3 months 2 weeks ago
கஸ்டமெல்லாம் படுவதில்லை வேலை முடித்து (இரவு) அப்படியே படத்திற்கு போவதால் நிம்மதியாக நித்திரை கொண்டுவிடுவதுண்டு.🤣 மேலை நாடுகளில் வயதான தாத்தா இயக்குனர்கள் கூட சிறப்பாக செயல்பட ஏன் தமிழ் திரை தாத்தா இயக்குனர்கள் சிரமப்படுகிறார்கள்?
3 months 2 weeks ago
விடுமுறை காப்புறுதி பொதுவாக வெளிநாடுகளில் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்காகவும் பயன்படுத்தலாம், தனியார் மருத்துவவமனையில் ஏற்படும் செலவுகளுக்கு கூட அவை காப்புறுதி அளிக்கின்றது, பொது வைத்தியசாலையில் போய் வரிசையில் நிற்காமல் தனியார் வைத்தியசாலையில் சிறந்த சிகிச்சையினை பெறலாம்.
3 months 2 weeks ago
ஐ பி எல் எல்லாம் கல்யாண சாப்பாடு மாதிரி அதுக்கு ஜி கூகிள் ஷீட்டோடு வந்தாத்தான் முடியும். நமக்கு இப்படி டிப்பி டிப் மாரி கொறிக்கிற விசயம்தான் சரி வரும். வாழ்த்து பிரபா. வாழ்த்து எபோத. மன்னிக்கவும் பிரபா, பதில்களை ஒரு முறை மட்டுமே பதியலாம் என்பது விதி. அதாவது எடி செய்யப்பட்ட பதில்கள் நிராகரிக்கபட வேண்டும். ஆனாலும் அப்படி செய்வது கொஞ்சம் ஓவராக தெரிவதால், உங்கள் பதிலை மஹாராஜ் என்றே கருதுவதாக உள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்🙏. பிகு பிரபா மஹாராசன் என்னையும் போட்டானே என மஹராஜ் வாழ்துவதாக கேள்வி 🤣.
3 months 2 weeks ago
அதே போல் இந்த சரக்கு தீர்ந்து போன தாத்தா இயக்குனர்களின் கொடுமைக்கு முடிவு வைக்க, தாத்தா நடிகர்களும் தேவை🤣.
3 months 2 weeks ago
புலிகள் அவர்களை பணயக்கைதிகளாக வைத்து தம்மை காப்பாற்ற முனைந்தால்த்தான் இராணுவம் வேறு வழியின்றி அப்படி நடந்து கொண்டது என குதர்க்கம் பண்ணவும் நம்மில் சிலருண்டு பாத்துக்கதையுங்கோ!
3 months 2 weeks ago
மிகவும் சரி
3 months 2 weeks ago
நீங்கள் முன்பு இப்படியான பெரிய நடிகர்கள் என்று சொல்லபடுபவர்களின் படங்கள் சிலவற்றை மற்றவர்கள் வற்புறுத்தியதால் பார்த்து கஷ்டபட்டீர்கள். இந்த படத்திற்கு நிறை பேர் ஏசுவதால் அப்படி நடந்திருக்குமோ என்று நினைத்தேன்
3 months 2 weeks ago
என்ன இப்பிடிக் கேட்டு விட்டீர்கள்? "பேச்சுக்கு "ஸ்" போட்டு speech வந்தது, "பேரீடு என்பதில் இருந்து தான் எகிப்தின் பிரமிட் வந்தது" என்று அவர்களும் தமிழின் பெருமையை உயர்த்திப் பிடித்தபடி தான் இருக்கிறார்கள்😎?
3 months 2 weeks ago
2025-06-09 16:00] http://seithy.com/siteadmin/upload/Thushara-Upuldeniya-090625-seithy.jpg சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிதி குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்டார். http://seithy.com/breifNews.php?newsID=334418&category=TamilNews&language=tamil
3 months 2 weeks ago
எதிர்காலத்தில் அபாயகரமான நிலை உருவாகும் : கருணா கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாத அபாயகரமான நிலை காணப்படும். எனவே, கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான கருணா அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட கிழக்கு தமிழ் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கம் வெறும் பதவி பட்டங்களுக்காக அல்ல. எங்களது கிழக்கு மாகாண மக்கள் உரிமையுடனும் தற்துணிவுடன் காத்திரமான தியாகத்துடன் வாழவேண்டும் என்பதற்காக. கிழக்கு மாகாணம் மூவினங்களும் செறிந்து வாழும் இடம். எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் நிச்சயமாக ஒரு தமிழ் முதலமைச்சரை உருவாக்க முடியாது. ஆகவே தான் கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுள்ளோம். இப்போது அரசாங்கமும் அழைப்பு விடுத்துள்ளது. எனவே யார் முன்வருகின்றார்களோ, எங்களுக்கு சாதகமான பேச்சுவார்த்தை நடாத்தி நாங்கள் அந்த ஆட்சியை அமைப்பதற்கு உதவி செய்வோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். வட மாகாணத்தை எடுத்துக்கொண்டால் இன்று ஆட்சி அமைப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த கஜேந்தரகுமாரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது. அவ்வாறே டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் சந்தித்துள்ளார். அதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. அதில் வேடிக்கையான விடயம் ஒட்டுக்குழு, தலைவரை சந்தித்ததாக கூறப்பட்டதேயாகும். அவரும் மக்களுக்காக போராட்டத்துக்காக ஆயுதம் தூக்கி வந்த தலைவர்தான். அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து சேவையாற்றி வந்தவர். ஆகவே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சிவஞானம் துணிந்து சென்று டக்ளஸுடன் பேசி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை வரவேற்கின்றோம். இது போன்று எதிர்காலத்தில் நாங்கள் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும் என்பதுதான் எங்களது வேண்டுகோள். அதை தான் கிழக்கு மாகாணத்தில் எதிர்பார்க்கின்றோம். வேடிக்கை என்னவென்றால் யுத்தம் நடந்த காலத்தில் யுத்தத்தை விமர்சித்தவர்கள் அல்லது யுத்தத்தில் இருந்து தப்பி ஓடியவர்கள் தற்போது தேசியவாதிகளாக மாற்றமடைந்துள்ள அவர்கள்தான் தேசியத்தை பற்றி அதிகமாக பேசுகின்றனர். உண்மையில் களத்தில் இருந்த போராளிகள் இன்று துரோகிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். எனவே களத்தில் நின்ற எத்தனையோ போராளிகள் கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் வெற்றி அடைந்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றார். R https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எதரகலததல-அபயகரமன-நல-உரவகம-கரண/73-358894
3 months 2 weeks ago
புதன் கிழமை போட்டி ஆரம்பிக்குது!😄 போதை மருந்து பாவித்து ஒரு மட்ச்க்கு தடை செய்யப்பட்ட ரபடா விளையாடுகின்றார்!
3 months 2 weeks ago
உங்களின் அனுபவம் போலவே எனக்கும் இந்த விடயத்தில் சில அனுபவங்கள், அதே காலப்பகுதியில், கிடைத்திருக்கின்றன, கவிஞரே. மேலும், நீங்கள் சொல்லியிருப்பது போலவே இப்படி ஒரு உலகம் இருந்தது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரே ஊரில் கூட என் நண்பர்கள் பலருக்கும் கூட தெரிந்திருக்கவில்லை. எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஒரு நாள் அயல்வீட்டு அண்ணா ஒருவர் எங்களின் வீட்டு தலைவாசலில் ஏறி நின்று கொண்டு, 'நான் பறக்கின்றேன்................ பறக்கின்றேன்............' என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு நாள் முழுவதும். அம்மாவிடம் என்னவென்று கேட்டேன், 'அவன் கறுப்பைத் தின்றிருக்கின்றான். தெளியட்டும்.......... நாலு போட்டால் இனித் தொடவேமாட்டான்...........' என்றார் அம்மா. அந்த அண்ணாவின் தந்தையார் சும்மாவே அவர் வீட்டில் ஆட்களை நொறுக்கித் தள்ளுவார். பின்னர் 80ம் ஆண்டுகளின் முடிவில் மிகவும் பரிதாபமாக முடிந்தது இந்த அண்ணனின் வாழ்க்கை. 70ம் மற்றும் 80ம் ஆண்டுகளின் ஆரம்பங்களில் இந்தப் பொருட்களை வாங்கிச் செல்ல இலங்கையில் தென்பகுதிகளில் இருந்து சில வியாபாரிகள் வருவார்கள். குருணாகல் பகுதியில் இருந்து வரும் இருவரின் முகங்கள் இன்றும் என் மனதில் இருக்கின்றது. 90 - 94ம் ஆண்டுகளில் பேரூந்தில் கண்டியிலிருந்து குருணாகல் போய், அங்கு புகையிரதத்தில் ஏறி வவுனியா போய் வருவேன். குருணாகல் புகையிரத நிலையத்திலிருந்து குருணாகல் பேரூந்து நிலையம் தள்ளியே இருந்தது. நடந்தே போவேன். அப்படி நடக்கும் போது அந்த இருவரும் எங்காவது தென்படுவார்களா என்ற யோசனையும் வந்திருக்கின்றது. இன்னும் சிக்கலான, நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் சிலவும் உண்டு. 80ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் என்று நினைக்கின்றேன். வரும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த ஒருவர் இருந்தார். ஒரு இளைஞன் அப்படியே பலிக்கடாவாகிப் போன நிகழ்வுகள் அவை. அப்படியே காணாமல் போனவர்களின் கதைகளும் உண்டு.
3 months 2 weeks ago
தற்பொழுது மாற்றியுள்ளேன். நன்றி சுட்டிக்காட்டியமைக்கு.
3 months 2 weeks ago
உலகம் ஏற்றுக்கொண்ட தமிழ்ப்பிராமி கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள். அசோகப்பிராமியையும், தமிழ்ப்பிராமியையும் வேறுபடுத்தியவரே இவர்தான். தமிழ்நாட்டில் இருந்த கல்வெட்டுகளை வரலாற்று மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு தெரிந்திருந்த பிராமி எழுத்துக்களை கொண்டு வாசிக்க முடியாதிருக்கும் போது, அவை இன்னொரு வகை பிராமி எழுத்துருக்கள் என்றும், அவர் அதை தமிழ்ப்பிராமி என்றும் வகைப்படுத்தி கல்வெட்டுகளை வாசித்து தொகுத்தார். தினமணியில் ஆசிரியராகவும் இருந்தார். அன்று தான் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாற்றம் வந்தது. பத்திரிகைகளில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்ததும் மகாதேவன் அவர்களே. புதுமைப்பித்தனும், அசோகமித்ரனும் அவருடைய முயற்சியால் தான் தமிழர்களுக்கு ஓரளவாவது தெரியவந்தனர். இன்று கூட இவர்களை எங்களின் சமூகத்தில் பலருக்கும் தெரியாது. புனைவு உலகில் உலகில் எவருக்கும் இணையான இரு மேதைகள் இவர்கள். இன்னும் மகாதேவன் அவர்கள் பற்றி நிறையவே எழுதலாம். அவர் அன்றே வெளிநாடுகள் போய் இருக்கலாம். ஆனாலும் தமிழ்நாட்டிலேயே தங்கி அரசுப் பணியுடன் குகைகளையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார். இதில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு புத்தகம் உலகெங்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது. ஒரு ஆராய்ச்சியாளின் அடிப்படையே நேர்மை என்பதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாதவர். இவரின் சில புத்தகங்கள்: The Indus Script: Texts, Concordance and Tables (1977) Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003) Corpus of Tamil-Brahmi inscriptions (1966) The Indus Script: Texts, Concordance and Tables (1977) Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D. (Harvard Oriental Series, 62) (2003) Early Tamil Epigraphy: Tamil-Brahmi Inscriptions. Revised and Enlarged Second Edition: Volume 1 (en: Central Institute of Classical Tamil) (2014) Akam and Puram: 'Address' Signs of the Indus Script (2010) Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case Study (2014) Toponyms, Directions and Tribal Names in the Indus Script (Archaeopress) (2017) 2018ம் இவர் ஆண்டு இறந்த பொழுது தான் இவரையோ, இவரின் பணிகளையோ அறிந்தவர்கள் மிகச்சொற்பமே என்று தெரிந்தது. முக்கியமாக ஈழத்தமிழர்களில் இவரை அறிந்திருந்தவர்களை எண்ணி விடலாம் என்ற நிலையே இருந்தது. இன்றும் அதுவே தான் நிலை. இவர் மறைந்தது தமிழ் பேசும் உலகத்திற்கு ஒரு மிகப்பெரிய, நிரப்பவே முடியாத இழப்பாகப் போனது. அவர் விட்ட இடத்திலிருந்து முயன்று கொண்டிருக்கும் ஒருவர் பாலகிருஷ்ணன். தமிழின் வரலாற்றில் நிற்கப் போகும் இன்னொரு மேதை கி.ரா. இவர்களை எல்லாம் தமிழர்களே இல்லை என்றும், வசவு வார்த்தைகளாலும் பொதுவெளிகளில் எழுதும் சிலர் தமிழுக்கு என்ன தான் செய்திருக்கின்றார்கள்...............
3 months 2 weeks ago
நந்தி எதனையும் செய்ய விடாது. தமிழ் மக்கள் தான் ஏதோ பிழை விட்டதாக சிங்களம் இப்போதும் கதை விடுகிறது.
3 months 2 weeks ago
வன்னித் தேசம் 23h · 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அல்லைப்பிட்டிக்கு இலங்கை இராணுவம் வந்தபோது பிலிப்பு நேரியார் ஆலய வளவிற்குள் அகதிகளாக உட்கார்ந்து இருந்த 'அல்லைப்பிட்டி, மண்டைதீவு, மண்கும்பான்' ஆகிய மூன்று கிராம மக்களில் அனைத்து திருமணமான, சில திருமணமாகாத இளைஞர்களின் கைகளிலும் குழந்தைகள் இருந்தன. "பிள்ளை, குட்டிக் காரன் என்றால் பிடிக்க மாட்டார்கள்" என்று எண்ணிய பல இளைஞர்கள் தங்கள் அக்கா, தங்கையின் பிள்ளைகளைக் கையில் தூக்கி வைத்து இருந்தார்கள். கோயில் வளவிற்குள் ஒரு இராணுவ சிப்பாய் கூட நுழையவில்லை. அந்தப் படை நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மட்டும் தனது உதவியாளர்கள் இருவருடன் ஆலய வளவிற்குள் நுளைந்து வண.பிதா.சந்திரபோஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி "13 வயது தொடங்கி 40 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அனைவரையும் என்னிடம் நம்பி ஒப்படையுங்கள். 'தலையாட்டி' முன்னால் விட்டு அடையாளம் காட்டி விட்டுப் பத்திரமாக உங்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம்! என்று அந்தக் குருவானவருக்கு உறுதி அளித்து விட்டு எனது அண்ணன்,நான், எனது ஒரு தம்பி உட்பட 13 வயது தொடங்கி 40 வயதுக்கு உட்பட்ட சுமார் 200 பேரைக் கைது செய்து மண்டைதீவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களில் பலர் 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பவில்லை. ராணுவம் பிலிப்பு நேரியார் கோயில் வளவைச் சுற்றி வளைத்து நின்ற போது தனது பாதுகாப்புக்காக தனது அக்காவின் மகளைக் கையில் தூக்கி வைத்திருந்த எனது நண்பன் சிவபாலன் இராணுவம் எங்களை வெளியே அழைத்துச் சென்ற போது அந்த அக்காவின் குழந்தையை அக்காவிடமே கொடுத்து விட்டு எங்களுடன் வந்தான். எவ்வளவு உயிர்ப் பயம் இருந்தால் இளைஞர்கள் அக்காவின், தங்கையின் பிள்ளையைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு 'திருமணம் ஆனவர்கள்' போல நடித்திருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.😌" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t81/1/16/1f60c.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> எங்களைப் பிலிப்பு நேரியார் ஆலய வளவில் இருந்து தொலை தூரத்திற்கு அஃதாவது கிறீஸ்தவ மதகுரு மற்றும் அந்த ஆலயத்தில் எஞ்சியிருந்த பொதுமக்களுக்கு எங்கள் கதறல் சத்தம் கேட்காத தொலைவுக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் எனக்கும் என்னோடு அழைத்து வரப்பட்ட சுமார் 200 பேருக்கும் நடந்ததெல்லாம் எழுத்தில் வடிக்க முடியாதவைகள். எனது அண்ணன் உட்பட இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணியவர்கள் கண்ணைக் கட்டி அழைத்துச் செல்லப் பட்டது, சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் கூட 'தர்க்கவியல் ரீதியாக'(Logic) ஒரு காரணம் இருக்கலாம். ஆனால் இராணுவத்தைக் கண்டதும் உயிர்ப் பயத்தின் காரணமாக அக்காவின் குழந்தையைக் கையில் தூக்கி வைத்திருந்த 'இயக்கத்துடன்' எந்த வித தொடர்பையும் பேணாத எனது நண்பன் சிவபாலனும், தமிழகத்தில் இருந்து எங்கள் கிராமத்துக்குப் பிழைப்புத் தேடி வந்து எங்கள் உறவினர் ஒருவரின் கடையில் நம்பிக்கைக்கு உரிய ஊழியனாக வேலை செய்து கொண்டிருந்த 'முருகனும்' இன்னும் 23 பேரும் "இராணுவத்திற்கு சில வேலைகளில் உதவ வேண்டி இருக்கிறது, 25 பேர் தேவை; எழுந்து வாருங்கள்! இரண்டு நாட்களில் விட்டு விடுவோம்! என்று இன்னொரு ராணுவ அதிகாரியும் தற்போது தமிழ்த் தேசியப் பரப்பில் ஒரு கட்சியால் 'பாவமன்னிப்பு' கொடுக்கப் பட்டுள்ள தோழரும் சொன்னதை நம்பி அல்லவா எழுந்து சென்றார்கள். அந்த 'எந்தப் பாவமும் அறியாத 25 பேரும் கூட' 35 வருடங்கள் ஆகியும் இன்று வரை வீடு திரும்பாததை என்னால் ஜீரணிக்க முடியாதுள்ளது. செம்மணியில் 'குழந்தைகளின் எலும்புக் கூடுகளும்' தோண்டி எடுக்கப் படுவதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்பாக்களுடன் அரியாலை, கைதடி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது அப்பா, சில வேளை அம்மாக்களுடன் இராணுவத்தால் பிடிக்கப் பட்டு இப்போது புதை குழிகளில் இருந்து எலும்புக் கூடுகளாக மீட்கப் படும் அந்தப் பிஞ்சுகளுக்கும் அஞ்சலி! 💐" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te3/1/16/1f490.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌸" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf0/1/16/1f338.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">💮" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t70/1/16/1f4ae.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪷" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4e/1/16/1fab7.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🏵" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t1a/1/16/1f3f5.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌹" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f339.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌺" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t99/1/16/1f33a.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌻" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t1a/1/16/1f33b.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌼" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t9b/1/16/1f33c.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🌷" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6f/1/16/1f337.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🕯" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t7d/1/16/1f56f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🪔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t54/1/16/1fa94.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">🙏" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f64f.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">(அவர்கள் இப்போது உயிரோடு இருந்தால் சுமார் 35 வயதைத் தொட்ட நடு வயது ஆண்களாக, பெண்களாக மருத்துவராக, பொறியியலாளராக, ஆசிரியர்களாக இன்ன பிற பதவிகளில் இருந்திருப்பார்கள்) கீழே உள்ளது வேறு ஒருவர் எழுதிய பதிவு: ------------------------------------------------ முன் சைக்கிள் பார்ல எங்கள ஏத்திற்று பின்னுக்கு கரியல்ல அம்மாவ ஏத்திற்று அப்பா போவார் இது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும் இப்படித்தான் பல குடும்பங்கள் செம்மணி தாண்டிப் போகும்போது இராணுவம் சோதனைக்கு என்று கூப்பிடும். அங்கு என்ன நடக்கும்? அப்பாவையும் நிர்வாணமாக்கி அப்பா கண் முன்பே இராணுவம் அவர் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வார்கள். ஒருவனா இல்லை; அத்தனை பேரும் கொடுமை செய்து கெடுப்பார்கள். பின் குடும்பத்தையே அடித்து கொன்று குழி தோண்டிப் புதைப்பார்கள் இது அங்கு வழமையாக நடந்தது. ஒருவர் அல்ல இருவர் அல்ல ஒன்பது இராணுவமும் இரண்டு காவல்துறையும் சேர்ந்து பாடசாலை மாணவி கிருசாந்தியை வன் கொடுமை செய்ததாக அதே இராணுவ முகாம் இராணுவ சிப்பாயின் வாக்குமூலம் உள்ளது உங்களுக்கு தெரியுமா? கிருசாந்தியை தேடிச்சென்ற பக்கத்து வீட்டு அண்ணனையும், அவளின் தாயையும் சகோதரனையும் கொலை செய்யும்போதும் கூட அங்கு கிருசாந்தியை கூட்டு பாலியல் செய்துகொண்டுதான் இருந்தார்கள். கிருசாந்தியின் தாயையும் சகோதரனையும் மற்றவரையும் அவர்கள் அடித்துக் கொல்லும் போது நேரம் இரவு 10:00 மணி. கூட்டு பாலியல் செய்து முடிந்து கிருசாந்தியை கொலை செய்து புதைக்கும்போது நேரம் நள்ளிரவு 12:00 இப்படி எத்தனையோ குடும்பங்கள் சிதைக்கப்பட்ட இடம்தான் செம்மணி 😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😔" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t71/1/16/1f614.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;">😢" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/te/1/16/1f622.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> மறந்து வாழ ஆசைப்படுகிறீர்களா? அப்படி வாழ்ந்தால் வரலாறு உங்களை மன்னிக்காது.
3 months 2 weeks ago
கைதானார் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர்! Published By: VISHNU 09 JUN, 2025 | 09:20 PM பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் போது அனுமதியற்ற முறையில் சிலரை விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/217055
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க்ரவுட்சயின்ஸ் நிகழ்ச்சி பதவி, பிபிசி உலக சேவை 9 ஜூன் 2025, 10:12 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் டேட்டிங் செயலிகள் முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கி, உறவுகளின் லேபிள்களும் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையாகவே ஒருதார மணம் செய்யும் தன்மை (மோனோகமி) கொண்டவர்களா என்கிற கேள்வி முன்பு எப்போதையும் விட பொருத்தமுள்ளதாகிறது. லண்டனில் வசிக்கும் ரோமானியரான அலினா 'பாலிஅமோரி' அனுபவம் பெற்ற பிறகு இதே எண்ணத்தில் தான் இருந்தார். பாலிஅமோரி என்பது சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் ஒரே நேரத்தில் பல நெருக்கமான உறவுகளில் இருப்பது. "நான் சமீபத்தில் பாலிஅமோரி பின்பற்றும் ஒருவரைச் சந்தித்தேன், அவர் எப்போதுமே அப்படித்தான் இருந்துள்ளார்" என விவரித்தவர், நாம் ஏன் ஒரு சமூகமாக ஒருதார மணம் தான் விதி என ஏற்றுக் கொண்டோம் எனக் கேள்வி எழுப்புகிறார். நம்முடைய பரிணாம வளர்ச்சி பாதை புரிந்து கொள்ள நமக்கு நெருக்கமான உயிரினங்களின் இனப்பெருக்க உத்திகளை ஆராய்வது உதவியாக இருக்கும். "கொரில்லாக்கள் பல தார மணம் செய்பவை, ஒரு ஆண் உயிரினம் பல பெண் உயிரினங்களுடன் இனச்சேர்க்கை மேற்கொள்ளும்" என பிரிட்டனில் உள்ள ப்ரிஸ்டால் பல்கலைக்கழகத்தில் பரிணாமத்தை ஆய்வு செய்யும் உயிரியலாளரான கிட் ஓபி தெரிவித்தார். "எனவே அந்தக் குழுவில் உள்ள சந்ததியினர் அனைவரும் தந்தை ஒருவராக இருப்பார், ஆனால் தாய் வேறு வேறாக இருப்பார்கள்" என்றார். ஆனால் இது ஒரு திறன்மிகு இனப்பெருக்க உத்தி இல்லை என்கிறார் ஓபி. ஏனென்றால் இது அதிக அளவிலான சிசுக் கொலைக்கு வழிவகுக்கும் எனக் கூறுகிறார். சிசுக்கொலை என்பது கொரில்லா வாழ்க்கையில் மிகவும் கொடூரமான ஒன்று எனக் கூறும் அவர், "ஒரு ஆண் கொரில்லா தனக்கு பிறக்காத குழந்தை கொரில்லாக்களை கொல்லும், இதன் மூலம் அதன் தாயுடன் விரைவாக இனப்பெருக்கம் மேற்கொள்ள முடியும். இத்தகைய பரிணாம உத்தியை நாம் பின்பற்ற முடியாது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்கள் குரங்குகள் பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும். ஆனால் மனிதருக்கு நெருக்கமான குரங்கினங்களான சிம்பன்சிக்கள் மற்றும் போனோபோஸ்களில் பெண்கள் வேறு விதமான பரிணாம உத்தியைப் பின்பற்றுகின்றன. பெண் குரங்குகள், பல ஆண் குரங்குகளுடன் இனப்பெருக்கும் மேற்கொள்ளும். இதன் மூலம் தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு குழந்தை கொரில்லாக்கள் தாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறையும். மனிதகுலமும் கிட்டத்தட்ட இதே போன்ற அமைப்பில் இருந்து தான் தொடங்கி இருக்கக்கூடும். ஆனால் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அனைத்தும் மாறின. இதற்கு காலநிலை மாற்றம் தான் காரணம் என்கிறார் ஓபி. "நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட வறட்சியால் பல இடங்கள் தரிசாக மாறின. ஆதி மனிதர்கள் தங்களை வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாத்து கொள்ள பெரிய குழுக்களில் இருக்க வேண்டியிருந்தது. இத்தகைய பெரிய சிக்கலான குழுக்களை சமாளிப்பதற்காக மூளை பெரிதாகியது, இதனால் பாலூட்டும் காலமும் அதிகரித்தது" என்றார். பெரிய குழுக்களில் அதிக ஆண்கள் இருப்பதால், தந்தை வழியை பின்பற்றாதிருப்பது கடினமானது. "அதே நேரத்தில் பெண்களுக்கு தங்களின் பிள்ளைகளை வளர்க்க ஆண்களின் துணை தேவைப்பட்டது. எனவே அவர்கள் ஒரு தார மணம் என்கிற முறைக்கு மாறினர்" மோனோகமி சிறந்த உத்தியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெரிய மூளை கொண்ட மெதுவாக வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது. இந்த மாற்றம் என்பது மோனோகமி சிறந்தது என்பதனால் நிகழவில்லை, அது தான் ஒரே சாத்தியமான வாய்ப்பு என்பதால் தான் சாத்தியமானது என ஓபி கூறுகிறார். பெரிய மூளை கொண்ட மெதுவான வளரும் ஆண் குழந்தைகளை வளர்க்க அதிக அளவிலான பெற்றோரின் ஈடுபாடு தேவைப்பட்டது. இது ஒரு தாயால் சமாளிக்கக்கூடியதை விட மிகுதியானது. ஆதி மனிதர்கள் ஒரு தார மணம் செய்பவர்களாகப் பரிணமித்ததாக வரலாறு கூறினாலும், அதனை தேர்வு செய்தவர்கள் ஒருவருக்கு மட்டும் உண்மையாக இருக்க சிரமப்பட்டனர். "வாழ்நாள் முழுவதும் ஒருவருடனே வாழ்ந்து, ஏமாற்றாத உயிரினங்களும் உள்ளன. ஆனால் அவை மிகவும் அரிது" என்கிறார் முனைவர் ஓபி. மேலும் அவர், "நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர் கிப்பன் குரங்குகள் தான். கிப்பன்கள் மற்ற ஜோடிகளிடம் இருந்து தனித்து வசிப்பதால், காட்டில் தங்கள் பகுதிக்குள் யார் வருகிறார்கள், யார் வருவதில்லை போன்றவற்றை கட்டுப்படுத்துவது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எளிதாக இருந்தது." "ஆனால் மனிதர்கள் போன்ற அதிக ஆண்கள், அதிக பெண்கள் வாழும் குழுக்களில் நீங்கள் இருந்தால், அங்கு கட்டுப்படுத்துவது என்பது கடினம், உங்களின் துணை ஏமாற்றுகிறாரா இல்லையா என்று அறிவது கடினம்" என்கிறார். அந்த விதத்தில் பார்க்கையில் ஒரு தார மணம் என்பது இயற்கையான தேர்வு என்பதை விட பிழைக்கும் உத்தியாகவே உள்ளது. ஆனால் இதில் குறைகளும் உள்ளன. பந்தம் உருவாக்குவதன் பின்னணி என்ன? நாம் காதலில் விழுந்தாலோ அல்லது உண்மையாக இருந்தாலோ நம் மூளைகளில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் நரம்பியல் முனைவர் பட்ட மாணவரான சாரா ப்ளூமெந்தல், பிரேரி வோல்ஸ் என்கிற உயிரினத்தை ஆய்வு செய்து வருகிறார். இந்த சிறிய உயிரினங்கள், மனிதர்களைப் போல நீண்ட கால பிணைப்புகளை மேற்கொள்பவை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன. அவர்களின் மற்ற வோல் உறவினர்களைப் போல அல்லாமல் பிரேரி வோல்ஸின் மூளையில் அதிக அளவிலான ஆக்ஸிடாஸின் ரிசப்டர்கள் உள்ளன. ஆக்ஸிடாஸின் "கட்டிள் ஹார்மோன்" (cuddle hormone) என்றும் அழைக்கப்படுகிறது. இவை தொடுதல் ஏற்படுகிற சமயங்களில் மூளையில் வெளியாகும் நியூரோகெமிக்கல் ஆகும். "நாம் பரிசோதனை முறையில் பிரேரி வோல்ஸ்களில் உள்ள ஆக்ஸிடாஸின் அளவை சீண்டினால் அவர்களால் வலுவான பந்தத்தை உருவாக்க முடியவில்லை. அவர்களின் துணைகளுடன் குறைவான நேரத்தையே செலவிடுகின்றனர்" என்றார் ப்ளூமெந்தல். பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்களிடமும் இதே போன்ற ஆக்ஸிடாஸின் அமைப்பு தான் உள்ளது, நம்முடைய மூளை பந்தம் மேற்கொள்வதை நேர்மறையாக அணுகுவதற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால் மற்றொரு கெமிக்கலான டோபமைன், அர்ப்பணிப்பு என்பதற்கு மாறாக புதுமையை நோக்கி நம்மை தள்ளுகிறது. பந்தத்தின் தொடக்க கட்டத்தில் நம்முடைய மூளையில் டோபமைன் நிரம்பி வழிகிறது, இது ஈர்ப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை தூண்டுகிறது. பந்தம் உருவான பிறகு டோபமைன் வடிவங்கள் மாறுகின்றன. பல கணவன்கள் கொண்ட பெண்கள் ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது ஒரு தார மணத்திற்கான பரிணாம வாதம் இருந்தாலும், மனித கலாச்சாரங்கள் எப்போதுமே பல தரப்பட்ட உறவு ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் முனைவர் கேட்டி ஸ்டார்க்வெதர், நேபாள், திபெதி தொடங்கி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா என உலகம் முழுவது, 50-க்கும் மேற்பட்ட பாலியண்ட்ரி சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். பாலியண்ட்ரி என்றால் ஒரு பெண் பல கணவன்கள் வைத்திருக்கும் முறையைக் குறிக்கிறது. பாலிஜினியை (ஒரு ஆண் பல மனைவிகள் வைத்திருப்பது) விட பாலியண்ட்ரி அரிதானது என்றாலும் அந்த கூற்றை நம்ப முடியாத ஒன்றாகப் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறார் ஸ்டார்க்வெதர். "பல பார்ட்னர்கள் வைத்திருப்பதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக பலன் அடையலாம். ஒருவரின் முதன்மையான கணவன் இறந்தாலோ அல்லது சில பூர்வகுடி வட அமெரிக்க குழுக்களிடம் இருப்பதைப் போன்று நீண்ட காலம் கணவன் காணாமல் போனாலோ மாற்று திட்டம் கையில் வைத்திருப்பது சிறந்தது தான்" என அவர் கூறுகிறார். சில சந்தர்ப்பங்களில், பல தார ஏற்பாடுகள் மரபணு நன்மைகளையும் வழங்கியுள்ளன. "மக்கள் அதிகமான நோய்வாய்ப்பட்டு அதனால் உயிரிழக்கும் சூழல்களில், நீங்கள் சற்று வேறு விதமான மரபணு அமைப்பு கொண்ட பல பிள்ளைகளைக் கொண்டிருந்தால் நீங்கள் நல்ல நிலையில் தான் இருப்பீர்கள்" என ஸ்டார்க்வெதர் விவரிக்கிறார். "அவர்கள் நடப்பு சூழலில் நன்றாகப் பொருந்திப் போவார்கள்" என்றும் தெரிவித்தார். ஆனால் பல தார முறையில் சவால்களும் இல்லாமல் இல்லை. பல உறவுகளைச் சமாளிப்பதற்கு, நேரம், உணர்வியல் சக்தி மற்றும் பேச்சுவார்த்தை தேவைப்படும். "நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி பல துணைகள் வைத்திருப்பது மிகவும் கடினமானது. பொருளாதார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சரி அது மிகவும் கடினம். ஒரு தார மணம் என்பது எண்ணிக்கை அளவில் மிகவும் பொதுவான திருமண வடிவமாக இருப்பதற்கு இது தான் முதன்மை காரணம் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார் ஸ்டார்க்வெதர். பாலிஅமோரி அனுபவம் எப்படி உள்ளது? அலினாவுக்கு அவருடைய முந்தைய ரிலேஷன்ஷிப்பில் மோனோகமி வேலை செய்யவில்லை என்கிறார். தற்போது பாலிஅமோர் உறவில் இருக்கும் அவர் பல சிக்கலான உணர்வுகளைக் கடந்து வருகிறார். பொறாமை என்பது மிகவும் கடினமாகவும் வலுவாகவும் இருக்கும் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். "ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில், இந்த உணர்வுகளில் பெரும்பாலானவை நம்முடைய பார்ட்னர் நம்மிடம் நேர்மையாக இல்லை என்கிற உணர்வில் இருந்து தான் வருகின்றன. அவர் நேர்மையாக தான் இருக்கிறார் எனத் தெரிவது பொறாமை உணர்வை சமாளிக்க உதவுகிறது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. பொறாமை என்பது பெரிய பிரச்னை இல்லை என அவரின் பார்ட்னர் கூறுகிறார். "பல ஆரோக்கியமான உறவுகளை சமாளிக்க தேவைப்படும் நேரம் மற்றும் முயற்சி பெரும் சுமையாக இருக்கலாம்" என்றார். அவர்கள் இருவருமே இது சரியானது தான் என்கின்றனர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை என்கிறார் அலினா. மேலும் அவர், "அது உங்களை உரையாட வைக்கிறது, மற்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் அதை மேற்கொள்ள மாட்டீர்கள், அது தான் எங்கள் உறவை வலுவானதாக்குகிறது" என்றார். எனவே, நாம் இயற்கையில் ஒரு தார தன்மை கொண்டவர்களா எனக் கேள்வி எழுப்பினால் ஆம் மற்றும் இல்லை என்கிற இரண்டுமே தான் பதிலாக அமையும். வரலாறு மற்றும் கலாச்சாரங்கள் முழுவதுமே, மனிதர்களின் தங்களின் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற பல வகையான உறவு முறைகளை உருவாக்கியுள்ளனர். சிலருக்கு பல தார முறை என்பது உணர்வியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஆனால் பிறருக்கு, காதலைக் கடத்திச் செல்ல ஒரு தார மணம் என்பது எளிமையான மற்றும் சமாளிக்கக்கூடிய வழியாக உள்ளது. மனிதர்கள் நெகிழ்வாக இருக்க பரிணமித்துள்ளனர். இது நாம் உறவுகள் வைத்திருப்பது மற்றும் திருமணம் செய்து கொள்ளும் முறை ஆகியவற்றை உள்ளடக்கும் எனக் கூறும் ஸ்டார்க்வெதர் "நாம் உலகின் அனைத்து விதமான சுற்றுச்சூழலிலும் வாழ்கிறோம். அதற்கு நாம் கொண்டிருக்கும் நெகிழ்வுத்தன்மை மற்றும் அணுகுமுறையே காரணம்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39xe3mj21ro
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 08 JUN, 2025 | 03:20 PM ஹரிகரன் 31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட ருவாண்டா தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவராக இருக்கின்ற கல்லி அலெஸ் (Cally Alles) அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். ருவாண்டாவின் வரலாறு, இனப்படுகொலையில் எதிர்கொண்ட அழிவுகள், அதற்குப் பின்னர் அங்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார, அரசியல், சமூக மாற்றங்கள் குறித்து மிகவிரிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அந்த கட்டுரையை எழுதிய கல்லி அலெஸ், 1978 ஆம் ஆண்டிலிருந்து ருவாண்டாவில் வசித்து வருகின்ற- இலங்கையரான தேயிலைத் தோட்டத் தொழிலதிபர். 1994 ஆம் ஆண்டு ருவாண்டாவின் ஜனாதிபதியாக இருந்த ஜூவேனல் ஹபியாரிமானா, பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, டுட்சி சிறுபான்மையினர் மீது, ஹூட்டு பெரும்பான்மையினர் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டனர். தலைநகர் கிகாலியில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கி இருந்த அகதிகள் முகாம்களுக்குள் நுழைந்து ஈவிரக்கமற்ற இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. சுட்டும் வெட்டியும், இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கடந்த நூற்றாண்டில் மிகக் கோரமாக அரங்கேறிய ஒரு இனப்படுகொலையாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. சுமார் 3 மாத காலப்பகுதிக்குள் ருவாண்டாவில் சுமார் 8 இலட்சம் வரையிலான சிறுபான்மை டுட்சிக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன. சுமார் 5 இலட்சம் வரையான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதற்குப் பின்னர், அங்கு சர்வதேச தலையீட்டுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆட்சியில் இருந்த- இனப்படுகொலை அரசாங்கம விரட்டியடிக்கப்பட்டது. அதன் பின்னர் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டன. இப்போது ருவாண்டா ஆபிரிக்காவிலேயே மிகமிக அமைதியான ஒரு நாடாக விளங்குகிறது. உலகளவில் கூட, அமைதியான நாடு என்று சொல்லக் கூடிய நிலையில் இருக்கிறது. ருவாண்டா என்றால் எதிர்மறையான ஒரு எண்ணமே மனதில் தோன்றும். அந்தளவுக்கு அங்கு நிகழ்ந்த இனஅழிப்பின் அடையாளம் உலகம் முழுவதும் பதிவாகியிருக்கிறது. ஆனால், இப்போது அந்த நாட்டின் நிலைமை அதற்கு மாறாக உள்ளது என்பதை, ருவாண்டாவுக்கான இலங்கையின் கௌரவ தூதுவர் கல்லி அலெசின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது. பாதுகாப்பு மிக்க ஒரு நாடாக அது மாறியிருக்கிறது. பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு 8.2 வீத பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்த ருவாண்டா, 2024 ஆம் ஆண்டு 8.9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இது அந்த நாடு எந்தளவு வேகமாக பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அங்கு சேவைகள் துறையும், தொழிற்துறைகளும், விவசாயத் துறையும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக அது மாறியிருக்கிறது. அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 63.75% வீதமானோர் பெண்களாக இருக்கின்றனர். பெண்கள் அங்கு மிகவும் பாதுகாப்பான நிலையை உணர்கிறார்கள். பெண் சுற்றுலா பயணிகள் தனித்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மிகஉகந்த இடமாக இருக்கிறது. இப்படி ருவாண்டாவின் புகழை அடுக்கியிருக்கிறார், கல்லி அலெஸ். நீண்ட இனஅழிப்பு வரலாற்றை கொண்டிருக்கும் இலங்கைத்தீவு போரில் இருந்து முற்று முழுதாக விடுபட்டு, 16 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும், இலங்கைத் தீவு அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ அனைவருக்கும் பாதுகாப்பான நாடாக உருவாகவில்லை- உருவாக்கப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் இல்லை, அது மோசமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வங்குரோத்து நிலையில் இருந்து மீளுவதாகச் சொல்லப்பட்டாலும், மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதார நிலையும் மோசமான நிலையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெற்று வருவதாக கூறப்படுகின்ற போதும், அதனை நிரூபிக்கக் கூடிய வகையில், மக்களால் உணரக் கூடிய வகையில், நாட்டின் பொருளாதாரம் செழிப்பை நோக்கி நகரவில்லை. அனைத்து சமூகங்களுக்குமான பொருளாதாரப் பாதுகாப்பு நிலை உறுதிப்படுத்தப்படாமல், கேள்விக்குறியான நிலையே நீடிக்கிறது. அதேவேளை, அரசியல் ரீதியாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போருக்கான அடிப்படைக் காரணிகளை தீர்ப்பதற்கு ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இப்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கங்கள் செயற்படுத்திய விடயங்களை கூட, வலுவற்றதாக்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்கிறது எந்த ஒரு போருக்கும் அரசியல் ரீதியான காரணிகள் இருக்கும். இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டத்துக்கும் அரசியல் காரணிகள் இருந்தன. தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளும் அட்டூழியங்களும் இனப்படுகொலைகளும் தான் பெரும் போருக்குள் நாடு தள்ளப்படுவதற்கு காரணம். அரசியல் ரீதியாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படாமல், அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படாமல் போனதன் விளைவு அது. அதற்காக முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிகளும் சமாதான பேச்சுக்களும் எந்த பயனும் தராத நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவது என்ற பெயரில் மிகப்பெரிய இனஅழிப்பை அரங்கேற்றினார்கள். அதன் பின்னரும், தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிரவோ உரிமைகளை உறுதிப்படுத்தவோ இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக அதனை உறுதிப்படுத்தாமல் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியாது. ஆனாலும் எந்த ஒரு சிங்கள ஆட்சியாளரும் அதற்குத் தயாராக இல்லை. அதேபோல, போரின்போது இடம்பெற்ற இனஅழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்படவோ இல்லை. பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கு எந்த ஒரு சிங்கள ஆட்சியாளர்களும் துணியாத நிலையிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்காமல் போராடுகின்ற நிலை இன்று வரை தொடர்கிறது. பொறுப்புக்கூறல் இல்லாமல் நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது. ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லாமல் - குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து தப்பிக்க வைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். இது இலங்கையில் நல்லிணக்கம், நிலையான அமைதி ஏற்படுவதற்கு உள்ள மிகப்பெரிய தடையாக உள்ளது. 31 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய இனஅழிப்பை எதிர்கொண்ட இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய அவலத்த எதிர்கொண்ட ருவாண்டா இன்று , மீள் எழுச்சி பெற்றிருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், அங்கு இடம்பெற்ற இனஅழிப்புக்கு பொறுப்புக்கூறல் இடம் பெற்றதுதான். இனஅழிப்பை மேற்கொண்டவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருமளவானோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் ஊடாக, முற்று முழுதாக இல்லாவிட்டாலும், பொறுப்புக்கூறல் கடப்பாடு பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதற்கு சர்வதேச துணையும் இருந்தது. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில், அத்தகைய நிலை இல்லை. சர்வதேசமும் தனது முழுமையான அதிகாரத்தை பிரயோகிக்கவில்லை, இலங்கை அரசும் பொறுப்புக்கூறலை ஒரு முக்கிய கடப்பாடாக கருதி, நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசாங்கம் கூட, ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்குவதாக கூறிய இப்போதைய அரசாங்கம், அதனை தொடங்கவே இல்லை. இவ்வாறான நிலையில், இலங்கையின் நிலையான அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் எந்த வகையிலும் ஏற்ற சூழல் உருவாக்கப்படவில்லை. போருக்குப் பிந்திய அமைதி என்பது, அரசியல், பொருளாதார, பொறுப்புக்கூறல், சமூக ரீதியாக மாற்றங்களின் ஊடாகத் தான், சாத்தியப்படும். அத்தகைய மாற்றங்களை இலங்கை சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏதும், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தென்படுவதாக இல்லை. https://www.virakesari.lk/article/216935
3 months 2 weeks ago
Checked
Wed, 09/24/2025 - 05:56
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed