புதிய பதிவுகள்2

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

4 days 5 hours ago
செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவிக்குற இந்த தம்பிக்கு தவெக கூட்டத்தில் என்ன வேலை குணசேகரன் சார்? சீமான் ஒழிக சீமான் சாகனும் சீமானை வர சொல்லுங்க சீமான குத்தி கொல்லணும் சொன்னவன் எவனும் வரல... சங்கு சுட்டாலும் வெண்மைதான் 🙌"

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

4 days 6 hours ago
https://youtu.be/dNmXbV2Ks5E?si=pbgpiJlyVqXBkNdm https://www.facebook.com/share/p/16BEnjTSMq/?mibextid=wwXIfr https://www.facebook.com/photo/?fbid=2585100705201672&set=a.321821678196264 செந்தில் பாலாஜிக்கு சால்வை அணிவிக்குற இந்த தம்பிக்கு தவெக கூட்டத்தில் என்ன வேலை குணசேகரன் சார்?

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

4 days 6 hours ago
இது ஒரு திட்டமிட்ட சதியாகவும் இருக்க வாய்ப்பிருக்கிது.கரூரில் செய்தில்பாலாஜியின் தொகுதிக்குள் செந்தில் பாலாஜி எந்த எல்லைக்கும் போகக் கூடிய அரசியல்வாதி.கடந்த தேர்தலில் மக்களை அடைத்து வைத்து உதயநிதி படத்தைப்போட்டு மாற்றுக்கட்சிகளின் பிரச்சாரக்கூட்டத துக்கு போகவிடாது தடுத்தவர்.தலைமைக்கு நெருக்கமானவர்.விஅஅஜை வெளியில் வந்து பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.இந்தத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்காவிட்டால் விஜையின் அரசியல் இருப்பு மட்டுமல்ல சினிமா இருப்பும்கேள்விக்குள்ளாக்கப்படும்.ஆகவே விஜை தனித்துப்போட்டி என்பதை விடுத்து திமுக வைத் தோற்கக்கூடிய சக்திகளுடன் கூட்டணி சேரவேண்டும்.

“ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார்

4 days 6 hours ago
நம்பி நம்பி ஏமாந்து ஏமாந்து ஏமாற்றப் பட்டு நிற்கும் இனம். நம்பத் தகுந்த முறையில் தீர்வுகள் வைக்கப் படும் வரை.....???

“ஏக்கிய இராச்சிய” ; அரசியலமைப்பை கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சி அதனைத் தோற்கடிக்க தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் - கஜேந்திரகுமார்

4 days 6 hours ago
மாகாணசபையை எதித்து போராடி வெற்றி பெற்றோம். இன்று மாகாணசபையாவது கிடைக்காதா என்று ஏங்குகிறோம். அதன் தொடர்சசி தான் இந்த கஜே கும்பலின் சுயநல அரசியல்.

ஈஸ்டர் தாக்குதல்: தீவிரவாதம் உலகமயமானதன் அச்சமூட்டும் அடையாளம் - அட்மிரல் அனில் குமார் சவ்லா

4 days 7 hours ago
Published By: Digital Desk 3 28 Sep, 2025 | 10:21 AM (லியோ நிரோஷ தர்ஷன்) தீவிரவாதம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகமாக மாறியுள்ளது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இந்த யதார்த்தத்தின் கொடூரமான நினைவூட்டலாக உள்ளது. எனவே கடல்சார் பாதுகாப்பை எந்த ஒரு நாடும் தனியாக அடைய முடியாது என தெரிவித்த ஓய்வுப்பெற்ற இந்திய கடற்படை அதிகாரி அட்மிரல் அனில் குமார் சவ்லா, அனைத்துக் கடற்படைகளின் கூட்டு முயற்சி மற்றும் கடல்சார் இராஜதந்திரத்தின் தனித்துவமான அனுகூலங்களில் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற 'கடல்சார் உரையாடல்' மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அட்மிரல் அனில் குமார் சவ்லா மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கைக்குத் வருவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நாகரிகப் பிணைப்புகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. மேலும், இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற்படையும் கிட்டத்தட்ட பிணைக்கப்பட்டவையாகும். கடல்சார் இராஜதந்திரம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புச் சவால்கள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாகும். கடல்சார் பாதுகாப்பும், பொருளாதாரப் பலன்களுக்காகக் கடலைப் பயன்படுத்துவதும் பிரிக்க முடியாதவை. எனவே பாதுகாப்பும், வளர்ச்சியும் கைகோர்த்து செல்ல வேண்டும். கடல்சார் வளங்கள் வரம்பற்றதல்ல என்பதையும், அவற்றின் நிலையான பயன்பாட்டை உறுதிசெய்வது அவசியம். மரபுசாராத கடல்சார் பாதுகாப்புச் சவால்கள் 21-ம் நூற்றாண்டில் அதிகரித்திருப்பதற்கான நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன. சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான குழுக்களும் கடல் பயணத்திற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு கடல்சார் நடவடிக்கைகள் அதிகரித்ததால், தாக்குதல் இலக்குகளும், ஆயுதங்களை விநியோகிக்கும் வழிமுறைகளும் பெருகின. பலவீனமான அரசுகள், அவற்றின் எல்லைக்குள் செயல்படும் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்தத் தவறுவது ஒரு முக்கியக் காரணம். உதாரணமாக, செங்கடலில் ஹூத்தி குழுவினர் நடத்திய தாக்குதல்களை குறிப்பிடலாம். கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகியவை இனிமேல் சாதாரண குற்றங்கள் அல்ல. அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களாக மாறிவிட்டன. இந்தக் குற்றங்களை எதிர்த்துப் போராட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மறுபுறம் தீவிரவாதம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகமாக மாறியுள்ளது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் இந்த யதார்த்தத்தின் கொடூரமான நினைவூட்டலாக உள்ளது. எனவே கடல்சார் பாதுகாப்பை எந்த ஒரு நாடும் தனியாக அடைய முடியாது. உலகில் மிகப் பெரிய கடற்படை இருந்தாலும் அது சாத்தியமில்லை. அனைத்துக் கடற்படைகளின் கூட்டு முயற்சி இங்கு அவசியமாகிறது. கடற்படைகள், கடல்சார் இராஜதந்திரத்தில் தனித்துவமான அனுகூலத்தைக் கொண்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/226287

சௌதி அரேபியாவில் பாகிஸ்தானின் அணுஆயுத ஏவுகணைகள் எந்த நாட்டை குறிவைக்கும்?

4 days 7 hours ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் அகமது அல் கதீப் பிபிசி உருது 37 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் - சௌதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் அதன் தாக்கம் மற்றும் சர்வதேச அரசியலில் அதன் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தானில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு உத்தி சார்ந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (SMIDA) மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அந்த இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும். சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு பல காரணங்களுக்காக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். இந்த உத்தி சார்ந்த ஒப்பந்தம், 'பிராந்திய அதிகாரச் சமநிலையில்' ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், இஸ்ரேலின் உத்தியைப் பாதிக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செப்டம்பர் 9 அன்று கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு ஒரு வளைகுடா நாடு எடுத்த முதல், பெரிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கை இது தான் என பல ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். வளைகுடா நாடுகளைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் உறுதித் தன்மை ஓரளவுக்கு பலவீனமடைந்துவிட்டது என்ற அச்சத்தை, இஸ்ரேலியத் தாக்குதல் வலுப்படுத்தியுள்ளது என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். கத்தாரில் நடைபெற்ற இஸ்ரேலின் தாக்குதலை 'காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பு' என்று சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் வர்ணித்திருந்தார். 'திடீர் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்' பட மூலாதாரம், Saudi Press Agency படக்குறிப்பு, இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. சௌதி அரேபியா-பாகிஸ்தான் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை, உலக அரசியலில் ஒரு திடீர் மற்றும் ஆச்சரியமான நிகழ்வாகக் குறிப்பிடுகிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஐரோப்பா மற்றும் பாதுகாப்புக் கொள்கை நிறுவனத்தின் இயக்குநரும் ஆராய்ச்சியாளருமான வலேனியா சக்கரோவா. சௌதி அரேபியா, 'அமெரிக்க அணுசக்தி பாதுகாப்பை' சார்ந்திருப்பதில் முழுமையாக திருப்தி அடையவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுவதாக அவர் கருதுகிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய கிழக்கும் தெற்காசியாவும் ஒரு புதிய உலக அரசியல் யதார்த்தத்திற்குள் நுழைகின்றன என்று சக்கரோவா சமூக ஊடக தளமான 'எக்ஸ்' இல் பதிவிட்டுள்ளார். "இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. சௌதி அரேபியாவும் பாகிஸ்தானும் 80 ஆண்டுகளாக ஒத்துழைத்து வருகின்றன, அது அனைவரும் அறிந்ததே" என்று சௌதி அரேபிய அரசியல் ஆராய்ச்சியாளர் முபாரக் அல்-அதி பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார். பிராந்தியமும் சர்வதேச சமூகமும் மிகவும் சிக்கலான அரசியல் சூழ்நிலைகளைக் கடந்து செல்லும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தான் இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சம் என்று அல் அதி கருதுகிறார். பிராந்திய அதிகாரச் சமநிலையில் மாற்றம் இந்த 'உத்தி சார்ந்த ' ஒப்பந்தம் சௌதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அம்சங்களை வலுப்படுத்துவதையும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான 'தற்காப்பை' மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என சௌதி பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அந்த இரண்டு நாடுகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகவே கருதப்படும் என்றும் அது கூறுகிறது. பிபிசியிடம் பேசிய முபாரக் அல்-அதி, ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த சிக்கலான மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். "இது, இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கும், கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, அதன் உத்தி சார்ந்த கூட்டாளியான அமெரிக்கா துரோகம் செய்ததற்கும் தொடர்புடையது" என்று அவர் கூறினார். பல ஆண்டு காலமாக, அமெரிக்காவிற்கும் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியா போன்ற ஆறு வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது, இதன் கீழ் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ஈடாக ஆறு நாடுகளுக்கும், அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது. பிரிட்டிஷ் பத்திரிகையான தி எகானமிஸ்ட் கூற்றுப்படி, இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் 2019-இல் சௌதி அரேபியாவையும் 2022-இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் தாக்கியபோது இந்த ஒப்பந்தத்தின் அடித்தளத்தில் முதல் விரிசல்கள் தோன்றின. இந்த இரண்டு சம்பவங்கள் நடந்த போதும், அமெரிக்கா குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இஸ்ரேல் கத்தார் மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ மீண்டும் அதுபோன்ற தாக்குதலை மேற்கொள்ளாது என்பதற்கான உத்தரவாதத்தை இப்போது முன்வைப்பது மட்டுமல்லாமல், மிகவும் நம்பகமான மற்றும் நீண்டகால பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வளைகுடா நாடுகள் கோருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளது 'தி எகானமிஸ்ட்'. பிபிசியிடம் பேசிய சௌதி ஆய்வாளர் அல் அதி, தனது நாடு "அதன் பாதுகாப்பு அல்லது உத்தி சார்ந்த பிரச்னைகளுக்கு ஒரு கூட்டாளியை மட்டுமே சார்ந்து இருக்க விரும்பவில்லை. எனவே, அதன் கூட்டாளிகளை பன்முகப்படுத்துவது முக்கியம் எனக் கருதுகிறது" என்றார். புதிய ஒப்பந்தம் பிராந்திய அதிகாரச் சமநிலையில் ஒரு பெரிய மாற்றத்தைத் தூண்டக்கூடும் என்றும் இஸ்ரேலின் உத்தி சார்ந்த இலக்குகளைப் பாதிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது ஏவுகணைகளையோ அல்லது எந்தவொரு ஆயுதங்களையோ சௌதி மண்ணில் நிலைநிறுத்த முடியும். சௌதி அரேபியாவின் சொந்த முடிவு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது ஏவுகணைகளை சௌதி அரேபியாவில் நிறுவ முடியும். ஹட்சன் இன்ஸ்டிடியூட்டைச் சார்ந்த ஹுசைன் ஹக்கானியின் கூற்றுப்படி, புதிய சௌதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான ஆவணத்தில் பயன்படுத்தப்படும் சொற்களில் 'உத்தி சார்ந்த' ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களின் பயன்பாடும் அடங்கும். பாகிஸ்தான் தனது ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களை விவரிக்க 'உத்தி சார்ந்த' என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறது என்று ஹுசைன் ஹக்கானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் சௌதி அரேபியாவின் "சுயாதீனமான கொள்கை வகுப்பின் சக்தியை" பிரதிபலிக்கிறது, இது பல சக்திகளுடன் அதன் ஒப்பந்தங்களை பன்முகப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஒரே ஒரு கூட்டாளியுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், பலருடன் உறவுகளை விரிவுபடுத்தும் திறமை சவுதி அரேபியாவுக்கு உள்ளது"என்று அல் அதி கூறுகிறார். இந்த ஒப்பந்தம் சௌதி அரேபியா வேறு எந்த சக்தியுடனும் செய்து கொண்ட வேறு எந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்யாது, மாறாக அந்த ஒப்பந்தங்களை வலுப்படுத்துகிறது என்கிறார் அல் அதி . பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு முயற்சிகளில் வலுவான பங்காளிகளாக உள்ளன. அமெரிக்கா சௌதி அரேபியாவின் முக்கியமான பாதுகாப்பு கூட்டாளி, எனவே பாகிஸ்தானுடனான இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் பிராந்திய அரசியல் மற்றும் உத்தியில் இரு நாடுகளுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் பயனளிக்கும் என அல் அதி கருதுகிறார். அதேபோல் பொதுவான மதமும் வலுவான நம்பிக்கையும் பாகிஸ்தானையும் சௌதி அரேபியாவையும் ஒன்றிணைத்துள்ளதாகவும் அல் அதி குறிப்பிடுகிறார். ஓமன் வளைகுடா இரு நாடுகளையும் பிரிக்கிறது, அவற்றின் நிலவியல் இருப்பிடம் முக்கியமானது எனவும் அவர் விளக்குகிறார். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே இஸ்லாமியப் பெரும்பான்மை நாடு பாகிஸ்தான் மட்டும் தான். பாகிஸ்தானிடம் 170க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தானில் பல்வேறு துறைகளில் உத்தி சார்ந்த முதலீட்டை 25 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சௌதி அரேபியா அறிவித்துள்ளது. சௌதி மேம்பாட்டு நிதியம் பாகிஸ்தானின் கனிம மற்றும் பெட்ரோலியத் துறைகளில் பில்லியன்கணக்கான டாலர்களை முதலீடு செய்ய எதிர்பார்க்கிறது. அதேபோல் பாகிஸ்தானின் மத்திய வங்கியில் தனது வைப்புத்தொகையை இரண்டு பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கவும் சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது ப்ளூம்பெர்க். வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மை பட மூலாதாரம், GOP படக்குறிப்பு, பாகிஸ்தானில் பல்வேறு துறைகளில் உத்தி சார்ந்த முதலீட்டை 25 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சௌதி அரேபியா அறிவித்துள்ளது. அரசுக்குச் சொந்தமான சௌதி பத்திரிகை நிறுவனத்தின் (SPA) படி, பாகிஸ்தானுடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கிட்டத்தட்ட 80 ஆண்டுகால வரலாற்று கூட்டாண்மை, சகோதரத்துவம் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தி சார்ந்த நலன்கள் மற்றும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கிறது. மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரண்டு புனித மசூதிகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவிற்கும் இடையிலான 'ஒற்றுமையின் அடித்தளம்'எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1960 ஆம் ஆண்டு, ஏமனில் எகிப்திய ராணுவம் போர் தொடுக்கும் என்ற அச்சம் நிலவியபோது, பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக சௌதி அரேபிய மண்ணுக்குள் அடியெடுத்து வைத்தது. அதன் பின்னர், 1979 இல் இரானியப் புரட்சிக்குப் பிறகு தெஹ்ரானுடனான மோதல் அச்சங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் நெருக்கமாகின. 1991 ஆம் ஆண்டு இராக் குவைத் மீது படையெடுத்த போது, பாகிஸ்தான் சௌதி அரேபியாவிற்கு ஒரு ராணுவக் குழுவை அனுப்பியது, மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனிதத் தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக சௌதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய நாடுகளின் ராணுவக் கூட்டணியில் பாகிஸ்தான் இணைந்தது. 2018 ஆம் ஆண்டுக்குள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக சௌதி அரேபியா சென்றனர். மற்ற வளைகுடா நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர முடியுமா? பட மூலாதாரம், Pakistan PM's office படக்குறிப்பு, இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு தாக்குதல் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும். சில அரசியல் ஆய்வாளர்கள், சௌதி அரேபியாவை பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்திற்கு 'அமைதியாக நிதியளிக்கும்' நாடாகக் குறிப்பிடுகின்றனர். சௌதி அரேபியா பாகிஸ்தானின் பாதுகாப்புச் செலவுகளுக்கு நிதி வழங்கி, அதன் அணு ஆயுத சேமிப்பை விரிவுபடுத்தும் பணியில் மறைமுகமாக பங்கு வகிக்கிறது என்பது அவர்களது கருத்து. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆய்வாளர்களும், ராஜ்ஜீய அதிகாரிகளும் பாகிஸ்தானின் 'அணுசக்தியால்' சௌதி அரேபியா பயனடையக் கூடும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர் என்கிறது 'தி எகனாமிஸ்ட்' பத்திரிக்கை. சௌதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தின் மையக்கருவாக மாறக்கூடும் என்கிறார் எக்ஸிடர் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான தல்ஹா அப்துர் ரசாக். இதுகுறித்த அவரது 'எக்ஸ்' தளப் பதிவில், பிராந்திய நாடுகள் இனி அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இப்போது வளைகுடா நாடுகள் தங்கள் பாதுகாப்பு ஒப்பந்தங்களை பன்முகப்படுத்தும் செயல்முறையை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மற்ற வளைகுடா நாடுகளின் ஈடுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, "அது சாத்தியம்" என்று கூறியிருந்தார். "ஜி.சி.சி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்)-ல் உள்ள எந்த நாடும் அதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தினால், நாங்கள் சௌதி அரேபியாவுடன் பரஸ்பர உடன்பாட்டை எட்டியுள்ளதால், மற்ற நாடுகளையும் அதில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம்"என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgr1epwx2zo

நினைவுகூரலுக்கான சுதந்திரம் மேலும் வலுப்படுத்தப்படும் தீர்வை வழங்குவதற்கான அரசியல் தன்முனைப்பு தம்மிடம் உண்டு என்கிறார் - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

4 days 7 hours ago
28 Sep, 2025 | 10:49 AM (நா.தனுஜா) முன்னைய அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஜெனிவாவில் ஆரம்பமானது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கை சார்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜெகநாதன் தற்பரன், அவ்வலுவலகத்தின் உறுப்பினர் அஜித் தென்னக்கோன், ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேரடியாகக் கலந்துகொண்டதுடன் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கொழும்பிலிருந்து நிகழ்நிலை முறைமையில் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள், மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட நிராகரிப்பு, வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள், சத்துருக்கொண்டான் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகளின் மீள்விசாரணை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குழுவில் அங்கம்வகிக்கும் அறிக்கையாளர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான அரசியல் தன்முனைப்பு தமது அரசாங்கத்திடம் இருப்பதாகவும், ஆகவே இதுபற்றி விசாரணைகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் எனவும் உறுதியளித்ததுடன் அதற்கு உதாரணமாக அண்மையில் குருக்கள்மடத்தில் உள்ள மனிதப்புதைகுழியை தான் நேரடியாகச் சென்று பார்வையிட்டதாகச் சுட்டிக்காட்டினார். அதேபோன்று மனிதப்புதைகுழி அகழ்வைப் பொறுத்தமட்டில், அப்பணிகளுக்காகப் போதியளவு நிதியை ஒதுக்கீடு செய்து, அவற்றை உரியவாறு முன்னெடுத்துவருவதாகவும், இருப்பினும் நிபுணத்துவம் உள்ளிட்ட உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் சர்வதேச சமூகத்திடம் அதனைக் கோருவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை கடந்தகால அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்தார். மேலும் கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் போன்றவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தன்முனைப்பு அரசாங்கங்களுக்கு இல்லாததன் காரணமாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் செயற்திறன்மிக்கவகையில் இயங்குவதற்கு இடமளிக்கப்படவில்லை எனவும், ஆனால் தமது அரசாங்கத்திடம் அந்த அரசியல் தன்முனைப்பு இருப்பதன் காரணமாக மேற்படி கட்டமைப்புக்கள் உரியவாறு இயங்குவதற்கு அவசியமான வளங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/226291

52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர் ஆந்திராவிற்கு நாடு கடத்தப்பட்டனர்

4 days 7 hours ago
இப்ப ஆந்திராவில் இருந்து… இலங்கைக்கு மீன் பிடிக்க வருகிறார்களா. 🤔

52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர் ஆந்திராவிற்கு நாடு கடத்தப்பட்டனர்

4 days 7 hours ago
Published By: Digital Desk 1 28 Sep, 2025 | 03:10 PM யாழ்ப்பாண சிறையில் 52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர், விடுவிக்கப்பட்ட இந்தியாவில் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி வீடு திரும்புவார்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு செப்டம்பர் 27 ஆம் திகதி இலங்கை கடற்கரையிலிருந்து காக்கிநாடாவுக்குப் புறப்பட்டது. நான்கு மீனவர்களும் வெள்ளிக்கிழமை (26) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். புதுடில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச பவனில் உள்ள மாநில அரச அதிகாரிகளின் முயற்சிகளைத் தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இலங்கை கடலோர காவற்படை செப்டம்பர் 26 ஆம் திகதி மண்டபம் முகாமிலுள்ள இந்திய கடலோர காவற்படையிடம் மீனவர்களை ஒப்படைத்தது. அங்கிருந்து அவர்கள் காக்கிநாடாவுக்குப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் ஒரு இரண்டாம் நிலை இழுவைமடி மீன்பிடி படகு வாங்க நாகப்பட்டினத்திற்குச் சென்றிருந்தனர். ஆனால் வீடு திரும்பும் போது, தொழினுட்ப கோளாறு காரணமாக இலங்கை நீரில் மிதந்ததாக அறிக்கைகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். ஒகஸ்ட் 4 ஆம் திகதி இலங்கை கடற்படை மீனவர்களைக் கைது செய்தது. அதன் பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். செப்டம்பர் 12ஆம் திகதியன்று யாழ்ப்பாண நீதிமன்றம் ஆந்திர மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் ஒப்படைக்கப்பட்டனர். வெளியுறவு அமைச்சகத்திடம் இந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அவர்கள் திரும்புவதற்கான முயற்சிகளைத் ஆரம்பித்தது. இலங்கை அரசாங்கத்துடனும், இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையின் ஆதரவுடனும், நான்கு மீனவர்களைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்பியதாகவும் உயர் ஸ்தானிகராலயம் செய்தி வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226327

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

4 days 7 hours ago
கரூரில் 40 பேர் பலி: கூட்ட நெரிசலுக்கு பிறகு என்ன நடந்தது? நிழலாக உறைந்த நிஜங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மகனை இழந்த தாய் கதறி அழும் காட்சி 28 செப்டெம்பர் 2025, 09:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தவெக சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்சை சூழ்ந்துள்ள கூட்டம் படக்குறிப்பு, நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தவர்கள் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி. படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் ரவி என்கிற கட்டடப் பொறியாளரும் ஒருவர். இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக அவரின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கரூர் அரசு மருத்துவமனைக்கு வெளியே கூடிய நிலையில் சிலர் துக்கம் தாளாமல் அழுதனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் சிக்கிய பலரது உடைமைகள் சிதறிக் கிடக்கும் காட்சி பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அப்போது குடும்பத்தினர் கண்ணீர் மல்க உடலைப் பெற்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கூட்ட நெரிசலில் தனது உறவுகளை இழந்த குடும்பத்தினர் துக்கம் தாங்க முடியாமல் உடைந்து அழுதனர். படக்குறிப்பு, கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் காலணிகள் பரவிக் கிடக்கின்றன. படக்குறிப்பு, கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியின் தற்போதைய கழுகுப் பார்வை காட்சி. போக்குவரத்து இயல்பாக இருக்கும் நிலையில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் உள்ளனர். பொதுக் கூட்டத்திற்கு வந்தவர்கள் விட்டுச் சென்ற காலணிகள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20lgdw2vqo

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 days 7 hours ago
அட . ......இதுதான் எனக்குள்ள ஒரே பிரச்சினை ........(41) வது கேள்வியை சரியாய் பார்க்காமல் கெத்தாய் பதில் போட்டு விட்டேன் ........ஒருவர் 200 ஓட்டங்கள் அடிப்பாரா என்று . .......அது தவறு , ஒரு அணி சுலபமாய் 200 அடிக்கும் . ........! அதுக்காக அதை திருத்த முடியுமா என்றெல்லாம் கேட்க மாட்டேன் .......ஏனென்றால் படிக்கும் போதும் சரி இப்பவும் சரி நான் எப்போதும் திருந்தப் போவதில்லை . .......! 😪

உணவு செய்முறையை ரசிப்போம் !

4 days 8 hours ago
சுவியர்... வாழைப் பூவின் நரம்பு எடுக்கின்ற ரெக்னிக் அருமை. (காணொளியின் 3:30´வது வினாடியில் உள்ளது.) அடுத்தமுறை வாழைப்பூ வாங்கும் போது இதே முறையில் செய்து பார்க்க வேண்டும்.
Checked
Thu, 10/02/2025 - 16:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed