புதிய பதிவுகள்2

அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்

3 days 8 hours ago
அண்ணை, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். அண்ணை, நிப்பாட்டுவதை விட சைகை மொழியில் பழக்கிவிடுவார்கள்! இப்பவே ஆட்கள் கூட எனின் கையில் காசு வாங்குவதில்லை, பதிவு புத்தகத்தில் மறைவாக வைக்கச் சொல்வார்கள்.

ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!

3 days 8 hours ago
இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணையை நீண்டகாலமாக கோரி வந்தது. இதன்போது, தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பேச்சாளராக இருந்த சுமந்திரன் ஒரு அப்பட்டமான பொய்யை கூறியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்ற கருத்தை சுமந்திரன் கூறியதாக சுகாஷ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்படவே இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரும் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். Tamilwinஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதே...இலங்கையில் நடத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணையை நீண்டகாலமாக கோரி வந்தது. இதன்போது,...

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

3 days 8 hours ago
அனுரா புரிந்து கொண்டுதான் இவரை கதநாயகன் ரேஞ்சுக்கு உருவாக்கி விடுகிறார் போல் உள்ளது .

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்துவைப்பு

3 days 8 hours ago
இலங்கை போரில் பல லட்சம் தமிழர்களை காப்பாற்றிய வட்டுவாகல் பாலம் அழிக்கப்படுமா? கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அடையாள சின்னமாக காணப்படும் முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படுவது தற்போது பேசுப் பொருளாகியுள்ளது. இறுதிக் கட்ட போரின் போது பல லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை இந்த பாலம் பாதுகாத்ததாக ஈழத் தமிழர்கள் கூறி வருகின்றனர். இன்றைய சூழ்நிலையில் இந்த பாலத்தை திருத்தியமைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு செல்லும்போது ஒரு வாகனம் மாத்திரமே ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பாலத்தை கடக்க முடியும். அவ்வளவு குறுகிய நிலையில் இந்த பாலம் அமைந்துள்ளதுடன், கடந்த சில வருடங்களாக பாலத்தின் பல இடங்களில் உடைப்புக்களை அவதானிக்க முடிந்தது. நாளொன்றிற்கு சுமார் 3000 வரையான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றமையினால், இந்த பாலத்தில் புனரமைப்பானது இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் இந்த பாலத்தை புதுபித்து நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட பின்னணியில், தமது வரலாற்று சான்றை இல்லாதொழிக்க வேண்டாம் என தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் பிரதான வீதியில் நந்தி கடலை ஊடறுத்து இந்த வட்டுவாகல் பாலம் அமையப் பெற்றுள்ளது. சுமார் 410 மீட்டர் தூரத்தை இந்த பாலம் கொண்டமைந்துள்ளது. முல்லைத்தீவு நகரம் மற்றும் புதுகுடியிருப்பு நகரம் ஆகியவற்றை இணைக்கும் பிரதான பாலமாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் நீடித்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி மௌனிக்கப்பட்டது. இறுதி போர் முடிவடைந்த இடமாக இந்த பாலம் அமைந்துள்ள பகுதி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. முல்லைத்தீவு நகர் பகுதி பக்கத்தில் இலங்கை ராணுவத்தினரும், மறுபுறமான புதுகுடியிருப்பு பகுதி பக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிலைக் கொண்டு இறுதி போரை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில், புதுகுடியிருப்பு பக்கத்திலேயே தமிழர்கள் நிலைத்திருந்ததுடன், புதுக்குடியிருப்பை அண்மித்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர் என தமிழர்கள் கூறிவருகின்றனர். புதுகுடியிருப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த பொதுமக்கள், தமது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்குடன் இந்த வட்டுவாகல் பாலத்தை பயன்படுத்தியே ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் பிரவேசித்திருந்தனர். இவ்வாறு இறுதிப் போரில் பல லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு வட்டுவாகல் பாலம் பாரிய உதவிகளை வழங்கியதாக கூறப்படுகின்றது. உள்நாட்டு போரில் இந்த வட்டுவாகல் பாலம் சேதமடைந்திருந்ததாக அந்த காலப் பகுதியில் அங்கு வாழ்ந்த மக்கள் பிபிசி தமிழிடம் கூறியிருந்தனர். அதேபோன்று, சுனாமியின் போதும் இந்த பாலம் சேதமடைந்திருந்ததாக அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல், இந்த பாலத்தை அண்மித்த ஒரு பகுதியிலிருந்தே மீட்கப்பட்டிருந்ததாக ராணுவம் அந்த சந்தர்ப்பத்தில் அறிவித்திருந்தது. தமிழர்களுக்கு இவ்வாறு பல வரலாறுகளை கூறும் பாலம் இந்த உடைக்கப்பட்டு, புது பாலம் அமைக்கப்படும் தருவாயில் உள்ளமை பேசுப் பொருளாக மாறியுள்ளது. பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த பாலம் தொடர்பான அரசாங்கத்தின் கவனம் மீளத் திரும்பியிருந்தது. இந்த வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு கடந்த அரசாங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், அந்த நடவடிக்கைகள் செயற்பாட்டு ரீதியில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே, புதிய அரசாங்கத்தின் முயற்சியுடன் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 2-ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஜயம் மேற்கொண்டு இந்த பாலத்தில் நிர்மாணிப் பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த பாலத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக 1.4 பில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 2027-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கடந்த 2-ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார். பாலத்தை உடைக்க வேண்டாம் - முல்லைத்தீவு தமிழர்கள் கோரிக்கை வட்டுவாகல் பழைய பாலத்தை அழிக்காது புதிய பாலம் அமைத்து தரப்படும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே புதிய பாலம் அமைக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் நடனலிங்கம் கோரிக்கை விடுக்கின்றார். ''புதிய பாலம் அமைப்பதற்கு நாங்கள் பல வருடங்கள் முயற்சி செய்தோம். முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் சென்ற துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தின் முன்வைத்த கேரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த வருடம் அந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த பாலம் அவ்வாறே நிரந்தரமாக இருக்க வேண்டும். எமது அடையாளத்தை அவ்வாறே விட்டு விட்டு தான், புதிய பாலம் அமைக்க வேண்டும். 300 மீட்டர் தூரத்தில் குறுக்கே ஒரு பாலம் செல்லும் என்றும், பழைய பாலம் அவ்வாறே இருக்கும் என்றும் தான் எங்களுக்கு சொல்லப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் பழைய பாலம் அழிக்கப்படாது என கூறினார்கள். பாலத்தை உடைக்காது பார்த்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். எமக்கு சொன்ன உறுதிமொழிக்கு அமைய தான் அவர்கள் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.'' என அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம், ANNALINGAM படக்குறிப்பு, அன்னலிங்கம் நடனலிங்கம், வட்டுவாகல் புதிய பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு இல்லை என்ற போதிலும், வரலாற்றை அழிக்காத வகையில் பழைய பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதை நாங்கள் நூறு வீதம் வரவேற்கின்றோம். அது எங்களுக்கு தேவையான ஒரு பாலம். பல ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் பயணம் செய்கின்றார்கள். இந்த பாலத்தில் நிறைய வரலாறு பொறிக்கப்பட்டிருக்கின்றது. பாலத்தை முழுமையாக உடைப்பதற்கு எங்களுடைய மக்களுக்கு விருப்பம் இல்லை. புதிய பாலம் செய்வதற்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், பழைய பாலம் பாதுகாக்கப்பட வேண்டும்.'' என குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, செல்லையா யோகேந்திரராசா, முல்லைத்தீவு தமிழர்களின் அடையாளமாக விளங்கும் வட்டுவாகல் பாலத்தை இல்லாது செய்து, புதிய பாலத்தை அமைக்க இடமளிக்க மாட்டோம் என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் தெரிவிக்கின்றார். பழைய பாலம் அவ்வாறே பாதுகாக்கப்பட்டு, அதனை அண்மித்து புதிய பாலம் அமைக்கப்பட வேண்டும் எனவும், தமிழர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ''வட்டுவாகல் பாலம் என்பது 75 வருடங்களுக்கு மேலாக வரலாற்றை கொண்ட பாலம். இறுதி போரில் எல்லா மக்களும் அதனூடாக சென்ற பாலம். இறுதி போருக்கு அடையாளமாக, எச்சமாக இருக்கும் ஒரே ஒரு இடம் அந்தபாலம் மட்டும் தான். அபிவிருத்தி என்ற போர்வையில் அடையாளங்கள் இல்லாது செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டுவாகல் பாலம் கடைசி போரில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஆதாரமாக பார்க்கின்றோம். இப்போதுள்ள பாலத்தை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. பழைய பாலம் உடைக்கப்பட்டு, புதிய பாலம் அமைக்கப்பட்டால் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய அநீதிகளுக்கு அடையாளம் இல்லாது போய்விடும். இருக்கின்ற பாலத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.'' என இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் கூறுகின்றார். வட்டுவாகல் பாலம் உடைக்கப்படுமா? படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஈழத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் வட்டுவாகல் பாலம் முழுமையாக உடைத்து அகற்றப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். புதிய பாலம் நிர்மாணிக்கப்படும் சந்தர்ப்பத்தில், பழைய பாலத்தின் ஒரு பகுதி மாத்திரம் சேதப்படுத்தப்படும் எனவும், பழைய வட்டுவாகல் பாலம் தமிழர்களின் அடையாள சின்னமாக பாதுகாக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ''பழைய பாலத்தை முற்று முழுதாக உடைத்து விட்டு புதிய பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஒரு கருத்து நிலவியது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த புதிய பாலம் இவ்வாறு தான் நிர்மாணிக்கப்படுகின்றது என வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேரடியாக விளக்கங்கள் வழங்கப்பட்டன. அந்த கூட்டத்திலேயே நான் மறுத்திருந்தேன். பழைய யாழ்ப்பாண நூலகம் இப்படி தான் இருந்தது என்பதை எமது புதிய சந்ததியினருக்கு காட்டக்கூடியதாக இல்லை" என்று அவர் கூறினார். மேலும், " புதிய நூலகம் தான் இருக்கின்றது, பழைய நூலகத்தின் அடையாளங்களோ எச்சங்களோ இல்லாது போயுள்ளன. இப்படியான உதாரணங்களை சொல்லி காட்டி வட்டுவாகல் பாலம் பாதுகாக்கப்பட வேண்டும் என கூறியிருந்தேன். வட்டுவாகல் பாலத்தின் ஒரு பகுதியாவது இருக்க வேண்டும் என்பதை ஆணித்தனமாக அன்றைய தினமே கூறியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டார்கள். ஒரு பகுதி மாத்திரம் இந்த பாலத்தில் இருக்கும். குறிப்பிட்ட சில இடங்களில் புதிய பாலம் அமைக்கும் போது இடையில் அழிக்க வேண்டி வரும். அந்த பாலம் நிச்சயம் இருக்கும் என்பதை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறிப்பிட்டனர். பிரதி அமைச்சர், மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது விளக்க படங்களும் காண்பித்து இந்த கருத்து சொல்லப்பட்டது. தனிப்பட்ட ரீதியிலும் என்னிடம் உறுதி வழங்கப்பட்டது. சபையிலும் உறுதி வழங்கப்பட்டது'' என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார். இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரை தொடர்புக் கொள்ள பல முறை முயற்சி செய்த போதிலும், அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் விடயம் தொடர்பில் வினவிய போது, அது குறித்து தலைவருடன் பேச வேண்டும் என பதில் வழங்கி இருந்தார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dr8v423j9o

அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்

3 days 8 hours ago
A9 நிற்பவர்கள் மலை முழுங்கிகள் காசு வாங்கும் பொழுது காமரா வேலை செய்யாது நிப்பாட்டி விடுவார்கள் .

2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!

3 days 8 hours ago
அப்ப அனுரவின் ஆட்டம் சரி என்கிறியள்...நம்மட அனுர விசிலடிச்சான் குஞ்சுகளின் நிலை அம்போதானோ...எல்லோரும் யாழ்ப்பாண அல்வலகத்தில் பாசுப்போட்டு எடுத்து ரெடிபண்ணி யிருப்பினம்

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

3 days 8 hours ago
12 Sep, 2025 | 05:49 PM (எம்.மனோசித்ரா) சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை. மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் என்றும், இன்று நாட்டில் அரச பயங்கரவாதம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். வியாழக்கிழமை (11) விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியியேறியிருந்த அவர் வெள்ளிக்கிழமை (12) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : கடந்த புதன்கிழமை (10) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்ட மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வியாழன் (11) மாலை நான் வெளியேறினேன். இதற்கு முன்னர், விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு சிலர் ஊடகங்கள் முன் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்ததை நான் கண்டேன். மக்களுக்கு எதையும் செய்ய இயலாமல் மிகக் குறுகிய காலத்தில் மக்களால் நாளுக்கு நாள் வெறுக்கப்படும் ஒரு குழு, தங்கள் இயலாமையை மறைக்க ஊடகங்கள் முன் செய்த அந்த அறிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், அவர்கள் புதிய சட்டங்களை இயற்றிய பிறகு, 24 மணி நேரத்திற்குள் நான் விஜேராம இல்லத்திற்கு விடை கொடுத்தேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவாகிய நான் சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன். தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை இல்லாத அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் காரணமாக, அதன் விளைவாக எழுந்த பல சம்பவங்களின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக நான் ஒருபோதும் வருந்த மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போர் புரிந்தேன். சுவாசம் என்பது நம் அனைவருக்கும் பொதுவானது. இதில் இன, மத பேதங்கள் இல்லை. நம் சுவாசத்திற்காக தங்கள் சுவாசத்தை இழந்தவர்கள் இராணுவ வீரர்கள். அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாம் அனைவரும் சேர்ந்து அநுராதபுரம் புனித நகரத்தில் சந்த ஹிரு சேயவை (சந்திரன் மற்றும் சூரியன் தாதுகோபுரம்) உருவாக்கினோம். சந்திரன், சூரியன் இருக்கும் வரை நமது தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை அது குறிக்கிறது. எனது மூத்த மகன் நாமல் கூறியது போலவே, எல்லாம் தொடங்கிய எனது கிராமத்திற்கு நான் திரும்ப வந்துள்ளேன். நாம் கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகவே நான் வந்தேன். இப்போது கிராமத்தில் புளிக்குழம்பில் உள்ள மீனை ருசித்து மகிழ என்னால் முடியும். கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எது எப்படி இருந்தாலும், எல்லாம் இந்த மண்ணிலிருந்துதான் தொடங்கியது. 1970 பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் போட்டியிட்டான். அதற்கான வாய்ப்பை சிறிமாவோ பண்டாரநாயக்க வழங்கினார். ஒரு இளம் அமைச்சராக நான் பயணிக்க வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவியாகவும், தாயாகவும் இருந்தார் என்றால் அது சரியானது. அரசியலில் சரியான வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்கவுக்கு பின்னால், ரூ{ஹணுவின் மக்கள் பிரதிநிதியாக இருந்த எனது அன்புக்குரிய தந்தை எப்போதும் காணப்பட்டார். எனது தந்தை ரூ{ஹணுவின் பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பாராளுமன்றத்தின் இளைய உறுப்பினராக, 1970 ஆம் ஆண்டு மக்கள் அரசாங்கத்தின் முதல் சிம்மாசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நான் கொண்டு வந்தேன். அங்கு பெலியத்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி நான் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. இருண்ட காலங்களில் நிலவிய அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கலை எதிர்த்து, காணாமல் போனவர்களுக்காக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றதும் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணாமல் போனவர்கள், மனித உரிமைகள் மீறல்களுக்காக சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரி 'வழக்கறிஞர் மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் - மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்கல்லை' என்பதை எனது சகோதரர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். பாதயாத்திரைகள், பொதுமக்கள் கண்டனப் போராட்டம், மனிதச் சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள். தங்கள் அரசியல் அழுத்தங்களையும், பதற்றங்களையும் தவிர்ப்பதற்காக யாரும் ஜனநாயகத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது. தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்க முயற்சிப்பது வருத்தத்திற்குரியது. மக்கள் எங்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த எதிர்பார்ப்புகளின் தீவிரம் காரணமாகவே கடந்த காலத்தில் சில சம்பவங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மஹிந்த ராஜபக்ஷ தன் மனசாட்சிக்கு இணங்க நாட்டிற்காக முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது வேறு எதுவும் இல்லை. கடந்த காலத்தில் பெற்ற அதே மக்கள் அன்பை இன்றும் அதே போல் பெறுவது எனக்குக் கிடைத்த பாக்கியம். அந்த பாக்கியத்தை யாரிடமும் இழக்க முடியாது. மதத் தலைவர்களிடமிருந்து இடமிருந்து தினமும் நான் பெறும் ஆசீர்வாதம், பௌதீக வரப்பிரசாதங்களை விட மேலானது. எனது அன்பு மனைவி சிரந்தி, அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை அளித்து எனக்கு எப்போதும் பலமாக இருந்தார். அப்போதும், இப்போதும் என் அருகில் இருந்த மற்றும் இருக்கும் எனது பிரதான பாதுகாப்பு அதிகாரி உட்பட எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பு, பணியைத் தாண்டிய ஒரு பாசமான பிணைப்பாகும். மஹிந்த ராஜபக்ஷ விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷதான். மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதாக எனக்குத் தெரியவந்தது. தனிப்பட்ட முறையில் என்னை இலக்கு வைப்பது குறித்து நான் பதிலளிக்கவில்லை. ஆனால் நான் வாழும் வரை, நாம் அனைவரும் வாழும் அல்லது ஒருநாள் அடக்கம் செய்யப்படும் சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன் என்று நான் அறிவிக்கிறேன். அன்று தேவைப்பட்டால் எனக்குத் தோள் கொடுக்க இந்த நாட்டில் மகா சங்கரத்தினத்தை உள்ளடக்கிய அன்பு மக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசியல் அச்சுறுத்தல்களும், இடி முழக்கங்களும் நன்கு பழக்கப்பட்டவை. https://www.virakesari.lk/article/224932

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

3 days 8 hours ago
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை! 12 Sep, 2025 | 07:08 AM பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பிரேசிலின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (11) அவருக்கு இந்தத் தீர்ப்பை வழங்கியது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், போல்சனாரோ பதவியில் இருந்து விலக மறுத்து, இராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவில், நான்கு நீதிபதிகள் போல்சனாரோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர். சட்ட ஆட்சியை ஒழித்தல், ஆயுதமேந்திய குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பு, பிரேசிலின் அரசியல் பிரிவுகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. போல்சனாரோ ஆதரவாளர்கள் இதனை "அரசியல் பழிவாங்கல்" என்று கண்டித்து வருகின்றனர். அதேசமயம், தற்போதைய ஜனாதிபதி லூலா டா சில்வா, போல்சனாரோ பிரேசிலின் ஜனநாயகத்திற்கு எதிராக ஒரு சதித்திட்டத்தை மேற்கொண்டதற்கான "நூற்றுக்கணக்கான ஆதாரங்கள்" இருப்பதாகவும், இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். போல்சனாரோ, ஏற்கனவே மற்றொரு வழக்கில் 2030 ஆம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அது வெற்றிகரமாக அமைய வாய்ப்பு குறைவு என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போல்சனாரோவுக்கு நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தத் தீர்ப்பு "மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இது ஒரு "சூனிய வேட்டை" (witch hunt) என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/224868

கீரிமலை நகுலேச்சரத்தில் தேர் இருப்பிட கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

3 days 8 hours ago
12 Sep, 2025 | 04:35 PM பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் (12) அடிக்கல் நாட்டப்பட்டது. 41 அடி உயரம் கொண்ட பூசாந்திர சித்திரத் தேருக்கான புதிய தேர் இருப்பிடத்தின் கட்டுமான வேலைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்போது விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. https://www.virakesari.lk/article/224920

இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க

3 days 8 hours ago
ஒவ்வோரு நாட்டு சமையலுக்காகவும் ஒவ்வொருவரை வைத்திருப்பார்களோ? முன்னர் ஓவசியர் என்று சொல்லக் கூடியவர்கள் வேலைக்கு 50 பேர் இருந்தால் சம்பளம் 100-150 பேர்வரை போட்டு எடுப்பார்களாம். அதே போல உற்றார் உறவினர் வேண்டப்பட்டவர்கள் இந்த பட்டியலில் இருக்கலாம். பாவம் இரண்டு மூன்று பேரே முறிந்து விழுந்து முழு சமையலையும் செய்யலாம்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 9 hours ago
The HinduWomen’s World Cup 2025: Bengaluru venue dropped after sta...ICC announced revised Women’s World Cup 2025 schedule, with Navi Mumbai replacing Bengaluru’s Chinnaswamy after the stampede incident.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அங்கு போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது. இதனால் பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டள்ளது. https://www.maalaimalar.com/news/sports/cricket/womens-world-cup-matches-moved-out-of-bengalurus-chinnaswamy-stadium-navi-mumbai-to-host-semi-final-final-785233

இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க

3 days 9 hours ago
ஏனில்லை. சலுகையை யார்தான் இலகுவாக விட்டுக்கொடுப்பார்கள். எனக்கொரு சந்தேகம் 12 சமயல்காரரை வைத்து அப்பிடி என்னதான் சமைப்பார்கள். இப்பதான் எல்லாருடைய வருத்தங்களும் வெளியாலை தெரியுது

அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்

3 days 9 hours ago
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடிய கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 12K views · 319 reactions | அனைத்து போக்குவரத்து பொலிஸாரு...அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் - சிக்கப்போவது யார்..? #SriLankanPolitician #Srilankanpolice #TrafficPolice #tamilwin.https://tamilwin.com/article/another-procedure-to-implemented-next-two-weeks-1757487619

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

3 days 9 hours ago
தமிழ் திரையுலகில் பல துப்பறியும் படங்களில் நடித்ததும் அவராகவே இருக்கும். மோடேன் தியோட்டஸ் எடுத்த படங்களில் அருமையாக நடித்திருப்பார். மோடேன் தியேட்டேஸ் படங்களில் எழுத்தோட்டமே ஒரு திறில். இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்-அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

'கனிம திட்டங்களுக்கு மக்கள் கருத்து அவசியமில்லை' - மத்திய அரசு உத்தரவுக்கு எதிர்ப்பு ஏன்?

3 days 9 hours ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 12 செப்டெம்பர் 2025, 02:29 GMT இந்தியாவில் இனி முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்கள் சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அலுவல் உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்துள்ளது. "இது மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்" என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறையின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், செப். 8 தேதியிட்ட அந்த உத்தரவில், திட்ட அளவை பொறுத்து அல்லாமல், அனைத்து திட்டங்களும் மத்திய அரசு மட்டத்தில் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வியூக ரீதியான (strategic considerations) காரணங்களுக்காக இத்தகைய திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, 2006 அறிவிப்பாணையின் (திருத்தம்) விதிமுறைகளின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. "மத்திய அரசு திட்டங்களில் பிரிவு பி-யில் (section B) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அணுக் கனிம சுரங்க திட்டங்கள் மற்றும் பிரிவு டி-யில் (section D) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து முக்கிய கனிமங்கள் (critical minerals) (சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் முதல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள) சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது." என அதில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், டங்ஸ்டன் முக்கிய கனிமங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி துறையின் கோரிக்கை என்ன? சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு 04.08.2025 தேதியிட்ட கோரிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம், ரேடார் மற்றும் சோனார் போன்ற கண்காணிப்பு சாதனங்கள், லேசர், மானிட்டர் போன்ற தொடர்பியல் கருவிகள், ஏவுகணைகளின் இலக்கை கட்டுப்படுத்தும் வழிகாட்டு அமைப்புகளின் தயாரிப்புகளில் இத்தகைய முக்கிய கனிமங்கள் பயன்படுவதாக தெரிவித்துள்ளது. "இந்தியாவில் இத்தகைய கனிமங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதன் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. இதனால் நாட்டில் அதன் விநியோகம் அபாயத்தில் இருப்பதால், உள்நாட்டிலிருந்து இக்கனிமங்கள் நிலையாக விநியோகம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது" என அதில் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. எனவே, முக்கிய கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்களை தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக கருதி அவை சார்ந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று கோரியிருந்தது. அதேபோன்று, 29.08.2025 தேதியிட்ட கடிதத்தில் அணுசக்தி துறை, மோனசைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தோரியம், மூன்றாம் நிலை அணுசக்தித் திட்டத்தில் சாத்தியமான அணுசக்தி எரிபொருள் ஆதாரமாக உள்ளது என கூறியுள்ளது. அதேபோன்று, முதல்நிலை அணுசக்தித் திட்டத்தில் யுரேனியம் முக்கியமானதாக கருதப்படுகிறது என்றும், இதுதொடர்பான திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது. முக்கிய கனிமங்கள் என்னென்ன? 2023ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதன்படி, கோபால்ட், தாமிரம், டங்ஸ்டன், காட்மியம், செலினியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட 30 முக்கிய கனிமங்கள் உள்ளன. அதேபோன்று, யுரேனியம், தோரியம் போன்ற 6 வகையான அணுக் கனிமங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டைட்டானியம், லித்தியம், டாண்டலம் உள்ளிட்ட ஆறு கனிமங்களை அணுக் கனிமங்கள் பட்டியலில் இருந்து நீக்கி, அதை தோண்டி எடுப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட வழிவகுத்து 2023ம் ஆண்டில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பொதுமக்கள் கருத்துக் கேட்பு ஏன் முக்கியம்? சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அம்சமாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உள்ளது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையின் முக்கியமான பகுதியாக, பொதுமக்கள் கருத்துக் கேட்பு உள்ளது. தங்கள் பகுதிகளில் வரவிருக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை இத்தகைய கூட்டங்களில் எடுத்துரைப்பார்கள். பொதுமக்களின் பெரும்பான்மை கருத்துகளின் அடிப்படையில் தான் அந்த திட்டம் அமையும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, பொதுமக்கள் கருத்துக் கேட்பு இவையிரண்டும் அனைத்து விதமான சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கும் மிக முக்கியம் என்றும், மத்திய அரசின் தற்போதைய உத்தரவு அதன் முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வதாக இருப்பதாகவும் கூறுகிறார், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். பட மூலாதாரம், m.vetriselvan/Instagram படக்குறிப்பு, 'இதனால் கதிர்வீச்சு அபாயம் கூட ஏற்படும்' என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் "சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் 1994ம் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை கொண்டு வந்தனர். 1992ல் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் உலக நாடுகளின் முக்கிய கருத்துகளின் அடிப்படையிலும் இது கொண்டு வரப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் மிக முக்கிய அம்சமே பொதுமக்கள் கருத்துக் கேட்புதான்." என்கிறார் அவர். ஓர் திட்டம் வருகிறதென்றால், அதனால் சூழல் மீது எந்த தாக்கம் ஏற்படும் என்ற ஆய்வு நடத்தப்படும் . அதனடிப்படையில் தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்படும். "எந்தவொரு திட்டத்துக்கும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கு முன்னதாகவே இந்த அறிக்கையை அந்தந்த மொழிகளில் மொழிப்பெயர்த்து மக்களிடத்தில் பரவலாக்கியிருக்க வேண்டும். அதைன்பின் தான், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தும். அதில், பெரும்பான்மை மக்கள் ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும். இப்போதைய உத்தரவின்படி, முக்கிய கனிமங்கள், அணுக் கனிமங்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கு எதிரானது" என தெரிவிக்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன். எதிர்ப்பு ஏன்? மத்திய அரசு 2014ம் ஆண்டு தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை மாற்றியமைப்பதற்காக, முன்னாள் அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அக்குழு, தொழில்கள் எளிதாக செயல்படும் வகையில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் உள்ள தடைகளை நீக்குவதற்காக, பல பரிந்துரைகளை அளித்திருந்தது. ஆனால், அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதை நாடாளுமன்ற நிலைக்குழு 2015ம் ஆண்டு நிராகரித்தது. இதைச் சுட்டிக்காட்டிய வெற்றிச்செல்வன், "2020ல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதில்தான் முதன்முதலாக சில திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தேவையில்லை என்று கொண்டு வந்தது. அதற்கும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், அதிலுள்ள விதிமுறைகளை தனித்தனியே செயல்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது" என கூறுகிறார். மேலும், இந்த உத்தரவை சட்டத்திருத்தமாக கொண்டு வராமல், அலுவல் உத்தரவாக கொண்டு வருவதும் ஏற்புடையதல்ல என்கிறார் வெற்றிச்செல்வன். "இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு அல்லாமல், அணுக்கதிர்வீச்சு அபாயமும் இருப்பதாக" கூறுகிறார் அவர். இனி என்ன நடக்கும்? படக்குறிப்பு, அதிகளவில் கனிமங்களை தோண்டி எடுக்கும் நிலை இதனால் உருவாகலாம் என்கிறார், சு.ப. உதயகுமார் "கருத்துக் கேட்பு நடத்தப்படாமல் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும்போது மக்கள் நில உரிமையை இழந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்." என்கிறார் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகித்த சு.ப. உதயகுமார். தமிழ்நாட்டில் என்ன தாக்கம் ஏற்படும்? "கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை. இப்போது, பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமே வேண்டாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அதேபோல், பழனி, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, கவுத்தி மலை, வேடியப்பன் மலையில் இரும்பு தாது உள்ளது. அவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் தோண்டி எடுக்கலாம் என்ற நிலை இதனால் உருவாகலாம். ஏனெனில், இத்தகைய கனிமங்கள் தான் இனி 'புதிய எண்ணெய் வளம்' என்கின்றனர். மக்கள் தான் தேசம், அவர்களின் அடிப்படை தேவைகள் தான் முக்கியமே தவிர, தனியார் நிறுவனங்களுக்காக விதிமுறைகளை மாற்றக் கூடாது" என்றார் சு.ப. உதயகுமார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx23plpp16do

ரணிலை சந்தித்த சீன தூதுவர் - தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள்

3 days 9 hours ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் நேற்று கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நடக்கும் முதல் உத்தியோகபூர்வ இராஜதந்திர சந்திப்பு இதுவாகும். பிணையில் விடுதலை இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தார். அத்துடன், சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது, முன்னாள் ஜனாதிபதிகளுடனான சீனத்தூதுவரின் சந்திப்பானது உள்நாட்டு அரசியலில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/meeting-between-ranil-and-chinese-ambassador-1757659599#google_vignette
Checked
Mon, 09/15/2025 - 22:38
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed