3 months 2 weeks ago
அவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஒரு தமிழ் ஐயங்கார் (பிராமண) குடும்பம், எனவே அவரது பூர்வீக மொழியும், பண்பாடும் தமிழ் மையமாக இருக்கிறது. ஐயங்கார் என்பது வைணவ சமயத்தை குறிக்கும் .
3 months 2 weeks ago
நல்லாச் சொன்னீங்கள் போங்க. அவருக்கு விளையாட்டு நல்லாத் தெரியும் போல.
3 months 2 weeks ago
உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலை- மக்களைக் குழப்பும் செயற்பாடுகளை கைவிட வேண்டும்! உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை அமைத்து சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும். அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாது விட்டால் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை தமிழ்அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் 10 வீட்டுத்திட்டத்தின் கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ஆகிய இடங்களில் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடுகளை அமைக்கும் திட்டத்தினை கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்க முன்னெடுத்துள்ளது. இதன்கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு பகுதியில் வீடு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தலைவர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியிலும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்கான வீட்டினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. மிகவும் வறிய நிலையில் தகர கொட்டில்களில் வாழும் குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடா இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் அமைப்பானது கடந்த 12வருடமாக வடகிழக்கில் பல்வேறு சமூக நல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், இந்த உகந்தை மலையில் ஒரு புத்தர் சிலையை நிறுவி இருக்கின்றார்கள். உண்மையில் நாங்கள் மதத்திற்கும் மரியாதை கொடுக்கின்றவர்கள். புத்த பகவானை பொருத்தவரையில் அவர் உண்மையில் அமைதியாக மக்கள் வாழ வேண்டும் குழப்பங்கள் இருக்கக் கூடாது காருண்யம் பேணப்பட வேண்டும் எந்த இடத்திலும் குழப்பங்கள் கலவரங்கள் சண்டைகள் தனது பெயரால் இடம்பெறக்கூடாது என விரும்புபவர். இவ்வாறு இருக்கத்தக்கதாக உகந்தை மலையில் முருகன் ஆலயத்திற்கு பக்கமாக இப்போது சட்டவிரோதமாக ஒரு புத்தர் சிலையை அமைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இப்போது அந்த இடத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. நாங்கள் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்ற ஒரு விடயம் இந்த விடயத்தில் நீங்கள் ஒரு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சகல மக்களையும் சமத்துவமாக சம தர்மமாக வழிநடத்த வேண்டும் என்கின்ற உங்களுடைய வார்த்தைகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்ற வேளையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு கலாசார ரீதியான பண்பாட்டு ரீதியான ஒரு ஆக்கிரமிப்பை அல்லது முருகன் ஆலயத்திற்கு பக்கத்தில் இன்னும் ஒரு சிலையை நிறுவுவதன் மூலமாக நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தாமல் இவ்வாறான சட்ட விரோதமான செயற்பாடுகளை தடுக்க வேண்டும். குறிப்பாக சொல்லப் போனால் வன வள திணைக்களமானது இந்த விடயத்தில் அக்கறை இன்றி இருக்கின்றது. அல்லது அனுமதி கொடுத்து இருக்கின்றது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் முருகன் ஆலயம் அமைக்கின்ற விடயத்தில் அவர்கள் தடைகளை விதித்திருந்தார்கள் ஆனால் புத்தர் சிலை வைக்கின்ற விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். இது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும்.இதனை அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாது விட்டால் தேவையற்ற விளைவுகளை கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்று ஏற்படுவதற்கு வழி கூறும் என்பதனை கூறிக் கொள்கின்றேன். அடுத்ததாக மட்டக்களப்பு மகிழவட்டவான் பாலம் உடைந்து இருக்கின்றது. அந்த உடைந்த பாலத்தை செய்வதற்காக ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்காக 7 கோடி ரூபாய் நிதி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அங்கு மண் பரிசோதனை செய்வதன் மூலமாக அடியில் இருக்கின்ற பாறையை கண்டறிந்து அதில் பாலத்தை அமைப்பதற்கான செயல்பாடுகளை அவர்கள் முன்னெடுத்து இருக்கிறார்கள். இது வீதி அபிவிருத்தி திணைக்களம் எனக்கு அண்மையில் குறிப்பிட்ட ஒரு செய்தி. ஆகவே அவ்வாறு இருக்கின்ற போது தேவை இல்லாத ஒரு குளறுபடிகளை ஏற்படுத்துவதற்காக சில அரசியல் சக்திகள் அந்த இடத்தில் பாலம் அமைக்கவில்லை,அரசியல்வாதிகள் வரவில்லை என்று எல்லாம் போலியான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கின்றார்கள.; இது அரசாங்கத்தின் செயல்பாடு தாமதமாக நடைபெறுகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அதற்கான நிதி 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. என்பதனையும் நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். அடுத்ததாக தமிழரசு கட்சி இந்த பிரதேச சபைகளை அமைக்கின்ற விடயத்தில் சிக்கலான ஒரு பிரதிநிதித்துவம் காரணமாக சில ஆசனங்கள் தமிழரசு கட்சி பெரும்பான்மையாக வென்று இருந்தாலும் ஆசனங்கள் தேவைப்படுகிறது. எனவே இந்த இடத்தில் தமிழ் பேசும் கட்சிகள் அதாவது தமிழ் பேசும் உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் தமிழ் தேசிய கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களாக போட்டியிட்டாலும் அவர்களையும் இணக்கப்பாட்டுடன் இந்த சபைகளை அமைப்பதற்கு உதவி செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தி கூறி இருக்கின்றது எந்த இடத்தில் கூடுதலான ஆசனங்கள் புறப்பட்டு இருக்கின்றதோ அந்த இடங்களில் அந்தந்த கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் ஆட்சி அமைக்கின்ற விடயங்களில் தாங்கள் ஒரு நடுநிலையாக செயல்படுவோம் என்கின்ற கருத்தையும் கூறி இருக்கின்றார்கள். அதே போன்று இன்னும் ஒரு விடயம் வடபுலத்தில் வர்த்தமானி மூலமாக பறிக்கப்பட்ட காணிகள் அல்லது சுவீகரிக்கப்பட்ட காணிகள் விடயத்தில் இப்போது இன்னும் ஒரு வர்த்தமானி மூலமாக அந்த காணிகளை மீண்டும் வாபஸ் பெற்று அந்தந்தகாணிகளை மக்கள் பக்கமாக செல்வதற்கு அனுமதி அளிப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார். அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது இந்த நல்ல விடயத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். நல்ல விடயங்களை யார் செய்தாலும் பாராட்டுவோம். எனவே நாட்டில் குழப்பம் இல்லாமல் காணி அபகரிப்பை மற்றும் ஏனைய தேவையற்ற விடயங்களை கைவிட்டு நல்லிணக்க விடயங்களை கையாள வேண்டும். ஆகவே வட குளத்தில் பறிக்கப்பட்ட அல்லது அபகரிக்கப்பட்ட சுவிகரிக்கப்பட்ட காணிகளை மீளவும் மக்களுக்கு ஒப்படைக்கின்ற விதத்தில் புதிய வர்த்தமானியை வெளியிட்டதற்காக இந்த இடத்தில் ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். இன்னும் ஒரு விடயம் கூறப்படுகிறது மட்டக்களப்பில் பொது மருத்துவ மாதுக்கள் பயிற்சி நிலையம் என்று சொல்லப்படுகின்ற அந்த பயிற்சி பாடசாலையை இங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பதில் சுகாதார அமைச்சின் செயலாளர் செய்துகொண்டு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இந்த விடயம் அரச கர்ம மொழியாக தமிழும் சிங்களமும் காணப்படுகின்ற போது தமிழில் பயிற்சி கொடுக்கின்ற இந்த பயிற்சி நிலையத்தை மூடு விழா செய்வது என்பது தேவையற்ற ஒரு விடயமாகவும் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகின்ற விடயமாகவும் காணப்படுகின்றது. இதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை விட இவ்வாறான செயல்பாடுகளை செய்யக்கூடாது செய்தால் அதுவும் இன நல்லிணக்கத்திற்கு ஆபத்தாக அமைந்து விடும் என்கின்ற கருத்தை கூறுகின்றேன். மட்டக்களப்பில் மூன்று இனங்கள் காணப்படுகிறது. தமிழர் முஸ்லிம் சிங்களவர்கள் என காணப்படுகின்றது. மட்டக்களப்பில் கிட்டத்தட்ட 74 சதவீதமானோர் தமிழர்களாகவும் 26 சதவீதம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சில சபைகளில் தமிழர்கள் மாத்திரம் பெரும்பான்மையாக இருக்கின்ற சபைகளில் சபைகளை அமைக்கின்ற விடயத்தில் தமிழ் பெரும்பான்மையோடு தமிழ் அரசு கட்சியின் பெரும்பான்மை மற்றும் தமிழ் தேசிய கட்சியின் பெரும்பான்மையோடு அமைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் சில முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் கலந்து வாழுகின்ற பிரதேசங்களில் தமிழர்களின் ஒத்துழைப்பு முஸ்லிம் சபைகளை அமைப்பதற்கு தேவைப்படுகின்றது. அதேபோன்று தமிழ் சபைகளை அமைப்பதற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் அல்லது உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. பரஸ்பரம் இந்த உதவிகள் உதாரணமாக ஓட்டமாவடி பிரதேச சபை ஏறாவூர் நகர சபை அமைக்கின்ற போது இதன் விடயத்தில் தமிழ் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவைப்படுகின்றது. அதேபோன்று ஏராவூர் பற்று, வாழைச்சேனை மற்றும் வாகரை போன்ற பிரதேச சபைகளை அமைக்கின்ற விடயத்தில் தமிழர்களுக்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. எனவே பரஸ்பர அடிப்படையில் இந்த ஒத்துழைப்புகளை செய்கின்ற விடயம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை திருகோமலையில் செயல்பாட்டில் நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இது அவர்களுக்கும் தேவைப்படுகின்றது எங்களுக்கும் தேவைப்படுகிறது. ஆகவே அதற்கு இடையில் தமிழ் தேசியம் சார்ந்தவர்களும் இந்த விடயத்தில் ஒத்துழைப்புகளை வழங்கினால் மிகவும் நன்றாக அமைந்திருக்கும் என்பதனை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். https://seithy.com/breifNews.php?newsID=333880&category=TamilNews&language=tamil
3 months 2 weeks ago
ஜேவிபி இனவாத சிந்தனை கொண்டு செயல்பட்டுவந்த ஆபத்தான கட்சி. அந்த கட்சி மீது எப்படி பெரும் நம்பிக்கை கொண்டீர்கள் 🤔
3 months 2 weeks ago
ஓ....ராகு கேது பெயர்ச்சியெல்லாம் பார்க்கிறீங்கள் போல.... 😲 புரியவில்லை சொல்லுங்கள். 😁
3 months 2 weeks ago
அது தான் பிரச்சனையே. அது பல பிரச்சனைகளை மறைக்கிறது.
3 months 2 weeks ago
முன்பு Tulpen ம் அறிவின் பாடலை விரும்பி கேட்பதாக எழுதியவர் . சாதி வெறியர்களினால் அவர் ஒடுக்கபட்டார் என்றும் கேள்விபட்டேன். ஒரு திராவிட பாடகருக்கு இங்கே வரவேற்பு இருப்பது ஆச்சரியமாக உள்ளது
3 months 2 weeks ago
சிறப்பு 👌
3 months 2 weeks ago
நீங்கள் இந்த அணிகளை இறுதிப்போட்டியில் தெரிவு செய்துள்ளீர்கள் போல் உள்ளது சரியான தெரிவுதான், சில வேளை பெங்களூர் தென்னாபிரிக்கா போல் இறுதிப்போட்டியில் சொதப்பினால்?
3 months 2 weeks ago
கரும்புலி மேஜர் அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வன் சந்திவெளி, மட்டக்களப்பு அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வ...கரும்புலிகள் மேஜர் அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வன் சந்...மட்டக்களப்பு நகரில் வைத்து தேசத்துரோகி ராசீக் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு
3 months 2 weeks ago
குற்று இல்லை, கொமா 12,614. தவறாக பதியப்பட்டுவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் கணிக்கப்படுவதில்லை.
3 months 2 weeks ago
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! திருத்தியுள்ளேன்.😁 அஹஸ்தியன் கிரிக்கெட் விளையாடுபவர். சும்மா உணர்ச்சி மேலீட்டினால் CSK ஐ தெரிவுசெய்யமாட்டார்😃
3 months 2 weeks ago
தமிழ் நாடு இல்லையா?? அப்படியென்றால் சிந்தப்பா கமலும். கர்நாடகமா?? இல்லை தமிழ்நாடு ?? இவர் மன்னிப்பு கேட்க முடியாது என்பதற்கு காரணம் அன்பு ....அப்படியென்றால் தமிழிலிருந்து கன்னட மொழி பிறந்தது உண்மை என்பது காரணம் இல்லையா ??
3 months 2 weeks ago
அகஸ்திய முனிவர் 🙏 கடும்கோபம் கொண்டு கமண்டலத்தையும் எடுத்துக் கொண்டு மலை மீது ஏறி விட்டார் போல் உள்ளது 😇😂
3 months 2 weeks ago
நல்லது நடக்கட்டும். உண்மை வரலாறு வெளி வரட்டும்
3 months 2 weeks ago
ஒரு படத்துக்கு இலவச விளம்பரம் காலா காலமாய் மணி ,கமல் கூட்டம் செய்யும் இலவச விளம்பர அந்தர் பல்டி . அப்ப Suhasini Mani Ratnamஎன்ன வெள்ளி பார்த்து கொண்டு இருக்கறாங்க போல் உள்ளது அவங்க பூர்வீகம் கர்நாடக தானே ?
3 months 2 weeks ago
இதெல்லாம் பனிக்கட்டியின் வெளியே தெரியும் முனை மட்டுமே. 1000 கிலோ ரிஎன்ரி வெடிமருந்தை நிரப்பிய MOAB குண்டுகளை விற்பது முதல், இப்படியாக அமெரிக்காவில் கொள்வனவு செய்த உணவை , அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்களின் பாதுகாப்போடு விநியோகிப்பது வரை, பிணம் தின்று வயிற்றை வளர்த்து, உழன்று, ஒரு நாள் செத்துப் போய் பூமிக்குப் பாரமாகப் போகும் பேர்வழிகள் நடமாடும் உலகம் இது!
3 months 2 weeks ago
இதுவும் அவர்களிடமும் அபரிமிதமாகவே உள்ளது ஐலண்ட். எஸ் கிளாசில், இந்தியாவில், 1998 இல் டிரைவர் வைத்து ஓடிய பால் தினகரன் செத்த பின்பு, அவரது மகன் செத்த வீடு செய்ய காசில்லை என கூறியதும் அள்ளி அள்ளி கொடுத்தார்கள். நைஜீரியாவில் எல்லாம் பெரிய எடுப்பில் நடக்கிறது. இவை ஏன், யாழ்ப்பாணத்தில் இன்றுவரை ஒரு கன்னியர் மடத்தில் கிறீஸ்தவர் அல்லாத பிள்ளை தலைமை ஹெட் பிரிவெக்ட் ஆகவில்லை என எண்ணுகிறேன். சிஸ்டர்மாரும், பாடசாலையில் அதிகம் இருக்கும் பெற்றாரும், முன்னாள் மாணவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என அடம்பிடிப்பார்கள்.
3 months 2 weeks ago
அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது
3 months 2 weeks ago
திராவிட மொழிக் குடும்பம், தெலுங்கோடு தொடர்பானது என்று இந்தக் கட்டுரையில் இருக்கிறது. இந்தக் கட்டுரையே "கன்னடம் 2500 ஆண்டுகள் பழமையானது" என்ற போலித் தகவலைச் சரிபார்க்கும் முயற்சியாக வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது அதே "2500" இனை கன்னடத்தின் வயதாக கன்னடத் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்😂! Bangalore MirrorFake News Buster: Kannada is world’s oldest living languageThis piece of news is doing the round of the internet naming Kannada as the oldest living language in the world. The news comes with a picture of a certificate that says it has been ratified by the...
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed