புதிய பதிவுகள்2

உங்களுக்கு தெரியுமா?

3 months 2 weeks ago
பெருமைக்குரிய பிணந்தின்னிகள்! http://aalumaisirpi.com/wp-content/uploads/2025/01/animal.jpg திரு.முகில் குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடவே கூடாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த வசனம் டோராவின் குரலில் ஒலித்தே தீரும். எல்லோருக்கும் நன்மைகள் செய்யும் டோரா – புஜ்ஜி பாத்திரங்களுக்குத் தீமைகள் விளைவிப்பது குள்ளநரி. அந்தக் கார்ட்டூனில் மட்டுமல்ல. காலம் காலமாக நரியை நெகட்டிவ் உயிரினமாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். பாட்டி வடை சுட்ட கதையிலும் நரியே வில்லன். நரிக்கு உபதேசம் செய்தாற்போல. நரி நக்கி கடல்நீர் வற்றுமா? நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும். நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன. கடிக்காமல் போனால் சரி. பாழான ஊருக்கு நரி ராஜாவாம். சிங்கம் இல்லாத இடத்தில் நரி சிம்மாசனம் ஏறும். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இப்படி நம் பழமொழிகளில்கூட பெரும்பாலும் நரிமீது ‘கருப்பு ஒளியே’ பாய்கிறது. நரி அவ்வளவு மோசமான விலங்கா? அதன் வாழ்க்கை எப்படிப்பட்டது? மனிதனுக்கும் நரிக்குமான உறவு எப்படிப்பட்டது? இந்தப் பூமியில் நரியின் பங்களிப்பு என்ன? நரியைவிட மோசமான உயிரினம் எது? எல்லாவற்றையும் பார்ப்போம். நரிகள் (Fox), பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவை அனைத்துண்ணிகள். ஆசியா, ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, வட அமெரிக்கா நாடுகளில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு நாட்டு நாயின் அளவில் நரிகள் இருக்கின்றன. அதைவிடச் சிறிய அளவு கொண்ட நரி வகைகளும் உண்டு. மண்ணுக்கடியில் வளைகள் அமைத்து வாழும் இயல்புடையவை. உணவு சேமித்து வைக்கவும் உறங்கவும் வளைகளைப் பயன்படுத்துகின்றன. அதில் ஆபத்துக் காலத்தில் தப்பித்து வெளியேறுவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல்களை அமைத்துக் கொள்கின்றன. தந்திரம்! நரிகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. இரவு நேரங்களில் அவற்றால் தெளிவாகப் பார்க்க இயலும். ஆகவே, அப்போது வேட்டையாடுகின்றன. இதன் காதுகள், பூமிக்கடியில் எலி போன்ற உயிரினங்கள் எழுப்பும் சத்தங்களைக்கூட உணரும் திறன் கொண்டவை. அதேபோல, நரிகள் வெவ்வேறு வகையான குரல்களை அடையாளம் காணக்கூடியவை. மணிக்கு சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. சுறுசுறுப்பு! ஒரு பெண் நரியானது பொதுவாக இரண்டு முதல் ஏழு குட்டிகள் வரை ஈனும். குட்டிகளைத் தாயும் தந்தையும் சேர்ந்து பராமரிக்கின்றன. மூத்த சகோதர, சகோதரி நரிகளும் உணவு தேடி வந்து கொடுத்து உதவுகின்றன. பாசம்! பொதுவாக நரிகள் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. மிருகக்காட்சிச் சாலையிலோ, மனிதனின் பராமரிப்பிலோ இருந்தால் சுமார் 10 ஆண்டுகள்கூட உயிர் வாழ்கின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் நரிகள் செழித்து வாழ்ந்திருக்கின்றன. நரியிற்கு ஊண் நல் யாண்டும் தீ யாண்டும் இல் – முன்றுரையனார் என்ற புலவர் எழுதிய பழமொழி நானூறு பாடல், நரியை வில்லனாகவே காட்டுகிறது. நரிக்கு உணவு உண்பதில் நல்ல காலம், கெட்ட காலம் என்றெல்லாம் கிடையாது. அது எப்போதும் வஞ்சகக் குணத்துடனேயே இருக்கும். நரியைப் போலவே பண்புகளைக் கற்றுக் கொள்ளாத கயவர்கள், வறுமை உள்ள காலத்திலும் தீமைகள் செய்வார்கள். வளமாக இருக்கும்போதும் தீமைகள் செய்வார்கள். அவர்களுக்கு நல்ல வழியே தெரியாது. மனிதனின் கெட்ட புத்திக்காக, நரிக்குக் குட்டு வைத்திருக்கிறார் முன்றுரையனார். சங்க இலக்கியத்தில் ‘கணநரி’ வலம் வருகிறது. ஆங்கிலத்தில் Jackal. குறுநரி, குழிநரி, குள்ளநரி என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இவை கூட்டமாகக் காணப்படும். கும்பலாகச் சென்றே வேட்டையாடும். கோரஸாக ஊளையிடும். கணநரிகள் போர்க்களத்தில் இறைந்து கிடக்கும் பிணத்தின் கொழுப்பைத் தின்றதாகச் சங்கப் பாடல்கள் காட்சிப்படுத்துகின்றன. கணநரிகள் காடுகளிலும் பாலைவனங்களிலும் தோட்டங்களிலும் வீடுகளின் அருகிலும் வாழும். பகல்களில் இவற்றைப் பெரும்பாலும் பார்க்க இயலாது. இரவுகளில் ஊளையிடும் சத்தம் மூலமாக இவற்றின் இருப்பை அறியலாம். இரவெல்லாம் திரிபவை, விடியற்காலையில் பதுங்கி விடும். அப்படியும் ஒன்றிரண்டு மனிதர்கள் பார்வைக்கு அரிதாகத் தென்படும். அதைத்தான் ‘நரி முகத்தில் விழித்ததுபோல’ என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். இதைக் காலப்போக்கில் அதிர்ஷ்டத்தோடு இணைத்துக் கொண்டார்கள். இன்னிக்கு நரி முகத்துல முழிச்சிருக்கேன்! ‘‘நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி’’’ என்கிறது நற்றிணை. போரினில் வீழ்ந்து கிடக்கின்ற மனிதர்களின் பிணங்கள். நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய எருவைக் கழுகு அவற்றைத் தின்ன வருகிறது. அவற்றுடன் போராடி விரட்டிவிட்டு, சதைகளைத் தானே தின்கின்றன நரிகள். பின்பு உண்ண நீர் கிடைக்காமலும், உறங்க நிழலிடம் கிடைக்காமலும் அலைந்து வருந்துகின்றன என்பதாக இந்தப் பாடல் பொருள் தருகிறது. பேயும் கணங்களும் நரியும் திரிகின்ற இந்தப் போர்க்களத்திலே, ஊன் தின்று சிவந்த செவியுடைய கழுகுகளும் காண்பது அச்சம் தருவதாக இருக்கிறது என்று காட்சிப்படுத்துக்கிறது புறநானூறு. பிணம் தின்னும் உயிரினங்கள் எப்போதும் கொடூரமான ஒன்றாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குச் சங்க இலக்கியங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த உயிரினங்களால்தாம் இந்த மண்ணின் சுற்றுச்சூழலானது பாதுகாக்கப்படுகிறது. நரியோடு எப்போதும் தொடர்புபடுத்திப் பேசப்படும் பிணந்திண்ணிக் கழுகுகள் குறித்தும் சில வார்த்தைகள் இங்கே, அவற்றின் தன்னிகரற்றச் சேவைக்காக. பாலை நிலத்தின் அடையாளப் பறவை, பிணந்தின்னிக்கழுகுகள். இவற்றுக்கு மஞ்சள் பாறு, மஞ்சள் முகப் பாறு, திருக்கழுக்குன்றக் கழுகு, எகிப்திய பிணந்தின்னிக்கழுகு, வெள்ளைக் கழுகு எனப் பல பெயர்கள் உண்டு. அசிங்கமான, அருவருப்பான, கொடூரமான பறவையாக இவை அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவையே பாலை நிலத்தின் பிரதான தூய்மைப் பணியாளர்கள். இந்தப் பிணந்தின்னிக்கழுகுகளுக்கும் பார்சி மக்களுக்குமான உறவு, தனித்துவமானது. பார்சி இனத்தைச் சார்ந்தவர்கள் இயற்கையை நேசிக்கும் இயல்பைக் கொண்டவர்கள். இறந்த பிறகுகூட, அவர்களது உடலானது இயற்கையான முறையிலேயே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அதற்காகவே ‘டோக்மா’ என்ற கோபுரங்களைக் கட்டினார்கள். மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து சற்றே தள்ளி, உயரமான, வட்ட வடிவமான, கூரைகளே இல்லாத இந்த ‘இறுதிச் சடங்கு கோபுரங்கள்’ அமைக்கப்பட்டன. இறந்த ஒரு பார்சியின் உடல் இந்தக் கோபுரத்தில் வைக்கப்படுகிறது. அங்கே பிணந்தின்னிக் கழுகுகள், செம்பருந்துகள் வருகின்றன. அவை உடலின் சதைகளைத் தின்ன ஆரம்பிக்கின்றன. உடலானது அழுகும் முன்பே வேகமாகத் தின்று முடிக்கின்றன. இந்தக் கழுகுகளிலும் வகைகள் இருக்கின்றன. ஒரு வகைக் கழுகுகள் சதையை மட்டும் உண்கின்றன. இன்னொரு வகைக் கழுகுகளோ தோலை உண்கின்றன. இன்னொன்று எலும்பைச் சாப்பிடுகின்றன. வேறோரு வகைக் கழுகுகளோ மிச்சம் மீதியை உண்கின்றன. இப்படியாக ஓர் உடலின் ஒவ்வொரு பகுதியையுமே உண்டு, அகற்றி, அந்தச் சூழலைச் தூய்மைப்படுத்தும் உயிரினங்களாக இந்தக் கழுகுகள் தொடர்ந்து சேவை ஆற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கழுகுகள் வருடத்துக்கு ஒரு முட்டைதான் இடும். அந்தக் குஞ்சும் பிரச்னையின்றி வெளியே வந்து பிழைத்து வாழ்வது சவாலான காரியம்தான். அதனால்தான் இந்தக் கழுகு இனம் பெருகுவதைவிட, அழியும் வேகம் அதிகமாக இருக்கிறது. சூழல் மாற்றங்களும் அதற்கு முக்கியக் காரணம். மனிதனும் இந்தக் கழுகு இனத்தை மறைமுகமாக அழித்துக் கொண்டிருக்கிறான். மாடுகளுக்கு, Diclofenac என்ற வலிநிவாரண மருந்து சில மருத்துவக் காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது. அந்த மாடு இறந்தபின் அதன் சடலத்தை மனிதன் ஆளற்ற பகுதிகளில் போடும்போது, கழுகுகள் அதை உண்ண வருகின்றன. அதை உண்ணும்போது Diclofenac மருந்தால், கழுகுகளின் சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அதன்பின் அவை இறந்து போகின்றன. பிணந்தின்னிக்கழுகுகளின் வேகமாக அழிவதற்கு முக்கியமான காரணமாக இது கருதப்படுகிறது. https://aalumaisirpi.com/?p=6477

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 2 weeks ago
துருக்கியர்களும்,அரேபியர்களும் தடிப்பான கோப்பி குடித்த கப்பில் சாத்திரம் பார்ப்பார்கள். அவர்களது இன்றைய இளம் சமுதாயத்தில் கூட புனிதமாக பார்க்கப்படுகின்றது. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளிலும் தினசரி நாளிதழ்களில் இன்றைய நாள் பலன்கள் வரும்.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
மீண்டும் சொல்கிறேன் - மனைவி இப்படி திருமணத்துக்கு அப்பாலான உறவு கொண்டாரா இல்லையா என்பது இன்னும் அறியப்படவில்லை. ஆனால் அப்படியே நடந்து இருந்தாலும் - கணவர் நடந்து கொண்ட முறை மிக மோசமானது. மனைவி செய்ததாக சொல்லப்படும் ஒழுக்க கேட்டிற்கு இதுவல்ல தண்டனை. இதை செய்த கணவனுக்கு கூட, ஆத்திர மிகுதியால் இப்படி நடந்து கொண்டார் என்பதை ஒரு mitigating factor (குற்ற குறைப்புக்கான காரணி) ஆக (நியாயப்படுதலாக ஆக அல்ல) எடுத்தாலும்…. கலரியில் இருந்து விசிலடிக்கும் கூட்டம்….தமிழ் தலிபான்களே. தீர்ப்பு எழுதும் போது ஒரு விசாரணை இவை எல்லாவற்றையும் ஆய்ந்தே தீர்ப்பு வர வேண்டும். அந்த விசாரணை முடிவு வரும் வரை எம் பதில்கள் எல்லாம் “லாம்” விகுதியில்தான் இருக்க முடியும். இலங்கையில் தீர்ப்பு சரியாக வராது என்ற கணிப்பில், நாம் குறை தரவுகளை வைத்து முடிவுக்கு வரக்கூடாது.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
நான் எவரையும் நம்பவில்லை இது பைத்தியக்காரத்தனமான கோரமான கொலை. ஆனால் இங்கே நீங்கள் தீர்ப்பு வழங்கும் போது எனக்கெளும் கேள்விகளை மட்டுமே வைத்தேன். மற்றும் படி தீர்ப்பு எப்பொழுதும் கொலைக்கு சார்பாக இராது. இதன் உண்மையான தரவுகளும் வெளியே வராது. எனவே எல்லாம் லாம்.....??? என்பதுடன் முடிவுறும்.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
கணவர் கொழும்பில்தானே. வந்து போயிருப்பார் அல்லவா? வவுனியா 4 மணி பயணம்தானே. நீங்கள் பார்த்து விட்டீர்களா? இல்லைத்தானே. ஆகவே இதில் என்ன நடந்தது என நாம் சொல்ல போதிய தரவுகள் இன்னும் இல்லை. பிகு இப்படி மனைவியில்தான் பிழை இருக்க வேண்டும் என்ற முடிந்த முடிவில் இருந்தபடி, விடயத்தை அணுகுவதைத்தான், மேலே “கொலையாளி சொல்வதை அப்படியே நம்புகிறார்கள்” என சில கருத்தாளர்கள் விமர்சித்துள்ளனர். அது சரியானதே.

இலங்கையில் தோண்டத் தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள்

3 months 2 weeks ago
கலவரங்களினால் உருவாக்கப்பட்ட மனித புதைகுழிகளை ஆராய இந்த அரசாங்கம் அனுமதிக்கின்றது என்றால்..... எம்மவரின் தலை ஒன்று உருளப்போகின்றது என்று அர்த்தம். அது மட்டுமில்லாமல் பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பது போல்......இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என ஆர்ப்பரித்தவரும் மாட்டிக்கொள்ளப்போகின்றார் போலுள்ளது.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
உலகில் ஒரு பெண் சட்டப்படி திருமணம் செய்தவருடன் மட்டும் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என சட்டங்கள் இருக்கின்றதா? இல்லையே.

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 2 weeks ago
ரசோதரன், உங்களின் இந்த வரிகளை வாசிக்கும் போது, எழுபதுகளின் பிற்பகுதியில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது. அவருக்கு என்னைவிட இருபது வயது அதிகம். வாழ்க்கையில் ஒருமுறையாவது அபின் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கிருந்தது. "உமக்கு கனக்க ஆட்களைத் தெரியும்தானே, கொஞ்சம் எடுத்துத் தாருமன்" என்று என்னைக் காணும் போதெல்லாம் கேட்பார். நீண்ட நாட்களாக அவர் நச்சரித்துக் கொண்டிருந்ததால், ஒரு நாள் அவருக்கு அது கிடைக்க ஏற்பாடு செய்தேன். "இலந்தைப் பழம் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக எடுத்து விடாதீர்கள்" என்ற எச்சரிப்புடன் தான் அவருக்கு அது கொடுக்கப்பட்டது. மனுஷன் நல்ல திடகாத்திரமான பேர்வழி. அன்று அவர் வீட்டில் பங்கு இறைச்சிக் கறி. சொன்ன மாதிரியே, இலந்தைப் பழ அளவிலான அபினை மதிய உணவுக்கு முன் எடுத்துக் கொண்டார். அவருக்கு எந்தவித மாற்றமும் தெரியவில்லை. "அபின்னு ஏதோ லேகியத்தைத் தந்து ஏமாத்திட்டான்" என்று அவரது மனைவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாராம். மனுஷன் அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இன்னொரு இலந்தைப் பழ அளவிலானதை விழுங்கிக் கொண்டார். அங்கேதான் பிரச்சனைகள் ஆரம்பமானது. "காத்தில மிதக்குற மாதிரி இருக்கு... விழப்போறேன்... அழுத்திப் பிடிங்கோ... தலையெல்லாம் சுத்துது. வேர்க்குது, தொண்டை வறண்டு போச்சு" என்று சத்தம் போட ஆரம்பித்தார். அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரது கை கால்களைப் பிடித்துக் கொண்டார்கள். மூத்த மகன் இரண்டு செவ்விழநீர் வெட்டிக் கொடுக்க, அதை மனுஷன் ‘மடக் மடக்’ என்று குடித்தார். இப்பொழுது இன்னும் அந்தரத்தில் வேகமாக பறப்பது போன்ற பிரமை ஏற்பட, மனுஷன் வீட்டையே கலவரப் பூமியாக மாற்றி விட்டிருந்தார். இவ்வளவு அமளிகளுக்கு மத்தியிலும், "என்னைக் கொள்ளுறதுக்குத்தான் இதைத் தந்திருக்கிறான், ராஸ்கல்!" என்றும் சொல்லிக் கொண்டாராம். அன்று சாராயக் கடை இருந்தது. கள்ளுத் தவறணை இருந்தது. கசிப்பு, கஞ்சா, அபின் ஆகியவையும் இருந்தன. ஆனாலும் அவை, தம்பாட்டில் சிலருடன் மட்டுமே இருந்தன. காவல்துறை எதுவுமே தெரியாதது போல் கண்களை மூடிக் கொண்டு தங்களது பிழைப்பைப் பார்த்துக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு எங்கே சமூகப் பொறுப்புக்கள் இருக்கின்றன?

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 2 weeks ago
பெற்றோர்கள் வெளியே செல்லும் பிள்ளைகளை 24 மணிநேரமும் கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. அன்று போல் இல்லாமல் இன்றைய காலத்து பிள்ளைகள் மொடேர்னாக,புத்திசாலிகளாக இருக்கின்றார்கள்.பிள்ளைகள் போதைப்பொருள் பாவிக்கின்றார்களா என்பதை கண்டு பிடிப்பது மிக மிக கடினம். அவர்கள் தங்கள் படுக்கை அறையிலும்,படிப்பு மேசையிலும் பாவிக்கக்கூடியதுதான் இன்றைய போதைப்பொருட்கள். புகையும் வராது போத்தில் சத்தமும் வராது.இனிப்பு வகைகள்,குளிசை வகைகளை போன்று போதை பொருட்கள் வந்து விட்டது.எவ்வித அசுமாத்தங்களும் இல்லாமல் போதை பாவிக்கலாம்.😂 ஜேர்மனியில் எனது நண்பனின் மகன் தன் படுக்கையறையில் அளவிற்கதிகமாக போதை பொருள் உட்கொண்டு......படுக்கையிலேயே வாந்தியெடுத்து காலமாகி விட்டார். அதன் பின்னர்தான் பெற்றோருக்கு தங்கள் பிள்ளை போதை பாவிப்பது தெரிய வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருப்பது கைத்தொலைபேசிகள். அதில் இரகசிய சைகள் மூலம் தங்கள் போதை பொருள் வியாபாரத்தை செவ்வனே செய்கின்றார்கள். இந்த போதை பொருள் விற்பனையை காவல் துறையால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும்.அவர்கள் நேர்மையாக இருந்து செயல்பட வேண்டும். மற்றும் படி இன்றைய இலங்கை அரசியல்வாதிகளுக்கும்/ அரசிற்கும் இதற்கெல்லாம் நேரமில்லை.☹️ உன்ரை வேலையை பாத்துக்கொண்டு போவியா எண்ட பீலிங்கில் இருக்கிறார்கள். 🤣

உங்களுக்கு தெரியுமா?

3 months 2 weeks ago
கரப்பான் பூச்சி இறவான்! திரு.முகில் ‘Katsaridaphobia’ என்ற கடினமான வார்த்தைக்குப் பொருள் தெரிந்து கொள்வதுகூட சிலருக்குப் பயமாகவோ, அருவருப்பாகவோ இருக்கலாம். ‘‘கரப்பான் பூச்சி மீதான அதீத பயம்’’ என்பதே அதற்கான அர்த்தம். அந்த போபியா உள்ளோர் தயவுசெய்து இந்தக் கட்டுரையை வாசிப்பதைத் தவிர்க்கவும். நன்றி. இந்த உலகமே எங்களை எதிர்த்தாலும், எங்களைக் கொல்றதுக்கும் ஒழிக்கிறதுக்கும் என்னென்னமோ வழிமுறைகளைக் கண்டுபிடிச்சு சண்டை செஞ்சாலும், நாங்களா எங்களை அழிச்சுக்குற வரை எவனாலும் எங்கேயும் எப்பவும் எங்க இனத்தை ஜெயிக்கவே முடியாது – நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு மாஸ் பன்ச் டயலாக் பேசத் தகுதி கொண்ட உலகின் ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி மட்டுமே. டைனோசருக்கும் மூத்தக்குடி. இந்த பூமியை ஆதிக்கம் செய்த எத்தனையோ உயிரினங்கள், ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருக்கின்றன. பூமியில் எந்த மாதிரியான பேரழிவு நேர்ந்தாலும் அழியவே அழியாதது, ஒன் அன்ட் ஒன்லி கரப்பான்பூச்சி வகையறாதான்! ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இந்தப் பூவுலகில் வாழ்வதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இன்னும் கண்டறியப்படாத கரப்பான்பூச்சிகளும் உலகில் நிச்சயம் இருக்கும். இவை எந்தவிதமான தட்பவெப்பச் சூழ்நிலைகளிலும் வாழக்கூடியவை. பகல் நேரங்களில் மறைவாக இருக்கும். இரவில் வெளிவந்து இரை தேடும். எப்போதும் நைட் ட்யூட்டிதான். ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேர உறக்கம். சுகவாசி! காட்டில் வாழும் கரப்பான் பூச்சிகள், பழைய இலைக் குவியல்களிலும், மரத்தின் தண்டுகளிலும், உயரமான மரக்கிளைகளிலும் வாழ்கின்றன. மனிதனோடு சேர்ந்து வாழும் கரப்பான் பூச்சிகள், சுத்தம் செய்யப்படாத சமையலறை, குளியலறை, கழிவறை, அழுக்குகள் நிறைந்த இடங்களில் குடித்தனம் நடத்துகின்றன. அது இது எது கிடைத்தாலும் உண்ணும். அனைத்துண்ணி. ஆங்கிலத்தில் குறிப்பிடுவதென்றால் Omnivores. இவை தம் உடல் வெப்பநிலைக்கேற்ப உணவுகளைச் சாப்பிடுகின்றன. அப்படிச் சாப்பிடும் முன்பாக உணவைச் சிறு சிறு துண்டுகளாக்கிய பின்னரே சாப்பிட ஆரம்பிக்கின்றன. நொறுங்கத் தின்றால் நூறு வயது. அது மனிதனுக்கு. அமெரிக்க இன ஆண் கரப்பான் பூச்சியின் ஆயுட்காலம் சுமார் ஓர் ஆண்டு மட்டுமே. ஜெர்மன் இன ஆண் கரப்பான் பூச்சி சுமார் 100 நாள்கள் வாழும். ஓரியண்டல் இன ஆண் கரப்பானின் வாழ்நாள்கள் சுமார் 160. இந்த எல்லா இனங்களிலுமே பெண் கரப்பான் பூச்சிகள் ஆண்களைவிடக் கூடுதல் காலம் வாழ்கின்றன. பெருமைமிகு பெண்ணாதிக்கம்! சரி, குறைந்த காலமே வாழும் கரப்பான் பூச்சி, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, தொடர்ந்து உலகில் நிலைத்திருக்கக் காரணம் என்ன? பிறந்த சில வாரங்களிலேயே கரப்பான் பூச்சிகள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகி விடுகின்றன. உதாரணத்துக்கு ஓர் இந்தியன் இன பெண் கரப்பான் பூச்சியானது, தன் வாழ்நாளில் 13 முறை முட்டைகள் நிரம்பிய ஓடுகளை (Oothecae) இடுகின்றன. ஒவ்வொர் ஓட்டிலும் 16 முட்டைகள் வரை இருக்கும். அவற்றில் தக்கன பிழைத்து அடுத்த தலைமுறை கரப்பான் பூச்சிகளாக வெளிவருகின்றன. இந்த விதத்தில் பார்த்தால் ஓர் இந்திய இன பெண் கரப்பான் பூச்சி தன் வாழ்நாளில் சுமார் 200 வாரிசுகளை உருவாக்குகிறது. ஓர் அமெரிக்க இன பெண் கரப்பான் பூச்சி தன் வாழ்நாளில் அதிகபட்சம் 300 வாரிசுகள் வரை உருவாக்குகிறது. ஆக, வருடந்தோறும் அடுத்தடுத்தடுத்தடுத்தடுத்தத் தலைமுறைகளை கரப்பான் பூச்சிகள் உருவாக்கி, பெருக்கிக் கொண்டே செல்கின்றன. அதுமட்டுமின்றி, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அபரிமிதமாகப் பெருக்கிக் கொள்கின்றன. அந்தச் சக்தியானது மரபணுக்கள் வழியே அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. ஆக, ‘எங்க இனத்துக்கு அழிவே இல்லடா!’ என்ற ஆணவத்துடன் கரப்பான் பூச்சிகள் இப்புவியில் பெருகிக் கொண்டே செல்கின்றன. இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் உலகமே கரப்பான் பூச்சிகளால் நிரம்பியிருக்கும் என்றொரு தியரியும் கற்பனை செய்யப்படுவதுண்டு. அது நிஜமாவதற்கும் வாய்ப்பு உண்டு. உலகில் ‘பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்’ எல்லாம் கரப்பான் பூச்சியையே பெரிதும் நம்பிப் பிழைத்திருக்கின்றன. எவ்வளவு வீரியமான வேதி மருந்தைப் பிரயோகித்தாலும் ‘Better Luck Next Time’ என்று கரப்பான் பூச்சிகள், மனிதனை பாவமாகப் பார்த்துவிட்டு, உடலை சிலுப்பிக் கொண்டு நகர்கின்றன. அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஜெர்மன் கரப்பான் பூச்சிகள், பல்வேறு தலைமுறைகளாகப் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான, கடுமையான எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பதையும், அடுத்தடுத்த தலைமுறை கரப்பான் பூச்சிகளுக்கு இந்த எதிர்ப்பு சக்தியானது பல மடங்கு பெருகி வருவதையும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆக, புராதன பூச்சிக்கொல்லிகளும், வீரியமிக்க வேதிப்பொருள்களையும் தெளித்தால், ‘பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ என்று சாரலில் நனைவதுபோல அசால்ட்டாகக் கடந்துவிடுகின்றன கரப்பான் பூச்சிகள். ‘வருங்காலத்தில் வேதிப்பொருள்களைக் கொண்டு கரப்பான் பூச்சிகளைக் கொல்வது இயலாத காரியமாகிவிடும். அதைவிட பயங்கரமான ஒன்று தேவைப்படும்’ என்று ஆய்வாளர் மைக்கேல் ஸ்கார்ஃப் தெரிவித்திருக்கிறார். பயந்து கிடக்கிறது மனித குலம். காரணம், மனிதர்களுக்கு நோய் பரப்பும் சேவையைச் செய்வதிலும் கரப்பான் பூச்சி பிரதான இடம் வகிக்கிறது. ஆனால், எவ்வளவு அசுத்தமான இடத்தில் வாழ்ந்தாலும் கரப்பான்களுக்கு மட்டும் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை. இந்த இடத்தில் சூப்பர் ஸ்டார் கரப்பான் சொல்லும் பன்ச் : கிருமியெல்லாம் என்னை எதுவும் பண்ண முடியாது. ஏன்னா, நானே நடமாடும் கிருமிடா! (அவசியக் குறிப்பு : கரப்பான் பூச்சிகளில் சில இனங்கள் மட்டுமே நோய் பரப்பும் தன்மை கொண்டவை.) பாத்ரூமுக்குள் நுழையும்போதெல்லாம் கரப்பான் பூச்சி இருக்கிறதா, இல்லையா என்று பார்த்துப் பார்த்துப் பயந்தபடியே நுழைபவர்கள் இருக்கிறார்கள். கரப்பான் பூச்சியைக் கண்டால் ஹைடெசிபலில் கத்திக் கூச்சலிடுபவர்கள் இருக்கிறார்கள். கரப்பான் பூச்சி குறித்த பாடம் எடுக்க வேண்டியது இருந்ததால், தன் ஆசிரியர் பணியையே ஒருவர் விட்டிருக்கிறார். கரப்பான் பூச்சியைப் பார்க்கும்போதெல்லாம் ரத்த அழுத்தம் அதிகமாவது, கை, கால்கள் நடுங்குவது, பலத்த மூச்சு வாங்குவது, அதிகம் வியர்ப்பது, உறைந்து, செயலிழந்து நிற்பது, அதிகபட்சமாக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுவது வரை பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார். சிறு வயதிலேயே கரப்பான் பூச்சி மீதான ஆழமான பயம் மனத்தில் பதிந்துவிட்டால், அந்த மனிதர்களின் வாழ்க்கை முழுக்க இந்தச் சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். அதே மனிதர்கள் வாழும் உலகில்தான் ‘காக்ரோச் அறுபத்தைந்து’ கொறிப்பவர்களும் வாழ்கிறார்கள். எனில், அவர்களுக்கு கிருமி பயம் இல்லையா? https://aalumaisirpi.com/?p=6537

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
அந்த பெண் தவறு செய்தாரா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல. கணவனின் வாக்குமூலத்தின் பிரகாரம், அந்த பெண் செய்தது ஒரு தவறு என்றால், கணவன் செய்தது கொடூர குற்றச்செயல். (Crime) அந்த கொடூர க்கொலையை இனத்தின் கூட்டு உளவியல் கொண்டாடும் மனநிலை கேவலமானது என்பதே இங்கு முக்கியமானது இறந்த பின்னர் தலையை வெட்டி சென்ற கொடூர கொலை பெருமளவு மக்களால் கொண்டாடப்படுகிறது என்பதும் அந்த கொலையை செய்தவன் கதாநாயகனாக புகழப்படுவது என்பதும் ஒரு சைக்கோ மனநிலை. அந்த சமூகத்தில் வளர்ந்துவரும் குழந்தைகள் கொடூரக் கொலைகளை ஒரு முன்மாதிரியாக பார்கக தொடங்குவர். தலைவர் இருந்திருந்தால் எதை செய்திருப்பாரோ அதை அந்த வீரத்தமிழன் செய்து தமிழரின் வீரத்தை மானத்தை காப்பாற்றி உள்ளார் என்பதான பல பதிவுகள் சமூக வலைத்தளமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. இது எமது இனத்திற்கே அவமானம் இல்லையா? அதற்கு பல லைக்குகள் வேறை. இந்த கொலையை கண்டிபவர்களை நோக்கி உனது மனைவியும் இவளைப் போன்ற வே … தானே என்று அவர்களது குரல்களை அடக்கும் யுக்தி எவ்வளவு வக்கிரமானது. இதை ஒரிருவர் மட்டுமல செய்தால் கடந்து போகலாம். ஆனால் இவ்வாறானவர்களே எமது மக்களின் சமூக வலைதளங்களில் பெரும்பான்மையினர். அத்துடன் ஒருவர் தனது முகநூலில் கொலை செய்யப்பட்ட சுவர்ணலதாவின் இறுதிக்கிரிகைகளில் எடுக்கப்பட்ட உடலின் புகைப்படத்தை பகிர்ந்து தனது பிரதேசமான ஆலையடி வேம்பு பிரதேசத்திலும் விரைவில் இப்படியான ஒரு சம்பவம் நிகழவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ( இந்த முகநூல்பதிவின் Screenshot ல் அந்த பெண்ணின் உடலும் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று அவரால் சுட்டிக்காட்டப்பட்ட பெண்கள் பற்றிய சில தனிநபர் விபரங்களும் இருப்பதால் அதை இங்கு இணைப்பது உசிதமல்ல) அடுத்த கொலையை ஆவலுடன் எதிர்பார்ககும் அவருக்கும் பல லைக்குகள் வந்திருந்தன என்றால் இந்த சைக்கோ மனநிலை அதிகளவான எமது மக்களுக்கு இருப்பதானது இவர்களுக்கெல்லாம் சட்டவாக்க அதிகாரம் கிடைத்தால் ஷரியா சட்டம் போன்ற காட்டுமிரண்டி சட்டங்களை உருவாக்குவர் என்பதை காட்டுகிறது.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
ஏன் ? தன் ஆசைக்கு இணங்காத இந்த அப்பாவி பெண் மேல் பழி போடுவதற்காக இருக்கலாம் அல்லவா? ஆகவே எதையும் தீரவிசாரிக்காமல் சொல்ல முடியாது. இந்த கோணத்தில் பார்த்தாலும் நீங்கள் மேலே குறிப்பிட்ட மூன்று காரணங்களும் இதற்கு முரண்பட்ட சாட்சிகளாகவே அமைகின்றன. கணவர் ஊரில் இல்லை வயிற்றில் குழந்தை மற்றும் இருவரும் ஒன்றாக இருந்த படங்கள். எனவே அப்பாவி பெண் மேல் பழி போடுதல் என்பது லாம்.... என்பதற்கு கூட வரமறுக்கிறதே.....

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
இங்கேதான் ஆணவ கொலைகளின் (dis-honour killings) இன் இயங்கு விதியே இருக்கிறது. இதே கான்செப்ட்தான் தமிழ்நாட்டில் சாதி ஆணவ கொலைகளிலும் பயன்படுகிறது. ] விளக்கமாக நன்றாக சொன்னீர்கள். அதன் காரணமாகவே தமிழ் தலிபான்களும் கொலைகாரனை மிகவும் போற்றி கொண்டாடுகின்றர்கள். தமிழ் பெண்களுக்கு கடுமையான எச்சரிக்கை தெரிவிக்கபட்டுள்ளதாக அவர்கள் மகிச்சியும் ஆறுதலும் அடைந்து குதுகலிக்கின்றனர்.
Checked
Wed, 09/24/2025 - 02:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed