3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணே எனது பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும் மேக்கப்பு ஏறலாம் கெட்டப்பு மாறலாம் செட்டப்பு மாறாதம்மா……..ஹஹஹா….. ஆண் : உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா அதுக்கு வைத்தியம் உண்டா பெண் : போட்ட லவுக்க துடிக்குது அய்யா ஹா….இதுக்கு வைத்தியம் உண்டா ஆண் : கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு காரியம் மீறினா மெத்தை இருக்கு பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு கட்டிலோ ரெண்டுக்குச் சொல்லியிருக்கு ஆண் : எங்கெங்கு சுகம் என்று இலக்கணம் இருக்கு பெண் : நெத்தியில் புரளும் கத்தமுடி உனக்கு முத்தங்கள் தர ஒரு ஆசை ஆண் : கண்மணி உனது கால் கொலுசெடுத்து கைகளில் கட்டிக் கொள்ள ஆசை பெண் : என்னமோ மாறுது புத்தி உனக்கு என் குங்குமம் எங்கேயோ ஒட்டியிருக்கு ஆண் : டுர்ர்ர்ர்……ஆஹ்….ஹேய் ஹேய் ஹேய் ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தம் இருக்கு நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தம் இருக்கு பெண் : அப்பா…..என்றாலும் அதுக்கொரு இடம் பொருள் இருக்கு ....... ! --- சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா ---
3 months 2 weeks ago
இதை எங்களது வெளிநாடா கட்டி கொடுத்தது 😄 இப்போது தான் அறிகிறேன் ஒரு திராவிட பெண் தொழில்நுட்பவியளாளர் இதை வடிவமைத்ததாக சொன்னார்களே Chenab bridge: Narendra Modi ina...Chenab bridge: Narendra Modi inaugurates world's highest...The bridge will connect the valley region of Indian-administered Kashmir with the rest of the country by train.
3 months 2 weeks ago
மூடித்திருந்த இமையிரண்டும் ........ ! 😍
3 months 2 weeks ago
வணக்கம் அனைத்து உறவுகளுக்கும் ! மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. பல வருடங்களுக்கு முன்னர் இதே பெயரில் யாழில் குப்பை மொக்கை பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் நீண்ட காலமாக எந்த பதிவுகளும் இல்லாமல் களத்திற்கு வந்து வாசிப்பதோடு மட்டும் இருந்து விட்டேன். ஆனால் சமீப காலமாக மீண்டும் செயற்பட வேண்டும் என தோன்றியது. ஆனால் எனது கடவுச்சொல் மின் அந்ச்சல் முகவரி மற்ந்து விட்டது. ஆகவே பழைய பெயருக்கு பின் 25 இனை சேர்த்து இணைந்து விட்டேன். நன்றி
3 months 2 weeks ago
சென்னையில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் சாவில் திருப்பம் - மருத்துவர் கைதானது ஏன்? இன்றைய முக்கிய செய்தி பட மூலாதாரம்,TAMIL HINDU 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று, ஜூன் 8 அன்று, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம். சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் இறந்த வழக்கில் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு, இவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. "திருச்சியை சேர்ந்தவர் நித்யா (26). இவரும், கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனி 6-வது தெருவைச் சேர்ந்த பாலமுருகனும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கொடுங்கையூர் ஆசிரியர் காலனியில் வாடகை வீட்டில் இரண்டு மாதங்களாக தம்பதியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த நித்யாமர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 25 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நித்யா, சில மாதங்களுக்கு முன்பு வரை சைதாப்பேட்டை சடையப்பன் சந்து பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ்குமார் (27) என்பவரை காதலித்திருப்பதும், பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதும், சம்பவம் நடந்த அன்று சந்தோஷ்குமார் அங்கு வந்து சென்றிருப்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணை இதையடுத்து போலீஸார் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில், நித்யா கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து சென்றது குறித்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட ஆதாரங்களை காட்டி போலீஸார் விசாரணை நடத்தியதில், நித்யாவை கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக் கொண்டார். விசாரணையில் சந்தோஷ் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார், ஆலந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். சமூக ஊடகம் மூலமாக கடந்தாண்டு அவருக்கு நித்யா அறிமுகமாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "நித்யா, தான் மென்பொறியாளர். அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் என்று சொன்னதை, சந்தோஷ்குமார் நம்பியுள்ளார். காதலிக்க தொடங்கிய இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழ்ந்தனர். இதற்கிடையே நித்யாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், சந்தோஷ்குமார் பிரிந்து சென்றுள்ளார். ஆனால் நித்யா, இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை சந்தோஷ்குமாரிடம் காட்டி, சமூக ஊடகங்களில் அதை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி சந்தோஷ் குமாரிடம் இருந்து ரூ.8.50 லட்சம் பறித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று நித்யா, சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அன்று சந்தோஷ்குமார் சென்றதும், இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் நித்யா, மதுபோதையில் இருந்தபோது தனக்கு லேசாக தலைவலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனே சந்தோஷ்குமார், நித்யாவின் தலைக்கு மசாஜ் செய்வதுபோல நடித்து, அவரை கொலை செய்துள்ளார். பின்னர் அந்த வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தை நித்யாவின் கைவிரல் ரேகை மூலம் திறந்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளார். நகையை, தனது வீட்டின் எதிரே வசிக்கும் நண்பரிடம் கொடுத்துள்ளார். அந்த நகையையும் போலீஸார் தற்போது மீட்டுள்ளனர். இதையடுத்து, சந்தோஷ்குமாரை கைது செய்த போலீஸார், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என நீதிபதி கருத்து பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்: உயர் நீதிமன்றம் கருத்து தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "குவாரி உரிமம் முடிந்த நிலையிலும், குவாரியை வெட்டி எடுத்த கோவை குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 7 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குவாரி நடத்த உரிமையில்லை. சட்டவிரோதமாக எடுத்த கனிமத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அபராதம் விதிப்பை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவார்த்தி, "தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர். பேராசைக்காரர்களிடம் இருந்து பூமியைக் காக்கவே சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உள்ளது. குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள். குவாரி உரிமம் 2023ல் முடிந்ததால் அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இந்த வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. குவாரி மோசடியில் அதிகாரிகள் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும், "நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yxv3155kgo
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 08 JUN, 2025 | 10:11 AM யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில் மாணவன் வீடு சென்று கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் மாணவனை தண்டித்துள்ளார். அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தண்டனை வழங்கிய குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டவர் என அறியவருகிறது. குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும் பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து அருந்தியதாக அறிந்ததாக தெரிவித்தார். https://www.virakesari.lk/article/216898
3 months 2 weeks ago
இலங்கை வருகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் : யாழ்., முல்லைத்தீவுக்கு விஜயம் 08 JUN, 2025 | 09:39 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயமானது எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச தரப்புகளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் என பலதரப்பையும் சந்தித்து பொறுப்புக்கூறல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரடியாக நிலைமைகளை ஆராய உள்ளதுடன், உள்நாட்டு போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்திக்கவும், விஜயத்தின் இறுதியில் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட உள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறித்து அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது. குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் இலங்கைக்கு எதிராக வெளிக்கள சர்வதேச விசாரணை ஒன்றுக்கான தீர்மானமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட உள்ளது. பிரித்தானியா தலைமையில் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு அந்தஸ்து கொண்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை குறித்து வலுவானதொரு தீர்மானம் பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த நெருக்கடியை தவிர்க்கும் வகையில், நட்பு நாடுகள் பலவற்றுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்து செய்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல், போர் குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை கண்டறிதல் மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்தல் என்பன சர்வதேசத்தின் அழுத்தங்களாக உள்ளன. இதனை பின்னணியாக கொண்டு தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளக பொறிமுறை ஒன்றின் கீழ் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும் என்று 58 ஆவது அமர்வில் கலந்துக் கொண்டு குறிப்பிட்டிருந்தார். எனவே அரசாங்கத்தினால் ஜெனிவாவில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஆராயும் வகையிலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். பொறுப்புக்கூறலில் இலங்கையின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு செப்டம்பரில் எழுத்து மூல அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216893
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 7 ஜூன் 2025 ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது. கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன. ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர் என சில கதைகள் சொல்கின்றன. இந்த இரட்டைச் சகோதரர்களின் பெயர், புதியதொரு விஞ்ஞான முயற்சியில் உருவான ஓநாய் குட்டிகளுக்கு வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனமான டயர் ஓநாய் இனத்தின் டிஎன்ஏவைப் பயன்படுத்தி, மரபணு பொறியியல் நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ் இந்த ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது. குளோனிங் மற்றும் மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியடைந்த பிறகு, இது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இது அவசியமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. கொலோசல் பயோசயின்சஸின் தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர் பெத் ஷாபிரோ, 2015 இல் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் குளோனிங் பற்றி விவாதித்ததைக் குறிப்பிடுகிறார். அழிந்துபோன எந்த உயிரினத்தையும் குளோனிங் செய்ய முடியாது என அவர் அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புதிய சாதனை அவரது கருத்தை மாற்றியுள்ளதாக அவர் கூறுகிறார். 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் டயர் ஓநாய்கள் முக்கியக் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தன. டாக்டர் பெத் ஷாபிரோவின் கருத்துப்படி, டயர் ஓநாய் என்பது நரிகள் மற்றும் நாய்களுடன் தொடர்புடைய ஒரு இனமாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, டயர் ஓநாய் இனத்தின் ஆரம்பகால புதைபடிவம் சுமார் 2.5 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இந்த விலங்குகள் வட அமெரிக்காவில் காணப்பட்டன. கடந்த பனி யுகத்தில், அதாவது சுமார் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டயர் ஓநாய் அழிந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தின் கூட்டத்தில், எந்த உயிரினத்தை மீண்டும் உருவாக்கலாம் என்பது பற்றிய விவாதம் நடந்ததை டாக்டர் பெத் ஷாபிரோ நினைவு கூர்கிறார். உயிரினத்தை மீண்டும் உருவாக்குவதில், தொழில்நுட்பம், சூழலியல் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான சவால்களும் விவாதிக்கப்பட்டன. ரோமியோலஸ் மற்றும் ரெமுஸ் ஆகிய இரு டயர் ஓநாய் குட்டிகள், மரபணு மாற்ற செயல்முறை தொடங்கிய 18 மாதங்களுக்குள் பிறந்துவிட்டன. ஒரு உயிரினத்தின் அனைத்து டிஎன்ஏக்களின் முழுமையான தொகுப்பே மரபணுத் தொகுப்பு ஆகும். இதற்காக, கொலோசஸ் பயோசயின்சஸுக்கு டயர் ஓநாயின் டிஎன்ஏ தேவைப்பட்டது. "72,000 ஆண்டுகள் பழமையான டயர் ஓநாயின் மண்டை ஓடு மற்றும் 13,000 ஆண்டுகள் பழமையான பல் ஒன்றும் கிடைத்தது. அதிலிருந்து டிஎன்ஏ கிடைத்தது. அதைப் பயன்படுத்தி இந்த இரு டயர் ஓநாய்களின் முழுமையான மரபணு வரிசையை உருவாக்கினோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார். இந்த மரபணு வரிசை, டயர் ஓநாய் இனத்தின் நெருங்கிய இனமான சாம்பல் ஓநாய் இனத்துடன் ஒப்பிடப்பட்டது. பண்டைய டயர் ஓநாய் இனத்துடன் ஒத்த ஒரு இனத்தை உருவாக்க இந்த மரபணுவில் சில மாற்றங்களைச் செய்ததாக டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார். இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டத்தில், டயர் ஓநாயின் டிஎன்ஏவில் சாம்பல் ஓநாயின் ஜீன்கள் இணைக்கப்பட்டு கரு உருவாக்கப்பட்டது. கருவை வளர்க்க, வளர்ப்பு நாய்கள் வாடகைத் தாய்களாக பயன்படுத்தப்பட்டன. நாய்களின் கருப்பையில் கரு செலுத்தப்பட்டது. கருவுற்ற நாய்கள் அறுவை சிகிச்சை மூலம் ஓநாய்களை பிரசவித்தன. ஆனால், ஏன் சாம்பல் ஓநாய்களை வாடகைத் தாயாக பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறதா? நாய்களை, வாடகைத் தாய்களாகப் பயன்படுத்துவதில் தங்களுக்கு அதிக அனுபவமும் அறிவும் இருப்பதால் இது செய்யப்பட்டது என்று கூறும் டாக்டர் பெத் ஷாபிரோ, நாய்கள் உண்மையில் சாம்பல் ஓநாய்களின் மற்றொரு வடிவம் என்று சொல்கிறார். கடந்த காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் பட மூலாதாரம்,COLOSSAL BIOSCIENCES இப்போது, இந்த 'டயர் ஓநாய் குட்டிகள்' உண்மையில் என்ன என்றும் என்னவாக இல்லை என்றும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. "அவை டயர் ஓநாய்கள் இல்லை என்பது உண்மைதான். நாங்கள் அவற்றை டயர் ஓநாய்கள் என்று அழைக்கிறோம், ஆனால் நீங்கள் அவற்றை Proxy Direwolf அல்லது Colossal Direwolf என்றும் அழைக்கலாம். நாங்கள் அவற்றுடன் சாம்பல் ஓநாயின் பண்புகளையும் சேர்த்துள்ளோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார். குளோனிங் தொழில்நுட்பத்தில் இரண்டு ஓநாய் குட்டிகள் அக்டோபர் 2024 இல் பிறந்தன, மூன்றாவது இந்த ஆண்டு ஜனவரியில் பிறந்தது. நிறுவனம் அவற்றை காட்டுக்குள் விட விரும்பவில்லை என்றும், இந்த குட்டிகள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வைத்து பராமரிக்கப்படும் என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார். இனப்பெருக்கம் செய்வதற்கு இவற்றைப் பயன்படுத்த தனது நிறுவனம் விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த விலங்குகள் பாதுகாக்கப்பட்ட சூழலில் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதே நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் அவர் கூறுக்றார். இந்த செயல்முறையைப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தவே நிறுவனம் விரும்புகிறது. பல அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES உயிரினங்கள் எவ்வாறு அழிந்து போகின்றன? இங்கிலாந்தின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் பேராசிரியர் டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கூறுகையில், வாழ்க்கையின் வரலாற்றைப் பார்த்தால், 3.7 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் இருந்த உயிரினங்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிந்துவிட்டன. "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பூமியில் இருக்கும் 48 சதவீத விலங்கு இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் பொருள், இன்று பாதுகாப்பாக இருக்கும் அந்த உயிரினங்கள் அருகிக் கொண்டே வந்தால் சில தசாப்தங்களில் அழிந்துவிடும்." அழிவு என்பது பகுதியளவு நிகழ்வாகவும் இருக்கலாம், அதாவது ஒரு இனம் உலகின் ஒரு பகுதியில் அழிந்துவிடும், ஆனால் மற்றொரு இடத்தில் உயிர்வாழலாம். இருப்பினும் அந்த இனம் எல்லா இடங்களிலும் அழிந்து போகும்போது, அந்த உயிரினம் அழிந்துவிடும். உயிரினங்கள் அழிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ சொல்கிறார். உதாரணமாக, வேட்டையாடுதல், அல்லது அவற்றை அழிக்கும் உயிரினங்களை அவற்றின் பிரதேசத்தில் குடியேற்றுதல் மற்றும் அந்த இனங்களின் மெதுவான இனப்பெருக்க விகிதம் என ஒரு உயிரினம் அழிவதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். பூமியில் உயிரினங்கள் அழிவதற்கு வழிவகுத்த பெரிய அளவிலான ஐந்து சம்பவங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது, வெகுஜன அழிவுக்கு (பெரும்பாலான உயிரினங்களின் அழிவுக்கு) காரணமான சம்பவங்கள் இவை. "இதற்கு முன்னர் நடந்த ஐந்து பேரழிவு நிகழ்வுகள், எரிமலை வெடிப்புகள், பூமியைத் தாக்கும் விண்கற்கள் அல்லது பிற இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, மெக்சிகோவை விண்கல் தாக்கியதால் டைனோசர்கள் அழிந்தன" என்று டாக்டர் டேனியல் பின்செரா டோனோசோ கூறினார். அந்த சம்பவம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதேபோன்ற நிகழ்வுகள் 205 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் 90 சதவீத உயிரினங்களை அழித்தன. இந்த ஐந்து பேரழிவு சம்பவங்களுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் தற்போது ஆறாவது பேரழிவு நம்மை நெருங்கிவிட்டது. டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோவின் கூற்றுப்படி, பூமியில் உள்ள உயிரினங்களில் குறைந்தது 70 சதவீதமாவது அழிக்கப்படும்போதுதான் வெகுஜன அழிவு ஏற்படுகிறது. அழிந்த விலங்குகளை மீட்டல் பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்றும், ஆனால் பல்லுயிர் பெருக்கம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், இப்போது நாம் பெருமளவில் அழிந்து வரும் காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார். வெகுஜன அழிவுக்குப் பிறகு, பூமியில் வாழ்க்கை மாறும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் எந்த இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன? பல பெரிய பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கருதுகிறார். அவற்றில் திமிங்கலங்களில் சில வகை மற்றும் பெரிய ஆப்பிரிக்க பாலூட்டிகள் அடங்கும். ஆனால் தவளை இனங்களுக்குத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறுகிறார். காலநிலை மாற்றம், நில இழப்பு மற்றும் நோய்கள் காரணமாக, தவளைகள் போன்ற நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் பிற உயிரினங்களை விட மிக வேகமாக அழிந்து வருவதாக அவர் கூறுகிறார். அவற்றின் பல இனங்கள் அழிந்துவிட்டன, மேலும் பல அழிவின் விளிம்பில் உள்ளன. ஒரு இனத்தின் அழிவு என்பது சங்கிலித் தொடர் எதிர்வினையைத் தொடங்குகிறது. அத்துடன், அவற்றுடன் தொடர்புடைய உயிரினங்கள் பலவும் அழிந்து போகத் தொடங்குகின்றன. இதைப் பல பாகங்களைக் கொண்ட ஒரு காரின் எஞ்சினுடன் ஒப்பிடலாம். எஞ்சினில் இருந்து ஒரு சிறிய திருகு கழன்று விழுந்தால், முழு எஞ்சினுமே வேலை செய்வதை நிறுத்திவிடும். இதைப் போலவே, ஒரு உயிரினம் அருகும்போதும், அழியும்போதும் அதன் சங்கிலித் தொடர் விளைவாக பல உயிரினங்களின் இருப்பும் பாதிக்கப்படும். அழிந்துபோன உயிரினங்களின் மீட்சி மரபணு எடிட்டிங் குறித்த புத்தகங்களை எழுதிய அறிவியல் பத்திரிகையாளரான டோரில் கோர்ன்ஃபெல்ட், மரபணு திருத்தம் மூலம் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் குறைந்தது பத்து திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன மாமூத் யானை போன்ற விலங்குகளை மீண்டும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன அல்லது இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளை உருவாக்கும் சில திட்டங்களும் தற்போது செயலில் உள்ளன. "மீண்டும் விலங்குகள் உருவாக்கப்படும் முயற்சிகளால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, மாமூத், டயர் ஓநாய், டோடோ பறவை மற்றும் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் வட வெள்ளை காண்டாமிருகம் ஆகியவற்றைச் சொல்லலாம். ஆனால் அறிவியலின் உதவியுடன், ஒரு லட்சம் வெள்ளை காண்டாமிருகங்கள் உருவாக்கப்பட்டு அவை காட்டில் விடப்பட்டால், வேட்டைக்காரர்கள் ஒரே வாரத்தில் அவற்றைக் கொன்றுவிடுவார்கள். உண்மையில், இதுபோன்ற விலங்குகளின் அழிவுக்கு காரணம் வேட்டை தான். இந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை." அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் அசாத்தியங்களும் சாத்தியமாகின்றன என்றாலும், வேலை எளிதானது அல்ல. பனியில் உறைந்து இருக்கும் மாமூத் ஒன்று கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அதன் டிஎன்ஏ கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் டோரில் கோர்ன்ஃபெல்ட் கூறுகிறார். "கடுமையாக சேதமடைந்துள்ள டிஎன்ஏவை மறுகட்டமைப்பது என்பது ஆயிரக்கணக்கான கிழிந்த பக்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு நாவலைப் படிக்க முயற்சிப்பது போன்றதாகும்" என்று அவர் விளக்குகிறார். 1980களில், டிஎன்ஏவை மறுகட்டமைத்து ஆய்வு செய்யக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. 1990களில், குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட டோலி என்ற செம்மறி ஆடு பிறந்தது மிகப் பெரிய சாதனையாக நிரூபிக்கப்பட்டது. அதாவது ஒரு உயிரினத்தின் சரியான நகல் உருவாக்கப்பட்டது. இதைச் செய்வதற்கு உயிருள்ள செல்கள் தேவை. 2012 ஆம் ஆண்டில், மரபணு திருத்தத்திற்கான ஒரு புதிய கருவி 'CRISPER Cas9' கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உதவியுடன், கொலோசல் பயோசயின்சஸ் டயர் ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது. என்னென்ன சந்தேகங்கள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் கருவியின் காரணமாக, மரபணு திருத்தம் மிகவும் துல்லியமானது, புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமானது என்று கூறும் டோரில் கோர்ன்ஃபெல்ட், 'CRISPR Cas 9' விவசாய அறிவியலிலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார். இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் முயற்சிகளால் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் கனவு நனவாகும். ஆனால் அழிந்துபோன விலங்குகளை மீண்டும் உருவாக்க முயற்சிப்பது ஏன்? "இதற்கு முக்கிய காரணம் அறிவியல் ஆர்வம் என்று நினைக்கிறேன். விஷயங்களைப் பரிசோதித்து உலகை நன்கு புரிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக, உலகில் பல நல்ல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை நமக்கு பயனளித்துள்ளதும் கண்கூடான விஷயம் தான். ஆனால் பல நெறிமுறை கேள்விகளும் இந்த சோதனைகளுடன் தொடர்புடையவை" என்று டோரில் கோர்ன்ஃபெல்ட் கருதுகிறார். அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதால் என்னென்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள லூயிஸ் & கிளார்க் கல்லூரியின் தத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜே. ஓடென்போ, மரபணு திருத்தம் நிச்சயமாக ஒரு முக்கியமான தொழில்நுட்பம் என்று கூறுகிறார், ஆனால் அழிவு நீக்கம் செய்வதன் மூலம், அதாவது அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம், நாம் கடவுளாக மாற முயற்சிக்கவில்லையா? என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார். "தத்துவார்த்த ரீதியில், அதன் நன்மைகள், தீமைகளை விட அதிகமாக உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும். மேலும், அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வைக்கப்படும் வாதங்களை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதில் நெறிமுறை சிக்கல்களும் உள்ளன. இதில் பக்க விளைவுகளும் உள்ளன" என்று அவர் கூறுகிறார். இந்த விஷயத்தில் வெளிப்படுத்தப்படும் முக்கியமான கவலை என்னவென்றால், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவு குறையக்கூடும். "ஒரு இனம் அழிந்துவிட்டாலும், அதை மீண்டும் உருவாக்க முடியும் என்று மக்கள் நம்பத் தொடங்குவார்கள், இதுவொரு கவலை. அழிவு என்பது நிரந்தரமானது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கருத்து மாறக்கூடும். எனவே அழிவு நிலையில் இருக்கும் உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் உணரத் தொடங்குவார்கள்" என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார். எந்த இனத்தை மீண்டும் உலகில் அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானிப்பதும் முக்கியமான கேள்வி. மாமூத் போன்ற உயிரினங்களை மீண்டும் உருவாக்கலாம் என்றால் அதற்கான காரணம், அவை பனி உருகுவதைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்பதாக இருக்கும் என டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார். ஆனால் அழிவு தொடர்பான அடுத்த கேள்வி என்னவென்றால், மீண்டும் உருவாக்கப்படும் விலங்குகளின் இனங்கள் அசலானதாக இருக்காது, மாறாக அவற்றை ஒத்தது போலவே இருக்கும். இந்த நிலையில் உயிரினங்களை மீட்டெடுப்பதன் அடிப்படை நோக்கம் நிறைவடையாது என்று டாக்டர் ஜே. ஓடென்போ நம்புகிறார். மேலும், அத்தகைய உயிரினங்களின் வாழ்க்கையும் தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். மரபணு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த உயிரினங்கள் அசல் உயிரினங்களைப் போன்றவையா இல்லையா என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறினார். அவை பாதுகாக்கப்பட்ட கூண்டுகளில் வைக்கப்படும். இனப்பெருக்கம் செய்ய முடியாவிட்டால், அவை மீண்டும் அழிந்துவிடும். "இந்தத் திட்டம் பாதுகாப்பிற்காக அல்ல, ஆர்வத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்பதையே இது குறிக்கிறது. இந்தப் பணியை மேற்கொள்வது தனியார் நிறுவனங்கள் என்பதால், பிற விஞ்ஞானிகளால் இதைப் பார்க்க முடியவில்லை." இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொலோசல் பயோசயின்சஸ், டயர் ஓநாய் மீளுருவாக்கம் பரிசோதனை குறித்த தனது ஆராய்ச்சியை மதிப்பாய்வுக்காக ஒரு கல்வி இதழில் சமர்ப்பித்ததாகக் கூறியது. ஆனால் அது வெளியாக பல மாதங்கள் ஆகும். சரி, உயிரினங்களை மீட்டெடுப்பது சுலபமானதா? அவை அழிந்து போன உயிரினங்களாவே இருக்குமா? இந்தக் கேள்விக்கான பதில் இல்லை என்பதாகவே இருக்கும். தற்போது, Colossal Biosciences உருவாக்கி வளர்த்துவரும் ஓநாய்கள் முழுமையான டயர் ஓநாய்கள் அல்ல. இருப்பினும், இது அழியாத்தன்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் நிச்சயமாக முக்கியமானது என்று சொல்லலாம். ஒருவேளை, இதுவும் பாதுகாப்பிற்கான ஒரு புதிய ஊடகமாக மாறக்கூடும். ஆனால் அழிந்துபோன உயிரினம் ஒன்றை மீண்டும் உருவாக்குவதற்கு கடின உழைப்பும் தொழில்நுட்பமும் மட்டுமல்ல அதிக பணமும் தேவை. அதுமட்டுமல்ல, சரியா தவறா என பல தார்மீகப் பிரச்னைகளும் இத்துடன் இணைத்து பார்க்கப்படும். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றும், ஆனால் இந்த அறிவியலைப் பாதுகாப்போடு பயன்படுத்துவது உலகில் பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிக்க உதவும் என்றும் டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார். 200 பாம்புக்கடி வாங்கியவரின் உடலில் இருந்து அபூர்வ 'விஷமுறிவு மருந்து' கண்டுபிடிப்பு ராஜநாகம் தீண்டி உயிர் பிழைத்தவர் செய்த ஆய்வில் உடைபட்ட 180 ஆண்டு ரகசியம் பள்ளி வகுப்பறையில் சீறிய 13 அடி நீள ராஜநாகம் - என்ன நடந்தது? - காணொளி மனிதர்களைப் போன்றே செடிகளைப் பயன்படுத்தி முதலுதவி செய்யும் சிம்பன்சிகள் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39xjl8zk03o
3 months 2 weeks ago
Published By: RAJEEBAN 08 JUN, 2025 | 11:17 AM அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை பெருமளவு குடியேற்றவாசிகள் கைதுசெய்ய்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தேசிய காவல்படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார். அமெரிக்காவின் சட்ட அமுலாக்கல் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை சனிக்கிழமை பாரமவுண்ட் நகரில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் வெடித்தது என லொஸ் ஏஞ்சல்ஸின் ஷெரீவ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பராமன்ட் பவுல்வார்டின் ஒரு பகுதியில் மதியம் 12.42 மணியளவில் பெருமளவானவர்கள் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள ஷெரீவ் ரொபேர்ட் லூனா, இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதனை சட்டவிரோதமான ஒன்றுகூடல் என அறிவித்து அனைவரையும் அமைதியாக கலைந்துபோகுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் உயிராபத்தை ஏற்படுத்தாத வெடிபொருட்களை பயன்படுத்தி அவர்களை கலைக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் காயவிபரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பாரமவுண்டின் வீதிகளில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. சிலர் சட்டஅமுலாக்கல் பிரிவினரின் பேருந்துகளில் ஏற முயன்றனர், சிலர் கற்களையும் ஏனைய பொருட்களையும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் வாகனங்களை நோக்கி எறிந்தனர் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது. பாரமவுண்டிலும் கொம்டன் நகாலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கார் ஒன்றின் அருகில் கூடிநின்று அதனை தீயிட்டு கொழுத்தினார்க்ள் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் தூரத்திலிருந்து பார்த்தனர், அவர்களில் சிலர் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கான உடைகளை அணிந்திருந்தனர், அந்த கார் தீப்பிடித்த பத்து நிமிடங்களிற்கு பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன என சிபிஎஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை குடியேற்றவாசிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு வெளியே மீண்டும் சிறிய கூட்டமொன்று கூடியது, 8.30 மணிவரை அவர்கள் அங்கேயே நின்றனர், பின்னர் திடீரென அங்கு தோன்றிய சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுபிரயோகத்தில் ஈடுபட்டனர் என சிபிஎஸ் நியுஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/216911
3 months 2 weeks ago
கடந்த வியாழக்கிழமை முதல் மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானம்
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து ஏன் இன்னும் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கேள்வி
தொழிலாளர் உரிமைகளை மீறும் புதிய சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வர அரசாங்கம் திட்டம் – முன்னிலை சோஷலிசக் கட்சி குற்றச்சாட்டு
தையிட்டி விகாரை விவகாரம்: காணி உரிமையை தடுக்கும் வகையில் திட்டமிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
3 months 2 weeks ago
திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்! June 8, 2025 9:08 am அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கம் தயாரித்த நகல் வரைபுகள் மற்றும் 2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கம் தயாரித்த வரைபுகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு புதிய அரசியல் யாப்புக்கான நகல் தயாரிக்கப்படவுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான சட்டத்தரணிகள் குழு புதிய யாப்புக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் பணிகள் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி பிரதமர் தலைமையிலான ஆட்சி முறையை உருவாக்க வேண்டும் என்ற யோசனைகளும் உண்டு. 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களும் அடுத்த நான்கு வருடங்களுக்கு நடைபெறக்கூடிய வாய்ப்புகள் இல்லை. மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு அவசியமில்லை என ஜனாதிபதி அநுர கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மாகாண சபைத் தேர்தலை மேலும் பிற்போடுதல் மற்றும் புதிய அரசியல் யாப்புக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்தல் மாத்திரமே தற்போதைய திட்டமாகவுள்ளது. இப்பின்புலத்தில் புதிய யாப்பு தயாரிப்பு விஷயத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக சுமந்திரன் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும், புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புக்கு அவர் ஒத்தழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாகவும், நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார சக உறுப்பினர் ஒருவரிடம் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். எந்த அடிப்படையில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று நீதியமைச்சா் எதுவும் கூறவில்லை. ஆனால், சத்தியலிங்கம் மிக விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதால், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சுமந்திரன் நியமிக்கப்படலாம் என்று தமிழரசுக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. இப்பின்னணியில்தான் உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் விடயத்தில் கஜேந்திரகுமார் அணியுடன் கூட்டு சேராமல், ஈபிடிபியுடன் கூட்டுச் சேர்வதற்கான காய் நகர்த்தல் நடத்திருக்கிறது போல் தெரிகிறது. அதேநேரம், மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின் பிரகாரமே ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஈபிடிபியை ஆட்சி அமைக்குமாறு வலியுறுத்துமாறு, மகிந்த ராஜபக்ச மூத்த பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் கூறியதாகவும், அத் தகவலை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அந்த பத்திரிகை ஆசிரியர் தொலைபேசியில் எடுத்துச் சொன்னதாகவும் கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன. சுமந்திரன் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் ஏற்கனவே நல்ல உறவில் இருக்கும் ஒருவர். அதன் காரண – காரியமாக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தமிழரசுக் கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதை மகிந்த ராஜபக்ச, கொழும்பு மைய அரசியல் நோக்கில் விரும்பியிருக்கலாம். சிங்கள அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, அவர்களிடையே கட்சி அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், வடக்கு கிழக்கு ஈழத்தமிழர்களைக் கையாளும் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று செயற்பட்டு வருகின்றனர் என்பது பொதுவான உண்மை. அந்த அடிப்படையில் அநுரகுமார திஸாநாயக்க – சுமந்திரன் ஆகியோர் ஊடான தொடர்புகள் – காய்நகர்த்தல்கள் தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக தமக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லாமலில்லை. கட்சி அரசியல் வேறுபாடுகள் இன்றி அரசியல் தலைவர்களுக்குரிய சட்ட உதவிகளை சுமந்திரன் கடந்த காலங்களிலும் மேற்கொண்டிருந்தார் என்ற பின்னணியில் இந்த நகர்வையும் அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில், கஜேந்திரகுமார் மேற்கொண்ட முயற்சி, எந்தளவு தூரம் நிலையாக இருக்கும் என்ற கேள்விகள் உண்டு. ஆனாலும், 13 பற்றிய பேச்சுக்கள் தற்போதைக்கு எழக் கூடிய நிலைமை இல்லாத ஒரு பின்னணியில், முழுமையான சுயாட்சிக் கட்டமைப்புக்கான ஏற்பாடுகளை, புதிதாக அமைத்த கூட்டின் மூலம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. குறிப்பாக இன அழிப்பு பற்றிய சர்வதேச நீதிக்குரிய ஏற்பாடுகளையும் துரிதமாகக் கையாள வேண்டிய காலம் இது. ஆகவே, கஜேந்திரகுமாரின் அடுத்த கட்ட செயல்பாடு இந்த அடிப்படையில் அமையுமா அல்லது வெறுமனே உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான ஒரு கூட்டா என்பதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும். ஏனெனில், சங்கு அணி உறுப்பினர்கள் சிலரின் கடந்த கால செயற்பாடுகள் கொழும்பு மைய அரசியலுக்குள் பழக்கப்பட்டவை. 13 இல்லாவிட்டாலும், ஒற்றையாட்சியை ஏற்கும் பண்பு சங்கு அணியில் சிலரிடம் தொடர்ச்சியாக நிலவுகின்றது. இப் பின்புலத்தில் மிக இறுக்கமான ஏற்க முடியாத மனக் கசப்புகளோடுதான் கஜேந்திரகுமார், சங்கு அணியுடன் ஒப்பந்தம் செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் கசப்புகள் – சகிப்புத் தன்மைகள் – நெருக்கடிகள் – கடும் விமர்சனங்கள் போன்றவற்றை கஜேந்திரகுமார் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தலைமை ஒன்றிடம் இருக்க வேண்டிய பண்பு இதுதான். அதேநேரம், யாழ்ப்பாணத்தைக் கடந்து வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற இயங்கு நிலைக்கு கஜேந்திரகுமார் புத்துயிர் கொடுக்கவும் வேண்டும். சங்கு அணியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காலத்துக்குப் பொருத்தம் என்று கூறினாலும், ”சுயநிர்ணய உரிமை” – ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை” என்ற பிரதான இரு உள்ளடக்கங்கள், வெறுமனே பேச்சுடன் மாத்திரம் நின்றுவிடுகின்றதா என்ற கேள்விகள் இல்லாமலில்லை. ஆகவே, இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய அல்லது மேலும் செய்து காண்பிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உரியது. அது இலகுவான காரியம் அல்ல. ஆனாலும், 2009 இற்குப் பின்னர், அதாவது கடந்த பதினைந்து வருடங்களின் பின்னரான சூழலில், தேர்தல் அரசியலை இடது கையாளும் விடுதலைச் செயற்பாட்டு அரசியலை வலது கையாளும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு உண்டு. ஏனெனில், புதிய அரசியல் யாப்பு என்ற கோசத்துடன் ஈழத் தமிழர் விவகாரம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து அடுத்த ஆண்டு முற்றாக நீக்கம் செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் கசிந்துள்ளன. சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது கட்சி அரசியலுக்கு அப்பால் ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு புள்ளியில் நின்று சர்வதேச அரங்கில் கையாண்ட பயன்கள் தான் இவை. கட்சி அரசியலைக் கடந்து தமிழர் விவகாரத்தைக் கையாள ”வெளியுறவுக் கொள்கை” – ”சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களையும் சிங்கள தலைவர்கள் வகுத்திருக்கின்றனர். அவர்களின் பிரதான வகிபாகம் அதுதான். ஆகவே அரசு அற்ற சமூகம் என்ற நிலையில், ”வலுவான கட்டமைப்புடன் கூடிய வெளியுறவுக் கொள்கை” – சர்வதேச இராஜதந்திர சேவை” என்ற இரு பிரதான மையங்களைத் தமிழ்த் தரப்பு உருவாக்க வேண்டும். இப் பொறுப்பு கஜேந்திரகுமாருக்கு மாத்திரமல்ல, அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள அணிக்கும் உண்டு. கடந்த கால கொழும்பு மைய அரசியலை கைவிட்டு, அதாவது இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட அரசியல் வழி முறைகளில் கவனம் செலுத்தாமல், 1985 ஆம் ஆண்டு திம்புக் கோட்பாட்டு அடிப்படையிலான கட்டமைப்புக்கு வழி சமைக்க வேண்டும். பூட்டான் (Bhutan) தலைநகர் திம்புவில் இடம்பெற்ற பேச்சில் விடுதலைப் புலிகள், ஈபிஆர்எல்எப். புளொட் ரெலோ உள்ளிட்ட இயக்கங்கள் பங்குபற்றியிருந்தன. அங்கு ஏற்பட்ட இணக்கத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆகவே சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பகிரங்கமாகத் தங்கள் நிலைப்பபாட்டை அறிவிக்க வேண்டும். அருந்தவபாலன், ஐங்கரநேசன் ஆகியோர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவையாக ஒன்றிணைந்துள்ள பின்னணியில், இச் செயற்பாட்டை நகர்த்த முடியும் என்ற நம்பிக்கைகள் மக்களிடம் உண்டு. அ.நிக்ஸன்- https://oruvan.com/sumanthiran-will-cooperate-with-the-new-constitution/
3 months 2 weeks ago
சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல் June 8, 2025 10:13 am மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கங்களின் போது சபாநாயகராகவும், சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு நடத்தும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2022 மே ஒன்பதாம் திகதி நடந்த கலவரத்தில் திஸ்ஸமஹாராம, மாகம பகுதியில் உள்ள தனது சொத்து சேதமடைந்ததாகக் கூறி அரசாங்கத்திடம் இருந்து 15.2 மில்லியன் ரூபா இழப்பீடு பெற்ற விவகாரத்தில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. விசாரணைகளில் அந்த சொத்து அவருக்கு சொந்தமானது இல்லை எனவும், அங்கு வசிப்பிட கட்டமைப்பு எதுவும் இல்லை எனவும், வெறுமனே ஒரு நெல் சேமிப்பு களஞ்சியம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. சொத்து தனது கட்டுப்பாட்டில் உள்ளதாக ராஜபக்ஸ சத்தியப்பிரமாணம் செய்து அளித்திருந்த போதிலும், மேற்கொண்ட விசாரணைகளில் அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2023 ஜூலை மாதம் வெளியான மதிப்பீட்டு அறிக்கையில், அந்த இடத்தில் 14.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு இருந்ததாகவும், நெல் களஞ்சியத்துக்கு 222,600 ரூபா சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், பொது நிர்வாக அமைச்சு, தங்கள் அதிகார வரம்பில் இந்த இழப்பீடு வழங்கப்பட முடியாது என தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது. இருப்பினும், முழு தொகையும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், குறித்த மோசடி குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சமல் ராஜபக்ச விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த நிதியை செலுத்துவது தொடர்பான சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரச அதிகாரிகள் மீது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/chamal-rajapaksa-may-be-arrested-at-any-time-state-media-reports/
3 months 2 weeks ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர் 08 Jun, 2025 | 10:13 AM (நா.தனுஜா) வட, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ்த்தேசிய கட்சிகளின் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அவற்றின் நிலைவரம் என்பன தொடர்பில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர், தாம் அம்மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அவ்வாறான திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் இருப்பின், அதனைத் தம்மிடம் வழங்குமாறும், அதுபற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் பின்னரான தமிழ்த்தேசிய கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய உயர்ஸ்தானிகருக்குப் பதிலளித்த சுமந்திரன், ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றத்திலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத் தாம் முன்வைத்ததாகவும், இருப்பினும் அதற்கு முரணாக இரு கட்சிகள் கூட்டணி அமைத்து தம்வசமே அதிக ஆசனங்கள் இருப்பதுபோல் காண்பித்துக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒரே கொள்கையையே கொண்டிருப்பதாகவும், அணுகுமுறைகளே மாறுபட்டவையாகக் காணப்படுவதாகவும் தெரிவித்த சுமந்திரன், இருப்பினும் அதனை கஜேந்திரகுமார் மறுப்பதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும் விசனம் வெளியிட்டார். அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில் 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் தயாரித்த அரசியலமைப்பு வரைபு சிறந்த பல கூறுகளைக் கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எடுத்துரைத்த சுமந்திரன், அதிலுள்ள குறைபாடுகள் பற்றி சகலரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதனை முற்றாக நிராகரிக்கவேண்டும் என கஜேந்திரகுமார் கூறிவருவது ஏற்புடையதன்று என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/216895
3 months 2 weeks ago
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன் இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அனுசரணையாளர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இவ்வைத்தியசாலை, இன்று வரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப்போராடும் வாழ்வதார சிகிச்சையைக் வழங்கி வருகிறது. ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர் மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சக போக்குகள் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது, பல ஆண்டுகளாக புற்றுநோயாளர்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்திக்கு எதிராக நடக்கும் அவதூறு பரப்பல், சமூக மேடைகளிலான வசைபாடுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை எமது சங்கம் கடுமையாகக் கண்டிக்கின்றது. அவரை மனதளவில் பாதித்து, சேவையில் இருந்து பின்வாங்க வைக்கவே இது மேற்கொள்ளப்படுவதாக எமது சங்கம் தெளிவாக அறிந்து வருகின்றது. இச்சவாலுக்கு உரிய சூழ்நிலை ஒரு சில தனிநபர்களின் துயரம் மட்டுமல்ல அதுவே நோயாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் சமூக மருத்துவப் பின்னடைவுகளுக்கு இடமளிக்கும் நிலை ஆகும். இந்நிலையில், வைத்திய நிபுணர்களுக்கு எதிரான இத்தகைய களங்கப்படுத்தல் ஆனது, ஏழை நோயாளர்களின் உரிமைகளை நேரடியாக தாக்குகின்றது. அத்துடன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் சேவைகள் குறைக்கப்பட்டு, அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் சட்டவிரோத ஒழுங்குகள் செயல்படுவதாகவும், அவை உறுதியான தண்டனைவிதிகள் இன்றி தொடர்வதாகவும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன் , உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனவே, புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நிர்வாக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அவசியமானால் தீவிரப்படுத்தப்படும். நமது நோக்கம் உன்னத நோக்கம் கொண்ட தனி நபர்களை காப்பது மட்டுமல்ல நோயாளியின் உரிமைகள், வாழ்க்கை தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmbn64q8c01joqpbs833pk06z
3 months 2 weeks ago
புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன் கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டும் அப்படித்தான். அதுவும் ஒரு சமயோசிதக் கூட்டுத்தான். தந்திரோபாயக் கூட்டுத்தான்.எனினும், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில், பொது எதிரிக்கு எதிராக ஆகக்கூடிய பட்ஷம் ஒரு தேசமாகத் திரள்வது என்ற அடிப்படையில் அந்த கூட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள்.அதேசமயம் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள். எனவே நீதிக்கான போராட்டத்தில் யாரைப் பிரதான குற்றவாளியாகக் காணப் போகிறோம்; யாருக்கு எதிராக அணி திரளப் போகிறோம் என்பதில் தமிழ் மக்களிடம் மிகத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.அதாவது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வது.எங்களுக்குள் ஒருவர் மற்றவரை குற்றஞ்சாட்டி நாங்கள் பல துண்டுகளாகச் சிதறிப் போவதா? அல்லது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வதா? என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம். இந்த அடிப்படையில் பார்த்தால் கஜேந்திரக்குமார் டிரிஎன்ஏயோடு கூட்டுக்குப் போவது என்று முடிவெடுத்தது ஒரு திருப்பகரமான மாற்றம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தியாகி-துரோகி வாய்ப்பாட்டுக்கு வெளியே அந்தக் கூட்டு உருவாகியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகால வாய்ப்பாட்டுக்கு வெளியே முன்னணி வந்திருக்கிறது.அது இரண்டு தரப்புக்கும் மெய்யான ஒரு பண்புருமாற்றமாக இருந்தால் கூட்டு நிலைக்கும். அந்தக் கூட்டின் மூலம் அவர்கள் பின்வரும் நன்மைகளை அடைய முயற்சிக்கலாம். முதலாவதாக, பொது எதிரிக்கு எதிராக ஒப்பீட்டளவில் பெரிய கூட்டு. இரண்டாவதாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளை உருவாக்கலாம். மூன்றாவதாக, தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியைத் தனிமைப்படுத்தலாம். நான்காவதாக, மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு பலமான முன்னணியை உருவாக்கலாம். ஐந்தாவதாக, கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தலாம். டிரிஎன்ஏயைப் பொறுத்த்தவரை அவர்கள் யாரோடாவது கூட்டுச் சேர வேண்டும். தனியாக நின்று பிடிக்க முடியாது. தமிழரசுக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தால் மாகாண சபையிலும் அதற்குப் பின் வரக்கூடிய தேர்தல்களிலும் அதிகரித்த வெற்றி வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கக்கூடும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறான வெற்றி வாய்ப்புகளை இனிமேல்தான் நிரூபிக்க வேண்டாம். ஆனால் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது தொடர்பாக தமிழரசுக் கட்சியோடு அவர்கள் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளில் திருப்தியான பெறுபேறுகள் இல்லாத ஒரு பின்னணிக்குள் அவர்கள் முன்னணியை நோக்கி வந்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சி தன்னை முதன்மை கட்சியாகவும் பெரிய கட்சியாகவும் கருதி, தனது மேலாண்மையை வலியுறுத்த முற்பட்டதன் விளைவு இது. புதிய கூட்டை எப்படி உளவியல் ரீதியாகவும் நடைமுறையிலும் பலவீனப்படுத்தலாம் என்று சிந்தித்து சுமந்திரன் அணி திட்டமிட்டு வேலை செய்கின்றது.சுமந்திரன் அணி இந்தக் கூட்டைக் கண்டு பதட்டமடைகிறது. எதிர்காலத்தில் தலைமைத்துவம் முன்னணியிடம் சென்று விடக்கூடாது என்ற பயமும் அதில் உண்டு. எனவே இந்தக் கூட்டை உடைப்பதற்காக எந்த ஒரு வெளி எதிரியையும் விடக் கூடுதலாக சுமந்திரன் அணி வேலை செய்கின்றது. ஈபிடிபியுடன் தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தைக்கு போனதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் அதனால் ஏற்படும் பின்னுதைப்பு கட்சியைக் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன. இதில் சுமந்திரனுக்கு ஆறுதலான விடயம் என்னவென்றால்,சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் காணப்படும் சக்திகளுக்கு தலைமை தாங்க இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை தயாரில்லை என்பதுதான். இதனால் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் படிப்படியாக கட்சிக்குள் தன் பிடியை பலப்படுத்தி வருகிறார். மந்திரித்து ஏவி விடப்பட்ட சேவலைப்போல அவர் அங்கலாய்ப்போடு ஓடிக்கொண்டேயிருக்கிறார். ஒரு கட்சியின் பதில் செயலாளர் இவ்வளவுக்குத் தீயாக வேலை செய்வதில்லை. ஆனால் சுமந்திரன் தொடர்ந்து இயங்குகிறார். முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்சியின் எல்லாமுமாக அவர் தோன்றினார். இப்பொழுதும் அந்தப் பாத்திரத்தை எப்படித் தக்க வைப்பது என்று சிந்தித்துத் திட்டமிட்டு உழைக்கிறார்.அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் எப்படியும் மக்கள் ஆணையைப் பெற்று விட வேண்டும் என்ற தவிப்பு அதில் தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைப் போட்டி என்பது பலமான தலைமைகள் இரண்டு இருப்பதால் ஏற்பட்டது அல்ல. இரண்டுமே பலவீனமான தலைமைகள் என்பதால் ஏற்பட்டதுதான் என்பதைக் கடந்த ஆண்டு நிரூபித்து விட்டது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தை பலப்படுத்த இதுதான் தருணம் என்று நம்புவதாகத் தெரிகிறது.கடந்த வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமார் கொழும்பில் நடாத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் சுமந்திரன் அணிக்குப் பொறி வைப்பவை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 15 ஆண்டுகளாக தன்னை ஒரு மாற்று அணியாகத்தான் ஸ்தாபித்து வந்திருக்கிறது. தன்னை ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாகக் கருதி வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக தன்னை கட்டமைத்துக் கொள்ள அக்கட்சி தவறிவிட்டது. 15 ஆண்டுகளின் பின் கஜேந்திரக்குமார் உடல் ரீதியாகவும் நோய்வாய்ப்பட்டு தேறிய பின், அந்தக் கட்சி அவருக்கு நெருக்கமான சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் தூண்டுதலால் தனது வழமையான வாய்ப்பாட்டிலிருந்து இறங்கி வருவதாகத் தெரிகிறது. ஆனால் வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக அவர்கள் வளர்வதற்கு இதை விடக் கடுமையாக உழைக்க வேண்டும்.அதாவது தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக வளர மேலும் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் அப்படி உழைக்கும் வரையிலும் தமிழரசுக் கட்சிதான் முதன்மைக் கட்சியாக தொடர்ந்துமிருக்கும். புதிய கூட்டு நிலைத்திருக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சிப் பண்பு மீண்டும் தலை தூக்கும். தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட கூட்டுக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய கட்சிகளும் சரி ஆயுதப் போராட்ட இயக்கங்களும் சரி தங்களுக்குள்ளேயும் மோதியிருக்கின்றன.தங்களுக்கு இடையிலும் மோதியிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தொடங்கி ஆயுதப் போராட்ட காலத்தில் திம்பு பேச்சு வார்த்தையை நோக்கி உருவாக்கப்பட்ட இயங்கங்களின் கூட்டு. அதன்பின் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதன் பின் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை. அதன்பின் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு வரையிலுமான எல்லாக் கூட்டுக்களும் ஒரு கட்டத்தின் பின் குலைந்து விட்டன. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான தொகுக்கப்பட்ட தோல்வியென்பது கூட்டுக்களின் தோல்வியுந்தான். இப்பொழுது ஒரு கூட்டு உருவாகியிருக்கிறது. எனினும் இதுகூட பிரம்மாண்டமான ஒரு கூட்டு இல்லை.தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தழுவிய பெருங் கட்சியாக, முதன்மைக் கட்சியாகக் காணப்படுகின்றது. எனவே இப்பொழுது ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் ரத்தச் சுற்றோட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி நிலையை பலப்படுத்துமா? மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளது போல இரு கட்சிப் போட்டி நிலைமை என்பது அங்கு ஆரோக்கியமானது. ஆனால் நீதிக்காக போராடும்,அரசற்ற மக்களாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 16 ஆண்டு காலத் தேக்கம், தோல்வி என்பவற்றின் பின்னணியில், அது ஆரோக்கியமானது அல்ல.பொது எதிரிக்கு எதிராகத் தேசம் திரண்டு நிற்காது.இரண்டாக நிற்கும். கட்சி மைய அரசியல் இப்படித்தான் இருக்கும்.கட்சிகளால் மட்டும் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது https://www.nillanthan.com/7451/
3 months 2 weeks ago
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளரே வெற்றி பெறுவார் என சுனில் வட்டகல தெரிவிப்பு
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சிக்கு, தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ள பிமல் ரத்நாயக்க
தமக்குத் தேவையான கொள்கலன்களை தேர்ந்தெடுத்து விடுவிப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு இல்லை என தயாசிறி ஜயசேகர கருத்து
வடக்கு கிழக்கை "அனைத்து இனங்களின் வாழ்விடம்” என காட்டும், தமிழ் இன அடையாளங்களை மறைக்கும் வியூகங்களை கொழும்பு கட்டமைத்து வருகிறது என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை
3 months 2 weeks ago
Columnsசிவதாசன் கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை சிவதாசன்கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். ‘கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்’ என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இச்சட்டத்திற்கு பலமான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றத்தை எதிர்கொள்ளல்’ (combat transnational organized crime), சட்டவிரோதமான ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தலைத் தடுத்தல் (stop the flow of illegal fentanyl) மற்றும் கருப்புப் பணச்சலவைச் செயற்பாடுகளைத் (crack down on money laundering) தடுத்தல் ஆகியவற்றின் பின்னாலுள்ள அதி நவீன வலையமைப்புக்களை எதிர்கொள்ள வல்லதாக கனடிய பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தல் இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பினும் குடிவரவு விடயங்களிலும் அமைச்சரின் அதிகாரம் தலையை நீட்டுவதற்கான அனுமதியும் இருக்கிறது போலத் தெரிகிறது. அதிகாரப் பரவலாக்கம் போதை வஸ்து, ஆயுதங்கள் கடத்தல் வாகனத் திருட்டு ஆகியவற்றைக் காண்காணிக்கும் அதிகாரம் சுங்கச் சட்டத்தின் கீழ் வந்தாலும் சில எல்லைகளினூடு வரும் / போகும் பொருட்களைத் தேக்கி வைத்திருக்கும் / பொதிகளைத் தயாரிக்கும் கிட்டங்கிகள் (warehouses), கொள்கலன்கள் (containers), அல்லது பாரவண்டிகளைப் (trucks) பரிசோதிக்கும் அனுமதி தற்போது இல்லை என்பதால் அச்சட்டத்தை மாற்றுவது; கரையோரப் பாதுகாப்ப்பில் ஈடுபடும் காவற் படையினர் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் கலங்களை வழிமறித்து அல்லது அவற்றுக்கிடையேயான தொடர்பாடல்களைக் கிரகித்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சமுத்திர சட்டத்தை (Oceans Act) மாற்றுவது; சர்வதேச சட்ட நிர்வாக அமைப்புகளுடன் பரிமாறல்களை அதிகரிக்கும் வகையில் RCMP காவல்துறையின் அதிகாரங்களை விரிவாக்குவது; புதிய ‘தகுதியின்மை’ (ineligibility) விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சடுதியாக அதிகரிக்கும் அகதிகள் கோரிக்கைகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பது; அகதிக்கோரிக்கைகள் எவ்வழியில் பெறப்படுகின்றன, ஆராயப்படுகின்றன, தீர்மானிக்கப்படுகின்றன ஆகிய விடயங்களைக் கூர்மைப்படுத்தல்; குடிவரவுப் பத்திரங்களை ரத்து செய்யவோ, இடைநிறுத்தவோ அல்லது மாற்றுவற்கோ அல்லது அகதிகோரிக்கைகளுக்கான புதிய விண்ணப்பங்களை ரத்துசெய்யவோ, தற்காலிகமாக இடைநிறுத்தவோ அல்லது முற்றாக நிறுத்தவோ தேவையான அதிகாரங்களை திணைக்களங்களுக்கு வழங்குதல்; குடிவரவாளர் பற்றிய பிரத்தியேக தகவல்களை குடிவரவு,அகதிகள், பிரஜாவுரிமைத் திணைக்களம் ஏனைய மத்திய, மாகாண மற்றும் பிரதேச அதிகாரங்களுடன் பகிர்ந்துகொள்ளல்; ஆகிய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரால் முன்மொழியப்படும் புதிய சட்டமூலம் வழிவகுக்கிறது. நாடுகடந்த திட்டமிட்ட வகையில் செயற்படும் குற்ற அமைப்புக்கள் மற்றும் ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தல்ஃபென்ரனில் போதை வஸ்து தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதியாவதை அவதானித்து விரைவாகக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சுக்கு அதிகாரங்களை வழங்கல் தேவையேற்படின் ஒருவரது பிரத்தியேக தகவல்களைப் பெறும் வகையில் Criminal Code, MLACMAct, CSIS Act ஆகிய சட்டங்களை மாற்றி இத்திணைக்களங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல் எலெக்ட்றோனிக் ஊடகங்களை ஊடுருவி ஒருவரது பிரத்தியேக தொடர்பாடல்களைக் கண்காணிக்க்கும் வகையில் புலனாய்வு திணைக்களங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்குதல் கனடா போஸ்ட் மூலம் விநியோகிக்கப்படும் தபால்கல், பொதிகளைத் திறந்து பரிசோதிக்கவும், தேவையானால் குற்றங்களைப் பதியவும் காவற்துறையினருக்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மாற்றத்தைக் கொண்டு வருதல் கருப்பு பண வருகையைத் தடுத்தல்கருப்புப் பணத்தைச் சலவை செய்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்குப் பணம் வழங்கல் போன்ற விடயங்களைத் தடுக்க கடினமான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டங்களை இயற்றுதல் /மாற்றுதல் பெரிதளவான பண மாற்றம், மூன்றாம் தரப்பு பண மாற்றம் ஆகியவற்றைக் கண்காணித்தல் வங்கிக் கணக்குகளில் காணப்படும் சந்தேகத்துக்கிடமான பண மாற்றங்கள் பற்றி சம்பந்தப்பட்ட அரச, தனியார் நிறுவனம்ங்களிடையே தகவற் பரிமாற்றத்துக்கு வழி செய்தல் மேலும் வரவிருக்கும் புதிய சட்டங்கள் , மாற்றங்கள்கனடாவைப் பாதுகாப்பதற்கெனக் கொண்டுவரப்படும் ‘பலமான எல்லைகள் சட்டம்’ துப்பாக்கிகளின் பிரயோகத்தைக் கட்டுப்படுத்தியும், தொடர் குற்றவாளிகள் இலகுவில் பிணை பெறுவதைத் தடுக்கவும், வாகனத் திருடர்கள், வீடுகளை உடைத்து திருடுபவர்கள், ஆள் மற்றும் போதை வஸ்து கடத்தல்காரர்கள் ஆகியவர்களிடமிருந்து பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசு உத்தேசம் கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்காக $1.3 பில்லியன் தொகையைச் செலவிடத் தயாராகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் ஆனந்தசங்கரியின் திரிசங்கு நிலை இச்சட்டமூலம் அறிவிக்கப்பட்டபோது உடனடியாக ஒரு ஊடகவியலாளர் மாண்புமிகு அமைச்சரை இக்கட்டில் மாட்டிவிடும் வகையில் கேள்வியொன்றைக் கேட்டார். “சில வருடங்களுக்கு முன் வான்கூவரில் கரை தட்டிய கப்பலில் வந்த அகதிகள் விடுதலைப் புலிகள் அல்லவா. அப்போது நீங்கள் கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகராக இருந்தீர்களே. இப்பின்னணியில் இப்போது அறிமுகமாகும் சட்டமூலத்தை எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்” என்ற சாரத்தில் அக் கேள்வி இருந்தது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், விடுதலைப் புலி, கனடிய தமிழர் பேரவை போன்ற ஆபத்தான பதங்களைச் சாதுரியமாகத் தவிர்த்து அவரது அமைச்சர் தொப்பியை மாற்றிவிட்டு ஒருகணம் வழக்கறிஞராக மாறிப் பதிலளித்து ‘வாய்ப்பில்லை ராஜி’ எனக்கூறி அவரை அனுப்பிவிட்டார் (எனது பார்வையில்). இக்குறிப்பிட்ட ஊடகவியலாளரிடமிருந்து வந்த அம்பு நீண்ட நாட் தயாரிப்பாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இதைவிட மோசமான பல அம்புகள் இன்னும் பலவித ஊடகவியாளர்களின் அம்பறாத்துணியில் பதுங்கியிருக்க வாய்ப்புண்டு. குடிவரவு, வெளிவிவகாரம், தபால், சுகாதாரம், தகவற் தொடர்பு என ஏகப்பட்ட அமைச்சர்களின் அதிகாரங்களை அள்ளிக் கொண்டுவந்து அமைச்சர் ஆனந்தசங்கரியின் பாசறையில் போட்டுவிட்டு “ஏலுமெண்டால் செய்துபார்” என்று கார்ணி தப்பித்துக்கொண்டுவிட்டார். இவற்றில் பெரும்பாலானவை பெரியவர் ட்றம்பைத் திருப்திப்படுத்துவதற்காக என்பது பளிச்சென்று தெரிகிறது. காளிஸ்தான் பயங்கரவாதிகள் என யாராவது தொண்டை கிழியக் கத்துவது அமைச்சரது செவிப்பறைக்குள் நுழையும் போது அது ‘விடுதலைப் புலிகள்’ ஆகவே அவருக்குக் கேட்கும். கத்துபவர்களின் நோக்கமும் அதுவாகவே இருக்கும். இப்பின்னணியில் தமிழ்ச் சமூகத்துடனான அவரது ஊடாடல்களை அவர் மட்டுப்படுத்தத் தள்ளப்படுவார். பாதுகாப்பு காரணங்களுக்கென குடிவரவு விண்ணப்பங்கள் ரத்துச் செய்யப்படும்போது அதனால் பெருவளவு பாதிக்கப்படப் போபவர்கள் வெள்ளையரல்லாதவர்கள். இதனால் அமைச்சருக்கு எதிராக அவரது ‘தோலினமே’ கொடி பிடிக்க (பனர் பிடிக்க (?)) கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் தனியார் சுதந்திர எல்லைகளை மீறும் பல சட்ட மாற்றங்கள் அமைச்சருக்குப் பல வகையான எதிரிகளையும் தேடித்தர வாய்ப்புண்டு. அதைவிடவும் அச்சம் தரும் விடயம் இந்த ‘ஓர்கனைஸ்ட் கிரைம்’ கும்பல்கள். அமைச்சர் முன்பு போல ரொயோட்டா கொரோல்லாவில் பயணம் செய்யக்கூடாது. மாறாக இலான் மஸ்க்கிடமிருந்து ஒரு ‘சைபர் ட் ரக்’ ஒன்றை (இதுவரை வாங்காமலிருந்தால்) வாங்கி வைத்திருப்பது நல்லது. ஆனால் அமைச்சரது இந்த சட்ட மூலம் ஒரு விடயத்தில் சில நல்ல விடயங்களைச் செய்யும் எனவும் எதிர்பார்க்கலாம். சமூக ஊடகங்களில் உலவும் தலை மாறிகளும், தலையாட்டிகளும் கொஞ்சம் ஓரமாக நிற்கவேண்டி ஏற்படலாம். அமைச்சருக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ எதிரிகளைச் சமாளிக்க சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தேயாகவேண்டும். இதனால் நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மாறுவதற்கான சூழல் ஏற்படுமெனப் பட்சி சொல்கிறது. அமைச்சருக்கு எனது அட்வைஸ்? விளக்குக் கொழுத்துவதையும் பட்டயம் வழங்குவதையும் சற்றுத் தவிர்த்து அதிக காலத்தை ஒட்டாவாவில் கழிப்பது நல்லது. |கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை |சிவதாசன் கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். 'கனடியர்களைப் பாதுகாப்பாக...
3 months 2 weeks ago
ஜேர்மன் இரும்புகள் கறள் புடிக்காது. 😎 made in Germany எண்டதுக்கு உலகிலேயே தனி மதிப்பிருக்கு.
3 months 2 weeks ago
சில நாடுகளில் திருமணத்தின் பிந்தான் உறவு வைக்க முடியும் என உள்ளது. சில நாடுகளில் திருமணத்தின் பின் கணவனுடன் மட்டுமே வைக்க முடியும் என உள்ளது. ஆனால் அநேகமாக அனைத்து நாடுகளிலும் திருமணத்தின் பின் இன்னொருவருடன் உறவு வைப்பது கிரிமினல் குற்றம் இல்லை எனிலும், விவாகரத்துக்கு போதிய காரணமாக கொள்ளப்படும்.
3 months 2 weeks ago
யோக முத்திரைகள் YOGA MUDRASயோக முத்திரைகள் 1. ஞான முத்திரை : அறிவு முத்திரை ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம். முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். இடம்: எந்தவொரு அமைதியான இடமும் இதற்கு உகந்தது. நேர அளவு: இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம். பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.ஆகவே இந்த முத்திரை,• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும். 2. பிருத்வி முத்திரை : பூமி முத்திரை பிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி மாதா என்பதாகும். முறை: மோதிர விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனியுடன் தொட ஏனைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல். நேர அளவு: வரையறை இல்லை பலன்கள்: எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும். • உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும். • தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும். • உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 3. வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை முறை: சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும். நேர அளவு: 45 நிமிடங்கள் இவ்வாறு இருத்தலின் மூலம் நோயின் தாக்கம் 12 – 24 மணி நேரங்களுக்குள் குறைந்து விடும். இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து செய்தல் சாலச் சிறந்தது. பலன்கள்: • மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் ( rheumatism, arthritis, gout) மற்றும் பார்க்கின்சன் வியாதி • கழுத்து முதுகென்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis) • வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு 4. சூரிய முத்திரை முறை: மோதிரவிரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் அழுத்துதல் நேர அளவு: ஒரு நாளைக்கு இரு தடவை 5 – 15 நிமிடங்கள் பலன் : • தைரோய்ட் சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும் • உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும் • பதட்டத்தைப் போக்கும் • சமிபாட்டுக் கோளாறுகளைத் தீர்க்கும் 5. பிராண முத்திரை : உயிர் முத்திரை முறை: கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொள்ள ஏனைய விரல்களை நீட்டி வைத்திருத்தல். நேர அளவு: எக்காலத்திலும் வரையறையின்றி செய்யலாம். பலன்: உயிர் முத்திரை அல்லவா. உயிரின் சக்தியைப் பெருக்கும். பலவீனமானோர் தேக வலுப பெறுவர். குருதிக்குழாய் அடைப்புகளைச் சரிபடுத்தும். இதனை ஒழுங்காக பயிற்சி செய்தால் நன்கு உற்சாகமுள்ளோராக மாறுவோம். • நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் • கண் பார்வை சிறப்புற உதவும், கண் சம்பந்தமான வியாதிகளைக் குறைக்கும் உயிர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைச் சீர்படுத்தும், களைப்பைப் போக்கும்.. 6. பச்சன் முத்திரை : சமிபாட்டு சம்பந்தமானது. பாபா படம் மூலம் அனைவரும் அறிந்த முத்திரை (ஆனால் முத்திரை பிடிப்பதில் சிறு வேறுபாடு உண்டு) உணவு சமிபாடு அடைவதுடன் தொடர்புடையது. முறை: நடு விரல், மோதிர விரலின் நுனிகள் கட்டை விரலின் நுனியுடன் இணைத்து மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல். நேர அளவு: நாளாந்தம் 45 நிமிடங்கள் எனக் கூறப்படுகிறது. எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அதற்கேற்ப பலன் கூடும். சாப்பிட்ட பின்னர் பயன்படுத்துவது உகந்தது. பலன்: எமது உடலின் கழிவுத் தொகுதியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் • மலச்சிக்கல், மூலவியாதி போக்கும் • கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது 7. லிங்க முத்திரை : வெப்பம் மற்றும் சக்திக்கான முத்திரை முறை: இரு கரங்களின் விரல்களையும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்ளவும், பின்னர் இடது கட்டை விரலை உயர்த்தி, அதனை வலது கட்டை விரல் மற்றும் சுட்டு விரல்களுக்குள் சுற்றி வருமாறு அடக்கவும். நேர அளவு: எந்த நேரமும் உகந்தது, ஆனால் நீண்ட நேரம் செய்தல் தவிர்க்கப்படல் நல்லது. பலன்: இந்தச் செயன் முறை எமது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. பால், நெய் தண்ணீர் மற்றும் பழச் சாறு போன்றவைகளை இந்த முத்திரையைப் பயன்படுத்தும் போது எடுப்பதால் கூடுதலான பலன்கள் கிடைக்கும். • சளி உருவாதலைக் கட்டுப்படுத்தும், சுவாசப்பைக்கு சக்தியைக் கொடுக்கும். • சளிக்காய்ச்சல் சுவாசக்குழாய் நோய்களைக் குணப்படுத்தும். • உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். 8. அபான வாயு முத்திரை : இதய முத்திரை முறை: சுட்டு விரலின் நுனியானது கட்டை விரலின் அடிபகுதியைத் தொடவேண்டும், பின்னர் நடுவிரலின், மோதிர விரலின் நுனிகளும் கட்டை விரலின் நுனியோடு தொடவேண்டும் சுண்டு விரல் மட்டும் நீட்டப்பட்டு இருக்கும். நேர அளவு: எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும். பலன்: இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். ஒரு ஊசி மருந்தினைப் போல மார்படைப்பினைக் குறைக்க உதவும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும். • இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும். • கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும் • சமிபாட்டை ஒழுங்காக்கும். 9. வருண முத்திரை : நீருக்கான முத்திரை முறை: சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும். பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையால் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்.. • இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது • உடல் நீர் சமநிலை பேணுகிறது. • தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக உதவுகிறது. யோக முத்திரைகள்: YOGA MUDRASYOGA MUDRASயோக முத்திரைகள் 1. ஞான முத்திரை : அறிவு முத்திரை ஞானம் என்றாலே அறிவுதானே , இந்த முத்திரை அறிவைப் பெருக்கும் . அறிவு முத்திரை ...
Checked
Wed, 09/24/2025 - 02:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed