புதிய பதிவுகள்2

விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..!

3 months 1 week ago
இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், சாணக்கியன் முதலில் தமிழரசுக்கட்சியில் வேட்பாளராக களமிறங்கியபோது, தூஷண பிக்கரை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றி மக்களை பயங்காட்டி வெற்றிபெற்றார். இப்போ, மாகாணத்தேர்தல் வரப்போகிறது, முதலமைச்சர் கனவு வேறு இவரை ஆட்டிப்படைக்கிறது. அதற்காக இன்னொரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய தேவை இவருக்கு. இந்தச்செய்தி இவரது முகநூலிலேயே பகிரப்படுள்ளது. வடக்கில் சுமந்திரன், யார் யாரையோ ஓடி ஓடி சந்தித்து, அறிக்கை விட்டு, பேச்சுக்கு அழைத்து தயாராகிறார். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு செய்த சேவை காணாதாம், இனி முதலமைச்சர் பதவியில் தமிழருக்கு எல்லா தீர்வும் பெற்றுத்தந்துதான் ஓய்வார்களாம் இருவரும். பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின்பேரில் சந்திக்கிறார், ஒரு ஊடகவியலாளர் அல்லது இவருக்கு பின்னால் அலையும் பட்டாளம் எதையும் காணோம். சும்மா ஒரு கருத்து சொல்வதனாலும் ஊடகவியலாளரும் கூட்டமுமாக வலம் வரும் இவருக்கு. உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவருமே கண்ணில் படவில்லையா? சரியாகத்தானே சமன்பாடு காட்டியிருக்கிறார் தான் போட்ட கணக்கிற்கு!

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

3 months 1 week ago
இங்கே பணி புரியும் அனேகமானவர்கள் வறுமையான குடும்பங்களை சேர்ந்தவர்கள் ,மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்களாவே இருக்கிறார்கள்.பொதுவாக நான் ஊர் நிலவரங்கள் பற்றியே பார்ப்பதனால் அறிந்திருக்கிறேன்.

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

3 months 1 week ago
சாதாரணமாக உணவு நிலையங்கள் விடுதிகள் வியாபார நிலையங்கள் ஆகியவையே இப்படியான சோதனைகளுக்கு உட்ப்படுத்தப்படுகின்ற வழமை இது அசாதாரணம் ஆகவே அந்த நிலையத்தை சார்ந்த தொழிலாளர்களே இந்த முறைப்பாட்டை செய்திருக்க வேண்டும் எப்படியாகிலும் தவறு எங்கே நடந்தாலும் தவறுதான்.

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months 1 week ago
நல்ல ஆனைக்கோட்டை எண்ணையில் உருட்டிய உருட்டு போல இருக்கண்ணை😀. அந்த மதகில் ஐந்து நீரை கட்டுப்படுத்தும் துவாரங்கள் உள்ளன என்பதால் காரணப்பெயர் என நான் கேள்விப்பட்டேன். கல்லுண்டாய் வெளிக்குள்ளால் போவது 782 வா? முன்னர் நாவாந்துறையை நெருங்கும் போது ஆரம்பிக்கும் சுகந்தம், மாநகரசபையின் கருணையால் வெளியில் இறங்கியதுமே ஆரம்பிக்கிறதாம்.

புதுக்குடியிருப்பில் ஆடை உற்பத்தி நிலையத்துக்கு அபராதம்

3 months 1 week ago
ஆடை உற்பத்தி நிலையத்தில் வேலை செய்பவர்களுக்கான உணவு அங்கேயே தயார் செய்யப்பட்டால்.... அதுவும் அழுகிய நிலையில் இருக்கும் மரக்கறிகளை சமைப்பதற்குத் தயார் நிலையில் வைத்திருந்தால்.... குற்றம் தானே

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
இந்தியா முதல் சுற்றில் விளையாடி முதல் மூன்று அணிகளாக நிலையெடுத்த அவுஸ் ,இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தானும் தோல்வியடைந்து நான்காவது நிலைக்கு வந்து இருக்கின்றது . இறுதிச் சுற்றில் எதிர்கொண்ட அவுசை வென்றிருக்கின்றது. அதே போல தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் சுற்றில் அவுஸ் மற்றும் இங்கிலாந்திடம் தோற்று இறுதிச் சுற்றில் இங்கிலாந்தை வென்று இப்போது இறுதி ஆட்டத்திற்கு வந்துள்ளது கேள்வி என்னவென்றால் 1. இரண்டாவது தடவையும் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்குமா ? 2 , வழமைபோல முதல் சுற்றில் கிடைத்த தோல்விக்கான பதிலடியைக் கொடுக்குமா ? பதில் நாளை கிடைக்கும் என நம்பலாம்

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 months 1 week ago
1983 july எமது கடை தாக்குதலுக்கு உள்ளான போது நாங்கள் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது கதவை உடைக்க முடியாததால் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டு படியால் இறங்கமுடியாத நிலை வருகிறது. எனவே முதலாம் மாடியின் பின்புறமாக சென்று அங்கிருந்து பக்கத்தில் உள்ள குடிசைகளின் கூரை மீது நடக்க ஆரம்பித்தேன். சில வீடுகள் தாண்டியதும் கீழே இறங்க ஒரு இடம் கிடைத்தது. இறங்கி தப்பலாம் என்று காலை வைத்தபோது இறங்கினால் வெட்டுவேன் என்று ஒருத்தன் தமிழில் கத்தியபடி கத்தி எடுக்க ஓடுகிறான் அவன் எனக்கு நன்கு அறிமுகமானவன். நேற்று வரை என் அண்ணனின் தோளில் கை போட்டபடி நட்புடன் இருந்தவன். அப்பொழுது பிரபாகரன் அவர்களுக்கு என்ன தீமை செய்திருந்தார். அவன் ஏன் என் முதுகில் குத்தினான். நான் தமிழன் என்பதை தவிர என்ன செய்தேன்......? மீண்டும் கூரைகள் மீது நடந்து சிங்கள பாடசாலையின் மைதானத்திற்குள் குதித்து தப்பினேன்.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

3 months 1 week ago
Isai Sangamam · Nandha Kumar · 🌹" சாண்டோ சின்னப்பா தேவர்.., எம்ஜிஆர்.., டி.எம்.எஸ்.., எம்.எஸ்.வி ஆகிய திரை ஜாம்பவான்களின் அழகிய புகைப்படம் 📷" Voir la traduction .........!

80 வயது மூதாட்டியை தீவிலேயே விட்டு புறப்பட்ட சுற்றுலா கப்பல் - இறுதியில் நடந்தது என்ன?

3 months 1 week ago
அசம்பாவிதமும் கவனக்குறைவும் சேர்ந்து இருக்கு . ......அவரின் உறவினரோ நண்பர்களோ இருந்திருந்தாலாவது உடனடியாய் கவனித்திருப்பார்கள் .........ஆழ்ந்த இரங்கல்கள் அன்னைக்கு ........!

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months 1 week ago
வழுக்கியாறு எம் வாழ்வில் மறக்கமுடியாத ஆறு . ....... ஐந்துகண் மதவு பற்றி ஒரு பழைய கதை உண்டு . ....... அம்மான் கண் என்பதுதான் ஐந்துகண் என மருவியதாக ........ சரி பிழை தெரியவில்லை .........! 🙂

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

3 months 1 week ago
சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அலையில் சிக்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது மற்ற மூவரும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தேவகி, ஷாலினி, பவானி ஆகியோர் திருவள்ளூர் பொன்னேரியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஷாலினி என்பவர் அரசுக் கல்லூரியில் பயின்று வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சடலங்களைக் கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? https://www.vikatan.com/சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண...

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 months 1 week ago
இலங்கையில் தமிழ் முஸ்லீம் முரண்பாடுகள் என்பது 1977 முன்பு பாரியளவில், அதாவது நாடு தழுவிய ரீதியில் இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் ஒரு சில பகுதிகளில் சில தகராறுகள் இருந்தன. அவை அவ்வப்போது கிளம்பும் போது இரு பகுதியினரிலும் சிவில் சமூகத்தினர் பேசி அதை முடிவுக்கு கொண்டுவருவர். இது கிட்டத்தட்ட யாழ்பாணத்தில் அதே காலப்ப்பகுதியில் அவ்வப்போது கிளம்பும் சாதி சண்டைகள் போன்றதாக இருக்கும். ஆனால் இது இருபகுதி மக்களிடையே பாரிய விரிசலாக, ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொண்டதாக மாறியது ஆயுத போராட்ட இயக்கங்கள் தோன்றிய பின்னரே. வடக்கு மகாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றிய சம்பவம் இரு பகுதி மக்களிடையே பாரிய இடைவெளியை ஏற்படுத்தியதோடு தமிழர்களின் போராட்டதிற்கும் இதனால் பாரிய அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்பட்டது. பிள்ளையார் பிடிக்க போக அது குரங்காக மாறிய கதையாக ஆயுத போராட்ட தேவைக்காக முஸ்லீம்களை வெளியேற்றி அவர்களது சொத்துகளை அபகரித்த செயல் அதே விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக சர்வதேச ரீதியாக பலத்த அடியை கொடுத்தது என்பதை உலகளாவிய அரசியல் பார்வையற்ற புலிகளால் அன்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. இலங்கை அரசுக்கு தமிழர் போராட்டத்துக்கு எதிரான பரப்புரை செய்ய உதவியையே அன்று புலிகள் செய்தனர். ஆனால் இன்று கூட இதை புரிந்து கொள்ளாதவர்களாகவே தமிழ் அரசியலில் பலர் உள்ளார்கள். முஸ்லீம்களை வெளியேற்றியது மாத்தயாவின் தவறான அரசியல் தீர்மானத்தால் என்றும், கிழக்கில் அனைத்துக்கும் கருணா தான் காரணம் என்றும், பிரபாகரன் ஒன்றுமே அறியாத அப்பாவி என்றும் இக்கட்டுரை கூறி இருந்தால் இங்கு கருதெழுதிய பலர் இதனை ஆதரித்திருப்பார்கள். கட்டுரை எழுதிய இக்பாலுக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கும் இவர்கள் பிரபாகரனின் வக்கீல்களாக இங்கு ஆஜராகினார்களே தவிர நாட்டின் இனப்பிரச்சளைக்கு தீர்வு காணவேண்டும் என்றோ எதிர்கால தமிழ் சந்ததி இலங்கையில் மகிழ்சியாக இனப்பாகுபாடற்ற ஒரு தேசத்தில் வாழவேண்டும் என்ற அக்கறையிலோ இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அரசியல் போக்கே என்பிபியை நோக்கி மக்கள் வாக்குகள் திரும்பக் காரணம். யுத்தம் காரணமாக பாரிய வீழ்சசியடைந்தி ருந்த தமிழர் சனத்தொகை மெதுவாக வளர்சசியடைய தொடங்கியுள்ளது . இது ஒரு நல்ல அறிகுறி. நாம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கை என்ற நாட்டிற்குள் தான் தமிழ் மக்கள் வாழ்வு . நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் புரிந்துணர்வின் அடிபடையிலேயே ஒரு தீர்வு அமையப்பெறலாம். அதற்கேற்ப நல்லுறவை கட்டியெழுப்புவதும் சிறுபான்மையான இனங்கள் இரண்டும் புரிந்துணர்வின் அடிபடையில் அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதும் காலத்தின் தேவை. ஆகவே, இது ஒரு இயக்கத்தின் தவறு மட்டுமே தவிர ஒட்டுமொத்த தமிழர்களின் தவறல்ல என்ற நிலைப்பாட்டுடன் உறுதியாக இவ்வாறான ஒரு சிலரின் சீண்டல்களை புறந்தள்ளி எமது சமுதாயத்தை வட கிழக்கில் கல்வி, தொழில்நுட்ப, வர்த்தக பொருளாதார அரசியல் ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும். ஏற்கனவே இரண்டு தலைமுறையை நாசப்படுத்திய வழியில் சிந்திகாது புதிய தலைமுறையாவது அறிவார்ந்த அரசியலை விளங்கிக் கொள்ளும் ஆற்றலை நோக்கி நகருவதற்கான ஆரம்ப வழியையாவது சமைத்து கொடுக்க வேண்டும். அண்மையில் தாயகம் சென்ற போது அவதானித்த விடயம் 2000 ம் ஆண்டுகளில் பிறந்த ஆற்றலுள்ள பல திறமை சாலியான இளைஞர்கள்/ யுவதிகள் பலர் பல கற்கை நெறிகளில் பயின்று தமிழர் அரசியலில் ஆர்வம் அற்று தமிழர் அரசியலில் ஈடுபடுவோர் எல்லாம் படிபறிவற்ற காடையர்கள் என்ற கணக்கில் அந்தப் பக்கம் திரும்பி பார்கதவர்களாக உள்ளனர். நல்வாய்பாக இன மத வெறுப்புக்கு ஆட்படாதவர்களாக அவர்கள் இருப்பது சிறந்த பாராட்டப்படவேண்டிய விடயம் என்றாலும் அவர்கள் அரசியலில் அக்கறையற்று இருப்பது தமிழர் அரசியலுக்கு உணமையில் நல்லதல்ல. ஆனால், அவ்வாறு அவர்கள் சிந்திக்க வைத்தவர்கள் பொறுப்பற்ற விதத்தில் வெறுப்பு அரசியலைப் பரப்பும் புலம் பெயர்/ தாயக தமிழ் தேசிய அரசியல் வியாபாரிகளே.

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months 1 week ago
2023 இல் நடந்தாய் வாழி வழுக்கை ஆறே என்ற பெயரில் இந்த மாரிகால ஆற்றின் வழி நடக்கும் ஒரு நடை பயணம் நடந்தது. இதன் walk path ஐ ஒரு trekking போல பிரபல்ய படுத்தினால், சாரணரும் உள், வெளி நாட்டு பயணிகளும் ஆர்வமாக கலந்துகொள்வார்கள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
இவர்கள் இருவரிலும்தான் எல்லாம். யார் போட்டுத்தாக்கினமோ அவர்களுக்கு வெற்றி. ஸ்மிரிதி ஒரு பெரிய ஓட்டம் அடிக்க எல்லாம் அமையப் பெற்றிருக்கிறது. லோரா ஏலவே பெரிதாக அடித்துவிட்டா. அதனால்..... நாம...... என்ன சொல்ல வாறம்..... என்டா. ....... 😆

கூட்டு கடற்படைப் பயிற்சிகளால் இலங்கை - ஜப்பான் கடற்படை ஒத்துழைப்பு வலுப்பெற்றது!

3 months 1 week ago
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது 01 Nov, 2025 | 02:28 PM ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பலான AKEBONO தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை (31) நாட்டை விட்டுப் புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் இந்தக் கப்பலுக்கு பாரம்பரிய கடற்படை முறைப்படி பிரியாவிடை வழங்கப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, AKEBONO இன் கட்டளை அதிகாரி கமாண்டர் ARAI Katsutomo மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார ஆகியோருக்கு இடையே கப்பலில் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றதுடன் AKEBONO தீவில் தங்கியிருந்த காலத்தில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டியிலும், கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்திலும் கப்பலின் குழுவினர் பங்கேற்றனர். மேலும், தீவின் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதில் கப்பலின் பணியாளர்களும் பங்கேற்றதுடன், மேலும் இலங்கை கடற்படை வீரர்களுக்கும் கப்பலின் செயல்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. https://www.virakesari.lk/article/229224

'ஈஸ்ட் பூஞ்சை செவ்வாய் கிரகத்தில்கூட சாகாது' - விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது எப்படி?

3 months 1 week ago
பட மூலாதாரம், Riya Dhage படக்குறிப்பு, ஒரு செல் உயிரியான ஈஸ்ட் பூஞ்சைகளால் செவ்வாய் கோளில்கூட பிழைத்திருக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 1 நவம்பர் 2025, 05:02 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரெட், பீர் போன்ற உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் நுரைமம் அல்லது நொதி என அழைக்கப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையால் செவ்வாய் கோளில்கூட சாகாமல் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு செல் உயிரியான ஈஸ்ட், பூமி தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் எவ்வாறு பிழைத்திருக்க முடியும் என்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு, "விண்வெளியில் மனித செல்கள் சந்திக்கும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கான ஓர் அளவுகோலாக ஈஸ்ட் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முன்னாள் விஞ்ஞானியும் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பெங்களூருவில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் உயிரிவேதியியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செவ்வாய் கோளின் வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழல் பல சவால்களைக் கொண்டது விண்வெளிப் பரிசோதனையில் ஈஸ்ட் பூஞ்சை உயிர்கள் பூமி தவிர பிற கோள்களில் பிழைத்திருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த புரிதலைப் பெறுவதற்காக பிரெட், மைதா போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையை வைத்து விஞ்ஞானிகள் ஒரு விண்வெளி மாதிரிப் பரிசோதனையை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் ஆக்ஸ்ஃபோர்ட் அகாடெமிக் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, செவ்வாய் கோளின் கடினமான சுற்றுச்சூழலை ஒத்த மாதிரிகளை உருவாக்கிய ஆய்வுக் குழுவினர், அதைத் தாங்கிப் பிழைத்திருக்கக் கூடிய தன்மை ஈஸ்டுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். செவ்வாய் கோளில் தொடர்ந்து நிகழும் விண்கல் மோதல் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே அளவிலான அதிர்ச்சி அலைகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல், ஹிஸ்டா என்றழைக்கப்படும் ஹை-இன்டன்சிடி ஷாக் டியூப் (HISTA) என்ற கருவி மூலம் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள முனைவர் பாலமுருகன் சிவராமனின் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்டது. அதோடு, செவ்வாய் கோளில் உள்ள மண்ணில் காணப்படும் நச்சு வேதிப்பொருளான சோடியம் பெர்க்ளோரேடை ஈஸ்ட் எதிர்கொள்ளக் கூடிய சூழலையும் விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர். பட மூலாதாரம், Dr Bhalamurugan Sivaraman படக்குறிப்பு, செவ்வாய் கோள் மீது விண்கற்கள் மோதுவதால் ஏற்படும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் அதிர்வுகளை உருவாக்க உதவிய ஹிஸ்டா கருவி செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில், அதன் சுற்றுச்சூழலில் பல சவால்கள் உள்ளன. "அப்படிப்பட்ட இரண்டு சவால்கள் மீது கவனம் செலுத்தி இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றுதான் செவ்வாயில் ஏற்படும் அதிர்வுகளை ஒத்த பரிசோதனை" என்று விவரித்தார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அதுகுறித்து எளிமையாக விளக்கிய அவர், "செவ்வாய்க் கோளினுடைய வளிமண்டலம் பூமியைவிட மிகக் குறைவான அடர்த்தியுடன் இருக்கும். அதனால் தடையின்றி விண்கற்கள் செவ்வாயின் மேற்பரப்பில் மோதும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கும். எனவே, ஒளியைவிட 5.6 மடங்கு அதிக வேகத்தில் விண்கல் மோதல் நிகழ்வதை ஒத்த கடுமையான அதிர்வுகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டது," என்றார். மேற்கொண்டு பேசியவர், "மற்றுமொரு சூழ்நிலையில், செவ்வாய் மண்ணில் காணப்படும் சோடியம் பெர்க்ளோரைட் என்ற நச்சு வேதிமத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த வேதிமம் குறிப்பாக, நீருடன் ஒட்டாத வேதிப் பொருள்களுடன் வினைபுரியும். அப்படி வினைபுரிவது, உயிரினங்களின் செல்களை உடைத்துவிடும். அத்தகைய உயிரி செல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதிமத்துடன் ஈஸ்டுகள் பரிசோதிக்கப்பட்டன," என்று விளக்கினார். இந்த இரண்டு சவால்களையும் தனித்தனியாகவும் ஒருசேரவும் ஈஸ்ட் பூஞ்சைகளை எதிர்கொள்ள வைத்து விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அப்போது அவற்றின் எண்ணிக்கை பெருகுவதன் வேகம் குறைந்ததே தவிர அவை இறக்கவில்லை என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம், Riya Dhage படக்குறிப்பு, செவ்வாயின் சூழலை ஒத்த அழுத்தம் ஏற்பட்டபோது, புகைப்படத்தில் மஞ்சள் நிறப் புள்ளிகளாகத் தெரியும் ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கித் தமது எம்.ஆர்.ஏ மூலக்கூறுகளை ஈஸ்டுகள் பாதுகாத்துக் கொண்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது. செவ்வாய் கோளில் ஈஸ்ட் பூஞ்சை உயிர் பிழைத்தது எப்படி? ஒற்றை செல் பூஞ்சைகளான ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் சுற்றுச்சூழலை ஒத்திருக்கும் மிகக் கடினமான சவால்களைக்கூட சமாளித்து உயிர் பிழைத்திருந்தது எப்படி? அதற்கான காரணம், "இந்த ஈஸ்டுகள் தங்களுக்குள் ஆர்.என்.பி எனப்படும் புரதத்தை சிறிய, துளி போன்ற கட்டமைப்புகளாக, ஒரு கவசத்தைப் போல் உருவாக்கிக் கொண்டதே" என்று ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, "இந்த ஆர்.என்.பி கவசங்கள் அணுவின் சாதாரண பாகங்களைப் போல் இருக்கவில்லை. அது ஒரு நீர்த்துளியை ஒத்த வடிவில் இருந்தது. "அணுவானது ஒரு புற அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, அதன் மரபணு செயல்முறைகளைக் கடத்தும் எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறுகளைச் சுற்றி இந்த ஆர்.என்.பி புரதத் துளிகள் ஒரு கவசம் போல் உருவாகின. அதன் மூலம் ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் கடினமான சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டன." இத்தகைய பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கிக் கொள்ளாத ஈஸ்டுகள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Swati Lamba படக்குறிப்பு,முனைவர் புருஷர்த் ராஜ்யகுரு (வலது), ஆய்வாளர் ரியா காதே (இடது) அதேவேளையில், "இந்த ஆர்.என்.பி கவசத் துளிகள், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆக்சிஜனேற்ற அயற்சி போன்ற பல காரணங்களின் விளைவாகவும் உருவாகலாம்" ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. இந்நிலையில், செவ்வாய் கோளை ஒத்த சவால் மிகுந்த சுற்றுச்சூழலை எதிர்கொண்டதன் விளைவாக, அதிலிருந்து உயிர் பிழைக்கவே ஈஸ்ட் பூஞ்சைகள் இந்தக் கவசத்தை உருவாக்கின என்ற முடிவுக்கு எப்படி வர முடியும், என்ற கேள்வி எழுகிறது. அதற்குப் பதிலளித்த முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "ஈஸ்ட் பூஞ்சைகள் இந்த ஆர்.என்.பி. கவசங்களை பல்வேறு கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க உருவாக்கலாம். ஆனால், அவை பரிசோதிக்கப்படும் நேரத்தில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தப் பரிசோதனையில் அவை செவ்வாய் கோளின் விண்கல் தாக்கம் மற்றும் நச்சு வேதிம அபாயத்தை எதிர்கொண்டன. அதுதவிர வேறு அழுத்தங்களை அவை எதிர்கொள்ளவில்லை. எனவே, அவற்றுக்கு எதிர்வினையாகவே அவை ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கின என்ற முடிவுக்கு வரலாம்," என்று குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, பூஞ்சையில் தோன்றும் இந்தச் சிறிய துளி போன்ற கவசங்கள், "விண்வெளி போன்ற சூழ்நிலைகளில் உயிர்கள் இருக்கும்போது அவற்றின் செல்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்க உதவும் உயிரியல் அளவுகோலாகப் பயன்படுத்தப்படலாம்" என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, முனைவர் பாலமுருகன் சிவராமன் (இடது), முனைவர் அரிஜித் ராய் (வலது) செவ்வாய் கோளில் ஈஸ்ட் பிழைத்திருப்பதால் மனிதர்களுக்கு என்ன பயன்? இந்த ஆய்வு மனிதர்கள் விண்வெளியில் உயிர் பிழைக்க ஏதுவான வழிகளைக் கண்டறிய உதவுமா? ஈஸ்ட் பூஞ்சையை செவ்வாய் கோளின் சுற்றுச்சூழல் மாதியில் பரிசோதிப்பதால் என்ன பயன்? ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தின் பேராசிரியருமான முனைவர் பாலமுருகன் சிவராமன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது அவர், "நிச்சயமாக இந்த ஆய்வு எதிர்காலத்தில் மனிதர்களின் பல விண்வெளித் திட்டங்களுக்கு உதவும். இது இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது" எனக் கூறினார். செவ்வாய் கோளில் ஒரு உயிர் பிழைத்திருக்கப் பல வகை சவால்கள் இருப்பதாகக் கூறிய அவர், "அவற்றில் சில சவால்களான விண்கல் மோதல் மற்றும் நச்சு வேதிமத்துடனான எதிர்வினை இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டன" என்றும் அவற்றில் சாகாமல் ஈஸ்டுகள் பிழைத்து இருந்ததாகவும் கூறினார். ஆனால், "மனிதர்கள் விண்வெளியில் பிழைத்திருப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, மேலும் பல கட்டங்களில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளில் இது ஒரு துளி மட்டுமே" என்றும் அவர் குறிப்பிட்டார். அதோடு, வான் உயிரியல், வான் வேதியியல் ஆகிய துறைகளில் இந்தியா ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகக் கூறிய முனைவர் பாலமுருகன், அதில் இன்னும் மேம்படுவதன் மூலம் நாம் பலவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்," என்றும் தெரிவித்தார். விண்வெளி சூழலில் ஆய்வு செய்ய ஈஸ்ட் பூஞ்சையை தேர்வு செய்தது ஏன்? விண்வெளியில் உயிர்கள் பிழைத்திருக்க முடியுமா என்பதை ஆராய ஈஸ்ட் போன்ற மிகச் சாதாரணமான பூஞ்சை நுண்ணுயிரி உதவக்கூடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த ஆய்வில், சாக்கரோமைசெஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae) என்ற வகையைச் சேர்ந்த ஈஸ்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிக்கு அது தேர்வு செய்யப்பட மிக முக்கியக் காரணம் இருந்ததாகக் கூறுகிறார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை பேராசிரியருமான புருஷர்த் ராஜ்யகுரு. இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை ஈஸ்ட், ஒரு ஒற்றை செல் பூஞ்சைதான். இருந்தாலும், "அது மனித உடலில் நடப்பவை குறித்துப் பல பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. அதில் நடக்கக்கூடிய பல செயல்பாடுகள் நம் உடலிலும் நடக்கின்றன. அதனால்தான் இதை வைத்து விண்வெளியில் வாழும் திறனை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது." மேலும் அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் ராஜ்யகுரு, "செவ்வாய் கோளின் அழுத்தமான சூழலில் ஈஸ்ட் பூஞ்சைகள் தமது ஆர்.என்.ஏ மற்றும் புரதங்களை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது, உயிர்கள் பூமிக்கு வெளியே விண்வெளியின் பிற பகுதிகளில் பிழைத்திருக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள எதிர்காலத்தில் உதவக்கூடும்" என்று விளக்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e3dxvlylpo
Checked
Thu, 02/12/2026 - 20:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed