3 months 2 weeks ago
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Travis Head போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Pat Cummins போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்திரேலியா
3 months 2 weeks ago
செம்பா, அல்வாயான், வாதவூரானுக்கு வாழ்த்து.
3 months 2 weeks ago
எனக்கு தெரிந்த ஒருவருக்கு 2000 ம் ஆண்டு, ஜனவரி 1 இல் குழந்தை பிறந்தது. எல்லோரும் பையன் பின்னுவான் பாருங்களேன் எண்டு சொன்னார்கள். சின்ன வயதில் இருந்த அவரிடம் இதற்கான அறிகுறியை நானும் தேடிப்பார்த்தேன் காணவில்லை. இப்போ இளந்தாரி - வாழ்க்கையில் ஒரு விடயத்தில் மட்டும் உச்சமடைந்துள்ளார். அது என்னத்தில் என்பதை சொல்லாமலே விளங்கும் என நினைக்கிறேன்.
3 months 2 weeks ago
'ரஷ்ய அதிபர் புடினும், உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியும் சிறுவர்கள் போல சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சில காலம் சண்டை பிடிக்க விட்டுவிட்டு பின்னர் வழிக்கு கொண்டு வருகின்றேன்.................' என்பது போல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்தாநாள் சொல்லியிருந்தார். ட்ரம்ப் சொல்பவைகளுக்கு மூன்று நாட்கள் ஆயுள் இருந்தாலே அதிசயம். அதனால் தான் அவருடைய புதிய பெயரான TACO என்பது மிகப் பிரபலமாக வந்துவிட்டது. ஆனால் இரு சிறுவர்கள் தெருவில் சண்டை பிடிப்பது என்பது சில நாட்களாவது நிலைத்து நின்று விடும் போல. ஒரு சிறிய மாற்றம் - எலானும் ட்ரம்பும் தான் அந்த இரு சிறுவர்கள். எலானின் அந்த சல்யூட்டையோ, மரம் அரியும் வாளை மேடையில் தூக்கிக் காட்டியதையோ, அரச வேலைகளில் பணி நீக்கம் செய்ததையோ, தொண்டு நிறுவனங்களை இல்லாமல் ஆக்கியதையோ, எப்போதும் எடுத்தெறிந்து பேசும் இயல்புகளையோ, இன்னும் பல விடயங்களை இங்கு எவரும் மறந்துவிடப் போவதில்லை. எலான் தற்போது ட்ரம்பிற்கு எதிராக சொல்லும் கருத்துகள் தன் நலன் சார்ந்ததே அன்றி, ஒரு துளியேனும் அமெரிக்க மக்களின் அல்லது உலக மக்களின் நன்மை கருதி இல்லை. தன்னைத்தானே stable genius என்று சொல்லிக் கொள்ளும் ட்ரம்ப் எலானை mediocre Musk என்று இறுதியில் சொல்ல வேண்டிய ஒரு நிலைமை இவ்வளவு விரைவாக வந்துவிட்டது. அமெரிக்காவை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று எலானை கொண்டாடிய ட்ரம்பின் மஹா (MAGA) குழுமம் இன்று எலானை நீ செவ்வாய் கிரகத்துக்கு பின்னர் போகலாம், நீ இப்பொழுது முதலில் ஆபிரிக்காவிற்கு திரும்பி போ என்று சொல்லுகின்றார்கள். நேற்று எடுத்த கெட்டமைனின் தாக்கம் இறங்க, எலான் இன்று பணிய ஆரம்பித்துவிட்டார். எலான் கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் போகலாம். நீலத்திலிருந்து சிவப்பாக மாறலாம். ஆனால் அவர் அமெரிக்காவிலிருந்து வேறு எங்கும் போகமுடியாது. ட்ரம்புடன் சேர்ந்து நிற்கும் போது அவருடைய நிறுவனங்கள் சந்தையில் தளம்பின. வெளியேறி ட்ரம்பை எதிர்க்கும் போது இன்னும் அதிகமாக தளம்புகின்றன. மொத்தத்தில் இவை எதுவுமே இவருக்கு தேவையில்லாத விடயங்கள். நிகோலா டெஸ்லா அவருடைய தாயாருக்கு எழுதிய கடைசிக் கடிதம் நன்கு பிரபலமானது. டெஸ்லா என்னும் பெயரையே எலானும் தொடர்கின்றார்.
3 months 2 weeks ago
அவசர தேவைகள் சார்ந்த சுயநலக்காதல் இவ்வாறு தான் நிறைவு பெறும்
3 months 2 weeks ago
நல்வரவு.
3 months 2 weeks ago
காசாவை நோக்கி கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் கப்பலை தடுத்து நிறுத்த தயாராகின்றது இஸ்ரேலிய கடற்படை - டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 04:10 PM காசாமீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடும் நோக்கி காலநிலை செயற்பட்டாளர் கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் பிரீடம் புளோட்டிலா அமைப்பின் கப்பலை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தும் என டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளதாவது, காசாமீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடும் நோக்கி காலநிலை செயற்பட்டாளர் கிரெட்டா தன்பேர்க்குடன் பயணிக்கும் கப்பல் இஸ்ரேலிய கடற்பரப்பினை நெருங்கினால் இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தும். பாலஸ்தீன சார்பு இஸ்ரேல் எதிர்ப்பு பீரிட்டம் புளோட்டிலா கூட்டணி ஏற்பாடு செய்துள்ள மட்லீன் படகில் மோதல்கள் இடம்பெற்றால், இராஜதந்திர சமூகம் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடும், பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த படகின் பயணத்தை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளன. பிரிட்டனின் கொடியுடன் பயணிக்கும் இந்த படகில் 12 செயற்பாட்டாளர்கள் உள்ளனர் அவர்களில், பிரான்சை சேர்ந்த பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசனும் உள்ளார். கடந்த பெப்ரவரியில் இவர் இஸ்ரேலிற்குள் நுழைய முற்பட்டவேளை இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது, இஸ்ரேலிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. படகின் பாதையை கண்காணித்து வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளன. மத்தியதரை கடலை கடப்பதற்காக சூடானின் குடியேற்றவாசிகள் பயன்படுத்தும் கடற் பாதையிலேயே இந்த படகு பயணிக்கின்றது. இந்த படகு காசாவை நோக்கி பயணித்தால், கடற்படை அதனை தடுத்து நிறுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மட்லீன் வாரஇறுதியில் காசா பள்ளத்தாக்கினை சென்றடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்லீன் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் கடல்சார் முற்றுகையை நடைமுறைப்படுத்தியுள்ளோம், அரசியல் பிரிவின் வழிகாட்டுதல்களுடன் பல்வேறு சூழ்நிலைக்கும் தயாராவதாக தெரிவித்துள்ளது. படகில் ஆறு பிரான்ஸ் பிரஜைகள் உள்ளதால் பிரான்ஸ் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் இராஜதந்திரியொருவர், படகில் உள்ள தங்களின் நாட்டவர்களிற்கு தேவைப்பட்டால் உதவிகளை வழங்க பிரான்ஸ் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சனல் 12க்கு தெரிவித்துள்ள பிரிட்டிஸ் அதிகாரியொருவர், பிரிட்டிஸ் கொடியுடன் அந்த படகு பயணிப்பது பிரிட்டனிற்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/216788
3 months 2 weeks ago
Published By: VISHNU 06 JUN, 2025 | 09:53 PM இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (6) மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய துணை தூதர் சாய் முரளி, ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதியென்று குறிப்பிட்டார். இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடி வலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார். உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன என்றும் குறிப்பிட்டார். உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் போது, இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்கவுள்ளது என்ற உறுதியை துணை தூதரக ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார். வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் வீடுகள், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, கலாசாரம் மற்றும் திறனறிதல் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்களை அவர் விளக்கினார். வட மாகாண மக்கள், குறிப்பாக ஊர்காவற்துறை பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய சவால்கள் குறித்து தானறிந்திருப்பதாகவும், இந்தியா எப்போதும் அவர்களுடன் இருந்தது என்றும் இருக்கும் என்றும் தூதர் உறுதியளித்தார். நம்பிக்கையும், வாய்ப்புகளும், அமைதியும் நிரம்பிய எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா எப்போதும் நண்பனாக துணை இருக்கும் என அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/216822
3 months 2 weeks ago
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம் - மேலும் 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி Published By: VISHNU 06 JUN, 2025 | 09:37 PM யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 45 நாட்கள் அகழ்வு பணிகளை முன்னெடுக்க யாழ். நீதவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (06) கட்டளைக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி ஆழத்தில் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒழுங்கு முறையின்றி குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை போன்ற விடயங்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன் இதுவரையில் 18 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையுடன் (7) முதலாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவடைவதனால் , தொடர்ந்தும் அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதனை அடுத்து , மேலும் 45 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க மன்று அனுமதித்துள்ளது. https://www.virakesari.lk/article/216821
3 months 2 weeks ago
வணக்கம் நண்பர் arjaywu. உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களின் களப்பெயரை தமிழில் எவ்வாறு எழுதுவது? நீங்கள் தமிழகத்தில் இருந்து இணைகின்றீர்களா?
3 months 2 weeks ago
இது ஒரு புலத்தில் இருந்து சென்ற நபரின் கட்டுரை. மேலே யாயினியும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது, உள்ளூர் பயனர்களை விட வெளிநாட்டுப் பயனர்களை வித்தியாசமாகக் கவனிக்கிறார்கள் என்ற என் எண்ணம் வலுப்படுகிறது. வடக்கின் ஒரு அரச மருத்துவ மனையில் தந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்த வேளையில் என் அனுபவமும் இப்படித் தான் இருந்தது. "மகன் வெளிநாட்டில் இருந்து வருகிறார், மகன் வெளிநாட்டில் டொக்ரர்" (நான் என்ன செய்கிறேன் என்றே என் சிறிலங்கா உறவுகளுக்குத் தெளிவில்லை😂) இப்படி முதல் இரு நாளும் சகோதரிகள் சொல்லியிருக்கிறார்கள். நானும் அங்கே இருந்த ஒரு மருத்துவ நண்பர் மூலமாக நிலைமையை விசாரிக்க வைத்தேன். 3 ஆம் நாள் நான் மருத்துவ மனை போய் அப்பாவைப் பார்த்த போது என்னோடு அக்கறையாக அப்பாவின் நிலைமையைப் பற்றி உரையாடினார்கள். கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். அதே வேளை, ஏனைய 6-7 ICU நோயாளிகள் பற்றிய நிலையை அவர்களின் உறவுகளுக்கு கேட்டாலும் தெளிவாகச் சொல்லாமல் நடந்து கொள்வதை அவதானித்தேன். ஒரேயொரு சிங்கள மருத்துவர் மட்டும் எல்லோரோடும் ஒரே விதமாக பண்பாக நடந்து கொண்டார். இளம் மருத்துவர்களாவது எல்லா நோயாளிகள், உறவுகளோடு ஒரே மாதிரிப் பண்பாக நடந்து கொள்ளும் வகையில் பழக்கப் பட வேண்டும். வெளிநாடு, அரச அதிகாரி, விஐபி நோயாளி ஆகியோருக்கு மட்டும் விசேட கவனிப்புகள் கொடுப்பது நல்லதல்ல!
3 months 2 weeks ago
இந்த விடயம் தொடர்பாக மிகவும் தெளிவான அறிவார்ந்த பார்வையுடனான தாயகத்தில் இருந்து சட்டத்தரணி ஒருவரின் கருத்து. https://m.facebook.com/story.php?story_fbid=1103923524906211&id=100058657202134
3 months 2 weeks ago
நேற்று எனக்கு சாப்பிட நேரமில்லாத வேலை பிசியானாலும், மகிழ்ச்சியான நாள்😂. பூசலின் தோற்றுவாய் ட்ரம்பின் செலவைக் கூட்டும் (அதுவும் மில்லியனர்களுக்கு வரியைக் குறைத்து செலவைக் கூட்டும்) சட்ட முன்மொழிவு. இதை செனற் அனுமதித்தால், ட்ரம்ப் உடனே கையெழுத்து வைப்பார். ஜூலை 4 இற்கு முன்னர் இதைச் செய்வது ட்ரம்பின் திட்டம். நேற்று மஸ்க் தெரிவித்த ஒரு கருத்து, "ட்ரம்ப் இன்னும் 3.5 ஆண்டுகள் தான் பதவியில் இருப்பார், நான் இங்கே 40+ ஆண்டுகள் இருக்கப் போகிறேன்" - இதைப் பார்த்த சிவப்புக் கட்சி செனரர்களுக்கு வயிற்றில் புளி கரைந்திருக்கும். ஏனெனில், மஸ்க்கின் பண உதவியில்லாமல் அவர்கள் தேர்தலில் வெல்வது கடினம். வீம்பிற்கு மஸ்க் எதிர் தரப்பிற்கு பண ஆதரவைக் கொடுத்தால், சவால் இன்னும் கூடும். என் ஆசை: தன் கொள்கை எதிரிகளைக் கையாள்வது போலவே சட்டத்திற்கு வெளியால் ட்ரம்ப் மஸ்க்கை அடக்க முயல வேண்டும். தென்னாபிரிக்காவிற்கே திருப்பி அனுப்பி விட்டாலும் பரவாயில்லை!
3 months 2 weeks ago
06 JUN, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நுகர்வோரை பாதிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உப்பை விலை அதிகரித்து விற்பனை செய்ய முற்பட்டால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே எம்.பியினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் உப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்குவதற்காக உப்பு இறக்குமதிக்கு சந்தையை திறந்துவிட்டோம். அதற்கு இருந்த வரையறையை நீக்கி இருந்தோம். என்றாலும் இறக்குமதி செய்வதற்கு உணவு கட்டுப்பாட்டு பிரிவில் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். உப்பு, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதாக இருந்தால், அதுதான் நாட்டின் சட்டம். அதன் பிரகாரம், இதுவரை இரண்டு இலட்சத்து 68 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அந்தளவு உப்பு இறக்குமதி செய்யும் என நாங்கள் நினைக்கவில்லை. நேற்று முன்தினம் வரை 15ஆயிரத்தி 800 மெட்ரிக்தொன் வரை நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் அயடின் மற்றும் அயடின் அல்லாத இரண்டு வகை உப்பும் வந்திருக்கிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு ஒரு கிலோவின் அதிகபட்ச விலை 84, 85 ரூபாவுக்கும் குறைந்தபட்ச விலை 65 ரூபாவுக்கும் விற்பனை செய்யவே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். என்றாலும் சந்தையில் இந்த உப்பை 120 ரூபாவில் இருந்து 280 ரூபா வரை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். என்றாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள உப்புக்கான தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதன் மூலம் விலை அதிகரித்து விற்பனை செய்ய முயற்சிக்க வேண்டாம் என இறக்குமதியாளர்களுக்கு தெரிவித்திருக்கிறோம். எனவே இந்த நடவடிக்கையில் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால், அதனை தவிர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/216801
3 months 2 weeks ago
அரசியல்வாதிகள் இவற்றில் தலையிட மாட்டார்கள், ஏன் எனில் கடந்த காலங்களில் பெண்களுக்கு சுய தொழில் வாய்ப்புக்கு தவறணைகளுக்கு அனுமதி வழங்கிய வரலாறுகளும் அனைவரும் அறிந்ததே.இது அரசியல் வாதிகளைத் தானே சாரும்.
3 months 2 weeks ago
இதில் சொல்லப்படவேண்டியது - அமெரிக்கா தொடக்கி இருக்கும் வர்த்தக போரில் தோற்கும், அல்லாதது சீனப்பக்கம் சாய்வான நிகர் முடிவுகு வரும் சாத்திய கூறுகளே அதிகம். காரணம்: சீனாவின் அமெரிக்கா ஏறுமதிகள் கிட்டதட்ட 500 பில்லியன். சீன மத்தியதர வர்க்கத்தின் தொகை 700 மில்லியன். இந்த 700 மில்லியனும் கிட்டதட்ட $700 ஐ ஆண்டுக்கு இப்போது செலவழிப்பதிலும் கூட செலவழித்த்தால் அமெரிக்காவுக்கு சீனா செய்யும் ஏற்றுமதியை இலகுவாக சீனா உள்ளக நுகர்வால் பெறலாம். சீன மத்தியதர வர்க்க அவ்வாறு $700 ஐ ஆண்டுக்கு இப்போது செலவழிப்பதிலும் கூட செலவழிக்கும் நிலையில் இறக்கிறாதா என்றால், பொதுவாக மிகவும் வசதியாக சீன மத்தியதர வர்க்கம் இருக்கிறது. மத்தியதர குடும்பம் என்றால் (மிகப் பெரும்பான்மையாக மூவர் கொண்டது, சீனாவின் 1 பிள்ளை கொள்கையால்), இந்த தொகை 3 மடங்கு ஆகும், அதாவது $2100. இது 1 வருடத்தில் பெரிய தொகையாக இருக்கலாம், ஆனால் உள்ளக நுகர்வில் முதலீடு பகுதியை சீன கொண்டுவரும் என்றால் (உகாரணமாக பொன் நகைகள்), இது பெரிய தொகை அல்ல. எனவே சீனாவுக்கு இது பணப் பற்றாக்குறை பிரச்னை அல்ல - பொருளாதாரத்தை மாற்றும் (transition) பிரச்சனை. இதற்கு அமெரிக்காவின் மாற்று வழி சீனாவுடன் முற்றாக பொருளாதாரத்தை, தொழில்நுற்பட்டதை அறுப்பது, அனால் அப்படி செய்தால் இரு பக்க பொருளாதாரமும் படுக்கும். அதிலும் சீன ஒப்பீட்டளவில் வலி குறைவாக இருக்கும்., ஏனெனில் உலகில் ஏறத்தாழ அனைத்து நாடுகளுடனும் பொருளாஹார தொடர்பு கொண்டுள்ளது.
3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 11:19 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நீதிபதி உட்பட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. நால்வரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகளை இலக்குவைத்து செயற்பட்ட நீதிபதியொருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகளான இந்த நால்வரும் அமெரிக்காவையும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலையும் இலக்குவைத்து ஐசிசியின் சட்டவிரோத ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அரசியல்மயமாக்கப்பட்டுள்து என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நீதிமன்றத்தின் முன் விசாரணை மற்றும் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் ரெய்ன் அடிலெய்ட் சோஃபி அலபினி கன்சோ மற்றும் பெட்டி ஹோஹ்லர் ஆகியோர் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை குறிவைத்து பிடியாணைகளை பிறப்பிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச நீதித்துறை நிறுவனத்தின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தெளிவான முயற்சி என தெரிவித்துள்ள ஐசிசி பொறுப்புக்கூறலிற்காக பாடுபடுபவர்களை இலக்குவைப்பதுமோதலில் சிக்குண்டுள்ள மக்களிற்கு எந்த வகையிலும் உதவாது என தெரிவித்துள்ளது. ஐ.சி.சியின் மேல்முறையீட்டுப் பிரிவைச் சேர்ந்த நீதிபதிகள் உகாண்டாவைச் சேர்ந்த சோலோமி பலுங்கி போசா மற்றும் பெருவைச் சேர்ந்த லஸ் டெல் கார்மென் இபனெஸ் கார்ரான்சா ஆகியோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் அமெரிக்க படையினர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து ஐ.சி.சி விசாரணையைத் தொடங்க வழி வகுத்த குழுவில் இடம்பெற்றனர் நவம்பர் 2024 இல் ஐ.சி.சி தலைமை வழக்கறிஞர் கரீம் கான் நெதன்யாகு மற்றும் கேலன்ட் மற்றும் மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்தார். இந்த நடவடிக்கை பைடன் நிர்வாகத்திடமிருந்து எதிர்ப்புகளைப் பெற்றது முன்னாள் ஜனாதிபதி இதை "மூர்க்கத்தனமானது" என்று அழைத்தார். ஐ.நா தலைமையிலான பாலியல் துஷ்பிரயோக விசாரணைக்கு மத்தியில் கான் கடந்த மாதம் தனது பதவியில் இருந்து விலகினார் ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் அமெரிக்க அரசாங்கம் ஐ.சி.சி வழக்கறிஞர் ஃபடோ பென்சவுடா மற்றும் மூத்த அதிகாரி ஃபாகிசோ மோச்சோச்சோகோ ஆகியோர் மீது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரித்ததற்காக தடைகளை விதித்தது - பின்னர் பைடன் நிர்வாகத்தால் நீக்கப்பட்டது. அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்ற ஐ.சி.சி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்தார். இந்த நடவடிக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வரவேற்க வாய்ப்புள்ளது - மார்ச் 2023 இல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. ஐ.சி.சி-யை நிறுவிய ரோம் சட்டத்தில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ கைச்சாத்திடவில்லை.. https://www.virakesari.lk/article/216747
3 months 2 weeks ago
வக்கத்த அரசியல்வாதிகளுக்கு குழப்பங்களே அரசியல் முதலீடு. இவர்களை சிறைக்கு அனுப்பாவிடில் நாட்டில் குழப்பங்களும் பிரிவினைகளும் மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தெருவில் நின்று அரசியல்வாதி முதல் காவியுடை தரித்தவர்கள் வரை நாட்டை கொளுத்துவோம், இரத்த ஆறு ஓடப்பண்ணுவோம் என்று ஊழையிடுகிறார்கள். அவர்களுக்கு தமிழரின் இரத்த தாகம் எடுக்கிறது
3 months 2 weeks ago
புத்தியுள்ள மனிதரெல்லாம் .......... ! 😂
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 06 JUN, 2025 | 04:27 PM நாடளாவிய ரீதியில் தென் மேற்கு பருவமழை இம்மாதம் (ஜூன்) 10 ஆம் திகதி முதல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் தென் மேற்கு பகுதியில் 10 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வு கூறல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/216785
Checked
Tue, 09/23/2025 - 20:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed