3 months 2 weeks ago
பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம் 27 MAY, 2025 | 06:35 AM லிவர்பூலில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் அணிவகுப்பு நிகழ்வின் மீது நபர் ஒரு காரால் மோதியதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது காரால் மோதிய 53 வயது பிரிட்டிஸ் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் நான்கு சிறுவர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/215780
3 months 2 weeks ago
மகிந்த ராஜபக்ச…. புற்று நோயால் மருத்துவ மனையில் என்றால், பசில் ராஜபக்ச… அமெரிக்காவில் கதிரையால் விழுந்து மருத்துவ மனையில் படுத்து இருக்கின்றாராம்.
3 months 2 weeks ago
கடந்த 10 வருடத்துக்கு மேலாக இந்தா போகுது அந்தா போகுது என்று படம் தான் காட்டுகிறார்கள்.
3 months 2 weeks ago
உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி, மஹிந்த ராஜபக்ஷ புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயின் கடுமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 months 2 weeks ago
மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி! கடந்த 19 ஆந் திகதி தலைநகர் கொழும்பு போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இலங்கையின் உள்நாட்டுப் போரில் (1979 - 2009) உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் 16 ஆவது தேசிய நிகழ்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் ஒரு பெரும் சூறாவளியை கிளப்பியிருப்பதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்களில் ஓரளவுக்கு பலவீனமடைந்திருந்த NPP இன் வாக்கு வங்கியில் அநேகமாக மேலும் ஒரு சரிவு ஏற்படுவதற்கு வழிகோலள முடியும். அடுத்து இந்த உரை நிகழ்த்தப்பட்டிருக்கும் காலம் (Timing) அரச தரப்புக்கு பெருமளவுக்கு உசிதமற்றதாகவே இருந்து வருகிறது என்ற விடயத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் NPP பெற்றுக் கொண்ட அமோக வெற்றியையடுத்து சில காலம் பதுங்கிக் கிடந்த தீவிர தேசியவாத / இனவாத சக்திகள் (உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர்) ஓரளவுக்குப் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் 'இனம்' மற்றும் 'மதம்' போன்ற தேசாபிமான சுலோகங்களுடன் களமிறங்கியிருக்கும் ஒரு சூழ்நிலையலேயே சிங்களப் பொதுச் சமூகம் பூஜித்து வரும் 'ரணவிருவாக்களை' (War Heroes) வெறும் சிப்பாய்களாக (Soldiers) 'தரமிறக்கும்' விதத்தில் ஜனாதிபதி பேசியிருக்கிறார். போரில் உயிர் நீத்த வீரர்களை குறிப்பிடுவதற்கென கடந்த 25 ஆண்டுகளாக பொது வழக்கில் உள்ள சிங்களச் சொல் 'ரணவிருவா' (War Hero) என்பது. ஆனால், ஜனாதிபதி தனது உரை நெடுகிலும் அச்சொல்லை பயன்படுத்துவதை மிகக் கவனமாக தவிர்த்துக் கொண்டதுடன், அதற்குப் பதிலாக 'சிப்பாய்கள் (Soldiers) என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தென்னாசிய கலாச்சார பாரம்பரியங்களை பொருத்தவரையில் போர் வீரர்களை 'வெற்றி வீரர்கள்' என வர்ணிப்பதும், அவர்களை அதிமானுடர்களாக கட்டமைப்பதும் வரலாறு நெடுகிலும் இடம்பெற்று வந்திருக்கும் இயல்பான ஒரு செயல். தமிழில் கலிங்கத்துப் பரணி தொடக்கம் கலைஞரின் 'பாயும் புலி பண்டார வன்னியன்' வரையில் அனைத்துப் போர் இலக்கியங்களும் இந்த ரணவிரு ' Concept' ஐயே முன்வைக்கின்றன. எவரும் அந்தப் போர் வீரர்களை வெறும் சிப்பாய்களாக பார்ப்பதுமில்லை; வர்ணிப்பதுமில்லை. 'இரத்தத் திலகம்' (1963) தொடக்கம் 'அமரன்' (2024) வரையில் திரையிடப்பட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களும் 'ஜவான்களை' வீரமும், தேச பக்தியும் நிறைந்த உத்தம புரிஷர்களாக சித்தரித்துக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் என்று சொல்லலாம். 'எம்மைப் பொருத்தவரையில் அவர்கள் எமது தாய் மண்ணுக்காக போராடி உயிர் நீத்தவர்கள். வெறும் Soldiers அல்லது Officers அல்ல. தாய் மண்ணை உயிரினும் மேலாக நேசித்த ரணவிருவாக்கள். ஜனாதிபதி ஆனாலும் சரி அவர்களை இவ்விதம் சிறுமைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது' என்பது எதிர் தரப்பினர் ஆவேசத்துடன் முன்வைக்கும் வாதம். 'டயஸ்போரா' புலிகளிடமிடமிருந்து காசு மற்றும் இன்னபிற காணிக்கைளைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி மாபெரும் தேசத் துரோகத்தை இழைத்திருக்கிறார்' என கடும் உணர்ச்சிவசப்பட்ட தொனியில் பேசியிருக்கிறார் விமல் வீரவங்ச - "ஜனாதிபதி தனது உரையில் எந்தவொரு இடத்திலும் வாய் தவறியும் கூட 'ரணவிருவா' என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அது மட்டுமன்றி, அவர் 'இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு', 'இறைமை' மற்றும் 'பிரிவினைவாத பயங்கரவாதம்' போன்ற சொற்களையும் தவிர்த்துக் கொண்டார்........ இதுவரையில் எந்தவொரு அரச தலைவரும் செய்யத் துணியாத ஒரு செயல் இது..........." "டயஸ்போரா" புலிகளின் மனதை கொஞ்சமும் புண்படுத்தக் கூடாது என்ற கரிசனையுடன் நிகழ்த்தப்பட்ட உரை இது" என்கிறார் உதய கம்மன்பில. மறுபுறம், 1983 வன்செயல்களைத் தூண்டிய முக்கிய புள்ளிகளில் ஒருவரான எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மற்றொரு யூடியூப் சண்டியராக எழுச்சியடைந்திருக்கும் ராஜாங்கன சந்தாரதன தேரர் என்ற சர்ச்சைக்குரிய பிக்கு 'அடேய் அநுர, நீ புலிகளுக்கு ....... தை கொடுக்கும் துரோகி....... உன்னை நாங்கள் சும்மா விடப் போவதில்லை....' எனக் கடுமையாக ஜனாதிபதிக்கு அச்சுறுத்துல் விடுத்திருக்கிறார். தீவிர சிங்கள தேசியவாதிகள், அந்த முகாமைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (பலங்கொடை கஸ்ஸப தேரர் போன்ற) ஒரு சில முன்னணி தேரர்கள் மற்றும் பிரபல்யமான யூடியூபர்கள் பலரும் இது தொடர்பாக AKD ஐ கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார்கள். "கடும் மத வெறுப்பாளர்களான எமது ஆட்சியாளர்களும், அவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சில காவியுடை கயவாளிகளும் புத்த சாசனத்தையும், நமது இனத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்....." "இதனைப் பார்த்துக் கொண்டு மகாநாயக்க தேரர்கள் வாளாவிருக்கக் கூடாது. 'இந்த ஆட்கள் இனிமேலும் நமது நாட்டை ஆட்சி செய்வதற்கு இடமளிக்க முடியாது' என்ற செய்தியை அவர்கள் மக்களுக்கு விடுக்க வேண்டும்" என்று ஆவேசத்துடன் பேசுகிறார் மட்டக்களப்பிலிருந்து சண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் அம்பிட்டியே சுமனரதன தேரர். 'இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்' என்ற விதத்தில் சமூக ஊடகங்களில் வாதப்பிரதிவாதங்கள் நிகழும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்திருக்கிறது. வடக்கிலும், தெற்கிலும் வருடாந்த போர் நினைவேந்தல் நிகழ்வுகள் வங்குரோத்து அரசியல்வாதிகளின் சுயநல அஜென்டாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான கருவிகளாக மாறி வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் பின்னணியில், ஜனாதிபதியின் உரைக்கு எதிராக வெகுண்டெழுந்திருக்கும் தென்னிலங்கையின் 'மாபெரும் தேசாபிமானிகளுக்கு' சவால் விடுக்கும் விதத்திலான ஓர் அங்கதக் குறிப்பு இது - "சிங்களவர்களின் வேண்டுகோளின் பேரில் இராணுவ சட்ட திட்டங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 'சிப்பாய்' (சொல்தாதுவா) என்ற சொல்லை நீக்கி விட்டு, 'ரணவிருவா' எனப் பெயரிடுவதற்கும், ரணவிரு நலன்புரிச் சேவைகளுக்கென ஒரு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கும் ஒவ்வொரு சிங்களப் பிரஜையிடமிருந்தும் வருடாந்தம் ரூ. 1000/- ரணவிரு நினைவேந்தல் வரி ஒன்றை அரவிடுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்". - பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி மறுபுறம், வடக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் அரசியல் குறித்த சிவா முருகுப்பிள்ளையின் இந்த முகநூல் பதிவு முக்கியமானது - "...............மே 18, 2009 அன்று பல ஆயிரம் பொதுமக்களும் கொல்லப்பட்டது உண்மை. இந்தக் கொலைகளை இலங்கை ராணுவம் எவ்வளவு செய்ததோ அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாது புலிகளும் செய்தனர்." "இது ஒரு மிருகம் மக்களை கேடயமாக கைது செய்து. தம்மை காப்பாற்றிக் கொண்டு சென்று, இன்னொரு அரசு மிருகம் கொல்வதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த உச்ச பலி கொடுப்பு நிகழ்வு ஆகும்". "இந்தத் தேர்தலில் பிரதான நீரோட்டத்திலிருக்கும் அனைத்து 'தேசியம்' பேசும் தமிழ் கட்சிகளும் அன்று 'மனிதக் கேடயங்களை விடுவியுங்கள்' என்று குரல் கொடுக்கவில்லை". "மாறாக 'உள்ளுக்கை வரவிட்டு அடிப்பார்கள்' என்று கூறி உசுப்பேத்தியவர்கள்". "........கனடா போன்ற நாடுகள் தமது மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த நாடுகள். இவ்வாறான ஒரு நாட்டின் அரசியல் தலைவர்களிடமிருந்து எமது அரசியல் விடுதலையை தேடி நிற்கிறோம் என்பது எமது சமூகத்தின் அவலம்............." "உங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியும், நினைவுச் சின்னங்களும் அழிந்த மக்கள் பற்றியதோ எதிர்காலம் நாசமாய் போன எங்கள் இனம் பற்றியதோ அல்ல. முழுக்க முழுக்க உங்களைப் பற்றியது". "அது வேண்டுமென்றால் உங்களுக்கான வாக்கு வங்கி சரிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம்." "தீர்வுகளை, அதிகாரப் பரவலாக்கத்தை நாங்கள் உள்ளுக்குள்ளே தான் போராடி, பேச்சுவார்த்தை நடத்தி தந்திரோபாயங்கள் மூலம் (கடந்த காலத்தில் தவறவிட்டது போல அல்லாது) பெற்றுக்கொள்ள வேண்டும்." ஒரே வரலாற்று நிகழ்வுக்கு இரு தரப்புக்கள் வேறு வேறு வியாக்கியானங்களை வழங்குவதை 'Contested Histories' என்று சொல்வார்கள். இலங்கையை பொருத்தவரையில் 1956 ஆட்சி மாற்றத்தையும், 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரையும் சிங்கள மற்றும் தமிழ் தரப்புக்கள் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டங்களில் நோக்கி வருகின்றன. 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தை தமிழர்கள் மாபெரும் இனப் படுகொலை என வர்ணித்து, அங்கு மரணித்தவர்களுக்கு வருடாந்தம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் அதே வேளையில், தெற்கு சிங்கள தரப்பு அதனை ஒரு வெற்றி விழாக் கொண்டாட்டமாக பெருமிதத்துடன் நினைவு கூர்ந்து வருகின்றது. ஆனால், இந்த ஆண்டு போர் வீரர்களை நினைவு கூரும் அரச வைபவத்தில் பங்கேற்று ஜனாதிபதி ஆற்றிய உரையையும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய பின்வரும் உரையையும் போர் குறித்த தெற்கின் பார்வையில் ஒரு 'Paradigm Shift' ஏற்பட்டு வருவதைக் காட்டும் குறியீடுகளாக கருத முடியும் - ".....இதனை வெற்றி விழாவாக கொண்டாட முடியாது. அது ஒரு தரப்பினரின் மனதை புண்படுத்த முடியும். அதற்குப் பதிலாக, போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஒரு நிகழ்வாகவே அது இருந்து வருதல் வேண்டும்..........." ".........தெற்கு இளைஞர்களைப் போலவே, உண்மை மற்றும் நீதி என்பவற்றுக்கு குரலெழுப்பிய வடபுல இளைஞர்களும் வீரர்கள் ஆவார்கள் ......... தெற்கில் போலவே வடக்கிலும் இளைஞர்கள் மரணித்த பொழுது நாங்கள் கண்ணீர் வடித்தோம். எங்களிடம் துளியும் இனவாதமில்லை........... நாங்கள் அவர்களையும் நினைவு கூர வேண்டும்................ அதில் எந்தத் தவறுமில்லை." - அமைச்சர் கிரிசாந்த அபேசிங்க https://www.facebook.com/mlm.mansoor/posts/pfbid0MAZ5EBPAkVhDL6vVh7YV1QtA4avPLmscx71aHRBaWxm8NwLL82Q3e6SRYNrQTN8Al
3 months 2 weeks ago
இங்கிலாந்து ஒரு ஆச்சரியமான குழுவாக (டெச்ட்) ல் தெரியவில்லை. இந்தியா ஒரு சவாலான போட்டியையே கொடுக்கும். இங்கிலாந்து ஒரு சராசரியான குழு. ஒரு வேளை போட்டி மைதானங்கள் சில சவாலை கொடுக்கலாம்.
3 months 2 weeks ago
முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். முதலமைச்சர் லொட்டோ எடுத்துப் பார்க்கலாமே.
3 months 2 weeks ago
இங்கிலாந்து இந்துஸ்தானை வைட்வோஷ் செய்யும்!😂
3 months 2 weeks ago
இடுப்பு கொழுப்பும் தொந்தி கொழுப்பும் ஒரு பிரச்சனையா?🤨
3 months 2 weeks ago
பள்ளிகூடத்துக்கு சுற்று மதில் கட்டி உள்ளார்கள். நாலு கால் பிராணிகளுக்கு தாக சாந்தி குட்டைகள் கட்டி உள்ளார்கள். அவர்கள் இடம் பெயர்வதை பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. அதே போல் ஏனைய ஊர்கள் போலத்தான் அவர்களும் கோயில், அலங்கார வளளவு என வேலை திட்டங்களை செய்கிறார்கள். இவை எதையும் நான் சொல்லவில்லை. நான் சொன்னது நல்லூரும், தீவகமும் அயல் அல்ல. ஆகவே புதிதாக வருபவர்களுக்கு அதாவது வந்தான் வரத்தானுகளுக்கு நல்லூரின் வழமை தெரியாது இருப்பது ஆச்சரியமல்ல. குட்டி 16 அடி பாய்ந்து அப்பாவின் பெயரை நிலைநாட்ட வேண்டும். அப்படி செய்தால் கிடா விருந்தை ஒரு பிடி பிடித்து விட்டு… இவன் தந்தை என்நோற்றான் கொல் என்று சொல்லுவோம்🤣.
3 months 2 weeks ago
100% சரியான கருத்து. அதாவது மத நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை. ஆகவே அது அந்த நம்பிக்கைக்குரியவர்களை மட்டும்தான், அதன் எல்லைக்குள் மட்டும்தான் கட்டுப்படுத்த வேண்டும். எனவே எந்த மதத்தின் வணக்க தலத்தின் எல்லைக்கு அப்பால் நடப்பவை எதிலும் எந்த மதமும் தலையிட கூடாது. கேம் ஓவர்.
3 months 2 weeks ago
டொனால்ட் ரம்புக்கு கடிதம் எழுதுவமா? 😂
3 months 2 weeks ago
குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை செவ்வாய் 27 மே GMT நேரப்படி பிற்பகல் 02:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதன் பின்னர் குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அடுத்த கட்ட Play-Off போட்டிகளில் விளையாடவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 70) செவ்வாய் 27 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB ஆறு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி கந்தப்பு அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குழுநிலைகளில் முதலாவதாக வருமா?
3 months 2 weeks ago
நாங்கள் எல்லா விடயங்களையும் சீரியஸ்சாக கதைக்க முடியாது. மத விடயங்களில் ஆதாரம் என்று பார்த்தால் எதுவுமே மெய்யானது இல்லை.வாதம் விதண்டாவாதம் செய்யலாமே தவிர நிறுவப்போவது யாருமில்லை. கலிகை கந்தனுக்கு ஒரு நக்கல் கதை இருக்கும். கதிர்காம கந்தனுக்கு இன்னொரு நக்கல் கதை இருக்கும். செல்வசந்நிதியானுக்கு இன்னொரு பட்டப்பெயர் இருக்கும். பணக்கார கந்தன் நல்லூரானுக்கு இன்னொரு நக்கல் இருக்கும். மத விடயத்தில் அவரவர் நம்பிக்கையை தவிர வேறெதும் இல்லை.மத நூல்களும் மத வரலாறுகளும் பொய்யானவை என்பது என் கருத்து.மற்றும் படி அந்த இயற்கையை நோக்கி அரோகரா சொல்வதில் எந்த தவறுமில்லை. இயற்கை வலிமையானது.
3 months 2 weeks ago
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது. தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன்று ஓரளவு கட்டுப்பாடு ஆக இருந்தது. இந்த முகமானது சிங்கள ராணுவ நிலைகளின் மிக அருகில் இருக்கும் ஒரு அபாயகரமான பகுதியில் இருந்த காவல் முன்னரங்கு நிலை முக்கிய முகாம்களில் ஒன்றாகும். தேசியத் தலைவர் அவர்கள் இந்த முகாமிற்கு வருகை தந்து, அனைவரிடமும் கதைத்து, கலந்துரையாடிக் கொண்டிருந்த பொன்னான தருணங்கள் ஆகும். சில மணி நேரங்களின் பின்பு எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம். இந்த புகைப்படத்தில் பாதி உருவத்தில் முன்னர் நின்று கொண்டிருப்பது வீரச்சாவடைந்த பூலோகம் ஆவார். அடுத்ததாக கைகட்டி கொண்டு நிற்பவர் வீரச்சாவடைந்த கேப்டன் அலன் ஆவார். அவரின் அருகில் நிற்பது வீரச்சாவடைந்த கேப்டன் மோரிஸ் ஆவார். பின்புறம் இருந்து எட்டி பார்த்துக்கொண்டு இருப்பவர் முதல் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் ஆவார். அதேபோன்று வீரச் சாவடைந்த கேப்டன் வினோத் அவர்கள், வீரச் சாவடைந்த கேப்டன் விடுதலை அவர்களும் இப் புகைப்படத்தில் உள்ளனர். தேசிய தலைவரின் அருகில் காற்சட்டையுடன் நிற்பது வீரச்சாவடைந்த கிருபா அவர்கள். கிருபாவின் பின்னால் நிற்பது வீரசாவடைந்த மேஜர் கணேஷ் அவர்கள். கிருபாவின் அருகில் இருப்பது வீரச்சாவடைந்த சுந்தர் அவர்கள். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் கேப்டன் அலன் அவர்களும், கிருபா அவர்களும் 38 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளில் தான் வடமராட்சி ஆபரேஷன் லிபெரேஷனில் கலந்து கொண்டு இதே அன்றைய நாள் அதிகாலையில் வீரச்சாவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் இருக்கும் ஓரிருவர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் வீரச்சாவடைந்த மாவீரர்கள். இந்த புகைப்படம் என்பது நமது தாயக வீர வரலாற்றின் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமான புகைப்படம் ஆகும். இவர்களின் வீரவரலாற்றின் வழியில் நமது மண்ணின் விடுதலைக்கான பயணம் தொடரும்
3 months 2 weeks ago
மிக குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் தலைவராக கில் வந்தது நம்ப முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் மிக்க அனுபவம் உள்ளவர்களையே பல நாட்டு குழுக்கள் உள்வாங்குகின்றன. இந்தியா ரி 20 போட்டிக்கு தெரிவு செய்த வீரர்கள் போல் தெரிவு செய்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. இந்தியா ஒரு பரீட்சாத்தமாக பார்க்கிறதா எனவும் எண்ண தோன்றுகிறது.
3 months 2 weeks ago
மேளகாரருக்கு விருந்து வைத்தது நான் இல்லை எனது அப்பா என்பதை மீண்டும் மீண்டும் பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🤪. குறிப்பு,.....அப்படி தப்பித்தேன் 🤣
3 months 2 weeks ago
எனக்கு தெரிந்த வரையில் 1,... படிக்க 2,..தொழில் அல்லது தொழில் தொடங்க ...அனேகமாக வியாபாரம் இந்த இரண்டையும் புங்குடுதீவு கொடுத்து இருந்தால் அவர்கள் ஒருபோதும் புங்குடுதீவை விட்டுட்டு வெளியேறியிருக்க. மாட்டார்கள் இது எனது கருத்துகள் இன்று அவர்கள் முன்னேற்றம் அடைந்த நிலையிலும் அவர்களின் வருங்காலச்சந்ததி கல்வி வேலைவாய்ப்பு பெறக்கூடியதாக. புங்குடுதீவு மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை மாறாக ஆயிரத்க்கணக்கான. கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து கோவில் கட்டுகிறார்கள் என்ற செய்திகளை பார்த்தேன் கடலை ஆழமாக்கி நிலமட்டத்தை உயர்த்தி பல தொழில் நிறுவனங்களையும் கல்வி நிலையங்களையும் உருவாக்கி வெளி ஊரிலுள்ள மக்களை புங்குடுதீவில். குடியேறச்செய்யமுடியும். ஆனால் அப்படி ஒரு அறிகுறியும். தெரியவில்லை பெரிய கோவில் கட்டுவதில். தான் குறியாகயிருக்கிறார்கள்.
3 months 2 weeks ago
Doctorஸ் தங்களின் இடுப்புக் கொழுப்பு, தொந்திக் கொழுப்பு போன்றவற்றை குறைத்து விட்டு வந்து பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து இருக்கலாம்.
3 months 2 weeks ago
இங்கே எல்லோரும் சொல்வதில் கொஞ்சம் நியாயம் உள்ளது என்றே நினைக்கின்றேன் யார் எதை உண்பது என்பதை வேறொருவர் தீர்மானிக்கக் கூடாது இன்னொருவர் உணர்வினை மற்றொருவர் மதிக்க வேண்டும், காயப்படுத்துவது தவறு. இது இரு பக்கமும் சரியான விகிதத்தில் நடைபெறும் பொழுது பிரச்சனைகள் வலுப்பது குறையும் வலது மற்றும் இடது சாரிகள் விசித்திரமானவர்கள், அமெரிக்காவில் மாட்டு இறைச்சியை முறையே ஆதரித்தும் எதிர்த்தும் போராடும் அவர்கள் இலங்கை இந்தியாவில் அதை மாற்றிச் செய்கிறார்கள்.உணவை அரசியல் ஆக்குவதால் அவர்கள் அதிகாரம் அடைக்கிறார்கள் கனவு காணும் போழுது மிருகம் துரத்துவது போலோ அல்லது கிழே விழுவது போன்றோ வரும் காட்சிகள் எல்லாம் பல ஆயிரம் வருடம் முன் எம் முன்னோர்கள் வாழ்ந்த, பட்ட, வாழ்வின் நினைவுகள் என்று சொல்வார்கள், அது போல் நாமும் ஆதி காலத்தில் உண்ட இறைச்சி வத்தலை விட்டுவிட்டு விடாப் பிடியாக சைவ உணவோடு மட்டும் வாழ்ந்து விட்டு போக முடியாது, நான் 20 வயது வரைக்கும் மச்சம் சாப்பிட வில்லை, இன்று மச்சம் இல்லாமல் உணவு இறங்குவதும் இல்லை. நீங்கள் மாறா விட்டாலும் உங்கள் பிள்ளைகள் மாறி விடும். ஆகவே விடாப் பிடியாக ஒரே பிடியில் நிற்பது தோல்வியையும் விரக்தி நிலையையும் உருவாக்கும். ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த சமூகம், சாதி, மனநிலை, உண்ட உணவு, அவனுக்குள் காலா காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து உடனடியாகவெல்லாம் வந்து விட முடியாது. அதற்கு காலம் எடுக்கும். சில நேரம் பரம்பரைகள் தாண்டித் தான் தாம் இதுவரை நம்பியதில் கோளாறு உண்டு என்று தெரிய வரும். சமூகத்தை திருத்தி எடுக்கின்றேன் என்று புறப்படும் புரட்சியாளர்களுக்கு இந்தப் புரிதல் முக்கியம். உடனடிப் புரட்சி வன்முறையில் முடியும். அரசியலில் மதம் கலக்கக் கூடாது. வேலன் சுவாமிக்கு இது தேவை இல்லாத வேலை. அவரே பார்க்க காட்டுக்கு வேட்டை நாயோடு உடும்பு பிடிக்கப் போகும் ஆள் போல் உள்ளார். அவரின் உடம்புக்கும் முக லட்ஷணத்துக்கும் அவர் எடுத்த அரசியல் தேவை இல்லாத ஆணி. சரி இது போன்ற பிரச்சனைகளுக்கு எது தான் தீர்வு? இது போன்ற பிரச்சனைகள் இடைக்கிட நடப்பதே தீர்வு.
Checked
Mon, 09/15/2025 - 19:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed