3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 13 JUL, 2025 | 10:50 AM காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில், கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். காலி தொடக்கம் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆகையினால் காலி தொடக்கம் மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219840
3 months 2 weeks ago
'கோலி'யாக மாறிய கில்: தனி நபர் சாதனைக்கு முன்னுரிமை தந்ததால் பெரும் விலை கொடுத்த இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரிஷப் பந்த் ரன் அவுட்டான காட்சி கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் பிபிசி தமிழுக்காக 13 ஜூலை 2025, 02:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லார்ட்ஸ் டெஸ்டில் இரு அணிகளும் மாறி மாறி உள்ளே வெளியே ஆட்டம் விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு செசனில் இங்கிலாந்தின் கை ஓங்கினால் அடுத்த செசனில் இந்தியா முன்னுக்கு வருகிறது. சம பலத்துக்கு சான்று கூறும்விதமாக இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக (387) முடிந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8 முறை இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களும் சமமாக முடிந்துள்ளன. 8–ல் 1 முறை மட்டுமே கடைசியாக பேட்டிங் செய்த அணி வென்றிருக்கிறது என்பது இந்தியாவுக்கு பாதகமான ஓர் உபரி தகவல்! அட்டகாசமாக பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் - பந்த் நீரும் நெருப்பும் ஒன்றாக சேர்ந்து பேட்டிங் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது கேஎல் ராகுல்–பந்த் இருவரின் பார்ட்னர்ஷிப். மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் பந்த்தின் காயமடைந்த விரலை குறிவைத்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் வியூகம் வகுத்தார். பந்த்திற்கு எதிராக வழக்கத்துக்கு மாறாக பீல்டர்களை வளையத்துக்குள் நிற்கவைத்து அவர் தாக்குதல் தொடுத்தார். ஆர்ச்சர் வீசிய நாளின் முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகள் விளாசினாலும், பிறகு சூழலை புரிந்துகொண்டு முதல் சில ஓவர்களுக்கு பந்த் பொறுமையை கடைபிடித்தார். ஆர்ச்சரின் பந்துவீச்சில் மிகச் சொற்பமான பந்துகளையே பந்த் எதிர்கொண்டார். காயமடைந்த சக வீரருக்காக ஆர்ச்சரின் பெரும்பாலான பந்துகளை ராகுல் சந்திக்க துணிந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த் முதல் நாள் ஆட்டத்தில் பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட்டுக்கு போப் கை கொடுத்தது நினைவுக்கு வருகிறது. கார்ஸை கொண்டு பந்த் மீது பவுன்சர் தாக்குதல் நடத்தினார் ஸ்டோக்ஸ். அந்த பந்துகளை எதிர்கொள்ளும் போது பந்த் வலியால் அவதிப்பட்டதை பார்க்க முடிந்தது. ஆனால், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகம் ஒருகட்டத்தில் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. ஒருபக்கம் பந்த் தன் பாணியில் ஆவேசமாக பவுண்டரியும் சிக்ஸரும் பறக்கவிடும் போது, மறுபுறம் ராகுல் தன் கிளாஸ் என்னவென்பதை காட்டினார். இருவருடைய ஆட்டம் முழுவதும் நேரெதிரான டெக்னிக் கொண்டதாக இருந்தது. பந்த், வலியை பொருட்படுத்தாமல் முன்னும் பின்னும் நகர்ந்து பந்துவீச்சாளர்களின் லெங்த்தை குலைத்து ரன் குவித்தார். ராகுல் பந்தை நேரம் கொடுத்து உள்ளே வரவழைத்து கடைசி நொடியில் விளையாடி ரன் சேர்த்தார். புல் (pull) ஷாட் விளையாடும் முறையிலும் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. பந்த் தன் முழு பலத்தையும் கொடுத்து பவுன்சர் பந்துகளை பறக்கவிட்ட போது, ராகுல் எவ்வித சிரமமும் இன்றி மேலிருந்து கீழாக சாமர்த்தியமாக (Top to bottom) பந்தை புல் ஷாட் அடித்தார். இந்த தொடரில் டெக்னிக்கலாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ராகுல்தான் என்று சந்தேகமே இல்லாமல் சொல்ல முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கே.எல். ராகுல் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்த பென் ஸ்டோக்ஸ் உணவு இடைவேளைக்கு சில பந்துகள் மட்டும் இருந்த நிலையில் 248 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டும் இழந்து இந்தியா வலுவான நிலையில் இருந்தது. அப்போது ராகுல் 98 ரன்களுடன் எதிர்முனையில் (Non striker end) இருந்தார். Lunch–க்கு முன்பாக ராகுலுக்கு சதமடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பஷீர் பந்தில் இல்லாத ரன்னுக்கு அவசரப்பட்டு ஓடி, ஸ்டோக்ஸ் கையால் ரன் அவுட்டானார் பந்த். சதத்தை எட்டுவது என்பது ஒரு வீரருக்கு முக்கியமான ஒன்றுதான். நீண்ட நேர உழைப்பின் ஊதியம் சதம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அணியின் நலனை கருத்தில் கொள்ளாமல் தனி நபர் சாதனைக்கு அவர்கள் முன்னுரிமை அளித்ததால் இந்தியா பெரும் விலை கொடுக்க நேரிட்டது. மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் நன்றாக செட் ஆகியிருந்த பந்த் - ராகுல் ஜோடி பிரிய நேரிட்டது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த் ரன் அவுட்டான காட்சி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ரூட் 99 ரன்களுடன் இருக்கும் போதும் 1 ரன்னுக்கு அவசரப்படவில்லை என்பது இரு அணியினரின் முன்னுரிமைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது. ஃபார்மில் இருக்கிறாரோ இல்லையோ ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு இந்த ரன் அவுட் ஒரு உதாரணம். இரைக்காக சிறுத்தை பதுங்குவதை போல காத்திருந்த அவர், பந்த் ஓடிய அடுத்த நொடியே விக்கெட் என்று மனதில் குறித்துக் கொண்டார் என்பது போல இருந்தது அவருடைய வேகமான த்ரோவும் அதன் பிறகான அவருடைய கொண்டாட்டமும். முழு உடற்தகுதியில் இருக்கிறாரா என்பது விவாதமான நிலையில், 100 பந்துகளுக்கு மேல் பேட்டிங்கின் போது எதிர்கொண்டு, முக்கியமான ரன் அவுட் ஒன்றை செய்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, கூடவே கேப்டன்சியும் செய்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்! பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃபார்மில் இருக்கிறாரோ இல்லையோ ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு இந்த ரன் அவுட் ஒரு உதாரணம் கை கொடுத்த ஜடேஜா சதமடித்து அடுத்த சில பந்துகளில் கவனத்தை தொலைத்து விக்கெட்டை ராகுல் பறிகொடுத்தார். கேஎல் ராகுலுக்கு நிகரான திறமை கொண்ட பேட்ஸ்மேன்கள் இன்று கிரிக்கெட் உலகில் மிகவும் குறைவு. ஆனாலும் முக்கியமான கட்டத்தில் சோம்பலாக விளையாடி விக்கெட்டை இழக்கும் பலவீனம் இருப்பதால்தான் அவருடைய சராசரி 40–க்கும் குறைவாக இருக்கிறது. ஒரு உச்சபட்ச பேட்ஸ்மேன் சதத்தை எட்டிய பிறகு அவ்வளவு எளிதாக விக்கெட்டை பறிகொடுக்கமாட்டார். ராகுல் விக்கெட்டுக்கு பிறகு தடுமாறிய இந்திய அணியை ஜடேஜா–நிதிஷ் ரெட்டி இணை தூக்கி நிறுத்தியது. ஒரு டெஸ்ட் போட்டியின் தலையெழுத்தை மூன்றாம் நாள் ஆட்டம்தான் தீர்மானிக்கும் என்பார்கள். இருவரில் ஒருவர் விரைவில் ஆட்டம் இழந்திருந்தாலும் இந்தியாவுக்கு பின்னடைவாக முடிந்திருக்கும். ரன்னுக்கு அழைக்கும் போது இருவருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாதது துலக்கமாக வெளிப்பட்டது. 2, 3 முறை ரன் அவுட் வாய்ப்புகளில் இருந்து தப்பினார்கள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் அசத்திய நிதிஷ் ரெட்டி, சரியான கால்பாடம் (Footwork) இல்லாவிட்டாலும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து விளையாடினார். ஸ்டோக்ஸ் வீசிய ஒரு அட்டகாசமான பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் ரெட்டி ஜடேஜாவின் 72 ரன்கள் இந்த ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கு முக்கியமான ரன்கள் எனலாம். ஆனால், ஏனோ இந்த டெஸ்டில் இந்தியா வென்றாலும் ஜடேஜாவின் பங்களிப்பை பற்றி யாரும் பேசப்போவதில்லை. ஸ்டோக்ஸ் எந்தளவுக்கு தன் அணிக்கு பங்களிக்கிறாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்தியாவுக்கு ஜடேஜா உதவுகிறார். ஆனால் அவர் பெயர் என்றும் தலைப்பு செய்தியாக மாறுவதில்லை. ஜடேஜா–சுந்தர் பார்ட்னர்ஷிப்பின் போது, எல்லாருடைய கண்களும் சுந்தர் மீதுதான் இருந்தன. ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான டெக்னிக்கை கொண்டவர் சுந்தர். இந்திய அணி அவருக்கு இன்னும் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அதேநேரம், ஜடேஜாவின் பேட்டிங் சோடை போனது என்று சொல்லிவிட முடியாது. வேகப்பந்து வீச்சுக்கு பின்னால் செல்ல வேண்டும்; சுழற்பந்து வீச்சுக்கு முன்னால் நகர வேண்டும் என்பது பேட்டிங்கின் அடிப்படை என்பார்கள். அதை கனக்கச்சிதமாக நேற்று ஜடேஜா செய்ததை பார்க்க முடிந்தது. இப்படி சரியாக செய்வதிலேயே ஒரு மெக்கானிக்கல் தன்மை வந்து, அவருடைய பேட்டிங் வசீகரத்தை இழந்துவிடுகிறதோ என்றுகூட சில சமயம் தோன்றுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜடேஜாவின் 72 ரன்கள் இந்த ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கு முக்கியமான ரன்கள் எனலாம் சுவாரசியம் இழந்த ஆட்டம் கடைசிக் கட்டத்தில் சுந்தர் ஏன் அடித்தாடாமல் விட்டார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒன்று ரிஸ்க் எடுத்து அடித்தாடி இருக்கலாம். இல்லை, tail ender–களை நம்பி ஸ்டிரைக் கொடுத்து கிடைக்கும் ஒன்றிரண்டு ரன்களை சேர்த்து அணி லீட் எடுக்க உதவியிருக்கலாம். கடைசி கட்டத்தில் தெளிவான திட்டத்துடன் அவர் விளையாடியது போல தெரியவில்லை. முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உயிரைக் கொடுத்து அதிவேகத்தில் பந்துவீசிய போதும் அதிர்ஷ்டம் கைகொடுக்காததால் ஆர்ச்சரால் நேற்றைய தினம் 1 விக்கெட்தான் எடுக்க முடிந்தது. இந்த இன்னிங்சில் ஒட்டுமொத்தத்தில் 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்திய அணியின் முதல் விக்கெட்டையும் (ஜெய்ஸ்வால்) கடைசி விக்கெட்டையும் (வாஷிங்டன் சுந்தர்) ஆர்ச்சர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் பஷீர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியதால் ரூட் சுழற்பந்து வீசவேண்டிய நிலை ஏற்பட்டது. காயம் இடது கையில் (Non bowling arm) என்பதால் நான்காவது இன்னிங்சில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கலாம். நாளின் இறுதியில் இங்கிலாந்தை 2-3 ஓவர்கள் பேட்டிங் செய்ய வைத்துவிட வேண்டும் என்ற இந்தியாவின் வியூகம் பலிக்கவில்லை. பும்ராவின் முதல் ஓவரில் கிராலி தன்னுடைய முழு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி நேரத்தை இழுத்தடித்தார். பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராலி செயல்பட்டது போன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜாக் கிராலியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்றார். இந்த சேட்டைகள் எல்லாம் கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான் என்ற போதும் இந்திய கேப்டன் கில், கிராலியிடம் தன் சீற்றத்தை வெளிப்படுத்திய விதம், கோலியை நினைவூட்டியது. இந்திய அணியில் கேப்டனாகவும் ஒரு வீரராகவும் எதிரணியினரிடம் ஆக்ரோஷம் காட்டுவதில் விராட் கோலி பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய கேப்டன் கில், கிராலியிடம் தன் சீற்றத்தை வெளிப்படுத்தினார். மைதானத்தில் கில் - கிராலி மோதிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிராமா மூன்றாவது நாளின் இறுதியில் இந்த டெஸ்டுக்கு ஒரு விறுவிறுப்பை கொண்டுவந்துள்ளது. இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் சமநிலை பெற்றிருப்பதால் இன்றைய நான்காவது நாள் ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினம் சிறப்பாக செயல்படும் அணியின் கையே இந்த டெஸ்டில் ஓங்கும் என்று கூறலாம். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39z3r31e3lo
3 months 2 weeks ago
அகமதாபாத்தில் எயார் இந்தியா பேரழிவில் சிக்கியது எப்படி? நொடிக்கு நொடி நடந்து என்ன? ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை 13 JUL, 2025 | 11:19 AM விமானம் புறப்பட்ட ஒரு நொடிக்குள், இயந்திர எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நிகழ்ந்த எயார் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்து, இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகப் பதிவாகியுள்ளது. 260 உயிர்களைப் பலிகொண்ட இந்த துயரச் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தால் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, விபத்துக்கான அதிர்ச்சியூட்டும் காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது: விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே, அதன் என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு ஒரு நொடி இடைவெளியில் மாறியதே விபத்துக்குக் காரணம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது இந்த ஆரம்ப அறிக்கை, நிகழ்வின் ஒவ்வொரு நொடியையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது, இது விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான மிகத் துல்லியமான தகவலை அளிக்கிறது. நொடிக்கு நொடி நடந்து என்ன? காலை 11:17: எயார் இந்தியா ட்ரீம்லைனர் VT-ANB விமானம் டெல்லியில் இருந்து AI423 விமானமாக அகமதாபாத்தில் தரையிறங்குகிறது. பிற்பகல் 1:18:38: விமானம் விமான நிலையத்தின் பே 34 இல் இருந்து புறப்படுவது கவனிக்கப்படுகிறது. பிற்பகல் 1:25:15: விமான ஊழியர்கள் டாக்ஸி அனுமதி கோர, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அனுமதி அளிக்கிறது. விமானம் ரன்வே 23 நோக்கி டாக்ஸிவே R4 வழியாகச் சென்று, புறப்படுவதற்காக வரிசையில் நிற்கிறது. பிற்பகல் 1:32:03: விமானத்தின் கட்டுப்பாடு தரைக்கட்டுப்பாட்டில் இருந்து டவர் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படுகிறது. பிற்பகல் 1:37:33: புறப்படுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. பிற்பகல் 1:37:37 மணி: விமானம் புறப்படத் தொடங்குகிறது. பிற்பகல் 1:38:39 மணி: விமானம் தரையிலிருந்து மேலே எழும்புகிறது. விசாரணை அதிகாரிகள், காற்று/தரை சென்சார்கள் 'ஏர் மோட்'க்கு மாறுவதைக் குறிப்பிடுகின்றனர், இது புறப்படுதலுக்கு இணக்கமானது. பிற்பகல் 1:38:42 மணி: விமானம் அதிகபட்சமாக 180 நாட்ஸ் வேகத்தை அடைகிறது. உடனடியாகப் பிறகு, என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறுகின்றன, ஒரு வினாடி இடைவெளியில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக. "என்ஜின்களுக்கு எரிபொருள் வழங்கல் துண்டிக்கப்பட்டதால், என்ஜின் N1 மற்றும் N2 அவற்றின் புறப்படும் மதிப்புகளிலிருந்து குறையத் தொடங்கின." காக்பிட் குரல் பதிவுகள் ஒரு குழப்பமான தருணத்தைப் பதிவு செய்துள்ளன: ஒரு விமானி மற்ற விமானியிடம் ஏன் எரிபொருளைத் துண்டித்தார் என்று கேட்க, மற்றொரு விமானி தான் செய்யவில்லை என்று பதிலளிக்கிறார். விமான நிலைய சிசிடிவி காட்சிகள், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஆரம்பகட்ட ஏறும் போது ராம் ஏர் டர்பைன் (RAT) வெளியேறுவதைக் காட்டுகின்றன. "விமான நிலைய சுற்றுச்சுவரைக் கடக்கும் முன் விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியது," என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டது. பிற்பகல் 1:38:47 மணி: இரண்டு என்ஜின்களின் மதிப்புகளும் குறைந்தபட்ச செயலற்ற வேகத்திற்குக் கீழே குறைகின்றன. RAT இன் ஹைட்ராலிக் பம்ப் ஹைட்ராலிக் சக்தியை வழங்கத் தொடங்குகிறது. பிற்பகல் 1:38:52 மணி: என்ஜின் 1 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்ச் மீண்டும் 'கட்ஆஃப்' நிலையிலிருந்து 'ரன்' நிலைக்கு மாற்றப்படுகிறது. பிற்பகல் 1:38:56 மணி: என்ஜின் 2 இன் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சும் இதேபோல் 'ரன்' நிலைக்கு மீட்டமைக்கப்படுகிறது. விசாரணை அறிக்கை கூறுகிறது: "விமானத்தில் இருக்கும்போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் CUTOFF இலிருந்து RUN க்கு நகர்த்தப்படும்போது, ஒவ்வொரு என்ஜினின் முழு அதிகார டிஜிட்டல் என்ஜின் கட்டுப்பாடு (FADEC) தானாகவே மறுதொடக்கம் மற்றும் உந்துவிசை மீட்பு வரிசையை நிர்வகிக்கிறது." "என்ஜின் 1 இன் மைய வேகம் குறைவது நின்று, தலைகீழாகி, மீட்சிக்கு முன்னேறத் தொடங்கியது." "என்ஜின் 2 மீண்டும் பற்றவைக்க முடிந்தது, ஆனால் மைய வேகக் குறைவை தடுக்க முடியவில்லை." பிற்பகல் 1:39:05: விமானிகளில் ஒருவர் "MAYDAY, MAYDAY, MAYDAY" என்று அவசர அழைப்பை விடுக்கிறார். பிற்பகல் 1:39:11: விமானத்தில் இருந்து தரவு பதிவு நிறுத்தப்படுகிறது. பிற்பகல் 1:44:44: விபத்து தீயணைப்பு வாகனங்கள் மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளுக்காக விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறுகின்றன. இந்த அறிக்கை, ஒரு சில நொடிகளில் எடுக்கப்பட்ட தவறான அல்லது தற்செயலான ஒரு செயல், எப்படி ஒரு பேரழிவிற்கு வழிவகுத்தது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இந்த விபத்துக்கான முழுமையான காரணங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விரிவான விசாரணை தொடரும் நிலையில், இந்த ஆரம்ப அறிக்கை எதிர்கால விமானப் பாதுகாப்பிற்கான முக்கியமான பாடங்களை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/219848
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
பாஸீர் கலீலுர் ரஹ்மான் இயக்கத்தில் உருவான குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்) என்ற ஆவணப்படம் வெளியாகிறது. இது குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்’ என்ற ஆங்கிலத் தலைப்பில்) ஆவணப்படத்தின் முன்னோட்டக் காணொளி. இலங்கையின் போரின் போது காத்தான்குடிக்கு செல்லும் பாதைகளில் பயணிகள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளை இது வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. 1990 ஜூலை 12 ஆம் தேதி குறுக்கள் மடம் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஒருவரினதும் அதுபோன்ற ஒரு படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய ஒருவரினதும் கதைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அத்தினத்தில், ஹஜ் பயணத்திலிருந்து திரும்பியவர்கள் உட்பட 72 அப்பாவிப் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர். இந்த ஆவணப்படம் பாஸீர் கலீலுர் ரஹ்மான் அவர்களால் இயக்கப்பட்டு எமது அமைப்பினால் விரைவில் வெளியியடப்படவுள்ளது. This is the trailer for the documentary Killing the Travellers | Kurukkalmadam Massacre, which exposes the abductions of travellers on roads to and from Kattankudy during the Sri Lankan civil war. It highlights the massacre that took place in Kurukkalmadam on 12th July 1990, where 72 innocent people – including returning Hajj pilgrims – were killed and buried by armed groups. The documentary is produced by Activists Without Borders and directed by Baazir Kaleelur Rahman. https://madawalaenews.com/24518.html
3 months 2 weeks ago
இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி 13 JUL, 2025 | 09:13 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியதாகவும், அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செம்மணி விவகாரத்தில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டமுடியும் எனத் தெரிவித்தார். செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சர்வதேச தடயவியல் நிபுணர்களின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் பின்னணியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். செம்மணி மனிதப்புதைகுழி என்பது சாதாரணமானதொரு விடயமல்ல. அது ஏற்கனவே சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருந்த ஒரு விடயமாகும். கிருஷாந்தி குமாராசுவாமியின் படுகொலை தொடர்பான விசாரணைகளை அடுத்து 1999 ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னர் சர்ச்சைக்குரிய அந்த மனிதப்புதைகுழி விவகாரம் தொடர் விசாரணைகளின்றி இடைநடுவே முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதும்கூட செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது தற்செயலாகத்தான் இந்த மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கப்போவதில்லை' என அவர் குறிப்பிட்டார். அதேவேளை உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவத்தைப் பொறுத்தமட்டில், அவ்வேளையில் ஆட்சிபீடத்தில் இருந்த மற்றும் அதனைத்தொடர்ந்து ஆட்சிபீடமேறிய தரப்பினர் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான தரப்பினர் என்பதனால், அதுகுறித்த உண்மைகளை வெளிக்கொணரவேண்டிய தேவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தையும், இனவழிப்பையும் அப்போதைய அரசாங்கங்களுடன் இணைந்து ஊக்குவித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி, அக்காலப்பகுதியில் உருவான செம்மணி போன்ற மனிதப்புதைகுழிகள் தொடர்பில் எவ்வாறு நீதியான விசாரணைகளை முன்னெடுக்கும்? எனக் கேள்வி எழுப்பினார். ஆகவே செம்மணி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சர்வதேசத்தின் தலையீடோ அல்லது சுயாதீன சர்வதேச விசாரணையோ இன்றி, அதுகுறித்த உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவே முடியாது என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219830
3 months 2 weeks ago
அகராதி: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People's Liberation Organization of Tamil Eelam PLOT, புளொட்) என்பது முன்னாள் ஈழப் போராளி இயக்கங்களில் ஒன்றாகும். இது பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது.
3 months 2 weeks ago
முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு ; கைத்தொலைபேசியும் செயலிழப்பு 13 JUL, 2025 | 09:19 AM (எம்.வை.எம்.சியாம்) கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது. இதற்கு பதிலளித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்ட தடைகளும் இல்லையென அறிவித்தார். கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கான தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் தாம் வசித்த வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்தது. சந்தேகநபரான ராஜிதவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை பெற்றுக் கொள்வதற்கான நகர்த்தல் பத்திரம் சமர்பித்து இதனை நேற்றுமுன்தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது. சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தொடர்ச்சியாக தவிர்த்து வந்ததாக ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்தது. மேலும் 15 நாட்களாக சந்தேகநபரின் கைதொலைபேசியும் செயல் இழந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. சந்தேகநபருக்கு ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு அறிவித்து அனுப்பிய கடித்ததுக்கு அவர் வர முடியாது என தெரிவித்து பதில் அனுப்பட்ட கடிதம் அல்லது மருத்துவ அறிக்கை மன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதா என நீதவான் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதன்போது குறித்த ஆவணங்கள் முறைப்பாட்டு தரப்பினரிடம் இல்லை எனவும் அவை முறைப்பாட்டு கோப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டது. குறித்த ஆவணங்கள் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டிய நீதவான் முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்டத்தடையும் இல்லை என குறிப்பிட்டார். அத்துடன் சந்தேக நபரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு அவசியம் இல்லை எனவும் பிடியாணை அவசியமாயின் அதற்கான ஆவணங்களை தயாரித்து மன்றில் சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். https://www.virakesari.lk/article/219831
3 months 2 weeks ago
ஏனைய கட்சிகள் பிஜேபியுடன் வைத்தத்து, வைப்பது அருவருக்கத்தக்க சந்தர்பவாத, கூட்டு. சீமான் ஆடுவது கூலிக்கு மாரடிப்பு. இரெண்டும் கண்டிக்கப்படவேண்டியன ஆனால் ஒன்றல்ல.
3 months 2 weeks ago
அப்போ இதை செய்தது புலிகள். இப்போ என் கேள்வியின் அர்த்தம் என்ன என்றால். நாம் செம்மணியை கையில் எடுப்பின் அவர்கள் இப்படி சிலதை எடுப்பார்கள். இதை செய்வார்கள் என நான் செம்மணி விவகாரம் சூடு பிடிக்கும் முன்பே ஊகித்தேன். கேள்வி - நாம் இதை எப்படி கையாளப்போகிறோம்? இந்த முழுப் பூசணியை சோற்றில் மறைத்து விடலாம் என்றா நினைக்கிறீர்கள்?
3 months 2 weeks ago
இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி! இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். தமது முறைப்பாடு குறித்து, காவல்துறையினர் இதுவரையில் உரிய பதில் வழங்காமையினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக முறைப்பாட்டாளர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் வாரத்தை மாத்திரம் காவல்துறையினருக்கான கால அவகாசமாக வழங்கவுள்ளதாகவும், அதற்குள் பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்ற சட்டத்தரணியினால், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான முறைப்பாடு, பதில் காவல்துறைமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலதிக நடவடிக்கைகளுக்காக, குறித்த முறைப்பாடு சட்டப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏற்கனவே, சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போரின் போது, சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில், பிரதானமாக, இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா 2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிருடன், நிராயுதபாணியாக, காவலில் இருந்ததாகவும், பின்னர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததாகவும் காணொளி ஆதாரங்கள் காட்டுவதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில், அவர் பாலியல் வன்புணர்வு மற்றும் மரணதண்டனை பாணியில் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான தடயங்களைக் காணமுடிகிறது. அதேநேரம், 12 வயதுடைய பாலச்சந்திரன், உயிருடன் ஆயுதமேந்திய படையினர் வசமிருந்தமையும், பின்னர் அவர் மார்பில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்து காணப்படுவதையும் காட்டும் புகைப்படங்கள் உள்ளன. இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கப்பட்டால், சர்வதேசச் சட்டத்தின் கீழ், அவை போர்க்குற்றங்களாகக் கருதப்படும் எனவும், ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் ரோம் சாசனம் ஆகிய இரண்டையும் மீறுவதாக உள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து, உண்மை மற்றும் பொறுப்புடன், நியாயத்துக்கு வழிவகுக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாட்டாளரான, சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கோரியுள்ளார். https://newuthayan.com/article/இறுதி_யுத்தத்தில்_மீறப்பட்ட_மனிதாபிமானச்_சட்டம்_-_நீதிமன்றத்தை_நாடவுள்ள_சிங்கள_சட்டத்தரணி!
3 months 2 weeks ago
செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன். அழகிய இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்து மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடய ஒரு தீவுந்தான்.இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் பெருமைக்குரிய சேமிப்பிடம் மட்டுமல்ல, உலகில் மனிதப் புதைகுழிகள் அதிகமுடைய ஒரு தீவுந்தான். சிங்கள மத்தியில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கலாநிதி ஜயலத் மற்றும் சுனிலா அபய சேகர போன்றவர்களின் வார்த்தைகளில் சொன்னால் அழகிய இலங்கைத் தீவு காணாமல் போனவர்களை மறக்க முற்படும் ஒரு தீவுந்தான். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொடங்கி கடந்த 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று புதைக்கப்பட்ட ஒரு தீவு.யாருக்குமே சரியான கணக்குத் தெரியாது.புத்த பகவானைத் தவிர. இதுவரை 23 புதை குழிகள் கிண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆகப் பிந்தியதுதான் செம்மணி. செம்மணிக்கு ஓர் இனப் பரிமாணம் உண்டு. அதனால்தான் அது இப்பொழுது பேசு பொருளாக மாறியிருக்கிறது. மேலும் ஐ நா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும்பொழுது செம்மணி கிண்டப்பட்டமை என்பது மற்றொரு முக்கியத்துவம். அதனால் அதற்கு உலகப் பிரசித்தம் கிடைத்திருக்கிறது. மூன்றாவது, முக்கியமானது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. எனவே தமக்குரிய அரசியல் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் என்ற அடிப்படையில் செம்மணியை ஒரு விவகாரமாக மாற்ற வேண்டிய தேவை தமிழ்த் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலில் உண்டு. இதனால் செம்மணி விவகாரம் முதலாவதாக தமிழ் மக்களை தேசிய உணர்வோடு ஒருங்கிணைத்து வருகிறது.இரண்டாவதாக இனப்பிரச்சினை மீதான சர்வதேசக் கவனத்தை ஈர்த்து வருகிறது.அனைத்துலக ஊடகங்கள் அது தொடர்பாக செய்திகளை வெளியிடத் தொடக்கி விட்டன.புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அதைப் பேசு பொருளாக்கியிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செம்மணி அகழ்வுக்கு ஒரு கோடியே இருபது லட்ஷம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் தொடர்ந்தும் தேவையான நிதி வழங்கப்படுமா? அதோடு அணையா விளக்கு போராட்டமும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் கேட்பதுபோல இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையை;அனைத்துலக சமூகத்தின் நிபுணத்துவ உதவியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமா? குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையின் பின்னரான அரசியற் சூழலில் தேசிய மக்கள் சக்தி செம்மணி தொடர்பில் எப்படி நடந்து கொள்ளும்? முதலாவதாக அது,தேசிய மக்கள் சக்தியானது உண்மையை வெளியே கொண்டு வருவதில் எந்த அளவுக்கு உண்மையாக உழைக்கும் என்பதில் தங்கியிருக்கிறது. இரண்டாவதாக அது,அவ்வாறு வெளிக்கொண்டு வரப்படும் உண்மையானது தென்னிலங்கையில் இனவாதத்தை புதிய கட்டத்துக்கு உயிர்ப்பிக்குமா இல்லையா என்ற விடயத்திலும் தங்கியிருக்கிறது . முதலாவது விடயத்தை நான் ஏற்கனவே இப்பகுதியில் எழுதியிருக்கிறேன். தனது இரண்டு ஆயுதப் போராட்டங்களின் போதும் காணாமல் ஆக்கப்பட்ட தனது சொந்தத் தோழர்களுக்காக ஜேவிபி நீதி கேட்கவில்லை. ஆயிரக்கணக்கான இளையோர் அவ்வாறு கொல்லப்பட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டார்கள்.ஜேவிபி அவர்களுக்காக நீதி கேட்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு நீதி கேட்டால் எந்தப் படைத் தரப்பை அவர்கள் இறுதிக் கட்டப் போரில் யுத்த வெற்றி நாயகர்களாகக் கட்டியெழுப்பினார்களோ அதே படைத்தரப்பை அவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டி வரும். அவ்வாறு செய்வதற்கு ஜேவிபி தயாரில்லை. நாட்டின் யுத்த வெற்றி நாயகர்களை யுத்தக் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஜேவிபி தயாராக இருக்காது.அதனால்தான் கடந்த தசாப்தங்களில் கிண்டப்பட்ட மனிதப் புதைக்குழிகளின் விடயத்தில் ஜேவிபி உண்மையை வெளியே கொண்டு வரத் தேவையான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. உதாரணமாக கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு மாத்தளையில் ஒரு பெரிய மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது.அது கண்டுபிடிக்கப்பட்ட காலம் 2012. மாத்தளை பொது ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக நிலத்தை அகழ்ந்த பொழுது அங்கே எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. அதைத்தொடர்ந்து அப்பிரதேசம் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கிண்டப்பட்டது.அதன்போது மொத்தம் 158 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அக்காலகட்டத்தில் அதற்கு எதிராக அனுரகுமார குரல் எழுப்பியதாக ஒரு ஞாபகம்.அது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது.ஆனால் அது ஒரு விவகாரமாகத் தொடர்ந்து பேசப்படவில்லை. கிண்டப்பட்ட புதை குழிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியே கொண்டு வரப்படவில்லை. அவற்றை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய ஜேவிபி உரிய தீவிரத்தோடு போராடவில்லை. அக்காலகட்டத்தில் மதிப்புக்குரிய மனித உரிமை ஆர்வலர் ஆகிய சுனிலா அபயசேகர, மாத்தளை புதை குழி தொடர்பாக “சண்டே டைம்ஸ்” பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறுகிறார்,”இதுவே லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தால் தம் உறவினர்களின் எச்சங்களைத் தேடி ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவார்கள். ஆனால் இலங்கையிலோ நிலைமை அவ்வாறு இல்லை.” என்ற பொருள்படக் கூறிக் கவலைப்பட்டிருந்தார்.அதற்குக் காரணம் என்ன? அந்தப் புதை குழிகளுக்குள் புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய அமைப்பு அப்பொழுது போராடவில்லை என்பதுதான். இவ்வாறு கொன்று புதைக்கப்பட்ட தன் தோழர்களுக்காக;கொன்று எரிக்கப்பட்ட;கொன்று கடலில் வீசப்பட்ட தன் தோழர்களுக்காக, நீதி கேட்காத ஓரமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் என்று எப்படி எதிர்பார்ப்பது? இந்த விடயத்தில் ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டிருக்கும் என்பிபி இனவாதத்தின் பக்கம்தான் நிற்கும். இது முதலாவது. இரண்டாவது,செம்மணி விவகாரம் தென்னிலங்கையில் இனவாதிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குமா இல்லையா என்பது. ஏற்கனவே நாம் பார்த்தபடி இனவாதத்தின் பக்கம் நிற்கும் என்பிபி தனது படை வீரர்களை காட்டி கொடுக்காது. அவர்களை விசாரணைக் கூண்டில் நிறுத்தாது.எனினும் ஒரு அரசாங்கம் என்ற அடிப்படையில் ஐநாவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக,என்பிபி ஒரு தோற்றத்துக்காவது விசாரணைகளை முன்னெடுப்பது போல காட்டிக் கொள்ளும். ஆனால் அதற்கும் அடிப்படை வரையறைகள் இருக்கும். ஏற்கனவே கடந்த ஐநா கூட்டத் தொடரில் வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் அனைத்துலகப் பொறிமுறையை நிராகரித்திருக்கிறார். இந்நிலையில் அனைத்துலக உதவியை கேட்பது; ஐநாவின் மேற்பார்வை போன்ற விடயங்களுக்கெல்லாம் என்பிபி ஒத்துக்கொள்ளாது. மாறாக உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்புக்கூடாக விவகாரங்களைக் கையாள முற்படக் கூடும். ஆனால் அங்கேயும் வரையறைகள் இருக்கும்.தமிழ் மக்களுக்கு நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்ளப்போய், அதன் விளைவாக, தெற்கில் இனவாதிகளுக்கு புதிய எரிபொருளை வழங்க என்பிபி விரும்பாது. செம்மணி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு நடக்கும்போது வெளிவரக்கூடிய உண்மைகள் படைத்தரப்புக்குப் பாதகமாக மாறுமாக இருந்தால், தென்னிலங்கையில் இனவாதிகள் புதிய பலத்துடன் மேல் எழுவார்கள்.தமது யுத்த வெற்றி நாயகர்களை என்பிபி காட்டிக் கொடுக்கப் பாக்குறது என்று கூச்சலிடுவார்கள்.இது எதிர்காலத்தில் தனது தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும் என்று என்பிபி பயப்படுமாக இருந்தால் செம்மணி தொடர்பான விசாரணைகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராது. ஏற்கனவே யுத்த வெற்றி நாளைக் கொண்டாடும் பொழுது அதில் யுத்த வெற்றி நாயகர்களை விழிக்கும் பொழுது அனுர பயன்படுத்திய வார்த்தைகள் தொடர்பில் தென்னிலங்கையில் இனவாதிகள் மத்தியில் விமர்சனங்கள் உண்டு. இத்தகையதோர் பின்னணியில், படைத் தரப்பை விசாரணை செய்வதற்கு என்.பி.பி. முன்வராது. என்.பி.பி.க்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது புரட்சிகரமான பெரும்பான்மை அல்லவென்று நான் அடிக்கடி இப்பகுதியில் எழுதியிருக்கிறேன்.அது பெருமளவுக்கு சிங்கள பௌத்த வாக்குகள்தான். இந்த அடிப்படையில் சிந்தித்தால்,தேசிய மக்கள் சக்தியானது சிங்கள பௌத்த மனோ நிலையின் கைதிதான்.எனவே அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் செம்மணி அகழ்வாராச்சியை அனுமதிக்க மாட்டார்கள். அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்த பொழுது, சிங்களம் மற்றும் ஆங்கில ஊடகங்கள் அதுதொடர்பாக பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்ற ஒரு தொகுக்கப்பட்ட பார்வை உண்டு. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையையொட்டி விமல் வீரவன்ச வழமை போல இனவாதத்தைக் கக்கினார். ஆனால் அவரைவிட வேறு யாரும் அது தொடர்பாக பெரிய அளவில் கதைத்ததாகத் தெரியவில்லை. அதனை எப்படிப் பார்ப்பது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முன்னய அரசாங்கங்களின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஒரு தொகுதி முன்னாள் அரசியல் பிரதானிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகளின் மீது தென்னிலங்கையில் உள்ள ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனம் அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம் என்று சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் தனது இலங்கை விஜயத்தின் முடிவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உத்தியோகபூர்வ ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் உள்நாட்டு விசாரணையை ஊக்குவிப்பவைகளாகக் காணப்படுகின்றன. அதுபோலவே அவருடைய வருகையின் பின்னணியில் இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஐநாவின் மீதான நம்பிக்கையை மேலும் குறைத்திருக்கின்றன.ஐநா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைத்தான் அதிகம் ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. இது என்பிபி அரசாங்கத்துக்குச் சாதகமானது, என்றாலும் அந்த விசாரணைகளின் முடிவில் வெளிப்படும் உண்மைகள் யுத்த வெற்றி நாயகர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமாக இருந்தால்,அதை என்பிபி அனுமதிக்காது. அதாவது இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் விரிவைப் பரிசோதிக்கும் ஆகப் பிந்திய விவகாரமாக செம்மணி காணப்படுகிறது. https://athavannews.com/2025/1438904
3 months 2 weeks ago
வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள்! நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இந்த திட்டத்தை தொடக்கி வைத்தவர்கள் வசந்த் சிவாஜிராசாந்த் மற்றும் ஜசிந்தா ஆகியோர், அத்துடன் ஜெர்மன் செஞ்சிலுவை சங்கம், வென்டோர்ஃப் கிளை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியனவும் தமது ஆதரவை வழங்கினார்கள். புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை அடங்கும். இது ஒரு தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு அறுவை சிகிச்சை பிரிவு, ஒரு முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சராக தீபகற்பத்திற்கு இது தான் முதல் வருகை என்றும், நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார். சுகாதார சேவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டது என்றும், மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற வெகுதூரம் செல்லப் பழகிவிட்டனர் என்றும், இந்த அணுகுமுறை யாழ்ப்பாண வைத்தியசாலையின் நோயாளிகளின் வருகைக்கு வழிவகுத்தது என்றும் கூறினார். இதுபோன்ற தீவுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும் என்றும், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்றும் அவர் கூறினார். சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்குத் தேவையான சேவை என்றும் அமைச்சர் கூறினார். வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன என்றும், எதிர்காலத்தில் புதிய செவிலியர்களை வழங்குவதன் மூலம் இந்த குறையை இல்லாது செய்ய நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் பராமரிப்பு விடயத்தில் சுகாதார அமைச்சகம் பலவீனமாக உள்ளது என்றும், எதிர்காலத்தில், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை வழங்கும்போது, அவற்றை தொடர்ந்து பராமரிக்கும் நிறுவனங்களுடன் அந்த பௌதீக சொத்துக்களை நிர்வகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வைத்தியசாலைகளில் ஆம்புலன்ஸ்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் ஜெர்மன் செஞ்சிலுவைச் சங்க வாரன்டோர்ஃப் கிளை மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளின் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டது, அதே நேரத்தில் இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு இலங்கை கடற்படை மற்றும் இராணுவம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் தமது ஆதரவை வழங்கின. https://www.samakalam.com/வடக்கில்-ஒரு-தாதியர்-கூட/
3 months 2 weeks ago
வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 36 ஆவது நினைவுதினம் கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் நூலகத்தில் இன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில், கழகத்தின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1438928
3 months 2 weeks ago
தைவான் மீதான சாத்தியமான போரில் நட்பு நாடுகளின் பங்கு குறித்து அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும் என்று FT தெரிவித்துள்ளது. தைவானைப் பாதுகாக்க அமெரிக்காவே வெற்று காசோலை உத்தரவாதத்தை வழங்காததால், இந்த கோரிக்கை டோக்கியோ மற்றும் கான்பெர்ரா இரண்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தைவான் ஜலசந்தியில் எழுந்துள்ள அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தீவு அதன் பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. இங்கே, அக்டோபரில் தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே தளத்திற்கு விஜயம் செய்தபோது, ஹ்சியுங் ஃபெங் III மொபைல் ஏவுகணை ஏவுகணைக்கு முன்னால் ஒரு சிப்பாய் காணப்படுகிறார். ( புகைப்பட உரிமை : REUTERS/TYRONE SIU ) ஜெருசலேம் போஸ்ட் ஸ்டாஃப் எழுதியது ஜூலை 12, 2025 14:50 தைவான் விவகாரத்தில் அமெரிக்காவும் சீனாவும் போருக்குச் சென்றால் , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா என்ன பங்கு வகிக்கும் என்பதை தெளிவுபடுத்துமாறு பென்டகன் வலியுறுத்துவதாக பைனான்சியல் டைம்ஸ் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்காவின் கொள்கைக்கான பாதுகாப்புத் துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி, இந்த விஷயத்தை வலியுறுத்தி வருவதாக, விவாதங்களை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி அறிக்கை கூறியது. தைவானைப் பாதுகாக்க அமெரிக்காவே வெற்று காசோலை உத்தரவாதத்தை வழங்காததால், அறிக்கையிடப்பட்ட கோரிக்கை டோக்கியோ மற்றும் கான்பெரா இரண்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது . JPost வீடியோக்கள் சீனாவுடனான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல்-ஈரான் போரிலிருந்து தைவான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. இங்கு, புதன்கிழமை மியோலியில் நடைபெறும் வருடாந்திர ஹான் குவாங் இராணுவப் பயிற்சியின் முதல் நாளில், தைவானிய ரிசர்வ் படையினர் போருக்கு முந்தைய பயிற்சியில் பங்கேற்கின்றனர். (நன்றி: I-Hwa Cheng/AFP via Getty Images) தைவானுக்கு எதிராக இராணுவ அழுத்தம் அதிகரிக்கிறது. ராய்ட்டர்ஸால் இந்த அறிக்கையை சரிபார்க்க முடியவில்லை. கருத்துக்கான கோரிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை. முறையான இராஜதந்திர உறவுகள் இல்லாவிட்டாலும், அமெரிக்கா தைவானின் மிக முக்கியமான ஆயுத சப்ளையர் ஆகும். பெய்ஜிங் தீவின் மீது தனது இறையாண்மையை வலியுறுத்த முற்படுவதால், பல சுற்று போர் பயிற்சிகள் உட்பட , சீனாவிடமிருந்து தைவான் அதிகரித்த இராணுவ அழுத்தத்தை எதிர்கொண்டது. சீனாவின் இறையாண்மையை வலியுறுத்துவதை தைவான் நிராகரிக்கிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், கோல்பி, உத்தி மற்றும் படை மேம்பாட்டுக்கான துணை உதவி பாதுகாப்பு செயலாளராக இருந்தார். அமெரிக்க இராணுவம் சீனாவுடனான போட்டிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலிருந்து அதன் கவனத்தை மாற்ற வேண்டும் என்றும் வாதிடுவதில் கோல்பி பெயர் பெற்றவர். The Jerusalem Post | JPost.comPentagon presses Australia, Japan over role in potential...The Financial Times reported that the request caught both Tokyo and Canberra off guard, as the US itself does not offer a blank check guarantee to defend Taiwan.
3 months 2 weeks ago
75 வருடங்களாக ஒரு மக்கள் குழுமத்தினை அகதிகளாக்கினவர்கள், தற்போது அதே நிலையில்..........
3 months 2 weeks ago
இந்தியா ஒரு முழு நேர்மையான விசாரணையினை நடாத்தி அதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது (பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளிற்கு செய்யும் குறைந்த பட்ச நலன்), இல்லாவிட்டால் இந்த ஊகங்கள் மழை நின்றாலும் நிற்காத தூரலாக தொடரும் நிலைதான்(பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை உளவியலாக தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாக்கும் விடயமாக இருக்கும்).
3 months 2 weeks ago
“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 09 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 09 / 'தம்பபாணி எங்கே ?, விஜயன் எப்போது இலங்கையில் இறங்கினான்? குவேனி யார்?' இலங்கையில் வரலாற்றில், தம்பபாணி என்று அழைக்கப்படும் கடற்கரை நகரம் ஒன்றும் இல்லை. இருப்பினும் இந்தியாவில், தமிழ் நாட்டில், எதிர் கடற்கரையில், தாமரபரணி என்ற நதி இருந்து உள்ளது. தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டின்படி புத்தர் இறந்த நாளில் விஜயனும் அவரது தோழர்களும் இலங்கையில் தரையிறங்கினர். இருப்பினும், இராசாவலியத்தின்படி, புத்தர் இறந்த ஏழாவது நாளில் அவர்கள் இலக்கில்லாமல் அல்லது தெளிவான திசையின்றி நகரத் தொடங்கி, ஒரு வியாழன் அன்று, புத்தர் இறந்த சிறிது சிறிது காலம் கழித்து, இலங்கையில் தரையிறங்கினார்கள். இராசாவலியவில் கொடுக்கப்பட்டுள்ள விவரம், வான சாஸ்திரம் [வானியல்] ரீதியாக விஜயன் தரையிறங்கும் நாளை ஒருவேளை கணிக்க உதவலாம். அப்படி இல்லை என்றால், விஜயன் என்றுமே தரையிறங்கவில்லை. முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரிசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேனியும் [குவேணியும் / குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது. மேலும் இராசாவலியின்படி, குவேனிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தனவென்றும், அவள் விஜயனைப் பார்த்த நொடியில் ஒன்று மறைந்து, சாதாரண பெண் போல் இரு மார்பகங்களுடன் தோன்றினால் என்கிறது. இன்னும் ஒரு அமானுஷ்ய நிகழ்வைக் [இயல்பான வாழ்வில் காணாத விடயங்கள்] இங்கு காண்கிறோம். இது திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் மீனாட்சி தேவியிலிருந்து நகலெடுக்கப்பட்டதாக இருக்கலாம்? மீனாட்சி பிறப்பில் மூன்று மார்பகங்களுடன் பிறந்ததாகவும்; தன்னை மணம் முடிப்பவரை பார்த்தவுடன் நடுவில் இருக்கும் மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் என்ற நிலையில், கயிலை மலையில் சிவன் மீனாட்சியை கண்டவுடன் மூன்றாவது மார்பகம் மறைந்தது என இந்து புராணம் கூறுகிறது. மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்த முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க சந்தர்ப்பம் இருக்கிறது என்று தோன்றுகிறது? மேலும் துரத்தப்பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப்பட்டதாகவும் அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்கிறது. இதேபோல, முறையற்ற சகோதரர்களுக்கு இடையான திருமணம் மூலம் தான் விஜயன் பிறந்ததும் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வியாஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ? விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளப் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது குழந்தை பிறந்து இருந்தால், அந்த வாரிசுகளை, கண்டுபிடித்து கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது? குரூரமான தர்க்கம் என்னவென்றால், துறவி ஆசிரியர்கள் தங்கள் பரம்பரையில், பூர்வீக இரத்தத்தை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை என்பதே, அதனாலதான், குவேனியின் இரண்டு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமல், முற்றாக மறைந்து போகிறார்கள். Part: 09 / where is Tambapanni ?, When Vijaya landed ? Who is Kuveni? It is strange to note that there is no coastal town called Tambapanni in Lanka, however there is a river called Tamaraparani on the opposite coast in the Tamil country in India. Vijaya and his companions landed in Lanka on the day the Buddha died as per both the Dipavamsa and the Mahavamsa. As per the Rajavaliya, however, they were set to drift on the seventh day after the death of the Buddha, and they landed on a Thursday, must be after quite some time of the Buddha’s death. The detail given in the Rajavaliya may help to pin point the arrival of Vijaya to Lanka astronomically, if at all he ever landed! Vijaya did not marry as per the Dipavamsa, but he married twice as per the Mahavamsa and the Rajavaliya. He sent away the first wife, Kuvanna (Kuveni in the Rajavaliya), and the kids from her to marry a royal princess from the Pandya kingdom. Vijaya and Kuvanna must be of human species to have offspring. If two belong to different species then there will not be any offspring from their union. Incidentally, Kuveni had three breasts and one disappeared the moment she saw Vijaya as per the Rajavaliya, another supernormal happening. Incidentally, Vijaya and his companions must have married before their deportation too, as kids were put on one ship and the wives were put on another ship and landed at Naggadipa and Mahilaratrha (Mahiladipaka as per the Mahavamsa) respectively. Vijaya must in fact, may have married thrice, once in his native place and twice in Lanka. They were all forgotten thereafter, a usual practice in the chronicles. Kuveni left with her two kids when Vijaya asked her to leave so that he could marry the Tamil princess from the Pandya kingdom, and her relatives promptly murdered her. Her two kids, the son and the daughter escaped to the hill country, married each other; another incestuous marriage typical of the Lanka chronicles. The two Lanka born kids of Vijaya have simply disappeared into oblivion. The cruel logic is that the monkish authors did not want to acknowledge the native blood in their lineage and simply made them disappear in their story, rather in the chronicles. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 10 தொடரும் / Will Follow
3 months 2 weeks ago
இன்று அருண் சித்தாத்தின் அறைகூவல் ஒன்று பாத்து வயிறு கிழிய சிரித்தேன். டக்லஸின் அறைகூவல் மறைய இவர் ஆரம்பித்திருக்கிறார். ஒரு விஷச்செடியிலிருந்து இன்னொரு விஷம் உருவாகும். மூன்றரை லட்ஷம் தமிழரில் இருபத்தைந்து வீதம் புலிகளாம் ஆகவே புலிகள்தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்று சொல்ல முடியாதாம். அப்போ சிங்களம் கொன்ற தமிழர் எத்தனை லட்ஷம்? ஏன் அவர்களை சிங்களம் கொன்றது? புலிகளை அழித்து விட்டோம் என்று கர்சித்துக்கொண்டு இன்னும் ஏன் தமிழர் நிலப்பரப்பில் ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள்? முஸ்லிம்களின் படுகொலைக்கு நீதிவேண்டி புலம்பெயர் தமிழரை தண்டிக்கப்போகிறாராம். அவர்களின் கொலைக்கு எல்லா ஆதாரங்களுமுண்டாம். சரி, ஆதாரமிருந்தால் ஏன் இதுவரை தோண்டவில்லை? சரியான நிலம் அடையாளம் காணப்படவில்லையாம். நாங்கள் எல்லா ஆதாரம், சாட்சி, பொறுப்பு எல்லாவற்றுடனுமே தோண்ட தொடங்கினோம். அதை நிறுத்தியது யார்? ஏன் அரசோடு ஓத்துஇயங்கிய இவர்களால் அதை செய்ய முடியவில்லை? கோவில் பாடசாலைகளில் கொலை செய்தார்களாம் புலிகள். அப்போ இலங்கை அரசு செய்யவில்லையா? புலிகள் இருக்கும்போது ஏன் இவர் அதை கேட்கவில்லை? அப்போ இவர் எங்கே ஒளிந்திருந்தார்? இப்போ, இவருக்கு வயிறு வளக்க ஒரு தொழில் வேண்டும், அதற்கு ஒரு இயக்கம் வேண்டும், அதற்காக ஒட்டுக்குழுக்கள், கொலைகளை சந்தித்தவர்களை தன்னோடு இணையட்டாம். தான் நீதி வாங்கித்தருவாராம். மூஞ்சூறு தான் போக வழியை காணேல்ல விளக்கு மாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம். இப்போ அனுரா தனக்கு அழைப்பு விடுப்பார் என்று குரல் கிழிய கத்துது. துணுக்காயில் நான்காயிரம் பேரை புலிகள் கொன்றார்களாம், அதற்கான லிஸ்ற் இல்லை இந்த முகவரிடம். முஸ்லிம்கள் எழுபத்திரண்டு பேர் என லிஸ்ற் காட்டுது. வெகுவிரைவில் தன வாயாலேயே கெடப்போகுது. மக்கள் ஒருபோதும் புலிகள் பக்கம் இல்லையாம். மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் எவ்வாறு முப்பது ஆண்டுகள் நீடித்தது? என்ன அறிவாளி? வயிறு வளப்பதற்கு இப்போ ஒரு இயக்கம் தேவைப்படுகிறது இவருக்கு. மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்க வந்து செருப்பால அடி வாங்கியும் புத்தி வரல இதுக்கு. பாப்போம் அனுராவின் பதில் எப்படியிருக்குமென்று. கத்தி கத்தியே மாரித்ததவளை தனக்கு ஆபத்தை வருவிக்குமாம். நீதிக்காக கதைக்கிறானா, இனத்துக்காக கதைக்கிறானா, வயிற்றுப்பிழைப்புக்காக நடிக்கிறானா? வடக்கின் வசந்தம், கிழக்கின் விடிவெள்ளியெல்லாம் கதிகலங்குது. இது கண்டும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முழைத்த காளான் துள்ளிகுதிக்குது. இதுக்கு தமிழரசுக்கட்சியில இடம் கிடைத்திருந்தால்; இதன் நிலையை நினைத்துப்பாருங்கள்! கடவுளாய்ப் பார்த்துத்தான் குதிரைக்கு கொம்பு கொடுக்கவில்லை.
Checked
Fri, 10/31/2025 - 23:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed