3 days 22 hours ago
"சட்டத்தரணி என்னை அடையாளம் கண்டுவிடுவார் என்பதால் சுட்டோம்" - அக்குரேகொட கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்! 27 Feb, 2026 | 09:31 AM அக்குரேகொட சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரிக்கு மொனராகலையில் தங்குமிட வசதி செய்துகொடுத்த மற்றுமொரு சந்தேகநபரும் நேற்று விாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை,படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி பொலிஸ் விசாரணைகளின் போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். மேற்கு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் 72 மணிநேர தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதான துப்பாக்கிதாரி, தான் முன்னதாக இரு வழக்குகளுக்காக உயிரிழந்த சட்டத்தரணி புத்திகவிடம் முன்னிலையாகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற போது, "புத்திக எனது இரு வழக்குகளில் முன்னிலையாகியவர், அவர் என்னை அடையாளம் கண்டுவிடுவார்" எனத் தனது கூட்டாளியிடம் கூறிவிட்டு, காரை ஒருபுறமாக நிறுத்திவிட்டு சட்டத்தரணிக்கு மிக அருகில் சென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிக அவர்களைக் கொலை செய்வதற்கு 'கரந்தெனிய சுத்தா' என்பவரே தனக்கு உத்தரவிட்டதாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். இதன்போது 'லலா' என்பவருடன் இணைந்து சென்ற தான், சிறைச்சாலை அதிகாரி மீது இரண்டு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், தென் மாகாணத்தில் இடம்பெற்ற முப்பரிமாணக் கொலை ஒன்றிலும் தனக்குப் பங்குள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலைகளுக்குப் பின்னர் துப்பாக்கிதாரிக்கு மொனராகலை - மெதகம, நன்னபுராவ பகுதியில் உள்ள தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் இன்று மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், மேலதிக விசாரணைக்காக மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். கொலைக்கு முன்னர் பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள தங்குமிடமொன்றிற்கு, ஏற்கனவே கைதான 'ஜானக' என்பவரால் இந்தத் துப்பாக்கிதாரி அழைத்து வரப்படும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இது விசாரணையில் மிக முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/239694
3 days 22 hours ago
பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Published By: Vishnu 27 Feb, 2026 | 04:59 AM (செ. சுபதர்ஷனி) பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் காணப்பட்ட போதிலும், அண்மைக்காலமாக நாட்டில் 30 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே புதிய நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹஸரெலி பெர்னாண்டோ தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; "இலங்கையில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான 'க்ளோபோகேன்' ஆய்வறிக்கையின்படி, 1.1 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு, 2023 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 9 இலட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிக நோயாளர் மற்றும் மரண வீதத்தைக் கொண்ட நோய் பட்டியலில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த தரவுகளுக்கமைய, 2022 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆண், பெண் என இருபாலாரும் இப்புற்றுநோய்க்கு ஆளாகின்ற போதிலும், அந்தவகையில் அவ்வாண்டு 1564 ஆண்களும், 1519 பெண்களும் கண்டறியப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வாய் மற்றும் கழுத்துப் புற்றுநோய் முதலாவதாகவும், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகவும் உள்ளன. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்த போதிலும், தற்போது 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களும் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாகும். சமிபாட்டை இலகுவாக்கும் மற்றும் அனைத்து போசாக்குகளும் அடங்கிய உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். பெருங்குடல் பகுதியில் ஏற்படும் சிறு கட்டிகள் (பொலிப்ஸ்) நாளடைவில் புற்றுநோய் கலங்களாக மாற வாய்ப்புள்ளது. உரிய பரிசோதனையின் மூலமே இதனை ஆரம்பத்தில் கண்டறிய முடியும். உடல் இயக்கமின்றி இருத்தல், உடற்பருமன், உடனடி உணவுகள் மீதான நாட்டம் மற்றும் மது அருந்துதல் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணங்களாக உள்ளன. அத்துடன், மரபணு மூலமும் ஒருவருக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார். https://www.virakesari.lk/article/239680
3 days 22 hours ago
இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்தித்தார்..! சரத்வீரசேகர கேள்வி சுரேஷ் சலே என்ற உளவுத்துறை அதிகாரி 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார். 2019 ஜனவரி 3ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இருந்தார். அதாவது, அவர் இலங்கையில் இருக்கவில்லை. அப்படியானால், இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்திக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என அவர் தெரிவித்துள்ளார். கர்தினாலையும், கத்தோலிக்க திருச்சபையையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்ற இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாகவே சுரேஷ் சலே கைதினை நான் கருதுகிறேன். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற ஏமாற்று வேலை மேற்கொள்ளப்படுகிறது. சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் தங்களுக்குத் தெரியாது என்று காவல்துறையினர் கூறுகின்றனர். அசாத் மௌலானாவும் சனல் 4 ஊடகமும் ஒரு காரணம் இருக்கிறது. அதுதான் பிள்ளையானின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா என்ற நபர் சனல் 4 ஊடகத்திடம், 2018ஆம் ஆண்டு சுரேஷ் சலே, சஹ்ரானை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் அவர் இருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது கூறப்பட்டது, இந்த நாட்டை பாதுகாப்பற்ற நிலைக்கு கொண்டு சென்றால் தான் கோட்டாபய ஜனாதிபதியாக முடியும் என்று. நாம் அறிந்திருப்பது போல, சனல் 4 என்பது இராணுவத்திற்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை முழுமையாக முன்வைக்கும் ஊடகம். அதனால் தான் சுரேஷ் சலேவை கைது செய்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இந்தியாவில் இருந்த சுரேஷ் சலே சஹ்ரானை சந்திக்க இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட உளவு அளவிலான நபர்கள் இலங்கையில் இருப்பதாக யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். https://ibctamil.com/article/how-suresh-saleh-who-not-in-sri-lanka-met-zahran-1772122055
3 days 22 hours ago
முன்னர் காமராஜரைக் குறிப்பிடுவர். நம்முன் வாழ்ந்து வரலாறாக இருக்கிறார் தோழர் நல்லகண்ணு ஐயா.
3 days 22 hours ago
விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. சினிமாவில் இது சாதாரணம் மற்றும் இது தட்டில் கிடந்த முழுப் பூசணிக்காய்............ எப்பவோ தெரிந்தது தான்................ ஆனால் முக்கியமான விசயம் ஒன்று உள்ளது.............. 100 ரூபாக்கள் கொடுத்து 50,000 ரசிகர்கள் தேர்தலுக்கு தவெகவின் விருப்ப மனு வாங்கிச் சென்றார்கள். அதில் 500 பேர் மட்டுமே அதை நிரப்பி திருப்பிக் கொடுத்தார்கள்......................🫣. சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் போடுவது மட்டுமே விஜய் ரசிகர்களின் பிரதான நோக்கம்................ இன்று வரை ஒரு அரசியல் சக்தியாக அவர்கள் திரள்வதற்கான அறிகுறிகளே இல்லை.............. தேர்தல் அன்று வாக்குச் சாவடிகளுக்கு போவார்களா என்பதே சந்தேகம் தான்............................. வீட்டிலிருந்து கூட திரிஷா மட்டும் தான் போவார் போல.......................
3 days 22 hours ago
ஆனால் பாருங்கோ திமுக அடிச்சாடுது போலை
3 days 23 hours ago
இங்கிலாந்தின் ஆரம்பம் நியூசிலாந்தை விட மோசமாக இருக்கின்றது. அணித் தலைவர் மீண்டும் அணியை கரை சேர்ப்பாரா
3 days 23 hours ago
இனியாவது தமிழகத்தை… திரிஷா என்ற தமிழச்சி ஆளவேண்டும். 💪
3 days 23 hours ago
3 days 23 hours ago
159 அடிச்சார்கள். நியுசிலாந்து தோத்தால் பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக பெரிய வெற்றி ஒன்றைப் பெறவேண்டும். பாகிஸ்தான் வென்றால், நியுசிலாந்தும் பாகிஸ்தானும் ஒரே புள்ளி. ஓட்ட விகிதம் முக்கியம். நியுசிலாந்து வென்றால், பாகிஸ்தானின் பயணம் முடிவடையும்.
3 days 23 hours ago
சொல்றேன் கேட்டுகோங்கோ… பெண் என்பதும்… நடிகை என்பதும்தான்… ஏனையவருக்கும் திரிஷாவுக்கும் வித்தியாசம். எம் ஜி ஆர் தாதா தான்… ஆனால் கருணாநிதி, காஞ்சி காம கேடி என பெரிய தலைகளை எல்லாம் தூக்கி உள்ளே போட்ட… படா தாதா ஜெ…. யாருக்குள்ளும் எந்த திறமையிம் இருக்கலாம்…
4 days ago
இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் இந்தத் தொடரின் சகலதுறை ஆட்டக்காரன். பந்தப் போடனுமா. போட்டுக்க. பந்தப் பிடிக்கனுமா. பிடிச்சுக்க. பந்த அடிக்கனுமா. அடிச்சுக்க.
4 days ago
நாங்க தான் திரும்ப திரும்ப சொல்கிறோம் இல்லையா எம் ஜி ஆர் வழியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிடுவோம் என்று....😛
4 days ago
12வது பரிமாற்றத்திலேயே 100 அடித்துவிட்டார்கள். ஒரு 180 அடிப்பார்களா.
4 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 117 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 117 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" இந்திய மற்றும் பிற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சில கீழே தரப்பட்டுள்ளது. இந்திய மொழியான சமசுகிருதத்தில் எழுதப்பட்ட அசோகாவதானம் [Ashokavadana], அசோகரின் அருமை, பெருமைகளை விவரிக்கும் நூலாகும். அசோகாவதானத்தின் பல பதிப்புகள் இன்று காணப்படுகின்றன. அவை கி.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும். எனினும் சில பாதிப்புகளின் உரையின் வடிவத்தின் படி, கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.இருப்பினும் அதன் வாய்மொழி தோற்றம் கி மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இது அசோகரின் வாழ்க்கையைப் பற்றியது. புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாடலிபுத்திரத்தில் அசோகர் மன்னனாக வருவார் என்று புத்தரே தனது முதன்மையான சீடர் ஆனந்தரிடம் முன்னதாகவே கூறியதாக அசோகாவதானத்தில் கூறப்பட்டுள்ளது? இது புத்தர் பிறந்த நாட்டில், அன்று நிலவிய கதைகளினதும் மற்றும் எழுதப்பட்ட செய்திகளினதும் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. எனினும் புத்தர் முன்னறிவித்தல் ["to foretell"] போன்றவற்றை நம்பாதவர் அல்லது எதிர்ப்பவர் ஆகும். எனவே, இதன்படி, புத்தர் கி.மு 369 ஆம் ஆண்டு அல்லது அந்த நேரத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்திருக்க வேண்டும். புத்தரின் மரணத்திற்கும் அசோகரின் முடிசூட்டு விழாவிற்கும் இடையிலான காலத்தை 100 ஆண்டுகள் என்று பயன்படுத்தும்போது, அதாவது அசோகர் கி.மு 269 இல் அரசரானார், எனவே, கி.மு 269 + 100 ஆண்டுகள் = கி.மு 369. இது குறுகிய பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இலங்கை நாளாகமங்களில் கொடுக்கப்பட்டுள்ள 218 ஆண்டுகளால் கணிக்கப்படும் மகாபரிநிர்வாண காலத்தை விடக் [269 + 218 ஆண்டுகள் = கி.மு 487] குறைவு என்பதால் ஆகும். இது வடக்கு பாரம்பரியம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் 100 ஆண்டுகள் இந்தியாவிலிருந்து, அதாவது இலங்கைக்கு வடக்கே இருந்து வருகிறது. 218 ஆண்டுகள் என்று பயன்படுத்தும்போது, அது நீண்ட பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தெற்கே உள்ள இலங்கையில் இருந்து வந்ததால், நீண்ட பாரம்பரியம், தெற்கு பாரம்பரியம் என்றும் அழைக்கப்படுகிறது. புத்தர் இந்தியாவில் பிறந்ததால், அவர் பிறந்த இடத்திலிருந்து அல்லது பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள இந்தியாவின் பகுதிகளிலிருந்து வரும் எந்தத் தகவலையும் அதிகம் நம்பக்கூடியதாக இருக்கும். அதேவேளை, இலங்கை போன்ற தொலைதூர இடத்திலிருந்து அழகாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் எழுதப்படுள்ளதால், அதை மிகவும் துல்லியமான செய்தி என்று நாம் முடிவுகட்டிட முடியாது என்பதே உண்மையாகும், காரணம் புத்தர் இந்தியாவை விட்டு எங்கும் போகவில்லை. மன்னர் அசோகரின் முடிசூட்டு விழாவிற்கு 116, 118, 130, மற்றும் 218 என பல தேதிகள் சீனா மொழி நூல்களில் காணக்கூடியதாக உள்ளன. மேலும் 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919' என்ற நூலில் பக்கம் 241 இல் உள்ள அடிக்குறிப்பில் 118 என கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத் தக்கது. இதன் அடிப்படையில் புத்தரின் மரணம் கிமு 387 [269 + 118] இல் இருக்க வேண்டும். சீனாவின் 218 புத்தகோசரின் சமந்தபசாதிகாவின் [Samantapasadika by Buddhaghosa] மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இவர் [புத்தகோசர்] கி.பி 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அறிஞர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு கற்று பிறகு பௌத்த மதத்திற்கு மாறினார். மகத நாட்டில் அக்காலத்தில் வழக்கிலிருந்த பாளி மொழியில் இவர் புலமை பெற்றிருந்தார். இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றபின் இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.மேலும் அவர் இலங்கைக்கு வந்து விளக்கவுரைகளை மொழிபெயர்த்ததால், இலங்கை பாரம்பரியம் அவரின் செல்வாக்கால் பாதித்திருக்கலாம் என நம்புகிறேன். எனினும் மேற்கூறிய எந்த ஆண்டுகளிலும் அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. மற்றொரு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் கோம்ப்ரிச் [Richard Gombrich], கிமு 404 தான் புத்தர் இறந்த ஆண்டாகக் கூறுகிறார், மேலும் அலெக்சாண்டர் வின்னே [Alexander Wynne] தனது "The Historical Authenticity of Early Buddhist Literature” என்ற கட்டுரையில் கிமு 404 ஆம் ஆண்டை புத்தர் இறந்த ஆண்டாக ஏற்றுக்கொள்கிறார் என்று கூறுகிறார். பாளி நூற் சபை [Pali Text Society] தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் [T. W. Rhys Davids] என்பவரால் நிறுவப்பட்டது. அவர் இறந்தபோது, 'நிறுவனர் காலமானார் [‘Passing of the Founder’]' என்ற தலைப்பில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. அதன் 5வது பக்கத்தில் இவ்வாறு உள்ளது: 1877-ல் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் Ancient Coins and Measures of Ceylon என்ற புத்தகத்தை எழுதினார். இதில், இலங்கை பழங்காலச் சம்பிரதாயங்களை அடிப்படையாக கொண்டு புத்தரின் இறப்பு ஆண்டு 412 கி.மு. காலமாக இருந்திருக்கலாம் என்று கூறினார். ஆனால், இதை பெரும்பாலும் அறிஞர்கள் ஏற்கவில்லை. பின்னாளில் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸும் இந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார். என்றாலும் இதில் அவர் கூறிய 412 கி.மு. ஆண்டு, முன்பு குறிப்பிடப்பட்ட 404 கி.மு. ஆண்டுடன் நெருக்கமாக இருப்பதைக் காண்கிறோம். Part: 117 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" The following are based on the Indian and other sources. Ashokavadana was written in Sanskrit in the second century A.D., and it is about the life of Asoka. It is stated in the Ashokavadana that the Buddha himself predicted to his foremost disciple Ananda that Asoka would become the king in Pataliputra after one hundred years of his, the Buddha’s, death. This is based on the materials written in the country where the Buddha was born. As per this, the Buddha should have attained Mahaparinirvana on the year 369 B.C. or around that time. When 100 years are used for the time elapsed between the death of the Buddha and the coronation of Asoka, it is known as Shorter Tradition, as it is shorter than the 218 years that is given in the Chronicles of Ceylon. It is also known as Northern Tradition, as 100 years is from India, North of Sri Lanka. When 218 years are used, it is called the Longer Tradition. The Longer Tradition is also known as Southern Tradition, as it is from Ceylon which is south of India. Please note that Any information from the Buddha’s birth place should carry more weight. The record in a far away country might not carry more currency merely because it was written long ago in neat book form. Chinese has many dates, 116, 118, 130, and 218 for King Asoka’s coronation. The year 118 for Asoka after the Buddha is given in the footnote on page 241 of Reference 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919'. The Buddha’s death based on this should be about 387 B. C. The Chinese 218 is based on the translation of Samantapasadika by Buddhaghosa, and the Ceylonese tradition might have influenced him as he came to Lanka to translate the commentaries. There is no consensus among scholars regarding any of the above cited years. Another researcher, Richard Gombrich, states 404 B.C. as the probable year of the death of Buddha, and Alexander Wynne says in his essay “The Historical Authenticity of Early Buddhist Literature” that he too accepts the year 404 B.C. as the year on which Buddha died. Pali Text Society was founded by T. W. Rhys Davids. When he died, there was an article on him with the title ‘Passing of the Founder’. One paragraph on the page 5 reads thus, ‘In 1877 he was ready with a treatise on the ‘Ancient Coins and Measures of Ceylon’, in which he endeavoured to fix the date of death of Gotama, by arguments founded on Sinhalese tradition, within a few years of 412 B. C. But this result did not win general acceptance and he himself abandoned it in later life’. This is very close to the year 404 B. C. proposed above, in the previous passage. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 118 தொடரும் / Will follow துளி/DROP: 2062 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 117 https://www.facebook.com/groups/978753388866632/posts/34032940193021192/?
4 days ago
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 4 பாகம் – 4 / “பாடசாலை மணியும், தேவாலய மௌனமும்” உடப்பு கிராமப் பள்ளியில் ஒவ்வொரு காலையிலும், அந்த நாள் படிப்பு தொடங்க மணி ஒலிக்கும். ஆனால் இன்று காலையில், ஆசிரியர் ஆதனுக்கு அந்த மணி வித்தியாசமாக ஒலித்தது. அந்த பாடசாலை மணி இன்று மாணவர்களை அழைக்கவில்லை, மாறாக ஒரு கடினமான முடிவைச் செய்ய, தன்னை கட்டாயப்படுத்த, அழைப்பது போல் ஆதன் உணர்ந்தான். எனினும் ஆதன் வழக்கம் போல் தனது பாடத்தைத் தொடங்க, கரும்பலகைக்கு முன் நின்றான்.எல்லா மாணவர்களும் ஆசிரியர் ஆதனை நம்பிக்கையுடன் பார்த்தார்கள். அவர்களின் குடும்பங்கள் வெவ்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் - சிலர் இந்து கோவிலிலும், மற்றவர்கள் தேவாலயத்திலும் தங்கள் வழிபாடுகளைச் செய்தனர். ஆனால் எல்லா மாணவர்களும், எந்த வேறுபாடும் இன்றி, ஒரு விடயத்தில் ஒன்றாக இருந்தனர் - அது கற்றுக்கொள்ளும் ஆசை அல்லது பசி. அப்போது ஒரு மாணவன் வேதனையுடன் ஒரு கேள்வியைக் ஆசிரியர் ஆதனிடம் கேட்டான்: “சார் [ஐயா] ... நம் பாடம் சிங்களத்தில் மாறுகிறதா?” அவன் பயந்து காணப்பட்டான். அந்தக் கேள்வி அவனுடையது மட்டுமல்ல, ஒரு காலத்தின் இடிபாட்டிலிருந்து வந்தது — தங்கள் மொழி வடக்கு கிழக்குக்கு வெளியே மறைந்து வருவதாக உணர்ந்த பல தமிழ் குழந்தைகளின் பயத்தையும் குழப்பத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆதன் மெதுவாக அறிவுடன் பதிலளித்தார்: “வரலாறு என்பது மொழிகளைப் பற்றியது மட்டுமல்ல. வரலாறு ஒரு கண்ணாடியும் கூட — அது நாம் யார் என்பதைக் காட்டுகிறது.” என்றார். அதன் பின், எல்லோருக்கும் தெளிவாக தெரியும் வகையில் ஆதன் கரும்பலகையில் எழுதினான்: “தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது ஒரு நினைவு.”, அதாவது தமிழ் கதைகள், கலாச்சாரம் மற்றும் மக்களின் அடையாளத்தை அது சுமந்து செல்கிறது என்று ஒரு விளக்கமும் கொடுத்தான். மறுநாள், பிரதேசக் கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்தார். பலகையை பார்த்தார். “இது தேவையில்லாத அரசியல்.” என்று குற்றம் சாட்டினார். ஆதன் எந்த தயக்கமும் இன்றி, “இது அரசியல் அல்ல. இது நமது வரலாறு.” என்று அவருக்குப் பதிலளித்தான். அதிகாரி கூறினார்: “வரலாறு மக்களைப் பிரிக்கிறது.” ஆதன் அதற்கு, “நாம் அதை மறைக்கும் போதுதான் அது பிரிக்கிறது.” [“It divides only when we hide it.”] என்று விளக்கம் கொடுத்தான். ஆதன் நேர்மையாகப் பேசியதால், அரசாங்கம் அவரது பெயரை ஒரு ரகசியப் பட்டியலில் சேர்த்தது: “கவனிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்.” இது ஆதனை மிகவும் காயப்படுத்தியது - எந்த உடல் காயத்தையும் விட இது அவனுக்கு வேதனை கொடுத்தது, அந்த வார்த்தை வாளை விடக் கூர்மையாக அவனுக்கு இருந்தது. - ஏனெனில் அவன் உண்மையைக் கற்பித்ததற்காக தண்டிக்கப்பட்டான். அன்று மாலை, சிலாபம் மருத்துவமனையில், சமந்தி [செந்தூரி] வழக்கம் போல் தனது நோயாளிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வயதான நோயாளி அவளைப் பார்த்து அன்பாகக் கேட்டார்: "நீங்க ரொம்ப நல்ல நர்ஸ்... ஆனா உங்க பேர்... அது தமிழா?" அவர் கேள்வியை முடிக்கவில்லை. என்ன சொல்ல அவர் வந்தாரோ, அதைப் சமந்தி [செந்தூரி] புரிஞ்சுக்கிட்டார். அவள் அமைதியாகக் கீழே பார்த்தாள், தன் அடையாளத்தின் கனத்தை உணர்ந்தாள். அந்த நாளின் பிற்பகுதியில், சமந்தி, அங்கே இருந்த ஒரு சிறிய தேவாலயத்தின் கடைசி வரிசையில் அமர்ந்தாள். அவளுக்கு முன்னால் சிலுவை இருந்தது. அவள் மனதிற்குப் பின்னால் முன்னேஸ்வரம் கோவிலின் நினைவுகள் இருந்தன - அவளுடைய சிறுவயதில், அம்மம்மாவுடன் அவள் சென்ற இடம் அது. அவளுக்குள், இரண்டு உலகங்கள் அவளை வெவ்வேறு திசைகளில் இழுத்தன. ஆசிரியர் ஆதன் ஒரு முறை கூறிய வாக்கியத்தை அவள் நினைவில் வைத்தாள்: “அமைதி என்பது மிகக் குறைந்த கீழ்படியிலிருந்து தொடங்குகிறது. [“Peace begins from the lowest step.”]” அவள் யோசித்தாள்: “அமைதி என்றால் நான் யார் என்பதை மறைக்க வேண்டுமா? அமைதி என்றால் என் அடையாளத்தை இழப்பதா?” அவள் இதயம் குழப்பத்தால் கனத்தது. இதற்கிடையில், ஆதன் உடப்பு கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். அங்கே, மீனவர்கள் தங்கள் வலைகளை சரிசெய்து, உடைந்த துண்டுகளை ஒன்றாகக் கட்டிக் கொண்டிருந்தனர் - மக்கள் தங்கள் உறவுகளை சரிசெய்ய வேண்டும் என்று ஆதன் விரும்பியது போல. ஒரு மீனவன் ஆதனிடம் கேட்டான்: “ஆசிரியரே, நீங்கள் ஏதாவது பெரிய திட்டத்தைத் திட்டமிடுகிறீர்களா?” ஆதன் ஒரு சிறிய புன்னகையுடன் தலையை ஆட்டினார்: “இல்லை. நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை. நான் எங்க இருக்கிறேனோ அங்க தான் நிற்கிறேன், அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை” என்றான். அதாவது தான் ஒரு போராட்டத்தையோ அல்லது இயக்கத்தையோ தொடங்கவில்லை. ஆனால், எம் வரலாறு மற்றும் அடையாளம் பற்றிய உண்மையை மட்டும் பேசிக் கொண்டு இருப்பேன் என்றான். அன்றிரவு, சமந்தி ஆதனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்: “ஏதோ ஒரு குழப்பம் இருந்திருக்க வேண்டும், இன்று தேவாலயம் … அமைதியாக இருந்தது." ஆதன் அதற்கு உடனடியாக பதிலளித்தான் “இன்று பள்ளி… மணி அடித்தபோதும், என்னால் எழுந்திருக்க முடியவில்லை.” இருவரும் வெவ்வேறு வழிகளில் ஒரே விடயத்தைத் தான் சொன்னார்கள் - உயிர் கொடுக்க வேண்டிய இடங்களான - கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் - உண்மையும் அடையாளமும் அடக்கப்படுவதால் காலியாகவும் அமைதியாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றன என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் அன்று இரவு அவர்கள் காதலைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் இருவரும் ஒரே வலியைப் பகிர்ந்து கொண்டனர் - உண்மை மறைக்கப்பட்டு குரல்கள் அடக்கப்படும் போது வரும் வலி அது. அன்றிரவு, சமந்தி [செந்தூரி] தனது பாட்டியின் பழைய பெட்டியை மீண்டும் திறந்தாள். ஆனால் இந்த முறை, அவள் பயப்படவில்லை - உள்ளே இருக்கும் எந்த உண்மையையும் எதிர்கொள்ளத் தயாராக, உறுதியுடன் திறந்தாள் நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் துளி/DROP: 2061 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 4 https://www.facebook.com/groups/978753388866632/posts/34032482543066957/?
4 days 1 hour ago
நியுசிலாந்து பொறுமையாக ஆரம்பித்துள்ளனர். முதலாவது பந்துப் பரிமாற்றத்தில் ஓட்டமெதுவும் பெறவில்லை. ஆச்சரின் இறுக்கமான பந்து வீச்சு. தொடக்கமே நல்லாருக்கு
4 days 1 hour ago
த்ரிஷா தான் தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர். பொறுத்திருந்து பாருங்கள் .... ஜெயலலிதாவின் இடத்தை பிடிப்பார். Prashanthan Navaratnam
4 days 1 hour ago
விஜய் தொடர்பு வைத்துள்ள நடிகை யார்? ஏன்…. முள்ளம் பன்றி, மாதிரி… மற்றவர்களின் குடும்பத்துக்குள் புகுந்து, குழப்பம் விளைவிக்கின்றாய் என்று,.. அந்த நடிகையுடனும், ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினால் சிலவேளை பலன் அளிக்கலாம். பிற்குறிப்பு: இதற்கு எல்லாம்… சினிமாவில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கருணாநிதி, பாலிடால் உதயநிதி போன்றவர்களே காரணம்.
4 days 2 hours ago
50+ likes · 2 weeks ago இந்தியாவில் பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் 8,630 புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் பெறப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Checked
Tue, 03/03/2026 - 14:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed