4 days 3 hours ago
என்னைப்பொறுத்த வரைக்கும் டொனால்ட் ரம்ப் அவர்களும் ஒரு வித இனவாதிதான். அது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. அதிலும் அந்த இனவாதிகளுக்கும் அமோக ஆதரவு உண்டு. ஏன் எதற்கு என்பது பற்றியும் சிந்திக்க வேண்டிய விடயம்.
4 days 3 hours ago
சீனாவை தவிர இந்தியாவை சுற்றியுள்ள எந்த நாடுகள் நிம்மதியாக இருக்கின்றன என நான் யோசிக்கின்றேன்.
4 days 3 hours ago
எந்த சிங்கள இனவாத தலைவர்களை ஈழத்தமிழர்கள் கொண்டாடவில்லை? ஏதோ ஒரு நம்பிக்கை நப்பாசையில் எல்லோரையும் தலைமேல் வைத்து கொண்டாடி விட்டு இன்றும் இலவுகாத்த கிளி போல் காத்திருக்கின்றார்கள்.
4 days 3 hours ago
டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்திற்காக வான் டெர் லேயனை கடுமையாக விமர்சிக்க நாடாளுமன்றத் தலைவர்கள் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஐரோப்பிய ஆணையத் தலைவர் தனது டிரான்ஸ் அட்லாண்டிக் ஒப்பந்தத்தை ஆதரித்த பிறகு ஐரோப்பிய சட்டமியற்றுபவர்களிடமிருந்து கடுமையான சவாலைச் சந்திக்கிறார். பகிர் இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10, 2025 அன்று பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 'ஸ்டேட் ஆஃப் தி யூனியன்' விவாதத்தில் உர்சுலா வான் டெர் லேயன் உரையாற்றுகிறார். | ரொனால்ட் விட்டெக்/EPA செப்டம்பர் 10, 2025 12:34 pm CET அன்டோனியா ஜிம்மர்மேன் மற்றும் கோயன் வெர்ஹெல்ஸ்ட் மூலம் புதன்கிழமை தனது வருடாந்திர யூனியன் உரையில் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்த பின்னர், ஐரோப்பிய சட்டமியற்றுபவர்கள், கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் மோசமான, ஒருதலைப்பட்ச வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக குற்றம் சாட்டினர். "நீங்கள் டிரம்புடன் நியாயமற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது ஐரோப்பா எங்கே இருந்தது?" என்று சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகக் கட்சித் தலைவர் இராட்சே கார்சியா பெரெஸ் கேட்டார். வான் டெர் லெயனின் உரைக்கு பதிலளித்த அவர், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகளில் 15 சதவீத வரியை ஏற்றுக்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவையும், அதே நேரத்தில் அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மீதான அதன் சொந்த வரிகளை ரத்து செய்வதையும் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அழைத்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலோபாய சுயாட்சி, "ஒரு கோல்ஃப் மைதானத்தின் கீழ்" புதைக்கப்பட்டுள்ளது என்று கார்சியா பெரெஸ் கூறினார். ஜூலை மாதம் ஸ்காட்லாந்தில் உள்ள டர்ன்பெர்ரி ரிசார்ட்டில் வான் டெர் லேயன் டிரம்புடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை அவர் குறிப்பிடுகிறார் . கடினமான சூழ்நிலைகளில் செய்யக்கூடிய சிறந்த ஒப்பந்தம் இது என்று வான் டெர் லேயனும் அவரது உதவியாளர்களும் பாதுகாத்துள்ளனர் . இருப்பினும், பல விமர்சகர்கள் இது கூட்டணியை பொருளாதார அடிமைத்தனத்தின் சகாப்தத்திற்கு இட்டுச் செல்லும் என்று அஞ்சுகின்றனர் . புதன்கிழமை உரைக்கு முன்னதாக, ஐரோப்பிய சோசலிஸ்டுகள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர் - மற்றவர்கள் ஒப்பந்தத்தை விமர்சிக்க அல்லது குறிப்பிட்ட கவலைகளை வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். பாராளுமன்றத்தின் இடது மற்றும் தீவிர வலது பக்கங்களில், டிரம்புடனான போர் நிறுத்தம் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இடதுசாரிகளுக்கான ஜெர்மன் தலைவர் மார்ட்டின் ஷிர்தேவன், "அதிக வர்த்தகத்துடன் அதிக திறனை எதிர்த்துப் போராடுவது ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியின் நெருப்பில் தீப்பொறிகளை வீசுவது போன்றது" என்று கூறினார். இடது-வலது பைல் ஆன் பசுமைக் கட்சியின் பாஸ் ஐக்ஹவுட் மற்றும் ஐரோப்பாவிற்கான வலதுசாரி பேட்ரியாட்ஸின் ஜோர்டான் பார்டெல்லா இருவரும், ஐரோப்பிய ஒன்றியம் 750 பில்லியன் யூரோக்களுக்கு அமெரிக்க எரிசக்தியை - பெரும்பாலும் புதைபடிவ அடிப்படையிலான - வாங்கும் என்ற வான் டெர் லேயனின் வாக்குறுதியை மிகவும் மாறுபட்ட காரணங்களுக்காக கடுமையாக சாடினர். காலநிலை மாற்றத்திற்கு மத்தியில், இந்தப் பணத்தை ஐரோப்பிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஐக்ஹவுட் வாதிட்டார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அந்தத் தொகையை இருமுவார்கள் என்று பர்டெல்லா பொய்யாகக் கூறினார். உண்மையில், இந்த எண்ணிக்கை முதலீடுகள் மற்றும் சந்தை முன்னேற்றங்களின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது, கடினமான ஒப்பந்தங்களை அல்ல. தாராளவாத ரினீவ் ஐரோப்பா குழுவின் தலைவரான வலேரி ஹேயர், தனது மதிப்பீட்டில் குறைவான கடுமையானவராக இருந்தாலும், வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறை அதிகாரம் மற்றும் சுயாட்சியில் "தொடர்ந்து உறுதியாக நிற்க" வான் டெர் லேயனை வலியுறுத்தினார். டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் விதிகளை மீண்டும் மீண்டும் தாக்கி, அது அமெரிக்க நிறுவனங்களை பாதகமாக ஆக்குகிறது என்று வாதிட்டார். ஐரோப்பிய மக்கள் கட்சித் தலைவர் மான்ஃப்ரெட் வெபர் - வான் டெர் லேயனின் அரசியல் கூட்டாளியும் சக ஜெர்மன் பழமைவாதியுமான - வர்த்தக ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதில் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது, "ஸ்காட்லாந்திற்கு மாற்று என்ன?" என்று கேட்டார். தனது உரையில், வான் டெர் லேயன், ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு சட்டமியற்றுபவர்களுக்கு அழைப்பு விடுத்தார் . அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மீதான ஐரோப்பிய ஒன்றிய வரிகளை நீக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற அவர்களின் வாக்குகள் தேவைப்படும், இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐரோப்பிய கார்கள் மீதான வரிகளைக் குறைக்கும். "கோடை காலத்தில் நாங்கள் ஒப்புக்கொண்ட ஒப்பந்தம் பற்றி நான் பல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்," என்று அவர் தனது ஒரு மணி நேர உரையில் கூறினார். "ஆரம்ப எதிர்வினைகளை நான் புரிந்துகொள்கிறேன் ... ஆனால் நாங்கள் பெற்ற விதிவிலக்குகளையும் மற்றவர்கள் மேலே வைத்திருக்கும் கூடுதல் விகிதங்களையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டால் - எங்களிடம் சிறந்த ஒப்பந்தம் உள்ளது. எந்த சந்தேகமும் இல்லை." "உலகளாவிய பாதுகாப்பின்மை கடுமையான காலகட்டத்தில் அமெரிக்காவுடனான நமது உறவுகளில் இந்த ஒப்பந்தம் முக்கியமான ஸ்திரத்தன்மையை வழங்குகிறது," என்று அவர் MEPக்களிடம் கூறினார். "அமெரிக்காவுடனான முழு அளவிலான வர்த்தகப் போரின் விளைவுகளைப் பற்றி சிந்தியுங்கள்" இருப்பினும், டிரம்ப் மேலும் கோரத் தயாராக உள்ளார், மேலும் செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவளிப்பதையும், உக்ரைனுக்கு எதிரான அவரது போரை கைவிடுவதற்கும் அழுத்தம் கொடுக்க சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் மீதும் 100 சதவீத வரிகளை விதிக்க வேண்டும் என்று கூறியதாக, பைனான்சியல் டைம்ஸ் மற்றும் பிற செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வான் டெர் லேயன் தனது உரையில், அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை, ஆனால் ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். "எங்களுக்கு கூடுதல் தடைகள் தேவை," என்று அவர் கூறினார், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியை விரைவாக நிறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் 19வது சுற்று நடவடிக்கைகளைக் குறிப்பிடுகிறார். இந்த திட்டம் இந்த வாரம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும். https://www.politico.eu/article/parliament-chief-savage-ursula-von-der-leyen-donald-trump-trade-deal/
4 days 4 hours ago
அது என்றால் உண்மை தான். அநுரகுமார திசாநாயக்க வை காதலிக்கும் மக்கள் என்று தமிழர் ஒருவர் காணொளி தயாரித்துள்ளார்.
4 days 4 hours ago
நேபாளத்தில் பல்பொருள் அங்காடி கடைகளுக்குள் புகுந்து வாஷிங்மெஷின்கள், குளிர்சாதன பெட்டிகள், தொலைகாட்சிகள் , AC மெசின்களை கொள்ளையடித்தவர்கள் பொதுச் சொத்துகள் ,பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம், முன்னாள் பிரதமர் வீட்டுக்கு தீ வைத்தவர்கள் அவர் மனைவியை எரித்தவர்கள் அடங்கிய Gen-Z Protests குழு நேபாளத்தை இனி சிறப்புற ஆட்சி செய்யும்.
4 days 5 hours ago
கவலை வேண்டாம். கொலையாளி விரைவில் உயிருடனோ அல்லது உயிர் இல்லாமலோ கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்.
4 days 5 hours ago
அவர் தனது நகர்வுகளை நன்றாகவே செய்கின்றார் போல் உள்ளது.
4 days 6 hours ago
கொழும்பில் மஹிந்தவுக்கு 4 வீடுகள் Thursday, September 11, 2025 செய்திகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். குறித்த 4 வீடுகளில் ஒன்றைப் பார்வையிட வருமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்று பார்வையிடவில்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீடு வழங்க முன்வந்தோரில் தமிழர் ஒருவர் அடங்குவதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார். இந்த 4 வீடும் அவருடைய காசில் வாங்கினதுதான் ...இந்த தமிழர் ஆரெண்டு அறிந்தால் ..அவர்தான் கனடானிலை திருமண மண்டபம் நடத்திற ஆளோ தெரியாது..ஒன்றல்ல கன ஆதனங்கள் ...கோட்டாவின்...மகிந்தவின் காசில் ஓடுது..
4 days 6 hours ago
வரவேற்பை பார்க்க அடுத்த சனாதிபதி நாமல்தான் போல கிடக்கு.. ..நம்ம சனம்தான் அனுரவை தலையில் வைத்து கொண்டாடுது..
4 days 6 hours ago
நாம் வாழும் காலத்திலே இவற்றையெல்லாம் பார்க்க காணக் கண் கோடி வேண்டும். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று.....கொல்லும். ...இப்போது எல்லாம் சுடச்சுட ....
4 days 7 hours ago
பெரிய கூட்டமே போகும் போல. இடையில் முதலமைச்சர் பதவியும் கனவில் வந்து போகிறது.
4 days 8 hours ago
4 days 9 hours ago
பல்லுக்குள் சிக்கிய பல்லியும் பாய்ந்து ஓடி வாழ வழி தேடுது ....... ! 😃
4 days 9 hours ago
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 Sujatha Jaganathan ·teonSpodsr 0au5ug3221739g036h5cg8392fh9af7l5f665f4uuhc1h7ial · படித்து ரசித்த ஒரு அருமையான கதை. ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் . ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார். மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் . கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன. ''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான். ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே, "அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு." அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்றார். இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது. "அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான். ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே ! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? " அவமானம் பொங்கியது . கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் . ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா?" அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு." ஆசிரியர் சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்...!💝" Voir la traduction
4 days 9 hours ago
4 days 9 hours ago
இந்தியாவின் அண்டைநாடுகளில் மக்கள் புரட்சியின் மூலம் ஊழல்ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர். அதற்கான முதல்விதையை சிறிலங்கா துவக்கியிருக்கிறது. பெரும் ஊழல் பெருச்சாளிகள் அரசியிலில் கோலோச்சும் இந்திய அரசியலில் எப்போது மக்கள் புரட்சி வெடிக்கும். மன்னராட்சி நடத்திவரும்குடும்ப ஆட்சியாளர்கள் எப்போது துரத்தப்படுவார்கள். குறிப்பாக தமிழகத்தில் குடும்ப ஆட்சியாளர்களுக்கு எப்போது முடிவுக்கு வரும். தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லியே குடும்ப ஆட்சிநடத்திவருபவர்களை ஆட்சியலிருந்து அகற்றுவதுமட்டுமல்ல அவர்களால் நிர்வகிக்கப்படும் முறையற்ற சொத்துக்களைப் பறிமுதல்செய்யும் காலம் எப்போது வரும்? தமிழகம் இதற்கு பிள்ளையார் சுழி போடுமா?
4 days 9 hours ago
4 days 9 hours ago
பல்லக்கு ஏறுவதும் வாயாலே! பல்லுடைபடுவதும் வாயாலே! அவருடைய இனவாதப் பேச்சுக்கள் சகிக்க முடியாத ஒருவரே அவரைச் சுட்டிருக்கிறார். அமெரிக்க காவல்துறையால் சுட்டவரைப் இன்னும் பிடிக்க முடிவில்லை என்பது யாரும் அவரைக்காட்டிக் கொடுக்க விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.
4 days 10 hours ago
சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எதிராக இரண்டு வாக்குகள் பதிவாகி, வாக்கு என்ற ஒருமை நீங்கிப் பன்மையாகி, அதற்கொரு மரியாதை கிடைத்திருக்கும். 🤔
Checked
Tue, 09/16/2025 - 01:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed