புதிய பதிவுகள்2

யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!

2 days 10 hours ago
நவீன தமிழ் இனவழிப்பை யாழில் உள்ள தனியார் வைத்திய சாலைகள் செய்கின்றன அதற்கு இந்த அரசாங்க வைத்திய சாலைகளில் இருந்து செல்லும் பகுதி நேர வைத்தியர்களும் உடந்தை .

யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!

2 days 10 hours ago
13 Sep, 2025 | 03:10 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கதிரியக்க பிரிவில் பணியாற்றி வந்த வைத்தியர்கள், பதவி உயர்வுகள், இடமாற்றல் என வெளியேறியமையால், வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், நோயாளர்கள், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர், எம்.ஆர்.ஐ உள்ளிட்டவற்றை எடுப்பதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவற்றை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் எடுப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுவதால், அதற்குள் நோயின் தீவிரம் அதிகரிப்பதாக நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். சில நோயாளிகள் தனியார் வைத்தியசாலையில் அவற்றை எடுப்பதற்காக பெருமளவு பணம் செலவு செய்கின்றனர். இதனால் யாழ் . போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்திய பற்றாக்குறையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/225001

இந்தியாவிலுள்ள அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களைத் தாக்க சதி : இலங்கையிலுள்ள பாகிஸ்தான் அதிகாரிக்கு அழைப்பாணை!

2 days 10 hours ago
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 10:35 AM இந்தியாவின் சென்னை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகவரமைப்பு (NIA) சிறப்பு நீதிமன்ற அழைப்பாணையொன்றை இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கடமைபுரியும் அதிகாரியொருவருக்கு அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றைத் தாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டே குறித்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தற்போது இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த அதிகாரி, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரி அமீர் சுபைர் சித்திக் (Amir Zubair Siddiqui) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் என்றும் தற்போது கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் விசா ஆலோசகராகப் பணிபுரிகிறார் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் இந்தியாவிற்குள் சதி வேலைகளைச் செய்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த முகமது சாகிர் ஹுசைன் (Mohammed Sakir Hussain) என்ற நபரை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் உயர் தரமான கள்ள நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை Q பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு ( CID ) இந்த வழக்கை முதலில் பதிவு செய்தது. பின்னர், இது தேசிய புலனாய்வு முகவரமைப்பின் ஹைதராபாத் கிளைக்கு மாற்றப்பட்டது. அமீர் சுபைர் சித்திக் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (UAPA) ஆகியவற்றின் கீழ், குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போரைத் தொடுப்பது, போலியான அல்லது கள்ள நோட்டுகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முகமது சாகிர் ஹுசைன் ஏற்கனவே தண்டனை பெற்றுள்ளார். இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில், சித்திக் மீது தேசிய புலனாய்வு முகவரமைப்பு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது, அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செய்தி மூலம் : The New Indian Express https://www.virakesari.lk/article/224969

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை வெளியீடு

2 days 10 hours ago
13 Sep, 2025 | 01:55 PM (எம்.மனோசித்ரா) கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியை அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்காக வெளியிட்டுள்ளது. அதில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைத் திகதிகளும் குறிப்பிடப்பிட்டுள்ளன. அதற்கமைய புதிய ஆண்டின் முதல் தவணை 2026 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், சிங்கள பாடசாலைகள் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணை ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஆகஸ்ட் 8 முதல் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணையின் கல்வி செயற்பாடுகள் முதற்கட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. பெப்ரவரி 14ஆம் திகதி முதல் மார்ச் 22ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 23 முதல் ஏப்ரல் 10 வரை இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 11 முதல் 19 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மே மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் மே மாதம் 4ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மே 27 முதல் 31 வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜூன் முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை விடு;முறை வழங்கப்படவுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்துக்கமைய வருடத்துக்கு 210 நாட்கள் கல்வி செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. எனவே 2026ஆம் ஆண்டு 197 நாட்கள் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய பரீட்சைகள் மேலும் 2026ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை ஆகஸ்ட்டிலும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை டிசம்பரிலும் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு இவ்வாண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் 2026 பெப்ரவரியில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224976

பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா? செவ்வாயின் 'சிறுத்தை' தடத்தில் நாசா தீவிர ஆய்வு

2 days 11 hours ago
பட மூலாதாரம், NASA/JPL படக்குறிப்பு, பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன. கட்டுரை தகவல் ரெபேக்கா மோரல் அறிவியல் ஆசிரியர் 13 செப்டெம்பர் 2025, 01:53 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன. நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன. இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது. இந்த கண்டுபிடிப்புகள், நாசாவின் 'சாத்தியமான பயோசிக்னேச்சர்கள்' அதாவது (Potential Biosignatures) என்று அழைக்கப்படும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை உயிரியல் தோற்றம் கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவை என்பதே இதன் பொருள். "இதுவரை இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பெற்றதில்லை, அதனால் இதுதான் முக்கியமான விஷயம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி பேராசிரியர் சஞ்ஜீவ் குப்தா கூறினார். இவர் இந்த ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவர், இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. "நாங்கள் பாறைகளில் கண்டறிந்த அம்சங்களை ஒருவேளை பூமியில் பார்த்தால், உயிரியல் - நுண்ணுயிரி செயல்முறைகளால் விளக்க முடியும். எனவே, நாங்கள் உயிரைக் கண்டறிந்தோம் என்று கூறவில்லை, ஆனால் இது உண்மையிலேயே எங்களுக்கு பின்தொடர வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது" என்று அவர் கூறினார். "இது ஒரு எஞ்சிய புதைபடிவத்தைப் பார்ப்பது போன்றது. ஒருவேளை இது ஒரு எஞ்சிய உணவாக இருக்கலாம், ஒருவேளை நாம் பார்த்தது வெளியேற்றப்பட்ட கழிவாக கூட இருக்கலாம்" என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாறைகளுக்கு 'சிறுத்தை தடங்கள்' மற்றும் 'பாப்பி விதைகள்' என புனைப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதை முழுமையாக உறுதிப்படுத்த ஒரே வழி, பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வது மட்டுமே. நாசாவும் ஈசாவும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) செவ்வாயிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து வரும் திட்டத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் 2026 பட்ஜெட்டில், அமெரிக்க விண்வெளி முகமையின் அறிவியல் பட்ஜெட் மிகவும் குறைவாகவே முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. இன்று, செவ்வாய் ஒரு குளிர்ந்த மற்றும் வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆனால் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது வளிமண்டலத்தையும் நீரையும் கொண்டிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இது கடந்த காலத்தில் வாழ்ந்த உயிரைத் தேடுவதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக உள்ளது. 2021இல் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், உயிரியல் அறிகுறிகளைத் தேட அனுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது ஜெஸிரோ பள்ளம் என்ற பகுதியை ஆராய்ந்து வருகிறது, இது ஒரு காலத்தில் ஒரு நதி பாயும் ஏரியாகவும் இருந்தது. கடந்த ஆண்டு பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷன் என்ற பகுதியில் ஆற்றால் உருவான ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் சிறுத்தை தடம் என்ற பாறைகளை ரோவர் கண்டறிந்தது. இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் களிமண்ணால் உருவான பாறைகளான 'மட்ஸ்டோன்' என்று அழைக்கப்படும் பாறை வகைகள். "இந்த பாறைகளில் சில சுவாரசியமான ரசாயன மாற்றம் நடந்திருப்பதை அறிந்தோம், இதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம்," என்று நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இவர் பெர்சிவரன்ஸ் திட்ட விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆவார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாறைகளில் உள்ள தாதுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ரோவர் அதன் உள்ளக ஆய்வகத்தில் உள்ள பல கருவிகளைப் பயன்படுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை ஆய்வு செய்தது. இந்த தரவு பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டது. "நாங்கள் கண்டறிந்தவை, ஒரு ஏரியின் அடிப்பகுதியில் படிந்த மண்ணில் நடந்த ரசாயன எதிர்வினைகளுக்கான ஆதாரம் என்று நினைக்கிறோம். இந்த ரசாயன எதிர்வினைகள் மண்ணுக்கும் கரிமப் பொருளுக்கும் இடையே நடந்ததாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு பொருட்களும் எதிர்வினையாற்றி புதிய தாதுக்களை உருவாக்கியுள்ளன," என்று ஹுரோவிட்ஸ் விளக்கினார். பூமியில் இதே போன்ற சூழ்நிலையில், தாதுப் பொருட்களை உருவாக்கும் ரசாயன எதிர்வினைகள் பொதுவாக நுண்ணுயிரிகளால்தான் நிகழ்கின்றன. "இந்த அம்சங்கள் இந்த பாறைகளில் எவ்வாறு உருவாயின என்பதை விளக்க இது ஒரு சாத்தியமான விளக்கமாக இருக்கும்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். "நாம் இதுவரை கண்டறிந்தவற்றில் இதுவே வலிமையான மற்றும் மிகவும் உறுதியான பயோசிக்னேச்சர் எனத் தோன்றுகிறது" விஞ்ஞானிகள் இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகள் இல்லாமல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்தனர். இயற்கையான புவியியல் செயல்முறைகளும் இந்த ரசாயன எதிர்வினைகளுக்கு பின்னால் இருக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் இவற்றிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படும், ஆனால் பாறைகள் சூடாக்கப்பட்டவை போல் தெரியவில்லை. "உயிரியல் அல்லாத சாத்தியங்களுக்கு சில சிரமங்களை நாங்கள் கண்டோம். ஆனால் அவற்றை முற்றிலும் நிராகரிக்க முடியாது," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். பட மூலாதாரம், NASA/JPL படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் பாறைகளின் அற்புதமான மாதிரிகளை சேகரித்துள்ளது. பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராயும் போது பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷனில் கண்டறியப்பட்ட பாறைகள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இவை குப்பிகளில் சேமிக்கப்பட்டு, பூமிக்கு திருப்பி அனுப்பக் கூடிய விண்கலத்திற்காக செவ்வாய் மேற்பரப்பில் வைக்கப்படும். நாசாவின் இத்தகைய முயற்சிக்கான திட்டங்கள், டிரம்பின் பட்ஜெட் குறைப்பு அச்சுறுத்தலால் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், மாதிரிகளை எடுத்து வரும் ஒரு திட்டத்தை 2028ஆம் ஆண்டில் தொடங்க சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாசா பட்ஜெட் குறைப்பு முடிவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த பாறைகளை தங்கள் கைகளில் பெற ஆவலாக உள்ளனர். "இந்த மாதிரிகளை நாம் பூமியில் வைத்து பார்க்க வேண்டும்," என்று பேராசிரியர் குப்தா கூறினார். "உண்மையான நம்பிக்கையை பெற, பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த பாறைகளை பூமியில் பார்த்து ஆய்வு செய்ய விரும்புவார்கள். இது பூமிக்கு எடுத்து வர வேண்டிய மாதிரிகளில் அதிக முன்னுரிமை கொண்ட மாதிரிகளில் ஒன்றாகும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xr4vzrkqpo

மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல்

2 days 11 hours ago
பத்திரிகைகளை குறை கூறி தப்பித்து விடலாம் என்கிற நோக்கில் எது வேண்டுமானாலும் பேசுவார், பின் பத்திரிகைகளை சாடுவார். எடுத்ததெற்கெல்லாம் கோட்டுக்குப்போவேன் என எச்சரிப்பவர், இதற்கு எதிராக ஏன் போகவில்லை? ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று பலதடவை கூறியிருக்கிறார். சிங்களவருடன் வாழ்வது தனது அதிஷ்டம் என்று கூறியவர், அவர்களிடமே வாக்கைப்பெற்று பாராளுமன்றம் போயிருக்கலாமே? வடக்கு கிழக்கில் தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறி சிங்கள படையினரின் பாதுகாப்பை பெற்று வடக்கில் அரசியல் செய்ய வேண்டிய தேவை என்ன இவருக்கு? எப்படி வெட்கம் இல்லாமல் வாக்கு கேட்டார்?

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 days 12 hours ago
தன் பக்கமும் தமிழர் இருக்கிறார்கள் என காட்ட விடும் புலுடாவா அல்லது நீங்கள் சொல்வதுபோல் பினாமியாகவுமிருக்கலாம். அனுரா அதையும் விசாரணை செய்தால்; அது விசுவாசியா பினாமியா என்பது தெரிந்துவிடும். மக்களுக்கு துரோகம் செய்தவர்கள், அவர்களுக்காக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், இவர்களது மனச்சாட்சி உறுத்தவில்லையா இவர்களை?

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 days 12 hours ago
மகிந்தவின் பினாமி வரிசையில் இருக்கும் ஒரு கோடாரி காம்பாக இருக்கலாம் உண்மையில் அந்த வீட்டு உரிமையாளரே மகிந்த ஆக இருக்கலாம் . கத்தரி விளைந்தால் சந்தைக்கு வரத்தானே வேணும் இதுவரைக்கும் அந்த பினாமி பற்றி விபரங்கள் வராமலா போயிருக்கும் .

அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்

2 days 12 hours ago
இந்த தொந்தரவு வேணாம் என்றுதான் அநேகர்லண்டனில் இருந்து சென்னை போய் காலையில் இறங்கி அப்படியே பலாலி 1 மணி நேரத்தில் யாழில் மதியம் சாப்பட்டுக்கு வீட்டில் நிக்கினம் என்ன 2௦ கிலோ நிறைக்கு மேல் கொண்டு போக முடியாது அவசர பிரியர்களுக்கு இந்த ரூட் மிகவும் வசதியானது . அல்லது சென்னையில் இறங்கி ஆசுவாசமாய் சொப்பிங் பண்ணி 9௦கிலோ வுக்கு நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு கப்பல் போய் வருகிறது நாலு மணி நேர பயணமே ஒரு வழி பாதை நேரத்துக்கு ஆகுது . a9 ல் இரவிரவாய் 8௦மைல் வேகத்தில் மாவா போதை பாக்கு போட்டு ஓடும் சாகச வாகன ஓட்டிகளின் தொல்லை வேண்டாம் .

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 days 13 hours ago
உலகில் உள்ள அரசியல் களத்தில் முன்னேற வேண்டுமாயின் இனவாதம் பேசினால் உச்சத்தை தொடலாம்.அபிவிருத்தி பணிகள் எல்லாம் இரண்டாம் பட்சம். இது மேற்குலகிற்கும் தகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

2 days 13 hours ago
கொலையாளியை ஜீரணித்தவர் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபொழுது அவர்களுடன் பயணித்த ரிஷி லோமேசர், ஒரு கட்டத்தில் அவர்களுடன் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அறிவுறுத்தினார். அவரின் ஆலோசனைப்படி தங்களுடன் பயணித்த பலருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு ஒரு சிறு குழுவுடன் தங்களது யாத்திரையை பாண்டவர்கள் தொடர்ந்தனர். அப்பொழுது ரிஷிகளில் சிறந்தவரான அகஸ்தியரின் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு ரிஷி லோமேசர் கூறலானார். அகஸ்தியர் வனத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் சிலர் ஆவிகளாய் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார். அவர்கள் அவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பதன் காரணத்தை அவர்களிடம் வினவினார். “அகஸ்தியா! நாங்கள் உன் முன்னோர்கள். நீ இன்னும் திருமணம் செய்து கொள்ளாதக் காரணத்தினால், எங்களுக்கு நீத்தார் கடன் செய்ய உனக்கு பிள்ளை இல்லை. நீ திருமணம் செய்து பிள்ளை பெறும் வரை நாங்கள் இப்படித்தான் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்” என பதில் உரைத்தனர். சில காலம் கழித்து குழந்தைப் பேறு இல்லாத விதர்ப அரசன் அவரிடம் வந்து குழந்தை பெற ஆசி வழங்குமாறு வேண்டினான். இணையற்ற அழகும் , சிறந்த குணமும் கொண்ட பெண் பிறப்பாள் என அகஸ்தியர் ஆசிர்வதித்தார். அந்த பெண்ணுக்குத் திருமண வயது ஆனவுடன் தனக்கே அவளை மணமுடித்து தரவேண்டும் என நிபந்தனை விதித்தார். அவ்வாறே தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு லோபாமுத்ரா என பெயரிட்டு வளர்த்து வந்தான் விதர்ப்ப அரசன். இணையற்ற அழகியாய் விளங்கிய லோபாமுத்ராவை திருமணம் செய்து கொள்ள பல தேசத்து அரசர்கள் விரும்பினாலும் அகஸ்தியர் மேல் இருந்த பயத்தால் யாரும் பெண் கேட்டு செல்ல துணியவில்லை. அகஸ்தியர் ஒரு நாள் விதர்ப்ப தேசத்துக்கு சென்று லோபாமுத்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டினார். அவரது வயதையும் அவர் வாழும் எளிய வாழ்வையும் எண்ணி அவருக்கு தனது மகளை மணமுடிக்க தயங்கினான் அரசன். ஆனால் லோபாமுத்ராவோ அவரது ஞானத்தையும் அறிவையும் எண்ணி அவரை மணமுடிக்க சம்மதித்தாள். தனது ஆடம்பரமான உடைகளை துறந்து துறவிகள் அணியும் காவி உடை அணிந்து அகஸ்தியருடன் சென்று எளிய வாழ்வை வாழத் துவங்கினாள். நாளடைவில் இருவரிடையே அன்பு பெருகத் துவங்கியது. ஆனால், தன் விருப்பத்தை நேரடியாக சொல்ல நாணி, குடியிருக்க நல்ல வீடும், உடுத்திக் கொள்ள ஆடம்பர உடைகளும் வேண்டும் என அவரிடம் கேட்டார். அகஸ்தியரும் பல அரசர்களிடம் சென்று தானம் கேட்டார். ஆனால், அன்றைய சூழலில் அவர் கேட்கும் தனத்தை தர எந்த அரசரிடமும் வழியில்லாமல் இருந்தது. வில்வலன் மற்றும் வாதாபி என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். தங்களுக்கு பிடிக்காதவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். வாதாபி ஆடாய் மாற அவனை வெட்டி கறியாக விருந்துப் படைப்பர். விருந்தினர் உண்டவுடன், வில்வலன் “வாதாபி! வெளியே வா!” என அழைக்க விருந்தினரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. விருந்தினரின் செல்வம் அனைத்தையும் அபகரித்துக் கொள்வர் இருவரும். ஒரு முறை அகஸ்தியர் அவ்வழியே வர, அவரை விருந்துக்கு அழைத்தான் வில்வலன். அவரும் சம்மதித்து விருந்தை உண்டார். அவர் உண்டு முடித்தவுடன் வாதாபி வெளியே வருவான் என வில்வலன் காத்திருக்க அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. வாதாபியை தான் ஜீரணித்து விட்டதாக அகஸ்தியர் கூறினார். அதைக் கேட்டு பயந்த வில்வலன், அவரை சரணடைந்து தான் கைப்பற்றிய செல்வங்கள் அனைத்தையும் அவருக்கு சமர்ப்பணம் செய்து உயிர் பிச்சைப் பெற்றான். தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவருக்கு தேவையான செல்வமும் கிடைத்தது. சிலகாலம் கழித்து, லோபாமுத்ராவிற்கு அழகிய ஆண் மகவு பிறந்தது. அதன் மூலம், அவர்களது முன்னோர்களின் கடன் தீர்க்க வழியும் பிறந்தது. சிறுமையும் பெருந்தன்மையும் ரிஷி ரைபாயாவிற்கு இரு மகன்கள் இருந்தனர். ப்ரத்யும்னன் என்ற அரசன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்தை நடத்தி வைக்க அவரது மகன்களான பரவசு மற்றும் அர்வவசு இருவரையும் அனுப்பித் தர வேண்டினான். ரைபாயாவும் சம்மதித்து தனது மகன்களை யாகம் நடத்த அனுப்பினார். யாகம் நடத்த முன்னேற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில், பரவசுவிற்கு தனது மனைவியை காண வேண்டும் என ஆவல் எழுந்தது. எனவே, தனது ஆசிரமத்திற்கு திரும்பி சென்றான். அவன் ஆசிரமத்தை நெருங்கிய நேரம், சூரியன் முழுவதும் வராத கருக்கல் நேரம். ஏதோ ஒரு கொடிய வனவிலங்கு ஆசிரமத்தை நெருங்குவது போல் தோன்ற, தன் கையில் இருந்த கனத்த தடியை அந்த உருவத்தை நோக்கி வீசினான். அதை நெருங்கி பார்த்தப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது மரவுரி தரித்திருந்த தன் தந்தையை தான் தவறுதலாக கொன்றுவிட்டது. அப்பொழுதுதான் பாரத்வாஜ முனிவரின் சாபம் நினைவிற்கு வந்தது. பரத்வாஜ முனிவரின் மகன் யவக்ரீதா செய்த தவறுக்காக ரிஷி ரைபயா அவனை கொன்றார். மகனை இழந்த கோபத்தில் உன் மகனின் கையாலே இறப்பாய் என ரிஷி ரைபயாவிற்கு சாபமிட்டிருந்தார். அது இப்பொழுது உண்மையாகிவிட்டிருந்தது. வேகவேகமாய் தந்தையின் இறுதி சடங்குகளை முடித்த பரவசு, அர்வவசு தங்கி இருந்த இடத்திற்கு சென்று நடந்ததை விவரித்தான். பின், தந்தையை கொன்ற பாபம் விலக நாம் பரிகாரம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், அரசன் நடத்தும் யாகமும் தடையின்றி நடக்க வேண்டும் எனக் கூறி அதற்கு ஒரு தீர்வையும் கூறினான். அரசனின் யாகத்தை தன்னால் தனியாக நடத்த முடியும் ஆனால் அர்வவசுவால் அவ்விதம் செய்ய முடியாது எனக் கூறி தனக்காக காட்டிற்கு சென்று பரிகாரம் செய்யக் கூறினான். அவன் மேல் எந்தவித சந்தேகமும் கொள்ளாத அர்வவசு அதற்கு சம்மதித்து பரிகாரம் செய்ய சென்றான். இங்கே பரவசு யாகத்தை துவங்கினான். செய்ய வேண்டிய பரிகாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அர்வவசுவை பார்த்தவன் பொறாமையில் பொசுங்கினான். காரணம் , தான் செய்ய வேண்டிய பரிகாரத்தை வேறொருவரை செய்ய சொன்னதால் அவன் பாவம் தீரவில்லை. அதன் விளைவாய், அவன் மனதில் தீய எண்ணம் மூண்டது. அர்வவசுவை பார்த்து “தன் தந்தையை கொன்றவன் வருகிறான். யாகம் நடக்கும் இந்த புண்ணிய இடத்தில் இத்தகைய தீய குணம் உள்ளவனை எப்படி அனுமதிக்கலாம்?” எனக் கூறினான். அர்வவசுவின் விளக்கங்களை கேட்க அங்கே யாரும் தயாராக இல்லை. தனது சகோதரனுக்காக பரிகாரம் செய்ததே அவனுக்கு எதிராய் திரும்ப அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டான். அங்கிருந்து திரும்பிய அர்வவசு, காட்டிற்குள் சென்று அகோரமாக தவம் புரியத் துவங்கினான். பலகாலம் அவன் புரிந்த தவத்தினால் மகிழ்ந்த தேவர்கள் பிரசன்னமாகி அவனிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டனர். தவத்தினால் மனதில் இருந்த க்ரோதம் நீங்கியிருக்க “தேவர்களே! எனது தந்தையை தாங்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். மேலும் , என் சகோதரனின் மனதில் உள்ள க்ரோதங்கள் நீங்கி , அவனது பாபங்களையும் நீக்க வேண்டும்” என கேட்டான். அவனது பெருந்தன்மையை கண்டா தேவர்களும் அவன் கேட்ட வரத்தை வழங்கின https://solvanam.com/2025/04/13/கொலையாளியை-ஜீரணித்தவர்/

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல்

2 days 14 hours ago
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல் Photo, ITJP ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களின் வன்முறைகளையும் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக, அக்டோபர் 19, 2000 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை, தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான வன்முறைகளின் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும், தசாப்தங்களாக நீடிக்கும் தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் குறியீடாகவும் மாறியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக ITJP அண்மையில் விரிவான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வு, நிமலராஜனின் படுகொலைக்குப் பின்னணியில் உள்ள அரசியல் சூழல், உத்தியோகபூர்வ விசாரணையில் ஏற்பட்ட திட்டமிட்ட தோல்விகள், மற்றும் இலங்கையின் நீதிப் பொறிமுறை நீதி வழங்கத் தவறியதன் பரந்த தாக்கங்களை ஆழமாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு தனிநபரின் துயரத்தை ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்தப் படுகொலை ஏன் ஒரு மையப் புள்ளியாகத் தொடர்கிறது என்பதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. ஆய்வு தொடர்பாக சுருக்கமான ஓர் அலசல் கீழே தரப்பட்டுள்ளது. கொலைக்கான அரசியல் மற்றும் சமூகச் சூழல் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை ஒரு தற்செயலான தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக, அது 2000ஆம் ஆண்டில் நிலவிய கொந்தளிப்பான அரசியல் மற்றும் இராணுவச் சூழலின் தவிர்க்க முடியாத விளைவாகும். அரசின் பாதுகாப்புப் படைகளும், அவற்றுடன் இணைந்து செயல்பட்ட துணை இராணுவக் குழுக்களும் யாழ்ப்பாணத்தில் தண்டனையின்மையுடன் பெரும் செல்வாக்குச் செலுத்திய ஒரு காலகட்டத்தில், ஒரு சுயாதீன ஊடகவியலாளர் ஏன் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு இலக்கானார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பின்னணியை ஆராய்வது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. 2000ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்தது. விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டை 1995இல் இலங்கை இராணுவம் கைப்பற்றியிருந்தாலும், மோதல்கள் தொடர்ந்து நீடித்தன. யாழ்ப்பாணம் ஒரு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 512ஆவது பிரிகேட்டின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. நகரம் முழுவதும் இராணுவச் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டிருந்ததுடன், இரவு நேரங்களில் கடுமையான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், அரசாங்கத்தின் ஆதரவுடன் ‘ஒட்டுக் குழுக்கள்’ என்று அழைக்கப்பட்ட துணை இராணுவக் குழுக்கள் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. இவை அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும், தகவல்களைச் சேகரிப்பதற்கும், அரச படைகளின் நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) பங்கு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட மிக முக்கியமான அரச ஆதரவு துணை இராணுவக் குழு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆகும். அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். ஈ.பி.டி.பி. அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருள் ஆதரவுடன், தண்டனையின்மையுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. தமிழ் அரசியல் எதிரிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தல், அவர்களை அச்சுறுத்துதல் மற்றும் இலக்கு வைத்துக் கொலை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக ஈ.பி.டி.பி மீது பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் பின்னர் வந்த அரசாங்கங்களில் அமைச்சரவை அமைச்சர்களாகவும் பதவிகளை வகித்தனர். இது அவர்களின் அரசியல் செல்வாக்கையும், தண்டனையிலிருந்து அவர்கள் பெற்ற பாதுகாப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அக்டோபர் 2000 பொதுத் தேர்தல் அக்டோபர் 10, 2000 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தல், நிமலராஜனின் கொலைக்கான உடனடித் தூண்டுதலாக அமைந்தது. இந்தப் போர்க்காலத் தேர்தலின் போது, ஈ.பி.டி.பி.யினர் தேர்தல் வன்முறைகள், வாக்காளர் மோசடி மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதாக நிமலராஜன் தனது செய்திகளின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இந்தச் செய்திகள், கொலைக்கான நேரடி நோக்கத்தை நிறுவுவதில் முக்கியத்துவம் பெறுகிறது, குறிப்பாக ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த பகிரங்க எச்சரிக்கையின் பின்னணியில். தேர்தலில் ஈ.பி.டி.பி. நான்கு ஆசனங்களை வென்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் எதிர்பார்த்த பெரும்பான்மையைப் பெறத் தவறியதற்கு நிமலராஜனின் செய்திகளே ஒரு காரணம் என அக்கட்சி கருதியதாக நிமலராஜனே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். தேர்தலுக்குப் பின்னர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு நேர்காணலில், “உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நிமலராஜன் தனது விவகாரங்களை நடத்திக் கொண்டிருப்பதாக” அவர் எச்சரித்திருந்தார். இந்த அரசியல் சூழல், நிமலராஜனின் ஊடகப் பணிக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறி, அவரது படுகொலைக்கு வழிவகுத்தது. யாழ்ப்பாணத்தின் குரல்: மயில்வாகனம் நிமலராஜன் மயில்வாகனம் நிமலராஜன், பிபிசி தமிழ் மற்றும் ஆங்கில சேவைகள், தமிழ் நாளிதழான வீரகேசரி, சிங்கள வார இதழான ராவய மற்றும் தமிழ்நெற் இணையதளம் உள்ளிட்ட பல ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பணியாற்றிய ஒரு பன்மொழி ஊடகவியலாளர் ஆவார். போரினால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிய மிகச் சில சுயாதீனக் குரல்களில் ஒருவராக அவர் விளங்கினார். குண்டுவெடிப்புகள், இராணுவ நடவடிக்கைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள், அரசியல் ஊழல்கள், தேர்தல் முறைகேடுகள் மற்றும் போருக்கு மத்தியில் தமிழ் மக்களின் அன்றாடப் போராட்டங்கள் எனப் பலதரப்பட்ட விடயங்களை அவர் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தார். கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளுக்கு மத்தியிலும், சைக்கிளில் பயணம் செய்து செய்திகளைச் சேகரித்து, தொலைபேசி மூலம் லண்டனில் உள்ள பிபிசி அலுவலகத்திற்கு தனது செய்திகளை வாசித்துக் காட்டுவார். அவரது பணி, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு கொண்டு சென்ற ஒரு முக்கிய இணைப்பாக இருந்தது. அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் அவரது படுகொலைக்கு முன்னதாக, நிமலராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பலமுறை மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக, 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான அவரது செய்திகளுக்குப் பிறகு, ஈ.பி.டி.பியினரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். “தனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு ஈ.பி.டி.பி.யே காரணமாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அச்சுறுத்தல்கள் குறித்து அவர் பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தும், அந்த அழைப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே அவருக்குப் பதில் கிடைத்தது. கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, இராணுவத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று, தேர்தல் வேட்பாளர்களின் புகைப்படங்களை அவர் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புகைப்படங்களை அனுப்பத் திட்டமிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியபோது, கொழும்பில் உள்ள ‘ராவய’ பத்திரிகையின் ஆசிரியர் கேட்டதற்காகவே அவற்றைச் சேகரித்ததாக நிமலராஜன் விளக்கினார். படுகொலைக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கூட, அவர் இராணுவத்தினரால் மீண்டும் விசாரிக்கப்பட்டதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF) பதிவு செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் தற்செயலானவை அல்ல, மாறாக அவரை அமைதியாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் முன்னறிவிப்புகளாகவே இருந்தன. தாக்குதல் மற்றும் படுகொலை: நிகழ்வுகளின் காலவரிசை தாக்குதல் நடந்த இரவின் விவரங்கள், உயர் பாதுகாப்பு வலயத்தில் அரசின் பாதுகாப்புப் பொறிமுறை எவ்வளவு படுமோசமாகத் தோல்வியடைந்தது என்பதை அம்பலப்படுத்துகின்றன. இது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் சந்தித்த அதிர்ச்சியையும், நீதிக்காக அவர்கள் எதிர்கொண்ட நீண்ட போராட்டத்தின் தொடக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தாக்குதலின் இரவு அக்டோபர் 19, 2000 அன்று இரவு, யாழ்ப்பாணம் கடுமையான ஊரடங்குச் சட்டத்தின் கீழ் இருந்தது. திட்டமிடப்பட்ட மின்வெட்டு காரணமாக நகரம் இருளில் மூழ்கியிருந்தது. இரவு சுமார் 9:45 மணியளவில், நிமலராஜன் தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் தனது படிக்கும் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், வானொலியில் பிபிசி தமிழோசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம், இரண்டு ஆயுததாரிகள் வீட்டினுள் நுழைந்தனர். ஒருவன் நிமலராஜனின் தந்தையை ஒரு கத்தியால் சரமாரியாக வெட்டித் தாக்கினான். அதே நேரத்தில், மற்றொருவன் நிமலராஜனின் அறைக்குள் நுழைந்து அவரை நோக்கி மூன்று முறை சுட்டான். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாய் லில்லி திரேஸ் மற்றும் 11 வயது மருமகன் பிரசன்னா ஆகியோர் காயமடைந்தனர். தாக்குதல்தாரிகள் தப்பிச் செல்லும் போது ஒரு கைக் குண்டினை வீசினர், அது பொது அறையின் நடுவே வெடித்துச் சிதறியது. இதில் நிமலராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை, தாய் மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடிப் பின்விளைவுகள் தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த குடும்ப உறுப்பினர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. நிமலராஜனின் மைத்துனர் உடனடியாக அருகிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடிக்கு ஓடிச் சென்று உதவி கோரினார். இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வர சுமார் 15-20 நிமிடங்கள் ஆனது. ஆனால், அவர்கள் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வாகன உதவியை வழங்கவில்லை. இறுதியில், ஒரு அயலவரின் சிறிய உழவு இயந்திரத்தின் (லாண்ட் மாஸ்டர்) பெட்டியில் நிமலராஜனின் உடலையும், படுகாயமடைந்த மூன்று குடும்ப உறுப்பினர்களையும் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால், வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சென்றடைய அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. கடுமையான ஊரடங்கு மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நகரத்தில், அரச படைகளின் தலையீடு இன்றி தாக்குதல் நடத்துவதும், பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதைத் தடுப்பதும் எவ்வளவு எளிதாக இருந்தது என்பதை இந்த நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. இந்தத் துயர நிகழ்வு, நீதியை வழங்கும் நோக்கம் கொண்டிராத ஒரு தோல்வியுற்ற விசாரணைக்கே வழிவகுத்தது. விசாரணை நிமலராஜன் படுகொலையில் விசாரணை என்பது நீதிக்கான ஒரு கருவியாகச் செயல்படவில்லை; மாறாக, அது அரச ஆதரவு பெற்ற குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், பொறுப்புக்கூறலைத் திட்டமிட்டுச் சிதைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே விளங்கியது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், ஒரு மரணம் தொடர்பான விசாரணை சுயாதீனமாகவும், முழுமையாகவும், உடனடியாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். நிமலராஜன் வழக்கில், விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்பட்டன. குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஆரம்பகட்ட தோல்விகள் விசாரணையின் முதல் சில மணி நேரங்களிலேயே மிக மோசமான தவறுகள் இழைக்கப்பட்டன. இதுவே வழக்கின் அடித்தளத்தைச் சிதைத்தது. குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பாதுகாக்கத் தவறியது: உயர் பாதுகாப்பு வலயத்தில் கொலை நடந்த போதிலும், பொலிஸார் சம்பவ இடத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வலையத்தை அமைக்கவில்லை. இதனால், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆவணப்படுத்தத் தவறியது: குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புகைப்படங்கள் அல்லது வரைபடங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது பிற்காலப் பகுப்பாய்வுகளுக்கு அவசியமான அடிப்படைத் தகவல்களை இல்லாமற் செய்தது. தடயவியல் சான்றுகளைச் சேகரிக்கத் தவறியது: கைரேகைகள் மற்றும் பிற தடயவியல் சான்றுகள் முறையாகச் சேகரிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக் குண்டின் பாகங்கள் உடனடியாகப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படவில்லை. இந்த ஆரம்பகட்டத் தவறுகள், விசாரணை ஒருபோதும் தீவிரமான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகளாகும். சாட்சியங்கள் மற்றும் சாட்சியங்களை கையாண்ட விதம் விசாரணையின் போது சாட்சியங்களும் மிகவும் மோசமாகக் கையாளப்பட்டன. இது நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் குறைத்தது. தாமதமான விசாரணைகள்: கொலை நடந்த இரவில் கடமையில் இருந்த இராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்த பல ஆண்டுகள் ஆனது. நிமலராஜனுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து அவரது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் வாக்குமூலம் பெற விசாரணையை மேற்கொள்பவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர். தடயவியல் தாமதங்கள்: சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டின் பாகங்கள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்படுவதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. பகுப்பாய்வு முடிவுகள் வெளிவர மேலும் பல மாதங்கள் தாமதமானது. தவறான முன்னுரிமைகள்: நிமலராஜனுக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகளைப் பற்றி விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, விசாரணையாளர்கள் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்வது போன்ற பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சந்தேக நபர்கள்: கைதுகளும் தண்டனையின்மையும் விசாரணை இறுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மீது திரும்பியது. ஜெகன், முரளி, பாஷா மற்றும் நெப்போலியன் போன்ற முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் நீதியை நிலைநாட்டத் தவறின. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தாங்கள் பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் இதன் மூலம் சட்டரீதியாக பயனற்றதாகிவிட்டன, இது மேலதிக விசாரணையின்றி அவற்றை நிராகரிக்க அதிகாரிகளுக்கு ஒரு வசதியான காரணத்தை வழங்கியது, இதன் மூலம் வழக்கின் ஒரு முக்கிய தூண் தகர்க்கப்பட்டது. ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, கொலைக்கான நோக்கம் குறித்து பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், ஒருபோதும் பொலிஸாரால் விசாரிக்கப்படவில்லை. இது விசாரணையின் நம்பகத்தன்மையை முற்றிலுமாகச் சிதைத்தது. முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான நெப்போலியன் போன்றவர்கள், பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இது அரச தரப்பினரின் உடந்தையை உறுதிசெய்து, இலங்கையில் வேரூன்றியிருந்த தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்தது. நீதியின் தேக்கம் (2004-2021) 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்த வழக்கு கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. விசாரணைக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எந்தவித பதிலும் வரவில்லை. இறுதியாக, 2021 நவம்பரில், சட்டமா அதிபர் திணைக்களம், சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தீர்மானித்தது. இதன் விளைவாக, கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் பிணையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 21 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இறுதி முடிவு, இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் முழுமையான தோல்வியை உறுதிப்படுத்தியது. “நிமலராஜன் படுகொலை விசாரணையின் விளைவு”: ஒரு அச்சமூட்டும் முன்னுதாரணம் நிமலராஜன் படுகொலை கொலையாளிகள் தண்டிக்கப்படாதது, இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை உருவாக்கியது. இந்தக் கொலைக்குப் பிறகு, 2000 முதல் 2010 வரையான காலப்பகுதியில் குறைந்தது 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்கு யாரும் பொறுப்புக்கூறப்படவில்லை. இந்தத் தண்டனையின்மைக் கலாச்சாரம், ஊடகவியலாளர்களிடையே ஒரு ஆழமான அச்சத்தை விதைத்தது. இதன் விளைவாக, பலர் சுய தணிக்கையை மேற்கொண்டனர், சிலர் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறினர்.இது சுயாதீன ஊடகவியலத்தின் குரல்வளையை நெரித்தது. நிமலராஜனின் கொலை, அவரது துணிச்சலான ஊடகப் பணியை அமைதியாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் படுகொலையாகும். ஆரம்பம் முதலே, விசாரணை வேண்டுமென்றே சிதைக்கப்பட்டது: குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடம் பாதுகாக்கப்படவில்லை, சாட்சியங்கள் தாமதமாக விசாரிக்கப்பட்டன, மேலும் முக்கிய சந்தேக நபர்கள், குறிப்பாக அரசியல் செல்வாக்குள்ளவர்கள், ஒருபோதும் முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கு, அரசு மற்றும் அரசு ஆதரவு துணை இராணுவக் குழுக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை நீதிப் பொறிமுறை தொடர்ச்சியாகத் தவறி வருவதை எடுத்துக்காட்டுகிறது. இதன் விளைவாக, இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரானவன்முறைகளுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது. தமது மகன் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கிடைக்காத நிலையில் நிமலராஜனின் பெற்றோர் வெளிநாட்டிலேயே இறந்துபோனார்கள் என்பது, இந்த நீதியின்மையின் தலைமுறை கடந்த துயரத்தின் சான்றாகும். ஆசிரியர் குறிப்பு: NotebookLM உதவியுடன் ITJP அறிக்கையைக் கொண்டு வீடியோ பதிவு மற்றும் அறிக்கையின் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. https://maatram.org/articles/12294
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed