலீசாரையும் அப்பகுதியில் காண முடிந்தது. மேலும் அந்த இடத்தில் ஒரு அச்சமான பதட்டமான சூழலையும் நாங்கள் அவதானித்தோம். அதை தொடர்ந்து இந்த விடயங்களை ஆராய்ந்து தகவல்களை சேகரித்த பின்னர் நாங்கள் அங்கிருந்து வெளியாகியிருந்தோம் என எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனிடையே, “உகந்தைமுருகன் ஆயத்தின் மலையில் வள்ளியம்மன் ஆலயத்தை அண்டியதாக அமைக்கப்படவிருந்த முருகன் சிலையினை அமைக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்திய வனத்துறைந மற்றும் ஏனைய திணைக்ககளங்கள் ஏன் இந்த புத்தர் சிலையினை நிறுத்தவில்லை. எனவே இதன் பின்னணி என்ன என்பதையும் இது தொடர்பான உண்மைகளையும் உரிய திணைக்களங்கள் உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதோடு இந்த சிலை நிறுவிய விடயம் சைவத் தமிழர்களிடையே அதிர்ச்சியையும் தங்களுடைய உரிமை மறுக்கப்பட்டு இன்னும் ஒரு சமூகத்திற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கின்ற விடயத்தையும் பேசுபொருளாக்க்கி இருக்கிறது. எனவே இந்த அரசு உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் எங்களுடைய கோரிக்கையை முன் வைக்கின்றோம்.இந்த சிலை பற்றிய விடயத்தை நாங்கள் பேசுகிறபோது சன்னியாசி மலையும் எங்களிடம் இருந்து பறிபோயிருக்கிறது. அங்கும் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கிறது” என அம்பாறை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார் https://oruvan.com/buddha-statue-on-the-sacred-ground-of-ukantha-murugan-kovil/
3 months 2 weeks ago
தமிழினம் ஏன் அநியாயத்திற்கு தன்னை நல்லினமாகக் கட்டமைக்க முயன்று அழிந்து போகிறது.? போரில் ஒரு இனத்தை வென்றாலும் அங்கு தன் ஆட்சியை நிறுவாமல் தோற்ற இனத்திடமே ஆட்சியை ஒப்படைத்து வருவதைச் சரித்திரரீதியாகவும் அறிய முடிகிறது. ஆனால் அந்த தோற்ற இனமே தன்னை அழிக்க முற்பட்டு வருவதை இன்றுவரை உணராமல் தமிழினம் எதற்காகத் தன்னையே அழித்து வருகிறது.????🤔
3 months 2 weeks ago
துப்பாக்கி கேட்ட அர்ச்சுனா – வேண்டாமென்ற சஜித்! தனக்கு பாதுகாப்பு தேவையென எவரேனும் எம்.பி கோரிக்கை முன்வைத்தால் அது தொடர்பில் ஆராய்வதற்காக அந்த கோரிக்கையை தேசிய பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதன்போது எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வேளையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் தமக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியங்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்குவதற்கான வசதிகள் இல்லையென்றால் தனது பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள தனக்கு துப்பாக்கியொன்றை வழங்குமாறும் கோரியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவவர், ஜனநாயகம் உள்ள நாட்டில் பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்கப்படக் கூடாது என்றும், அதிகாரிகளாலேயே அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேவண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைத்த பின்னர் சில எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எம்.பி.க்களின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு சபாநாயகரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கலந்துரையாடலின் போது நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்வேளையில் நாட்டில் இடம்பெறும் கொலை மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் போதைப் பொருள் வர்த்தகர்களிடையே இடம்பெறும் மோதல்களுடன் தொடர்புடையவை என்றும், சில சம்பவங்களில் பிரதேச அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். https://www.samakalam.com/துப்பாக்கி-கேட்ட-அர்ச்சு/
3 months 2 weeks ago
மும்பை வென்றால் ஒரு மூன்று புள்ளிகள் கிடைக்கும். மற்றும்படி எல்லாம் முட்டைதான்! PBKS vs MI இறுதிப்போட்டியாக வர வாய்ப்புகள் கூட உள்ளது! எல்லாம் நாணய சுழற்சியில்தான் தங்கி உள்ளது!
3 months 2 weeks ago
Published By: VISHNU 28 MAY, 2025 | 03:19 AM (எம்.ஆர்.எம்.வசீம்) கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 40பேரை கைதுசெய்து சிறையில் அடைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது சிறையில் இருப்பவர்கள் சிலரும் அந்த பட்டியலில் இருக்கின்றனர் என தேசிய சுதந்தி முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றின் பாேதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரச நிறுவனங்களின் அதிகாரிகளை கைதுசெய்து சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் அந்த அரசாங்கத்தில் இந்த நடவடிக்கையை அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவருடன் இருந்தவர்களே மேற்கொண்டுவந்தனர். உர கப்பல் ஒன்றுக்கு பணம் செலுத்தியதாக தெரிவித்து அரச அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். இவ்வாறு செயற்பட்டால் அரச இயந்திரம் செயலிழந்துவிடும். அரச அதிகாரிகள் எந்த தீர்மானங்களையும் எடுக்காமல்போகும் நிலை ஏற்படும். தீர்மானம் எடுத்தால் சிறைக்கு செல்ல நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படும். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு 29ஆம் திகதி வருமாறு எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள், மாலிகாவத்தையில் இடிந்துவிழும் நிலையில் இருந்த கடைத்தொகுதி ஒன்றை அதிகாரசபையின் நிதி மூலம் அதனை செப்பனிட்டு, அதனை வாடகைக்கு வழங்க கேள்விகோரல் விடுத்திருக்கின்றனர். யாரும் வராதநிலையில் அதில் விலை குறைப்பு மேற்கொண்டு மீண்டும் கேள்விகோரலுக்கு விட்டபோது ஒருவர் அதனை வாங்கி இருக்கிறார். இதற்கான அனுமதி அப்போது இருந்த குழுக்களின் அனுமதியை பெற்றுக்கொண்டு, இறுதியாக பணிப்பாளர் சபை, அதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கும் அமைச்சருக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் வீடமைப்பு அதிகாரசபையின் நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு நட்டமடைந்துள்ளதாகவும். அப்போது இந்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் இதுதொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்காெள்ள வருமாறு அழைப்பு வந்திருக்கிறது. எப்படியாவது எம்மை சிக்க வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பழைய விடயங்களை அரசாங்கம் கிழறிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு கைதுசெய்வதற்கு 40பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில் தற்போது செயற்பாட்டு அரசியலில் இருப்பவர்களும் இ்ல்லாதவர்களும் அடங்குகின்றனர். அந்த பட்டியலில் தற்பாேது கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் சிலரும் அடங்குகின்றனர். அதேபோன்று முன்னாள் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்குகின்றன. நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் நாயகம் அடிக்கடி ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று அதுதொடர்பில் ஆலாேசனை கேட்டுவருகிறார். ஜனாதிபதி செயலகத்திலே இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு வாக்குகள் குறைவடைய காரணம் திருடர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியமையாகும் என்றே இவர்கள் நினைக்கின்றனர். அதனடிப்படடையிலே தற்போது 40பேரை கைதுசெய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/215862
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
விரைவாக புனரமைக்கப்படும் கடவுசீட்டு அலுவலகம்! adminMay 28, 2025 யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வரும் கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் (27.05.25) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சகிதம் பார்வையிட்டார். இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடமையாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி விபரங்களை அமைச்சரிற்கு மாவட்ட செயலர் எடுத்துக்கூறினார். https://globaltamilnews.net/2025/216069/
3 months 2 weeks ago
போதைப்பொருளுடன் கைதான யுவதிக்கு 06 மாத கால புனர்வாழ்வு! adminMay 28, 2025 யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர். தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை போதை பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் தான் உடைமையில் வைத்திருக்க வில்லை எனவும், தனது சொந்த பாவனைக்காகவே வைத்திருப்பதாக கூறியுள்ளார் அதனை அடுத்து அவரை காவற்துறையினர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை குறித்த யுவதி போதைக்கு அடிமையானவர் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலதிக விசாரணைகளின் பின்னர் மருத்துவ அறிக்கையுடன், யுவதியை காவற்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (27.05.25) செவ்வாய்க்கிழமை முற்படுத்திய வேளை , யுவதியை எதிர்வரும் 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/216074/
3 months 2 weeks ago
பிரபாவின் பூதவுடலுக்கு அஞ்சலி! adminMay 28, 2025 யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவின் பூதவுடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் பூதவுடல் இன்றைய தினம் புதன்கிழமை காலை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் போது, உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அஞ்சலி செலுத்தினர். வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட பயணமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரபாகரசர்மாவின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று , செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது. https://globaltamilnews.net/2025/216078/
3 months 2 weeks ago
Published By: VISHNU 28 MAY, 2025 | 03:01 AM ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் செவ்வாய்க்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசாங்க மாற்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரையிலான தற்போதைய தமிழ் அரசியல் குறித்து உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான நிலப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர், திருமதி ஜோ கிட், அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் திரு. மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி திரு. சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/215859
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,TAMIL NADU POLICE படக்குறிப்பு, ஏடிஎம் கொள்ளையில் கைது செய்யப்பட்ட மூவர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 27 மே 2025 "எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்" என்கிறார் சென்னை, திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது புகாரி. மே 26 அன்று ஏடிஎம் இயந்திரத்தின் பெட்டியை உடைக்காமல் கொள்ளையடித்ததாக உ.பி-யை சேர்ந்த மூன்று பேர் கைதான விவகாரத்தில் அவர்களின் பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏடிஎம் மைய கொள்ளைச் சம்பவத்தில் என்ன நடந்தது? பணம் திருடு போனால் பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வரும் நரேன்குமார், ஹிட்டாச்சி ஏடிஎம் சர்வீஸ் (Hitachi ATM Service) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று தங்களின் மும்பை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக, திருவான்மியூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார். திருவான்மியூர், திருவள்ளூவர் நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக் கிளையின் ஏடிஎம் மையத்தில் ஏதோ தவறு நடந்துள்ளதாகவும் அதை உடனே சென்று சோதனை செய்யுமாறு தங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாக புகார் மனுவில் நரேன்குமார் குறிப்பிட்டுள்ளார். ஏடிஎம் மையத்தில் சோதனை செய்தபோது, பணம் வெளியில் வரக் கூடிய இடத்தின் உள்புறத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியில் வராமல் சிலர் தடுத்துள்ளதாக அவர் மனுவில் கூறியுள்ளார். அதிகாலை கொடுத்த அதிர்ச்சி பட மூலாதாரம்,TAMIL NADU POLICE படக்குறிப்பு, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த ஏடிஎம் 'வங்கிக் கிளையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, ஞாயிற்றுக்கிழமை (மே 25) அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவை இரண்டு பேர் திறந்துள்ளனர். பணம் வரக்கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்' என புகார் மனுவில் நரேன்குமார் கூறியுள்ளார். அதன்பிறகு வாடிக்கையாளர் ஒருவர் 1500 ரூபாயை எடுக்க முயன்றும் வராததால் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அதைச் சோதிக்க சென்றபோது குற்றச் சம்பவம் நடந்திருப்பதை தான் உறுதி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ". இதனால் பணம் வெளியில் வராமல் உள்ளேயே நின்றுவிடும். பிறகு போலி சாவி மூலம் லாக்கரை திறந்து அங்கு கிடக்கும் பணத்தை எடுத்துள்ளனர்" எனக் கூறுகிறார், திருவான்மியூர் காவல்நிலைய ஆய்வாளர் முகமது புகாரி. "இரண்டாவது லாக்கர் என்பது பணம் வைக்கப்படும் இடம் என்பதால், அதை உடைத்தால் அலாரம் சத்தத்தை எழுப்பும் என்பதால் அதை கைதான நபர்கள் தொடவில்லை" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். முதல் லாக்கரைத் திறப்பதற்கு பயன்படுத்திய சாவி என்பது அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் பொருந்தக் கூடிய தோற்றத்தில் இருந்ததாகக் கூறும் முகமது புகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் எந்தெந்த வகைகளில் கொள்ளையடிக்கலாம் என்பதை சமூக வலைதளங்களின் மூலமாக கைதான நபர்கள் கற்றுக் கொண்டு திருடியுள்ளனர்" எனக் கூறினார். "தமிழ்நாட்டில் 3 மாதங்கள்" பட மூலாதாரம்,முகமது புகாரி படக்குறிப்பு, காவல் ஆய்வாளர் முகமது புகாரி. ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருடு போன சம்பவத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிஜ்பான், ஸ்மித் யாதவ் ஆகியோரை, திங்கள் கிழமையன்று திருவான்மியூர் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் குல்தீப் சிங் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். மற்ற இருவரும் விவசாய வேலை பார்த்து வந்துள்ளனர். "மூவரும் உ.பி-யில் உள்ள கான்பூரில் ஒரே ஊரில் வசிப்பவர்கள். தமிழ்நாட்டுக்கு மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்கள் மட்டும் தங்கி ஏடிஎம் மையங்களில் திருட வந்துள்ளனர். முதலில் செங்குன்றம், அடுத்து மாதவரம், மூன்றாவதாக திருவான்மியூரில் அறை எடுத்து தங்கியுள்ளனர்" எனக் கூறுகிறார் காவல் ஆய்வாளர் முகமது புகாரி. "சனி, ஞாயிறு தான் டார்கெட்" ஒவ்வோர் இடத்திலும் வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் மூவரும் தங்குவதாகக் கூறும் முகமது புகாரி, "சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அன்று வங்கிகள் விடுமுறை என்பதால் புகார் பதிவாகி கவனிப்பதற்குள் ஞாயிறு இரவு விமானம் அல்லது ரயிலில் ஏறி சொந்த ஊர் சென்று விடுகின்றனர்" என்றார். தொடர்ந்து பேசிய முகமது புகாரி, "ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 20 ஆயிரம் முதல் ஆயிரம் வரையில் கூட கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். பணம் வராதால் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குப் பொதுமக்களில் சிலர் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்" எனக் கூறினார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ பிரச்னை எனக் கூறி வங்கி ஊழியர்கள் அமைதியாக இருந்துவிட்டதாகக் கூறிய அவர், "மும்பையில் ஹிட்டாச்சி நிறுவனத்தில் உள்ள பணியாளர் ஒருவர் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து சென்னை கிளைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்" என்கிறார். காட்டிக் கொடுத்த 40 கேமராக்கள் பட மூலாதாரம்,TAMIL NADU POLICE படக்குறிப்பு, ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள முதல் லாக்கரில் பணம் வரும் இடத்தின் உட்புறத்தில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ளனர் இதன்பிறகு, சுமார் 40 கண்காணிப்பு கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்துள்ளது. "முதல் சிசிடிவி காட்சிலேயே அவர்களின் முகம் தெரிந்துவிட்டது. சாலையின் வெளிப்புற கேமரா காட்சிகள், அவர்கள் சென்ற வாகனம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அவர்களின் செல்போன் எண்ணும் கிடைத்துவிட்டதால் கைது செய்ய முடிந்தது" என்கிறார் முகமது புகாரி. எந்த ஊருக்குச் சென்றாலும் ஓட்டலில் அறை எடுத்து தங்குவதை கைதான நபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "திருட்டில் ஈடுபடும்போது மட்டும் கால் டாக்ஸியை வாடகைக்கு எடுத்துள்ளனர். அப்போது தான் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்துள்ளனர்" எனக் கூறுகிறார். கைதான மூவர் மீதும் பொதுச்சொத்தை சேதப்படுத்தியது, திருட்டில் ஈடுபட்டது உள்பட மூன்று பிரிவுகளில் (305(a),62 BNS Act r/w 3 of TNPPDL Act) வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறும் முகமது புகாரி, "ஞாயிறு மாலை சுமார் 4 மணிக்குக் காவல்துறையில் புகார் கொடுத்தனர். மறுநாள் காலை 9 மணிக்குள் கைது செய்துவிட்டோம். அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்" என்றார். வங்கி அதிகாரி கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏடிஎம் இயந்திரம் (கோப்புப்படம்) "ஏடிஎம் இயந்திரத்தின் முதல் கதவைத் திறந்து இவ்வாறு மோசடி செய்ய வாய்ப்புள்ளதா?" என, பொதுத்துறை வங்கி ஒன்றின் கிளை மேலாளரிடம் பிபிசி தமிழ் பேசியது. பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "முதல் கதவு என்பது சாதாரண லாக்கராக வடிவமைக்கப்பட்டிருக்கும். போலி சாவி மூலம் இதன் கதவைத் திறந்துள்ளனர்" எனக் கூறுகிறார். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இதுபோன்ற மோசடிகள் தொடர்வதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் தடுத்து, வாடிக்கையாளர் சென்ற பிறகு எடுக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. பாஸ்வேர்டை கண்டறிந்து பணம் எடுப்பது என தவறுகள் தொடர்கின்றன" என்கிறார். தொழில்நுட்பரீதியாக இதுபோன்ற குறைகளைக் களைவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அந்த அதிகாரி, "ஏ.டி.எம்மை அந்தந்த வங்கிக் கிளைகள் தான் பாதுகாக்க வேண்டும். இயந்திரத்தில் யாரும் சேதம் ஏற்படுத்தினால் காவல் நிலையம், வங்கி மேலாளர் ஆகியோருக்குத் தகவல் சென்றுவிடும் வகையில் அலாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் வங்கி சேவைகளுக்கு ஏடிஎம் இயந்தித்தைத் தயாரித்துக் கொடுப்பதில் நான்குக்கும் அதிகமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் வங்கி மேலாளர், "பணம் சிக்கிக் கொண்டால் எடுத்துக் கொடுப்பது, தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்வது போன்ற பணிகளை இவர்கள் செய்கின்றனர். அப்போது வங்கி ஊழியரும் உடன் இருப்பார்" எனக் கூறுகிறார். "ஒரு நபர் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியும். பணம் வராவிட்டால் புகார் வந்து நடவடிக்கை எடுப்பதற்குள் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுவிடுகின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார். "பணத்தைத் திரும்பப் பெறலாம்" - வழக்கறிஞர் கார்த்திகேயன் பட மூலாதாரம், வழக்கறிஞர் கார்த்திகேயன் படக்குறிப்பு,"ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் போனால் மக்கள் பயப்படத் தேவையில்லை எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். "ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராமல் போனால் மக்கள் பயப்படத் தேவையில்லை. அது மக்களின் பணம் கிடையாது. வங்கியின் பணம்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பணம் எடுக்கப்படாமல் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தால் அதற்கு வங்கி தான் முழுப் பொறுப்பு. 2017 ஆம் ஆண்டு இதுதொடர்பான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது" எனவும் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இதுதொடர்பான தகவல்கள் இருப்பதைக் காண முடிந்தது. உங்களின் பங்களிப்பு இல்லாமல் பணம் திருடு போயிருந்தால் அதற்கு நீங்கள் பொறுப்பு அல்ல. ஏடிஎம் இயந்திரம் என்பது வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்க முடியாது என ரிசர்வ் வங்கியின் விதிகள் கூறுவதாக கார்த்திகேயன் குறிப்பிட்டார். பணத்தைத் திரும்பப் பெற வழிமுறைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிமுறைகளையும் பட்டியலிட்டார் வழக்கறிஞர் கார்த்திகேயன். பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டார். * ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியில் வராவிட்டால் வங்கியிடம் 3 நாள்களில் முறையிட வேண்டும். அவ்வாறு முறையிட்டால் 10 நாள்களுக்குள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். * மூன்று நாட்கள் கடந்துவிட்டால் 4 முதல் 5 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குரிய சேவைக் கட்டணத்தை மட்டும் வங்கி பிடித்தம் செய்து கொள்ளும். * பணம் எடுக்கப்பட்டதாக (debit) செல்போனுக்கு அழைப்பு வந்தும் பணம் வராவிட்டால் காவல்துறையில் புகார் தெரிவிக்குமாறு வங்கி நிர்வாகம் கூறும். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. * குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்யும் வரை வாடிக்கையாளர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. * வாடிக்கையாளர் வெளியூரில் இருந்தால் பதிவு செய்யப்பட்ட இமெயில் முகவரி மூலம் புகார் மனுவை அனுப்பலாம். * இமெயில் முகவரி இல்லாவிட்டால் வங்கியின் இணையதளத்தில் ரிசர்வ் வங்கி விதியின்படி புகார் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும். அதில், வங்கியின் ஏடிஎம் கிளை, பணம் வராமல் போன நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தால் போதும். காவல்நிலையம் செல்ல வேண்டியதில்லை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c36545xejldo
3 months 2 weeks ago
நீண்ட காலம் முதல்வர் பதவியில் வீற்றிருக்கும் நந்தன் அண்ணைக்கு வாழ்த்துகள்.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
வடக்கில் காணிகளை விடுவிப்பதற்கு தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது!- வட மாகாண ஆளுநர் அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு கவலையுடன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தின் நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின் போது யாழ். மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடல் நீரை சுத்திகரிக்கும் செயற்றிட்டத்தின் ஊடாக குடிநீர் வழங்கல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கு அதிகளவில் செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி யாழ்ப்பாணத்தில் முக்கியமானதாக மாறிவரும் நிலையில் கழிவு நீர் சுத்திகரிப்பு பொறிமுறை இங்கு இல்லை என்றும் இதன் காரணமாக பல சவால்களை மக்கள் எதிர்கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய இரண்டு துறைகளினதும் உற்பத்திப் பொருட்கள் அப்படியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவற்றை முடிவுப்பொருட்களாக்கி ஏற்றுமதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தியிருந்தார். https://athavannews.com/2025/1433494
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed