புதிய பதிவுகள்2
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
நடத்துங்கோ அண்ணை, பங்கேற்பாளர்கள் வருவினம்.
பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்!
பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல்! நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள நிலையில் பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளதாவது” ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போதும் நாட்டுக்குள் வரும் போதும் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்வதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள 556 பேரை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏதேனும் பகுதியில் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் துரிதரகமாக செயற்படுவதற்கு சகல பொலிஸ் நிலையங்களில் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினரை ஒன்றிணைந்து வட்சப் செயலி ஊடாக விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்கள் சோதனை சாவடிகள் போடப்பட்டு வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 72 பேருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாகவே அண்மையில் இந்தோனேசியாவில் பிரதான நிலை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 11 பேர் சிவப்பு பிடியாணை ஊடாக கைது செய்யப்பட்டு நாட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 105 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதுடன், இச்சம்பவங்களுடன் தொடர்புடைய 34 துப்பாக்கிதாரிகளும், ஒத்தாசை வழங்கியவர்கள் உட்பட 322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரி56 ரக துப்பாக்கிகள் 58 உட்பட 1698 துப்பாக்கி மற்றும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் டுபாய், இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ்ர்லாந்து, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமான முறையில் பதுங்கியுள்ளார்கள். இவர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சு கூட்டாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களுக்கும் கடந்தகால அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புண்டு என்பது குற்றப்புலனாய்வு பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குரிய விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. பாதாள குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல நாம் இடமளிக்கடாட்டோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446907
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
உப்பிடித்தான் 2015 ல ஹெலில போய் இறங்கினவர், 2025 ல கார்ல போயிருக்கிறார்.
’முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்’ - வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன்
’முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்து விட்டனர்’ - வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டினார் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அன்று இடம்பெற்ற தேசிய கணக்காய்வு திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார். மேலும், முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக தங்களுடைய பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். சுமார் 400 தமிழ்க் குடும்பங்களே இவ்வாறான இடப்பெயர்வைச் சந்தித்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு அவர்களுடைய சொந்த இடமான முள்ளிக்குளத்தில் மீள் குடியேற்றப்பட்டனர். இவ்வாறு தமது சொந்த இடத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு அக்காலப்பகுதியில் 150 நிரந்தர வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தமாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேறி வாழ ஆரம்பித்தனர். அது நீடிக்கவில்லை. மீள் குடியேறி வெறுமனே ஐந்து வருடங்களிலேயே கடந்த 2007ஆம் ஆண்டு மீளவும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு முள்ளிக்குளம் கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.இவ்வாறான சூழ்நிலையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக வாழ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து இரண்டு தசாப்த காலங்களை அண்மித்துள்ள நிலையில் இதுவரை முள்ளிக்குளம் கிராம மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராம மக்கள் அயல் கிராமங்களான மலைக்காடு மற்றும் காயாக்குழி உள்ளிட்ட கிராமங்களில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மலைக்காடு, காயாக்குழி ஆகிய கிராமங்களில் 250 இற்கும் மேற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் அகதி என்னும் அவல வாழ்வை வாழ்கின்றனர். இது தவிர 175 வரையான குடும்பங்கள் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்வதாகவும் மேலும் பல குடும்பங்கள் ஆங்காங்கே சிதறி வாழ்வதாகவும் முள்ளிக்குளம் கிராம மக்கள் முறையிடுகின்றனர். இவ்வாறாக முள்ளிக்குளம் கிராம மக்கள் அகதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கக் கடற்படையினரும் வனவளத்திணைக்களத்தினரும் இணைந்து முள்ளிக்குளம் கிராமத்தை முற்றாக அபகரித்துவைத்துள்ள நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக முள்ளிக்குளம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் மக்களுக்குரிய நெற் செய்கைக்குரிய காணிகள், தோட்டக் காணிகள், குடியிருப்புக்காணிகள், நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளடங்கலாக 1500க்கும் அதிகமான ஏக்கர்கள் வனவளத்திணைக்களத்தாலும் கடற்படையாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனக் குளங்களைப் பொறுத்தவரையில் சின்னத்தனக்கன் குளம், பெரியதனக்கன்குளம், பரவெளிக்குளம், பாலடிக்குளம், செட்டியார்குளம், அரக்குளம், புதுக்குளம் உள்ளிட்டவை முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. அதேவேளை, தமிழ் மக்களுடைய காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தோட்டப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கு 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது அமைக்கப்பட்டு வழங்கப்பட்ட வீடுகளில் கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த இடங்களும் முற்றாக அபகரிக்கப்பட்டுள்ளன . இத்தகைய சூழலில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் கிராமத்தை விடுவிப்புச் செய்வதுடன் தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவருகின்றனர். குறிப்பாக தம்மை மீள் குடியமர்த்துமாறும் முள்ளிக்குளம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் கடந்த 2017 ஆண்டு காலப்பகுதியில் இரண்டுமாத காலம் தொடர்ச்சியாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் பலனாக அப்போதைய ஆளுநர் வருகை தந்து காணிகள் விடுவிப்புச் செய்வதாக உத்தரவாதமளிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் 77 ஏக்கர் காணிகளை விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு காணிகளும் மக்களால் துப்புரவாக்கப்பட்டுள்ளன. மக்களால் துப்புரவு செய்யப்பட்ட பகுதிகளைத் தீயிட்டு கொளு த்துவதற்கு கடற்படையினர் இடையூறு ஏற்படுத்தியதையடுத்து அந்தக் காணிகள் துப்புரவு செய்வதும் கைவிடப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் அந்தக் காணிகளில் மீள் குடியேறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன . இவ்வாறாக முள்ளிக்குளம் கிராமத்தில் மக்கள் எவரும் மீள் குடியமர்த்தப்படாத நிலையிலும் அங்கு பாடசாலை இயங்கி வருகின்றது. அங்குள்ள தேவாலயத்திற்கும் மக்கள் சென்று வருகின்றனர். முள்ளிக்குளம் பகுதியில் இயங்கிவருகின்ற முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 42 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மலைக்காட்டுப் பகுதியில் வசிக்கின்ற முள்ளிக்குளத்தை சேர்ந்தவர்களுடைய பிள்ளைகளே முள்ளிக்குளம் பாடசாலைக்குக் காலையில் சென்று மாலையில் திரும்புகின்றனர். அதேபோல், முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பரலோகமாதா தேவாலயத்துக்கும் மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறாக தமது சொந்த இடத்துக்குச் சுற்றுலாப் பயணிகளைப் போல, சென்று வருகின்ற அவலத்தைச் சுமந்து அகதி வாழ்க்கையை முள்ளிக்குளம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தாம் வாழ்ந்த, தவழ்ந்த, விளையாடிய, பயிர்செய்த நிலங்கள் அனைத்தும் கண்முன்னே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்க தமது நிலத்தில் மீள் குடியேற்ற முடியாத நிலையில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் அகதி என்னும் அவல வாழ்வுக்கு முடிவு கட்டப்படவேண்டும். அந்த மக்கள் உடன் மீள் குடியமர்த்தப்பட வேண்டும். முள்ளிக்குளம் மக்களை மீள் குடியமர்த்துவதற்கு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/முள்ளிக்குளம்-கிராமத்தை-முற்றாக-அபகரித்து-விட்டனர்/175-364454
2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!
2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா! அரசாங்கத்தின் மற்றும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் 4,418,404 பாடசாலை மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு தீர்மானிக்கப்பட்ட சகல சீருடைகளையும் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட இணக்கப்பாடுகளுடன் சீருடைகளைப் பரிமாறும் நிகழ்வு நேற்று (11) பத்திரமுல்ல கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது. கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, சீன தூதுவர் கிவ் ஸெங்க்ஹொங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 2026ஆம் ஆண்டுக்கான பிள்ளைகளை வழங்குவதற்கு இணக்கத்தை தெரிவிக்கும் சான்றிதழை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ மற்றும் சீன தூதுவர் கிவ் ஸெங்ஹொங் இடையே இடம்பெற்றது . இங்கு கருத்து தெரிவித்த கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரை சனவரி “2025ஆம் ஆண்டுக்காக 11.82 மில்லியன் மீட்டர் துணி சீனாவிடம் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனால் முழு தேசிய அவசியத்தவையும் பூரணப்படுத்துவது போல் நாடு முழுவதும் உள்ள 4.6 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 5.17 வில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி பங்களிப்பு, சிறுவர்கள் முதல் தேசிய பரீட்சைக்காக மாணவர்கள் வரை ஒவ்வொரு பிள்ளைக்கும் கௌரவம் மற்றும் சமத்துவத்துடன் கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்காக இவ்வாறான பங்களிப்பை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டும்” இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் 2026 ஆம் ஆண்டுக்கான சீருடைகளை வழங்குவது தொடர்பாக விரைவாக பதில் அளித்த இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையே காணப்படும் அந்நியோன்ய நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஏற்பாடாகவும் இது காணப்படுகிறது. இந்நிகழ்வில் சீன தூதுவராலயத்தின் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1446908
கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு!
கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு! கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக இலங்கையை வந்தடைந்த பயணியிமிருந்தே இந்த பாம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினால் இந்த மீட்பு மேற்கொள்ளப்பட்டது. 40 வயதுடைய அந்தப் பெண் பயணி, தனது பொதிகளில் பாம்புகளை மறைத்து வைத்திருந்தார். https://athavannews.com/2025/1446891
தமிழ் டயஸ்போராக்களுக்காக மஹிந்தவின் மாளிகை பறிப்பு; புரளியைக் கிளப்புகிறார் சரத் வீரசேகர!
தமிழ் டயஸ்போராக்களுக்காக மஹிந்தவின் மாளிகை பறிப்பு; புரளியைக் கிளப்புகிறார் சரத் வீரசேகர! பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார் . மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- மஹிந்த ராஜபக்சவை அரச மாளிகையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் பிரிவினைவாதத் தமிழ் டயஸ்போராக்களே திருப்தியடைவார்கள். அவர்களுக்கே இன்றைய நாள் மகிழ்ச்சியைத் தரும் நாளாகும். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச என்பவர் சாதாரண நபர் கிடையாது. முழு உலகமுமே தோற்கடிக்க முடியாது எனக் கூறிய புலிகள் அமைப்பைத் தோற்கடித்து 30 வருடகாலப் போரை முடிவுக்கு கொண்டுவந்தவர். மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கிய தலைவர் அவர் .நாட்டில் அபிவிருத்திகளை ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட தலைவருக்கு இவ்வாறா நன்றிக்கடன் செலுத்துவது- என்றார். https://newuthayan.com/article/தமிழ்_டயஸ்போராக்களுக்காக_மஹிந்தவின்_மாளிகை_பறிப்பு;
நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி!
நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனுவை சட்டத்தரணி விஜித குமார தாக்கல் செய்துள்ளார். இதில், CEB உள்ளிட்ட ஒரு குழு பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று (11) தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் அசாதாரண நடவடிக்கை இலங்கையில் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்று நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி சட்டத்தரணி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://athavannews.com/2025/1446888
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை! இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என்று தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு மேற்கண்ட தண்டனையை வழங்கியது. 2022 தேர்தலில் இடதுசாரி போட்டியாளரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், ஆட்சியில் தொடர்ந்தும் இருப்பதை நோக்காக் கொண்டு ஒரு சதித்திட்டத்தை வழிநடத்தியதற்காக அவர் குற்றவாளி என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். நான்கு நீதிபதிகள் அவரை குற்றவாளி எனக் கண்டறிந்தனர், ஒருவர் அவரை விடுவிக்க வாக்களித்தார். போல்சனாரோவின் சட்டத்தரணிகள் இந்த தண்டனை அபத்தமானது எனக் கூறியுள்ளதுடன், மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு, 2033 வரை அவர் பொதுப் பதவிக்குப் போட்டியிடுவதையும் தடை செய்தது. வெளிநாடு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போல்சனாரோ, இந்த இறுதி கட்ட விசாரணையில் நேரில் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்ப்பின் மூலமாக 70 வயதான போல்சனாரோ, இப்போது தனது வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்கும் துரதிர்ஷ்டவசமான வாய்ப்பை எதிர்கொள்கிறார். அவரது சட்டத்தரணிகள் அவரை சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று வாதிடுவார்கள் – அதே போல் குறைந்த தண்டனைக்கு வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது கடினமாக இருக்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இது பொதுவாக ஐந்து நீதிபதிகளில் இருவர் விடுவிக்க வாக்களித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். போல்சனாரோ ஐந்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இவை அனைத்தும் 2022 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயன்றது தொடர்பானது. ஆனால், 2026 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க இது வடிவமைக்கப்பட்டதாக அவர் கடந்த காலத்தில் கூறியிருந்தார். ஏற்கனவே தனித்தனி குற்றச்சாட்டுகளின் பேரில் பொதுப் பதவியில் இருந்து அவர் தடை செய்யப்பட்டுள்ளார். சதித் திட்டம் தொடர இராணுவத்திடம் போதுமான ஆதரவைப் பெறத் தவறிய போதிலும், ஜனவரி 8, 2023 அன்று போல்சனாரோவின் ஆதரவாளர்களால் அரசாங்க கட்டிடங்களைத் தாக்குவதில் மும்முரமாக இருந்தனர். இதன்போது சுமார் 1,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். https://athavannews.com/2025/1446881
என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
Full document:
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
Ever ready.
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
முன்பு சிலர் என்னை மகளிர் உலகக் கிண்ண போட்டியை நடாத்தும் படி கேட்டிருந்தார்கள். சிலர் பங்கு பற்றுவதாக சொன்னார்கள். சொன்னவர்கள் இப்பொழுதும் பங்கேற்க விருப்பம் என்றால் நான் நடாத்துகிறேன்
டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
ஆம் இன வாதம் நியாயமானதுதான். கறுப்பினத்தவர் மீதுள்ள வெள்ளையின இனவாதம் நியாயமானது. பலதீனர்மேல் இஸ்ரேலியர்களின் இனவாதம் இயல்பானது. உலக நாடுகளின் அமோக ஆதரவுள்ள சிங்களவரின் இனவாதம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலக அரசியல் வரலாறு தெரியாதவர்களால் இதனை உணர முடியாது. அரை நூறாண்டுகளாக மிகப் பெரும் விலை கொடுத்துப் போராடி எல்லாவற்றையும் இழந்து இன்று எங்கு வந்து நிற்கிறோம் பார்த்தீர்களா ?
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
ஐயா உங்களை மாதிரியே நானும். ஆனால் வயதில் குறைந்தவன்.
தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை
வந்த புதிதில் மேலைத்தேய கழிவறைகளை ஆசிய முறையில் பயன்படுத்த வெளிக்கிட்ட பலரின் அனுபவங்களை சொல்லவா? சறுக்கி விழுந்த அனுபவங்களை எடுத்துரைக்கவா? 😅 அதிலும் ஆரம்ப காலங்களில் புலம்பெயர்ந்து வந்தவர்களின் வீடுகளில் இன்றும் கொமட் அருகில் வெறும் கொக்கோ கோலா போத்தில் கண்கொள்ளா காட்சி தருவதை விபரிக்கவா?😂
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
ஒருவனை மாதிரி ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என சொல்ல கேள்விப்பட்டுளேன். அதே போல் உடையாரை மாதிரி இன்னொருவன் இந்த குமாரசாமி 🙂 எங்களை மாதிரி யாராவது இங்கே இருக்கின்றீர்களா? இருந்தால் வந்து ஒரு வணக்கம் சொல்லுங்கள்.🤣
கொஞ்சம் ரசிக்க
இளையராஜாவை அனிருத்துடன் ஒப்பிடுவதே ஒரு வித அபத்தம்.
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!
வேறொரு கோணத்தில் அரசியல் செய்து பாராளுமன்றம் சென்றவர். ஜெனீவாவையும் பார்த்து வரட்டும். என்ன செய்கின்றார் என பொறுத்திருந்து பார்க்கலாம். எத்தனையோ மொள்ளமாரி முடிச்சவிக்கிகள் ஜெனிவா போய் கொக்கரித்து விட்டார்கள். இவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்பது என் கருத்து.
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed