3 months 2 weeks ago
Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்? வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள். சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. யார் இவர்? திடீரென மலையாள ஊடகங்களில் பேசப்படக் காரணம் என்ன? தொடர்ந்து பார்க்கலாம். வேடன்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர்தான் ஹிரந்தாஸ் முரளி. திருச்சூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்வப்னபூமி (கனவுகளின் நிலம்) என்ற பகுதியில்தான் வளர்ந்தார். சிறுவயது முதலே பாடல், இசை மீது ஆர்வம் இருந்தது. அதனால், தொடர்ந்து கவிதை எழுதுவது, தமிழ்ப் பாடல்களை மலையாளத்தில் எழுதிப் பாடுவது எனத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார். VEDAN VEDAN instagram சிறுவயதில் ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் அம்புகளைச் சரியாகக் குறிபார்த்து எறிவாராம். அப்போது அவருக்கு விளையாட்டாக வைக்கப்பட்டப் பெயர்தான் வேடன். இந்தப் பெயருக்குப் பின்னணியில் சாதிய அடையாளமும் இருக்கிறது என்பது புரிந்து, அந்தப் பெயராலேயே மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அது அப்படியே மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமான தொழில்: பள்ளிப் படிப்பை மட்டும் முடித்த வேடன், ஒருகட்டத்தில் பொருளாதாரத் தேவைக்காக வேலைக்குச் செல்ல தீர்மானித்தார். அதன்படி அங்கிருக்கும் சிலருடன் சேர்ந்து கட்டுமான தொழிலுக்குச் சென்றிருக்கிறார். வேலை செய்துகொண்டிருக்கும்போதுகூட பாடல் பாடிக்கொண்டிருப்பார் என்கின்றனர். அவரின் கலை ஆர்வம் அவரை எடிட்டர் பி.அஜித்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பி.அஜித்தின் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு அமர்த்தப்பட்டார். ராப் கலைஞர்கள் அறிமுகம்: காலப்போக்கில் அவருக்கு டூபக் ஷகுர், எமினெம், அறிவு போன்ற ராப் பாடகர்களின் பாடல் அறிமுகமாகியிருக்கிறது. அவர்களின் பாடலில் இருக்கும் வலியும், உணர்ச்சியும் அவரை அவர் சார்ந்த வரலாறு நோக்கியும், போர் பாதிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது. அப்போதுதான் ராப் பாடல்களை எழுதத் தொடங்கியிருக்கிறார். VEDAN VEDAN முதல் ஆல்பம்: "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் ஜூன் 2020-ல் முதல் தனியிசைப்பாடலை வெளியிட்டார். அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் 'யார்டா இந்தப் பையன்' என மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போதுமுதல் வேடனுக்கு ஏறுமுகம்தான். தொடர்ந்து குரல்: வேடனின் ராப் பாடல்களில், புரட்சிகரக் கருத்துகள் நிறைந்திருந்தன. அதேபோல எங்கெல்லாம் அடக்குமுறைகள் நடக்கிறதோ அது தொடர்பாக வேடன் பாடத் தொடங்கினார். பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை சமூக அடக்குமுறைக்கு எதிராக உறுதியாகத் தெளிவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.திரைப்பயணம்: 2021-ம் ஆண்டில், வெளியான நயட்டு என்ற மலையாளப் படத்தின் நரபலி என்ற பாடலைப் பாடி திரைத்துறையில் முதல் அடியை எடுத்து வைத்தார். 2023-ம் ஆண்டில், சர்வதேச விருது வென்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் 'கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்' பாடலையும் எழுதிப் பாடியிருந்தார். மலையாள பிளாக்பஸ்டர் மஞ்சும்மல் பாய்ஸில் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் இணைந்து 'குத்தந்திரம்' பாடலுக்கான வரிகளை எழுதிப் பாடினார். அதைத் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார். ஆனால், வேடனுக்குப் படத்தில் பாடல் எழுதுவதைவிட தனியிசைப்பாடலுக்காக எழுதுவதுதான் மிகவும் பிடிக்கும் எனப் பேட்டியளித்திருக்கிறார். VEDAN VEDAN பிரச்னைகளும் - வழக்குகளும்! Mee Too 2021-ம் ஆண்டு ராப்பர் வேடன் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அப்போதே ராப்பர் வேடன், ``நான் நடந்துகொண்ட விதம் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதை நினைத்து அவமானப்படுகிறேன். அதற்காக உங்களின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.போதை: ஏப்ரல் மாதம் கொச்சியில் ராப் நிகழ்ச்சிக்காகச் சென்ற வேடன், அங்கு நண்பர்களுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கிறார். அங்கு ஆறு கிராம் கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முயல்வேன். நான் என்னைத் திருத்திக் கொள்ள முயல்கிறேன். எனது ரசிகர்கள் அனைவரும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் நல்ல பழக்கங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். VEDAN VEDAN புலிப் பல்: ஏப்ரல் 28-ம் தேதி போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது, வேடன் புலிப் பல் கொண்ட ஒரு செயினை அணிந்திருந்ததாக காவல்துறையினர் வன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் விளைவாகக் கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், வன அதிகாரிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் வேடனைக் கைது செய்தனர். கடந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அந்தப் பல்லைப் பரிசாக அளித்ததாகவும், அதன் சட்டரீதியான தாக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து, எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.பா.ஜ.க புகார்: "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் சானலின் மூலம் பிரதமர் மோடியை அவதூறு செய்கிறார். இந்தப் பாடல் மூலம் சாதி அடிப்படையிலான வெறுப்பை ஊக்குவிக்கிறார். அந்த சானல் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, வேடன் தொடர்பாக NIA விசாரிக்க வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சருக்கும், என்.ஐ.ஏ-க்கும் பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் பதிவு செய்திருக்கிறார். சர்ச்சை: 'அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள், உன்னிப்பாகக் கவனிக்கப்படும் வேடனின் செயல்பாடுகள் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது அரசியல் அடக்குமுறை' எனச் சமூக ஊடகங்களில் அவரின் ரசிகர்கள் வேடனுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் கொந்தளித்து வருகின்றனர். ராப்பர் வேடனுக்கு எதிராகவும் - ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. VEDAN VEDAN ஆதரவு! வேடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு வனத் துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், ``வேடன் என்று அன்பாக அழைக்கப்படும் ஹிரந்தாஸ் முரளி போன்ற பிரபல பாடகரின் வழக்கைக் கையாளும்போது இன்னும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள், தார்மீகக் குறைபாடுகள் இருந்ததா என்பதை ஆராய்வோம்" என்றார். ஆளும் அரசு தரப்பிலிருந்தும், இளைஞர்கள் தரப்பிலிருந்தும் நாளுக்கு நாள் வேடனுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. Vedan: கேரள மலையாள ராப் பாடகர் வேடன் என்கிற ஹிரந்தாஸ் முரளி; யார் இவர்?
3 months 2 weeks ago
அப்பாடா. இன்றைக்கு ஒருநாள்த்தான் நமக்கு புள்ளி கிடைக்க வேணும் என்றதுக்காக, முழு அணியும் சேர்ந்து அடிச்சாங்கள். அணித்தலைவன் ஜித்தேஷு. அடிச்சான் பாரு ஆறு ஆறா. மொத்தமா 30 நான்குகளும் 7 ஆறுகளும். யார் சொன்னது ஆறு ஆறா அடிக்க வேணும் என்று. நாலு நாலா அடிச்சே வெல்லுவோம் என்று காட்டிவிட்டாங்கள்.
3 months 2 weeks ago
தெரிவான விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். தெரிவானவர்களில் 8 பேர் பெண்கள் என்பது உண்மையில் சாதனை தான்.
3 months 2 weeks ago
இருவருக்கும் வாழ்த்துகள். https://www.asianscientist.com/as100/#sri-lanka இலங்கையிலிருந்து தெரிவான 12 சிங்களவர்களில் 8 விஞ்ஞானிகள் பெண்கள் !
3 months 2 weeks ago
இது தான் உண்மையான கருத்து. இரு தரப்பும் பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டியெழுப்பும் அரசியலை நோக்கி நகவர்வதே தீர்வை நோக்கிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான முதல் காலடியாக இருக்கும். இதனையே இரு தரப்பு அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டும். இரு தரப்பு அரசியல்வாதிகளும் தத்தமது அரசியல் இலாபத்திற்காக வெறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வதானது, ஆபத்தை நோக்கி ஓடும் ஒரு றிலே ஒட்டம் போலவே இருக்கும். இந்த றிலே ஓட்டத்தில் அதிகம் ஆபத்தை எதிர் நோக்குவது சிறுபான்மை மக்களே என்ற பட்டறிவை உணர்ந்து அந்த மக்களின் அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் அதிக பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.
3 months 2 weeks ago
அரைவாசிக் கிணறு தாண்டியாச்சு. ஆனால், மூன்று பேரை இழந்துவிட்டார்கள். கோலி முடிச்சு வைப்பாரா
3 months 2 weeks ago
டிரிலியனில் எழுதியமையால் குற்று போட மறந்து விட்டேன். 22.600 என்று வந்திருக்க வேண்டும். https://misterprepa.net/pib-classement-pays-monde/ இந்த இணையத் தளத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான சீனாவின் உற்பத்தி 21.643 டிரிலியன் என்று குறிப்பிட்டுள்ளனர். அதன்படி 4.5 வீத நடப்பாண்டின் வருமானம் 22.600 ற்கு அதிகமக இருக்கும்.
3 months 2 weeks ago
பக்கத்தில் நின்றபெண்ணுக்கு கிஸ் அடிச்சிருப்பார் போல ...அது தந்த கோபமாக்கும் . இருந்தாலும் மனுஷன் சமாளிக்கிறார் .😃
3 months 2 weeks ago
இறுதிக் காலங்களில் புலிகளால் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விடயங்கள் தொடர்பாக நீங்கள் எவ்வாறு மறுதலித்து அது ஒரு கீழ்த்தரமான சிந்தனை என்று குறிப்பிடுகின்றீர்களோ, அதே போன்று தான் சிங்களவர்களும் தம் ரணவிருவாக்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தெரிவிப்பவர்களை, விமர்சிப்பவர்களை, அவர்கள் ரணவிருவாவாக ஏற்றுக் கொள்ளாதவர்களையிட்டும் குறிப்பிடுகின்றார்கள். இங்கு யார் அதிகம் குற்றச்சாட்டுகளுக்கு உரியவர், யார் குறைந்த குற்றச்சாட்டுகளுக்கு உரியவர் என்ற கணக்கீடுகளுக்கு அப்பால், இரு தரப்புமே (சிங்களவர் / தமிழர்) என்றுமே தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவிதமான பொறுப்புக் கூறல்களுக்கு விரும்புவதில்லை. விருப்பமோ, விருப்பம் இல்லையோ, இலங்கை நாட்டில் இவ் இரு இனங்களும் இணைந்தே தான் வாழ வேண்டிய சூழ்நிலையில் இரு தரப்புமே தாம் எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் உரியவர்கள் இல்லை என்று மறுத்துக் கொண்டே இருக்கும் வரைக்கும் ஒரு போதும் அங்கு அமைதி ஏற்படப் போவதும் இல்லை, முன்னேற்றம் வரப் போவதும் இல்லை.
3 months 2 weeks ago
சரி. 228 அடிக்க வேணும். அடிச்சால் RCB குறைந்தது இரண்டாவதா வரலாம். நமக்கும் புள்ளி கிடைக்கும். நமக்கு புள்ளி கிடைப்பதற்காக, யார் அடிக்கப் போறான்.
3 months 2 weeks ago
100 அடிச்சான் பாந்த். தலைகீழா சுழன்று குதிச்சான் பயல்.
3 months 2 weeks ago
🤣அது தானே? மறந்தும் "மற்றையோருக்கும்" என்பதற்குள் அடங்கிய முக்கியமான நபரின் பெயரைக் குறிப்பிட்டு விடாதீர்கள்! "தமிழ் தேசியக் காளி" கண்ணைக் குத்தி விடும்🤣!
3 months 2 weeks ago
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” இது மனித அறிவிற்கும் பொருந்தும். புலிகள் பற்றிய மிகவும் கீழ்தரமான சிந்தனை. தாய் பிள்ளைக்குப் பாலூட்டும்போது, பிள்ளைக்குப் புரையேறி உயிராபத்துக்கு உட்பட்டதும் அறிந்துள்ளோம். ஆகவே தாய்மார்கள் பிள்ளைகளுக்குப் பால் ஊட்டக்கூடாது என்று விமர்ச்சிப்பதற்கு ஒப்பானது.🫨
3 months 2 weeks ago
வெளி மாநிலப் பயணம், வேலைகள் என்று தள்ளி நின்று விட்டு ஒரு வாரம் கழித்து வந்து பார்த்தால், திரியை "வாய்க்கால்" வெட்டி வேறு திசையில் ஓட விட்டிருக்கிறார்கள்😂! மடை மாற்றுவதில் தானே பல வேடங்களை மறைக்க இலகுவான வழி இருக்கிறது😎?
3 months 2 weeks ago
எல்லாரும் எதிர்பார்த்த பாந்த் இன்றைக்கு வந்துவிட்டார். போட்டு இந்த அடி அடிக்கிறான். இம்முறை, தனது இரண்டாவது அரைச் சதத்தைப் பெற்றுக்கொண்டார். மீண்டும் நமக்குப் புள்ளி கிடைக்கக் கூடாதென்பதற்காகவே போட்டு அடிக்கிற மாதிரிக் கிடக்கு. ஏன் இப்பிடி.
3 months 2 weeks ago
LIVE 70th Match (N), Lucknow, May 27, 2025, Indian Premier League RCB chose to field. Lucknow Super Giants (14/20 ov) 149/1 Current RR: 10.64 • Last 5 ov (RR): 65/0 (13.00) Live Forecast: LSG 224 Royal Challengers Bengaluru
3 months 2 weeks ago
27 MAY, 2025 | 03:10 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி குழுவினருடனான விரிவான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்கட்டுமானம் மற்றும் சுற்றுலாத்துறைகளை விருத்தி செய்வது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்ந்து அடிப்படைத் தரவுகளை பெற்றிருந்தது. இதன் இறுதி அங்கமாக துறை சார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள், தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து திட்டங்களை நிச்சயப்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி, செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் மற்றும் உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியதுடன், தொடர்ந்து துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபரால் மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி அபிவிருத்திக்கான தேவைகள், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை கைத்தொழில் வலயத்துக்கான புதிய முதலீடுகள், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல், சரசாலை மற்றும் மண்டைதீவு சிறுதீவுப் பகுதிகளை சூழல்சார் சுற்றுலா மையங்களாக மாற்றுதல், நெடுந்தீவினை சுற்றுலா நோக்கில் முழுமையான அபிவிருத்தி கொண்ட தீவாக மாற்றுதல் போன்ற விடயங்களுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாக டிஜிட்டல் அடிப்படையிலான வானிலை அவதானிப்பு நிலையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கான நிதி தேவைப்பாடு குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மேலும், மீன்பிடி படகுத்தள அபிவிருத்தி, போதைவஸ்து பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான புனர்வாழ்வு நிலையம், உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான காப்பகம் மற்றும் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம், கழிவகற்றல் முகாமைத்துவம் போன்ற விடயங்களுக்கான அவசியப்பாடு பற்றி உலக வங்கி பிரதிநிதிகளிடம் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் செயற்றிட்டங்கள் முன்னுரிமையாகவுள்ளதாக உலக வங்கி குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது. 1. யாழ்ப்பாண நகர வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி 2. கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம் 3. மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைக்கும் செயற்றிட்டம் 4. யாழ் நகர திண்மக்கழிவு முகாமைத்துவம் 5. யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல் 6. யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி படகுத்தளம் மற்றும் மீன்பிடி துறைமுக அபிவிருத்தி 7. அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான புதிய முதலீடுகள் 8. உள்ளூராட்சி சபைகளின் திண்மக்கழிவு முகாமைத்துவம் இக்கலந்துரையாடலின்போது, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் செயற்றிட்ட தலைவர் ஆகியோர் அரசாங்க அதிபரால் முன்னுரிமைப்படுத்தி முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்களை கருத்தில் கொள்வதாகவும், இச்செயற்றிட்டங்கள் தொடர்பான திட்டங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் சாத்தியப்பாட்டு அறிக்கைகள் போன்றவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் கோரியிருந்தனர். இந்த கலந்துரையாடலின் இறுதியில் யாழ்ப்பாண பழைய கச்சேரி வளாகத்துக்கு உலக வங்கிக் குழுவினரை அரசாங்க அதிபர் அழைத்துச் சென்றதையடுத்து, புனரமைப்பின் அவசியம் தொடர்பில் நேரடியாக குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், மாநகர சபை பிரதம பொறியியலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அதிகார சபையின் மாகாண பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் சுற்றுலா துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/215817
3 months 2 weeks ago
விந்தணுவில் புற்றுநோய்; ஒரே குடும்பத்தில் 10 குழந்தைகள் பாதிப்பு;ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி ஐரோப்பாவில் ஒரே நபரின் விந்தணுவில் கருத்தரித்த 67 குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் அபாயம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையில் மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பரிசோதனையில் 8 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் ஒரே நபரின் விந்தணு மூலம் 67 பேர் கருத்தரித்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் அந்த நபரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கேன்சர் செல்களான ”லுகேமியா மற்றும் ஹாட்ஜ்கின்” அல்லாத ”லிம்போமா” பாதிப்பு வழக்குகளும் அடங்கும். அதாவது, கடந்த 2008 ஆம் ஆண்டு விந்தணு தானத்தின் போது இந்த பிறழ்வு நிகழ்ந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. ஆனால் தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது” என விந்தணுவை வழங்கிய ஐரோப்பிய விந்து வங்கி உறுதிப்படுத்தியது. ஒரு டோனாரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட டோனாரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வல்லுநர்கள், TP53 மாறுபாட்டைக் கொண்ட குழந்தைகள் தீவிரமான, நீண்டகால மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். https://thinakkural.lk/article/318407
3 months 2 weeks ago
'விண்வெளியில் அணு ஆயுதப் போர்' - அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "கோல்டன் டோம்" ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், கீலீ ங் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் எதிர்கால "கோல்டன் டோம்" ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளது. இந்த முயற்சி "விண்வெளியை அணு ஆயுதப் போர் களமாக மாற்றும் சாத்தியங்கள் உள்ளதாக" வட கொரியா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்காவிற்கு "அடுத்த தலைமுறை" வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக (cruise missiles - தானாகவே வழிநடத்தி செல்லக் கூடியவை) ஏவுகணைகளும் அடங்கும். வட கொரிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் திட்டத்தை "சுயநீதி மற்றும் ஆணவத்தின் உச்சம்" என்று சாடியதாக வட கொரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "விண்வெளியை ராணுவமயமாக்க... எதுவும் செய்யத் தயாராக" இருப்பதாக அமெரிக்காவை வட கொரியா குற்றம் சாட்டியது, மேலும் இந்தத் திட்டம் "உலகளாவிய அணு ஆயுத மற்றும் விண்வெளி ஆயுதப் போட்டியை" தூண்டக்கூடும் என்றும் எச்சரித்தது. வட கொரியா, அமெரிக்காவை எதிரியாகக் கருதுகிறது, அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகளை கண்டித்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா கோல்டன் டோம் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கோல்டன் டோம், வட கொரியாவின் அணு ஆயுதக் கிடங்கை "கணிசமாக பலவீனப்படுத்தக்கூடிய" ஒரு அச்சுறுத்தலாக வட கொரியா கருதுகிறது என்று கொரியா தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின், AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "அமெரிக்கா தனது புதிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை நிறைவு செய்தால், அதை எதிர்க்க அல்லது ஊடுருவுவதற்கு வட கொரியா மாற்று வழிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார். 2022ஆம் ஆண்டில், தன்னை ஒரு அணு ஆயுத நாடாக அறிவிக்கும் சட்டத்தை வட கொரியா இயற்றியது, மேலும் அது அண்மை ஆண்டுகளில் பல்வேறு பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹைப்பர்சோனிக் (ஒலியை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் ) திறனுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக வட கொரியா கூறியது, இது "பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளர்களையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்" என்றும் அந்நாடு கூறியது. அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டத்தை விமர்சிக்கும் சீனாவுடன் வட கொரியாவும் இணைகிறது. கடந்த வாரம் கோல்டன் டோம் பற்றி "தீவிரமாக கவலை கொண்டுள்ளது" என்று சீனா கூறியது, இது "வலுவான தாக்குதல் விளைவுகளைக்" கொண்டுள்ளது என்று கூறியது. "அமெரிக்கா முதலில்" என்ற கொள்கையைப் பின்பற்றும் அமெரிக்கா, தனக்கான முழுமையான பாதுகாப்பைத் தேடுவதில் வெறித்தனமாக உள்ளது" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. "இது அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் சமரசம் செய்யக்கூடாது என்ற கொள்கையை மீறுகிறது மற்றும் உலகளாவிய மூலோபாய சமநிலை மற்றும் நிலைத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது." அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவது அவசியம் என்று பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள், ஆனால் சிலர் கோல்டன் டோமை உருவாக்கும் செயல்முறை தொழில்நுட்ப ரீதியிலான சவால்களுடன் அரசியல் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கின்றனர். அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் கோல்டன் டோம் தயாரிப்பு மொத்த செலவு, அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும் பகுதியை எடுத்துக் கொள்ளும். புதிய பட்ஜெட் மசோதாவில் முதல்கட்டமாக $25 பில்லியன் (£18.7 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது, பல தசாப்தங்களாக செலவிடப்பட்ட தொகையைவிட 20 மடங்கு செலவாகும் என்று அமெரிக்க அரசு மதிப்பிட்டுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly3l270we3o
3 months 2 weeks ago
எப்பிடி. என்ன ஆச்சு. எல்லாருக்கும் அலுத்துப் போச்சா. இன்றுதானே கடைசிப் போட்டி. ஒரு சிறு பயணம் போகவேண்டி வந்ததால், இந்தப் பக்கம் வரமுடியவில்லை. இன்றும் ஒரே அலுப்பாக் கிடக்கு. என்றாலும், குப்பையைக் கொட்டுவம்.
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed