புதிய பதிவுகள்2

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

2 days 3 hours ago
காமனெயி மட்டுமல்ல இரானில் கொல்லப்பட்ட மற்ற தலைவர்கள் யார்? முழு விவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புரட்சிகர காவல் படையின் தளபதி முகமது பக்போர் (இடது), ஆயதுல்லா அலி காமனெயி, பாதுகாப்பு அமைச்சர் அஸிஸ் நசிர்ஸதே (வலது) கட்டுரை தகவல் ஹஃப்சா கலீல் மற்றும் டேவிட் கிரிட்டன் பிபிசி நியூஸ் 1 மார்ச் 2026, 07:19 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள் இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மரணமடைந்துவிட்டதாக, அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் காமனெயி மரணம் குறித்து பதிவிட்டிருந்தார். சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது நடத்திய மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து காமனெயி மரணச் செய்தி வெளியாகியுள்ளது. "டெஹ்ரானில் உள்ள காமனெயி இல்லம் ஒரு தீவிரமான திடீர் தாக்குதலில் அழிக்கப்பட்டது. 86 வயதான அந்த மதத் தலைவர் உயிரிழந்ததற்கான பல அறிகுறிகள் உள்ளன," என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள நான்கு வளைகுடா அரபு நாடுகளான - பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் - ஆகியவற்றின் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவித் தாக்கியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆயதுல்லா அலி காமனெயி (கோப்புப் படம்) இரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையின்படி, ஆயதுல்லா அலி காமனெயி சனிக்கிழமை அதிகாலை தனது அலுவலகத்தில் "பணிகளில் தீவிரமாக இருந்தபோது" உயிரிழந்தார் என அரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் அறிக்கைகளை வாசித்தார். இதற்கிடையில், டெஹ்ரானில் உள்ள காமனெயி அலுவலகமான 'லீடர்ஷிப் ஹவுஸ்' வளாகத்தின் பல பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பிபிசி வெரிஃபை (BBC Verify) உறுதிப்படுத்தியுள்ளது. இரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், காமனெயி தனது அலுவலகத்திலேயே உயிரிழந்தது, அவர் எங்கோ ஒளிந்துகொண்டிருப்பதாக பரவிய செய்திகள் "எதிரிகளின் உளவியல் போர்" என்பதற்கான ஆதாரம் என்று கூறியுள்ளது. இரான் ராணுவத்தின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் வான் தாக்குதலில் உயிரிழப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அப்துல்ரஹிம் மௌசவி (கோப்புப் படம்) இரானிய ராணுவத்தின் தலைமை தளபதி அப்துல்ரஹிம் மௌசவி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அஸிஸ் நசிர்ஸதே ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் மேலும் பல மூத்த ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, மௌசவியின் மரணத்தை 'நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் புனித பாதுகாப்பு விழுமியங்களைப் பரப்புவதற்கான அறக்கட்டளை' என்கிற இரானிய அமைப்பு உறுதி செய்துள்ளது. "சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் மௌசவி மற்றும் அஸிஸ் நசிர்ஸதே உடன் புரட்சிகர காவல் படையின் தளபதி முகமது பக்போர் மற்றும் உச்ச பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி ஷம்கானி ஆகியோர் கொல்லப்பட்டனர்," என அந்த இரானிய அமைப்பு தெரிவித்துள்ளது. "அவர்கள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது கொல்லப்பட்டனர், பாதிக்கப்பட்ட மற்றவர்களின் பெயர்கள் பின்னர் வெளியிடப்படும்," எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரானில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பிந்தைய காட்சி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 09:30 மணியளவில், தலைநகர் டெஹ்ரானில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரான் ஊடகங்கள் தெரிவித்தன. நகரின் ஜம்ஹூரி சதுக்கம் மற்றும் ஹசன் அபாத் சதுக்கத்துக்கு மேல் புகை மூட்டம் காணப்பட்டது. டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கரஜ், நாட்டின் மையப்பகுதியில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் கோம், மற்றும் மேற்கில் உள்ள கெர்மான்ஷா ஆகிய நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிபிசி உறுதிப்படுத்திய காணொளிகளில், டெஹ்ரானில் உள்ள காமனெயி இல்லமான லீடர்ஷிப் ஹவுஸ் வளாகத்தின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வெடிப்புகள் நிகழ்ந்ததைக் காண முடிந்தது. செயற்கைக்கோள் படங்களும் அந்த வளாகத்தில் கட்டடங்கள் கருப்பாக மாறியிருப்பது, இடிபாடுகள் மற்றும் புகை மண்டலத்தைக் காட்டின. தாக்குதல் நடந்த சமயத்தில் ஆயதுல்லா அலி காமனெயி அங்கு இருந்தாரா, இல்லையா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்ல சனிக்கிழமை மதியம் அதிஉயர் தலைவரின் உடல்நிலை குறித்துக் கேட்கப்பட்டபோது, இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், 'எதையும் உறுதிப்படுத்தும் நிலையில் தான் இல்லை' என்று பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால், சனிக்கிழமை மாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு தொலைக்காட்சி உரையில், 'டெஹ்ரானின் மையப்பகுதியில் இருந்த சர்வாதிகாரி காமனெயியின் வளாகத்தை நாங்கள் அழித்துவிட்டோம். அந்தச் சர்வாதிகாரி இப்போது உயிருடன் இல்லை என்பதற்கான பல அறிகுறிகள் உள்ளன' என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், 'வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இறந்துவிட்டார்' என்று எழுதினார். டிரம்ப் மேலும் கூறுகையில், 'இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றிய எங்களது உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாமல் போனது. இரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். டெஹ்ரானில் தாக்குதல்கள் பட மூலாதாரம்,ISNA/AFP via Getty Images படக்குறிப்பு,இரான் தலைநகர் டெஹ்ரான் அருகே நடைபெற்ற தாக்குதலுக்கு பிந்தைய காட்சி செய்திகளின்படி, தலைநகரில் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் அலுவலகமும் முதல் தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டது. அதிபர் பெசெஷ்கியான் 'பாதுகாப்பாக' இருப்பதாக இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது, பின்னர் அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். நாள் முழுவதும் தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் குறித்த பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் சனிக்கிழமை காலை கிட்டத்தட்ட முழுமையான இணைய முடக்கம் இருந்ததை கண்காணிப்பாளர்கள் கண்டறிந்தனர். டெஹ்ரான், கரஜ் மற்றும் கோம் ஆகியவற்றுடன் மேற்கு மாகாணங்களான லோரெஸ்தான், ஹமாதான், கெர்மான்ஷா மற்றும் இலாம், வடமேற்கில் தப்ரிஸ், மற்றும் தெற்கு வளைகுடா மாகாணமான ஹோர்மோஸ்கானின் சில பகுதிகள், கெஷ்ம் தீவு உட்பட பல இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக, இரான் அரசு செய்தி நிறுவனமான இர்னா தெரிவித்துள்ளது. மேற்கு நகரமான டெஸ்புல், தெற்கில் ஷிராஸ் மற்றும் கெர்மானின் புறநகர்ப் பகுதிகள், வடமேற்கில் குர்திஸ்தான் மற்றும் மேற்கு அஜர்பைஜான், மத்திய மாகாணமான மர்காசி, வடக்கில் கஸ்வின் மற்றும் ஜான்ஜன், மற்றும் தென்கிழக்கில் சிஸ்தான் பலுசிஸ்தான் ஆகியவற்றிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை மாலை, இரான் செம்பிறை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறுகையில், இரான் நாட்டின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டன என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அன்று இரவு 20:45 மணி வரை நாடு முழுவதும் மொத்தம் 201 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 747 பேர் காயமடைந்தனர், ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விரிவான விவரங்களை அவர் அளிக்கவில்லை. ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் மினாப்பில் உள்ள சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன. பிபிசியால் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை நாட்டின் வான்பரப்பு மூடப்படுவதாக இரான் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியது என்ன? பட மூலாதாரம்,@netanyahu படக்குறிப்பு,இஸ்ரேலின் இருப்புக்கான அச்சுறுத்தலை நீக்கவே இரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நெதன்யாகு கூறினார் சனிக்கிழமை காலை முதல் அறிக்கையை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டார். அவர் கூறுகையில், தனது நாடு "அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக இரான் மீது முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்தியுள்ளது" என்றும், இஸ்ரேலியர்கள் பதில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்குத் தயாராக இருக்குமாறும் எச்சரித்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டார். அதில் தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்திய அவர், இதன் நோக்கம் "இரான் ஆட்சியிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதாகும்" என்று கூறினார். "நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழிப்போம், அவர்களின் ஏவுகணைத் தொழிலை மண்ணோடு மண்ணாக ஆக்குவோம். அது முழுமையாக அழிக்கப்படும். நாங்கள் அவர்களின் கடற்படையை அழிப்போம். இப்பிராந்தியத்தின் பயங்கரவாத பினாமிகள் இனி இப்பகுதியையோ அல்லது உலகையோ சீர்குலைக்க முடியாது என்பதையும், எங்களது ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முடியாது என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்," என அவர் மேலும் கூறினார். "இரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று டிரம்ப் கூறினார். முன்னதாக, டிரம்ப் பல வாரங்களாக இரான் நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார். "இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்த புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன்" என்று அவர் கூறியிருந்தார். தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்றும், தான் அணு ஆயுதங்களைப் பெற விரும்பவில்லை என்றும் இரான் பலமுறை கூறியுள்ளது. இரான் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை கைவிட்டால் முழுமையான பாதுகாப்பை பெறலாம் அல்லது "நிச்சயமான மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று டிரம்ப் கூறினார். இரான் குடிமக்களையும் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், மதகுருமார்கள் வர்க்கத்தை தூக்கியெறியத் தயாராக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். "எங்கள் வேலை முடிந்ததும், உங்கள் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நீங்களே எடுத்துக்கொள்ள வேண்டும். இது பல தலைமுறைகளில் உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் மக்களின் சுதந்திரத்துக்கான நேரம் நெருங்கிவிட்டது என்று டிரம்ப் கூறினார் இஸ்ரேலும் அமெரிக்காவும் "இரான் பயங்கரவாத ஆட்சியால் உருவான தனது (இஸ்ரேலின்) இருப்புக்கான அச்சுறுத்தலை அகற்ற இந்த நடவடிக்கையை" மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். டிரம்புக்கு நன்றி தெரிவித்த அவர், "முழு மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாக மாறும் வகையில் இரான் அணு ஆயுதங்களை பெற அனுமதிக்கக் கூடாது" என்ற தனது செய்தியை மீண்டும் வலியுறுத்தினார். இந்தத் தாக்குதல்கள் "வீரம் மிக்க இரான் மக்கள் தங்கள் விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும்" என்று அவர் கூறினார். "இரான் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அடக்குமுறையிலிருந்து விடுபடவும், சுதந்திரமான மற்றும் அமைதியை விரும்பும் இரான் நாட்டை உருவாக்கவும் இதுவே தருணம்" என்று நெதன்யாகு கூறினார். அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் "இரான் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைப்பைத் தகர்க்க, உடனடி அச்சுறுத்தலாக இருக்கும் இடங்களுக்கு முன்னுரிமை அளித்து இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளன" என்று தெரிவித்தது. இந்த இலக்குகளில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையகம் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகள், வான் பாதுகாப்பு திறன்கள், ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்கள் மற்றும் ராணுவ விமான ஓடுதளங்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேற்கு மற்றும் மத்திய இரான் பகுதிகளில் "ஏவுகணை வரிசைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலில்" சுமார் 200 போர் விமானங்கள் பங்கேற்றதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. போர் விமானங்கள் ஒரே நேரத்தில் சுமார் ஐந்நூறு இலக்குகளின் மீது நூற்றுக்கணக்கான ஆயுதங்களை வீசியதாகவும், இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் அடங்கும் என்றும், இது இரான் நாட்டின் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவு குறைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் "காமனெயி ஆட்சியின் முக்கிய அதிகாரிகள், புரட்சிகர காவல்படையின் தளபதிகள் மற்றும் அணுசக்தி திட்டத்தின் முக்கிய நபர்களைச் செயலிழக்கச் செய்துவிட்டன" என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார். இரான் பாதுகாப்பு அமைப்பின் ஏழு முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது. அவர்களில் இரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் காமனெயியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான அலி சம்கானி, ஐஆர்ஜிசி தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே ஆகியோர் அடங்குவர். ஐடிஎஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் இரான் நாட்டுக்கும் இடையே நடந்த 12 நாள் போருக்குப் பிறகு, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அரசியல் மற்றும் ராணுவத் தலைமை சனிக்கிழமை தாக்குதல்களுக்காக ஓர் "ஆழமான மற்றும் முழுமையான கூட்டு செயல்பாட்டுத் திட்டமிடல் செயல்முறையை" தொடங்கியதாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களின் போது, இரான் நாட்டின் மூன்று குறிப்பிட்ட அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது. இரான் என்ன பதில் அளித்துள்ளது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா "முற்றிலும் தூண்டுதலற்ற, சட்டவிரோதமான மற்றும் அநியாயமான" போரைத் தொடங்கியதாக இரான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார். இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி எக்ஸ் தளத்தில், "எமது சக்திவாய்ந்த ராணுவம் இந்த நாளுக்காகத் தயாராக உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிப்போம்" என்று எழுதினார். இரான் பாதுகாப்பு அமைச்சகமும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் "கொடூரமான தாக்குதலுக்கு" "கடுமையான மற்றும் இரு நாடுகளிலும் வருத்தத்தை ஏற்படுத்தும்" பதிலடியைக் கொடுப்பதாகச் சூளுரைத்தது. இரான் நாட்டின் தஸ்னிம் செய்தி நிறுவனம், ஐஆர்ஜிசி-யை மேற்கோள் காட்டி, அதன் படைகள் இஸ்ரேலின் பல இடங்கள் மீதும், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஐந்து முக்கிய ராணுவ தளங்களான - கத்தாரில் உள்ள அல் உதைத் விமான தளம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படைத் தலைமையகம், குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமான தளம் மற்றும் ஜோர்டானில் உள்ள முவஃபக் சால்டி விமான தளம் - ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாகக் கூறியது. அந்த செய்தியின்படி, அமெரிக்காவின் போருக்கு உறுதுணையாக இருக்கும் கப்பல் மீது ஏவுகணைகளால் "கடுமையான தாக்குதல்கள்" நடத்தப்பட்டதாகவும், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் PF-132 ரேடார் அமைப்பு "முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும்" ஐஆர்ஜிசி கூறியுள்ளது. இதற்கிடையில், இப்பிராந்தியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படைப் பிரிவான 'யுனாவ்ஃபோர் அஸ்பைட்ஸ்' (EUNAVFOR ASPIDES), வளைகுடா பகுதியில் "எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை" என்று ஐஆர்ஜிசி வானொலி செய்தி மூலம் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தது. உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20% இந்த வழியாகவே செல்கிறது. அமெரிக்க மத்திய கட்டளை மையம் தனது படைகள் சனிக்கிழமை "இரான் ஏவுகணை மற்றும் டிரோன்களின் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தன" என்று கூறியது. அமெரிக்கர்கள் எவரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்றும், இப்பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகளுக்கு "குறைந்தபட்ச சேதமே ஏற்பட்டுள்ளது மற்றும் இதனால் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இஸ்ரேலிய ஊடகங்கள், இரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 150 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சிறியவை என்றும், அத்துடன் டஜன்கணக்கான தாக்குதல் டிரோன்களையும் ஏவியதாகத் தெரிவித்தன. வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளைத் தடுத்ததாகவும், சில திறந்தவெளிகளில் விழுந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேகன் டேவிட் அடோம் ஆம்புலன்ஸ் சேவை, மத்திய இஸ்ரேலில் காயமடைந்த ஒரு சிறுவனுக்கும், வடக்கில் காயமடைந்த ஒருவருக்கும் சிகிச்சை அளித்துள்ளதாகக் கூறியது. வடக்கில் மற்றொரு நபர் ஏவுகணை வெடிப்புக்குப் பிறகு உயரமான இடத்திலிருந்து விழுந்து காயமடைந்ததாகவும் அது மேலும் கூறியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம், தனது வான் பாதுகாப்பு அமைப்பு "இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கிய ஒரு தாக்குதலை" எதிர்கொண்டதாகவும், அவற்றில் பலவற்றைத் இடைமறித்ததாகவும் கூறியது. இருப்பினும், அபுதாபி நகரில் விழுந்த இடிபாடுகளால் பாகிஸ்தான் குடிமகன் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். துபையில் உள்ள பிரபலமான பாம் டெவலப்மென்ட் பகுதியில் நான்கு பேர் காயமடைந்தனர். துபை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை மாலை நடந்த ஒரு "சம்பவத்தில்", உலகின் பரபரப்பான சர்வதேச போக்குவரத்து விமான நிலையமான துபை சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததாகவும், நான்கு பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முனையங்களிலிருந்து பயணிகள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டதாக அது தெரிவித்தது. அமெரிக்க தளம் அமைத்திருக்கும் அலி அல் சலேம் விமான தளத்தை இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் குறி வைத்ததாகவும், இதனால் மூன்று குவைத் வீரர்கள் காயமடைந்ததாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் ஒரு டிரோன் தாக்குதல் நடந்துள்ளது, இதனால் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன், பொருட் சேதமும் ஏற்பட்டது. பஹ்ரைன் உள்துறை அமைச்சகம், மனாமா மற்றும் முஹராக் ஆகிய இடங்களில் மூன்று குடியிருப்பு கட்டடங்கள் டரோன் தாக்குதல்கள் மற்றும் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் உடைந்த துண்டுகள் விழுந்ததால் சேதமடைந்ததாகக் கூறியது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவு சேவை மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாகவும் பஹ்ரைன் அரசாங்கம் தெரிவித்தது. தனது நாட்டை நோக்கி ஏவப்பட்ட பல ஏவுகணைகளைத் தனது ராணுவம் தடுத்து நிறுத்தியதாக கத்தார் கூறியது. தலைநகர் தோஹாவில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. இங்கே பயணம் செய்வது பாதுகாப்பானதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மத்திய கிழக்கு நிலவரம் காரணமாக விமான சேவைகள் பெரிய அளவில் நிறுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமை பெய்ரூட் விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது பெரிய விமான நிறுவனங்கள் பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான விமானங்களைத் திருப்பிவிட்டுள்ளன அல்லது ரத்து செய்துள்ளன. வான்பயணங்கள் பகுப்பாய்வு நிறுவனமான 'சிரியம்' அளித்த தரவுகளின்படி, சனிக்கிழமை இப்பகுதியில் தரையிறங்க வேண்டிய சுமார் 4,218 விமானங்களில் 966 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை 4,329 திட்டமிடப்பட்ட விமானங்களில் 716 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. விஸ்ஏர் (Wizz Air) நிறுவனம் இஸ்ரேலுக்கு மார்ச் 7 வரைpயலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை மற்றும் அபுதாபி, ஜோர்டானில் உள்ள அம்மான் மற்றும் செளதி அரேபியாவிற்கு செல்லும் விமானங்களை செவ்வாய்க்கிழமை வரையிலும் நிறுத்தி வைத்துள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெல் அவிவ் மற்றும் பஹ்ரைனுக்கான விமானங்களை புதன்கிழமை வரை ரத்து செய்துள்ளது. "நீங்கள் லண்டன் ஹீத்ரோ மற்றும் அபுதாபி, அம்மான், பஹ்ரைன், தோஹா, துபை அல்லது டெல் அவிவ் இடையே விமானத்தில் செல்லவிருந்தால், மார்ச் 6 வரை உங்கள் விமானத்தை எவ்வித கட்டணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம்" என்று நிறுவனம் கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் படி, "மார்ச் 4 வரை பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் முழு பணத்தையும் திரும்பப் பெற கோரலாம்." சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில், "சுவிஸ் மற்றும் லுஃப்தான்சா குழும ஏர்லைன்ஸ் மார்ச் 7 வரை டெல் அவிவ், (லெபனானில் உள்ள) பெய்ரூட், அம்மான், (இராக்கில் உள்ள) எர்பில் மற்றும் டெஹ்ரானுக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன" என்று கூறியது. அரசு ஊடகங்களின்படி, குவைத் விமான போக்குவரத்து ஆணையம் அடுத்த அறிவிப்பு வரும் வரை இரான் நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாகக் கூறியுள்ளது. துபைக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் விமானங்களை எமிரேட்ஸ் நிறுவனம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. லுஃப்தான்சா, ஏர் இந்தியா, விர்ஜின் அட்லாண்டிக் மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. இராக் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட இப்பகுதியின் சில நாடுகளும் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது வான்வெளியைச் "சிறிதளவும் மற்றும் சில காலத்துக்கும்" மூடியுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c99j7myzxv8o

ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்!

2 days 3 hours ago
ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம் Mar 1, 2026 - 04:21 PM ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உச்சத் தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய அரசியலமைப்பின் 111 ஆவது பிரிவின்படி, உச்சத் தலைவர் ஒருவர் பதவியில் இல்லாதபோது அல்லது அவர் காலமானால், புதிய தலைவர் ஒருவரை நிபுணர்கள் பேரவை தேர்ந்தெடுக்கும் வரை ஒரு தற்காலிகத் தலைமைப் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், உயர்மட்ட மதகுருமார்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர் அலிரேசா அராஃபி இந்தப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அயதுல்லா அலிரேசா அராஃபி ஈரானின் செல்வாக்குமிக்க மத மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். அவர் தற்போது ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாவலர் சபையின் உறுப்பினர், ஈரானிய மதக் கல்விக்கூடங்களின் தலைவர் மற்றும் நிபுணர்கள் பேரவையின் மூத்த உறுப்பினர் ஆகிய முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றார். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அலி காமேனியின் மறைவு ஈரானுக்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத்தருணத்தில், நாட்டின் நிர்வாகம் மற்றும் இராணுவக் கட்டமைப்பைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக அலிரேசா அராஃபியின் நியமனம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஈரானின் நிபுணர்கள் பேரவை விரைவில் கூடி, நிரந்தரமான ஒரு புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை அலிரேசா அராஃபி நாட்டின் உயரிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார். இடைக்காலத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டாலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் உள்ளடங்கிய தற்காலிக சபையுடன் இணைந்து அவர் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 days 3 hours ago
ராஸாவின் அதிரடிக்கு மத்தியில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா Published By: Vishnu 01 Mar, 2026 | 08:15 PM (நெவில் அன்தனி) டெல்லி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஸிம்பாப்வேக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1 போட்டியில் தென் ஆபிரிக்கா 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் ஸிம்பாப்வே அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா சகலதுறைகளிலும் பிரகாசித்தபோதிலும் அவரது அணியினால் வெற்றிபெற முடியாமல் போனது. இதனை அடுத்து இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இக் குழுவில் முதலிடத்தில் உள்ள தென் ஆபிரிக்கா, பி குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்தை கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களைப் பெற்றார். அவரை விட க்ளைவ் மதண்டே 26 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. பந்துவீச்சில் க்வேனா மஃபாக்கா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கொர்பின் பொஷ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. தென் அபிரிக்காவின் முதல் இரண்டு விக்கெட்கள் முதல் 3 ஓவர்களுக்குள் வீழ்த்தப்பட்டதால் அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், அடுத்த நால்வரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தனர். ரெயான் ரிக்ல்டன் 31 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரெவிஸ் 42 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 22 ஓட்டங்களையும் ட்ரைஸ்டன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் ஜோர்ஜ் லிண்டே ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர். சிக்கந்தர் ராஸா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த சிக்கந்தர் ராஸா ஆட்டநாயகனானார். ராஸாவின் அதிரடிக்கு மத்தியில் தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது தென் ஆபிரிக்கா

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 days 3 hours ago
அபிசெக்கும்...கிசனும் வந்த வேகத்தில் கதிரையில்..போய் இருந்திட்டினம் ஒன்னுமாப் புரியல...ஜக்கம்மா பாசையில்..சொன்னால் நமக்கு எப்படிப் புரியும்

ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்!

2 days 4 hours ago
ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்! 01 Mar, 2026 | 05:44 PM ஈரானின் ஆன்மிக மற்றும் அரசியல் ரீதியான உயர் தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, நாட்டின் புதிய இடைக்கால உயர் தலைவராக 67 வயதுடைய அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷியா கொள்கைவாதியான அலிரேசா அராபி, ஈரானின் மத மற்றும் அரசியல் விவகாரங்களில் நீண்ட அனுபவம் கொண்டவர். கமேனியின் மறைவுக்குப் பின்னர் நாட்டின் அதிகாரக் கட்டமைப்பை வழிநடத்தும் உயரிய பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைவரைத் தீர்மானிக்கும் மற்றும் வழிகாட்டும் இந்தக் கவுன்சிலில் ஈரானின் தற்போதைய ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் மற்றும் ஈரானின் உள்நாட்டு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இடைக்கால உயர் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அலி கமேனியின் நீண்டகால தலைமைத்துவத்திற்குப் பிறகு ஈரான் எந்த திசையை நோக்கிப் பயணிக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் புதிய தலைவர் அராபியின் பங்கு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது. ஈரானின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் இந்த மாற்றங்கள் குறித்த மேலதிக தகவல்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/239913

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

2 days 6 hours ago
இங்கே பேசப்பட்டுக்கொண்டிருப்பது ஆயுதங்கள் பற்றியல்ல, அணு ஆயுதங்கள் பற்றியதே இரண்டு ஆயுதங்களும் ஒன்றல்ல, இரண்டும் வேறுவேறானவை. இரண்டாம் உலக போரின் பின்னர் அணுஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் அனைத்துமே அணுஆயுத ஒப்பந்தத்தை உறுதியாக கடைப்பிடித்தே நடந்து வந்திருக்கின்றன, அவை அணு ஆயுத போரில் ஈடுபட்டதாக உங்களிடம்கூட ஆதாரங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆயுதமோதல்களில் உலகில் யார்தான் ஈடுபடவில்லை அதுவும் அணுஆயுதபோரும் ஒன்றல்ல. புலிகள் அமைப்பிடம் கடற்படை வான்படை இருந்த காரணத்தினால்தான் உலகம் அது ஆபத்தானது என்று சொல்லி அவர்களை அழித்தது என்று நீங்கள் படித்த ஆதாரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் அறிந்தால் தவறில்லையே. செப்11ன் பின்னர் உலகின் போக்கே மாறியதால்தான் எம் போராட்டமும் சுற்றி வளைக்கப்பட்டது, அதேநேரம் புலிகளை முழு பயங்கரவாதிகள் என்று உலகம் முடிவு செய்திருந்தால் ஜெனீவா தாய்லாந்து நோர்வேக்கெல்லாம் ராஜதந்திரிகளுக்குரிய கெளரவத்துடன் அழைத்து பேசியிருக்காது. அவர்களிடம் அணு ஆயுதமோ ரசாயன ஆயுதங்களோ இருந்திருந்தால் கதை ஒருபோதும் அப்படி அமைந்திருக்காது. காலங்கள் சிறிது ஓடிவிட்டால் கண்முன்னே கண்டதெல்லாம் சிறிது மறந்து போய்விடுகிறது. அது மனித இயல்புதான். புலிகளிடம் அன்றைய போர் சூழலில் இலங்கை அரசைவிட வலுவான ஆயுதங்கள் ஆளணி இருந்திருந்தால் உலகம் தூர நின்று வேடிக்கைதான் பார்த்திருக்கும். பேச்சு வார்த்தைக்கு போக சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கும், அதற்கும் அணுஆயுத தயாரிப்புக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

2 days 6 hours ago
நிச்சயமாக அது பெரிய பிரச்சனைதான் என்பதை 99% துறைசார் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஒரு காரணம் அல்ல, முழுக்காரணும் விஞ்ஞானமே. நிலக்கரியை, பெற்றோலை எரித்து சக்தி+ காபனீரொட்சைட்டை பெறும் உக்தியை விஞ்னானம் கண்டு பிடித்திராவிடில் புவி வெப்பமயாமாதல் ஏற்பட்டிராது (நாமும் குதிரையில் பயணங்கள் செய்து கொண்டிருப்போம்). ஆனால் இதற்கான தீர்வையும் விஞ்ஞான வழி மூலம் பெற முடியும். விஞ்ஞானம் கடவுள் மாதிரி, ஆக்கும், காக்கும், அழிக்கும். அதை எப்படி பயன்படுத்துவது என்பது மனிதர் கையில்.

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

2 days 6 hours ago
இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிப்போம் எண்டவன் எங்கடா இப்ப? அது சரி செத்தகிளியிண்ட சிலமனையும் காணேல்லை. 🤣 அதிண்ட வாடகைக் குஞ்சுகள்தான் பாவம் அதுகளும் இலவுகாத்த செத்தகிளிகளாக நிக்குதுகள்! 🤣

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

2 days 6 hours ago
அவர்கள் பக்கம் இழப்பு என்றால் அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சொல்லி தாளிப்பார்கள், அவர்கள் பக்கம் வெற்றி என்றால் அல்லாஹு அக்பர் என்று குமுறுவார்கள் காசா போரின்போது சின்வார் தளபதியாக நியமிக்கப்பட்டபோது அவர் சிங்கம் இஸ்ரேலால் அவரை நெருங்ககூட முடியாது என்று கதறினார்கள், எண்ணி மூன்றேநாளில் இஸ்ரேல் அவர் கதையை முடித்தபோது என்ன இழவை சொல்லி சமாளிக்குறது எண்டு தெரியாமல் இது ஒன்றும் இழப்பில்லை அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சடைஞ்சார்கள், அப்போ காசாவில் மக்கள் சாகிறார்கள் ஐநா காப்பாத்து அல்லாஹ் காப்பாத்து என்று ஏன் கதறுகிறீர்கள் அவனிடம்தானே போகிறார்கள் என்று கேட்டேன், அதுக்கு செத்துபோன எங்கவீட்டு கிழவியிலிருந்து சித்தி பெரியம்மா வரை தோண்டி எடுத்து சிறப்பான தமிழில் திட்டினார்கள். சரி அவங்க மார்க்க கடமையைதானே செய்கிறார்கள் என்று பேசாமலே வந்துட்டேன். மக்கள் உயிர் இழப்பை கேலி செய்யும் எந்த நோக்கமும் இல்லை, ஆனால் மக்கள் இழப்பைபற்றி அவர்கள் கவலைபடுவது அவர்கள் பக்கம் அதிக இழப்பு என்றால் மட்டுமே மக்களை இழுத்து திசை திருப்புவார்கள். மற்றும்படி மற்றவர்களை கொன்றுவிட்டு இறைவன் பெரியவன் என்பதே கோஷமாக இருக்கும். எந்த ஒரு விஷயமும் தமக்கு சாதகமாக இல்லையென்றால் அப்படியே எந்த திசைக்கு வேணுமென்றாலும் மாற்றி உருட்டுவார்கள், உருட்டுவதில் இவர்களிடம் பிதாமகன் சூர்யா தோற்றுபோனார் என்றே சொல்லவேண்டும் .

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

2 days 8 hours ago
இந்த பதிவுக்கான பதிலை எனது முகப்புத்தக மேய்ச்சலில் கிடைத்தது ...இதனைப் பார்த்ததும் எனக்கு நாலுபுறத்தில் இருந்துதாக்குதல் ...அடியும்விழும் ...கவுரவ பட்டமளிப்பையும் தருவார்கள் ..ஆனால் நான் எந்தவித கருத்தும் எழுதமாட்டேன் ...இது இன்னொருத்தரின் கருத்து ..மேற்குறிப்பிட்ட கருத்துக்கு ஒத்து வந்ததுபோல் இருந்தது ...பிரதி பண்ணி விட்டேன் . நிர்வாகம் நீக்கினால்கூட ..மகிழ்ச்சி அடைவேன் பால்சோறும்.. பட்டாசு கொளுத்தியும் தன்னுடைய சொந்த இனம் அழியும்போது றபான் அடித்து டான்ஸ் ஆடி கொண்டாடிய மனிதாபிமான அற்ற கூட்டம் .. இன்று எங்களைப் பாத்து நீ யெல்லாம் மனிதனா மனிதாபிமானம் இல்லையா என்று கேக்கிறார்கள் 🤷" அடேய் நீங்கள் எல்லாம் இன்றும் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு இலங்கைல இருக்கிற தமிழர்களை எப்படியாவது விரட்டனும், அவர்களுடைய வரலாறுகளை அழிக்கனும் என்று துடிக்கிறிங்கள்.. நீங்கள் புனித ரமலான் மாதத்தில் பேசுகின்ற வார்த்தைகளை பாக்கும்போது உங்களுக்கு, இஸ்லாத்தைவிட துவேசம் தான் முக்கியம் என்று புரிகிறது.. ஈரானிய பிரச்சனைகளை பற்றி பேசும்போது எதற்கடா இலங்கைக்குள்ள போறிங்கள், ஏனென்றால் உங்களுடைய எண்ணம் சிந்தனையெல்லாம் இலங்கைலுள்ள தமிழினம் அழியவேண்டும் என்ற வெறி ஊறிப்போனதால்தான்... அதனால்தான் ஈரானிய பிரச்சனைக்குரிய பதில்களை வழங்காது அங்கு ஓடுறிங்க.. உங்களுக்கு ஒன்று தெரியமா அடுத்துவரும் சட்டத்திருத்தங்களிலோ அல்லது யாப்புகளிலோ இலங்கையில் இரண்டு இனம் மட்டும்தான் என முன்மொழியப்பட்டுள்ளது.. தமிழர்கள் தமிழர்கள் என்று நாங்கள் சொல்லும்போது கேக்காத நீங்கள் இனி இலங்கை அரசே சொல்லுது நீங்க தமிழர்களென்று 🤣" ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் பெட்டி படுக்கையை கட்டிட்டு ராஜஸ்தான் போக வேண்டியதுதான்.. இல்லாட்டி கண்ணாடியைப்பார்த்து பீ தமிழன் என்று சொல்லி காறித்துப்புங்கள் உங்க முகறையில். எங்களுக்கு என்றைக்கும் ஒரே ஒரு தலைவன்தான் அவருக்காக நிறைய கடமைப்பாடு உள்ளது.. அதுவரை என்னை உணர்ந்தவன் என்னுடன் நில்லு மற்றவன் எல்லாம் நடையை கட்டுங்கள்... கொள்கை கோட்பாடு அற்ற இஸ்லாமியர்களுக்கு இந்த உலகில் எங்கெல்லாம் இஸ்லாத்தை தழுவி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கென்று ஒரு தலைவன் இருப்பான்.... நன்றி..... iroshan Sivakumar .

ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

2 days 8 hours ago
ஆயுதங்களை மட்டும் வைத்து கொண்டு உணர்ச்சி மற்றும் வெற்று பிடிவாதத்துடன் அறிவில்லாமல் சண்டை செய்தால் அழிவு நிச்சயம் என்பதற்கு ஈரானும் உலகத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிவிட்டது.
Checked
Tue, 03/03/2026 - 17:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed