4 days 8 hours ago
இரண்டு பேரும் ஒரே கடையில்தான்... சோறு சாப்பிடுகின்றவர்களாம். 😂
4 days 8 hours ago
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு! த. வெ. க தலைவர் விஜய்! தமிழ்நாடு – கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கையொன்றை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று (27) நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே நம் உயிரான உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 இலட்சம் ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 இலட்சம் ரூபாவும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை. அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த கரூர் மாநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448756
4 days 9 hours ago
ancient method of well water pumping |நாட்டுப்புற பாட்டு |folk song for agriculture |ஏற்றப்பாட்டு..........! 😃
4 days 9 hours ago
4 days 9 hours ago
4 days 9 hours ago
சாதுக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ..........!
4 days 9 hours ago
4 days 10 hours ago
https://www.facebook.com/share/p/1ZHehqq6fZ/?mibextid=wwXIfrஎச்சரிக்கை - கொலைகாரத் திமுக சந்திரன் ராஜாவின் பதிவு 100% திட்டமிட்ட அரசியல் பலிகள்தான்.ஒரு ஒழுங்கான திட்டம் தெரிகிறது.செந்தில் பாலாஜி உட்பட காவல்துறை அதிகாரிகள் மிக சரியாக 8.15 நிமிடங்களில் அங்கே ஆஜர்..அதாவது மாவட்ட SP மட்டும் அல்ல வெளியே இருந்து உயர் அதிகாரிகள் வரை.. 68 கள்ள சாராய படுகொலைக்கு கள்ள குறிச்சி பக்கம் எட்டி பார்க்காமல் இருந்த ஸ்ரீமதி மரணம் தொடர்பாக எழுந்த கலவரத்தின் போது கூட வெளியே தலை காட்டாமல் பதுங்கி இருந்த வயிற்று பலி மகேஸ்..சூத்திரதாரியான செந்தில் நெஞ்சில் முகம் புதைத்து அழுகிறார்.... துபாய்க்கு பாலிடாயில் சென்றால் அதாவது பெத்தம்மாக்களை மாதத்தில் பலமுறை சந்திக்கச் சென்றாலும் வராத செய்தி குறிப்பு..இன்று குடும்பம் சகிதமாக அதிகமாக ஊடகங்களில் காட்டப்படுகிறது. குறிப்பாக அட்டென்சனுக்காக பாலிடாயில் மகளைக்கூட காட்டுகிறார்கள். திராவிடர்கள் எதிர் பார்த்ததோ ஒன்றிரண்டு பலிகள். அதை தொடர்ந்து விஜய்யை மெளனிக்க வைப்பது .. ஆனால் நிகழ்ந்ததோ..மாபெரும் படுகொலை..! மாவடியன் கோயில் தெரு என்கிற பகுதியில் உள்ள திமுகவின் ரவுடிகளின் தலைமையில்தான் இந்த கலவரம் வித்திடப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். அங்கேதான் முதலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருக்கிறது... அதை தொடர்ந்து காவல்துறை கூட்டத்திற்குள் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.. தொலைக்காட்சிகளின் பல டிரோன் ஷாட்டுகள் அதை உறுதி செய்து இருக்கிறது. அதற்குள் சொல்லி வைத்த மாதிரி திடல் திண்ணி முன்களப்ஸ்கள் ஒரே மாதிரிக் கூவுகிறார்கள்.. ரைட்டப்கள் எழுதுகிறார்கள்.. சரி இப்போது 10 லட்சம் நிவாரணம் பொம்மையார் அறிவிக்கிறார் நேரடியாக களத்திற்கு வருகிறாராம் வாட் நெக்ஸ்ட்.. அல்லு அர்ஜூனை போல விஜய்யை கைது செய்ய போகிறார்களா..? நிச்சயமாக மாட்டார்கள் ,செய்ய முடியாது ஏற்கனவே சாமனியர்கள் இதன் பின்னணி திமுகதான் என்பதை உணர்ந்து காறி உமிழ்கிறார்கள். பொது மக்களின் கோபம் விஜய்யின் மேல்வராமல் திமுகவின் திட்டமிட்ட படுகொலை என்பதாகத்தான் இருக்கிறது. கட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.. ஜெனரேட்டர் வயர் கட் செய்யப்படுகிறது தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்படுகிறது... இதையெல்லாம் இயல்பான கூட்ட நெரிசல் என்று சொன்னால் நம்புவதற்கு மக்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. அரசு இயந்திரம் மொத்தமாக செயலிழந்து இருப்பதைத்தான் காட்டுகிறது அதில் உள்ள திட்டமிடல் கொஞ்சம் தட்டையாக அறிவு இருப்பவர்களுக்குக்கூட புரியும்...! ஆக விஜய்யை கைது செய்தாலும் பொம்மையாருக்கு பிரச்சினை.. இனி விஜய் திமுக மிரட்டலுக்கு பயந்து திமுக சார்பு நிலை எடுத்தாலும் அதுவும் எந்தவிதத்திலும் பயன் தராது.. ஆக திராவிடர்களின் கொடூரமான திட்டம் தோல்வியில்தான் முடிந்து இருக்கிறது மக்கள்தான் பலியாடுகள் ஆகி இருக்கிறார்கள்...! பிரதமர்,உள்துறை அமைச்சர் ,ஜனாதிபதி உட்பட அனைவரும் இதை உற்றுக் கவனிக்கிறார்கள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். காலையில் எடப்பாடியார் வருகிறார்.. CBI விசாரணை நிச்சயமாக கோருகிறார்.. ஓங்கோல் குடும்பத்தின் கடைசி அதிகார பசிக்கான பலியாக இது இருக்கட்டும்.தமிழர்கள் இந்தக் குடும்பத்தின் கொடூர அதிகார பசியில் இருந்து தப்பிக்க வேண்டும்...! 2009 ல் லட்சக்கணக்கான உலக தமிழர்கள் அழிக்க படுவதற்குக் காரணம் துணைபோன திமுக. கடந்த நான்கு வருடத்தில் விமான கண்காட்சியில் 5 பேர் பலி கள்ளக்குறிச்சியில் 68 பேர் பலி என்று தொடர்ந்து தமிழகத்தில் பலிகளை அரங்கேற்றுகிறார்கள்..! இதில் வேடிக்கை என்னவென்றால் அதே அருணா ஜெகதீசன் குழு விசாரணைக்கு உத்தரவாம் . அவர் குற்றவாளி என்று சொன்ன அதிகாரிக்குத்தான் திமுகவினர் பதவி உயர்வு கொடுத்தார்கள்.காலக்கொடுமை ஆக தீய திராவிடர்களின் திட்டங்கள் நெல் முனையளவும் பலிக்கவில்லை.அப்பாவிகளுக்கு ஏற்பட்ட மரணங்கள் மட்டுமே கொடூரமானது.மத்திய ஒன்றிய அரசு இந்த விடயத்திலும் அமைதியாக கடந்து சென்றால்...அவர்கள் தமிழ் நாட்டில் பிஜேபி என்கிற கட்சி எந்த காலத்திலும் மக்களின் நம்பகத்தன்மையை அடைய போவதில்லை. நிச்சயமாக காவல்துறை அமைச்சர் மீதும் தமிழ் நாட்டு உள்துறை அமைச்சர் மீதும் மத்திய அரசு உடனடியாக விசாரணக்கு உட்படுத்தபட வேண்டும்..! இங்கே நிகழ்ந்து இருப்பது மிகப்பெரிய மனித சூறையாடல். நீதிமன்றம் தன்னார்வமாக முன்வந்து CBI விசாரணக்கு உத்தரவிடவேண்டும்..! திராவிடர்களின் அத்தனை கருணாநிதித்தனமும்..செந்தில் பாலாஜி போன்ற அயோக்கிய அரசியல் அடியாட்களின் வேடமும் கலைய வேண்டும்.. தமிழர்கள் ஒன்றும் அரசியல் பலியாடுகள் அல்ல என்கிற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் எற்பட வேண்டும்..! விஜய் போன்றவர்கள் அரசியல் செய்யும் முன்பு ...தன்னோடு இருக்கும் டபுள் ஏஜெண்டுகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் திமுகவின் கையாள்களான புஸி,ஆதவ் ரெட்டி யெல்லாம் முட்டு சந்தில் தான் கொண்டு வந்து விடுவார்கள் என்று பல முறை எழுதி இருக்கிறேன் இதுதான் அந்த முட்டு சந்து..! விஜய் ஓடி ஒழியாமல் தைரியமாக இந்த சூழலை எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது..! இல்லாவிட்டால் அரசியல் துறவறம் போவது விஜய்யை நம்பும் அப்பாவி மக்களுக்கு நல்லது.. பின்குறிப்பு: திமுக கையில் அதிகாரம் இருப்பது தமிழர்கள் தங்களுக்கு தாங்களே செய்துகொள்ளும் தற்கொலைக்குச் சமம். விஜைக்கு இக்கட்டான நேரத்தில் எல்லாம் சீமான் தோள் கொடுக்கிறார்.அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கும்ஆனால் உற்ற நேரத்தில் தோள் கொடுக்க வேண்டும்.
4 days 10 hours ago
4 days 10 hours ago
“ஏக்கிய இராச்சிய” அரசியலை முன்னெடுத்த தமிழ் அரசியல் வாதிகள் வெளிப்படையாகவோ உண்மையாகவோ இருக்கவில்லை. நாங்கள் இலங்கையில் நடக்கின்ற அரசியல் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். (விஜய்க்கும் சீமானுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் எங்கள் அரசியலுக்கு நாங்கள் கொடுப்பது இல்லை என்று ஒரு கவலை)
4 days 10 hours ago
[ நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும். ] சரியான கருத்து
4 days 10 hours ago
4 days 10 hours ago
ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி jeyamohanSeptember 28, 2025 ரமேச்ன் 2023 விஷ்ணுபுரம் விழாவில் ரமேஷ் பிரேதன் சென்ற 25 செப்டெம்பர் அன்று இரவு ஒரு கவிதையை எழுதி தன் முகநூலில் வலையேற்றியிருந்தார். அது ஒரு காதல் கவிதை. அதன்பின் சில மணிநேரங்களில் மயக்கமுற்றிருக்கக் கூடும்.கடுமையான இதய அடைப்பு மற்றும் ரத்த அழுத்த உயர்வு. உடனடியாக 26 காலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். 27 செப்டெம்பர் 2025 மாலை 520க்கு உயிர்பிரிந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் நம் நண்பர்கள் உடனிருந்தனர். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் செய்திகளை அளித்தனர். முதல் நாளிலேயே ரமேஷ் மீள்வது அரிதினும் அரிது என்று கூறிவிட்டனர். மூளையில் முழுமையான ரத்தக்கசிவு. உள்ளுறுப்புகள் செயலிழந்துகொண்டிருந்தன. இதயம் நின்று நின்று இயங்கியது. கருவிகளின் உதவியுடன் உயிர் நீடித்தது. கருவிகளை எப்போது நீக்கவேண்டும் என்ற முடிவை எடுப்பது மட்டுமே 26, 27 ஆம் தேதிகளில் எஞ்சிய கேள்வியாக இருந்தது. சென்ற 2019 ல் ரமேஷ் என்னிடம் “எனக்கு விஷ்ணுபுரம் அவார்டு குடுய்யா” என்றார். “இப்ப என்ன அப்டி அவசரம்? வாலிப வயசுதானே?” என்றேன். “பணம் தேவை இருக்கு” என்றார். “பணம்தானே? அத அனுப்பிடறோம்…” என்றேன். அந்தப் பணத்தை அனுப்பினோம். அதன்பின் மீண்டும் 2021 ல் அழைத்தார். “இப்பயாச்சும் அவார்டு குடுய்யா. நான்லாம் கோவிட்ட தாண்டமாட்டேன்” என்றார். “உங்களுக்கெல்லாம் கல் மாதிரி ஆயுசு… அவார்டு முறையாத்தான் வரும்… சின்னப்பசங்களுக்கு குடுக்கிற அவார்டு இல்ல இது” என்றேன். அதன்பின் அவ்வப்போது தன் ஆயுள் முடிவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் கோவிட் அதன்பின் வந்த ஒரு நெருக்கடிக்காலம் ஆகியவற்றை கடந்துவிட்டார். அவருக்கு விருதை வரிசையை முந்திக்கொண்டு அறிவிப்பதே அவருடைய உடல்நிலை, ஆயுள் பற்றி நானும் ஐயப்படுகிறேன் என்று ஆகிவிடுமோ என்னும் குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆகவே அவருடைய நிரந்தர ஐயத்தை வேடிக்கையாகவே கடந்துகொண்டிருந்தேன். இந்த முறை அவருக்கு இயல்பாகவே வரிசையில் இடம் அமைந்தது. அதை ஆகஸ்டில் அவரிடம் சொன்னேன். “இப்பவே குடுத்திரு… டிசம்பரில் நான் இருக்கமாட்டேன்” என்றார். “நீங்க இருப்பீங்க….” என்றேன். மீண்டும் ஜூனில் அழைத்து “செப்டெம்பரில் தூரன் விழாவோட சேத்தே நடத்திரு… இருப்பேனான்னு தெரியலை” என்றார். ஆனால் உண்மையில் உடல்நிலை சற்று மேம்படத் தொடங்கியிருந்தது. ஃபோனில் அழைத்தால் உடல்நிலை மேம்படுவதைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் நம்பிக்கை வலுப்பெற்றது, நலம்பெறுவது இயல்வதல்ல. ஆனால் இன்னும் சில ஆண்டுகள் வாழ்வார் என எண்ணினேன். விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபின் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார். உண்மையில் அவர் உடல் மிகவும் நலிந்து எல்லையை அடைந்துகொண்டிருந்தது. நான் கண்ட அந்த ஊக்கம் என்பது விருது அளித்த மகிழ்ச்சியின் விளைவாக அவரே உருவாக்கிக்கொண்டதுதான். சென்ற பதினைந்தாண்டுகளில் அவரை அத்தனை உற்சாகமாக நான் பார்த்ததே இல்லை. வாழ்த்துவதற்காக அவர் எண், மின்னஞ்சல் இரண்டையும் கொடுத்திருந்தேன். தினம் இருபது முப்பதுபேர் கூப்பிட்டு வாழ்த்தினர்.தினம் மின்னஞ்சல்கள். “நோய் ஆஸ்பத்திரின்னு இல்லாம ஒரு ஃபோன் வர்ரதே இப்பதான்… ” என்று என்னிடம் சொன்னார். “இத்தனை பேர் படிச்சிருக்கானுக. இவங்கள்லாம் இதுவரை எங்க இருந்தாங்க?” அழைத்த ஒவ்வொருவரையும் நினைவில் வைத்திருந்தார். குறிப்பாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்கள், இளம்பெண்கள் அழைத்தால் மிகுந்த குதூகலம் அடைந்தார்.அடுத்த தலைமுறை வாசிக்க வருகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் அழைத்தபோது ‘உங்க மனைவி கிருபா நேத்து கூப்பிட்டாங்க’ என்றாராம். இருவரையும் அவருக்கு முன்னர் தெரியாது. “ஒருத்தன் சிறுபத்திரிகைச் சூழலுக்கு வெளியே இருந்து கூப்பிட்டாலே சந்தோஷமா இருக்கு. புதிய ஆளுங்க வர்ராங்க” என்று நண்பரிடம் சொன்னார். நான் அவரிடம் செப்டெம்பர் 22 ஆம் தேதி, திங்களன்று பேசினேன். “உடம்பு நல்லா இருக்கு. கொஞ்சமா சுவரைப்பிடிச்சு நானே டாய்லெட் போய்ட்டேன்” என்று சொன்னார். நீண்டகாலமாக அவரால் படுக்கைவிட்டு அசையமுடியாத நிலை இருந்தது. ஆகவே அது மிகப்பெரிய முன்னேற்றம். நான் உற்சாகம் அடைந்து நிறைய பேசினேன். பெரும்பாலும் கேலி கிண்டல். தமிழிலுள்ள ஏறத்தாழ எல்லா எழுத்தாளர்களையும் கேலி செய்துவிட்டோம். குறிப்பாக யுவன் சந்திரசேகரை. ரமேஷ் எனக்கு குற்றாலத்தில் கலாப்ரியா நிகழ்த்திய பதிவுகள் அரங்கில் அறிமுகமானார். வழக்கம்போல மிகக்கடுமையான எதிர்க்கருத்துக்களுடன் மோதிக்கொண்டோம். ஆனால் விஷ்ணுபுரம் 1997ல் வெளியானபோது ரமேஷ் அதை இந்தியாவில் எழுதப்பட்ட முதன்மையான இலக்கியப்படைப்பு என மதிப்பிட்டார்- அதை எழுதியுமிருக்கிறார். நேரில் சந்தித்தபோது எங்கள் உறவு சட்டென்று அணுக்கமாக ஆகியது. என்னைத் தழுவிக்கொண்டு “நாங்க கொள்கையா பேசினதெல்லாமே உங்க கிட்டேருந்து எழுத்தா வந்திருச்சி” என்றார். அது எனக்கும் மகிழ்ச்சி அளித்தது. விஷ்ணுபுரம் போன்ற ஒரு படைப்பை புரிந்துகொள்ள அன்றுமின்றும் சாமானிய வாசகர்களால் இயல்வதில்லை. ஒரு படைப்பில் கருத்துக்கள், உணர்ச்சிகள், தரிசனங்களின் முரணியக்கமாக உருவாகி வருவது என்ன என்று அவர்களுக்கு பிடிகிடைப்பதில்லை. அதன் ஏதேனும் சிலபகுதிகள், சில வரிகளைக்கொண்டு அதை வகுத்துவிடுவதையே இங்கே உள்ள அரசியல்சார்ந்த வாசிப்பு கற்றுத்தருகிறது. விஷ்ணுபுரம் பற்றி அன்று ஒரு பெரும் கூட்டம் அது இந்துத்துவ நாவல் என்று பிரச்சாரம் செய்து வந்தது. அதை ரமேஷ் ‘பௌத்தம் கடந்த பௌத்த நாவல்’ என்று வரையறை செய்தார். அறுதியாக அந்த பேருருவன் தொல்தந்தை மட்டுமே என்றும், அவனுடைய புரண்டுபடுத்தலில் அந்நாவல் முழுமையடைவதும் அவரை மிகவும் கவர்ந்திருந்தன. ‘எல்லாமே போய்ச்சேரும் பழங்குடிமனம்’ என்ற ஒன்றை வெளிப்படுத்திய நாவல் என்றார். அதன்பின் எங்களுக்குள் நட்பு உருவாகியது. ரமேஷ், பிரேம், மாலதி எங்கள் பத்மநாபபுரம் இல்லத்துக்கும், பின்னர் பார்வதிபுரம் இல்லத்திற்கும் வந்து தங்கினர்.நான் ஊட்டியிலும் பிற ஊர்களிலும் ஒருங்கிணைத்த கவிதை உரையாடல் அரங்குகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டனர். ரமேஷின் வாழ்க்கையில் பின்னரும் நான் தொடர்புகொண்டிருந்தேன். நடுவே ஓர் இடைவெளி. அதற்கான காரணங்கள் நானோ ரமேஷோ அல்ல. அதை பிறிதொரு தருணத்தில் சொல்லவேண்டும். 2011 ல் வெள்ளையானை நாவல் நண்பர் அலெக்ஸின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்தபோது அவர் புதுச்சேரியில் ஒரு மதிப்புரைக்கூட்டம் ஏற்பாடு செய்தார். அந்நிகழ்ச்சி முடிவில் மீண்டும் ரமேஷைச் சந்தித்தேன். மெலிந்து ஒடுங்கி அழுக்கு வேட்டியும் சட்டையுமாக இருந்தார். “நல்லா இருக்கீங்களா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டேன். “நல்லா இல்லை” என்றார். நிகழ்ந்ததை அவர் சொன்னார். பிரேம், மாலதி இருவரும் அவரை கைவிட்டுவிட்டதாகவும், ஓராண்டுக்குமேல் ஒரு தோப்பில் காவலராக பணியாற்றியதாகவும், உடல்நிலை மோசமாக ஆனதனால் அவ்வேலையைச் செய்யமுடியாமல் அப்போது பாரதி நினைவில்லம் வராந்தாவில் வாழ்வதாகவும் சொன்னார். உறவினர்களிடம் செல்ல அவர் விரும்பவில்லை. உறவுகளை முன்னரே அவர் வெட்டிவிட்டிருந்தார். இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர் நண்பர்கள் உணவு வாங்கி அளித்து உதவிவருவதாகவும் பெரும்பாலும் நினைவில்லம் வருபவர்களிடம் கையேந்தி வாழ்வதாகவும் சொன்னார். “பிச்சை எடுக்கிறேன் ஜெயமோகன்” என்றார். நான் உணர்ச்சிவசப்பட்டு அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். “நான் சாப்பிடுற வரை நீங்களும் சாப்பிடுவீங்க. நான் கூரைக்குக் கீழே இருக்கிற வரைக்கும் நீங்க தெருவிலே இருக்க மாட்டீங்க” என்றேன். அன்றே அவரை ஒரு வாடகை அறையில் அலெக்ஸ் உதவியுடன் தங்கவைத்தேன். ஒரு வாரத்தில் மணி ரத்னம் அளித்த நிதி, என் சொந்த நிதி மற்றும் கே.வி.அரங்கசாமி அளித்த நிதியுடன் அவருடைய அக்காவின் வீட்டிலேயே ஒரு பகுதியை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்தோம். அப்பகுதியை செப்பனிட்டு குளிர்சாதன வசதி செய்து, கட்டில் போன்றவை வாங்கி அவரை குடியமர்த்தினோம். குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி என பிற பொருட்களை வாங்க பல்வேறு நண்பர்கள் உதவினர். அவர் ஓர் இல்லத்திற்குச் சென்றதுமே அமைதியடைந்தார். அதன்பின்னர் தான் கைவிடப்பட்டதைப் பற்றிய அகக்கொந்தளிப்பு உருவாகியது. முகநூலில் வசைகளை எழுதத்தொடங்கினார். நான் புதுச்சேரிக்குச் சென்று அவரிடம் பேசினேன். “நீங்கள் இந்தக்கசப்பிலிருந்து வெளியேறாத வரை உங்களால் எழுத முடியாது. உங்களுடைய அடிப்படைப்பிரச்சினைக்கு திரும்புங்கள்” என்றேன். அவர் அழுது கொந்தளிக்க நான் திரும்பத் திரும்ப “எழுதுங்கள். படைப்பு ஒன்றே மீளும் வழி. அது ஒன்றே உயிர்வாழ்வதன் பொருள்” என்றேன். சீற்றத்துடன் நான் சொன்ன ஒருவரி அவரை புண்படுத்தியது. “நான் நிதியளிப்பது ரமேஷ் என்ற எழுத்தாளனுக்கு. இந்த உடலுக்கு அல்ல” என்றேன். அவர் என்னை வசைபாடினார். “உனக்கு வந்தா தெரியும்…” என்றார் ஆனால் நான் வந்தபின் நீண்ட கடிதம் எழுதினார். “நீ சொல்றதுதான் சரி. உன்னோட கிப்ட் நீ யார்னு உனக்கு சின்னவயசிலேயே தெரியும்கிறதுதான்… எனக்கு இப்ப தெரியுது. நான் எழுத்தாளன், கலைஞன், அது மட்டும்தான். வேற ஒண்ணுமே இல்லை” அதன்பின்னர்தான் அவர் தன் தீவிரமான படைப்புகளை எழுதினார். அவருடைய படைப்புகள் அவர் இணைந்து எழுதியவையாகவும் வெளிவந்துள்ளன. ஆனால் எந்த வாசகரும் அவற்றில் இருப்பது அவருடைய ஆளுமை மட்டுமே என அறியமுடியும். இந்த இரண்டாம் கட்ட ரமேஷ் அவருக்கே உரிய பயணங்களின் வழியாக தமிழ்மெய்யியல் களத்திற்குள் நுழைந்தவர். அதுவே அவருடைய கலைச்சாதனை. ரமேஷிடம் தொடர்ச்சியாக தொடர்பிலும் உரையாடலிலும் இருந்தேன். கடலூர் சீனு, சிவாத்மா என புதுச்சேரி நண்பர்கள் தொடர்பில் இருந்தார்கள். ரமேஷ் இறுதியாக வெளியே வந்தது 2013ல் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோதுதான். அப்போதும் உடல்நிலை மோசமாக இருந்தது. அவர் வர விரும்பியமையால் பயண ஏற்பாடு செய்திருந்தோம். அன்று தன் வாசகர்கள் பலரை சந்தித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார். என்னிடம் விடைபெற்றபோது கண்களில் கண்ணீர் இருந்தது. “போதும், இத்தனைபேர் வாசிக்கிறாங்கன்னு தெரிஞ்சதே போதும்” என்றார். மீண்டும் புதுச்சேரிக்குச் சென்ற சிலநாட்களிலேயே பக்கவாதத் தாக்குதல். அதன்பின் வெளியே சென்றதெல்லாமே மருத்துவத்தின் பொருட்டுதான். ஆகவே இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்தே தீர்வேன் என்று உறுதியாக இருந்தார். ஓர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அழைத்து வருவதாகச் சொன்னோம். மேடைக்கு ஒரு தனிப்பாதை அமைக்கவும் முடிவுசெய்திருந்தோம். ரமேஷின் நோய் என்பது அவருடைய மரபணுவில் உள்ளது. பிறப்பு முதல் மிகமிக உயர்ந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் என் இல்லத்திற்கு பிரேம், மாலதியுடன் வரும்போதே அச்சிக்கல் கடுமையாக இருந்தது. அவரால் குனியமுடியாது, மயங்கி விழுந்துவிடுவார். முகத்திலுள்ள சிறு பருக்கள் வெடித்து ரத்தம் கசியும். அவருடைய ரத்த அழுத்த அளவு நம்பவே முடியாத அளவு மிகுதி. சாமானிய ரத்த அழுத்தத்தைவிட இரு மடங்கு. அவர் உடல் அதற்கு பழகியிருந்தமையால்தான் அவர் வாழமுடிந்தது. 2010 ல் எங்கள் கவனிப்புக்கு வந்தபின் தொடர்ச்சியாக மருத்துவக் கவனிப்பிலேயே இருந்தார். பக்கவாதம், உள்ளுறுப்புகள் செயலிழப்பு எல்லாமே ரத்த அழுத்தத்தின் விளைவுதான். ஆனால் வாழ்வின்மீதான பற்று உடலை தாக்குப்பிடிக்கச் செய்தது. பதிமூன்றாண்டுக்காலம் நோயுற்றிருந்தார். படுக்கையில் மலம் கழிப்பவராகவும் இருந்தார். ஆனால் இறுதிக்கணம் வரை கலைஞனாக வாழ்ந்தார். அது மட்டுமே தான் என உணர்ந்தவராக விடுதலை அடைந்தார். வீடுபேறு என்பது வாழ்விலேயே அடைவது என்பதே என் கொள்கை. அவர் அவ்வகையில் நிறைவாழ்க்கை. அஞ்சலி ரமேஷ். நான் ஒரு துளியும் குறைவைக்கவில்லை என ஒரு முறை சொன்னீர்கள். அந்நிறைவே போதுமானது இன்று. https://www.jeyamohan.in/223291/
4 days 10 hours ago
கரூரில் நேற்றிரவு விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழப்பு - சம்பவ இடத்தின் தற்போதைய காட்சி. Vijay Kumar ############################### இந்த இடத்தைப் பார்க்கும் போது.... நேற்று எவ்வளவு அல்லோல கல்லோலப் பட்டு அந்த 39 பேரும் அவலமாக இறந்திருப்பார்கள் என்று ஊகிக்க முடிகின்றது. இவ்வளவு மக்கள் கூடும் அரசியல் கூட்டங்களுக்கு சிறுவர், சிறுமிகளை ஏன் அழைத்துச் செல்கிறார்கள் என தெரியவில்லை. சிறுவர், சிறுமிகளுக்கு அரசியல் தெரியுமா, சினிமா தெரியுமா, விஜயை தெரியுமா.... ஏண்டா உங்களுடைய அரிப்புக்கு, அதுகளை கூட்டிக் கொண்டு போய் அதுகளின் உயிரை எடுக்கின்றீர்கள்.
4 days 10 hours ago
காற்றாலையும் என்பிபியும்! மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலைக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் சில கிழமைகளுக்கு முன்பு அரசுத் தலைவரை சந்தித்து உரையாடி இருந்தார். அதில் அவர் பேசிய மற்றொரு விடயம் பின்னர் ஊடகங்களில் சர்ச்சைக்குரியதாக மாறியது.மன்னார் மாவட்ட வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்காக அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆயர் கேட்டதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளிவந்தது. அந்த ஆஸ்பத்திரி மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது ஏற்கனவே தரப்பட்ட அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்திடம் தாரை வார்த்து கொடுக்கும் ஒரு முயற்சி என்று அதை விமர்சித்தவர்கள் கூறினார்கள். மன்னாரில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.ரவிகரனும் சத்தியலிங்கமும் அதை எதிர்த்துப் பேசியதாகவும் தெரிகிறது. மாகாண அதிகாரத்தில் கீழ்வரும் ஒரு வைத்தியசாலையை மத்தியிடம் கொடுப்பது என்பது என்பது காற்றாலை, கனிமவள அகழ்வு என்பவற்றிற்கு எதிரான போராட்டங்களையும் பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன மன்னார் மறைமாவட்ட ஆயர் வெளிநாட்டில் இருந்த காலத்தில் இந்த விமர்சனங்கள் மேலெழுந்தன. ஆனால் அதே காலப்பகுதியில் இந்தியா அந்த ஆஸ்பத்திரியின் அபிவிருத்திக்கு வேண்டிய நிதி உதவியைச் செய்வதற்கு முன் வந்திருக்கிறது.அந்த ஆஸ்பத்திரியைத் தரமுயர்த்துவதற்கு பெருந்தொகையான பணத்தைத் தருவதற்கு இந்தியா முன் வந்திருப்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர் பின்னர் உறுதிப்படுத்தினார். ஆஸ்பத்திரி தொடர்பான செய்திகளின் பின்னணியில்,ஆயர் வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரவும் வெளிநாட்டில் இருந்த ஒரு காலகட்டத்தில்,காற்றாலை தொடர்பான மக்களின் எதிர்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு காற்றாலைகளை நிறுவுவது என்ற முடிவை அரசாங்கம் அறிவித்தது. அந்த முடிவை எதிர்த்து காற்றாலை நிறுவுவதற்கான உபகரணங்களை தீவுக்குள் கொண்டுவர விடாமல் தடுத்து மின்னார் மக்கள் நடாத்திய போராட்டத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் பலத்தைப் பிரயோகித்திருக்கிறது.அதில் கத்தோலிக்க மதகுருமார் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மன்னார் மக்கள் நாளை அதாவது வரும் திங்கட்கிழமை கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மன்னார் மக்கள் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலுக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள். இப்போராட்டங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களோடு இணைந்திருக்கிறார்கள். வெளிமாவட்டங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக இப்போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை அண்மையில் கொழும்பு வரை விஸ்தரித்து இருந்தார்கள். கனிமவள அகழ்வுக்கு எதிரான மின்னார் மக்களின் கோரிக்கைகளை யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் காற்றாலை தொடர்பான விடயத்தில் எதிரும் புதிருமான கருத்துக்கள் உண்டு. மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை. காற்றாலையும் சூரிய மின்கலங்களும் உலகின் பல பாகங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐரோப்பாவில் காற்றாலைகள் தொடர்பான விமர்சனங்களை கவனத்தில் எடுத்து புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காற்றாலைகளில் உள்ள விசிறிகளில் பட்டு பறவைகள் இறப்பது தொடர்பாகவும் அவை அதிக இரைச்சலை எழுப்புவது தொடர்பாகவும் விமர்சனங்கள் உண்டு. இந்த விமர்சனங்களை உள்வாங்கி தன்னைத் தானே சுற்றும் விசிறி இல்லாத காத்தாடிகளை ஐரோப்பா உருவாக்கிக் கொண்டிருக்கிறது.ஜெர்மன் இந்த விடயத்தில் முன்னோடியாக காணப்படுகிறது. மேலும் அண்மையில் கிடைத்த ஓர் ஆய்வு முடிவின்படி காத்தாடிகளின் செட்டைகளில் பட்டு இறக்கும் வலசைப் பறவைகளின் இழப்பு விகிதத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வெற்றியளித்திருக்கின்றன. அதன்படி காற்றாலைகளின் ஒரு சட்டையை கறுப்பாக்கினால் கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கையை 70% ஆக குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காற்றாலை மின்சாரம் தொடர்பாக எழுப்பப்படும் விமர்சனங்களை உள்வாங்கி ஐரோப்பா புதிய முன்னேற்றகரமான காற்று மின்சக்தி திட்டங்களை உருவாக்கிக் கொண்டு வரும் ஒரு பின்னணியில், மன்னாரில் காற்றாலை மின்சக்தி திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடுவது குறித்து தமிழ் மக்கள் மத்தியிலேயே ஒரு பகுதியினர் கேள்வி எழுப்புவதுண்டு. காற்றாலை மின் சக்தியை மன்னார் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்குரிய காரணங்களைத் தனியாக விவாதித்துக் கொள்ளலாம். ஆனால் காற்றாலை மின்சக்தி திட்டம் எனப்படுவது சூழல் நேய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்று. சூழல் நேயம் என்பது என்ன? சுற்றுச்சூழல் என்பது அஃறிணைகள் மட்டுமல்ல. உயர்திணைகளும்தான். அதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதே மனிதனின் நோக்கு நிலையில் இருந்து உண்டாகிய ஒரு சிந்தனைதான். பூமியைக் குறித்த எல்லா வியாக்கியானங்களும் மனிதனின் நோக்கு நிலையிலிருந்து உருவாக்கப்பட்டவைதான். சுற்றுச்சூழல் என்பது அஃறினை,உயர்திணை அனைத்தும் அடங்கியது. எனவே ஒர் அபிவிருத்தித் திட்டம் குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு நேயமன ஒர் அபிவிருத்தி திட்டம் என்பது அப்பகுதி மக்களால் வரவேற்கப்பட வேண்டும். அப்பகுதி மக்களின் பங்கேற்போடு அதனை உருவாக்க வேண்டும்.அப்பொழுதுதான் அது ஆகக்கூடிய பட்சம் சுற்றுச்சூழலுக்கு நேயமனதாக இருக்கும். மன்னார் மாவட்டத்தில் காற்றாலைகளுக்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மட்டும் வரவில்லை கத்தோலிக்க திருச்சபையினர் மத்தியில் இருந்து மட்டும் வரவில்லை கொழும்பில் தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் மத்தியில் இருந்தும் வந்தது. காலி முகத்திடலில் “கோட்டா கோகம” கிராமத்தில் ஒரு பதாகை காணப்பட்டது. அதில் அதானி குழுமத்தின் முதலீட்டுக்கு எதிராக வாசகங்கள் காணப்பட்டன. அது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மதகுருவோடு ஒரு தமிழ் செயற்பாட்டாளர் உரையாடினார். போராட்டங்களில் முன்னணிகள் காணப்பட்ட ஆக்கத்தோலிக்க மதகுரு கூறினார் “ஆம் நாங்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” என்று. அப்பொழுது அந்தத் தமிழ் செயற்பாட்டாளர் அவரிடம் கேட்டிருக்கிறார் “அப்படியென்றால் ஜேவிபியின் கொள்கைகளில் ஒன்று ஆகிய இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்த்தல் என்ற கொள்கை இப்பொழுதும் நடைமுறையில் உள்ளதா? அந்த இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகளாக மலையக மக்களை பார்க்கும் நிலைமை இப்பொழுதும் உண்டா? இந்தப் போராட்டம் மலையக மக்களுக்கும் எதிரானதா?” என்று.அதற்கு அந்த கத்தோலிக்க மதகுரு சொன்னார் “இல்லை.. இல்லை அது அதானி குழுமத்தின் முதலீட்டுக்கு எதிரானது. எல்லா விஸ்தரிப்பு வாதங்களுக்கும் எதிரானது”. என்று. “அப்படியென்றால் அம்பாந்தோட்டையிலும் கொழும்புத் துறைமுகத்திலும் சீன விஸ்தரிப்பையும் எதிர்த்து நீங்கள் பதாகைகள் போடுவீர்களா?” என்று அந்தத் தமிழ் செயற்பாட்டாளர் அந்தக் கோட்டா கோகம மதகுருவிடம் கேட்டிருக்கிறார். அந்தப் போராட்டத்தில் அதிகமாகக் காணப்பட்ட முக்கியஸ்தர்களில் அந்த மத குருவும் ஒருவர். அந்தப் போராட்டங்களின் நேரடி விளைவுதான் இப்போது இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆகும். அதாவது காலிமுகத் திடலில் கோட்டா கோகம கிராமத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக சுலோகங்களை ஏந்திக்கொண்டு நின்ற ஒரு போராட்டத்தின் குழந்தையாகிய என்பிபி அரசாங்கம் எந்தக் காற்றாலைத் திட்டத்தை இந்திய விஸ்தரிப்பு வாதம் என்று கூறி நிராகரித்ததோ, அதே காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகப் போராடிய மன்னார் மக்களையும் குறிப்பாக கத்தோலிக்க மத குருக்களையும் பலத்தைப் பிரயோகித்து அகற்றியிருக்கிறது. மன்னாரில் சூரிய மின்கல திட்டங்களுக்கு தாங்கள் எதிர்ப்பு இல்லை என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்களும் கூறுகிறார்கள்.ஆனால் மன்னர் தீவுக்குள் காற்றாலைகள் நிறுவப்படுவதைத்தான் அவர்கள் எதிர்க்கின்றார்கள்.அதுதொடர்பான அவர்களுடைய கவலைகளைக் கேட்டு அதுதொடர்பான துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்கிய ஆழமான உரையாடல்களை நடத்தி இறுதி முடிவை எடுக்கலாம்.ஒரு சூழல் நேயத் திட்டம் அப்பகுதி மக்களால் எதிர்க்கப்படுகிறது என்றால் அதனை பலவந்தமாக அமல்படுத்த முடியாது என்பது அது ஒரு சூழல் நேயத்திட்டம் என்பதனாலேயே அடிப்படையான ஒரம்சம். இப்பொழுது மக்களுக்கு எதிராகப் பலம் பிரயோகிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் எதிர்ப்பு மேலும் விஸ்தரிக்கப்படும் நிலைமைகளே தெரிகின்றன. நேற்று நடந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான கட்சிகள் இந்த விடயத்தில் போராடும் மக்களோடு நிக்கக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன.எனவே இந்தப்போராட்டம் எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படலாம். இந்த விடயத்தில் கட்சிகள் தலையிட வேண்டும் என்று போராடும் மக்கள் பல மாதங்களுக்கு முன்னரே கேட்டு வந்தார்கள்.அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அதுதொடர்பாக உரத்த குரலில் எதிர்க்கவில்லை என்றும் ஒரு விமர்சனம் அவர்களிடம் இருந்தது. இத்தகையதொரு பின்னணியில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பெருங்கூட்டம் மின்னார் நகரப் பகுதியில் நடந்தது. அதில் பேசிய சிவில் சமூகப் பிரதிநிதி காற்றாலை, கடல் அட்டை இரண்டிலும் அப்பகுதி மக்களுடைய விருப்பம் கேட்டுப் பெறப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்திப் பேசினார். காற்றாலை,கடலட்டை இரண்டும் தமிழ் மக்களின் நிலத்தின் மீதான உரிமையைக் குறிப்பவை. எனவே தமது நிலத்தின் மீது தமிழ் மக்களுக்குள்ள உரிமையைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் காற்றாலை மற்றும் கடல் அட்டை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ் மக்களுக்கு வேண்டும் என்றும் பேசியிருந்தார். இப்பொழுது அந்த விடயம் பெரும்பாலான கட்சிகள் பேசும் ஒரு விடயமாக,பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ளும் ஒரு விடயமாக, ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை போராடிய மக்கள் மீது பலம் பிரயோகிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் இந்தப் போராட்டம் மேலும் பல மடையும். https://athavannews.com/2025/1448738
4 days 11 hours ago
சாதுக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ..........!
4 days 11 hours ago
பத்மேவுக்கு தகவல் வழங்க பொலிஸ் குழுவில் உளவாளிகள்! கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவிரை தடுத்து வைத்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயம் அறியக்கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை கெஹல்பத்தர பத்மேவைக் கைது செய்வதற்காக சர்வதேச குற்றவியல் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையும் இலங்கை பொலிஸாரின் ஊடாக பத்மேவுக்கு ரகசியமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஹல்பத்தர பத்மே , கமாண்டோ சலிந்த மற்றும் இந்தோனேசியாவில் உள்ள பிற குற்றவாளிகளைக் கைது செய்ய ஒரு பெரிய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகரான ஒலுகல கடந்த சில நாட்களாகவே தென்படவில்லை என தருண் என்ற குற்றவாளிக்கு பொலிஸாரின் ஊடாக ரகசியமாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது தொலைபேசி இலக்கத்தின் ஐ.பி எண்ணை வைத்து தருண் ஆராய்ந்ததாகவும், அதன் மூலம் ஒலுகல இந்தோனேசியாவில் இருப்பது அறிந்து அந்த தகவல் பத்மேவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி, இது குறித்து தகவல் கிடைத்த கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் குடு நிலங்க ஆகியோர் அதுவரை அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கெஹல்பத்தர பத்மேவை கைது செய்ய சர்வதேச பொலிஸார் மூலம் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையின் படம் கெஹல்பத்தர பத்மேவின் கைப்பேசியில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸ்துறையில் உள்ள சில ஊழல் அதிகாரிகள் கெஹல்பத்தர பத்மேவின் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும், இந்த வழியில் அவர்களுக்கு தகவல்களை வழங்கி வருவதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன. https://athavannews.com/2025/1448753
4 days 11 hours ago
சில்லறை சம்பவத்துக்கும் தற்கொலை. மூன்று பிள்ளைகளை வைத்திருக்கும் தந்தை... இருவருக்கு மட்டும் ஆடை வாங்க பணம் அனுப்பி விட்டு மூன்றாமவருக்கு பணத்தை பிறகு தருகின்றேன் என்று சொன்னதும் சரியான அணுகுமுறை அல்ல. ஒன்றில் சிறுமிகள் மூவருக்கும் ஒரே முறையில் பணத்தை கொடுத்திருக்க வேண்டும் இல்லையேல் பணத்தை கொடுக்காமல் விட்டிருக்க வேண்டும். பிள்ளைகளை பெற்றால் மட்டும் காணாது. பிள்ளைகளின் மனநிலையை அறிந்து நடப்பவனே சிறந்த தந்தை. உலகம் எல்லாம்... தமிழர் அநியாயமாக செத்துக் கொண்டு இருக்கின்றார்கள். தற்கொலையில்... கிழக்கு இரண்டாம் இடமாம். வடக்கில்... மோட்டார் சைக்கிளும், ரிப்பர் வாகனமும் அங்குள்ள தமிழர்களை கொல்கின்றது, தமிழ்நாட்டில்... சினிமா நடிகர்களாலும், அரசியல்வாதிகளின் டாஸ்மார்க் குடி வகைகாளாலும் மக்கள் கொல்லப் பட்டுக்க கொண்டு இருக்கின்றார்கள். இது, எங்கு போய் முடியப் போகுதோ தெரியவில்லை.
4 days 11 hours ago
https://www.facebook.com/share/v/1B5J2FpzDu/ https://www.facebook.com/share/1BchKSNCU6/ தூக்கம் தொலைந்த இரவானது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை என்று இரவு முழுவதும் நேரலைகளைப் பார்த்துப் பார்த்துக் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டன. கனவுகளுக்கு வாய்ப்பே இல்லாத நிகழ்வுகளால் மொத்த இரவும் விழித்திருந்த இரவாகிவிட்டது. பத்துமணி வாக்கில் பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் முகநூல் குறிப்புதான் ஆரம்பம். அதில் ஆவேசமாக எழுதியிருந்தார். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி: விஜய் நாமக்கலில் பேசுவதற்கு அனுமதிபெற்ற நேரம் காலை 8.45. அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆனால், அவர் சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டதே 8.45 மணிக்குத்தான். பிறகு திருச்சி விமானநிலையம் 10 மணிக்கு வந்தார். சென்று அங்கிருந்து நாமக்கல் சாலை மார்க்கம் செல்ல வேண்டும் (90 கிமீ) பொதுவாக சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். எனில் 8.45 க்கு வர வேண்டியவர் கிளம்பியிருக்க வேண்டிய நேரம் என்ன? ஏற்படும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு எப்போது கிளம்ப வேண்டும்? சுமார் 2.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் கரூரில் பேச பெற்ற நேரம் 12 ! வந்து சேர்ந்தது சுமார் 7 . இந்தக் கால தாமதத்திற்கு பொறுப்பு ? கூட்டத்தால் நடந்த காலதாமதம் அல்ல. திட்டமிட்டு கூட்டம் கூடட்டும் என காத்திருக்க வைத்தது ஏன்? தனி விமானத்தில் வரக்கூடிய வசதிபடைத்தவர் குறித்த நேரத்தில் வராமல் போனது ஏன்? ஊடகங்களுக்கு ஏதாவது கொஞ்சம் அறிவுண்டா? ஒவ்வொரு அடிக்கும் ஒரு கேமரா கிளம்பிட்டார், கார் இங்கே, பஸ் இங்கே. சிரிக்கிறார், கை அசைக்கிறார் , மாஸ் என்று ஏகத்திற்கு hype செய்த உங்களுக்கு வெறும் டி ஆர் பி வெறி . கால தாமதமாக புறப்பட்ட விஜய் . காத்திருக்கும் ரசிகர்கள் . அவதியில் அல்லாடும் மக்கள் என்று செய்தி வந்திருக்க வேண்டும் ! இல்லை சரி , நாமக்கலில் சிலர் மயங்கி விழுந்தனர். பெயர் பலகை பெயர்ந்து நொறுங்கி சிலர் காயம் . அதை எழுதி அடுத்த இடத்திலிருக்கும் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை செய்தீர்களா?இல்லை கரூர் கூட்டத்தில் நெரிசல், வாகனம் செல்ல இயலவில்லை. மேலும் கூட்டம் வேண்டாம் என்று எச்சரிக்கையாவது செய்தீர்களா? இல்லை உங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளுங்கள்! அப்படி ஏதும் இருக்க வாய்பில்லை . இந்தப் பதிவிற்கு, “ நேரலையில் முகத்தை காட்டும் ஆசையைத் தூண்டிய ஊடகங்களைப் பொறுப்பாக்கி வழக்குப் பதிய வேண்டும்” எனப் பின்னூட்டம் போட்டுவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தேன். வீட்டில் இருக்கும் நாட்களில் மாலை ஆறு மணிக்குச் சன் தொலைக்காட்சியின் செய்திகளோடு உணவுநேரத் தலைப்புச் செய்திகளைப் பார்ப்பதும் கேட்பதும் தவறுவதில்லை. அதல்லாமல் உணவுநேரத் தலைப்புச் செய்திகள் மூன்றும் கேட்கும் பட்டியலில் உண்டு. தமிழ்த்தொலைக்காட்சி அலைவரிசைகளில் புதியதலைமுறையும், சன்செய்திகளும் தவறாமல் கேட்கும் பட்டியலில் இருக்கின்றன. வாரத்தில் சில நாட்கள் கேட்கும் அலைவரிசைகளாகப் பாலிமர், தந்தி, நியூஸ் 18. காலையில் ஒன்பது மணிக்கு முன்பு சாப்பிட உட்கார்ந்தால் ஒன்பது மணித் தலைப்புச் செய்தியைக் கேட்பது வழக்கம். பிற்பகலில் இரண்டு மணி தலைப்புச் செய்தி; இரவு உணவின் போது 8 மணிக்குரிய தலைப்புச் செய்திகள். விஜயின் மதுரை மாநாட்டு நேரலைகளைப் பார்த்தபின்பு, “சனிக்கிழமை” நேரலைகளைப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்ததால் நேற்று பகலில் நாமக்கல், கரூர் பயணங்களைப் பார்க்கவில்லை. பகலெல்லாம் கோவில் திருவிழாக்களை நேரலையாக வருணிக்கும் பட்டிமன்றப்பேச்சாளர்கள் போல ‘விஜயின் வருகைக்குக் கட்டியங்கூறிய அலைவரிசைகள், திரும்பவும் நேரலையாக மருத்துவமனைக் காட்சிகளைக் காட்டத் தொடங்கின. ஒவ்வொரு தொலைக்காட்சியும் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாற்றிமாற்றிச் சொல்லிக்கொண்டிருந்தன. அடுத்தடுத்து நடந்த ஒவ்வொன்றும் இரவு முழுவதும் தூக்கத்தை இல்லாமல் ஆக்கிவிட்டன. கூட்டத்தை நடத்திவிட்டுப் பொறுப்பில்லாமல் போய்விட்ட அந்த நடிகன் மீதும், அவனைப் பார்க்கவும் தலைவனாக ஆக்கவும் வந்த கூட்டத்தின் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தபோது, சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட முட்டாள்களின் கூச்சல்கள். ஆளுங்கட்சியைக் குறைசொல்லித் திசை திருப்பும் வாதங்கள் எனத் தமிழ்நாட்டைப் பைத்தியக்காரர்களின் சிறைச்சாலையாக ஆக்காமல் ஓயமாட்டார்கள் என்று தோன்றியது. அதற்கு இடம் தர முடியாது எனக் காட்டத் தொடங்கினார் தமிழ்நாட்டரசின் முதல்வர். அரசு நிர்வாகம் என்ன செய்யும் என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிநார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கரூர் நோக்கிக் கிளம்புகிறார் என்ற செய்திக்குப் பின் எல்லாம் மாறத்தொடங்கின. கரூரின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும் மருத்துவமனைக்குப் போய்விட்டார். இன்னொரு அமைச்சர் அன்பில் மகேஸ் வந்துகொண்டிருந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர்,காவல்துறை, மருத்துவத்துறை எல்லாம் களம் இறங்கியபின் தொலைக்காட்சிகளின் நேரலைக் காட்சிகளும் த்வனியும் மாறத்தொடங்கியது. கணினித் திரையில் முகநூலும் தொலைக்காட்சியில் நேரலை ஓட்டங்களும் என மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்ததில் நள்ளிரவு தாண்டி விட்டது. படுக்கப் போனால் தூக்கம் வரவில்லை திரும்பவும் தொலைக்காட்சியைத் திறந்தால் சென்னையிலிருந்து காவல்துறையின் உயரதிகாரியின் செய்தியாளர் சந்திப்பு. சொல்ல வந்ததைச் சொல்லாமல் பத்திரிகையாளர்களின் கேள்விகளை அனுமதித்ததில் கொஞ்சம் பதற்றம். முதல்வர் கரூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி வைத்தது. அவற்றைக் கேட்டுவிட்டுப் படுத்தால் தூக்கம் வரவில்லை. திரும்பவும் முகநூலில் நடக்கும் அக்கப்போர்களையும் வாசித்துக்கொண்டிருந்தபோது முதல்வர் வருகையும் மருத்துவமனையில் இறந்தோர்களுக்குச் செலுத்திய அஞ்சலிக் காட்சிகளும் உலுக்கி விட்டன. எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு அவர் பேசிய அந்த உரை பக்குவமான அரசியலின் அடையாளம். ******** இந்தக் கோர மரணங்களுக்குப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நடிகரின் கட்சி மட்டுமே காரணமல்ல; அவரைப் பின்னின்று இயக்கும் சக்திகளும் தான் காரணங்கள். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து நேரலையில் காட்டித் தங்கள் வியாபாரத்தையும் அரசியல் தந்திரங்களையும் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்களும் தான் காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது; கட்சி ஆரம்பிக்கக் கூடாது என்பதல்ல; ஆனால் அவர்களால் அரசியலின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லை என்பதுதான் எப்போதும் நான் சொல்லும் வாதம். தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்துத் தனது நடிப்புத் திறனைக் காட்டிய நடிகர் பிரகாஷ்ராஜ் அரசியல் தான் பேசுகிறார். அவர் பேசுவது மாநில அரசியல் அல்ல; தேசிய அரசியல். இந்திய நாட்டிற்கே தேவையான மாற்று அரசியல். ஆனால், தமிழின் நாயக நடிகர்களும் நடிகைகளும் பேச விரும்புவது மாநில அளவைத் தாண்டாத அரசியல். அவர்களின் சிந்தனை, ஈடுபாடு, கருத்தியல் வெளிப்பாடு சார்ந்து உருவான அரசியலை அவர்கள் பேசியதில்லை. பந்தயத்திடலுக்குள் ஓடும்படி தள்ளிவிடப்பட்டவர்களின் பதற்றத்தோடு அரசியலுக்குள் வருகிறார்கள். வரும்போதே தமிழ் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே குறிவைக்கிறார்கள். மாநிலக் கட்சிகளையே விமரிசிக்கிறார்கள். நீண்ட காலமாகத் தமிழக அரசியலைத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் திராவிட இயக்கக் கருத்தியலையும் அதன் வழியாக உருவான தேர்தல் அரசியலையுமே திசைமாற்றம் செய்ய நினைக்கிறார்கள். இதனால் தான் நடிகர்களின் அரசியலைத் தேசியகட்சிகள்/ ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்னின்று இயக்குகின்றார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.திராவிட இயக்கத்தை/ அதன் கருத்தியல் தலைமையாக இருக்கும் பெரியாரை வெறுப்பவர்களால் இயக்கப்படுகிறார்கள் என்கிறோம். மறைந்து நிற்கும் கைவிரல்களில் சுண்டுதலுக்கேற்பப் பேசும்/ஆடும் பொம்மைகள் என்று சொல்ல நேரிடுகிறது. தனக்கென - தனது நடிப்புக்கென ஒரு பாணியை - திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக் கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள். அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் சின்னக்குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தானே தாய்மாமன் என்றார். விஜய்காந்த் எனது முன்னோடி என்றார். எம்.ஜி.ஆர்., விஜய்காந்த், விஜய் - மூவரும் நம்பியது மதுரை மண்ணை. இவர்களின் ஆசைகளுக்குத் தீனி போடுபவர்களாக இருக்கிறார்கள் அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள், நடிகர் அரசியல் என்பது தமிழ்நாட்டில்/ இந்தியாவில் அரசியலற்ற வாக்காளத்திரளை ( apolitical )உருவாக்கும் ஒன்று. அரசியலற்ற நடிகர் அரசியலை நேரடியாக ஒளிபரப்பும் காட்சி ஊடகங்களுக்கு அரசியலற்ற அரசியல் ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள். கட்சி அரசியலில் சாய்வுகளற்றவர்கள் போலக் காட்சிதரும் இவ்வகை அரசியல் ஆய்வாளர்கள் நடிகர் அரசியலைக் கொண்டாடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதி அரசியலையும் வரவேற்கின்றார்கள். அதே நேரம் கருத்தியல் அரசியலுக்கு எதிராக நிற்கின்றார்கள். மொத்தத்தில் ஆபத்தானவர்கள். நடந்தவை கோர விபத்துகள் அல்ல. திட்டமிடாத கொலைகள் எனச் சட்டத்தின் மொழி எழுதினாலும், முட்டாள் தனமான ஒருவனின் சொல்லைக் கேட்டுக் கூட்டம் கூட்டிச் செய்யப்பட்ட படுகொலைகள் இது என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். கூட்டங்கள் பற்றியும் கூட்டங்களில் பங்கேற்பது பற்றியும் விழிப்புணர்வுப் பாடங்கள் தேவைப்படுகின்றன. வெகுமக்கள் அரசியலில் திரளும் கூட்டத்தின் இயல்பு பற்றி கற்பிக்கும் திரைப்படங்கள் எடுக்கப்படவேண்டும். காட்சிப்படுத்தப் படவேண்டும். தமிழ்நாடும் தமிழ் மக்களும் காப்பாற்றப்படவேண்டும்.
4 days 11 hours ago
எல்லோரும் இங்கே முதலமைச்சர் முதலமைச்சர் என்று எழுதுகிறார்கள். ஆனால் நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மகனாகிய.., என்ற கனவோடு இருக்கும்......???? அந்த கனவை குறிவைக்கும் விஜய் இனி தம்பியின் திரை உலகமுகத்தை கண்டு நடுங்கி இருப்பார் இனி அரசியல் முகத்தை முழுமையாக பார்ப்பார்
Checked
Thu, 10/02/2025 - 16:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed