3 months 1 week ago
10 JUN, 2025 | 05:49 PM கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை புதன்கிழமை (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாக, காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும். இந்த கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217100
3 months 1 week ago
சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல்தெனியவிற்கு விளக்கமறியல் Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 04:18 PM குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவை நாளை புதன்கிழமை (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட தரவுகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார். கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் போது அனுமதியற்ற முறையில் சிலரை விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார். https://www.virakesari.lk/article/217099
3 months 1 week ago
யாழ். தையிட்டியில் ஆர்ப்பாட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு 10 JUN, 2025 | 03:55 PM பொசன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ். தையிட்டி பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்த இடத்துக்கு சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217097
3 months 1 week ago
10 JUN, 2025 | 06:04 PM யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 7, 8 ஆகிய திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை 11ஆம் திகதி அரையிறுதிப் போட்டியுடன் இறுதிப்போட்டி நிறைவு பெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. வட மாகாணத்தைச் சேர்ந்த 14 அணிகள் பங்குபற்றும் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது கல்லூரியின் அதிபர் அருட்திரு A.P. திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லுரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர் யூவான் ரைற்றஸ் அவரது பாரியாருடன் கலந்துகொண்டார். இப்போட்டியின் இறுதி அங்கமாக நாளை காலை 8.30 மணிக்கு இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் ஒன்றில், சென். பற்றிக்ஸ் கல்லூரியும் சென். ஜோன்ஸ் கல்லூரியும், மற்றைய போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரியும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் மோதவுள்ளன எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, பகல் 1 மணியளவில் மூன்றாம் இடத்துக்கான போட்டியும் மாலை 3 மணிக்கு இறுதிப் போட்டியும் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். https://www.virakesari.lk/article/217101
3 months 1 week ago
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) ஆஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) ஆஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) தென்னாப்பிரிக்கா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) உஸ்மான் கவாஜா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) நேதன் லையன் போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்திரேலியா
3 months 1 week ago
சட்டவிரோத குடியேற்றம் : தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம்! Published By: DIGITAL DESK 3 10 JUN, 2025 | 01:07 PM போராட்டங்கள் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க கடற்படையினர் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த என்.ஜி., எனப்படும் தேசிய காவல் படை பொலிஸாரை அனுப்பி வைத்து ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூஸ்கம் உள்ளூர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த, நூற்றுக்கணக்கான அமெரிக்க கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 700 கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வடக்கு கட்டளைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கடற்படையினர், ஏற்கனவே அங்குள்ள தேசிய பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆளுநர் கரேன் பாஸ் ஆகியோர், கடற்படையினரின் வருகை தேவையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் வன்மையாக கண்டித்துள்ளனர். இதேவேளை, போராட்டத்தைச் செய்தியாகக் கொடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளார். https://www.virakesari.lk/article/217075
3 months 1 week ago
Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 01:39 PM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் மன்னார் தீவு மற்றும் பெரு நில பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. எனவே மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து நாளைய தினம் புதன்கிழமை காலை மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவனயீர்ப்பு பேரணியானது, காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும். அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்படும். எனவே குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217086
3 months 1 week ago
10 JUN, 2025 | 03:01 PM வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூலை மாதம் 04ம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தெரிவித்தார். கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவ அத்துடன் நிறைவடையும் என கூறினார். கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும். வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/217083
3 months 1 week ago
வடக்கில் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; ஸ்ரீநிதி நந்தசேகரன் 10 JUN, 2025 | 11:56 AM பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன பொருத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நலிவுற்ற சமுதாயத்தினரே கூடியளவு சமூகப் பிரச்சினைகளான பாலியல் துஸ்பிரயோகம், உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்களால் அதிகமாக பாதிப்படைகின்றனர். இதற்கு மேலதிகமாக குடும்பங்களின் வறுமையும், சமூகத்தில் ஏற்படும் கலாசார மாற்றம், தொலைபேசி பாவனை, சமூக வலைத்தள பாவனை போன்றவற்றினூடான இடர்பாடுகளும் காரணமாக உள்ளன. இவர்களுக்கான முறையான வழிகாட்டல்களுடன் சமூகப்பொறுப்புணர்வுடன் சகலரும் இணைந்து பணியாற்ற வேண்டும். பாடசாலை மட்டத்தில் ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களையும், முறைப்பாடுகளையும் கண்காணிப்பதற்கு முறைப்பாட்டுப்பெட்டி, கண்காணிப்பு கமரா என்பன சில இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. ஏனைய பாடசாலைகளிலும் இவை பொருத்தப்பட்டு முறைப்பாட்டுப் பெட்டியின் திறப்பு நன்னடத்தை உத்தியோகத்தர், சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையிலேயே திறக்கப்பட வேண்டும். இரட்டை பிரஜாவுரிமையில் குழந்தை தத்தெடுப்பது தொடர்பான விடயங்களில் தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் கையாள்வதே பொருத்தமானதாக அமையும். சகல உத்தியோகத்தர்களும் கூட்டுப்பொறுப்புடனும் குழந்தைகளின் நலன்சார் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்தும் செயற்படவேண்டும். சிறுவர் இல்லங்கள் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள சகல சிறுவர்களுக்கும் சிறுவர் சார்பான கடமை உத்தியோகத்தர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பன தெரிவிக்கப்பட வேண்டும். சமூக கண்காணிப்பை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வுக் குழுக்கள் சமூக மட்டத்தில் உருவாக்கப்பட்டு நலன்சார் விடயங்கள் கவனிக்கப்படவேண்டும் எனவும், சகல விடயங்களையும் ஒருங்கிணைக்க பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றார். https://www.virakesari.lk/article/217079
3 months 1 week ago
பலர் திரைப்படங்களை பார்க்காமல் படம் சரியில்லை என்று விமர்சிக்கிறது போல இருக்கிறது. ஒவ்வொரு ரசிகர்களின் விருப்பங்கள் வேறுபடும். சில படங்களை திரையரங்கில் சென்று பார்க்கவேண்டும். அதே படத்தினை வீட்டில் தொலைக்காட்சியில் இடைவெளி விட்டு 2,3 நாட்களாக பார்க்கும் போது சுவாரசியம் போய் விடும். சிலருக்கு விசாரணை, வாழை, விடுதலை 1, 2 போன்ற படங்கள் பிடிக்கும். சிலருக்கு மாநகரம், கைதி, ரட்சசன் போன்ற படங்கள் பிடிக்கும். சிலருக்கு 96 , மெய்யழகன் போன்ற படங்கள் பிடிக்கும். தக்லைவ் விமர்சகர்கள் சொல்வது போல மோசமில்லை.
3 months 1 week ago
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம் : கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு! Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 10:26 AM சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று செவ்வாய்க்கிழமை (10) போராட்டம் நடைபெற்று வருகிறது. திஸ்ஸ விகாரையில் இன்று (10) நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் அழைத்து வரப்படவுள்ளனர். இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸாரின் நீர்த்தரைப் பிரயோக இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் கலகமடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராகவே குறித்த கட்டளை பெறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217070
3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2011, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் தோனி 51 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். "அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புடனும், ஒப்பிடமுடியாத கிரிக்கெட் திறமையுடனும், குறுகிய வடிவ கிரிக்கெட்டின் முன்னோடியாக கொண்டாடப்படுகிறார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறார்" என்று ஐசிசி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (ஜூன் 9) லண்டனில் நடைபெற்ற ஐசிசி நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. எம்.எஸ்.தோனி, தென்னாப்பிரிக்காவின் ஹாசிம் அம்லா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், நியூஸிலாந்தைச் சேர்ந்த டேனியல் வெட்டோரி உள்பட 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியுடன் சச்சின் (2019) ஜனவரி 2, 2009 அன்று ஐசிசியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) உடன் இணைந்து, ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது. இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பேரைச் சேர்த்து, இதுவரை இந்தப் பட்டியலில் 122 கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவர்களுக்கு ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேம் தொப்பி (Cap) வழங்கப்படுகிறது. ஒருவேளை அந்த கிரிக்கெட் வீரர் அல்லது வீராங்கனை உயிரோடு இல்லையென்றால், அவர்களின் குடும்பத்தாரிடம் இந்த தொப்பி வழங்கப்படும். இந்த 'ஹால் ஆஃப் ஃபேமில்' சேர்க்கப்படுபவதற்கான அடிப்படை தகுதி என்பது, அந்த வீரர் அல்லது வீராங்கனையின் இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க வேண்டும். தோனியைப் பொறுத்தவரை, 2019 (ஜுலை 10) ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டம் தான் அவர் கடைசியாக விளையாடிய போட்டி. 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 2025 வருடத்திற்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், எம்.எஸ். தோனி - இந்தியா கிரயெம் ஸ்மித்- தென்னாப்பிரிக்கா ஹாசிம் அம்லா- தென்னாப்பிரிக்கா மேத்யூ ஹைடன்- ஆஸ்திரேலியா டேனியல் வெட்டோரி- நியூஸிலாந்து வீராங்கனைகள்: சனா மிர்- பாகிஸ்தான் சாரா டெய்லர்- இங்கிலாந்து. இந்த அறிவிப்பு குறித்து பேசிய ஐசிசி-யின் தலைவர் ஜெய் ஷா, "ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் மூலம், கிரிக்கெட்டின் பாரம்பரியத்திற்கு பங்களித்து, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்த கிரிக்கெட் வீரர்களை நாங்கள் கௌரவிக்கிறோம். இந்த ஆண்டு, சிறந்த ஏழு நபர்களை இந்த மதிப்புமிக்க குழுவில் சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஐசிசி சார்பாக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இந்தியர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுனில் கவாஸ்கருக்கு ஹால் ஆஃப் ஃபேம் தொப்பியை வழங்கும் கபில் தேவ் இந்த ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் தொடங்கப்பட்ட வருடமான 2009இல் சுனில் கவாஸ்கர் மற்றும் பிஷன் பேடியின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு 2010இல், கபில் தேவின் பெயர் சேர்க்கப்பட்டது. 2015இல் அனில் கும்ப்ளேவின் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர், 2018இல் ராகுல் டிராவிட்டும், 2019இல் சச்சின் டெண்டுல்கரும் இதில் சேர்க்கப்பட்டனர். 2021இல் வினோ மன்காட், 2023இல் வீரேந்திர சேவாக் ஆகியோரது பெயர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டன. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் தோனி. இவர்கள் தவிர்த்து டயானா எடுல்ஜி, நீது டேவிட், ஆகிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்களும் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான தோனி, 2007-ம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றார். அதன் பிறகு 2011-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவரது தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பேசிய தோனி, "தலைமுறைகளைக் கடந்து, உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் எனது பெயரும் இடப்பெற்றது மிகப்பெரிய கௌரவம். வரலாற்றின் சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் என் பெயரும் நினைவுகூரப்படும் என்பது ஒரு அற்புதமான உணர்வு." என்று கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c249j903qjjo
3 months 1 week ago
தானும் சீரழிந்து , எதிர்கால சந்ததியையும் சீரழித்த பெருமைக் குரியவர். என்ன award ( தண்டனை ) கொடுக்கலாம். ? யாரப்பா அந்த வீர தீரன். கடடம் போடட சடடைக் காரான?
3 months 1 week ago
கடன்பட்டான் நெஞ்சம்போல ....தப்ப இப்படியும் வழியுண்டா ?
3 months 1 week ago
ஒரே செய்தியை ஒரு பொறுப்பான ஊடகம் ஒன்றும், பொறுப்பற்ற ஒரு ஊடகம் ஒன்றும் எவ்வாறு தலைப்பிட்டு உள்ளது என்பற்கு இந்த திரியே சாட்சி.
3 months 1 week ago
3 months 1 week ago
கண்டி மாவட்டம்,கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் (வயது 43), அவரது மனைவி பாத்திமா பர்ஹானா-(வயது 34) இவர்களின் குழந்தைகள் முஹம்மது யஹ்யா ( வயது 12), அலிஷா-(வயது 4), அமிரா-(வயது 4) ஆகிய 5 பேர்களாவர். இவர்கள் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் திங்கட்கிழமை(09) அதிகாலை வந்து இறங்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்த மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணைக்குட்படுத்திய போது, முஹம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்
3 months 1 week ago
தையிட்டிக்கு தென்பகுதியிலிருந்து செல்லவுள்ள இனவாத குழுக்கள் ; மக்கள் குரோத கருத்துக்களையும் புரிந்துணர்வின்மையையும் தவிர்க்கவேண்டும் - காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு 10 Jun, 2025 | 09:15 AM பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம் என காணிஉரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக மேலும் விரிவுபடுத்தப்பட்ட ஆலயம் குறித்த விபரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றோம். இன்று பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம். தையிட்டியில் வசிக்கும் மக்களிற்கு அந்த ஆலயம் குறித்தோ தேசம் குறித்தோ எந்த பிரச்சினையுமில்லை. தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரம் அவர்கள் கோருகின்றனர். காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து எழவுள்ள குரோதகருத்துக்களையும், புரிந்துணர்வின்மையையும் தவிர்த்துவிட்டு, இந்த பிரச்சினையின் உண்மையான தன்மையை மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள். சட்டவிரோதமாக கட்டப்பட்டு விஸ்தரிக்கப்பட்டு காணி உரித்துக்கள் உள்ள மக்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட ஆலயம் குறித்து தையிட்டியில் காணப்படும் உண்மையான பிரச்சினையை நீங்கள் அறிவீர்கள் என நான் நாங்கள் கருதுகின்றோம். பொசன் தினத்தன்று சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனப்பதற்றத்தை தூண்ட முயல்வதாக அறிகின்றோம். தையிட்டிக்கு தென்பகுதியிலிருந்து செல்லவுள்ள இனவாத குழுக்கள் ; மக்கள் குரோத கருத்துக்களையும் புரிந்துணர்வின்மையையும் தவிர்க்கவேண்டும் - காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு | Virakesari.lk
3 months 1 week ago
சாவகச்சேரியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த மரத்தளபாட வர்த்தகர் கைது 10 Jun, 2025 | 12:36 PM சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது. அதனை அடுத்து குறித்த வர்த்தகரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , அவரிடம் இருந்து 330 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன் குறித்த நபரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளையில் இவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருளை பெற்று பாவித்து வருவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சாவகச்சேரியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த மரத்தளபாட வர்த்தகர் கைது | Virakesari.lk
3 months 1 week ago
10 Jun, 2025 | 12:35 PM சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் (FDMD) கீதா கோபிநாத் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாற்றும் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து நடாத்தும் 'இலங்கையின் மீட்புப் பாதை: கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தலைப்பில் 16 ஆம் திகதி நடைபெற உள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் | Virakesari.lk
Checked
Wed, 09/24/2025 - 08:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed