புதிய பதிவுகள்2

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
அவர்கள் செம்மணி புதைகுழியின் குற்றவாளிகளை மறைக்க, காக்க இதை இப்போ கையிலெடுக்கிறார்கள். அவர்கள் யாரையோ குறிவைத்தே, இதை செய்து தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் யார் இதன் சூத்திரதாரிகள் என்பது. எல்லா புதைகுழிகளின் பின்னாலும் ஒரே நிறுவனம். நீங்களே தெரிவிப்பது இவர்களை கொன்றது யாரென்பதை. இலங்கை அரசும் அதனோடு ஒட்டியிருந்த பல உண்ணிகூட்டங்களில் ஒன்றும். எதற்கு அப்போது தமிழ் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தி குளிர் காய வேண்டியிருந்ததோ அதுவே காரணம்.

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!

3 months 2 weeks ago
நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆமத்துறு, இந்த பயங்கரவாதச்சட்டத்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இளைஞர் பாதிக்கப்படும்போதெல்லாம் ரசித்துக்கொண்டிருந்துவிட்டு, இப்போ இந்த பன்னிரண்டு பேருக்காக வீதியில் இறங்கி கொடி பிடிப்பதேன்? அன்றெல்லாம் உங்களுக்கு பயங்கரவாதசட்டம் தேவையாயிருந்தது, அதை மேலும் மேலும் பலப்படுத்த வேண்டியிருந்தது. இப்போ அது உங்களுக்கு எதிராக பாயும்போது அகற்ற வேண்டுமென்கிறீர்கள் அது என்ன நிஞாயம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? இயற்றினவர்கள் அதற்கு இரையாகும்போது நீங்கள் கூப்பாடு போடுவீர்கள், உங்களுக்கு போட்டு வளர்த்தவர்கள் அவர்களாச்சே. இப்போ உங்கள் தேவைக்கு தமிழரும் சேர்ந்து. இந்த பன்னிரண்டு பேரும் நாட்டுக்காக உழைத்தவர்களா, அனிஞாயத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களா? நாட்டை கொள்ளையடித்தவர்களுக்காக குரல் எழுப்பி மிகுதி கொள்ளையரையும் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்.

நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

3 months 2 weeks ago
தென்பகுதியில் இந்தச்சம்பவம், மக்களை கடற்படையினரே காப்பாற்றியதாக செய்திகள் வெளிவந்து, கடற்படையினருக்கு வாழ்த்துக்கள் குவியும். எத்தனை உயிர்களை கடலில் வைத்து வெட்டியும் கொன்றுமிருக்கும் இந்த கடற்படை. உயிருக்காக தங்கள் கைகளை உயர்த்தி உதவி தேடி கெஞ்சியிருப்பார்கள் எங்கள் மக்கள். அதில் எத்தனை குழந்தைகள் இருந்திருப்பர். இதனையும் அந்த காப்பாற்றப்பட்ட மக்கள் தெரிய முடிந்தால் தமிழரின் காருணியம், எதிரிக்கும் இரக்கம் கட்டும் மனநிலை புரிய வாய்ப்புண்டு. சுற்றுலா வரும் சிங்கள பயணிகளுக்கு இவைகளை தெரியப்படுத்த வேண்டும். முள்ளி வாய்க்கால் பேரவலம் முடிந்த பிற்பாடு, மஹிந்த, ஒவ்வொரு பௌத்த சங்கத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்தாயிரம் ரூபா கொடுத்து வடக்கிற்கு தமது வீரத்தை காண்பிக்க, பௌத்த சங்க சுற்றுலா அனுப்பிவைத்தார். சம்பில் துறையில் தான் மிகப்பிரமாதமாக கட்டிய விகாரை எல்லாம், தன்னை தெற்கில் பிரபல்யப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட உத்திகள். அப்போ, தென்பகுதி சுற்றுலாப்பயணிகள் விறகுகள் தளபாடங்கள் என வாகனங்களில் வந்து தங்கிச்சென்ற வண்ணமிருந்தனர். அப்படியிருக்கையில் அவர்களது வாகனமொன்றும் விபத்தில் மாட்டிக்கொண்டது. ஆனால் எம்மக்கள் வெறுப்பை காட்டாமல் அவர்களை மீட்டு காப்பாற்றி அனுப்பி வைத்தனர். அந்த தோல்வி, இழப்பு, வெறுமை, போன்ற நிலையிலும் எம்மக்கள் மனிதாபிமானத்தை இழக்கவில்லை. இங்கே இருக்கிறார் புத்தன், ஜேசு, காந்தி, அல்லா. இதை புரியாமல் புத்தன் பெயரை வைத்துக்கொண்டு செய்வதெல்லாம் கொலை, கொள்ளை, அடாவடி.

நாட்டைப் பிரிக்கும் முயற்சி இன்னும் மாறவில்லை

3 months 2 weeks ago
அதற்கு ஏன் நீங்கள் இடம் அளிக்கிறீர்கள்? உங்கள் பிரஜைகளை நீங்கள் கௌரவத்துடன் வாழ விட்டால் மற்றவர்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? தமிழரின் அரசியல் உரிமைகளை பறித்தது இந்தியாவா? அவர்கள் மீது கலவரங்களை தூண்டி கொன்று ஒழித்தது இந்தியாவா? அவர்களின் நிலங்களைபறித்தது இந்தியாவா? தமிழரின் பூர்வீக நிலங்களில் இராணுவ காவலரண்களை, விகாரைகளை உருவாக்கியது இந்தியாவா? பிக்குவிற்கு இப்போ சிங்களத்தை புனிதமாக்க வேண்டிய தேவையுள்ளது. எங்கோ கேட்டதை இங்கு வந்து கக்குகிறார். ஆனால் கண்ணுக்கு முன் நிகழ்ந்தவைகளை, நிகழ்த்தியவைகளை மறைக்கிறார். பிரச்சனைக்கு தீர்வு காண முயலாமல் பழியை வேறொரு பக்கம் காட்டி தொடருங்கள் அடுத்த அத்தியாயத்தை, அந்த இந்தியாவே வெகு விரைவில் உங்களையும் கூறு போடும். உள்நாட்டு பிரச்சனையை சுமுகமாக தீர்க்க வக்கில்லாமல் சர்வதேசத்துக்கு கொண்டு போய், பிச்சை எடுத்து, சர்வதேச படைகளையும் ஆலோசனைகளையும் கையாண்டு சொந்த மக்களை கொன்றொழித்த இந்த இந்த நாட்டுக்கு இறைமையேது, அதிகாரமேது, பொருளாதாரமேது? உங்கள் மதம் என்னத்தை போதித்தது, சாதித்தது? நீங்கள் போதிப்பது மத போதனையுமல்ல நீங்கள் ஆன்மீக வழிகாட்டியுமல்ல. உங்கள் வாயிலிருந்து வெளிவருவது இனவாதம் மதவாதம் அழிவின் வழிகாட்டிகள் நீங்கள். அதுபற்றி நீங்கள் வெட்கப்படுவதில்லை, பெருமை பேசிக்கொள்கிறீர்கள். அரசியல் கூட்டங்களில் அரசியல்வாதிகளில் முதல் இருக்கைகளை தேடுகிறீர்கள். உங்களுக்கு எதற்கு மதம், காவி? இரத்தம் குடித்து வாழும் விஷ ஜந்துக்கள். முகத்தில் குரூரம், வாயில் கக்கும் இனவாதம், அடாவடி, பொய், திரிப்பு. வேறு என்ன உங்களிடமுண்டு மக்களுக்கு போதிப்பதற்கு?

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
ட்ரம்பிலிருக்கும், புட்டினிலிருக்கும், மோடியிலிருக்கும், ஸ்டாலினிலிருக்கும், சுமந்திரனிலிருக்கும், சிறிதரனிலிருக்கும் அதே கரிசனை தான் சீமான் மீதும் எங்களுக்கு இருக்கின்றது. இவர்களைச் சார்ந்த மக்களுக்கும், பொதுவாக மற்றவர்களுக்கும் இவர்களால் பயன் உண்டா அல்லது ஏமாற்றப்படுகின்றார்களா என்ற அதே பார்வையைத் தான் நாங்கள் இங்கே முன்வைக்கின்றோம். பல வருடங்களின் முன், முல்லைப் பெரியாறு அணைக்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை.அப்பொழுது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நண்பன் கேட்டான், 'நாங்கள் ஏன் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்................'. சீமான் பேசும் விடயங்களும், விடுதலைப் புலிகளின் தலைவர் கூட தங்களுக்கு எந்தளவு முக்கியம் என்றும் அவன் கேட்டான். தமிழ்நாட்டு பொதுசனங்களுடன் சீமானுக்கு இருக்கும் பெரிய இடைவெளிகளில் இதுவும் ஒன்று. முதன் முதலில் நீட் பரீட்சையால் தற்கொலை செய்து இறந்து போன அனித்தாவிற்கான போராட்டத்தில் சீமான் பங்குபற்றவில்லை. இதை இயக்குனர் ரஞ்சித் நேரடியாகவே மேடையில் கேட்டார். இன்றும் கூட பங்குபற்றமாட்டார். அதற்கான காரணமும் எங்களுக்கு தெரியும். சீமான் தொல் திருமாவுடன் ஒரு மேடையில் ஏறப் போவதும் இல்லை. பின்னர் இவர் எப்படி ஒரு சமூகப் போராளி ஆகின்றார்................. இவர்கள் பேசும் தமிழ்த்தேசியத்தை தொல் திருமாவோ அல்லது ரஞ்சித்தோ அல்லது அவர்களில் எவரோ ஏற்காததன் பின்னணியும் இதுவே. இங்கு ஒன்றுபட்ட ஒரு தேசியமே இல்லை. ஒரு சிறு வட்டம் மட்டுமே உள்ளது. ராமதாஸும் இவரைப் போன்ற ஒரு சமூகப் போராளியே. ஆணவக் கொலைகளையும், நாடகக் காதல் என்ற சொற்பதத்தையும் தமிழர்கள் மத்தியில் விதைத்து வளர்த்து வைத்திருப்பவர்கள் பாமகவினரே. வாழும் காலத்தில் காடுவெட்டி குரு ஒரு தாதாவாகவே வாழ்ந்து முடித்தார். இவர்கள் சமூகப் போராளிகளா........... இவர்களால் ஒரு பட்டியலின மக்களின் குடிசைக்குள் இன்றும் போக முடியுமா........... 'ஜெய்பீம்' என்ற ஒரு படத்தில் நடித்ததற்காக, அதில் வரும் ஒரு குறியீட்டுக்காக, நடிகர் சூர்யா படும் பாட்டைப் பாருங்கள். இது தான் பாமகவும், ராமதாஸும் சொல்லும் சமூக நீதியா.......... ஒரு சாதி பற்றி மட்டுமே இவர்கள் பேசுகின்றனர். சமூகம் பற்றி அல்ல. பிற சாதியினரை அடக்கி ஒடுக்குகின்றனர். பின்னர் இருவரும் சமூக நீதி, சமூகப் போராளிகள் என்கின்றனர். எம்ஜிஆரின் கட்சி எடப்பாடியாரின் கையால் முடிய வேண்டும் என்று இருக்கின்றது போல....................🫣.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
3. "ஆவின்" (AAVIN) பால் பற்றித் தெரிந்த யாரும் தமிழ்நாடு பாலுற்பத்தியில் பின் தங்கி பால் பொருட்களை பெருவாரியாக இறக்குமதி செய்கிறது என்ற தரவை நம்ப மாட்டார்கள். பாலுற்பத்தியில் தமிழ் நாடு இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் வருடாந்த பாலுற்பத்தி இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறதேயொழிய வீழ்ச்சியடையவில்லை. தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து பால் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆடுமாடுகளின் வளர்ச்சி வந்தால் ஓங்கோல்பங்காளிகள் பெருமுதலாளிகளின் வியாபாரம் படுத்து விடும். தமிழ்நாட்டில் கால்நடைகளின் பெருக்கத்கை; கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு எதிரான போராட்டங்களை அரை வேக்காட்டுத்தனமான போராட்டங்களாக அறிவிக்க வேண்டும் இதுதான் திருட்டுத்திராவிடத்தின் செயற்திட்டம். அடமுட்டாள்களே பத்திரிகைகளையும் தொலைக்காட்சிகளையும் கையில் வைத்துக் கொண்டு பொயப்பிரச்சாரம் செய்யும் காலம் கடந்து விட்டது. இது சமூக ஊடகங்களின் காலம். ஒவ்வொரு மனிதனினும் தனது சொந்தக் கருத்தை தெரிவிப்பதற்கும் பலருக்கும் அது போய்ச் சேர்வதற்குமானகாலம் இது.பொய்கள் இனி நீண்ட காலம் நிலைக்காது. அடுத்த நொடியே உண்மைகளை உலகறியும் தொழல் டே;ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சிகள் ஊழியர்களின் சம்பளம் கொடுக்க முடியாமல் இழுத்து மூடவேண்டிய கட்டத்துக்கு வந்து விட்டது. அதனால்தான் அவர்கள் இங்கள் பெயர்களில் சமூக ஊடக கணக்கையும் வைத்திருக்கிறார்கள்.பொய்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது.

உன்னால் முடியும் தம்பி

3 months 2 weeks ago
உங்களை நேரில் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் இப்படி நழுவிப் போய்விட்டதே, ஜஸ்டின். இதே போலவே நியூ ஜெர்சியில் இருந்து வருவதாகச் சொல்லிய ஒரு அணியும் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போய்விட்டது. அங்கிருந்து ஒரு சிலர் மட்டும் வந்தார்கள். என்னுடைய அணி செட்அப் வாலிபால் கிண்ணத்தை வென்றது. மொத்தமாகவே உலகெங்கும் எங்களில் செட்அப் வாலிபால் விளையாடுபவர்கள் குறைவு. இரண்டு 2கே அணிகள் கனடாவிலிருந்தும், ஒரு 2கே அணி அமெரிக்காவிலிருந்தும், மற்றும் என்னுடைய அணியும் கலந்துகொண்டன. அந்த இளையோர் அணிகள் எதிர்பார்க்காத விதத்தில் போட்டிகள் அமைந்தன. ஓவர் கேம் வாலிபாலில் கனடா அணி ஒன்று வென்றது. இரவு ஒன்றுகூடலும் நன்றாகவே இருந்தது.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
பூமியைத் தோண்டி மீதேன் எடுக்கிறார்கள் . இந்த இலட்சணத்தில் ஆடுமாடுகளின் கழிவிலிருந்து வரும் மீதேன் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பாம்.ஆடுமாடுகளின் கழிவுகள் எந்தப் பின் விளைவுகளையும் தராத இயற்கை உரம். இந்தக்கம்பி கட்டும் கதைகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.மனிதக் கழிவுகளையே கையால் அள்ளும் அவலநிலையில் ஆடுமாடுகளின் கழிவுகள்தான் சுற்றுச்சூழலுக்கு பாதகம் என்று சொல்வது சீமானை எதிர்ப்பதற்காகவே இவர்கள் செய்யும் பொய்ப் பித்தலாட்டம்.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளை அவதானிக்கும் போது இதை தெளிவாக விளங்கி கொள்ள முடியும் வெளிநாட்டு ஈழதமிழர்கள் தான் இவர் தான் தமிழ்நாட்டின் முதல்வராகி தமிழ் ஈழம் பெற்று கொடுக்க போகின்றார் இலங்கை தமிழர்களின் கடைசி நம்பிக்கை தான் என்று ஏமாறுகின்றார்கள்

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
தமிநாட்டில் பீஜேபியுடன் கூட்டணி அமைத்து பீஜேபி என்று ஒரு கட்சி இருக்கிறது தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்த கட்சிகளை விட்டு விட்டு எந்தக்கட்சியுடனும்கூட்டணிவைக்காத நாதகவை பிஜேபியின் பி ருPம் என்று எந்த ஆதாரத்தை வைத்து முத்திரை குத்துகிறீர்கள். திமுக வுடன் கூட்ணி அமைத்துத்தான் முதல் எம்எல்ஏ பாஜக பெற்றுக் கொண்ட வரலாற்றை மறைத்து விட்டு ஆதராமில்லாத குற்றச்சாடடை முன்வைக்கும் நோக்கம். என்ன?பிஜேபியுடன் கூட்ணி வைக்காத கட்சிகள் என்று முதல் வரிசையில் நாதக >கம்னியூஸ்ட்டுகள்>காங்கிரசைத் தவி வேறு எந்தக் கட்சியையும் குறிப்பிட முடியாது. பிஜேபியுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் கூட்டணி வைத்த கம்னியூஸ்ட்டுகளும் காங்கிரசும் பிஜேபி எதிர்ப்பு என்ற தமது கோட்பாட்டில் உறுதியாக இருப்பதாகச் சொல்வதற்கான தகுதியை இழந்து விட்டார்கள்.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
எந்தக்குழு செய்தாலும் அவைக்கு பிரச்சினை இல்லை ...இப்ப செம்மணி உண்மை வெளியில் வந்து ..தமிழருக்கு நீதி கிடைக்கக் கூடாது...இந்த நேரத்தில் அரசுக்கு உதவி செய்தால் ...அளப்பரிய வரப்பிரசாதம் கிடைக்கும்...

வவுனியாவில் பொலிஸின் கோரம் - குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

3 months 2 weeks ago
வவுனியா 1 மணி நேரம் முன் வவுனியாவில் பொலிஸின் கோரம் - குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு! வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த அந்தப் பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா, கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்தனர். இதன்போது அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை அவர்கள் துரத்திச் சென்றதுடன் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் தடியொன்றை வீசித் தடையை ஏற்படுத்தினர். இதனால் நிலைதடுமாறி கீழே வீழ்ந்த மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அவதானித்த மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும், ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். பொலிஸாரின் இந்தக் கொலை வெறியாட்டத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்ட நேரமாகச் சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் சடலத்தைப் பொலிஸார் அங்கிருந்து அகற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்த மக்கள், "நீதிவான் இங்கு வரவேண்டும். அவர் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம்." என்று தெரிவித்தனர். இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. மக்களின் கொதிப்பால் தடுமாறிய பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, இந்த மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாகத் தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அங்கு நின்ற மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், "பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நீதிவான் இங்கு வரவேண்டும்' என்று விடாப்பிடியாக நின்றனர் . இதையடுத்துத் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். அதன்பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் அந்தப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி அந்தோனிப்பிள்ளை (வயது 58) என்ற குடும்பஸ்தர் என்று தெரியவந்துள்ளது. அவரது சடலத்துக்கு அருகில் மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சினை ஒன்றும் காணப்படுகின்றது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப் படையினர், கலகத் தடுப்புப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டிருந்தனர். https://newuthayan.com/article/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
நன்றாக இறைச்சியில் ஒரு பிடி பிடித்து விட்டு வந்து மிருகங்கள் விடும் காஸ் உலகுக்கு நன்றன்று என்று ஏப்பம் விட்டு கொண்டு இருக்கிறோம்.....

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

3 months 2 weeks ago
நேற்று யாழில் 9A எடுத்த மகள். இன்று தந்தை விபத்தில் பலி! பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை, வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் நேற்று வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Selvakumar Natkunasingam
Checked
Fri, 10/31/2025 - 23:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed