3 months 2 weeks ago
      வரலாற்றில் முதல் 9A ***************************  கிளிநொச்சியின் மேற்கு பகுதியில்  நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள  கிராமம் அது. பெரிதாக எவரும் கண்டுகொள்ளாத ஊர் அது. முக்கியமாக  கல்வித்துறையில்  தரம் 5 புலமை பரிசில் பரீட்சை என்றால் என்ன? க.பொ.த சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகள் என்றால் என்ன அந்த பாடசாலையின் பெறுபேறு என்ன என்று எவரும் கேட்டுக்கொள்வதில்லை.  வலயக் கல்வி அலுவலகம் மாத்திரம் தனது புள்ளிவிபர பதிவுக்காக பெறுபேறுகளை கேட்டுகொள்வார்கள். அவ்வளவுதான். பாடசாலை ஆரம்பித்த 1993 என நினைக்கின்றேன். அன்று இன்று வரை வளப்பற்றாக்குறை இன்றி இயங்கிய நாட்கள் இல்லை என்றே கூற வேண்டும். 1996 கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு முன் அந்த பாடசாலையினை தமிழ்த்தினப் போட்டியில் சிறுவர் நாடகத்திலும், கிளித்தட்டு போட்டியிலும் அந்தப் பாடசாலையினை மாவட்ட மட்டத்தில்  பலரும் திரும்பி பார்த்தனர். அப்போதே இப்படியொரு பாடசாலை இருக்கிறது என்பது ஏனைய பல பாடசாலைகளுக்கு தெரியவந்தது. அதற்காக உழைத்தவர் அப்போது அந்த பாடசாலையில்  தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சிங்கராசா ஆசிரியர்.  அவர் அந்த ஊர் மக்களும், மாணவர்களும் சிங்கா  சேர் என்று அழைப்பர். இதன் பின்னர் மறுபடியும் அப்பாடசாலையினை எவரும் கண்டுகொள்வதில்லை. இப்படி பல வருடங்கள் கடந்தோடிய நிலையில் தற்போது அப்பாடசாலையினை ஒரு மாணவன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றான். சக்திவேல் குயிலன் என்ற  அந்த மாணவன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ பெறுபேறுகளை பெற்றதன் மூலம்  அப்பாடசாலையின் வரலாற்றில்  முதற்  தடவையாக 9ஏ பெற்ற வரலாற்று சாதனையினை ஏற்படுத்தியதன் மூலமே  குயிலன் பாடசாலையினையும், ஊரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறான்.  இந்த ஒரு மாணவன் பெற்ற 9 ஏ ஏன் சாதனை என்றால்,  வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பாடசாலை கல்வியினை பிரதானமாகவும், அந்த ஊரில் உள்ள  ஒரு கல்வி நிலையத்தில் மேலதிக கல்வியையும் மட்டுமே பெற்றிருக்கிறான் குயிலன். வறுமையான குடும்பம், பெற்றோர்கள் கூலித்தொழிலை  செய்கின்றவர்கள். தினமும்  வேலை கிடைக்காது வரையறுக்கப்பட்ட சொற்ப வருமானம், வசதிவாய்ப்புக்கள் குறைவு, இந்த வயதில் கல்வியை குழப்பும் வகையில் கவனக் கலைப்பான்கள் அதிகம்,  நகர்புற பிள்ளைகள் போன்று பெற்றோர்களால் மேலதிக வகுப்பு,  பிரத்தியோக வகுப்பு, அந்த பயிற்சி புத்தகம், இந்த பயிற்சி புத்தகம் என எதுவும் இல்லை, தம்பி படிச்சனீயா? என்ன படிச்சனீ? இந்த முறை எத்தனை மாக்ஸ்? என கேள்வி கேட்காத பெற்றோர்கள் என அவனை சுற்றி காணப்பட்ட அந்த சூழலுக்குள் இருந்து படித்து அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெறுவது என்பது சாதனைதானே?! இந்த சாதனைக்கு அவனது பாடசாலையும், அந்த  கவ்வி நிலையமும், படிப்பதற்கு தடை போடாத அந்த  ஏழை பெற்றோரும், அவனது  முயற்சியும், உழைப்பும்தான் காரணம். இதன் மூலமே அவன் சாதித்திருக்கிறான். அவனது இந்த சாதனையால்தான் இன்று ஊற்றுப்புலம் என்ற அந்த கிராமத்து பாடசாலையினை பலரும் திரும்பி பார்க்கின்றனர். ஊரும், பெருமைகொள்கிறது. தனது வரலாற்றில் முதல் தடவையாக ஒருவன் 9ஏ பெறுபேறுகளை பெற்றது அவர்களை பெருமை கொள்ள வைக்கிறது. Murukaiya Thamilselvan
  
      
    
  
            
      
            3 months 2 weeks ago
      ஓம் அண்ணா நான் சொன்னது இப்போது இங்கே நடைபெறுகின்ற நிகழ்வுகள் பற்றியது
  
      
    
  
            
      
            3 months 2 weeks ago
      11 JUL, 2025 | 02:30 PM  செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுப்பி வைத்துள்ளது அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக நாங்கள் எழுதுகிறோம். உண்மையை வெளிக்கொணரவும், தடயவியல் நெறிமுறைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அவசர மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். 1998 ஆம் ஆண்டில், பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசாமி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது விசாரணையில் 300 முதல் 400 வரையிலான தமிழ் பொதுமக்கள் அங்கு புதைக்கப்பட்டதாக வெளிப்படுத்தினார்.  இதன் பின்னர் குறித்து பகுதியில் கடந்த 1999 இல் அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது அங்கு 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு 1996 ஆம் ஆண்டு காணாமல்போனவர்களது என அடையாளம் காணப்பட்டன. தடயவியல் உறுதிப்படுத்தல் இருந்தபோதிலும், வழக்குகள் தேக்கமடைந்தன, இன்றுவரை அதற்கு அர்த்தமுள்ள நீதி வழங்கப்படவில்லை. 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி அரியாலைச் சித்துப்பாத்தி இந்துமையான புனரமைப்புப் பணிகளின் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இதனால் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அந்த இடத்தை ஒரு பாரிய மனித புதைகுழியாக அறிவித்து, நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன் படி தற்போதைய நிலையில், குழந்தைகள் உட்பட சுமார் 65 எலும்புக்கூடுகள் இரண்டு கட்டங்களாக தோண்டி எடுக்கப்பட்டன, அவற்றுடன் பாடசாலை பை, பொம்மை, வளையல்கள், செருப்புகள் மற்றும் துணித் துண்டுகள் போன்ற சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அனைத்து எலும்புக்கூடுகளும் தடயவியல் பரிசோதனைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிகள், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பிரச்சாரத்திற்கான தெளிவான சான்றுகளை காண்பிக்கின்றன.  எந்தவொரு நிலைமாறுகால நீதி செயல்முறைக்கும் உண்மையைக் கண்டறிவது அடித்தளமாக இருக்க வேண்டும். 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகளுக்கும் மேலாகியும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.  எனவே, பின்வருவனவற்றை தாமதமின்றி செயல்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் வலியுறுத்துகிறோம்: 1.1999 மற்றும் 2025 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவை தொடர்பான சட்ட வழக்குகளை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றங்களின் கீழ் ஒரே நீதித்துறை மற்றும் தடயவியல் விசாரணையாக ஒருங்கிணைக்கவும். 2. விசாரணையின் அனைத்து நிலைகளையும் மேற்பார்வையிட, தடயவியல் ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய, சுயாதீனமான, சர்வதேச அளவில் மதிக்கப்படும் தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்துதல். 3. அனைத்து இடைக்கால மற்றும் இறுதி தடயவியல் அறிக்கைகள், டி.என்.ஏ விவரங்கள் மற்றும் அடையாள முடிவுகளை வெளியிடுதல், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு அணுகலை எளிதாக்குதல். 4. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடுகின்றனர், உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமல், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. தேசிய ஒற்றுமைக்கு அவசியமான இந்தக் கொடூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கவும். இலங்கையின் தார்மீக மற்றும் சட்டக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நோக்கி நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும்  இந்த நடவடிக்கைகளை எளிதாக்குவதிலும், அவை சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.    https://www.virakesari.lk/article/219730
  
    Checked
              Fri, 10/31/2025 - 17:25
           
கருத்துக்களம் - All Activity
  
  Subscribe to புதிய பதிவுகள்2 feed