4 days 14 hours ago
தாழ்பாள்கள் தெறித்து விழுவதற்கு உத்தரவாதம் இல்லை, ஆனால் பற்கள் தெறித்து விழும் வாய்ப்புகளே அதிகம்.🤣
4 days 14 hours ago
உண்மை, அவர் ஒரு வர்த்தகர்தானே, ட்ரம்ப் செலன்ஸ்கியினை சிறந்த சேல்ஸ்மன் என கூறினார், வசிட்டர் வாயால் மகரிசி பட்டம் வாங்கிய போன்றது, அதனை உறுதிப்படுத்துவது போல நிகழ்கால சம்பவங்கள் பிரதிபலிக்கின்றது.
4 days 14 hours ago
படம் : இதயத்தில் நீ ( 1963 ) யார் சிரித்தால் என்ன யார் அழுதால் என்ன தெரிவது என்றும் தெரியவரும் மறைவது என்றும் மறைந்து விடும் யார் சிரித்தால் என்ன இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம் நீரில்தோன்றும் நிழல்கள்போல நிலையில்லாமல்போகலாம். பூந்தென்றல் புயலாக மாறலாம் பொன் வெயில் நிலவாக மாறலாம் வருவது ஒன்று பிரிவது ஒன்று மெய்யன்பு பொய் என்று தோன்றும்போது
4 days 14 hours ago
அது மட்டுமல்ல, சமூக சீர்கேடுகளை வளர்ப்பது, போதை கலாச்சாரத்தின் கதாநாயகர்கள், சமூகங்களிடையே முரண்பாடுகளை வளர்ப்பது, ஊக்குவிப்பதும் இவர்களே. இவர்கள் அரசியல்வாதிகளின், தலைவர்களின் செல்லப்பிள்ளைகளாய் இருப்பதும் ஒரு காரணம். நாட்டில் சட்டம், நிஞாயம் நிலைக்க வேண்டுமாயின் இந்த துறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமானது.
4 days 14 hours ago
முந்திரிக்கொட்டை மாதிரி ஒருத்தர் சீமான் எப்படி வந்து இந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுவார், தம்பி விஜய் கட்சியை பிளந்து கட்டுவார் என்று மூக்கு சாஸ்திரம் சொல்லி மூக்கு உடைபட்டு இருக்கிறார். சீமானார் நாளைக்கும் இதே கருத்ததோடு இருந்தால் சந்தோசம்.
4 days 15 hours ago
அநியாயமாகப் பலியான அப்பாவி மக்களுக்கு இரங்கல்கள்.
4 days 15 hours ago
ரம் மற்றவர்களை மோதவிட்டு ஆயுதங்களை விற்பதிலேயே குறியாக இருப்பார்.
4 days 15 hours ago
மேற்குலகு, ஐ. நாவின் இயலாத்தன்மை, குற்ற உணர்வு மேலோங்கி, அதை நசுக்கி தம்மை நிஞாய வாதிகளாக காட்டுகின்றனர். எல்லா சிங்கள தலைவர்களும் பாதிக்க பட்ட மக்களுக்கு நிஞாயம் வழங்குவதை விட்டு மேற்குலகையும், ஐ. நாவையும் குஷிப்படுத்துவதிலேயே முக்கியம் செலுத்துகின்றனர். தர்மம், நீதி இல்லாதவர்கள் அந்த பதவிக்கு தகுதியற்றவர்கள். அன்று இலங்கையில் நடந்த இனவழிப்புக்கு தக்க நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் இன்று காஸாவில், உக்ரேனில் இப்படியான அத்துமீறல்கள் நடக்க வாய்ப்பிருந்திருக்காது. இல்லையேல் அதை செயற்படுத்த தவறியவர்கள் அந்த சபையை கலைத்திருக்க வேண்டும். இந்தச்சபை இருப்பதால் என்ன லாபம் யாருக்கு? ஏன் இந்தச்சசபை கூடுகிறது? அறிக்கைகளை விடுகிறது? இனப்பிரச்சனை இல்லை என்பவர்கள் ஏன் அந்த இந மக்களை அழித்தார்கள்? அவர்களின் வாழ்விடங்களை கலைத்தார்கள்? இப்போ அனுரா சொல்கிறார், வடக்கில் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்கிறார். வடக்கில் இருந்த பொருளாதாரத்தை அழித்தது யார்? ஏன் அழித்தார்கள்? எங்களுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுங்கள் என்று கேட்டோமா இவர்களிடம்? எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிஞாயம் வழங்குங்கள் என்றுதானே கேட்க்கிறோம். தாங்கள் நினைப்பதுதான் எங்கள் பிரச்சனையென அவர்களே முடிவெடுக்கும் அதிகாரத்தை யார் இவர்களுக்கு கொடுத்தது?
4 days 16 hours ago
டொக்டர் அர்ச்சுனா சீமானைவிட விஜய் நல்லவர் என்று ஒரு காணொளி வெள்ளி கிழமை வெளியிட்டவராம் 🤣
4 days 16 hours ago
'தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்' மூட்டு வலிகளில் முக்கியமானது தோள் வலி. எந்த அடியும் படாமலேயே தோளில் வலி வருவது பலருக்கு புதிராகத் தோன்றும். பொதுவாக, இது 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம் காணப்படுகிறது. அறிகுறிகள்: கையை உயர்த்தும் போது கடுமையான வலி ஒரு பக்கமாகப் படுத்தால் வலி அதிகரிக்கும் இரவில் கை முழுவதும் குடைச்சல் / எரிச்சல் கையை அசைக்காமல் வைத்துவிட்டு மீண்டும் அசைத்தால் வலி கையை முற்றிலும் கழற்றி விட வேண்டும் எனத் தோன்றும் அளவுக்கு தாங்க முடியாத வலி காரணங்கள்: தோள் மூட்டை இணைக்கும் தசைகள், முதுகு மற்றும் கழுத்திலிருந்து வந்து குகை போன்ற பகுதியில் இணைகின்றன. அங்கே இரத்த ஓட்டம் குறைந்தால் வலி ஏற்படும். அதிக உடல் உழைப்பு அல்லது அதிக எடை தூக்கும் பழக்கம் காரணமாக தசைகள் பிசைந்து வலிக்கலாம். விபத்து, விளையாட்டு காயம், அடிபடுதல் ஆகியவற்றால் மூட்டுச் சவ்வு கிழிந்து வலி ஏற்படும். தொற்று அல்லது அழற்சி ஏற்பட்டாலும் தோளில் வலி வரும். கணினி, தையல் போன்ற வேலைகளில் கழுத்து நீண்ட நேரம் ஒரே நிலையில் இருந்தாலும் தோள் வலி ஏற்படும். நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவதால் இணைப்பு தசைகள் பலவீனமடையலாம். மூட்டழற்சி நோய்கள், மூட்டு நழுவுதல், எலும்பு தேய்வு, Bursa எனும் குஷன் பாதிப்பு, தசைநாண்களில் கால்சியம் படிவு போன்றவை கூட காரணமாகும். பித்தப்பை பிரச்சினைகளால் வலது தோளில் வலி தோன்றலாம். கழுத்து எலும்பில் சிதைவு ஏற்பட்டால் நரம்புகள் அழுத்தப்பட்டு தோளில் வலி வரும். மாரடைப்பு வந்தால் 'இடது தோளில்' வலி தோன்றும். Rotator cuff தசைநாண்கள் பாதிக்கப்படுதல், நீரிழிவு கட்டுப்பாட்டின்மை ஆகிய காரணங்களால் Frozen Shoulder உருவாகி, தோளைச் சிறிதும் அசைக்க முடியாத நிலை வரும். என் அனுபவம் துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான ஒரு பிரச்சனையில் வலது தோளில் நானும் சிக்கியிருக்கிறேன். தற்போது மிகக் கடுமையான வலியால் தவிக்கிறேன். எனவே, இனிமேல் நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளைத் தவிர, புதிய பதிவுகளை எழுதுவதை மிகக் குறைக்கவோ, சில காலம் முற்றிலும் நிறுத்தவோ உள்ளேன். அடிப்படை தேவைக்கு அப்பாற்பட்டு, வலது கையால் வேகப்பந்து வீசுவது, பாரங்கள் தூக்குவது, அல்லது கையால் கூடுதல் வேலை செய்வதை தவிர்க்கிறேன். மருத்துவ சிகிச்சையை முறையாக மேற்கொண்டு, மருத்துவர் அறிவுரையின் படி என் வருங்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பேன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 'Shoulder Joint Pain – A Serious Challenge' Among joint pains, shoulder pain is one of the most troubling. Often, pain appears without any direct injury or impact, which many find puzzling. It is especially common after the age of 40. Symptoms: Sharp pain when lifting the arm Increased pain while lying on one side Tingling or discomfort in the arm at night Pain after keeping the arm still and then moving it again Pain so severe that it feels like detaching the arm would bring relief Causes: Muscles connecting the shoulder joint extend from the neck and back into a socket. Reduced blood supply here leads to pain. Overexertion or lifting heavy weights can strain the muscles. Accidents, sports injuries, or falls may tear joint tissues. Infections or inflammations in the joint. Long hours in the same posture (computer work, tailoring) can cause shoulder pain. Long-distance driving on rough roads can weaken supporting tendons. Arthritis, joint dislocation, bone wear, bursitis (inflammation of the bursa), and calcium deposits in tendons may all cause pain. Gallbladder problems can cause pain in the right shoulder. Cervical spine issues can press nerves and cause pain in the shoulder. Heart attacks often present with pain in the left shoulder. Rotator cuff damage or uncontrolled diabetes can cause frozen shoulder, where movement becomes extremely painful and restricted. My Experience Unfortunately, I too am suffering severely from right shoulder pain. At present, the pain has become very difficult to manage. Therefore, apart from posts I have already written, I may reduce or even stop writing new posts for some time. I will also avoid activities like fast bowling, heavy lifting, or overuse of my right hand. I am undergoing proper medical treatment and will follow my doctor’s advice to decide on future contributions. Thank you [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1860 ['தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்'] / எனது அறிவார்ந்த தேடல்: 1278 https://www.facebook.com/groups/978753388866632/posts/31513216794993557/?
4 days 16 hours ago
https://www.dinamani.com/tamilnadu/2025/Sep/27/will-vijay-be-arrested-chief-minister-stalins-response-in-karur
4 days 17 hours ago
இறந்தவர்களுக்கு அஞ்சலி ...இது ஒருவகையில் பொதுமக்களின் அறியாமை என்றுகூட சொல்லலாம். வீட்டில் நேரலையில் பார்க்க முடியாதா ? பசி ,நேரம் செலவிட்டு ,குடிக்க நீர் கூட இல்லாமல் சன நெரிசலால் அவஸ்தைப்பட்டு விஜய்யின் உரையைக் கேட்க வேண்டும் என்பது கடடாய மா ? ஜன நடமாடடம் உள்ள இடங்களில் நோய்த்தொற்று கூட ஏற்படலாம். கர்ப்பிணிகள் வயோதிபர் சிறுகுழந்தைகளை தவிர்த்திருக்கலாம். வரும் மக்களுக்கு என்ன முன்னேற்பாடுகள் செய்தார்கள். விஜய் பதில் சொல்ல வேண்டும். .
4 days 17 hours ago
https://youtu.be/T23vL6AFaL4?si=CbN_HN9YKUfPjA_w சீமான் மரங்களின்மாநாடு கூட்டத்தில் பேசும்பொழுது ஆரம்பத்திலேயே இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு தனN இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
4 days 17 hours ago
இது ஒன்றும் முதல் தடவை நடக்கும் விபத்தல்ல இதற்கும் முன்னரும் நடந்துள்ளது என்பதுதான் நிலமையின் தீவிரத்தினை உணர்த்துகிறது. ஒரு கூட்டத்தினை கூடவா பாதுகாப்பாக நடத்தமுடியவில்லை இவர்களுக்கு? ஆனால் தமிழக அரசியல் சாக்கடையில் இது ஒரு சாதாரண விடயமாக போய்விடும், பாதிக்கப்ப்பட்ட குடும்பங்களுக்கு வழமையான வருத்தம், உதவி தொகை என கடந்து விடுவார்கள், ஆனால் அந்த குடும்பங்கள் மட்டும் மீள முடியாத இழப்பில் இருந்து கொண்டே இருக்கும். இன்னும் சில காலங்களின் பின்னர் இன்னொருவர் வருவார் மாற்றம் கொண்டுவருகிறேன் என, ஆனால் மக்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இருக்காது, ஆனால் அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் இருக்கும். தலமை பண்பு என்பது இயல்பாக வரும் விடயமாக இருந்தாலும் அதற்கான கற்கை நெறிகைகளினூடாகவும் பயிற்றுவிக்கிறார்கள், முதலில் தேர்தல் ஆணையகம் தேர்தலில் ஈடுபடும் அனைவருக்கும் இந்த கற்கை நெறியினை கட்டாயமாக்க முற்படவேண்டும். முதலில் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடு காணப்பட்டபோதும் குறித்த கட்சி கூட்டம் நடத்த அனுமதித்த அரசும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும், பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணமான அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் (எதிர்காலத்தில் இவ்வாறு ஒரு தவறு நிகழாது), அதுதான் ஒரு நல்ல அரசிற்கு அடையாளம்; அவ்வாறு நிகழாவிட்டால் அந்த அரசு கூட இந்த நிகழ்விற்கு காரணகர்த்தாக்களே.
4 days 17 hours ago
இதுவே திமுகவின் கூட்டத்தில் நடந்து இருந்தால் திமுகவின் தலைவர் பத்திரிகையாளர்களி; கேள்விகளுக்கு முகம் கொடுத்து இது அதிமுகவின் சதி என்று கூசாமல் பதிலளித்துவிட்டு கூலாகச் சென்றிருப்பார். இது தான் அரசியல். விஜை போல் பத்திரிகையாளர்களை பார்த்து பயந்து ஓடமாட்டார்.
4 days 17 hours ago
திமுக இப்படித்தான் அரசியல் செய்யும். இதுதான் அரசியல்.காசை வாங்கிக்கொண்டு வாக்குப் போட்டு திமுக வை தெரிவு செய்து விட்டு இப்போது அழுது என்ன பலன். இலங்கையில்>வங்கதேசத்தில்>நேபாளத்தில்நடந்தது போல ஒரு பெரும் எழுச்சி பெற்று திமுக குடும்ப ஆட்சியை இன்றே வெளியேற்றும் புரட்சியைச் செய்யுங்கள் .
4 days 18 hours ago
CM MK Stalin | விஜய் சென்னை வந்த நிலையில் கரூர் புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் | சினிமா வில்லன்களை விட மோசமானவர்கள் திமுக வினர்
4 days 18 hours ago
ஊடகங்களில் இது போருக்கான ஆயத்த நடவடிக்கை போலவே காட்ட முற்படுகிறார்கள் (விசேட பயிற்சிகளில் ஈடுபடும் இராணுவத்தினர்), இது ஒரு பிரச்சார உலகம் அதுவும் ட்ரம்ப் வேறு அதிபராக இருக்கிறார்.🤣 ஆனால் உலக அதிகார பீடங்கள் முட்டாள்தனமாக பின்விளைவுகளை பற்றி நினைக்காதவர்களின் கைகளில் இருப்பதால் எதுவும் நடக்கலாம்.
4 days 18 hours ago
https://youtu.be/LXObvOXMvFs?si=pMEBNT7KhLKf6qMQ
4 days 18 hours ago
41வது கேள்வி. 400 என்று கேக்க நினைத்தீர்களோ. 200 ஓட்டங்கள் எல்லாம் மிக இலகுவாக அடிக்கினம். சமீபத்தில அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 400 ஓட்டங்களை துரத்தி அடிக்கப் பார்த்தவை. அவுஸ் 412 - இந்தியா 369
Checked
Thu, 10/02/2025 - 16:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed