புதிய பதிவுகள்2

யாழில் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ அதுவே வன்னியில் பதிலாக இருக்கும் - இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர்கள் ரெலோவிடம் நேரில் தெரிவிப்பு

3 months 1 week ago
உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் நடந்துகொள்ளும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள், ரெலோ தலைவர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் நேற்று முன்தினம் யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். வன்னியில் வவுனியா மாநகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் தங்கள் தரப்பு நிர்வாகத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்கும்படி ரெலோ தரப்பினர் இந்தச் சந்திப்பின்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளின் விடயத்தில் ரெலோ கட்சியும் அது சார்ந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் எப்படி நடந்துகொள்கின்றனவோ, அதே முறைமையில் வன்னியில் பதில் தரப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவரும் பதில் பொதுச்செயலாளரும் ஒரே நிலைப்பாடாக உறுதியாக ரெலோ பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர். அந்தந்த சபைகளில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி, ஆட்சி அமைப்பதற்கு உதவும் முன்னைய பகிரங்க அறிவிப்பை ரெலோவும், அது சார்ந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் பின்பற்றுமானால் அதே முறைமையை இலங்கை தமிழ் அரசும் தவறாமல் பின்பற்றும். அந்த முறைமைக்கு மாறான போக்கை ரெலோ உட்பட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பின்பற்றுமானால், அதேபோல் மாறான முறையைத் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்னியில் பின்பற்றும் என்று அக்கட்சியின் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தார்கள். இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயல்பட வேண்டும். அவர்கள் அதற்கு மாறாக செயற்படுவார்களானால் வவுனியா மாநகர சபை மற்றும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் நாமும் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் செயற்படுவோம் என எதிர்பார்க்கக் கூடாது. இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம் என்றார். யாழில் எவ்வாறு நடந்துகொள்கிறீர்களோ அதுவே வன்னியில் பதிலாக இருக்கும் - இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவர்கள் ரெலோவிடம் நேரில் தெரிவிப்பு | Virakesari.lk

வடக்கில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை

3 months 1 week ago
10 Jun, 2025 | 05:39 PM பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களுக்குமான ஆலோசனைக் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவித்தார். இதன்போது அவர், வடக்கு மாகாணத்தில் யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும், யாசகம் சார்ந்த சட்டங்களையும் மத்திய மாகாண ரீதியில் அல்லாது சகலரும் ஒன்றிணைந்த சட்ட ஏற்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கோரியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பொது இடங்களில் யாசகம் பெறுபவர்களைக் கட்டுப்படுத்த கடந்த காலங்களைப் போன்று தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். வடக்கில் யாசகம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை | Virakesari.lk

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
எனக்கு அப்போதே அன்பே சிவம் பிடித்திருந்தது. எனக்கு மிக பிடித்த படங்களில் ஒன்று. அதே போல் ஆயிரத்தில் ஒருவனும் - பார்த்து விட்டு வந்து சூப்பர் படம் என பேஸ்புக்கில் எழுதினேன் ஆனால் படம் ஊத்திகிச்சு. ஒரு வேளை எனக்கு தக் லைபும் பிடிக்குமோ? இருக்கலாம். ஆனால் பொன்னியின் செல்வன் 2 இல் ஆடியன்ஸை வச்சு செஞ்சது “மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே”🤣.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
மணிரத்தினத்தின் சரக்கை இப்படத்தின் ஊடாக மதிப்பிட முடியாது. காரணம் நடிப்பு மற்றும் தயாரிப்பு கமல் ஹாசன்

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
ஐராவதம் மகாதேவனோ, பாலகிருஷ்ணனோ பயிற்றப்பட்ட, அனுபவப்பட்ட துறைசார் தொல்லியல் ஆய்வாளர்கள் அல்ல. ஐராவதம் மகாதேவன் மொழியியல், எழுத்தியல் (epigraphy) ஆய்வாளர். அதில் தான் அவர் தமிழ் பிராமி பற்றிய ஆய்வு. வேறுபடுத்தியது அசோக பிராமியில் இருந்து. (திஸ்ஸமகராகமவில் கண்டெடுத்து (பின் சிங்களத்தால் காணாமல் ஆக்கப்பட்ட) கல்லில் இருந்தது தமிழ் பிராமி என்று அறிந்தது மகாதேவன் குறிப்பில் இருந்து தான்) இவை தொல்லியல் ஆதாரத்தின் ஒவ்வோரு பகுதியாக இருக்கலாம் அல்லது அப்படி இல்லாது விடலாம். அனால் இப்போதைய தொல்லியல் துறை மிகவும் சிக்கலானது. forensic archaeology ஆல். அத்துடன் பொதுவாக மானிடவியலும் (குறிப்பாக biological anthropology) உள்ளடக்கம், forensic anthropology ஆல். சில உப விஞ்ஞான (/மருத்துவ) துறையும் (உ.ம். anthropometry, osteology, metallurgy, ecology போன்றவை) தொல்லியல் துறைக்குள் வரும். தொல்லியல் துறை இப்போது விஞ்ஞான பக்கம் சாய்ந்த, interdisciplinary, multi-disciplinary துறை. எனவே துறைசார் பயிற்சியும், அனுபவமும் இல்லை என்றால், அப்படி துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களால் இலகுவாக நிராகரிக்கலாம், அதுவும் இந்திய தொல்லியல் துறை தமிழரின் நாகரிகத்துக்கு வரும் போது. ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது, இந்த தொல்லியல் ஆய்வு செய்தவர்கள் எங்கே?

அறியப்படாத கடல்-நாராயணி சுப்ரமணியன்

3 months 1 week ago
அறியப்படாத கடல் நாராயணி சுப்ரமணியன் June 3, 2025 “பூமியில் முக்கால் பங்கு கடல்” என்பதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இதையொட்டிய வேறு சில தரவுகள் இருக்கின்றன. முக்கால் பங்கு என்பது கிட்டத்தட்ட 360 மில்லியன் சதுர கிலோமீட்டர். 200 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமான கடற்பகுதி ஆழ்கடல் (Deep sea) என்று அழைக்கப்படுகிறது. மொத்தக் கடற்பரப்பில் 93% இப்படிப்பட்ட ஆழ்கடலால் ஆனதுதான். ஆக, பூமியின் பரப்பில் 66% ஆழ்கடல் பகுதியாக இருக்கிறது. இவ்வளவு பரந்துள்ள இந்தப் பகுதியில் என்ன இருக்கும் என்ற கேள்வி நமக்கு முன்பே வந்துவிட்டது. 1958ம் ஆண்டு முதலே ஆழ்கடல் ஆராய்ச்சியை மனித இனம் தொடங்கிவிட்டது. அப்போதிலிருந்து 2025ம் ஆண்டு வரை, அதாவது 67 ஆண்டுகளாக நாம் ஆழ்கடலை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் நாம் தெரிந்துகொண்டது என்ன என்ற ஒரு கேள்வியோடு ஆராய்ச்சியைத் தொடங்கினார் அமெரிக்காவைச் சேர்ந்த கேத்தரீன் பெல் என்ற கடல்சார் ஆராய்ச்சியாளர். தனது குழுவினரோடு இணைந்து, 67 ஆண்டுகளில் நடத்தப்பட்ட எல்லா ஆழ்கடல் ஆய்வுகளின் தரவுகளையும் பரிசோதித்திருக்கிறார். இவரது ஆய்வு முடிவுகள் மே 2025ம் ஆண்டு சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன. கேத்தரீனின் ஆய்வு உண்மையில் சில அதிர்ச்சிகரமான தரவுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பல தசாப்தங்களாக மனித இனம் ஆழ்கடலை ஆராய்ந்து வருகிறது என்றாலும், உண்மையில் 0.001%க்கும் குறைவான ஆழ்கடல் பரப்பை மட்டுமே நாம் முழுமையாக அறிந்திருக்கிறோம் என்று கேத்தரீன் சொல்கிறார்! கடலின் தரைப்பகுதி வரை ஒரு ரோபாட் கருவியை அனுப்பி அதன் வரைபடத்தை உருவாக்குவது, மாதிரிகள் சேகரிப்பது, பிற சூழல் கூறுகளை ஆராய்வது என நேரடி ஆய்வில் பல அம்சங்கள் உண்டு. இவை எல்லாம் முடிந்தபின்னரே அந்த இடம் நம்மால் முழுமையாக அறியப்பட்டதாகும். இந்தப் பின்னணியில் பார்த்தால், மொத்தக் கடற்பரப்பில் 0.0006% முதல் 0.001% வரையிலான பகுதிகள் மட்டுமே நமக்குத் தெரியும். இது ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய தகவல் தட்டுப்பாடு. மொத்தக் கடலில் ஒரு துணுக்கைக் கூட நாம் அறியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. வேறு சில முக்கியமான, கவனிக்கத்தக்க அம்சங்களையும் கேத்தரீன் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு நாம் அறிந்து வைத்திருக்கும் 0.01% கடற்பரப்பில் கிட்டத்தட்ட 65% கடற்பகுதிகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடற்கரையை ஒட்டி இருப்பவை! இந்த நாடுகளோடு பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டால் சதவிகிதமானது 97% ஆக எம்பிக் குதிக்கிறது. ஆக, நாம் அறிந்து வைத்திருப்பதே ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான கடற்பகுதி, அதிலும் தொண்ணூற்று ஏழு விழுக்காடு ஐந்து நாடுகளைச் சுற்றியே இருக்கிறது. கடல்சார் ஆய்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இது மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகளை நடத்தியிருக்கும் நாடுகளில் 94 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை பணக்கார நாடுகள் என்றும் கேத்தரீன் கண்டறிந்திருக்கிறார். சரி, குறைந்தபட்சம் எல்லாக் கடற்படுகை அம்சங்களும் ஒரே முக்கியத்துவத்தைப் பெறுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. ஆழ்கடலில் இருக்கும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கடலுக்கு அடியில் இருக்கும் சமவெளிகள் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. இந்த ஆய்வின் தரவுகளைப் பின்னணியாகக் கொண்டு யோசித்தால் பல முக்கியமான கேள்விகள் எழும். ஏன் ஆழ்கடல் ஆராய்ச்சிக்குப் போதுமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை? ஏன் ஒரு சில நாடுகள் மட்டுமே அதிகமாக ஆய்வு செய்திருக்கின்றன? ஏன் சில அம்சங்கள் அதிகமாக ஆராயப்படுகின்றன? ஏன் ஆழ்கடல் ஆராய்ச்சி பரவலாக நடப்பதில்லை என்பது முக்கியமான கேள்விதான். ஆனால் அந்தத் துறையைப் பொறுத்தவரை அது பழைய கேள்வி. போதுமான நிதி வசதியும் தொழில்நுட்பங்களும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் ஆழ்கடல் ஆராய்ச்சி என்பது பல ஆண்டுகளாகவே “அடிப்படை ஆராய்ச்சி” (Fundamental research) என்ற அளவில் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. சமூகத்திலிருந்து மிகவும் விலகி, மனித இனத்தின் ஆர்வத்துக்கான ஒரு தேடலாக அது முன்வைக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளோடு ஒப்பிடும்போது ஆழ்கடல் பகுதிகள் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை. ஆனால் வெகு சில ஆண்டுகளாக நாம் ஆழ்கடலைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறோம். காரணம் சற்றே வேதனையானது. கடலுக்கடியில் என்ன இருக்கிறது என்ற அறிவுத்தேடலால் உந்தப்பட்டு நாம் ஆழ்கடலை நாடவில்லை. கடலோரப் பகுதிகளில் மீன்வரத்து குறைந்துவிட்டது. காலநிலை மாற்றம் நம் கழுத்தை நெரிக்கத் துவங்கிவிட்டது. புதிய எரிபொருட்களும் புதிய கனிம வளங்களும் தேவைப்படுகின்றன. ஆகவே மீன்களுக்காகவும் கனிமங்களுக்காகவும் ஹைட்ரோகார்பனுக்காகவும் காலநிலைத் தீர்வுகளுக்காகவும் நாம் ஆழ்கடலை ஆராய விரும்புகிறோம். ஒரு சில நாடுகள், அந்தப் பகுதிகளைக் கையகப்படுத்திக்கொள்வதற்காகவும் ஆழ்கடலை அறிய விரும்புகின்றன. ஆனால் இந்தப் போக்கு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்பதால் இதிலிருந்து தெளிவான ஆய்வு முடிவுகளும் தரவுகளும் தெரிய இன்னும் கொஞ்ச காலமாகும். ஏன் சில நாடுகளில் அதிகமான ஆராய்ச்சி நடக்கிறது என்ற கேள்விக்கான பதில் எளிமையானது. போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், அதி நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் அங்குதான் கூடுதலாக இருக்கின்றன. ஆகவே அந்தக் கடற்பகுதிகள் கூடுதலாக ஆராயப்பட்டுள்ளன. ஏன் சில இடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துத் தரவுகள் சேகரிக்கிறார்கள் என்றால், அந்தப் பகுதிகளில் சில சிறப்பம்சங்கள் உண்டு. கடலுக்கடியில் உள்ள மலைகள் மீன் கூடும் இடங்களாக இருக்கின்றன. ஆகவே அவை மீன்பிடித் தொழிலுக்கான பகுதிகள். கடற்பரப்பில் உள்ள வேறு சில அம்சங்கள் நிலநடுக்கம், கனிம வளம் போன்றவற்றுக்கான சாத்தியக்கூறு கொண்டவை. இவை எதுவும் இல்லாத ஆழ்கடல் சமவெளிகள் போதுமான கவனத்தைப் பெறுவதில்லை. ஆராய்ச்சி வேகமாக இயங்குகிறதோ இல்லையோ, வணிகம் பின்னங்கால் தலையில்பட ஓடி வந்து முன்வரிசையில் நின்றுவிட்டது என்பதுதான் வேதனை. இவ்வளவு குறைவாக நாம் அறிந்துவைத்திருக்கும் கடற்பகுதியில் இருக்கும் கனிம வளங்களையும் எரிபொருட்களையும் எடுத்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் போட்டி போடுகின்றன. கடற்படுகையில் நடக்கும் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சர்வதேசக் கடற்படுகை ஆணையம் (International Seabed Authority) என்ற அமைப்புக்கும் உலக நாடுகளுக்கும் தினசரி இழுபறி நடக்கிறது. சில நாடுகள் ஏற்கெனவே தங்கள் எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளில் கனிம வளங்களை எடுக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஒரு இடம் எப்படிப்பட்டது, அங்கே என்னென்ன உயிரினங்கள் இருக்கின்றன என்பதை அறிவியல் தெரிந்துகொள்கிறதோ இல்லையோ, அங்கு உள்ள வளங்களை எடுத்துக்கொள்ள உரிமம் வேண்டும் என்ற கூக்குரல் நிறுவனங்களிடமிருந்து எழுகிறது. இதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியல் சிக்கல்களும் கொடுக்கல் வாங்கல்களும் தலைசுற்ற வைக்கின்றன. ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு, குறிப்பாக அடிப்படையான ஆழ்கடல் ஆராய்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படவேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் நவீனத் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படவேண்டும். வணிக நோக்கத்துக்கு அப்பாற்பட்டுக் கடற்பகுதிகள் அறிவியல் நோக்கில் ஆராயப்படவேண்டும். ஆராய்ச்சிகளில் இருக்கும் பாரபட்சங்கள் களையப்பட வேண்டும். இவை நடக்கும்வரை ஆழ்கடல் வணிக நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படவேண்டும். இதுவே இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும். ஆனால் இதை எழுதும்போதே இப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு என்பது புரிகிறது. ஆழ்கடலை, “இறுதி எல்லை” (Final Frontier) என்று வர்ணிக்கிறார்கள். அதாவது, மனித இனம் எட்டித் தொட்டுவிட நினைக்கும் இறுதி எல்லையாக ஆழ்கடல் உருவகப்படுத்தப்படுகிறது. எட்டித் தொட்டபின்னர் அது என்னவாகும் என்பதே எஞ்சி நிற்கும் கேள்வி. தரவுகள் Katherine C Bell, Kristen N Johannes, Brian R C Kennedy, Susan Poulton. 2025. How little we’ve seen: A visual coverage estimate of the deep seafloor. Donna Ferguson, 2024. Scramble for the oceans : how countries are racing to name and claim remoter parts of the seabed. Guardian Sarah Rose Bieszczad, Maximillian Fochler and Sarah de Rijcke. 2025. Societal Relevance within their epistemic living spaces. Minerva. Danica Coto. 2025. Canadian company turns to Trump for permission to mine international waters, bypassing a UN agency. AP News. Thadari.comThadari.com

யாழ்.சாவகச்சேரியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர் கைது

3 months 1 week ago
யாழ்.சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(10) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. கைது இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்களில் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தக நிலையத்தை நடத்தும் 45 வயதான முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக் கொள்வது தெரியவந்துள்ளது. ஜஸ் போதைக்கு அடிமை இந்த நிலையில் இன்று குறித்த வர்த்தகர் 330 போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருளை பெற்று பாவித்து வருவதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/

ராஜபக்சர்களை நெருங்கும் அனுர தரப்பு! கடும் பதற்றமான சூழல்! களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்!

3 months 1 week ago
இந்த திஸ்ஸ விகாரை கட்டுவதற்குமுன் எங்கே பௌர்ணமித்திருநாளை அனுசரித்தார்கள்? அங்கே அனுசரித்தால் புத்தர் ஏற்றுக்கொள்ள மாடாரோ? இதெல்லாம் தமிழ் மக்களை சீண்டும் செயல். திஸ்ஸ விகாரைக்கு வீம்புக்கு வருவோரை புத்தரே பழி வாங்க வேண்டும். இதுதான் சரத் வீர சேகராவின் இந நல்லிணக்கம். ஒரு மதத்தை தழுவும் மக்கள் சூழ்ந்துள்ள இடத்தில அவர்களின் வழிபாடுகளை தடுத்து, எங்கோ வாழுபவர்களுக்கு வழிபடும் இடம் அமைக்கிறார்கள். இவர்களைப்போல் அறிவாளிகள் வேறெங்குமில்லை.

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
நானும் இவரது சில உரைக்காணொளியைப் பார்த்துவிட்டு, யாழில் இணைக்கலாமே என்ற நோக்கோடு வந்தால் இப்படியொரு விமர்சனம் உள்ளது. உங்களது பார்வையே எனது பார்வையும். காழ்ப்புணர்வு வரலாற்று உண்மைகளைத்தரா.இப்படி எழுதுவோர் ஆதாரங்களுடன் நிறுவ வேண்டும். கீழடி அகழ்வாராய்ச்சி தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியம்? - ஓய்வுபெற்ற IAS அதிகாரி பாலகிருஷ்ணன் இந்தத் திரியோடு தொடர்புடையதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி / அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025)

3 months 1 week ago
அகமேந்திய நினைவுகளோடு பயணிக்கும் துணைவர், பிள்ளைகள், உற்றார் உறவுகளோடு நினைவினைந்த அஞ்சலி!

வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை சிங்கள மக்கள் தவிர்க்க வேண்டும் : வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்

3 months 1 week ago
ரூவாண்டாவில் எப்படி அமைதி ஏற்பட்டது. ஏன் சிறிலங்காவில் ஏன் அமைதி ஏற்படவில்லை என்பதற்கு முக்கிய காரணமே சிறிலங்காவின் இனவாத அரசு தான்.

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 2 weeks ago
உண்மையான ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டும் இணையத் தளங்களில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மிகத் தொன்மையான பொருட்களின் கரிமத் தேதியிடல் ஆய்வு முடிவுகள் 2600 வருடங்களையே காட்டுகின்றன. நான் நினைக்கிறேன் 4000 - 5000 ஆண்டுகள் என புரளியைக் கிழப்புபவர்கள் குமரிக்கண்ட கோஸ்டியாகத்தான் இருக்கும். ஆய்வு ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட ஊகங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ........ ! ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆண் : நமது கதை புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை பெண் : நான் உந்தன் பூ மாலை பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ ஆண் : நீ கொண்டு வா காதல் வரம் பெண் : பூ தூவுமே பன்னீர் மரம் ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தன்னை மீறுமே பெண் : காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே ஆண் : வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக ......... ! --- வெள்ளை புறா ஒன்று ---

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்! — கருணாகரன் —

3 months 2 weeks ago
இணைப்புக்கு நன்றி. புலிகளின் ஆளுகைக்குள் புலி உறுமல். இப்போ புலிகளைப் பலியாக்கி நரி ஊளை. எல்லாம் தமிழினத்தின் கொடும் விதியாகியநிலை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
Checked
Wed, 09/24/2025 - 08:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed