3 months 2 weeks ago
இவருக்கு எதிர்ப்பு கிளம்ப என்ன காரணம்?
3 months 2 weeks ago
குறைந்த பட்சம் குறிப்பிட்ட அளவு வைத்தியசாலை படுக்கைகள் என கணிப்பிடப்பட்டுள்ள அளவுகளுடன் ஒப்பிடும் போது அங்கு மிக குறைவான அளவிலே காணப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அந்த குறைவான வசதிகளை பயன்படுத்துவது அங்குள்ள மக்களுக்கு மேலும் நெருக்கடியினையே உருவாக்கும். புலம்பெயர் தமிழர்கள் மருத்துவ காப்புறுதி வைத்திருந்தால் அவர்கள் வாழும் நாட்டிலேயே மிக சிறப்பான சேவையினை பெறமுடியும், குறைந்த பட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறந்த வைத்தியசாலை இருக்கவேண்டும், அதனை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலைதான் அங்குள்ளது, வைத்தியசாலைகளை நிர்வகிப்பதற்கு ஆண்டுதோறும் (இலவச) பெரும் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது அதனால் அரசு கூட அதனை செய்ய தயங்கும் நிலையில் ஒவ்வொரு துறைகளிலும் அங்குள்ள மக்களின் வசதி வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கும் புலம்பெயர் தமிழர்களை முதலில் அடித்து விரட்ட வேண்டும், அதனால் அங்குள்ள மக்களுக்கு குறைந்த பட்ச வசதிகளைசெய்ய முடியும் (ஒரு புலம்பெயர் தமிழர் அங்குள்ள பலரின் அடிப்படை வசதிகளை தனியாளாக உறிஞ்சும் அட்டை).
3 months 2 weeks ago
என்ன நீங்கள் நானா இல்லையா! இதில் வசைமாரி எங்கே இருக்கிறது? அவர்களின் நடைமுறையைதானே எழுதினேன்!!
3 months 2 weeks ago
நினைவாஞ்சலிகள். 🪔🪔🪔🪔🪔
3 months 2 weeks ago
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? தென்னாபிரிக்கா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? தென்னாபிரிக்கா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? தென்னாபிரிக்கா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? Keshav Maharaj போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? Josh Hazlewood போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? தென்னாபிரிக்கா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) - சமநிலை
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
களவைத் தடுக்கும் காமராவுக்கே காவல் தேவையாய் இருக்கு . ...... ! 😂
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
ஆழ்ந்த நினைவஞ்சலிகள் ....... !
3 months 2 weeks ago
இந்திய மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க முயன்றால், முன்பை விட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து
கடந்த காலத்தில் அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள், பொருளாதார ரீதியாக சாத்தியமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக வாக்குறுதி அளித்த போதிலும், இதுவரை செயல்படாமல் உள்ளதாக தகவல்
முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு
3 months 2 weeks ago
உங்களை நம்ப சொல்லவில்லை,..உங்கள் எழுத்திலிருந்து நீங்கள் எண் சோதிடப்புத்தகங்களை படிக்கவில்லை என்பது தெரிகிறது,..எனவே நீங்கள் எப்படி நம்ப முடியும்??? இந்த புத்தகங்கள் எழுதியது ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கையை ஆராய்ந்து தான்,. இது ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கை வரலாறு தான் ஆகவே இதை மீண்டும் ஆயிரக்கணக்கானோரில். நடக்கிறதா?? என்று நிறுவ வேண்டிய தேவை இல்லை காரணம் இந்த எண் சோதிடம். ஆயிரக்கணக்கானோரின். வாழ்க்கை வரலாறு என்று தான் அந்த புத்தகங்கள் சொல்கிறது ...நான் சொல்லவில்லை மேலும் எண் சோதிடப்படி M ...T,.V,....என்று எழுத்துக்கள் பெயரின். முதல் எழுத்து அல்லது தந்தையின் பெயரில் முதலாவது எழுத்தாக வருவது நல்லது அதிஷ்டம். என்கிறார்கள் எனது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவரெட்ணம் ....அவர் N .நவரெட்ணம் ஆனால் V.N.நவரெட்ணம் என்று தான் எழுதுவர். இது 41. ....5 ஆகும் இவரை சுற்றி மக்கள் இருந்து கொண்டு இருப்பார்கள் இது 5. நம்பரின். இயல்பு அடுத்து ஜி.பொன்னம்பலம் .. . ஏன் ஜி.ஜி.பொன்னம்பலம் என்று எழுத வேண்டும் ??? தந்தை செல்வாவின். பெயரின். முன். S.J.V,. .என்று ஏன் எழுத வேண்டும்??? M.G.இராமசந்திரன். என்று ஏன். எழுத வேண்டும் S.W.R.D,.பண்டாரநாயக்க. என்று ஏன். எழுத வேண்டும் ... ...இவர்கள் எல்லாம் எண். சோதிடத்தை நம்புகிறார்கள் ...அதன்படி வாழ்ந்துமிருக்கிறார்கள். நன்றி வணக்கம்… 🙏.
3 months 2 weeks ago
நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025 பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 04 Jun, 2025 யேர்மனிய நாட்டிற்கு வரும் பேரினவாத சிங்கள அரசின் சனாதிபதி அனுரா மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025 https://www.thaarakam.com/news/436c2aba-f27e-4714-9bee-63bdd7be0a6f
3 months 2 weeks ago
மணிப்பூரில் பதற்றம் – இணையசேவைகள் முடக்கம்! பதிவேற்றுனர்: தமிழ்விழி திகதி: 09 Jun, 2025 மணிப்பூரில் மெய்தி அமைப்பின் தலைவரை கைது செய்தமையால் போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளனர் . வன்முறைகளை அடுத்து மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவையை மாநில அரசு தடை செய்துள்ளது. ஜூன் 7 நள்ளிரவிலிருந்து 5 மாவட்டங்களில் இணைய சேவையும், தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன.மணிப்பூரில் மெய்தி சமுதாயத்தின் ஆரம்பை டேங்கோல் அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதால், மணிப்பூரின் 5 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.இருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களையோ அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையோ வெளியிட பொலிஸார் மறுத்ததால், போராட்டம் தீவிரமானது. போராட்டத்தில் பஸ் உட்பட பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியதுடன், தீக்குளித்து விடுவோம் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்கைது செய்யப்பட்டவர்கள் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதாகப் பெறப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தகவல்களையடுத்து, போராட்டக்காரர்கள் விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதியையும் முற்றுகையிட்டனர்.கிளர்ச்சியடைந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகவும், தடியடி தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, விஷ்ணுபூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவுபால், காக்சிங் மாவட்டங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.https://www.thaarakam.com/news/866fbd45-0754-4cc4-a578-ae4946d2029d
3 months 2 weeks ago
”யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும்”- எம்.ஏ.சுமந்திரன் யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் (8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை. சமஸ்டி அடிப்படையில் ஆட்சி அதிகாரங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே எமது கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காகவே அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகின்றோம். 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் மக்கள் பிரதானமாக நம்புவது இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டும்தான். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் மக்களது ஆணைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என வெளிப்படையாக சொன்னேன். மக்கள் தவறாக முடிவெடுப்பதில்லை. என்பிபி வாக்களித்த விவகாரத்தில் கூட அது மக்களுடைய தீர்ப்பு. அரசாங்கம் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மக்களது தீர்ப்பினை மதிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் கோரி வருகின்றோம். ஒரு குறிப்பிட்ட சபையில், தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் மக்களின் ஆணையை மதித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அந்த சபையில் ஆட்சியமைக்க ஆதரவளிக்க வேண்டியது உங்களுடைய ஜனநாயகக் கடமை. இதனை நாங்கள் 2018ஆம் ஆண்டிலேயே சொல்லி இருக்கிறோம். சந்திப்புகள் தொடர்பாக சில உணர்வுபூர்வமான விடயங்கள் இருக்கின்றன. நாங்கள் அதனை மதிக்கின்றோம். அதனைப் புறம்தள்ளவில்லை. கஜேந்திரகுமாருடனான சந்திப்பு அவரது வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவர் இடையில் தும்புக்கட்டை கதை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் எமது கட்சிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே நாம் சந்திப்புக்கான இடத்தை மாற்றியிருந்தோம். எனவே சந்திப்புக்கான இடம் குறித்த விவகாரத்தில் மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான தாக்கம் ஏற்பட்டிருந்தால் அத்தனையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஒட்டுமொத்தமாக இந்த விடயத்தைப் பார்க்கின்றபோது நாங்கள் யாருடனும் கூட்டாட்சி அமைக்கவில்லை. மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் அதிகாரத்தை கோருகின்ற அரசியற் கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணையை மக்கள் வழங்கிய பிறகு அதற்கு குறுக்கே எவரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம். யாழில் உள்ள 17 சபைகளில் ஒன்றிரண்டு சபைகளில் எமக்கு பெரும்பான்மை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் சொன்ன கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதாக சொல்லிவிட்டு, அதனை மறுதலிப்பதற்காக கபடத்தனமாக பலர் செயற்படும் காரணத்தால், 17 சபைகளிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம். மக்களின் ஆணை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தியை விட கூடுதலாக எடுக்கும் வகையில் மக்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஏனையவர்களால் தேசிய மக்கள் சக்தியை மேவி வர முடியவில்லை. தமிழ் மக்களை, தமிழ்த் தேசியத்தை நிமிர வைத்திருக்கிற ஒரே கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி. அவ்வகையிலான மக்கள் ஆணையை பெற்ற நாங்கள் எல்லா சபைகளிலும் நிர்வாகத்தை அமைப்பதற்கான உரித்துடையவர்கள். அதற்கு குறுக்கே எவரும் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம் எனத் தெரிவித்தார். https://www.samakalam.com/யாழில்-17-சபைகளிலும்-இலங்க/
3 months 2 weeks ago
சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு! adminJune 9, 2025 இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை காவற்துறை சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://globaltamilnews.net/2025/216546/
3 months 2 weeks ago
அனுராதபுர சிறை அதிகாரி கைது! adminJune 9, 2025 அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8.06.25) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தது தொடர்பான விசாரணை தொடர்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 4 மில்லியன் ரூபாவை மோசடி செய்து தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பிரதிவாதியை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கைதி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட அத்தியட்சகர் வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்ற பிரதிவாதி, மே 12 ஆம் திகதி வந்த வெசாக் பெளர்ணமி நாளில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறைச்சாலை அத்தியட்சகரின் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரான அனுராதபுரம் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர், இன்று (9) அனுராதபுரம் பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். https://globaltamilnews.net/2025/216541/
3 months 2 weeks ago
சும்மா அச்சுறுத்தலா, உண்மையாகவா? அவர் கட்டிலாலை விழுந்து வைத்தியசாலையில் அனுமதி பெறப்போகிறார்.
Checked
Wed, 09/24/2025 - 05:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed