புதிய பதிவுகள்2

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months 1 week ago
கிருபன் 20 (1) 🪑 சுவி 20 (2) ஈழப்பிரியன் 20 (3) வாதவூரான் 20 (4) ரசோதரன் 20 (5) எப்போதும் தமிழன் 20 (6) வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) புலவர் 10 (9) வசி 10 (10) வாத்தியார் 10 (11)) அல்வாயான் 10 (12) பிரபா 10 (13) கோஷான் 10 (14) கந்தப்பு 10 (15) நுணாவிலான் 00 (16) 🐥 செம்பாட்டான் 00 (17) 🐥 எங்கள் தலைவன் கிருபன். அணி திரள்வோம்

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months 1 week ago
முதலாவது நாள் ஆட்டத்தின் முடிவில் யாழ்கள வேட்பாளர்களது தரநிலை பட்டியல். பலத்த ஆறுமுனை போட்டிக்கு இடையே - சபாநாயகர் கிருபன் ஜி யை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். வீரப்பையன் 10 (7) ஏராளன் 10 (8) கிருபன் 20 (1) 🪑 புலவர் 10 (9) சுவி 20 (2) நுணாவிலான் 00 (16) 🐥 ஈழப்பிரியன் 20 (3) வசி 10 (10) வாத்தியார் 10 (11)) செம்பாட்டான் 00 (17) 🐥 அல்வாயான் 10 (12) வாதவூரான் 20 (4) ரசோதரன் 20 (5) பிரபா 10 (13) எப்போதும் தமிழன் 20 (6) கோஷான் 10 (14) கந்தப்பு 10 (15)

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை

3 months 1 week ago
பொது மன்னிப்பில் ஆள்மாறாட்டம் - இலங்கையில் ஜனாதிபதி பெயரிலேயே நடந்த முறைகேடு பட மூலாதாரம்,PMD கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 10 ஜூன் 2025 ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பில் இம்முறை பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு பதிலாக வேறு கைதி விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சர்ச்சை தொடர்பில் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகம், கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையின் பொறுப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது? அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர், இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். நாற்பது லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளை முகாமையாளருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தண்டனை முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாசமினால், இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர், மீண்டும் முறைப்பாடு ஒன்றைச் செய்த நிலையிலேயே இந்தச் சம்பவம் மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள், எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெசக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளிக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்திருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் பதில் பட மூலாதாரம்,PMD இந்நிலையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிதி மோசடியுடன் தொடர்புடைய நபரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முறைகேடான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி செயலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனம் எடுத்தள்ளது. அரசியலமைப்பின் 34 (1) பிரிவின்படி, கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். எவ்வாறாயினும், மேற்குறித்த சம்பவத்திற்கு அமைவாக 2025-05-06 தேதியிடப்பட்ட மற்றும் (06ஃ01 යෝජිතஃ ජ.පො.සමාஃ 05-12ஃ2025) இலக்கத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தன. அத்துடன், அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாகச் சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஜூன் 06ஆம் தேதி 'ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக' என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவா? கடந்த காலங்களில் நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளில் தகுதியற்ற சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவோரின் பட்டியலில் தகுதியற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றமைக்குப் பின்னணியில் சிறைச்சாலை ஆணையாளர் மாத்திரமன்றி, பின்னணியில் பலரும் இருக்கக்கூடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஃபேஸ்புக் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார். அதோடு, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, விசாரணை, குற்றப் பத்திரிகை, வழக்கு, சிறைத் தண்டனை என்ற பாதையில் பயணிக்க வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இது நிச்சயமாக முதல் சம்பவமாக இருக்க முடியாது எனவும், முன்னைய ஆட்சிக் காலத்திலும் நடந்த இத்தகைய விடுவிப்பு சம்பவ வரலாறுகள் தோண்டி எடுக்கப்பட்டு சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xgkdrdkqeo

இஸ்ரேலிய அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தடை

3 months 1 week ago
பாலஸ்தீனியர்களிற்கு எதிரான வன்முறைகளை தூண்டும் விதத்தில் கருத்துக்கள் - இரண்டு இஸ்ரேலிய அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தடை 11 JUN, 2025 | 12:31 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள பாலஸ்தீனியர்களிற்கு எதிரான வன்முறைகளை தூண்டும் விதத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேலின் இரண்டு வலதுசாரி அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட நான்கு நாடுகள் தடைகளை விதித்துள்ளன. பிரிட்டன் நோர்வே கனடா அவுஸ்திரேலிய நியுசிலாந்து ஆகிய நாடுகளும் பிரிட்டனுடன் இணைந்து தடைகi விதித்துள்ளன. ஆகிய இரண்டு இஸ்ரேலிய அமைச்சர்களும் பிரிட்டனிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் மேலும் பிரிட்டனில் உள்ள இருவரினதும் சொத்துக்களும் முடக்கப்படும். இருவரும் கடும் வன்முறைகளை தூண்டினார்கள் பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகளிற்கு பெரும் ஆபத்தினை ஏற்படுத்தினார்கள் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரும் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் கூட்டாக தெரிவித்துள்ளனர். தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் மோசமான வன்முறைகளால் பாலஸ்தீனியர்கள் பெரும் துன்பத்தினை அனுபவிக்கின்றனர்,இது எதிர்கால பாலஸ்தீன தேசத்தினையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது என தெரிவித்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு பிரிட்டன் நோர்வே கனடா நியுசிலாந்து அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பதில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை இதன் காரணமாகவே நாங்கள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம் - பொறுப்புகூறலிற்கு உட்படுத்தியுள்ளோம் என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார். இதேவேளை தனது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறன நடவடிக்கைகளிற்கு உட்படுத்தப்படுவது குறித்து இஸ்ரேல் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217150

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து

3 months 1 week ago
விக்கி ஐயாவின் வீட்டில் இருக்கும் பெரிய படத்தில் இருப்பவர் செக்ஸ் சாமியார் + கொலைகாரன் பிரேமானந்தா தானே?

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
ஆர். பாலகிருஷ்ணனை தலைவராக நியமித்தது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே. தொல்லியல்துறைக்கு அல்ல. தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பதற்கு பாலகிருஷ்ணன் தகுதியுடையவரே. கீழே உள்ளவை தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நோக்கங்கள். இது அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் இருக்கின்றது: தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.

15 வீதத்தால் உயர்வடைகிறது மின்சாரக் கட்டணம்!

3 months 1 week ago
மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பது மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்கும் செயலாகும். மக்கள் ஆணைக்கு இழைக்கும் துரோகமுமாகும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் Published By: DIGITAL DESK 3 11 JUN, 2025 | 05:07 PM மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பது மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்கும் செயலாகும். மக்கள் ஆணைக்கு இழைக்கும் துரோகமுமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாளை வியாழக்கிழமை (12) நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும் செயலாகும். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத போக்காகும். இது இந்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மின்சாரக் கட்டணத்தை ரூ.9000 இல் இருந்து ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைப்போம் என்றார். மின்சார கட்டணத்தை 33% ஆல் குறைப்போம் என்றும் மேடைக்கு மேடை பிரஸ்தாபித்தார். பின்னர், பொதுத் தேர்தலில் அக்கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஈட்டி 159 ஆசனங்களை தனதாக்கிய சந்தர்ப்பத்திலும் கூட மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி, ஜனாதிபதியே தான் வெளியிட்ட அறிக்கைகளை பொய்களாக மாற்றும் வகையில், மின்சாரக் கட்டணத்தை 15% ஆல் அதிகரிக்க தற்போது இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, இந்த நாட்டின் மின்சார நுகர்வோரின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இன்று புதன்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அடுத்த கட்ட தவணையைப் பெறுவதற்காக மின்சாரக் கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன. நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை பெற வேண்டுமானால் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ளது. திசைகாட்டி தலைமையிலான ஜே.வி.பி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தமொன்றையும் இணக்கப்பாடொன்றையும் எட்டுவோம் என வாக்குறுதியளித்திருந்தது. என்றாலும் ஆட்சிக்கு வந்தவுடன் தனது ஆணையை மீறியுள்ளதுடன், முந்தைய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை அவ்வாறே முன்கொண்டு செல்கிறது. இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆணையை காட்டிக் கொடுத்து பொதுமக்களின் கருத்தை கிடப்பில் போட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இணக்கப்பாட்டை இவர்கள் அதே முறையில் செயல்படுத்தியதன் விளைவாக, நாடும் மக்களும் இன்று இவ்வாறான நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய மக்கள் சக்தியும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கி செயல்படும். என்றாலும் IMF பிரதிநிதிகளை சந்தித்தபோது நாம் புதியதொரு இணக்கப்பாட்டுக்கு வருவோம் என தெரிவித்திருந்தோம். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்றும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் பொய்யாக்கி, மின்சார கட்டணத்தை 15% ஆல் அதிகரித்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்எ இந்த நடவடிக்கையால் ஏழைகள், சாதாரண மக்கள், உழைக்கும் மக்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வருவோரை கடுமையான சிக்கலுக்குள் தள்ளும். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி, வழங்கப்பட்ட மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்க இடமளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பதற்கு பகரமாக மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைக்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை மின்சார நுகர்வோருடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி குரல் எழுப்பும். ஐக்கிய மக்கள் சக்தி ஜனநாயக ரீதியிலான போராட்டத்திலும் ஈடுபடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217187

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை - பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி!

3 months 1 week ago
11 JUN, 2025 | 04:01 PM பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு, நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இன்று காலை உடையார் கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர். அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில், சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார். அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது, மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/217176

குடல் ஆரோக்கியம்: தோசை, தயிர், டார்க் சாக்லேட் போன்ற எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக் கூடாது?

3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு நபரின் மூளையை அவர்களின் குடலுடன் இணைக்கும் ஒரு கிராஃபிக் கட்டுரை தகவல் எழுதியவர், ஆர்மென் நெர்செசியன் பதவி, பிபிசி உலக சேவை 7 மணி நேரங்களுக்கு முன்னர் காரணமேயில்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயற்சிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். குடல் ஆரோக்கியம் என்பது செரிமானம் என்பதுடன் அடங்கிவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி, மனநலம் மற்றும் நமது ஒட்டுமொத்த உயிர் சக்தியின் ஆணிவேர் என்று சொல்லலாம். நாம் உண்ணும் ஊட்டச்சத்து நிறைந்த, சீரான உணவில் டிரில்லியன்கணக்கான பாக்டீரியாக்கள் மற்றும் குடல் நுண்ணுயிரிகள் செழித்து வளர்கின்றன. ஆனால் நாம் செய்யும் மோசமான உணவுத் தேர்வுகள் இந்த நுட்பமான உடலுறுப்பை சீர்குலைத்து, செரிமான பிரச்னைகள், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நமது குடலின் ஆரோக்கியம் நமது நடத்தை, மன அழுத்த அளவுகள் மற்றும் நல்வாழ்வு உணர்வைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். குடல் ஆரோக்கியம் பற்றி பேசிய லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பாக்டீரியா எதிர்ப்பு உயிரியல் மையத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஜூலி மெக்டொனால்ட், குடலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் செரிமான அறிகுறிகள் மூலம் மட்டுமல்லாமல் வேறுபல வழிகளிலும் வெளிப்படும் என்று சொல்கிறார். கைரேகைகள் ஒருவரைப் போல மற்றொருவருக்கு இருக்காது என்பதைப் போலவே, ஒவ்வொரு நபரின் குடல் நுண்ணுயிரியமும் தனித்துவமானது. இதன் பொருள், சில தனிநபர்கள் இயற்கையாகவே மீள்தன்மை கொண்ட செரிமான அமைப்புகளைக் கொண்டிருக்கலாம், சிலருக்கு செரிமானக் கோளாறுகள் இருக்கலாம். மரபியல், சுற்றுச்சூழல், உணவுமுறை போன்றவை மட்டுமல்ல, ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தாரா அல்லது இயற்கையான பிரசவம் மூலம் பிறந்தாரா என்பது போன்ற ஆரம்ப கால வாழ்க்கை காரணிகள் அனைத்துமே குடல் ஆரோக்கியத்தை வடிவமைப்பதில் பங்கு வகிக்கின்றன. நமது குடல் நுண்ணுயிரியின் இந்த தனித்துவமான தன்மை ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறது. நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் முக்கிய குழுக்களை விஞ்ஞானிகள் அடையாளம் காண முடிந்தாலும், உடல்நலக் குறைவு மற்றும் நோய்க்கு காரணமான சரியான நுண்ணுயிரிகளை சுட்டிக்காட்டுவது இன்றுவரை சிக்கலானதாகவே உள்ளது. நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவே நீ "குடல் நுண்ணுயிரியல் பன்முகத்தன்மையில் நமது உணவுத் தேர்வுகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சி சக மற்றும் ஆலோசகர் மருத்துவரான டாக்டர் பெஞ்சமின் முல்லிஷ் கூறுகிறார். "இறைச்சி உட்கொள்வதைக் குறைத்தல் அல்லது நார்ச்சத்து அதிகரிப்பது போன்ற உணவில் ஏற்படும் மாற்றங்கள் குடல் பாக்டீரியாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஆய்வுகளில் பார்த்திருக்கிறோம்." எடுத்துக்காட்டாக, தயிர் மற்றும் கேஃபிர் போன்ற புளித்த பால் பொருட்களை அறிமுகப்படுத்துவது, ஒட்டுமொத்த நுண்ணுயிரியல் பன்முகத்தன்மையை அதிகரிக்காவிட்டாலும்கூட, லாக்டோபாசில்லஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் உணவுமுறை மட்டுமே குடல் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்தும் காரணி என்று சொல்லிவிட முடியாது. நமது குடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிற முக்கிய தாக்கங்கள் பின்வருமாறு: தூக்கம் மற்றும் மன அழுத்தம்: தூக்கக்குறைவு மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது உடற்பயிற்சி: ஆரோக்கியமான நுண்ணுயிரியலை ஊக்குவிக்க உடல் செயல்பாடுகள் அவசியமானவை நுண்ணுயிரி மருந்துகள்: மருத்துவம் மற்றும் விவசாயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகப்படியான பயன்பாடு குடல் பாக்டீரியாவை சீர்குலைத்து நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாவை அதிகரிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் கலந்துக் கொண்ட அந்த ஆய்வில் ஆரோக்கியமான, பெரியவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் மீதான ஆய்வில், புரோபயாடிக்குகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு போன்ற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, குடல் ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைப்பையும் பராமரிக்க அவசியமான லாக்னோஸ்பைரா பாக்டீரியாவை பெருக்க உதவும் என்று கண்டறியப்பட்டது. குடலுக்கும் மூளைக்குமான தொடர்பையும் குறிப்பிடும் டாக்டர் முல்லிஷ், "வேகஸ் நரம்பு, மூளை மற்றும் குடலை இணைக்கிறது. செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக் கடத்திகள் குடலில் உருவாகின்றன. நடத்தை, மன அழுத்த அளவுகள் மற்றும் மன நலனையும் குடல் ஆரோக்கியம் பாதிக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது." ஆரோக்கியமான குடலுக்கான சிறந்த உணவு புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் உள்ளன, இவை குடல் நுண்ணுயிரியை சமநிலைப்படுத்த உதவும் உயிருள்ள பாக்டீரியாக்கள் ஆகும். புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும், வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புளித்த உணவுகளில் பிரபலமானவை: தயிர் கெஃபிர்: பால் (மாடு, ஆடு அல்லது செம்மறி) மற்றும் கேஃபிர் தானியங்கள் (பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் கலவை) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பால் பானம் சார்க்ராட்: துண்டாக்கப்பட்ட முட்டைகோஸ் மற்றும் உப்புடன் தயாரிக்கப்படும் புளிக்க வைக்கப்பட்ட முட்டைக்கோஸ் கிம்ச்சி: நாபா முட்டைக்கோஸ், முள்ளங்கி, பூண்டு, இஞ்சி, மிளகாய்த்தூள், மீன் சாஸ் மற்றும் சால்ட்மிசோ ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கொரிய உணவு மிசோ: சோயாபீன்ஸ், உப்பு மற்றும் கோஜி (பெரும்பாலும் அரிசி அல்லது பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது) ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு ஜப்பானிய பேஸ்ட் டெம்பே: சோயாபீன்ஸ் மற்றும் ரைசோபஸ் அச்சு கலாச்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உறுதியான, புரதம் நிறைந்த இந்தோனேசிய தயாரிப்பு பிற: கொம்புச்சா (உலகளவில்), தோசை (இந்தியா), மற்றும் நாட்டோ (ஜப்பான்) குறிப்பு: புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை புதிதாக உண்ணத் தொடங்குபவராக இருந்தால், செரிமான பிரச்னையைத் தவிர்க்க, சிறிய அளவில் சாப்பிடத் தொடங்குங்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொரிய சிறப்பு உணவான கிம்ச்சி போன்ற புளித்த உணவுகள், அவற்றின் சுகாதார நன்மைகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டன. நார்ச்சத்து ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்பட்டு, புரோபயாடிக் உணவுகளில் காணப்படுவதைப் போல நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களை வளர்க்கிறது, மேலும் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள், இரைப்பை குடல் நோய்களின் அபாயத்தைக் குறைத்து எடையை பராமரிக்க உதவும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் பின்வருவன அடங்கும்: முழு தானியங்கள் (ஓட்ஸ், குயினோவா, பழுப்பு அரிசி போன்றவை) பருப்பு வகைகள் (பருப்பு, கொண்டைக்கடலை, கருப்பு பீன்ஸ் போன்றவை) பழங்கள் (ஆப்பிள், வாழைப்பழங்கள், பெர்ரி போன்றவை) காய்கறிகள் (ப்ரோக்கோலி, கேரட்போன்றவை) பருப்புகள் மற்றும் விதைகள் (பாதாம், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவை) குறிப்பு: வீக்கம் அல்லது அசௌகரியத்தைத் தடுக்க படிப்படியாக நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கவும். செரிமானம் மேம்பட தண்ணீர் அதிகம் குடிக்கவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தயிர் போன்ற புரோபயாடிக்குகளை, பெர்ரி போன்ற ப்ரீபயாடிக்குகளுடன் சேர்த்து உண்பதால் குடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் பாலிஃபீனால்கள் என்பது குடல் நுண்ணுயிரி பன்முகத்தன்மையை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட தாவர சேர்மங்கள் ஆகும். பாலிஃபீனால் உள்ள உணவுகள் பின்வருமாறு: டார்க் சாக்லேட் (குறைந்தது 70% கோகோ) க்ரீன் டீ பெர்ரி ஆலிவ் எண்ணெய் குறிப்பு: பாலிஃபீனால் நிறைந்த உணவுகளை ஆரோக்கியமான கொழுப்புகளுடன் (அவகோடோ அல்லது கொட்டைகள் போன்றவை) இணைந்து உண்டால், உடல் அதிக அளவிலான பாலிஃபீனாலை உறிஞ்ச ஏதுவாக இருக்கும். எலும்பு சூப்பில் கொலாஜன் மற்றும் குளுட்டமைன் போன்ற அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன, இது குடல் புறணி ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். இருப்பினும், இந்த நன்மைகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை. குறிப்பு: இதை சூப்களில் பயன்படுத்தியும், தனியாகவும் சமைத்து உண்ணலாம். குடல் ஆரோக்கியத்திற்கு குலைக்கும் உணவுகள் மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் ரசாயனங்கள், பதப்படுத்துதல் மற்றும் நொதித்தல் பொருட்கள் உள்ளன, அவை குடல் பாக்டீரியா கலவையை மாற்றி வீக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவான உதாரணங்கள் பின்வருமாறு: பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் (சிப்ஸ், பட்டாசுகள், உடனடி நூடுல்ஸ்) பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (ஹாட் டாக், தொத்திறைச்சி, பன்றி இறைச்சி, டெலி இறைச்சிகள்) சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்கள் தயார்நிலை உணவுகள் குறிப்பு: கொட்டைகள், பழங்கள் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட கிரானோலா போன்ற குறைந்தபட்ச பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை தேர்வுசெய்யலாம். அஸ்பார்டேம் மற்றும் சாக்கரின் போன்ற சில செயற்கை இனிப்புகள், குடல் பாக்டீரியா மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். செயற்கை இனிப்புகள் உள்ள உணவுப்பொருட்கள்: டயட் சோடாக்கள் சர்க்கரை இல்லாத கலோரி குறைந்த திண்பண்டங்கள் குறிப்பு: ஸ்டீவியா அல்லது மாங்க் பழம் போன்ற இயற்கை மாற்றுகளைத் தேர்வு செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துரித உணவுகளில் பெரும்பாலும் அதிக பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை உள்ள உணவுகள் அடங்கும், எனவே அவற்றை குறைவாகவே உட்கொள்ள வேண்டும் அதிக சர்க்கரை உள்ள உணவு, தீங்கு விளைவிக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் வீக்கத்தையும் ஊக்குவிக்கும் அதே நேரத்தில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் பின்வருமாறு: பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள் வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தா சர்க்கரை பானங்கள் (சோடா, எனர்ஜி பானங்கள், பழச்சாறுகள்) குறிப்பு: இனிப்பு உண்ண விரும்பினால் பழங்கள் அல்லது டார்க் சாக்லேட் உண்ணுங்கள். அனைத்து வகை மதுபானங்களும் குடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். தூக்க முறைகளைத் தொந்தரவு செய்வதன் மூலமும், மன நலனைப் பாதிப்பதன் மூலமும், குடல் நுண்ணுயிரிகளின் கலவையை மாற்றுவதன் மூலமும் குடல் பாதிக்கப்படும். சிவப்பு ஒயினில் பாலிபினால்கள் நிறைந்திருந்தாலும், இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற கருத்து தவறானது என்று, ஐபிஎஸ் (எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி) ஆலோசகர் உணவியல் நிபுணர் கிர்ஸ்டன் ஜாக்சன் பிபிசியிடம் கூறினார். ஏனெனில் பாலிபினால்களினால் ஏற்படும் நன்மைகளை சிவப்பு ஒயினின் உள்ள ஆல்கஹால் ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று அவர் கூறுகிறார். குறிப்பு: மது அருந்தும்போது குடலுக்கு உகந்த உணவுகளுடன் மிதமாக குடிக்கவும். சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகம் உள்ள உணவுகளை உண்பதால், குடல் நுண்ணுயிரியலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பதைக் குறைத்து, மீன், கோழி அல்லது தாவர அடிப்படையிலான மாற்றுகள் என மெலிந்த புரதங்களைத் தேர்ந்தெடுப்பதை பரிசீலிக்கவும். குறிப்பு: சிவப்பு மாமிசத்தை தவிர்த்து, நுகர்வை படிப்படியாக குறைக்க முயற்சிக்கவும். சிறிய மாற்றங்கள், பெரிய தாக்கம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளில் ஒன்று உணவு நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது என்று டாக்டர் மெக்டொனால்ட் பரிந்துரைக்கிறார். "நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை நார்ச்சத்து வளர்க்கிறது, செரிமான ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது." தினமும் குறைந்தது 30 கிராம் நார்ச்சத்துடன், பல்வேறு வகையான, தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்ற பரிந்துரைக்கிறார், உணவியல் நிபுணர் கிர்ஸ்டன் ஜாக்சன். முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை குடல் நுண்ணுயிரிகளை வளர்க்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும் என்று அவர் அறிவுறுத்துகிறார். ஆரோக்கியமான குடலுக்கான எளிய குறிப்புகள்: உணவு பன்முகத்தன்மையை அதிகரிக்கவும் (வெவ்வேறு தாவர அடிப்படையிலான உணவுகளை உண்ணவும்) புரோபயாடிக்குகளை (தயிர், கேஃபிர்) ப்ரீபயாடிக்குகளுடன் (நார்ச்சத்து நிறைந்த உணவுகள்) சேர்த்து உண்ணவும் செரிமானத்திற்கு உதவ நீர்ச்சத்தை பராமரியுங்கள் தியானம், உடற்பயிற்சி மற்றும் தூக்கத்துடன் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அவசியமில்லாத பட்சத்தில் ஆண்டிபயாடிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் சிறிய, நிலையான உணவுமுறை மாற்றங்கள் என்பது தீவிரமான மாற்றங்களை விட நிலையானவையாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் சிறிய, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பது நீண்டகால குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள அணுகுமுறையாக இருக்கும் என்று திருமதி ஜாக்சன் கூறுகிறார். உணவு மற்றும் வாழ்க்கை முறையை கவனத்துடன் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தலாம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம், அத்துடன் மன நலனையும் மேம்படுத்தலாம். https://www.bbc.com/tamil/articles/cx2qzp0k7dpo

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

3 months 1 week ago
ஜனாதிபதி ஜேர்மனியை சென்றடைந்தார் - ஜேர்மனி ஜனாதிபதியை பிற்பகல் சந்திக்கவுள்ளார் 11 JUN, 2025 | 03:06 PM ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெறவுள்ளது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/217167

கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்

3 months 1 week ago
Published:Yesterday at 12 PMUpdated:Yesterday at 12 PM கீழடி Join Our Channel 21Comments Share சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு ஆய்வறிக்கையைக் கடந்த 2023-ல் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார். கீழடி - அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆனால், இந்த ஆய்வறிக்கை கிடப்பில் போடப்பட்டு, இன்னும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசால் திருப்பியனுப்பப்பட்டது. இதனால், தமிழர்களின் வரலாற்றை பா.ஜ.க அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன. இத்தகைய சூழலில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், "கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரியவேண்டியிருக்கின்றன. எனவே, அத்தகைய அறிவியல்பூர்வ முடிவுகள் வந்த பிறகே கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க முடியும்." என்று கூறினார். நயினார் நாகேந்திரன் - கஜேந்திர சிங் - தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது. 5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தங்கம் தென்னரசு தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?" என்று எக்ஸ் தளத்தில் பா.ஜ.க-வை விமர்சித்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனும் எதிர்வினையாற்றியிருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் சு.வெங்கடேசன், "இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை. கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார். கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டுக் கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே." என்று பதிவிட்டிருக்கிறார்.

தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்!

3 months 1 week ago
11 Jun, 2025 | 11:54 AM தையிட்டி விகாரைக்குள் கஞ்சா போதைப்பொருள் கொனண்டு சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தென்னிலங்கை இளைஞனை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையில் பொசன் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றுள்ளது. இந்த வழிப்பாட்டில் கலந்து கொள்வதற்காக இளைஞன் ஒருவன், கடந்த திங்கட்கிழமை (09) தென்னிலங்கையில் இருந்து தையிட்டி விகாரைக்கு சென்றுள்ளார். இதன்போது இந்த இளைஞன்விகாரையை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளார். அதனை அவதானித்த பலாலி பொலிஸார் இளைஞனை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமையால் இளைஞனை சோதனையிட்டுள்ளனர். இதன்போது இளைஞனின் உடைமையில் இருந்து கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இளைஞன் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தென்னிலங்கையில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் தையிட்டி விகாரைக்குள் வழிபட சென்ற இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தையிட்டி விகாரைக்குள் கஞ்சாவுடன் சென்ற தென்னிலங்கை இளைஞனுக்கு விளக்கமறியல்! | Virakesari.lk

தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை

3 months 1 week ago
11 Jun, 2025 | 03:29 PM நாட்டுக்கு தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. ஜூன் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 21,293 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையில், இந்தியாவிலிருந்து 6,014 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28.2 சதவீதம் ஆகும். அதேவேளை, பிரித்தானியாவிலிருந்து 1,884 பேரும், சீனாவிலிருந்து 1,277 பேரும், பங்களாதேஷிலிருந்து 1,173 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,051,096 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 210,074 பேர் இந்தியாவிலிருந்தும், 110,818 பேர் ரஷ்யாவிலிருந்தும், 98,158 பேர் பிரித்தானியாவிலிருந்தும் வருகை தந்துள்ளனர். அத்துடன், மே மாதத்தில் மாத்திரம் 132,919 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.5 சதவீதமாகும். தொடர்ந்து இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை | Virakesari.lk

சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து

3 months 1 week ago
11 Jun, 2025 | 05:11 PM தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருகட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இன்றுமாலை கையெழுத்திட்டுள்ளனர். சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து | Virakesari.lk

யாழ். கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் : அச்சத்தில் மீனவர்கள் !

3 months 1 week ago
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட பொருட்கள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான பிரதான மூலப்பொருள் என்பதுடன் இது சூழலுக்கும் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்தவகையில் பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதுடன் இப் பொருட்களை தொடுதல் மற்றும் எடுத்துச்செல்லுதலை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளருக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதுடன் இதனை அப்புறப்படுத்தல் தொடர்பாக உரிய பொறிமுறை எதிர்வரும் நாட்களில் முன் எடுக்கப்படும் என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை தலைநகர் கொழும்பிலில் இருந்து மும்பை நோக்கி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த போது கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கொள்கலன்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரை ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ். கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கும் பிளாஸ்ரிக் துகள்கள் : அச்சத்தில் மீனவர்கள் ! | Virakesari.lk

குரங்குகளை தடுத்து வைக்க பாதுகாப்பு சரணாலயத்தை அமைக்க தீர்மானம்

3 months 1 week ago
11 Jun, 2025 | 05:47 PM குரங்குகளால் ஏற்படும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவற்றை தடுத்து வைக்கும் இடங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி முன்னோடித் திட்டம் மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கிறது. நாட்டின் முதலாவது குரங்கு பாதுகாப்பு சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ளது. நீர், உணவு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு 150 ஹெக்டயர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 283.87 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் மனித - விலங்கு மோதல்கள், உடைமை சேதம் மற்றும் பயிர் சேதம் காரணமாக பொருளாதார நட்டங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்மொழியப்பட்ட குரங்கு தடுப்பு சரணாலயத்திற்கான பரிந்துரைகளை வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. மேலும் மாத்தளை மாவட்ட ஒழுங்கிணைப்பு குழுவின் அனுமதியும் இதற்குப் பெறப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் கமகெதர திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், மாத்தளை மாவட்ட செயலாளர் பிரசன்ன மதநாயக்க ஆகியோரின் தலைமையில் இது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குரங்குகளை தடுத்து வைக்க பாதுகாப்பு சரணாலயத்தை அமைக்க தீர்மானம் | Virakesari.lk
Checked
Wed, 09/24/2025 - 08:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed