புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 days 20 hours ago
Sathiya Kumaran · டியர் மந்தனா இந்த மாதிரி Consistent பேட்டிங் எல்லாம் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் உங்களை தவிர வேற யார்க்கிட்டயும் நான் பாரத்ததே இல்லை! இனிமேல் இன்னொரு வீராங்கனையிடம் பார்க்க போகிறானே என்பதும் தெரியவில்லை! பெண்கள் கிரிக்கெட்டில் உலகின் டாப் அணிகளில் இரண்டு அணிகளோடு அரைசதம், இன்னொரு அணியோடு சதம் என்று உலககோப்பையில் அடிக்கிறதெல்லாம் உண்மையாலுமே வேற லெவல் 🔥" நம்பர் 1 பேட்டர்ன்னு சும்மாவா? அதற்கு உண்டான தரம் வெளிப்படுமே! அந்த வெளிப்பாடு தான் மந்தனாவின் பேட்டிங்! நாங்க ஆவலுடன் எதிர்பார்த்த அந்த 18 ஆம் நம்பர் ஜெர்ஸி ஏமாற்றினாலும், அதற்கும் சேர்த்து வைத்து இந்த 18 ஆம் ஜெர்ஸி நான் இருக்கேன்னு வட்டியும் முதலுமாக பேட்டிங்கில் காட்டி இருக்கிறீர்கள் 👏" பெண்கள் கிரிக்கெட்டில் பல வீராங்கனைகள் வருவார்கள் ஆடுவார்கள் செல்வார்கள்! ஆனா மந்தனா அப்படி கிடையாது! பின்னாளில் வரலாற்றை எடுத்து பார்க்கும் போது ஸ்மிரிதி மந்தனாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும் 💯" இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணியின் அரசனாக அவர் இருக்கும் போது பெண்கள் கிரிக்கெட்டில் அரசியாக நான் இருக்கிறேன் என்று நிரூபித்து உள்ளீர்கள் ! ஒருநாள் போட்டிகளில் மந்தனாவின் 14-வது சதம் இதுவாகும்! இந்த உலகக்கோப்பையில் ஒரு வீராங்கனையின் முதல் சதமாகும்! ஒட்டுமொத்த ஒருநாள் உலககோப்பையில் அவர் அடிக்கும் மூணாவது சதம் இதுவாகும்!! அதுமட்டுமின்றி பெண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா உள்ளார்! முதல் இடத்தில் ஆஸி வீராங்கனை 15 சதங்களுடன் மெக் லானிங் உள்ளார்! Queen of Indian Womens Cricket 🏏" #smiritimandhana #TeamIndia #INDIANWOMENSCRICKETTEAM #INDWvsNZW #womensworldcup2025 #cricketlovers Voir la traduction

‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்

3 days 21 hours ago
என்ன. ஒரு. அழகான. விளக்கம். நீங்கள். ரணிலுக்கு. உதவியளாராக. இருக்க. பூரண தகுதியுண்டு. இலங்கையில். இராணுவத்தை. தாண்டி. எதுவும். செய்ய. முடியாது. இது. தான். போராட்டம். பெற்று. தந்த. தீர்வு. ஆகும் இந்த. சைக்கிள். ஒட்டத்தை. இராணுவம். நல்ல முறையில். பயன்படுத்தி. இலவசமாக. விளம்பரம். பெற்றுவிட்டது. சர்வதேசத்தில். நம்ம. ஆள்கள். பயன்படுத்தவில்லை.

கைகூ வடிவில்!

3 days 21 hours ago
இனம் என்பது இசைந்தே இணைவது… தடி கொண்டு தட்டி வைக்க… கையிர் கொண்டு கட்டி வைக்க… அது பட்டியில் கட்டும் வகை அல்ல… தடி எடுத்தால்… தண்டலும் இல்லை… பொங்கலும் இல்லை… பானையும் இல்லை. -வரலாற்றின் பாடம்-

‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்

3 days 21 hours ago
அது வேறொன்றுமில்லை ......அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள், இவர்கள் ஒற்றுமையில் வேற்றுமையாய் இருக்கிறார்கள் ........!

‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்

3 days 23 hours ago
சூரன் ஏன் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்களை சந்திக்கவில்லை? சிங்கள ராணுவத்தை சந்தித்தார்? துரோகி பட்டம் ரெடி

மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன்

4 days ago
மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன் ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த முதலாவது மகாவம்சம் கி.மு 483 தொடக்கம் கி.பி 362 வரையான சுமார் 845 ஆண்டுகால இலங்கையின் சரித்திரத்தைக் கூறுகிறது. இவ்வாறு உலகிலேயே தொடர்ச்சியாக தன் வரலாற்றை எழுதிவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. பாளி மொழியில் மகாவம்சம் முதலில் எழுதப்பட்டது. உலகிலேயே தொடர்ச்சியாக சுமார் 2600 ஆண்டுகால சரித்திரத்தை எழுதிவருகிற ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. அதன் மீதான விமர்சனங்கள், சரிபிழைகளுக்கு அப்பால் அது வரலாற்று மூலதாரங்களுக்கு துணை செய்திருக்கிறது என்பது உண்மை. அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அப்படி ஒரு வரலாற்று புனித நூல் இருப்பதை உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள் ஆங்கிலேய அறிஞர்கள். அதிலிருந்து பலர் பாளி மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். முதன் முதலில் 1837 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோதும் அதன் பின்னர் அதில் உள்ள குறைகளின் காரணமாக இன்னும் சிலரால் வெவ்வேறு காலங்களில் அதன் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இறுதியில் 1908 ஆம் ஆண்டு வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஜேர்மன் மொழிபெயர்ப்பு பின்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த மொழிபெயர்ப்பே இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியாக உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே இலங்கை அரசால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியும் கூட. 1877 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் சிங்களத்தில் வெளிவந்தது. 1872 இல் புதிய தேசாதிபதியாக நியமனமான கிரகெரி டர்னரின் மகாவம்சப் பிரதியைப் பார்த்து வியந்ததுடன் அதனை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பணியை 1874 இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடமும், பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவ ரக்சித்த பண்டிதரிடமும் ஒப்படைத்தார். ஆனால் டேர்னரின் பிரதி எவ்வாறு பொதுவில் எற்றுக்கொள்ளப்படவில்லையோ அதுபோலவே அதை ஆதாரமாகக் கொண்ட இவர்களின் பிரதியும் பொதுவில் சிங்கள வரலாற்று அறிஞர்களால் மூலாதாரமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் மிகச் சமீபத்தில் எனது தேடல்களில் போது புதுத் தகவல் ஒன்றை சமீபத்தில் கொண்டுபிடிக்க முடிந்தது. அதாவது முதன்முதலில் மகாவம்சம் மொழிபெயர்க்கப்பட்டது இலங்கையிலோ இலங்கை மொழியிலோ இல்லை. தாய்லாந்தில் சியாமிஸ் மொழியிலேயே மொழிபெயர்க்கபட்டிருக்கிறது என்கிற தகவல் தான் அது. அதை தனியான கட்டுரையாக பின்னர் தருகிறேன். இந்த வரிசையில் தமிழில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன என்பது தான் இக்கட்டுரையின் அடிபட்டை நோக்கம். மகாவம்சத்தின் முதலாவது தொகுதியைத் தவிர வேறெந்தத் தொகுதியும் தமிழில் மிகச் சமீபகாலம் வரை வெளிக்கொணரப்பட்டதில்லை. அந்த முதலாவது தொகுதியை மாத்திரம் ஐந்து வெவ்வேறு நபர்களால் கொணரப்பட்டிருக்கிற போதும் அவை எதுவும் முழுமையானவை அல்ல. அவையும் கூட உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் அல்ல. சுருக்கிய பொழிப்புரையாகவோ, அல்லது சொந்த விளக்கவுரையாகவோ, புதினக் கதைகளாகவோ அமைந்துள்ளவை. தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். அவ்வாறு இதுவரை தமிழில் வெளிவந்த நூல்களை இனி பார்க்கலாம். மகாவம்சம் – சங்கரன் – 1962 இன்று நம்மிடையே தமிழில் காணக்கிடைக்கிற முதல் பிரதி 1962 ஆம் ஆண்டு “மகாவம்சம்” இலங்கைத் தீவின் புராதன வரலாறு என்கிற தலைப்பில் சங்கரன் வெளிக்கொணர்ந்த நூல் பிரதியே. சென்னையில், மல்லிகை வெளியீடாக 410 பக்கங்களில் இது வெளிவந்திருக்கிறது. இப்பிரதியில் மகாவம்சத்தின் மொத்த விபரங்களும் வெளியாகவில்லை. ஆனால் சுருக்கிய விபரங்கள் இதில் அந்தந்த தன இலக்கங்களின் பிரகாரம் வெளியாகியுள்ளதைக் காணலாம். தனக்கு பாளி மொழி தெரியாது என்றும், இலங்கை சர்க்காரால் அதிகாரபூர்வ நூலாக வெளியிடப்பட்ட வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஆங்கிலப் பிரதியிலிருந்தே தமிழ்படுத்தியுள்ளேன் என்று சங்கரன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஈழத்தின் கதை – கே.வி.எஸ்.வாஸ் – 1959 1956 ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள பௌத்தம் மீழெழுச்சி கொண்ட காலத்தில் மீண்டும் மகாவம்சக் கதையாடல் களத்துக்கு வந்த காலம். அதே காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆனந்தவிகடனில் கே.எஸ்.வாஸ். ஈழத்தின் கதை என்கிற தலைப்பில் தொடராக ஒரு புதினத்தை எழுதிவந்தார். மகாவம்சம், ராஜாவலிய போன்றவற்றை அடிப்படியாகக் கொண்டு அது எழுதப்பட்டதாக அதில் கூறப்பட்ட போதும் அது மகாவம்ச சாரத்தை அடியொற்றி ஜனரஞ்சகப்படுத்தி எழுதப்பட்ட புதினக்கதை என்று கூறிவிடலாம். 1959இல் இது 260 பக்கங்களில் நவலட்சுமி புத்தகசாலையின் வெளியீடாக வெளிவந்தது. முதலாவது அத்தியாயத்தின் தலைப்பே “சிங்கன் பிறந்தான்” என்று தொடங்கும். அதேவேளை கல்கி கிர்ஷ்ணமூர்த்தி எழுதிய அணிந்துரையின் அடியில் அது 1950 இல் எழுதப்பட்டதாக காணபடுகிறது. இந்நூல் அதன் பின்னர் பல்வேறு பதிப்புகளைக் கொண்டிருக்கிறது. மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் – கலாநிதி க.குணராசா – 2003 செங்கை ஆழியான் என்கிற பெயரில் ஏராளமான நூல்களை எழுதிய எழுத்தாளர் க.குணராசா அவரது சொந்த பதிப்பகமான கமலா பதிப்பகத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்த 150 பக்கங்களைக் கொண்ட நூல் இது. அந்த நூல் மகாவம்சத்தின் உள்ளடக்கங்களை சுருக்கமாக தன்நுணர்தலின் அடிப்படையில் சுவாரசியமாக தர முயற்சிக்கப்பட்ட நூல் எனலாம். புனைகதைத் துறையிலும் அவருக்கிருந்த அனுபவத்தாலும் ஆளுமையாலும் மகாவம்சத்தையும் சுருங்க சுவாரசியமாக தர முற்பட்டிருக்கிறார். அந்நூலின் ஆரம்பத்திலேயே அவர் தந்திருக்கிற உசாத்துணை நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது அது மகாவம்சத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட நூல் இல்லை என்பது இன்னும் ஊர்ஜிதமாகும். பதிப்புரையிலேயே ஒப்புக்கொண்டதுபோல போல அது “இலங்கை சரித்திரம் குறித்து சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூறும் நூல்”. இதைவிட அவர் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூளவம்சத்தையும் தமிழில் தந்திருக்கிறார். அவரின் “சூளவம்சம்” 2008 ஆம் ஆண்டு வெளியானது கைகர் (Geiger) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த “சூளவம்சம்” இரு தொகுதிகளைக் கொண்டது. ஆங்கில சிறிய எழுத்துக்களில் மொத்தம் 730 பக்கங்களுக்கும் மேற்பட்டது அது. ஆனால் செங்கை ஆழியானின் சுருக்கப்பட்ட தமிழ் பிரதி, பெரிய எழுத்துக்களில் 170 பக்கங்களுக்குள் மாத்திரம் உள்ளடங்கிவிட்டது. கி.பி 362 இலிருந்து 1815 வரையான காலப்பகுதியை பதிவு செய்கிறது. குணராசா இதையும் தன்முனைப்பில் மிகச் சுருக்கிய அறிமுகத்தையே செய்திருக்கிறார். ஆனாலும் இது மட்டுமே தமிழ் மொழியில் எஞ்சியிருக்கிறது. சிங்களத்தில் சூளவம்சத்தின் பல விளக்கவுரைகளைக் காண முடிகிறது. வெவ்வேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கூட புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. சூளவம்சம் என்கிற பேரை அதை முதன் முதலில் தொகுத்த கைகர் வைத்த பெயரேயோழிய அப்படியொன்று இருந்ததில்லை. மகாவம்சத்தை அவர் தொகுத்து முடித்த பின்னர், எஞ்சிய காலத்தை பின் வந்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த பிக்குமார்களால் எழுதிமுடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளைத் தொகுத்து ஒன்றாக்கிய பொது அவர் வைத்த பெயரே சூளவம்சம். இந்தப் பிரதியை தவிர மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியானது வேறெவரும் வெளிக்கொணர்ந்ததில்லை. மகாவம்சம் – உதயணன் – 200? உதயணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஜனரஞ்சக வரலாற்று புனைகதை எழுத்தாளர் எனலாம். அவ்வாறு ஏராளமான ஏராளமான அவர் எழுதியிருக்கிறார். மகாவம்சத்தில் உள்ள கதைகளையும் அவர் தன்னார்வத்தில் சுவைபட புதினக் கதையாக எழுதிருக்கிறார். அதுவும் இரண்டு தொகுதிகளாக கிடைக்கின்றன. முதலாவது தொகுதி 438 பக்கங்களிளும் இரண்டாவது தொகுதி 402 பக்கங்களிலும் சேர்த்து மொத்தம் 90 அத்தியாயங்களாக வெளியிட்டிருக்கிற போதும் மூல மகாவம்சத்தின் அத்தியாயங்களுக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. அவர் மூல மகாவம்சத்தின் உள்ளடக்கத்தையும் முழுமையாக புரிந்துகொண்டவராகத் தெரியவில்லை. உதாரணத்துக்கு அந்நூலின் முன்னுரையில் “வட பாரதத்தினனான விஜயன் தமிழ் மன்னனான பாண்டியன் மகளை மணந்து வம்சத்தை துவக்குகிறான். இவ்வாறு வட இந்திய மண்ணுக்கும் தென்னிந்திய மன்னனுக்கும் மணவினை ஏற்பட்டு அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர்” என்கிறார். ஆனால் மகாவம்சத்தின்படி விஜயன் மணமுடித்த பாண்டிய இளவரசிக்கு எந்த வாரிசுகளும் பிறக்கவில்லை என்கிறது. இப்படியான அடிப்படையான தகவல்களில் அவர் தவறிழைத்திருக்கிறார் என்பதை அவரின் முன்னுரை விளக்கத்தில் இருந்து நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதைத்தவிர அவர் மகாவம்சத்தின் கதைகளில் இருந்து துட்டகைமுனுவின் தாயாரை கதாநாயகியாகக் கொண்டு “விகாரமகாதேவி” என்கிற 1028 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலையும் 2015ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர் “சிங்களத்துப் புயல்” எனும் 200 பக்க நாவலொன்றையும் 2012 இல் வெளியிட்டிருக்கிறார். வரலாற்றில் ஒரு தடவை இலங்கை அரசனின் படையெடுப்பில் பாண்டிய நாடு கைப்பற்றப்பட்டதாக பதிவுண்டு. 1166 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த நிகழ்வோடு ஒட்டிய தகவல்களைக் கொண்டு அவர் ஒரு புனைகதையை ஆக்கியிருக்கிறார். இக்காலப்பகுதியானது மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூலவம்சமே பதிவு செய்திருக்கிறது. அதேவேளை தனது முன்னுரையில் பேராசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரிகள், சதாசிவ பண்டாரத்தார் ஆகியோரின் நூல்களில் இருந்த தகவல்கள் இந்நூலுக்குப் பயன்பட்டதாக குறிப்பிடுகிறார் அவர். மகாவம்சம் – ஆர்.பி.சாரதி – 2007 ஆர்.பி.சாரதி பல நூல்களை மொழிபெயர்த்தவர். கொடோவே பலரின் வாழ்க்கை சரிதங்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்ட ஒரு எழுத்தாளர். அவர் 2007 ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட நூலே இந்த “மகாவம்சம்”. ஆனால் இந்த நூலும் மகாவம்சத்தை சுருக்கமாக 238 பக்கங்களில் விளக்கமுயன்ற ஒரு சாராம்ச நூலே. மூல நூலின் அதே 37 அத்தியாயங்களைக் கொண்டிருந்தாலும் இந்த சாராம்ச சுருக்க நூலில் செய்யுள் இலக்கங்கள் எதுவுமின்றி நிறைவடைந்துவிடுகின்றன. மகாவம்சம் : ஸ்ரீலங்கா வரலாறு – சாந்திபிரியா – 2008 இந்த நூலை எழுதியவரின் உண்மைப் பெயர் ஜெயராமன். ஒரு ஓய்வு பெற்ற அரச ஊழியர். பவந்த பெரேரா என்கிற ஒரு சிங்கள நண்பரின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த நூலை எழுதி முடித்ததாக அந்நூலில் குறிப்பிடுகிறார். மூல மகாவ்மசத்தின் அதே 37 தொகுதிகளைக் கொண்ட 344 பக்க நூலாக இது காணப்படுகிறது. நூல் வடிவில் அமைந்திருந்தாலும் ஒரு மின்னூல் (ebk) வடிவித்திலேயே இது கிடைத்திருக்கிறது. அச்சில் பதிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணவில்லை. எவ்வாறாயினும் இதுவும் ஏனையவற்றைப் போல மிக சாரம்சப்படுத்தப்பட்ட ஒரு பிரதியாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி அதன் மொழிபெயர்ப்பைப் பார்க்கும் போது இயந்திர மொழிபெயர்ப்பின் வாடை தெரிகிறது. பல சிங்கள கலைச்சொற்களை கூகிள் மொழிபெயர்ப்புகளின் போது தருகிற பிழைகளை அப்படியே காணமுடிகிறது. விகாராக்கள், தடுசேனா (Dhatusena), தூபவம்சா (Thupavamsa), ததுவம்சா, (Dhatuvamsa), வில்ஹம் கீஜர் (Wilheml Geiger), யக்கா இனத்தினர் போன்ற சொற்களை உதாரணத்துக்குக் குர்பஈடலாம். மகாவம்சம்- சிங்களர் கதை – எஸ்.பொ, 2009 ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. சிங்கள ஆங்கிலப் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்தவர்கள் எவருக்கும் புரியும். அந்த ஐந்து தமிழ் பிரதிகளில் ஓரளவு தேறிய பிரதி என்றால் அது எஸ்.பொ. அவர்களின் “சிங்களர் கதை” என்கிற பிரதி எனலாம். அதில் உள்ள சாதகமான அம்சம் என்னவென்றால் குறைந்தபட்சம் மகாவம்ச மூலப்பிரதியிலுள்ள செய்யுள்களின் அதே இலக்கத்தொடர்களுடன் அது ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதே. அதேவேளை அவரின் சொந்த அரசியல் நம்பிக்கைகளை அதில் புகுத்தியிருப்பது அதன் பாதகங்களில் ஒன்று. அதன்படி மகாவம்சத்தின் மீது வினையாற்றுபவர்கள் ஈற்றில் எஸ்.பொவுக்குத் தான் வினையாற்ற நேரிடும். மூல மகாவம்சத்தின் மீது வினையாற்றுவதற்கான வாய்ப்பு அற்றுப் போய் விடுகிறது. மேலும் மூல மகாவம்ச பிரதியுடன் பார்த்தால் இதுவும் சாரம்சப்படுத்தப்பட்ட பிரதியே. இதுவரை எந்தப் பிரதியும் பாளி, சிங்களம், ஆங்கிலம் என எந்த மொழியிலிருந்தும் தமிழ் மொழிக்கு முழுமையான உள்ளடக்கத்தை வெளிக்கொணர்ந்ததில்லை. மேற்படி பிரதிகளும் கூட கைகரின் ஆங்கில நூலை ஆதாரமாகக் கொண்டவை. ஈற்றில் தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. இதைவிட தமிழில் வெளிவந்த மகாவம்சத்தோடு தொடர்புடைய சில நூல்களையும் இங்கே குறிப்பிட முடியும். “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத் தன்மை”, வில்ஹெம் கைகரின் மகாவம்சத்தின் முன்னுரை விரிவான ஒன்று. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அதனை மொழிபெயர்த்து 2002இல் வெளியிட்டார். “எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்” என்கிற நூலை கலாநிதி ஜேம்ஸ் டீ இரத்தினம் ஆற்றிய உரையொன்றை எ.ஜே.கனகரட்னா தமிழில் மொழிபெயர்த்து 1981 இல் ஒரு நூலை வெளிக்கொணர்ந்தார். மகாவம்சத்தில் கூறப்படுகிற எல்லாளனின் சமாதியை துட்டகைமுனுவின் சமாதியாக மாற்றுகிற மோசடியை எதிர்த்து ஆதாரங்களுடன் தர்க்கிக்கிற முக்கிய நூல். “கமுனுவின் காதலி” என்கிற ஒரு நாவலை மு கனகராசன் எழுதி 1970 இல் வெளியிட்டார். மகாவம்சத்தில் துட்டகைமுனு பிரதான கதாநாயகன். பிரதான வில்லனாக எல்லாளனை சித்திரித்திருப்பார்கள். வயதான எல்லாளனுடன் போர்புரிந்து துட்டகைமுனு வென்றாதாக அது கூறுகிறது. அந்த எல்லாளனின் மகளை துட்டகைமுனு காதலித்ததாக ஒரு வாய்மொழி வரலாறு உண்டு. அதையே கனகராசன் ஒரு நாடகமாக எழுதி அதை நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். மகாவம்சத்தின் முதல் இரு தொகுதிகளைத் தவிர அடுத்த மூன்று பாகங்கள் எதுவுமே தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை. என்.சரவணனின் - 6வது தொகுதி முதற்தடவை உள்ளதை உள்ளபடி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டது என்.சரவணனால் மொழிபெயர்க்கப்பட்ட 6வது “மகாவம்சம்” தொகுதியாகும். 1978-2010 காலப்பகுதியைக் கொண்டிருக்கிற இந்த மொழிபெயர்ப்பானது மகாவம்ச வரலாற்றில் உள்ளது உள்ளபடி எந்தவித மேலதிக உட்புகுத்துகையின்றி அப்படியே கொண்டுவரப்பட்ட முதல் மகாவம்சப் பிரதி எனலாம். அதுபோல வரலாற்றில் மூலமொழியில் எழுதப்பட்ட பிரதியிலிருந்து தமிழுக்கு கொண்டுவரப்பட்ட முதல் தொகுதியும் இதுவேயாகும். கலாசார திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகாவம்சக் குழுவினால் 2012 ஆம் ஆண்டு இறுதி பாகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழன் பத்திரிகையில் தொடராக கடந்த ஆண்டு வெளியானது. பின்னர் குமரன் பதிப்பகம் சென்ற ஆண்டு மொத்தம் 700 பக்கங்களில் பெரிய நூலாக வெளியிட்டது. இதற்கு முன்னர் தமிழில் கொணரப்பட்ட மேற்படி மகாவம்சத்தின் முதலாவது தொகுதியின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியிலான வில்ஹெம் கைகரின் நூலை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சிங்களத்தையும் தமிழையும் அரச மொழியாக அரசியலமைப்பு ரீதியில் அதிகாரபூர்வமாகக் கொண்ட அரசு; இலங்கையின் வரலாற்று நூலை தமிழில் இதுவரை வெளியிட்டதில்லை என்பதை கவனிக்குக. தற்போது கலாசார திணைக்களம் தொடங்கியிருக்கும் மொழிபெயர்ப்பு முயற்சியும் முதலாவது தொகுதியைத் தான் செய்யத் தொடங்கியிருக்கிறது. அது முடியவே இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம். அதன் பின்னர் அடுத்து ஐந்து தொகுதிகளும் எமது வாழ்நாளுக்குள் வெளிவருமோ என்னவோ. மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் ஒவ்வொன்றும் விரிவாக ஒப்பிட்டு ஆராயப்படவேண்டியவை. இங்கே அதற்கான அறிமுகத்தை மட்டுமே செய்திருக்கிறேன். நன்றி - தினகரன் - சாளரம் - 12.10.2025 https://www.namathumalayagam.com/2025/10/TamilMahawamsa.html

மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்…

4 days ago
மன்னார் தீவின் மக்களும், உயிரியல் சமூகமும் பெரும் ஆபத்தில்… இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை மின்சார சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒன்றிணைந்து தயாரித்துள்ள காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்தினால் மன்னார் தீவின் மக்களும் அதன் உயிரியல் சமூகமும் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன என்பதை எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அனைத்து காற்றாலை திட்டங்களும் மின்வலு உற்பத்தியை இலக்காகக் கொண்ட ஆய்வுகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன. மன்னார் தீவில் வாழும் மக்களின் எதிர்கால இருப்பு அல்லது உயிரியல் சமூகத்தின் இருப்பு, போன்று மன்னார் தீவிலுள்ள நிலப்பரப்பின் இயற்கையான தன்மை அல்லது அதன் தற்போதைய தேசிய திட்டங்களின் தன்மை குறித்து எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை. கடன் உதவி வழங்குவதை முன்னுரிமையாகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மன்னார் தீவை பசுமை எரிசக்தியின் மையமாக மாற்றுவதற்குத் தேவையான ஆராய்ச்சி அறிக்கைகளை தயாரித்தது. மேலும், மன்னார் தீவின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை திறந்து விடுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இங்கே நிலையான எரிசக்தியைப் பொறுத்தவரை ஆசிய அபிவிருத்தி வங்கி நீதியான நிலைமாற்றம் என்ற கொள்கையில் (Just transition) எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்பது ஒரு பெரிய குறையாகும். எனவே, மன்னார் தீவானது காற்றாலை மின்சக்தி மூலம் நிலைபெறுதகு வலு மையமாக மாற்றப்படும்போது, அங்கு வசிக்கும் மீனவ சமூகங்களுக்கு, மீன்பிடி வளங்களுக்கு,விவசாய சமூகத்திற்கு, விவசாய நிலங்களுக்கு மற்றும் அதன் இயற்கை தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. அதுமட்டுமன்றி, மன்னார் தீவின் உயிரியல் சமூகம் குறித்த சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தாமல், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி பல திட்டங்களை தயாரித்துள்ளது. நிலைபெறுதகு வலுவுடன் தொடர்புடைய நீதியான நிலைமாற்றுக்கொள்கையை மீறுதல் நிலைபெறுதகு வலு மற்றும் அதோடு இணைந்த நியாயமான மாற்றம் என்பது நிலைபெறுதகு வலுவிற்காக மாற்றம் பெறும்போது, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும், இடம்பெயர்விற்கு உட்படும் மற்றும் உரிமைகள் மீறப்படும் சமூகங்கள் மீது கவனம் செலுத்துவதன் மூலம், நியாயம் மற்றும் நீதியை உறுதி செய்வதும், வழமைக்கு மாறான மற்றும் பாதகமான தாக்கங்களைத் தவிர்ப்பதுமாகும். மேலும், முடிவெடுக்கும் பொறிமுறையின் மையத்தில் பாதிக்கப்படும் அனைத்து தரப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படல் வேண்டும். இது பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு எண்ணக்கருவாகும். 2015 டிசம்பர் 12ஆம் திகதி பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் 21ஆவது மாநாட்டில் 196 உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை 2016 செப்டம்பர் 21ஆம் திகதி அங்கீகரித்த ஒரு நாடு என்ற வகையில், அதில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த நீதியான நிலைமாற்றத்திற்கான கருத்தியல் கொள்கைக்கு இலங்கை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைக்கப்பட்ட மாநாட்டின் 26ஆவது மாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இணங்க, நீதியான நிலைமாற்றத்திற்கான பொதுவான கொள்கைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல தரப்பு அபிவிருத்தி வங்கிகள், காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் மற்றும் நீதியான நிலைமாற்றத்திற்கான கொள்கைகளை நிலைநிறுத்துவதாக உறுதியளித்துள்ளன. ஆனால், இலங்கை நிலைபெறுதகு வலுவை நோக்கி நகரும் போது, நிலைபெறுதகு வலு அதிகார சபையோ அல்லது மின்சார சபையோ இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மேலும், மன்னார் தீவை நிலைபெறுதகு வலு மையமாக மாற்றுவதற்கு கடன் உதவி வழங்கும் போது ஆசிய அபிவிருத்தி வங்கி இதில் கவனம் செலுத்தவில்லை. இதன் விளைவாக, மன்னார் தீவு மக்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மன்னார் தீவின் வாழ்வியல் மற்றும் இயற்கை வளங்களை அழிக்கும் நிலைபெறுதகு வலு அதிகார சபையின் திட்டம் நிலைபெறுதகு வலு அதிகார சபை மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவித்தன் பின்னர், இந்த மக்களைப் பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் முதலீட்டாளர்களின் கவனம் ஈரக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு 35ஆம் இலக்கத்துடைய இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை சட்டத்தின் துணைப் பிரிவு 12(1) இன் படி வெளியிடப்பட்ட 2014 ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதியிட்ட இலக்கம் 1858/2 வர்த்தமானி அறிவிப்பின் மூலம், மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகரப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மன்னார் தீவின் 76.11 சதுர கிலோமீட்டர்கள் சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் தீவின் மொத்த நிலப்பரப்பு சுமார் 143.21 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அதன்படி, தீவின் மொத்த நிலப்பரப்பில் 53 சதவீதம் சக்தி மேம்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், மன்னார் தீவை ஒரு சக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிப்பதில், நிலைபெறுதகு வலு அதிகார சபை இந்தத் தீவைப் பற்றிய பல உண்மைகளைத் தவிர்த்துவிட்டது. மன்னார் தீவின் மக்கள் தொகை சுமார் 66,087 ஆகும். இங்கு 1,7835 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதுடன், சுமார் 12,840 வீடுகள் உள்ளன. பெரும்பாலான தீவுவாசிகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏராளமான மக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் இரண்டிலும் ஈடுபட்டுள்ளனர். மன்னார் தீவு வட மாகாணத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடிப் பிரதேசமாகக் கருதப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு சராசரி மீன் அறுவடை சுமார் 17,500 மெட்ரிக் டொன் ஆகும். மன்னார் தீவின் மக்களைத் தவிர சதுப்புநில காடுகள், உப்பு சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த காடுகள், கடலோர தாவர சமூகங்கள் மற்றும் மணல் திட்டுக்கள் போன்ற பல இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இந்த இயற்கை சுற்றுச்சூழல் தொகுதிகள் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மன்னார் தீவுடன் தொடர்புடைய ஆழமற்ற கடல் பகுதியில் உள்ள கடல் புற் தரைகள், சேற்றுப் படுகைகள், பவளப்பாறைகள், மணல் கரைகள் மற்றும் பாறை சுற்றுச்சூழல் தொகுதிகள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மன்னார் தீவின் தென்கிழக்கு விளிம்பில் உள்ள உப்புச் சதுப்பு நிலம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் தொகுதிகள் வங்காலை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 4839 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த சரணாலயம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(2) இன் படி, 2008 செப்டம்பர் 8ஆம், திகதியிட்ட 1566/2008 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஈரநில சரணாலயத்தின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் தொகுதிகளின் பெறுமதி காரணமாக,1971 பிப்ரவரி 2ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட, 1990 ஜூன் 15ஆம் திகதி அன்று பங்குதாரரான இலங்கை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகள் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ரம்சார் மாநாட்டின்படி, 2010 ஜூலை 10ஆம் திகதி அன்று 4839 ஹெக்டேயர் கொண்ட வங்காலை சரணாலயம் நாட்டின் 4ஆவது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ரம்சார் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. மஞ்சல் நிறத்தில் – புலம்பெயர்ந்த பறவைகள் மன்னாருக்குள் உள்நுழைந்து பறக்கும் பாதை (பறவைகளின் வலசை). இந்த சரணாலயத்துடன் தொடர்புடைய மன்னார் தீவின் களப்பு மற்றும் பாரிய ஆழமற்ற கடல் பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் துணைப்பிரிவு 2(1) துணைப்பிரிவிற்கமைய 2016 மார்ச் 1ஆம், திகதியிடப்பட்ட 1956/13 என்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 29180 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட விடத்தல்தீவு இயற்கை வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் தீவின் வடமேற்கு முனையில் கண்டல் தாவரம், சதுப்பு நிலங்கள், முட்கள் நிறைந்த புதர்க்காடுகள், மணல் திட்டுகள் மற்றும் ஆழமற்ற கடல் கடற்கரை ஆகியவற்றின் ஒரு பெரிய பிரதேசம், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2(2) துணைப்பிரிவுக்கு அமைய 2015 ஜூன் 22ஆம், திகதியிட்ட1920/03 என்ற வர்த்தமானி அறிவிப்பின்படி 18,990 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட ஆதாமின் பாலம், கடல்சார் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த கடல்சார் தேசிய பூங்கா மற்றும் இயற்கை வனமானது 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் வேலைத்திட்டங்களின் நிதி உதவியுடன் கீழ் வட மாகாணத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் (Integrated Strategic Environmental Assessment the Northern Province of Sri Lanka) அறிவிக்கப்பட்டுள்ளது. நில பயன்பாட்டுக் கொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களத்தின் 2019 அறிக்கையின்படி, மன்னார் தீவில் 914 ஹெக்டேயர் உப்பு சதுப்பு நிலங்களும், 25 ஹெக்டேயர் சதுப்பு நிலக் காடுகளும் உள்ளன. மேலதிகமாக, சுமார் 1050 ஹெக்டேயர் முற் காடுகள் உள்ளன. இவற்றுடன், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் ஆழமற்ற கடலில் வாழும் மீன், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகும். மீன்பிடி சமூகம் மற்றும் மீன்பிடித் தொழிலின் வாழ்வாதாரம் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்துள்ளது. மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையில் சுமார் 20 கரவலை மீன்பிடித் துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்தத் துறைமுகங்கள் அனைத்தும் மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின் கீழ் எரிசக்தி மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கும்போது இது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. மீன்பிடி தொழிலுடன் மேலதிகமாக, விவசாயமும் இந்தத் தீவில் நடைமுறையில் உள்ளது. காய்கறிகள், வேர்க்கடலை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட குறுகிய கால பயிர் சாகுபடி இந்தத் தீவில் பரவலாக உள்ளது. அதனைத் தவிர தீவுவாசிகள் பனை தொழில் தொடர்பான பல வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில், மக்களின் வாழ்வியல் கட்டியெழுப்பியுள்ள மன்னார் தீவு மக்களுக்கு, திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை வழங்குவதற்காக பல நீண்டகால திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, 1978ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட நகர்ப்புற அபிவிருத்திச் சட்டத்தின் இலக்கம் 41 இன் படி, 1993 மார்ச் 22ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 759/1 இல், முழு மன்னார் தீவையே நகர்ப்புற மேம்பாட்டுப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 8(அ)இன் படி, மன்னார் மேம்பாட்டுத் திட்டம் 2021 – 2030 தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 2021 ஜூலை 13ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 2236/24 ஊடாக இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட திட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவு வலயப்படுத்தப்பட்டு, தெற்கு கடற்கரை நிலைபேறுதகு வலு திட்டங்களுக்காகவும், வடக்கு கடற்கரை மீன்பிடித் தொழிலின் மேம்பாட்டிற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலான பயன்பாடுகளைக் கொண்ட மக்களின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுடன் கூடிய ஒரு தீவில், பெரிய நிலப்பரப்பை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம், அதன் இயற்கை தொகுதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைவதுடன், மக்களின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் சரிவதால் வறுமை அதிகரிக்கும் என்பதையும் நிலைபெறுதகு வலு அதிகாரசபை உணரவில்லை என்பது வருந்தத்தக்கது. காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் சரியான முறை என்பதை முழு சமூகமும் அறிந்த உண்மையாக இருப்பினும், அதை நடைமுறைப்படுத்தும் போது ஒட்டுமொத்த தொகுதியும் சேதமடைந்து பாதிக்கப்பட்டால், அந்த நிலைபெறுதகு எரிசக்தியை உருவாக்குவதில் எந்தப் பயனும் இல்லை என்பதை நிலைபெறுதகு வலு அதிகார சபை உணரவில்லை. எனவே, அதிகார சபை இந்தத் தீங்கு விளைவிக்கும் நிலையான எரிசக்தி உற்பத்தித் திட்டங்கள் காரணமாக, மன்னார் தீவு மக்களும் அதன் உயிரியல் சமூகமும் பாதகமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. சர்வதேச உடன்படிக்கைகளை மீறி மன்னார் தீவின் மக்களின் வாழ்வியலையும், வாழ்வாதாரத்தையும் அழித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பசுமை எரிசக்தி மேம்பாடு மற்றும் எரிசக்தி திறன் முதலீட்டு திட்டத்தின் (Green Power Development and Energy Efficiency Improvement Investment Program)கீழ் 2012ஆம் ஆண்டு தயாரித்து முன்மொழியப்பட்ட மன்னார் தீவு காற்றாலைப் பூங்கா (Proposed Wind Park in Mannar Area) அறிக்கை ஊடாக மன்னார் தீவு முழுவதும் காற்றாலைப் மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு 375 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில், மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 100 மெகாவாட்டை கொண்ட ‘தம்பபவனி’ காற்றாலை திட்டத்தை நிர்மாணிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 157 மில்லியன் டொலர் பணத்தை கடனாக வழங்குவதற்காக 2017ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, மன்னார் தீவில் 375 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் வலியுறுத்தியது. இந்த அறிக்கைகளைத் தயாரிப்பதில், ஆசிய அபிவிருத்தி வங்கி பல சர்வதேச உடன்படிக்கைகளை மீறியுள்ளது. 1971 பெப்ரவரி 2ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ராம்சார் உடன்படிக்கை, 1979 ஜூன் 23ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான ‘பொன்’ மாநாடு மற்றும் 2015 டிசம்பர் 12ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச சட்டக் கொள்கையான முன்னெச்சரிக்கை கொள்கையை (Precautionary Principle) கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆசிய அபிவிருத்தி வங்கியின் முதற்கட்ட ஆய்வுகள், சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் கடன் உதவி ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட ‘தம்பபவனி’ காற்றாலைப் மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான உயர் மின்னழுத்த மின் பரிமாற்றக் கம்பி அமைப்பு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒப்பந்தங்களின்படி வங்காலை சர்வதேச ரம்சார் ஈரநிலம் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது. 1983 முதல் இதுவரை இலங்கை பறவைகள் சங்கம் நடத்திய ஆய்வுகளின்படி, மன்னார் தீவின் தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள வங்காலை சரணாலயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் மன்னார் தீவின் முழு ஈரநில அமைப்பிலும் சுமார் 2 மில்லியன் கடலோர புலம்பெயர்வு ஈரநில பறவைகள் (Shorebirds) உள்ளன. சர்வதேச ஈரநில அமைப்பு (Wetland iInternational) ஊடாக 2009ஆம் ஆண்டில் வெளியிட்ட “Status of Waterbirds in Asia, Results of the Asian Waterbirds Census, 1987-2007” அறிக்கையின்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஈரநிலப் பறவைகளைக் கொண்ட முக்கிய பிரதேசங்களில் ஒன்றாக மன்னார் தீவு அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், வடக்கு சைபீரியாவிலிருந்து மில்லியன் கணக்கான குளிர்கால புலம்பெயர்வு பறவைகள் மத்திய ஆசிய கண்டத்தை நோக்கி பறக்கும் பாதையான (Central Asian Flyway) வழியாக இலங்கைக்கு வருகின்றன, மேலும் அவற்றில் ஏராளமானவை மன்னார் தீவு வழியாக நாட்டிற்குள் நுழைகின்றன, இது இந்த புலம்பெயர்ந்த பறவைகள் தொடர்ச்சியாக பறக்கும் போது முதல் நிறுத்தமாகும். இத்தகைய தனித்துவமான தீவில் ஒரு காற்றாலை மின் நிலைய அமைப்பின் கட்டுமானம் இந்த புலம்பெயர்ந்த பறவைகளின் பாதைகளை முற்றிலுமாகத் தடுத்து, அவற்றின் உணவுத் தளங்களைச் சீரழித்துள்ளது. குளிர்காலத்தைத் தவிர்க்க மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஆர்க்டிக்கிலிருந்து அண்டார்டிக்கிற்கு இடம்பெயர்ந்த இந்தப் பறவைகள், காற்றாலைகள் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் தங்கள் தாயகத்தை இழந்துவிட்டன. இவ்வளவு பாரிய அழிவுகரமான திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் மற்றும் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ரம்சார் உடன்படிக்கைகளை மீறுவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி பொறுப்பிலிருந்து விடுபட முடியாது. வடக்கு சைபீரியாவிலிருந்து மத்திய ஆசிய பறவைகள், புலம்பெயர் பாதை வழியாக குளிர்கால புலம்பெயர்வுப் பறவைகள் இலங்கைக்கு வரும் விதம் இலங்கைக்கு மேற்கு பாதை வழியாக பறந்து வரும் புலம்பெயர்ந்த பறவைகள் மன்னார் தீவு வழியாக நாட்டிற்குள் நுழைகின்ற விதம். அதனைத்தவிர உலகின் எட்டு வகையான கடல் ஆமைகளில் மூன்று வகைகள், மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலோர பிரதேசத்தில் முட்டையிடும். அதாவது, தோணி ஆமை அல்லது பச்சைக் கடல் ஆமை (Chelonia Mydas), அழுங்கு ஆமை (Eretmochelys Imbricata) மற்றும் ஒலிவநிறச் சிற்றாமை (Lepidochelys Olivacea) ஆகும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்தத் தீவின் தெற்கு கடற்கரையில் 12.5 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ‘தம்பபவனி’ மின் உற்பத்தி நிலையத் திட்டம், இந்த கடற்கரைக்கு முட்டையிட வரும் ஆமைகளின் எண்ணிக்கையில் விரைவான சரிவுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு பல காரணங்கள் பங்களித்துள்ளதாக எங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரவு முழுவதும் காற்றாலைகளின் தொடர்ச்சியான இரைச்சல் மற்றும் இந்தப் பிரதேசத்தின் வெளிச்சம் போன்றவையுடன், காற்றாலைகளை அணுக கடற்கரையோரத்தில் உள்ள 14 கி.மீ நீளமான வீதிகளின் காரணத்தால் ஆமைகள் முட்டையிடும் பிரதேசங்களைக் தடுத்து துண்டு துண்டாகப் பிரிக்கின்றன. இந்த நிலைமைகள் காரணமாக, ஆமைகள் முட்டையிட இந்தக் கடற்கரையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளிர்காலத்தைத் தவிர்க்க புலம்பெயர்ந்து செல்லும் பறவைகள் மற்றும் முட்டையிட வரும் ஆமைகளின் வாழ்விடத்தை இழக்க காரணமாக அமையும் காற்றாலைப் மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், செயற்படுத்துவதற்குமான கடன் உதவியைத் தயாரித்து வழங்குவதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கி, புலம்பெயர்ந்த காட்டு விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ‘பொன்’ உடன்படிக்கையை மீறியுள்ளது. ‘தம்பபவனி’ காற்றாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில், காற்றாலை டர்பைன்கள் மற்றும் அவற்றை இணைக்கும் பாதை அமைப்பை உருவாக்க உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் கழிமுகங்களைக் கொண்ட தடாகங்கள், அத்துடன் அவற்றை கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் ஆகியவை நிரப்பப்பட்டு, தடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, வட கிழக்கு பருவமழைக் காற்று டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மன்னார் தீவு அதிக மழையைப் பெறும் போது கால்வாய்கள் மற்றும் களப்புகள் வழியாக மழைநீரின் இயற்கையான ஓட்டம் தடைப்படுவதால், சுற்றியுள்ள கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கும். கடந்த சில ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீவுவாசிகள் குடிநீர் உள்ளிட்ட அன்றாட நீர் தேவைகளுக்கு கிணறுகளையே நம்பியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பிறகு இந்தக் கிணறுகளை மீட்டெடுப்பதற்கான செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த அழுத்தங்களுக்கு மேலதிகமாக, காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து மீனவ சமூகத்தினரை தடுக்கின்றன என்பதையும் எங்கள் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அதற்கமைய, ‘தம்பபவனி’ காற்றாலை திட்டம் மன்னார் தீவு மக்கள் தங்கள் விருப்பமான இடத்தில் வாழ்வதற்கும், எந்த பாதிப்பும் இல்லாமல் ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கும் உள்ள சுதந்திரத்தை பறித்துள்ளது. இது பாரிஸ் காலநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி, நிலைமாற்றுக் கொள்கையை மீறுவதாகும். ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு இந்தப் பொறுப்பிலிருந்தும் விலக முடியாது. புலம்பெயர்ந்த பறவைகளின் புலம்பெயர்வுப் பாதைகளில் காற்றாலைகள் ஏற்படுத்தும் சாத்தியமான தாக்கங்கள், கடலோர ஈரநிலப் பறவைகளின் உணவுப் பரப்பில் ஏற்படும் தாக்கம் மற்றும் தீவு மக்களின் வாழ்வியலில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி தயாரித்த சாத்தியக்கூறு ஆய்வுகளில் இருந்து ‘தம்பபவனி’ திட்டம் விடுபட்டுள்ளது. சுற்றுச்சூழலின் தொடர்ச்சியான இருப்பைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி செயல்முறையின் பாதகமான தாக்கங்களையும் கணிப்பதிலும், அவற்றுக்கான மாற்று அல்லது தணிப்பு முறைகள் அல்லது இழப்பீட்டு முறைகளைத் தயாரிப்பதிலும் முன்னெச்சரிக்கை கொள்கை முக்கியமானது. இந்தக் கொள்கையை 1992ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ரியோ மாநாட்டில் ரியோ பிரகடனத்தின் கொள்கை 15 என ஐக்கிய நாடுகள் சபை விளக்கியுள்ளது. கடுமையான அல்லது மீளமுடியாத தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதைத் தாமதித்தல், மூலதனப் பற்றாக்குறை, முழு அறிவியல் தீர்ப்பு இல்லாமை அல்லது தகவல் இல்லாமை ஆகியவற்றின் அடிப்படையில் எந்தத் தணிப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்கக்கூடாது என்று அது கூறுகிறது, ஏனெனில், அவை 1998ஆம் ஆண்டு முன்னெச்சரிக்கை கொள்கை குறித்த விங்ஸ்ப்ரெட் மாநாட்டில் இந்தக் கொள்கைக்கு ஒரு பரந்த விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கத்தின்படி, ஒரு செயல்பாடு மனித ஆரோக்கியத்திற்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்போது, காரண-விளைவு உறவு அறிவியல் ரீதியாக முழுமையாக நிறுவப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த சூழலில், ஒரு செயல்பாட்டின் ஆதரவாளர் பொதுமக்களை விட ஆதாரத்தின் சுமையைச் சுமக்க வேண்டும். முன்னெச்சரிக்கை கொள்கையை செயல்படுத்தும் செயல்முறையில் திறந்த தகவல் அமைப்புடன் ஜனநாயகமாக இருக்க வேண்டும், மேலும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரின் பங்கேற்பையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு முழு அளவிலான மாற்று வழிகளையும் ஆராய்வதும் இதில் அடங்கும். இதைத் தவிர்ப்பதன் மூலம், ஆசிய அபிவிருத்தி வங்கி இயற்கை அமைப்புகளின் உயிர்வாழ்வையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது. 1966 ஆம் ஆண்டு முதல் இந்நாட்டிற்கு கடன்களை வழங்கி வரும் ஆசிய அபிவிருத்தி வங்கி, அதன் தொடக்கத்திலிருந்து 2024ஆம் ஆண்டு இறுதி வரை 522 திட்டங்களுக்கு சுமார் 12.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளது, மேலும், எரிசக்தி துறையில் 57 திட்டங்களுக்கு கடன்களை வழங்கிய ஒரு அபிவிருத்தி வங்கியாக, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் எதிர்கால இருப்புக்கு சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளது. நாட்டின், மக்களின் எதிர்கால இருப்பையும் இயற்கை வளங்களையும் அழிக்க இதுபோன்ற தவறுகளைச் செய்ய அவர்களால் முடியாது. காரணம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிலையான இருப்பு இந்த நாட்டு மக்களின் உழைப்பு, வரிகள் மற்றும் இயற்கை வளங்களின் இருப்பைப் பொறுத்தது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின்படி மன்னார் தீவு மக்களின் வாழ்வியலை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு பணயம்வைத்தல் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ், மன்னார் தீவில் முதல் காற்றாலை மின் நிலைய திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, 2017ஆம் ஆண்டில் பொதுமக்களின் கருத்துகளுக்காக திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 56 காற்று டர்பைன் நிறுவப்பட உள்ளன. இருப்பினும், இலங்கை பறவைகள் சங்கம், சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் அழுத்த செயன்முறைகளும், தொழில்நுட்ப கருத்துகளின் அடிப்படையில், தோட்டவெளி முதல் பாலாவி வரையிலான 12.5 கி.மீ நீள கடற்கரையில், கடற்கரையிலிருந்து 150 முதல் 160 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தலா 3.45 மெகாவாட் திறன் கொண்ட 30 காற்றாலை டர்பைன்கள் மூலம் 103.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மன்னார் தீவில் தோட்டவெளி, துள்ளுக்குடியிருப்பு மற்றும் கட்டுகாரன்குடியிருப்பு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் 2017 நவம்பர் 22ஆம் திகதியன்று கையெழுத்தானது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு டொலர் மில்லியன் 256.7 ஆகும். இது ஆரம்ப திட்டத்தை விட அதிகம். எனவே, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனும், மீதமுள்ள 56.7 டொலர் மில்லியன் இலங்கை மின்சார சபையிலிருந்தும் வழங்கப்பட்டு இந்தத் திட்டத்தின் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ‘தம்பபவனி’ என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதியன்று திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்கள் டென்மார்க் காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸால் வழங்கப்பட்டது. மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் கட்டப்பட்ட ‘தம்பபவனி’ காற்றாலை திட்டத்தின் டர்பைன்கள் ஆரம்பத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ சுமார் 1.5 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படும் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நேரத்தில், ஒரு காற்றாலை டர்பைனை நிறுவ 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்தக் காற்றாலை டர்பைன்கள் அணுக 14 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான வீதியை அமைப்பதற்காக தீவின் தெற்கு கடற்கரையில் ஒரு பெரிய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும், கட்டுமானத்தின் போது களப்பை (சிறு கடல்) கடலுடன் இணைக்கும் 26 கால்வாய்கள் தடுக்கப்பட்டுள்ளன. இது மழைநீர் வடிகால் பொறிமுறையை முழுமையாக அடைத்து வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், ஆழமற்ற கடலில் இருந்து முட்டையிடுவதற்காக களப்புக்கு வரும் மீன் இனங்கள், நண்டுகள் மற்றும் இறால் இனங்களின் இனப்பெருக்க செயல்முறையையும் மோசமாகப் பாதித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் ஆழமற்ற நீரில் மீன் அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக தீவில் உள்ள சிறு மீன்பிடி சமூகத்தினர் குறிப்பிட்டனர். காற்றாலை டர்பைன்களை உருவாக்குதல், பாதை அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய கட்டமைப்புடன் மின்சாரத்தை இணைக்கும் உயர் மின்னழுத்த மின் இணைப்பு அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றிற்காக மன்னார் தீவின் மக்கள் தெற்கு கடற்கரையின் பெறுமளவு நிலத்தை இழந்துள்ளனர். இதன் காரணமாக, மக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின் அடிப்படையில் வேறு பல திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. “மன்னார் காற்றாலை மின் திட்டம் – கட்டம் 1 – தொடர்ச்சி”க்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, பொதுமக்களின் கருத்துகளுக்காக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, 21 காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக ஒவ்வொரு காற்றாலை டர்பைனுக்கும் 6.63 ஏக்கர் என்ற வகையில் 139 ஏக்கர் நிலமும், காற்றாலை டர்பைன்களை இணைக்க 11.5 கிலோ மீற்றரும், வீதிகளை நிர்மாணிப்பதற்காக 43 ஏக்கர் நிலமுமாக மொத்தம் 182 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தீர்மானானது. இந்தத் திட்டத்திற்காக மன்னார் தீவின் தெற்கு கடற்கரையின் தென்கிழக்கு கடற்கரையையும், கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் உள்நாட்டுப் பகுதியையும் பயன்படுத்த உள்ளது. அதைனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “முன்மொழியப்பட்ட 250 மெகாவாட் காற்றாலை எரிசக்தி திட்டம் மன்னார் – கட்டம் 111” என்ற பெயரில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்களின் கருத்துகளுக்காக முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, அதானி பசுமை எரிசக்தி இலங்கை லிமிடெட் எனும் நிறுவனத்தால் 420 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டமாக செயல்படுத்த திட்டமிட்டது. தலா 5.2 மெகாவாட் திறன் கொண்ட 52 காற்றாலை டர்பைன்கள் மூலம் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், இந்தத் திட்டத்தின் காற்றாலை டர்பைன்கள் மன்னார் தீவின் மையத்திலும் வடக்கு கடற்கரையிலும் நிறுவப்பட திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு டர்பைனை நிறுவ தோராயமாக 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்த முழு திட்டத்திற்கும் 500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதலீட்டு நிறுவனம் கடந்த காலங்களில் கடுமையான சர்ச்சைக்கு உள்ளானது. ஆனாலும், அந்த வேலைத்திட்டத்தை இன்னும் பட்டியலில் இருக்கிறது. இதற்கிடையில், மன்னார் தீவில் 4 காற்றாலை டர்பைன்கள் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மன்னார் தீவில் இந்தக் காற்றாலைகள் ஏற்படுத்தும் பாரிய தாக்கம் காரணமாக, சமீபத்திய நாட்களில் இதற்கெதிராக பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இந்தத் திட்டம், ராஜகிரிய, நாவல, கல்பொத்த பாதை, எண் 66 இல் அமைந்துள்ள லீஜ் கேபிடல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் (Liege Capital Holding Pvt Ltd) முதலீட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இது Ceylex Renewables Pvt Ltd என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் தொடர்புகளுடன் Windscape Mannar எனும் துணை நிறுவனத்தால் செயல்படுத்துகிறது. இதற்காக, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கியிடமிருந்தும் 6.5 பில்லியன் ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் தொடர்பான அமைச்சரவை ஒப்புதல்கள், சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை, மேலும், அரச நிறுவனங்களால் இது குறித்த தகவல்களையும் பெற முடியவில்லை. எனினும் தொடர்புடைய வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துரிதப்படுத்தப்படும் ஹேலிஸ் நிறுவனத்தின் சட்டவிரோத காற்றாலை திட்டம் இதற்கிடையில், ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் (Hayleys Fentons Limited) மன்னார் தீவில் 50 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இது 50 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டம் என்றும், மின்சார சபைக்கு ஒரு யூனிட் மின்சாரம் 4.65 சதம் டொலருக்கு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் 2025ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியன்று எரிசக்தி அமைச்சகத்தில் கையெழுத்தானது என்றும், 2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு தயாராகி வருகிறது. இதற்காக, ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனத்தின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனமான ஹேவிண்ட் வன் கம்பெனி லிமிடெட் (HayWind One Limited) திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இது ஹேலிஸ் (Hayleys PLC) நிறுவனத்திற்கு முழு உரித்துமுள்ள துணை நிறுவனமாகும். இந்தத் திட்டம் 10 காற்றாலை டர்பைன்களைக் கொண்டுள்ளதுடன், கட்டுமானம் தொடங்கிய 18 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான காற்றாலை டர்பைன்களை நிர்மாணிப்பதற்காக மன்னார் தீவில் சுமார் 70 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியேற்படும். மேலும், நுழைவாயில் வீதிகளை தயார் செய்வதற்காக 30 ஏக்கருக்கும் அதிகமான நிலமும் கையகப்படுத்தப்பட நேரிடும். காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்ட மின்சாரத்தை வாங்குவதற்கு ஹேலிஸ் நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், இந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையோ அல்லது சுற்றுச்சூழல் ஒப்புதலோ வெளியிடப்படவில்லை. அமைச்சரவை முடிவுகள் தொடர்பான அறிக்கைகளை ஆராயும்போது அத்தகைய ஒப்புதல் வழங்கப்பட்டதற்கான எவ்வகையான ஆதாரமும் இல்லை. இவ்வாறு இருக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த அடிப்படையில் மின்சார சபையுடன் மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம், மன்னார் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் காற்றாலை மின் உற்பத்தி நிலையப் பிரச்சினை குறித்து ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், காற்றாலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தை ஒரு மாத காலம் தாமதப்படுத்தியதுடன், பிரச்சினைகளைத் தீர்க்கவும் முயற்சி செய்யப்பட்டது. இந்நடவடிக்கையானது இந்தத் திட்டம் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. அது மட்டுமல்லாது, அவர்கள் சரியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அல்லது ஒப்புதல் இல்லாமல் அதை செயல்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மேலும், இந்தத் திட்டத்திற்கான அமைச்சரவை ஒப்புதலை பொதுமக்களிடமிருந்து மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிகிறது. இந்த உண்மைகள் அனைத்திலும் இந்தத் திட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே குறிக்கிறது. மன்னார் தீவை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைப் மின் நிலையங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையங்கள் (தீவின் தெற்கு கடற்கரையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.) மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்பான சட்ட கட்டமைப்பு மன்னார் தீவைச் சுற்றி பெரிய கடலோரப் பிரதேசத்தைக் கொண்டிருப்பதன் காரணத்தால், காற்றாலைப் மின் நிலைய கட்டுமானத்தை மேற்கொள்ளும்போது 2011ஆம் ஆண்டின் 49ஆம் இலக்கச் சட்டத்தின் இறுதி திருத்தமான, 1981ஆம் ஆண்டின் 57ஆம் இலக்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டமும் ஒரு முக்கிய காரணியாகும். இந்தச் சட்டத்தின்படி, கடலோர பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கு கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் துறையின் ஒப்புதல் அவசியம். இந்தச் சட்டத்தின்படி, கடலோரப் பிரதேசம் என்பது நிலத்தை நோக்கிய சராசரி உயர் அலைக் கோட்டிலிருந்து 300 மீட்டர் வரம்பிற்கும், கடல் நோக்கிய சராசரி குறைந்த அலைக் கோட்டிலிருந்து 2 கிலோமீட்டர் வரம்பிற்கும் உள்ள பிரதேசத்தைக் குறிக்கிறது. ஒரு நதி, வாய்க்கால், களப்பு அல்லது கடலுடன் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலையின் விடயத்திலும் நிலத்தை நோக்கிய வரம்பு அவற்றின் இயற்கையான நுழைவுப் புள்ளிக்கும் அத்தகைய நதி வாய்க்கால் மற்றும் குளம் அல்லது கடலுடன் இணைக்கப்பட்ட வேறு எந்த நீர்நிலைக்கும் இடையில் வரையப்பட்ட நேரான அடித்தளத்திற்கு செங்குத்தாக அளவிடப்படும் 2 கிலோமீட்டர் வரம்பிற்கும், மேலும் எல்லை பூஜ்ஜிய சராசரி கடல் மட்டத்திலிருந்து எல்லையில் நிலத்தை நோக்கி நூறு மீட்டர் நீடித்து மேலதிகமான வரம்பு உள்வாங்கப்படும். இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவு 14(1)க்கு அமைவாக, இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டதை தவிர, கடலோர பிரதேசத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படக்கூடாது. துணைப்பிரிவு 16(1)க்கு அமைவாக துணைப்பிரிவு 14(1)க்கு கீழ் அனுமதிகளை வழங்குவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையைப் பார்ப்பதற்கு வலியுறுத்தும் அதிகாரம் உள்ளது. 26 அ உறுப்புரைக்கு அமைய, கடலோரப் பிரதேசம் அல்லது அதன் வளங்களுக்கு சேதம் விளைவிக்கும் அல்லது சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் நிறுத்த அதிகாரம் உள்ளது. மேலும், அது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், ஒரு நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் விண்ணப்பத்தின் பேரில் தொடர்புடைய செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரமும் அதற்கு உள்ளது. அந்த உத்தரவை பின்பற்றத் தவறினால், ஒரு நாளைக்கு ரூ. 10,000 அபராதம் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படலாம். மேலும், மன்னார் தீவின் கடலோர பிரதேசத்திற்கு வெளியே உள்ள நிலப்பரப்பில் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிக்கும்போது, 2000ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். இந்தச் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்ட 1993 ஜூன் 24 திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 772/22 இன் படி, ஒரு ஹெக்டேயருக்கு மேல் பரப்பளவிலான வன நிலத்தை வனம் அல்லாத நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு முன்பு அல்லது 50 மெகாவாட்டுக்கு மேல் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்படல் வேண்டும். மேலும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட வங்காலை சரணாலயம், மன்னார் தீவின் தென்கிழக்கு எல்லையில் அமைந்திருப்பதால், தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் பிரிவு 23ஆவது உறுப்புரையின்படி வெளியிடப்பட்ட 1995ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 859/14 இற்கு அமைவாக, ஒரு சரணாலயத்தின் எல்லைக்குள் அல்லது அதற்குள் உள்ள எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் முதலில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் ஒப்புதலைப் பெற வேண்டும். தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் துணைப்பிரிவு 23அஅ இன் கீழ் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு, ஒரு நபர், சட்டத்தின் பிரிவு உறுப்புரை 31 இன் கீழ் ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ரூ. 15000 க்கு குறையாத அபராதம் அல்லது 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இரண்டு தேசிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான விடத்தல்தீவு இயற்கை வனம் மற்றும் ஆதாம் பாலம் கடல்சார் தேசிய பூங்கா ஆகியவை மன்னார் தீவின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு விளிம்புகளில் அமைந்துள்ளதால், காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதில் இந்தச் சட்டத்தின் சட்ட விதிகளும் கவனத்தில் கொள்வது முக்கியமானவை. 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க சட்டத்தால் கடைசியாகத் திருத்தப்பட்ட, 1937ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இந்தச் சட்டத்தின் துணைப் பிரிவுகள் 9அ (1) மற்றும் (2) இன் படி, தேசிய வனத்தின் எல்லையிலிருந்து ஒரு மைலுக்குள் எந்தவொரு மேம்பாட்டு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன் வனவிலங்கு பணிப்பாளரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்படல் வேண்டும். அவ் ஒப்புதலானது தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறை மூலம் பெறப்படல் வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கரையோரப் பறவைகளைக் கொண்ட பிரதேசங்கள் இந்தக் கட்டளைகளுக்கு மேலதிகமாக, திருத்தப்பட்ட 1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 43அ மற்றும் 47 இன் உறுப்புரைகளுக்கு அமைய, 2000ஆம் ஆண்டு அக்டோபர் 04ஆம் திகதியிட்ட 1152/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட 2000ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க திட்ட நடைமுறைகளின் ஆணைக்கு இணங்கவும், ஒரு ஹெக்டேயருக்கு மேல் உள்ள பிரதேசங்களின் அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் தொல்பொருள் சேத மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் தொல்பொருள் ஒப்புதலும் பெறப்படல் வேண்டும். இந்தச் சட்டத்திட்டங்களையும் கட்டளைகளையும் மீறி காற்றாலைகள் அமைப்பது பல சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்துள்ளது. மேலும், சட்டத்தின் ஆட்சியையும் மன்னார் தீவு மக்களின் அடிப்படை உரிமைகள் பலவற்றையும் மீறியுள்ளது. காற்றாலைகள் மன்னார் மக்களின் உரிமைகளைப் பறிக்கின்றன இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் VI ஆம் அத்தியாயத்தில் உள்ள கொள்கைகள் மற்றும் அடிப்படைக் கடமைகளை நிர்வகிக்கும் அரசின் கொள்கையின் துணைப் பிரிவின் உறுப்புரை 27(14) இன் படி, “அரசாங்கம் மக்களின் நலனுக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், அதனை மேம்படுத்த வேண்டும்.” அதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்தவும், சுற்றுச்சூழலின் உயிர்வாழ்வைப் பாதிக்காத முடிவுகளை எடுக்கவும் கடமைப்பட்டுள்ளன. மேலும், இந்த அத்தியாயத்தின் கீழ் துணைப்பிரிவு 28(ஈ) இன் படி, இயற்கையையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது ஒவ்வொரு இலங்கையரினதும் கடமையாகும். அதன்படி, ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தலையிடவும், அந்த நோக்கத்திற்காக சட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்த அரசு நிறுவனங்களை வழிநடத்தவும், பாதுகாப்பிற்கான சட்டங்களை அமுல்படுத்தவும், சேதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது. இருப்பினும், மன்னார் தீவில் காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்தும்போது நிலையான எரிசக்தி அதிகார சபையோ அல்லது மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையோ அல்லது கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களமோ அரசியலமைப்பில் உள்ள இந்த விடயங்களில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. அப்படி இருந்திருந்தால், இந்தக் காற்றாலை மின் நிலையங்களால் ஈரநில அமைப்புகளும் மன்னார் தீவின் மக்களும் இவ்வளவு துயரமான விதியை சந்தித்திருக்க மாட்டார்கள். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 12ஆவது பிரிவுக்கு அமைய, அத்தியாயம் மூன்றின் கீழ் அடிப்படை உரிமைகளைக் கையாள்கிறது, சட்டத்தின் பிரகடனம் மற்றும் செயல்படுத்தல் மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். 14ஆவது யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம், சட்டபூர்வமான வேலை வாய்ப்பில் ஈடுபடும் சுதந்திரம், தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடும் சுதந்திரம் மற்றும் ஒருவர் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகள் காற்றாலைத் திட்டங்களால் மன்னார் தீவின் மீனவ சமூகத்தினரிடமிருந்தும் அதன் மக்களிடமிருந்தும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றாலைகள் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதில், பொதுமக்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன, உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன, இந்தத் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, கடற்கரை நுழைவாயில்கள் தடைபட்டதால் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன, காற்றாலைகள் சுழற்சியால் உருவாக்கப்பட்ட சத்தம், அதிர்வு மற்றும் தொடர்ச்சியான நிழல்கள் காரணமாக அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலத்தில் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளால் தீவு வெள்ள அபாயத்தை எதிர்கொள்கிறது, இது அவர்கள் விரும்பும் இடத்தில் வசிக்கும் சுதந்திரத்தையும் இழக்க வழிவகுத்துள்ளது. 1955ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை உள்ள ஒரு நாடாக, நமது நாடு 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பொறுப்புடமை கொண்டுள்ளது. அந்தப் பிரகடனத்தின் 3ஆவது உறுப்புரைக்கு அமைய அனைவருக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 7ஆவது உறுப்புரைக்கு அமைய சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், எந்த பாகுபாடும் இல்லாமல் சட்டத்தின் பாதுகாப்பிற்கு உரிமை உண்டு என்றும் கூறுகிறது. 13ஆவது உறுப்புரைக்கு அமைய ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டின் எல்லைக்குள் வசிப்பதற்கான உரிமை உண்டு என்று கூறுகிறது. 17ஆவது உறுப்புரைக்கு அமைய, ஒவ்வொருவருக்கும் தனியாகவும் மற்றவர்களுடன் கூட்டாகவும் சொத்துக்களை வைத்திருக்கவும் உரிமை உண்டு. மேலும், யாருடைய சொத்தையும் வலுக்கட்டாயமாகப் பறிக்க முடியாது. 19ஆவது உறுப்புரைக்கு அமைய, அனைவருக்கும் குறுக்கீடு இல்லாமல் கருத்துக்களை வைத்திருக்கவும் வெளிப்படுத்தவும், தகவல்களைப் பெறவும் வழங்கவும் உரிமை உண்டு. இருப்பினும், காற்றாலை மின் நிலையத் திட்டங்களால் தீவுவாசிகளின் வாழ்வாதாரம், மீன்பிடித் தொழில் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, வெள்ள அச்சுறுத்தல் மற்றும் காற்றாலை மின் நிலையத் தாக்கங்கள் காரணமாக, தீவுவாசிகள் தங்கள் வாழ்வதற்கான உரிமையையும், வசிக்கும் உரிமையையும் இழந்துள்ளனர். இதன் விளைவாக, தீவுவாசிகள் தங்கள் சொத்துரிமைகளையும் இழந்துள்ளர். ஒப்புதல், செயல்படுத்தல், நில பரிமாற்றம், இந்தத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகள், அமைச்சரவை ஒப்புதல்களைப் பெறுதல் போன்ற எந்தவொரு தகவலையும் பொதுமக்கள் அணுகுவது தடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் குறித்து எந்தவொரு அரசு நிறுவனமும் துல்லியமான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கவில்லை.மேலும் இந்த நிபந்தனைகளை எதிர்த்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவையெல்லாம் காற்றாலைகள் காரணமாக மக்கள் சந்திக்க வேண்டிய அவலங்கள். இதனால், காற்றாலைகள் காரணமாக மன்னார் தீவு மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் இரண்டையும் இழந்துள்ளனர். உலகத்தின் நிலையான எரிசக்தி, உலக வங்கி மற்றும் இலங்கையின் எதிர்கால விதி எரிசக்தி அமைச்சின் 2024ஆம் ஆண்டின் தேர்ச்சி அறிக்கையின்படி, இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தி திறன் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5841 மெகாவாட்டாகும். இதனூடாக நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி, மர எரிபொருள், உயிரியல் எரிபொருள்கள் மற்றும் நகராட்சி கழிவுகள் போன்ற நிலையான எரிசக்தி மூலங்களால் உருவாக்கப்படும் மின்சார திறன் 3658 மெகாவாட் ஆகும். இது மொத்த மின்சார உற்பத்தியில் 63 சதவீதத்தை எட்டுகிறது. இலங்கை மின்சார சபையின் 2018-2037 வரையான நீண்டகால மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கமைய (Long Term Generation Expansion Plan 2018-2037) காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய மின் உற்பத்தி ஆகியவை 2037ஆம் ஆண்டு வரை நிலையான எரிசக்தித் துறையில் முக்கிய அபிவிருத்தி இயக்கிகளாக கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதுதான், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, எரிசக்தித் துறையில் கார்பனீரொக்சைட் வெளியேற்றத்தை 20 சதவீதம் குறைக்கும் இலக்கை எளிதாக அடைய முடியும். 1990ஆம் ஆண்டில் 29 சதவீதமாக இருந்த தேசிய மின்சார விநியோகம், 2018ஆம் ஆண்டளவில் 99.58 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மின் உற்பத்திக்காக ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் கார்பனீரொக்சைட்டின் அளவு சுமார் 7 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். நாட்டில் எரிபொருள் பாவனையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் 16.7 மில்லியன் மெட்ரிக் டொன் கார்பனீரொக்சைட்டில், 44 சதவீதம் மின்சார உற்பத்தி காரணமாகவே வெளியிடப்படுகிறது. இது உலகின் அனைத்து நாடுகளாலும் வெளியிடும் கார்பனீரொக்சைட்டின் அளவோடு ஒப்பிடும்போது 0.05 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவாகும். சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒருவருடத்திற்கு கார்பனீரொக்சைடு வெளியேற்றம் முறையே சுமார் 9135, 5176 மற்றும் 1187 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். உலகில் இன்று நிலையான எரிசக்தியானது சூரிய சக்தி, உயிரியல் எரிபொருள்கள், புவிவெப்ப ஆற்றல், கடல் அலைகள், காற்றாலை மின்சாரம் மற்றும் நீர் மின்சாரம் போன்ற ஆறு மூலங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச எரிசக்தி அமைப்பின் 2025 புள்ளிவிவரங்களின்படி, உலகின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 4.45 மில்லியன் மெகாவோட்டாகும். இதில், 1.13 மில்லியன் மெகாவோட் காற்றாலை மின் நிலையங்கள் மூலமும், 1.87 மில்லியன் மெகாவோட் சூரிய மின் நிலையங்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது 2030ஆம் ஆண்டாகும்போது காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 2.2 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும், சூரிய மின் நிலையங்கள் மூலம் 7 மில்லியன் மெகாவோட் மின்சாரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த எரிசக்தி மூலங்கள் விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாகத் தெரிகிறது. இதனூடாக புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பிலிருந்து வளிமண்டலத்தில் பசுமையற்ற வாயுக்களை வெளியிடுவதைக் குறைப்பதுடன், இதன் ஊடாக காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும். இது உண்மையாக இருப்பினும், இந்த நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களானது காடுகள், ஈரநிலங்கள் மற்றும் ஆழமற்ற கடல்களில் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் இழப்பில் இருந்தே நிறுவப்படுகிறது. இதனூடாக எதிர்பார்த்த பலன்களை அடைய முடியுமா என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது காலநிலை மாற்றத்திற்கான களத்தை அமைப்பது மட்டுமல்லாமல், இயற்கை அமைப்புகளின் அழிவு காரணமாக விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல உணவு உற்பத்தித் துறைகளைப் பாதிப்பதன் மூலம் நாட்டின் உணவு இறையாண்மை வீழ்ச்சி நிலைக்கு உட்படுத்துகிறது. அதற்கு ஒரு தீர்வாக, உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், பயிர் நிலத்தை அதிகரிப்பதற்காகவும், உணவு இறக்குமதியை அதிகரிப்பது அல்லது காடுகள் மற்றும் ஈரநிலங்களை அழிப்பது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது ஒரு சுழற்சியாகத் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, நாடு கடுமையான பேரழிவைச் சந்திக்க வழிவகுக்கிறது. உலக வங்கியின் கடல் கடந்த காற்றாலை மின் அபிவிருத்தி திட்டத்தின் (Offshore Wind Development Program – World Bank Group) கீழ் இலங்கைக்கான கடல் கடந்த காற்றாலை மின் நிலையத்தின் பாதை வரைபடம் என்ற (Offshore Wind Roadmap for Sri Lanka) தலைப்பிலான அறிக்கை 2023 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, இலங்கையின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் ஆழமற்ற கடல்களில் சுமார் 14,195 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காற்றாலை மின் நிலையங்களை நிறுவி 56 கிகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இந்த ஆழமற்ற கடற்பரப்பு கடல் பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஒரு பிரதேசமாகும். பவளப்பாறைகள், மணல் திட்டுக்கள், கடல்புற் படுகைகள் மற்றும் சேற்றுப் படுகைகள் போன்ற ஏராளமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட பிரதேசங்களாகும். இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் கடல் மீன் இனங்கள், ஆமைகள் மற்றும் இறால் மற்றும் நண்டுகள் போன்ற கடல் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் போன்ற கடல் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் உணவளிக்கும் இடங்களாகச் செயல்படுகின்றன. மீன்பிடித் தொழில் மற்றும் அதைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் அத்துடன், நாட்டின் உணவு இறையாண்மை ஆகியவை இந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் தொடர்ச்சியான இருப்பைப் பொறுத்தது. இவையனைத்தும் இந்தத் திட்டங்களால் சரிந்துவிடும் அபாயத்தில் உள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி மட்டுமல்ல, உலக வங்கியும் கூட நமது நாட்டை காற்றாலை மின்சார சந்தையின் பிடிக்குள் வேகமாகக் கொண்டு வருகின்றது. நீர் மின்சார உற்பத்திக்கான தற்போதைய நிலையான எரிசக்தி மூலத்தைப் பாதுகாக்க, தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் வண்டல் படிவதைத் தடுப்பதும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துவது போன்ற செலவு குறைந்த முறைகளைப் பின்பற்றுவதும் அவசியம். இதன் மூலம் மின்சாரம் மட்டுமல்ல, விவசாயத்திற்கும் மக்களுக்கும் நீர் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன், அதனூடாக காலநிலை மாற்றத்தைத் தணித்தல், மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலம் உயிரியல் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். ஆனால், ஆசிய அபிவிருத்தி வங்கியும், உலக வங்கியும் நம்மை எரிசக்தி சந்தையில் அடைத்து வைப்பதன் மூலம் இதையெல்லாம் நம்மிடமிருந்து பறிப்பதற்கான வேலையை செய்கின்றன. அதிகாரிகள் மட்டுமல்ல, இந்த அனைத்து தரப்பினரும் தற்போதைய அரசாங்கத்தையும் தன் பிடியில் வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் அதை உணரவில்லை. காரணம் நிலையான எரிசக்தி சந்தையை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் நிலையான எரிசக்தி நிறுவனங்கள் மிகக் கவனமாக நிர்வகிக்கின்றன. இதனூடாக நாட்டின் எரிசக்தி இறையாண்மையைப் பறித்து, அனைத்து முடிவுகளையும் சந்தை நிறுவனங்களிடம் விட்டுவிடும் ஒரு பொறிமுறையை உருவாக்கும் முயற்சியாகும். ஒரு நாடாக நாம் இதை உடனடியாகக் கடக்க முயற்சிக்க வேண்டும். இதற்காக, பழைய மற்றும் காலாவதியான தொழில்நுட்பங்களில் இயங்கும் நாட்டின் தற்போதைய நீர் மின் நிலைய அமைப்பை மிகவும் திறமையாக புதுப்பிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, காற்றாலை மின் நிலையங்கள் குறைந்த தாக்கத்துடன் பொருத்தமான இடங்களில் மட்டுமே நிறுவப்பட வேண்டும், மேலும், மண் மற்றும் பாறை குவாரி பகுதிகளிலும், வீடுகள் மற்றும் கட்டடங்களிலும் சூரிய மின் நிலையங்கள் நிறுவப்பட வேண்டும். காடுகளில் உள்ள ஈரநிலங்கள், குளங்கள் அல்லது நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், பொருத்தமான இடங்களில் இத்தகைய திட்டங்களை நிறுவுவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகளை, வளர்ந்த அமைப்புகளில் நிலையான எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், அந்தத் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்குவதன் மூலமும் இழக்கக்கூடாது. சஜீவ சாமிக்கர காணி மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கம் https://maatram.org/articles/12376

தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - எப்படி நடைபெறும்?

4 days ago
தமிழக வாக்காளர்களாகும் ‘பிற மாநிலத்தவர்’? SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ன? ஏன் எதிர்ப்பு? 28 Oct 2025, 8:01 AM தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR- Special Intensive Revision மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ளூர் வாக்காளர்கள் பெருமளவு நீக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி இருக்கின்றன. தேர்தல் ஆணையம், ஆளும் திமுக அரசு அடுத்தடுத்து அனைத்து கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டி உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன்? வாக்காளர் பட்டியலில் இந்திய குடிமக்கள் மட்டுமே இடம் பெறுதல் அவசியம் என்பது முதன்மை நோக்கம் ஒரே நபருக்கு பல மாநிலங்களில் வாக்குரிமை இருந்தால் நீக்கவும் இறந்தவர் பெயர் நீக்கவும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்காளர்களாக இருந்தால் கண்டறிந்து நீக்கவும் இந்த தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எப்படி மேற்கொள்ளப்படுகிறது? பூத்துகள் நிலையில் வீடுகளுக்கு செல்லும் அதிகாரிகள் விண்ணப்ப படிவங்களை கொடுத்துஅதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பி வாங்கிக் கொள்வர். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் படிவங்களை பூர்த்தி செய்தால் போதுமானது; ஆவணங்கள் தர தேவை இல்லை. வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், தேர்தல் அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை கொடுக்க வேண்டும் பொதுவான பான் கார்டு, ரேஷன் கார்டு, 100 நாள் வேலைத் திட்ட கார்டு போன்றவற்றை ஆவணமாக அதிகாரிகள் ஏற்கமாட்டார்கள். அதற்கு பதிலாக ஆதார் அட்டை/ பிறப்புச் சான்றிதழ்/ கல்விச் சான்றிதழ்/ பாஸ்போர்ட்/ இருப்பிடச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டும் ஆதார் அட்டையை ஆவணமாக சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் சேர்க்கப்பட்டது. முந்தைய வாக்காளர் பட்டியல் திருத்தம், அடையாள அட்டைகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது; தீவிர திருத்தம் என்பது குடியுரிமை சட்டத்தின் கீழ் சான்றிதழ்களை வைத்து மேற்கொள்ளப்படுகிறது இப்படி பெறப்படும் ஆவணங்கள் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தி அமைக்கப்படும் அந்த பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதை சரி செய்து கொள்ள வாக்காளர்களுக்கு வாய்ப்பு தரப்படும்; இதனையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், எல்ஐசி, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டைகள் பிறப்புச் சான்றிதழ் பாஸ்போர்ட் கல்விச் சான்றிதழ் நிரந்தர குடியுரிமை சான்றிதழ் வன உரிமை சான்றிதழ் ஓபிசி/ எஸ்சி/எஸ்டி அல்லது எந்த ஒரு ஜாதி சான்றிதழ் தேசிய குடியுரிமை ஆவணம் மாநில, உள்ளூராட்சி அமைப்புகளின் குடும்ப ஆவணங்கள் அரசால் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான ஆவணம் ஆதார் அட்டை; இது அடையாளத்தை உறுதி செய்யக் கூடிய ஆவணம் மட்டும். ஆனால் ஒருநபரின் பிறப்பு மற்றும் குடியுரிமைக்கான ஆவணமாக ஆதார் ஏற்கப்படமாட்டாது. தமிழகத்தில் எப்போது தொடங்கும்? தமிழகத்தில் நவம்பர் 4-ந் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணி தொடங்கும் வாக்காளர் விவரங்கள் சரிபார்ப்பு டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் டிசம்பர் 9-ந் தேதி புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள், திருத்தங்கள் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 (2026) வரை பெறப்படும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஜனவரி 31 வரை மேற்கொள்ளப்படும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ந் தேதி வெளியாகும். பீகாரில் ஏன் சர்ச்சை ஏற்பட்டது? தேர்தல் ஆணையம் கேட்டிருந்த ஆவணங்களை பலரால் தர இயலவில்லை ஆதார் அட்டையை கூட பலரும் தரவில்லை இதனால் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. பிற மாநிலங்களில் வாக்காளர்களாகி இருந்தவர்களும் நீக்கப்பட்டனர். தமிழகத்தில் ஏன் அச்சம்? உரிய ஆவணங்கள் இல்லாமல் போனால் தமிழ்நாட்டின் ‘உள்ளூர்’ வாக்காளர்கள் கணிசமாக நீக்கப்படும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில், பிற மாநிலத்தவர்- அங்கு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர், உரிய அடையாள அட்டை/ ஆவணங்கள் கொடுத்தால் தமிழக வாக்காளராக முடியும் இப்படி வெளிமாநிலத்தவர் லட்சக்கணக்கில் தமிழ்நாட்டு வாக்காளர்களாகும் போது தேர்தல் முடிவுகளில் மிகப் பெரும் தாக்கம் ஏற்படும் என்பது அரசியல் கட்சிகளின் கவலை. https://minnambalam.com/outsiders-becoming-tamil-nadu-voters-what-is-the-special-intensive-revision-sir-of-the-electoral-roll-and-why-the-opposition/#google_vignette

தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு!

4 days ago
தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு! 28 Oct 2025, 8:18 PM தவெக பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பனையூரில் நாளை (அக்டோபர் 28) நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கின. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து தனது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். அதன்படி கட்சியின் அன்றாட செயல்பாடுகள், பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் குழுவை இன்று நியமித்து உத்தரவிட்டார். பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முதல் கழக உறுப்பினர் மரிய வில்சன் என 28 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர். தமது வழிகாட்டுதல் படி இயங்கும் இந்த புதிய குழுவுக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைய்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளரான ஆனந்த் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/tvk-management-meeting-will-be-held-in-panaiyur/

யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்!

4 days ago
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்! October 28, 2025 கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் சிறீலங்கா இனவழிப்பு இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளநிலையில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நினைவேந்தலுக்காக தனியார் காணியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. https://www.errimalai.com/?p=105889

தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்

4 days 1 hour ago
தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட தொழில்களினால் எமது கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் தெரிவித்தார். பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிகளவில் சுருக்குவலை, கணவாய் குழைகளை கடலில் போடுவது உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் வடமராட்சி வடக்கு கடற்பரப்பை நம்பி இருக்கும் மீனவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தான் தான் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் எம்மவர்கள் நடப்பதன் காரணமாகவே தடைசெய்யப்பட்ட தொழில்களுக்கு உடந்தையாக செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்கால சந்ததிக்கு எமது கடல் வளத்தை பாதுகாக்கும் அக்கறை இல்லாது போய்விட்டது. இது விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகளது மெத்தனப்போக்கு மாற்றமின்றியே தொடர்ந்து வருகின்றது. கடற்றொழில் அமைச்சராக தமிழர்கள் வந்தபின்னரே வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுபோயுள்ளது. தமிழ் அமைச்சர்களாக முன்னர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போது சந்திரசேர் தரப்புகளின் அரசியல் ஆதிக்கம் சங்கங்கள் சமாசங்களுக்குள் ஊடுருவியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சார்ந்த அரசியல் ஆதாயங்களுக்காக மீனவர் சமுதாயத்தை பயன்படுத்தி வருகின்றனர். சங்களில் பொறுப்புகளில் உள்ள பலர் மீனவ சமூதாயத்தின் நலன்களை கைவிட்டு சுயநல காரணங்களுக்காக இவ்வாறான தரப்புகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றனர். இதனால் சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்தவோ வழிநடத்தவோ முடியாதுள்ளது. தொடர்ச்சியாக கடற்றொழில் வருவாயேதும் இன்றி ஏமாற்றமாகி வருவதன் காரணமாக எமது இளைஞர் சமூகம் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றமை எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் எமது கடலிலே மீன்கள் காணாமல் போகும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலுக்காக கச்சத்தீவு விவகாரம் அங்குள்ள அரசியல் கட்சிகளால் கையாளப்பட்டு வருகிறது. ஏதாவது தேர்தல் வந்தால் தமது அரசியல் நலன்களுக்காக அதனை பேசுவார்கள். மீனவர் பிரச்சினை அரசியலாக்கப்படுவதன் காரணமாகதான் தீர்வு காண்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது கடலுக்குள் வராதீர்கள் என நாங்கள் வலியுறுத்துவது எவ்வாறு தவறாகும். ஆனால் அவ்வாறு நாங்கள் கூறுவது திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு வருகிறது. 1983 க்கு முன்னர் இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் வந்ததில்லை. கடல்வலய தடைச்சட்டம் காரணமாகவே இந்திய மீனவர்கள் வந்து எமது கடல் வளத்தை சுரண்டிச்சென்றனர். கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மீது இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. அதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்றனர். அதனை முற்றுமுழுதாக தடுத்த நிறுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக நேர்மையாக குரல்கொடுத்து செயற்படுவதற்கு எமது பிரதிநிதிகளும் தயாராக இல்லை. தத்தமது அரசியல் தேவைகளுக்காக மீனவர் பிரச்சினையில் தலையிடுவதோடு சரி. நிலையான தீர்வுக்காக ஒருவரும் துணைநிற்பதும் இல்லை, குரல்கொடுப்பதும் இல்லை. எமது பிரதிநிதிகளே இவ்வாறு இருப்பதன் காரணமாகவே அரசாங்கத்தில் உள்ளவர்களும் வடக்கு மீனவர் பிரச்சினையில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டுவருதற்கு காரணமாக அமைகிறது. சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. இதுதான் இன்று வடக்கு மீனவர்களாகிய எமது நிலை. எம்மிடையே உள்ள ஒற்றுமையீனமே இதற்கு காரணம். உடனடியாக மீனவர் சமுதாயம் விழிப்படைந்து ஒன்றுபட்டு தீவிரமாக போராட முன்வர வேண்டும். இல்லாவிடில் கடல் வளம் அழிக்கப்பட்டு எமது வாழ்வாதாரமும் இல்லாமல் போகும் என அவர் கூறினார். https://akkinikkunchu.com/?p=346534

‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்

4 days 1 hour ago
சைக்கிளில் வந்த அவர் பாகிஸ்தானில் எல்லை மூடப்பட்டு இருந்ததால் விமானத்தில் இந்தியா டெல்லி வந்து பின்பு சைக்கிளில் நாகப்பட்டினம் வந்து கப்பல் எடுத்து சைக்கிளுடன் காங்கேசன்துறை வந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று!

4 days 1 hour ago
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று! 29 Oct, 2025 | 11:42 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228949

மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி

4 days 1 hour ago
மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி 29 October 2025 அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களை ஹமாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டமைக்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போர் நிறுத்தத்துக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் உபகரணப் பற்றாக்குறையால் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக உள்ளதாகவும், சப்ரா மற்றும் கான் யூனிஸ் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள பணயக்கைதிகளைத் திருப்பி அளிக்கும் முதல் கட்ட ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதில் ஹமாஸ் விதிமுறைகளை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பணயக்கைதிகள் விவகாரத்தில் பதற்றம் நீடிக்கிறது. https://hirunews.lk/tm/427873/war-breaks-out-again-33-palestinians-killed-in-israeli-attack

டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!

4 days 1 hour ago
டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி! பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1451457

கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்!

4 days 1 hour ago
கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்! புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி வாடியில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் இறந்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். அதன் பின்னர், மீன்பிடி வாடியிலிருந்த மற்றொரு நபரின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தனர். சம்பவம் தொட்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451439

செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி!

4 days 1 hour ago
செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி! டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது. டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்கும் இரண்டு சோதனையை நடத்தியது. இருந்தாலும் மழை பொழியவில்லை. டில்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்பின‍ை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சமயத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த செயற்கை மழையை ஏற்படுத்த டில்லி அமைச்சரவை முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக மே 7 அன்று டெல்லி அமைச்சரவை மேக விதைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஐந்து சோதனைகளுக்கு ₹3.21 கோடி ஒதுக்கியது – ஒரு முயற்சிக்கு சுமார் ₹64 லட்சம். கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து திட்டமிடப்பட்ட இந்த சோதனைகள் ஆரம்பத்தில் மே மாத இறுதியில் மற்றும் ஜூன் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டன. ஆனால் இரண்டு ஒத்திவைப்புகளை எதிர்கொண்டன: இந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளுக்கும் மொத்தம் தோராயமாக ₹1.28 கோடி செலவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. மேக விதைப்பு என்றால் என்ன? மேக விதைப்பு (Cloud Seeding) என்பது — மழை பெய்யும் அளவை அதிகரிக்க செயற்கையாக மேகங்களில் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு வானிலை மாற்றுதல் தொழில்நுட்பம் ஆகும். இதில் பொதுவாக வெள்ளி அயோடைடு (Silver Iodide), சோடியம் குளோரைடு (உப்பு), அல்லது டிரை ஐஸ் (Dry Ice – கார்பன் டைஆக்சைடு உறைவு வடிவம்) போன்ற பொருட்கள் விமானங்கள் அல்லது ராக்கெட் மூலம் மேகங்களுக்குள் விடப்படுகின்றன. இவ்வித பொருட்கள் மேகங்களுக்குள் உள்ள நீராவியை துகள்களாக ஒட்டச் செய்து, மழைத்துளிகள் உருவாக வழி செய்கின்றன. அதன் விளைவாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். https://athavannews.com/2025/1451447
Checked
Sun, 11/02/2025 - 05:34
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed