புதிய பதிவுகள்2

செவ்வணக்கம் தோழர் - சுப.சோமசுந்தரம்

4 days 2 hours ago
செவ்வணக்கம் தோழர் - சுப.சோமசுந்தரம் பொதுவாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்த பொதுவுடைமைத் தோழர்களை நினைக்கும்போதெல்லாம் எனக்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்றே நினைவுக்கு வருவதுண்டு. அவர்களால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்று அப்பாடல் சொல்வதாய் உணர்கிறேன். இப்போது நம்மைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி நம்மைப் பிரிந்த தோழர் ஆர்.நல்லகண்ணு பொதுவுடைமையாளராய் வாழ்ந்தவர் என்பதற்கு ஒரு படி மேலாகச் சென்று பொதுவுடைமையாகவே வாழ்ந்தவர் (More than being a communist, he was communism personified) என்பதே பொருத்தம். "உண்டால் அம்ம இவ்வுலகம்" (இவ்வுலகம் உண்டென்றால் - அதாவது இயங்குகிறது என்றால் - யாரால் தெரியுமா ?) என்று தொடங்கும் பாடல் அன்னாரின் பண்பு நலன்களை அடுக்குகிறது. "இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலுமிலரே" என்றவிடத்து, இந்திரர் அமிழ்தமே தந்தாலும் அதனை இனிது எனத் தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள் எனச் சொல்கிறது பாடல். சொந்தக் கட்சி அவரது தன்னிகரற்ற சேவையைப் பாராட்டி ஒரு கோடி ரூபாயும் காரும் தந்த போது அவற்றைக் கட்சிக்கே திருப்பித் தந்த போதும், தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதளித்துக் கொடுத்த பத்து இலட்சம் ரூபாயைக் கூடுதலாக ஐயாயிரம் ரூபாயோடு தமிழக அரசுக்கே தந்த போதும் பாடலின் அவ்வரிக்குப் பொருளானார் தோழர் நல்லகண்ணு. சுதந்திரம் பெற்ற கையோடு அமைந்த இந்திய அரசு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி, தேடித் தேடிக் கைது செய்த வரலாறு அறிந்தோர் வெகு சிலரே. தோழர் நல்லகண்ணு, ஜேக்கப் வாத்தியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஆசிரியர் தோழர் ஜேக்கப் போன்றோரைக் காவல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு மீசையையும் கண்புருவ மயிரையும் பிடுங்கிய (ஒரு பொதுக் கூட்டத்தில் ஜேக்கப் வாத்தியாரே சொல்லக் கேட்டது) கொடுமையிலும் தளராத மனத் திட்பத்தைக் குறிக்கும் வரியை நாம் குறித்த புறநானூற்றுப் பாடலில் தேடியும் கிடைக்கவில்லை. 'அயர்விலர்' என்று பாடலில் வரும் ஒரு சொல்லை ஆறுதலாய்க் கொள்ளலாம். தோழர் நல்லகண்ணுவின் தந்தையார் தம் பிள்ளைகளுக்கு, இருந்த சிறிது சொத்துகளைப் பங்களித்த போது தோழர் பங்கினை மட்டும் இவருக்கு எழுதாமல் மருமகள் பெயருக்கு எழுதி வைத்து விட்டார் - தோழர் தமக்கென வைக்காமல் பொதுக் காரியங்களுக்குக் கொடுத்து விடுவார் என்ற பயம்தான். புறநானூற்றுப் பாடலின் பின்வரும் வரிக்கு இலக்கணமாய்த் தோழர் வாழ்ந்தார் என்பதற்கு அதுவே சான்று : "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே". மேலும், உலகினை இயங்க வைப்போரின் வாழ்நிலை பற்றி மட்டுமே பாடல் பேசுகிறது (அன்னார்க்கு மரணம் இல்லை என்பதாலோ !). அவர்கள் இப்பூலகை விட்டுச் செல்லும் போது அழியும் உடலும் அழியாப் பயன் தரும் என்பதைப் பேசவில்லை. தோழர் மறைவுக்குப் பின் தம் உடலை ஈந்து மருத்துவ மாணாக்கர்க்குப் பாடமானார். எனவே புறநானூறு சொன்ன நல்வினைகளில் வாழ்ந்தார்; அது சொல்லாமல் விட்ட நன்னெறியிலும் வாழ்ந்தார். நாம் குறித்த புறநானூற்றுப் பாடலும் பொருளும் முழுமையாய் அறிய விழைவோர் "உண்டால் அம்ம இவ்வுலகம்" எனும் முதல் வரியை கூகுள் ஆண்டவரிடம் சொல்லிப் பெறலாம். https://www.facebook.com/share/p/1DrAP36SDy/

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

4 days 2 hours ago
தான் கேட்டும் விஜை விவாகரத்து தரவில்லை எனவே கோர்ட்டுக்கு வருகிறேன் என்கிறார் சங்கீதா. பேசாமல் கொடுத்து விட்டு போயிருக்கலாம். விஜி அண்ணி விடயத்தில் சீமான் விட்ட அதே தவறை விஜையும் விடுகிறார். தாய்குல வோட்டை லம்பா அள்ளுவார் என்றார்கள். இப்போ அது அம்போ.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

4 days 3 hours ago
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு! Vishnupriya RUpdated: Friday, February 27, 2026, 17:14 [IST] சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Also Read இதுகுறித்து சங்கீதா தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது திருமண வாழ்க்கை தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாகவே கடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் கடந்த 2021 செப்டம்பர் டூ 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி கால கட்டத்தில் வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினேன். அப்போது அந்த நடிகையுடனான தொடர்பை துண்டிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகையுடன் தொடர்பை தொடர்ந்தார். இது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு மீறிய இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார். Recommended For You குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும், அவர்களின் மனமும் பாதிக்கப்படும் என்பதால் விவாகரத்து கோருவதை தள்ளி வைத்தேன். அந்த நடிகையுடன் பல்வேறு பொது இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விஜய் சென்று வருகிறார். அந்த நடிகையுடன் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு விஜய் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இதனால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பியும் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விஜய் ஒத்துழைக்கவில்லை. கவுரவமாக நவம்பர் 9ஆம் தேதி விஜய்யுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரிய விரும்பினேன். ஆனால் அதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தேன். You May Also Like அந்த நடிகையின் பெயரை தற்போது குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். கணவன்- மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். சென்சிட்டிவான இந்த வழக்கை தனி அறையில் விசாரக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு முதல் என்னை வார்த்தையால் விஜய் நிறைய முறை அவமானப்படுத்தியுள்ளார். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் எனது கணவருக்கும் நடிகைக்குமான ஆதாரங்களை வெளியிடுவேன். இவ்வாறு சங்கீதா தனது மனுவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே விஜய்யை சங்கீதா பிரிந்து வாழ்ந்து வருகிறார். https://tamil.oneindia.com/news/chennai/vijay-s-wife-sangeetha-files-for-divorce-in-chengalpattu-family-court-reports-777257.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். என விகடனும் செய்தி போட்டுள்ளது. டிஸ்கி சோனாமுத்தா…போச்சா…. பின்ன திமுகவை நோண்டினா விட்டுவாங்களா.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

4 days 3 hours ago
யார் முதலமைச்சர் நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் கபிலன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கம்பன் கழகம் ஜெயராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவர்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டால் இவர்களில் யார் முதலமைச்சராகும் தகுதியானவர்? யாழ்ப்பாண புலனாய்வு

இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?

4 days 3 hours ago
போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்! இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அவர் அழைத்து வரப்பட்டுள்ளார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466447

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

4 days 4 hours ago
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் ! பாகிஸ்தான் விமானப்படையினர் இன்று அதிகாலை தொடக்கம் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரமான கந்தகார், எல்லைப் பகுதி மாகாணம் பக்தியா ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தலிபான் அரசாங்கமும் பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சமூக ஊடகத்தில், தங்கள் பொறுமை எல்லையை மீறிவிட்டதாகவும் தற்போது தங்களுக்கும் உங்களுக்கும் இடையே நேரடிப் போர் ஆரம்பமாகிவிட்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் இந்த இராணுவ நடவடிக்கைக்கு ‘ஒபரேஷன் கசாப் லில் ஹக்’ என்று பெயரிட்டுள்ளது. முன்னதாக நேற்றிரவு தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் படைகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளன. அதில் 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாகவும், பல இராணுவப் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்ததுடன் பதில் தாக்குதலையும் ஆரம்பித்துள்ளது. https://athavannews.com/2026/1466484

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

4 days 4 hours ago
வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்! ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) என்ற பாதிரியார், 15 வயது சிறுவன் ஒருவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் புகார்களை வேல்ஸ் திருச்சபை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிமறைத்துள்ளது. இந்த மூடிமறைப்பால், ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) திருச்சபையின் உயரிய பதவிகளுக்கு உயர்ந்து, பின்னர் ஸ்வான்சி மற்றும் பிரெகன் (Swansea and Brecon) பகுதியின் பிஷப்பாக மாற முடிந்தது. இதேவேளை, 85 வயதான பியர்ஸ், மற்றொரு சிறுவனுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார் . இதேவேளை, கடந்த 1986 முதல் 2010 வரை நான்கு முறை ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) மீது புகார்கள் அளிக்கப்பட்டும், திருச்சபையின் மூத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. திருச்சபையின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக உண்மைகளை “தரைவிரிப்பிற்கு அடியில் தள்ளி மறைக்கும்” கலாசாரம் அங்கு நிலவியதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது உயிருடன் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதேவேளை, 1999-ஆம் ஆண்டு பியர்ஸ் பிஷப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரது நடத்தை குறித்த வதந்திகள் தெரிந்திருந்தும், அப்போதைய பேராயர் அல்வின் ரைஸ் ஜோன்ஸ் அவற்றை அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் ஆண் என்பதால் இது “பெடோஃபிலியா” இல்லை என்ற தவறான புரிதலும் திருச்சபையில் நிலவியது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய பேராயர் செர்ரி வான் (Cherry Vann) இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைக் கவனிக்கத் தவறிய வாய்ப்புகள் மற்றும் தவறான அணுகுமுறைகளை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது என அவர் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466498

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

4 days 7 hours ago
ஸிம்பாப்வேயை வீழ்த்தி தனது அரை இறுதி வாய்ப்பை இந்தியா அதிகரித்துக்கொண்டது Published By: Vishnu 26 Feb, 2026 | 11:10 PM (நெவில் அன்தனி) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1 போட்டியில் 72 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய நடப்பு சம்பியன் இந்தியா, அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து குழு 1இல் இலிருந்து தென் ஆபிரிக்கா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. குழு 2இல் இருந்து இங்கிலாந்து ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்தப் போட்டி முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளும் இந்தியாவும் தலா ஒரு வெற்றியுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு அடுத்ததாக முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்று சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவுசெய்தது. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 2007இல் கென்யாவுக்கு எதிராக இலங்கை குவித்த சாதனைமிகு 260 ஓட்டங்ளுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மொத்த எண்ணிக்கை இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்று மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாயில் திறக்கப்படும் என்பதை அறிந்திருந்த இந்தியா, ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தது. இந்திய வீரர்கள் அனைவருமே 160.00 க்கு குறையாத ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவுசெய்திருந்தனர். ஆரம்ப விக்கெட்டில் சஞ்சு செம்சனுடன் 22 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த அபிஷேக் ஷர்மா, இரண்டாவது விக்கெட்டில் இஷான் கிஷானுடன் 42 பந்துகளில் மேலும் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார். சஞ்சு செம்சன் 15 பந்துகளில் 25 ஓட்டங்களையம் இஷான் கிஷான் 24 பந்துகளில் 38 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் 55 ஓட்டங்களையும் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 13 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றனர். (172 - 4 விக்.) இதனைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் திலக் வர்மா 16 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டனர். மிகவும் கடினமான 257 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ப்றயன் பெனெட், தடிவனாஷே மாருமணி ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மாருமணி 20 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் நுழைந்த டியொன் மயர்ஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். (72 - 2 விக்.) ப்றயன் பெனெட், அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சிக்கந்தர் ராஸா 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரெயான் பேர்ல் (0), டஷிங்கா முனியொங்கா (11), முசேக்கிவா (7) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். ப்றயன் பெனெட் 20 ஓவர்களும் தாக்குப் பிடித்து 97 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அர்ஷ்திப் சிங் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/239676

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

4 days 7 hours ago
சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசில்துறை பொறுப்பாளராக செயற்பட்ட தமிழ்ச்செல்வத்தை இல்லாது செய்வதற்காக, சுரேஷ் சலே முன்னின்று செயற்பட்டார் என சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினரான கேர்ணல் கெலும் மத்துமகே மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு நேற்று (25) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மனுதாரர் சார்பில் முன்னிலையான போதே அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார். காவல்துறை அதிகாரிகள் கொலை நீதிமன்றில் தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைத்த அலி சப்ரி, நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பாரிய அர்ப்பணிப்புகளை சுரேஷ் சலே ஆற்றியிருந்ததார் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்ட தமிழ்ச்செல்வத்தை இல்லாது செய்வதற்காக, சுரேஷ் சலே முன்னின்று செயற்பட்டார் எனவும் சுட்டிக்காட்டினார். அதேபோல, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசதுறை பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதனை, மலேஷியாவில் இருந்து, சுரேஷ் சலே நாட்டுக்கு அழைத்து வந்ததார் என குறிப்பிட்டதுடன், தேசியப் பாதுகாப்புடன் விளையாடுவது சிறந்த விடயம் அல்ல என தெரிவித்தார். இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டும் இவ்வாறானதொரு நடவடிக்கை இடம்பெற்றதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதனைத் தொடர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு நிலைமையும் அபாயத்தில் வீழ்ந்ததாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இவ்வாறானதொரு நிலையில், மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணையை திசைதிருப்ப முயற்சித்ததாக குற்றம் சுமத்தினார். ஷானி அபேசேகர தலைமை இந்த நிலையில் தனது சேவை பெறுநரான கேர்ணல் கெலும் மத்துமகேவுக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவ்வாறானதொரு விசாரணையை மேற்கொள்வதற்கு எந்தவித அடிப்படை சாட்சிகளும் இல்லை எனவும் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் தலைமையில் நடத்தப்படும் இந்த விசாரணைகளில், தமது சேவை பெறுநருக்கு நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலான என்ற தனிநபர் ஒருவர், பிரித்தானியாவிலுள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலை அடிப்படையாகக் கொண்டே குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான விசாரணைகளில் பாதிக்கப்பட்டோர் தரப்புக்கு எந்தவித நீதியும் கிடைக்கப் போவதில்லை எனவும் சட்டத்தரணி அலி சப்ரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/suresh-sallay-arrested-ali-sabri-appears-in-court-1772084856

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

4 days 7 hours ago
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி இவர் தான்..! அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே தவிர, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று(26.02.2026)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர அரசின் நாடகமே இது.. அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது நடவடிக்கையானது, கத்தோலிக்க திருச்சபையையும் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காக அரசு ஆடிய ஒரு நாடகமாகும். தற்போது விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் நிலக்கரி மோசடிப் புகார்களில் சிக்கியுள்ள அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. தாக்குதலின் போது அவர் இலங்கையில் இல்லை.. கடந்த 2018ஆம் ஆண்டில் சுரேஷ் சலே, சஹ்ரானைச் சந்தித்தார் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது. அந்தக் காலப் பகுதியில் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை. அவர் மலேசியாவிலும் இந்தியாவிலும் தூதரகப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். சனல் 4 ஊடகம் வெளியிட்ட தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவை என்பதை ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் சிறந்த புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான சுரேஷ் சலேவைச் சிறையில் அடைத்துவிட்டு, தாக்குதலுக்கு நிதியுதவி செய்தார் என்று கருதப்படும் இப்ராஹிம் போன்றவர்களைச் சுதந்திரமாக நடமாடவிடுவது எந்த வகையில் நியாயமானது? உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும், அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகள் வேட்டையாடப்படுவது கண்டிக்கத்தக்கது என்றார். ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி இவர் தான்..! அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர

இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?

4 days 7 hours ago
பொடி லெசி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார் Feb 27, 2026 - 06:11 AM இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார். இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் இன்று அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொடி லெசி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்து சாதனை!

4 days 7 hours ago
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகத் தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்து சாதனை! Published By: Digital Desk 3 26 Feb, 2026 | 02:27 PM இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகங்களில் பிரபல்யமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். 2014-இல் இந்தத் தளத்தில் இணைந்த இந்தியப் பிரதமர் மோடி, தற்போது ஏனைய உலகத் தலைவர்களை விடப் பல மடங்கு முன்னிலையில் உள்ளார். நரேந்திர மோடி: 10 கோடி பின்தொடர்பவர்கள் டொனால்ட் ட்ரம்ப் (அமெரிக்கா): 4 கோடி பின்தொடர்பவர்கள் பிரபோவோ சுபியாந்தோ (இந்தோனேசியா): 1 கோடி பின்தொடர்பவர்கள் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (பிரேசில்): 1 கோடி 44 இலட்சம் பின்தொடர்பவர்கள் அர்ஜென்டினா, துருக்கி மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதிகளின் மொத்த பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட இந்தியப் பிரதமர் மோடியின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்குள்ளும் ஏனைய அரசியல் தலைவர்களை விட மோடி பெரும் இடைவெளியில் முன்னிலையில் உள்ளார்: யோகி ஆதித்யநாத்: 1 கோடி 61 இலட்சம் ராகுல் காந்தி: 1 கோடி 26 இலட்சம் சமூக ஊடகங்கள் மட்டுமன்றி, உலகளாவிய தலைவர்களின் செல்வாக்கு தொடர்பிலும் ஆய்வுகளிலும் மோடி முதலிடம் பிடித்துள்ளார்: மார்னிங் கன்சல்ட் (Morning Consult) - பெப்ரவரி 67 சதவீத ஆதரவுடன் மோடி உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செக் குடியரசின் ஆண்ட்ரேஜ் பாபிஸ் (59%) இரண்டாமிடத்தில் உள்ளார். ஸ்டேடிஸ்டா (Statista) - கடந்த வருடம் டிசம்பர் மாதம் 70% அங்கீகாரத்துடன் மோடி முதலிடம். ஜப்பானியப் பிரதமர் சனாய் தாகாய்ச்சி (63%) இரண்டாமிடம். இந்தத் தரவுகளின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 40% - 43% ஆதரவுடன் 11 ஆவது இடத்திலேயே உள்ளார். இதன் மூலம் டிஜிட்டல் உலகிலும், நேரடி அரசியலிலும் பிரதமர் மோடி ஒரு 'குளோபல் ஐகானாக' உருவெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். https://www.virakesari.lk/article/239631

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

4 days 7 hours ago
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு 27 Feb, 2026 | 11:51 AM தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இக்கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன?

4 days 7 hours ago
'ஸ்டாலின் அனைவரையும் அரவணைக்கிறார், எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி' - திமுகவில் இணைந்தபின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி 27 பிப்ரவரி 2026, 04:37 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வருபவருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 27) சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். "அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் வெள்ளிக்கிழமை திமுகவில் இணையக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பனும் திமுகவில் இணைந்தார். அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். அதன்பிறகு, தலைமைச் செயலகம் சென்ற பன்னீர்செல்வம், தனது போடிநாயாக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினாதார். அவருடன் அய்யப்பனும் தனது உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ஓ.பன்னீர் செல்வம் கூறியது என்ன? இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்" என்று கூறினார். "தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அனைவரும் மீண்டும் இந்த ஆட்சியையே விரும்புகிறார்கள். உறுதியாக, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கும்" என்றும் அவர் கூறினார். "அரசியலில் ஒரு சர்வாதிகாரியாக, ஆணவப் போக்குடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளார்" என்று கூறினார். "இன்றைக்கு அரசியலில் அண்ணா காட்டிய வழியிலும், கலைஞர் (கருணாநிதி) காட்டிய வழியிலும் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியலை முதலமைச்சர் மேற்கொள்கிறார் என்பதை உணர்ந்து தான் நான் திமுகவில் இணைந்துள்ளேன்" என்று அவர் கூறினார். "திராவிட இயக்கத்தின் நூற்றாண்டில், அதை அழிப்பதற்கான பல முயற்சிகள் எந்தச் சூழலில், எப்படி ஏற்பட்டாலும் அதை தடுத்து, திராவிட இயக்கத்தை கட்டிக் காப்பதில், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் நின்று, திராவிட சித்தாந்தத்தை காப்பதில் முதலமைச்சர் முன்னிலையில் உள்ளார்." என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். "அதிமுகவில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியில் சர்வாதிகாரத்தோடு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் அந்தப் பதவியில் அமர்ந்த பிறகு, அதிமுகவை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றுகொண்டிருக்கிறார். இதை நினைத்து தான் பல அதிமுக தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்கிறார்கள். தென்மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் பழனிசாமி கவனத்துடன் இருக்கிறார்" என்று அவர் கூறினார். "திராவிட இயக்கத்தை காக்க, திராவிட கொள்கையைக் காக்க, தமிழ்நாட்டைக் காப்பதற்கும், வளர்ச்சிக்கும் ஒரு தலைசிறந்த இயக்கமாக திமுக விளங்கி வருகிறது என்பதை உணர்ந்து தான், நான் இன்று திமுகவில் இணைந்துள்ளேன். என்னை அரவணைத்துக் கொண்ட முதல்வருக்கு நன்றி. நான் ஒரு தொண்டனாகவே இணைந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், "வரும் சட்டப்பேரவை தேர்தலில், தளபதி ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது என்ன? "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர். அவரது வரவு நல்வரவாகட்டும்" என்றும் தனது பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg8ky3zmy2o

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

4 days 7 hours ago
சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு Feb 27, 2026 - 08:28 AM சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக இதுவரை 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் இவ்வாறான சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போதுள்ள அரச பொறிமுறையின் ஊடாக 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது. அதேபோன்று, சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இன்றி, இன்று (27) அழைத்து வரப்பட்ட சந்தேக நபருடன் மொத்தம் 14 பேரை நாட்டிற்கு கொண்டு வர முடிந்துள்ளது. சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இல்லாத நிலையில், அந்தந்த நாடுகளின் குடிவரவு குடியகல்வு குற்றங்கள் மற்றும் நாடுகடத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீடு மற்றும் அந்த நாடுகள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்களை எம்மால் அழைத்து வர முடிந்தது. மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு
Checked
Tue, 03/03/2026 - 14:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed