புதிய பதிவுகள்2

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 2 weeks ago
தொல்லியல் பற்றிய தெளிவில்லாத ஒருவரால் காழ்புணர்வுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. பாலகிருஷ்ணன் அவர்களது கட்டுரை, காணொலிகளைப் பார்த்துள்ளேன். சிறந்த ஆய்வாளர். தமிழ்நாட்டில் உலாவும் 5000 வருடங்களுக்கு முன் இரும்பு பாவிக்கப்பட்டிருக்கும் தகவல் சரியான ஆதாரமற்றது என்று நினைக்கிறேன். இதுவரை உலகில் 3500 வருடங்களுக்கு முன்பே இரும்பு பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

3 months 2 weeks ago
இது ஒரு நல்ல கேள்வி நந்தன் . .........! நான் இந்தத் தாவரம் பற்றி பொதுவாக சொல்லியிருக்கிறேன் . .......... ! மண்டைதீவு கடலிலும் அலையுண்டு . ...... பனியில்லாத மார்கழி இருக்கலாம் ஆனால் அலையில்லாத கடல் இருக்காது . ........ கோல்பேஸ் போல 24 /24 நேர அலைகள் இல்லை . ...... ஆனால் மாரிகாலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அலைகள் புரண்டு வந்து பண்ணை வீதியில் மோதும் . ........ அக்காலத்தில் அக்கடலேரியின் கீழே இருக்கும் ஓரா மீன்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பி மேலே வரும் நிறைய மீன்கள் அப்போது கல்லுகளில் மோதுண்டு வீதிகளில் கூட தெறித்து விழுவதுண்டு . ...... சில இளைஞர்கள் அப்போது வெட்டுத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள் ....... சிலர் மீன் கூட்டத்தைப் பார்த்து வெடி எறிந்து விட்டு (இது தடை செய்யப்பட்டது ) உடனே குதித்து பைகளில் செத்து மிதக்கும் மீன்களை அள்ளிக் கொண்டு வருவார்கள் . ...... இப்படிப் பல சம்பவங்கள் உண்டு . ........!

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

3 months 2 weeks ago
இது நல்லது . ......... ! _ இவை கடல் மண் அரிப்பைத் தடுக்கும் . .....! _ மீனினம் பெருக வழி வகுக்கும் . .... ! _ திரண்டு வரும் பெரும் அலைகளை சமாளித்து அனுப்பி விடும் . .......( அதனால் அலையாத்திக் காடுகள் ஆகும் ) ...... !

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 2 weeks ago
நான் நம்ப வேண்டுமானால் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். கோடிக் கணக்கானவர்களை விடுங்கள். சில ஆயிரம் நபர்களை எடுத்து அவர்களின் வாழ்க்கை முறை எண்கணித சாத்திரத்தின்படிதான் நடக்கிறது என்று யாராவது நிறுவியுள்ளார்களா ? எனக்குத் தெரிந்தவரை இல்லை. நிச்சயம் நிறுவவும் முடியாது. எல்லாத் தினசரிகளிலும் இல்லை. அதுவும் ஒதுக்குப் புறமாகப் போட்டிருப்பார்கள். ஏனென்றால் மிகக் குறைந்தவர்களே இதனை வாசிக்கிறார்கள். அதுவும் பலர் இதனைப் பொழுது போக்காகத்தான் வாசிக்கிறார்கள்.

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !

3 months 2 weeks ago
வளைவுப் பாலமோ வளைவில்லாத பாலமோ, சீனா 625 மீற்றர் உயரமான பாலம் ஒன்றினை விரைவில் திறக்கவுள்ளது. இந்தச் சிறிய இடைவெளிச் சந்தில் மோடி சிந்து பாடியுள்ளார் போலுள்ளது. https://en.wikipedia.org/wiki/Huajiang_Canyon_Bridge

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

3 months 2 weeks ago
மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள் adminJune 8, 2025 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் போது, பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரர், யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/216534/

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !

3 months 2 weeks ago
இந்திய பேராசிரியரான ஜி மாதவி லதாவுக்கு வாழ்த்துக்கள். Afcons என்ற இந்திய நிறுவனம் கட்டியது என்று அறிய முடிகின்றது.

சிரிக்கவும் சிந்திக்கவும் .

3 months 2 weeks ago
நெல்லியடியில சலூன் வைத்திருக்கிற அண்ணன் நேற்று சொன்னார் தம்பன் இனி எங்கட பிழைப்பு கொஞ்சம் கெடும் போல என்றார்.ஏன் அண்ணை என கேட்க சொன்னார் “தமிழரசு ஈபிடிபி யோட சேர்ந்தால் தாடி வளர்பார்கள் முகச்சவரம் செய்ய வரமாட்டார்கள்”என்றார். கவலையோடு கலந்த அரசியல். யாரும் இப் பதிவிற்கு சிரிக்க வேண்டாம், (இது முகப்புத்தகப் ப்திவு ...பிரதி பண்ணப்பட்டது)

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 2 weeks ago
@ஏராளன் இணைத்துள்ள தமிழ்வின் கட்டுரை தகவலின்படி பார்த்தால் கொலையை செய்தவர் அடிபிடி கோஸ்டி போல் தோன்றுகின்றது. மனைவியின் தந்தையிடம்/மானனாரிடம் கொலையை செய்வதற்கு முன்தினம் கொலையை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியை பெற்று மறுநாள் அதை பயன்படுத்தி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் என்பதை பார்க்கும்போது அவரது குரூர புத்தி தென்படுகின்றது. இவருக்கு ஏற்கனவே வாள்வெட்டுக்கள், ஆட்களை வெட்டுவதில் பரீட்சயம் உள்ளதோ எனவும் சந்தேகம் ஏற்படுகின்றது. ஆத்திரகாரனுக்கு புத்தி மத்திமம் என்பது ஒருபுறம் போக இப்படி குரூரமாக கொலையை இவர் செய்தமைக்கு ஏற்கனவே பரீட்சயமான வாள் வெட்டு அனுபவம் ஏதாவது இவரில் தாக்கம் செய்ததோ எனவும் எண்ண வேண்டி உள்ளது.

அர்ச்சுனா எம்.பி குறித்து அரசின் நடவடிக்கைகள் அதிருப்திக்குரியவை சரத் வீரசேகர தெரிவிப்பு

3 months 2 weeks ago
எது எப்படியோ பைத்தியர் அர்ச்"சூனாவுக்கு" கூடிய சீக்கிரம் ஆப்பு இருக்கிறது.

🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி / அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025)

3 months 2 weeks ago
அத்தியட்டி தில்லைவிநாயகலிங்கம் அவர்களின் பதிவுகளில், அந்தத் தம்பதிகளின் சுயவிபரப் படத்தைப் பார்த்துப் பரவசப்பட்டு மகிழ்ந்திருந்த என்னை, இந்த நினைவாஞ்சலிப் பதிவு பெரும் அதிர்வைத் தந்து வருத்துகிறது.😭

நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!

3 months 2 weeks ago
"எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது'' - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி 08 JUN, 2025 | 01:53 PM உலகின் ‘நம்பர் 1’ செல்வந்தரான எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால் ட்ரம்ப்பின் முன்னாள் நண்பரான மஸ்க் இப்போது அவரது பிரதான இலக்காக மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வழியாக அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. 2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்ப் இப்போது மஸ்க்கை குறிவைத்துள்ளதாக அமெரிக்காவில் பார்க்கப்படுகிறது. அதை சுட்டும் வகையில் அவரது அண்மைய பேச்சும் இருந்துள்ளது. அரசின் செலவினங்களை குறைக்க மஸ்க்கின் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தால் போதும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளிப்படையாக ஜனநாயக கட்சியினருக்கு உதவினால் பின்விளைவுகளை எதிர்கொள்வார் என கூறியுள்ளார். “மஸ்க் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர். நிச்சயம் அவர் அரசுடன் இணைந்து பயணிப்பார் என கருதுகிறேன். ஆனால் இப்போது அது நடக்காது. ட்ரம்ப் சிறப்பாக தனது பணிகளை செய்து வருகிறார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் எந்த தவறையும் செய்யவில்லை. என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளார். பின்னணி என்ன? - அமெரிக்க அதிபர் தேர்தலில்டு ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி ஆனதும் அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். இந்நிலையில் அமெரிக்க அரசின் வரவுசெலவு திட்டம் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள் அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மின்சார வாகனங்களுக்கான 7500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால் எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். ட்ரம்ப்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார். வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆண்டு லாபம் 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு குறையலாம் என கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/216938

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

3 months 2 weeks ago
இந்த மருத்துவ நிபுணர் மாலை 4 மணி வரை பணியாற்றுவதாக அங்கு பணியாற்றும் ஒருவர் குறிப்பிட்டார். இந்த காரணம் ஒன்று போதுமே?!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months 2 weeks ago
நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் அளியுங்கள்; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை 08 JUN, 2025 | 01:37 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேக்ர் இம்மாதம் நாட்டுக்கு வருகைதருவதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், அவ்வாறு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும், தாம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் உயர்ஸ்தானிகரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருக்கும் நிலையில், வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளில் ஒரு தரப்பினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக வருகைதரவேண்டாம் எனக்கோரி உயர்ஸ்தானிகருக்கு ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். அதேவேளை நாட்டுக்கு வருகைதரும் பட்சத்தில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யுமாறும், பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜாவினால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினராகிய நாம் நீதிகோரி சுமார் 3000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம். அது யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் அரச படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் உண்மையையும், அதற்குரிய பொறுப்புக்கூறலையும் கோருகின்ற எமது இயலாமையின் வெளிப்பாடாகும். பல ஆண்டுகளாக இப்போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் அதற்குரிய பதிலோ அல்லது நீதியோ கிட்டாமலே உயிரிழந்துவிட்டனர். ஆனால் எமது வயோதிபம் மற்றும் உணர்வு ரீதியான சோர்வுக்கு மத்தியிலும் நாம் நீதியைக்கோரி அமைதியான முறையில் போராடிவருகின்றோம். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாம் ஜெனீவாவுக்குச்சென்று உரையாற்றியிருப்பதுடன், எமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு விளக்கமளித்துவந்திருக்கின்றோம். உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதே எப்போதைக்குமான எமது அசைக்கமுடியாத இலக்காக இருந்திருக்கின்றது. அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் நீங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதனை நாமறிவோம். இருப்பினும் உங்களது இவ்விஜயம் ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடருக்கு மத்தியில் இடம்பெறவிருப்பதனால், அது எம்மத்தியில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. குறிப்பாக ஜெனீவாவில் உங்களைச் சந்திப்பதற்கு நாம் பல தடவைகள் முயற்சித்த போதிலும், அது சாத்தியமாகாத நிலையிலேயே இவ்விஜயம் தொடர்பான எமது கரிசனைகள் வலுப்பெற்றிருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் உங்களது இலங்கை விஜயத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு இடமளிக்குமாறு கோருகின்றோம். நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதைத் தவிர்த்து, நாட்டில் இருப்பதன் ஊடாக உங்களை நேரடியாகச் சந்தித்துப் பேசமுடியும் எனக் கருதுகின்றோம். அவ்வாறானதொரு சந்திப்பு நாங்கள் முகங்கொடுத்துவரும் யதார்த்த சூழ்நிலையையும், எமது வலிகளையும் உங்களுக்கு எடுத்துரைப்பதற்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். முள்ளிவாய்க்காலுக்கான விஜயமானது மக்களின் வலிமிகு துயரம் ஏற்கப்படுவதைக் காண்பிக்கக்கூடிய வலுவான செயலாக அமைவதுடன் மாத்திரமன்றி, உண்மையை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கும். அது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பதுடன் நீதியை அடைந்துகொள்வதை நோக்கிய அர்த்தமுள்ள நடவடிக்கையாகவும் அமையும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216927

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 2 weeks ago
செம்மணி புதைகுழி தொடர்பில் விசேட கரிசனை கொண்டுள்ளோம்; நீதி அமைச்சர் தெரிவிப்பு 08 JUN, 2025 | 12:57 PM ஆர்.ராம் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழு அகழ்வு குறித்து விசேட கரிசனைகளைக் கொண்டிருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். செம்மனி சிந்துபாத்தி இந்து மயாணத்தில் நடைபெற்றுவரும் அகழ்வில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும், முழுமையாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அரச தரப்பின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சியின்போது கண்டறியப்படும் அனைத்து மனித எச்சங்களும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். அதன்பின்னர் பகுப்பாய்வு அறிக்கைகளின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூற முடியும். நீதிமன்றத்தின் அனுமதியில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து வழக்குகளும் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன. ஆகவே நீதிமன்றம் தான் இறுதியான முடிவினை எடுக்கும். எவ்வாறாயினும் உண்மைகள் கண்டறியப்படுவதற்காக தொடர்ச்சியான அகழ்வுப்பணிகளுக்காக நீதி வழங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அரசதரப்பில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதோடு விசேட கரிசனைகளையும் கொண்டிருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/216925

கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள்; பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க

3 months 2 weeks ago
08 JUN, 2025 | 12:27 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற தொழிற்றுறை நிபுணர்களுடான கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. முறையற்ற வகையில் ஒரு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அதனூடாக அரச நிதி மோசடி செய்யும் அல்லது வீண்விரயம் செய்யும் சூழலே காணப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழலுடன் தொடர்புடைய கைதுகள் அனைத்தும் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிரதிபலனாகும். இக்காலப்பகுதியில் புதிதாக வழக்குகள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. 2023 ஆம் 09 இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருசில அரச நிறுவனங்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் விருப்பம் கொள்வதில்லை. சுங்கத் திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம், மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகிய அரச நிறுவங்களின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு கிளைகளை திறக்க தயார், ஆனால் அதன்பின்னர் அங்கு ஒருசிலர் பணியில் ஈடுபடமாட்டார்கள். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம். ஊழல் மோசடிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடுகள் கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/216921
Checked
Wed, 09/24/2025 - 02:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed