புதிய பதிவுகள்2

ஆனால் நேரம் கடந்துவிட்டது.....

3 months 1 week ago
ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
ஓவ‌ருக்கு 6ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌னும் கிட்ட‌ த‌ட்ட‌ இந்தியா வெல்ல‌னும் என்றால் இன்னும் இர‌ண்டு விக்கேட் எடுக்க‌னும் இல்லையேன் தென் ஆபிரிக்கா கோப்பையோட‌ நாடு திரும்புவின‌ம்............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
இதை தான் நான் முத‌லே எழுதினேன்...........தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் க‌ப்ட‌னை அவுட் ஆட்க‌னும்....................... இந்தியா சுழ‌ல் ப‌ந்து மக‌ளிர் ட‌ன்டா அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறா போன‌ விளையாட்டிலும் இவான்ட‌ ப‌ந்துக்கு செம‌ அடி இண்டைக்கும் ந‌ல்ல‌ அடி ந‌ட‌க்குது இவான்ட‌ ப‌ந்துக்கு☹️...................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
ரெனுகா ம‌ற்றும் சிர்ரி சார‌னி இவை இர‌ண்டு பேரை த‌விற‌ ம‌ற்ற‌ இந்திய‌ன் ம‌க‌ளிரின் ப‌ந்து வீச்சு ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி இல்லை...............அடிச்ச‌து சின்ன‌ ஸ்கோர் இப்ப‌டி ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்தா , தென் ஆபிரிக்கா வெற்றிக்கு அருகில் வ‌ந்து விடும்.................

56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டி

3 months 1 week ago
14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தட்டெறிதல் போட்டி சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஆயிலை முதலிடம் Published By: Vishnu 02 Nov, 2025 | 09:56 PM (நெவில் அன்தனி) எம்பிலிப்பிட்டி பொது மைதானத்தில் நடைபெற்றுவரும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஏ. ஆயிலை தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான தட்டெறிதல் போட்டியில் 25.29 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து ஆயிலை முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற வென்னப்புவை புனித இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் ஆங்கில மொழிமூல பாடசாலை மாணவி ஏ. பொன்சேகாவை விட ஒரு மீற்றருக்கும் அதிகமான தூர வித்தியாசத்தில் ஆயிலை வெற்றிபெற்றார். தட்டெறிதல் போட்டியில் பொன்சேகா 23.91 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடம் மாணவி எஸ். அந்த்ரியானா 23.34 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் நடத்தப்பபடும் 56ஆவது கனிஷ்ட சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் போட்டிக்கு ரிட்ஸ்பறி அனுசரணை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/229315

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
மெடின் ஓவ‌ர் போட‌னும் அண்ணா அப்ப‌ தான் ஓட்ட‌த்தை க‌ட்டுப் ப‌டுத்த‌லாம்.............இப்ப‌ போடுவ‌தை விட‌ இன்னும் சிற‌ப்பாக‌ போட‌னும்...............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
சில‌ மெடின் ஓவ‌ர் போட்டால் தான் தென் ஆபிரிக்க‌ ம‌க‌ளிர‌ ம‌ட‌க்க‌லாம் அதோட‌ இர‌ண்டு விக்கேட்டையும் எடுத்தால் ந‌ல்ல‌ம் அது ந‌ட‌க்குமா☹️..............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 1 week ago
இந்தியா ம‌க‌ளிரின் ப‌ந்து வீச்சு ந‌ம்பிக்கை த‌ரும் ப‌டி இல்லை......................... ர‌ன் அவுட் மூல‌ம் தான் முத‌ல‌வாது விக்கேட்😁........................................

யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்!

3 months 1 week ago
சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம் 02 Nov, 2025 | 05:10 PM திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சனிக்கிழமை (01) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது. சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சிரமதானத்தில் கலந்து கொண்டோருக்கு கூழ் காய்ச்சி பரிமாறப்பட்டிருந்தது. மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/229308
Checked
Fri, 02/13/2026 - 02:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed