புதிய பதிவுகள்2

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
ஓ…அப்போ சிறு தூள், மன்னிக்கவும் துகள் பெரு வெள்ளம் ஆகியது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்🤣.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
கஸ்ரப்பட்டு ஓவர்ரைம் அடித்து உழைத்த காசே நிலைக்குதில்லை.மோசடி செய்த காசு எப்படி நிலைக்கும். கொஞ்சகாலம் .ஆடாத ஆட்டம் ஆடுவார்கள். ஒருநாள் அடங்கிவிடுவார்கள்.பெரிய பெரியகார் எடுத்து பகட்டாக ஓடித்திரிவார்கள். ஆனால் வங்கியில் மாதம் மாதம் பெரிய தொகை சம்பளத்தில் இருந்து போகும். புதுக்கார் கொஞ்சம் உரஞ்சுப்பட்டாலே அவ்வளவுதான் அதன் மதிப்பு குறைந்து விடும். அதை விட சில வேளைகளில் விபத்து நடந்து காரைக்கைவிடும்நிலை வந்தால் கொம்பனிக்கு முழுக்காசும்கட்டத்தான் வேண்டும்.காப்புறுதி செய்தாலும் அதுக்குக்கட்டும்காசும் அதிகம் அதைவி ஓரளவு பழைய காரை குறைந்த விலையில் முழுப்பணத்தையும் செலுத்தி வாங்கினால் சின்ன உராய்வுகள் வந்தாலும் வைச்சு ஓடலாம் கவலையும்படத்தேவையில்லை.போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
தென்னாபிரிக்கா பற்றி மட்டும் என்றில்லாமல், எல்லா மகளிர் அணிகளையும் சேர்த்தே சொல்ல வந்தேன், அண்ணா.............. எல்லா மகளிர்களுமே பின்னுக்கு வருவதை முன்னுக்கே யோசித்து வைக்கும் 'பின் புத்தி' உள்ளவர்கள் தானே...................🤣. தென் ஆபிரிக்கா அணி நல்லாவே விளையாடுகின்றார்கள்.............. போகிற போக்கில் நாலில் ஒன்றாக வந்து விடுவார்கள் போலத் தெரியுதே................

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
இப்ப என்ன சொல்ல வாறீங்கள்😂? ஒரு உதாரணத்திற்கு, "அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருப்பது சட்டமாக இருந்தது" ஓம் இருந்தது. 1860 இல் அது சட்ட விரோதமாகி விட்டது, ஆனாலும் 1920 வரை ஏதோ ஒரு விதத்தில் நடைமுறையில் இருந்தது. காரணம் என்ன? உங்களைப் போல "எல்லோரும் செய்தால் அது நோர்மல், நான் ஏன் செய்யக் கூடாது?" என்ற "புத்திசாலித்தனமான பேர்வழிகள்" இருந்தது தான் காரணம். இது போன்ற கள்ள வேலைகள், முடிச்சவிக்கி வேலைகளைச் செய்யாமல் இருப்போர் வக்கில்லாமல், வாய்ப்பில்லாமல் செய்யாமல் விடுவதில்லை. அவர்களுக்குள் இருக்கும் அறத்திசை காட்டி செய்யாமல் தடுத்து விடுகிறது. இப்படியாக உள்ளக அறம் உடைய மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் ஊழல் குறைந்த நாடுகளாக இருக்கின்றன. அப்படியில்லாமல் உங்களைப் போல "அறமாவது மண்ணாங்கட்டியாவது" என்போர் அதிகமாக வாழும் நாடுகள் ஊழலில் தேங்கிப் போய் முன்னேற இயலாமல் தவிக்கின்றன.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
நான் lyca, Lebara என்பதை குறிப்பிட்டதற்கு காரணம் அவர்கள் எனக்கு பக்கத்தில் இருந்து வீங்கியவர்கள் என்பதால் மட்டுமே.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
வினா 15) 3 விக்கேற்றுக்களினால் தென்னாபிரிக்கா அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 29 புள்ளிகள் 2) ஏராளன் - 27 புள்ளிகள் 3) ரசோதரன் - 27 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 25 புள்ளிகள் 5) கிருபன் - 25 புள்ளிகள் 6) வீரப்பையன் - 25 புள்ளிகள் 7) புலவர் - 23 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 23 புள்ளிகள் 9) சுவி - 22 புள்ளிகள் 10) வசி - 19 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 19 புள்ளிகள் 12) வாதவூரான் - 19 புள்ளிகள் 13) கறுப்பி - 19 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 19 புள்ளிகள் 15) வாத்தியார் - 17 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 15, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
சிலருக்கு சுட்டு விட்டது. அஞ்ஞாதவாசம் கலைக்கும் அளவுக்கு சுட்டு விட்டது. “அண்டங்காக்காயை சொன்னா, சாதா காக்காயுக்கு கோவத்தை பாரேன்” -அமரர் விவேக்- பிகு இதே ஆட்கள்தான். சிறுவர் துஸ்பிரயோகத்தை, ஜெப்ரி இஸ்டீன் செய்யவில்லையா? இளவரசர் அண்டுரூ செய்யவில்லையா ஒரு அப்பாவி தமிழ் பையன் செய்தால் தப்பா என எழுத கூடிய பிரகிருதிகள். தாம் கறுப்பாடுகளாய் இருந்து வயிறு வளர்ப்பது மட்டும் இன்றி, அதில் தப்பில்லை என சமூகத்தையே கறுப்பாடுகளாகும் படி வேதம் ஓதும் சாத்தான்கள். நல்வழி சொல்பவர்களுக்கு இவர்கள் வைக்கும் பெயர் வக்கில்லாதவர்கள். மொள்ளமாரித்தனம் பண்ணி வயிறு வளர்ப்பதற்கு, திண்ணை பேச்சு வீரராய் வாழ்ந்து விட்டு போகலாம்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 months 2 weeks ago
சிறுவர் துஸ்பிரயோகிகளையே நியாபப்டுத்திய ஆட்கள், இதுக்கு கண்கலங்காட்டித்தான் பிழை 🤣

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
உங்கள் உழைப்புக்கு மீறி ஊதியம் பெறுபவர்களும் மறைமுகமாக இன்னொருவர் உழைப்பை சுரண்டுபவர்கள்தான். ஐந்து நூறு டாலருக்கு ஒருவன் அடியாளாக சென்று ஒருவனை அடிப்பதும் ஒரு மருத்துவ கொம்பனி விற்பனைக்காக ஒரு மருத்துவருக்கு கொமிசன் கொடுத்து அதை பெறும் மருத்துவருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அடிப்படியில் தொழில் ஒன்றுதான் கவர்ச்சிகரமான ஆடைகளால் அது மறைக்க படுகிறது. BP ( British Petrolium) செய்யாத ஊழலையா மேலே இருக்கும் இருவரும் செய்து விடடார்கள்? இப்போதும் இல்லை எப்போதும் BP கொடி கட்டி பறக்கும் காரணம் சடடத்தை எழுதுபவர்களே அவர்க்ளின் அடியாட்கள்தான். இங்கு சடடபடி என்று எதுவுமே இல்லை ....... இன்னொரு மனிதனை பிடித்து அடிமையாக வைத்திருக்கலாம் என்பது நான் வாழும் அமெரிக்க நாட்டில் சட்டமாக இருந்த்தது. மற்ற நாடுகளுக்கு சென்று அங்கு வசிப்பவர்களை கொன்று பொருட்டுகளை கொள்ளையடித்து வருவது நீங்கள் வாழும் நாட்டில் அரச கடமையாக இருந்தது. உங்கள் வளர்ச்சி கொஞ்சம் கண்ணை குத்தும்படியாக இருந்தால் .... நீங்கள் குற்றவாளி. மற்ற எல்லோரும் சுத்தவாளி இங்கு நாளும் நாளும் பல நூறு கம்பெனிகள் திவால் ஆகிறது .... அவை அனைத்திலும் பண மோசடி இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் திவால் ஆக்குவதற்கு என்றே நாளும் நாளும் 1௦௦ கம்பெனிகள் வியாபார நிறுவனங்கள் நிறுவ படுகிறது. சட்ட்தில் உள்ள ஓடடைகளும் திமிங்கலங்கள் தமக்காக எழுதிய சட்ட்ங்களும் அதற்கு துணை போகிறது. எதுக்கும் வக்கில்லாதவர்கள் திண்ணையில் அமர்ந்து நீதிமான் போல பஞ்சாயத்து செய்யவேண்டியதுதான்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 2 weeks ago
உண்மையில், இவர்கள் நடத்தியது நல்ல வியாபாரம். UK அரசு ஒப்புதல் இல்லாமல், அந்த சுத்திகரிப்பு ஆலையை (Lindsey oil refinery) இயக்கும் உரிமையை பெற்று இருக்க முடியாது. (அனால், ஏதோ ஒரு இடத்தில பேராசை தொற்றிவிட்டது.) ஆனி 2025 இல் இந்த கம்பனி நிர்வாக நிலையை அறிவித்த போது, ஆலையை தற்கலிகமாக மூடினாலும், UK இன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகம் ஆக குறைந்தது 1/5 ஆல் குறைவடைந்து, எரிபொருள் விலை எகிறும் நிலை காணப்பட்டது. ஆயினும், auditors ம் ஒத்துழையாமல் , இப்படியான தேசிய நலன் / பாதுகாப்புக்கு கேந்திர முக்கியத்துவம், மற்றும் இன்றியமையாத கட்டுமானம் ஒன்றை இப்படி நட்டத்தில் இருந்தால் போல் கொண்டுபோய் நிறுத்துவது மிகக்கடினம். தேசிய கேந்திர நலன் இருப்பதாலேயே UK அரசு அந்த சுத்திகரிப்பு ஆலையை தத்ற்காலிகமாக பொறுப்பு எடுத்து, இயக்கும் உரிமையை பெரும் நிறுவனத்தின் indemnity க்கு பொறுப்பு எடுப்பதாகவும் அறிவித்து இருந்தது. (ஆகவே இந்த வணிகம் ஒன்றும் களவு இல்லை) நான் றிந்த வரையில், uk வங்கிகள் மட்டும் அல்ல, eu, swiss வங்கிகளும் எண்ணெய் கொள்வனவுக்கு, விற்பனைக்கு ஒவொரு தடவையும் மில்லியன் கணக்கில் நிதி அளித்து உள்ளன. ஏனெனில், பாரிய கொள்தாங்கி கப்பல்களிலேயே மத்திய கிழக்கு மட்டும் அல்ல. மத்திய ஆசியால் இருந்தும் மசகு எண்ணெய், இடை மசகு எண்ணெய் கொள்வனவு செய்துள்ளது நிறுவனம். நான் நினைக்கிறன், சிலவேளைகளில், கடன்வாங்கும் போது வட்டி வீதம் மிக குறைவாக இருந்துது இருக்கும். இப்போது வட்டிவீதம் கூடிவிட்டது. அதனால் மீள்நிதியமைப்பு (refinancing) இயலாமல் போய் இருக்கலாம். இப்படி பல நிறுவனங்கள் (பகிரங்கமாக தெரியாமல்) வங்குரோத்தாகி விட்டன. ஆயினும் இவர்கள் தலைமறைவாகியதே, எதாவது தனிப்பட்ட அடிப்படையில் தரு இளைத்து இருப்பார்கள் என்ற எண்ணத்தை தூண்டுகிறது. ( இவர்களின் கம்பனிக்கு தகவல் தொழில்நுட்ப முகாமையாளராக இருந்தவர் , மொறட்டுவை பல்கலைக்கழக பட்டதாரி (பாலா என்ற அழைப்பு பெயர்) ஒப்பீட்டளவில் இளவயதில் (40 ஆரம்பங்களில்) காலமாகிவிட்ட்டார் .)

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

3 months 2 weeks ago
இவ்வளவு நேத்தி வச்சு உடல்முழுதும் முள்ளு குத்தி திரி திரியா தொங்கியும் ..... உச்ச நீதிமன்றம் இப்படி பொசுக்கென்று அடிச்சு மூடி விட்டதே நினைச்சா எனக்கே கண் கலங்குது...... பாவங்கள்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months 2 weeks ago
முட்டையில் இருந்து த‌ப்பியாச்சு நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு யாழில் காணுகிறேன் உங்க‌ளை ந‌ண்பா ஏன் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லை.....................

ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

3 months 2 weeks ago
ஊழலை சிறப்பாக செய்ய தெரிந்த மனிதன் முன்பு ஆப்பிள் நிறுவனமும் 24 காரட் தங்கத்தை கொடுத்து இருந்தது. ஒரு 100 பில்லியன்கள் கொடுத்தால் 2 என்றாலும் சுருட்டிட கூடிய அறிவு கருணாநிதியின் உடன் பிறவா சகோதரர்
Checked
Sat, 01/31/2026 - 13:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed