4 days 18 hours ago
கரூரில் விஜய்யின் வாகனத்தை மையப் பகுதிக்குள் போக நிர்பந்தம் செய்ததே காரணம்.. கிருஷ்ணசாமி புகார் Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 2:36 [IST] கரூர்: விஜய் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கூட்டம் கூட்டுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தொடக்கம் முதலே விஜய் அவர்களின் கூட்டங்களுக்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை விதிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில், 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே விஸ்தாரணம் உள்ள மிகக் குறுகலான சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்? மேலும், அவர் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது.! கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையும்மே பொறுப்பேற்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
4 days 18 hours ago
தனித்த நேர ஹாக்ஸ் செயல்முறைகளைப் பயன்படுத்தி அரசியல் வன்முறை மற்றும் மோதல் நிகழ்வுகளின் பேய்சியன் இடஞ்சார்ந்த மாதிரியாக்கம். ரைஹா பிரவுனிங் , ஹமிஷ் பாட்டன் , ஜூடித் ரூசோ , கெர்ரி மெங்கர்சன் https://arxiv.org/abs/2408.14940 இந்த காலகட்டம் ஒரு தகவல் துறை ஆதிக்க உலகம், இன்றைய மேற்கு பிரச்சார தகவல் தொடர்பு ஒரு உலக போரிற்கான முன்முயற்சியாக கருதுகிறேன். இந்த கோக்ஸ் முறையின் பயன்பாடு வர்த்தகம் (High Frequency Trading), சமூக ஊடகம், அரசியல், தீவிரவாத எதிர்ப்பு முறை என பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
4 days 18 hours ago
சீமானை நான் எதிர்க்க வேறு எவர் மீதான என அபிமானமும் காரணம் இல்லை. சீமான் எப்படிபட்டவர் என்ற புரிதல் மட்டுமே காரணம். 😭😭😭 ஒரு ஈழத்தமிழனாக…. அந்த மீண்டும், மீண்டும் என்ற வார்த்தையின் அர்த்தம் கடினமாது, கொடுமையானது… ஆனாலும் சம்மட்டியால் அடித்தது போல் உண்மையானது. இப்படித்தான் நமது மக்களும் மாட்டிகொண்டார்கள் இல்லையா?
4 days 18 hours ago
தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான்
4 days 18 hours ago
இது தவிர்க்க முடியாத விபத்துதான் ] என்ன ஒரு தலைவர்
4 days 18 hours ago
இரான். இதில் முழுமையாக ஈரானை அக்கிரமிப்படத்திற்கு அமெரிக்கா இராணிவதுக்கு உள்ள அக்கறை பற்றி அறிவது. (அனால், இரானுக்கு உள்ளே இராணுவத்தை அனுபவது அமெரிகவ்வின் மேலாண்மை கேந்திர . அடிப்படையில் பின்னடைவு அல்லது பகுதியாக தேய்வு) தாய்வான், மற்றும் சீனாவின் விமந்தாங்கி போர்க்கப்பலில் இருந்து நவீன போர்விமானானங்களை நவீன தொழில் நுட்பத்தால் (EMAL) ஏற்றுவது, இறக்குவது முழுமை அடைந்து உள்ளது. அத்துடன் சீன விமானங்களும் மேற்கிற்கு சளத்தவை அல்ல என்பதை மேற்கு இப்போது அறிகிறது. இதுவே அமெரிக்கா தூது குழு (இதுவரையில் எந்த கவலையும் இன்றி இருந்த), சீனாவுட இராணுவ மட்டத்தில் நிலையான, திறந்த தொடர்பாடல் வேண்டும் என்று கேட்டு சென்று இருக்கிறது. இது அமெரிக்கா / மேற்கின் ஆழ்கடல் மேலாண்மை கணக்கை பாதிக்கிறது.
4 days 18 hours ago
முண்டி அடித்து நெருங்கி ஒருவர் மேல் ஒருவர் என்று ஒருவர் மேல் அறுவர் என்று வீழ்ந்து இறந்து போன உடல்களில் ஆறு அழகாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு புத்தம் புதிய வெள்ளைகளால் முழுவதும் சுற்றப்பட்டு புதிய நீண்ட மாலைகள் போடப்பட்டு காத்துக் கொண்டிருக்கின்றன வந்து கொண்டிருக்கும் முதல்வரின் அஞ்சலிக்காக. ஏலவே அங்கே வந்தவர்கள் அங்கேயே நின்று அழலாம். நேரே வர முடியாதவர்கள் ட்வீட்டரில் கலங்கலாம் துன்பத்தில் உழலாம் வெடித்துச் சிதறி நொருங்கிப் போகலாம். இது தவிர்க்க முடியாத விபத்து என்றும் ஒருவர் சொல்லலாம். மோட்டுத் தமிழினமே என் சனமே எலிகள் கூட பொறிக்குள் இப்படி போய் மீண்டும் மீண்டும் மாட்டுவதில்லையே...................😭.
4 days 18 hours ago
கரூர்: ``இது தவிர்க்க முடியாத விபத்துதான், தம்பி விஜய்யும் மனவேதனையில்தான் இருப்பார்" - சீமான் மு.பூபாலன் 1 Min Read கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரையில் நடந்த விபத்துக் குறித்து ஆறுதல் தெரிவித்துப் பேசியிருக்கிறார் நாதக சீமான். Published:Today at 7 PMUpdated:Today at 7 PM சீமான் Join Our Channel 0Comments Share கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 28,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கூட்ட நெரிசலில் 33-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் சோகம் - விஜய் வேதனை இந்நிலையில் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரிக்க வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், "இது தவிர்க்க முடியாத விபத்துதான். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இறந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தம்பி விஜய்யும், அவரது கட்சியினரும் மனவேதனையில்தான் இருப்பார்கள்" என்று பேசியிருக்கிறார்.
4 days 18 hours ago
ஒரு பெரும் தலைவரை பார்ப்பதற்கு குழந்தைகளையும் தூக்கி கொண்டு தாய்மார்களும், கர்பிணிகள் , வயோதிபர்கள், இயலாதவர்கள், இயலுமைகொண்டவர்கள் எல்லோரும் வந்திருக்கின்றார்கள். நடுப் பகல் 12 மணி தொடங்கி இரவு 7.15 வரை அவருக்காக காத்திருந்தார்களாம்.
4 days 18 hours ago
இப்படியே சொல்லிக் கொண்டிருங்கள்.விஜையின் அரசியல் வருகையை ஆதரித்தவர் சீமான். அதேபோல் கமலின் அரசியல்வருகையைும் ஆதரித்தவர் சீமான். விஜை முதல்மாநாடு கொள்கை விளக்கக் கூட்டத்தில் திராவிடத்தேசியத் தமிழ்த்தேசியம் என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்த அன்று இரவே அதை விமர்சனம் செய்தவர் சீமான்.கொள்கை முரண்பாட்டைத்தவிர வேறு ஒன்றும் கிடையாது. முதல்மாநாட்டிலேயே ஆஊ என்று கத்தி அரசியல்பேசுகிறார். சீமானை மறைமுகமாக சீண்டியிருப்பார் விஜை.
4 days 19 hours ago
ஏற்றுகொள்கிறேன் - இந்த விடயத்தில் சீமான் மிகவும் நியாயமாகவே நடந்து கொள்கிறார். எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என எனக்கு புரியவில்லை. இன்னும். இதை நீங்கள் பலதடவை எழுதியும் உள்ளீர்கள். நான் அப்போ ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என எண்ணினேன். ஆனால் இப்போது கூட ஒரு டிவீட்டின் பின் ஒளிந்து கொள்ள நினைப்பது மிக மோசமானது. உண்மையில் இதை எதிர்கொள்ளும் மனோதிடம் இல்லை என்றால் மன்னிப்பு கோரி விலகிவிட வேண்டும். பிகு இது ஜோக் அடிக்கும் விசயம் அல்ல ஆனால் அன்பில் மகேஷ் அழுத அழுகை ஆஸ்கார் ரகம்.
4 days 19 hours ago
விஜய் அரசியலுக்கு உகந்தவர் கிடையாது என்பது ஆரம்பத்திலிருந்தே தோன்றிய ஒன்று. அவரைச் சுற்றி இருப்பவர்களின் முதிர்ச்சியற்ற மற்றும் பேராசைகளுக்கு விஜய் இன்று பலியாகிக் கொண்டிருக்கின்றார். புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி இந்த மூவரும் கூட பதில் சொல்லவேண்டும்.
4 days 19 hours ago
நாதகவினர் இரத்ததானம் செய்யுங்கள்.சீமான் சீமானின் அறிக்கைக்காக காத்திருந்தேன். சீமான் இதில் அரசியல் செய்யவில்லை. ஆனால் செய்தியைப் போட்டு விட்டு டஸ்கி செய்தியாக போட்டிருந்தது. உங்களது எதிர்வுகூறல் பிழையாகி இருக்கிறது.
4 days 19 hours ago
4 days 19 hours ago
நம்மளையும் சேர்த்துக்குங்க 1) இலங்கை - சாமரி அத்தப்பத்துவுக்காக ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இந்தியா 3) நியூசிலாந்து 4)பாகிஸ்தான் 5)இங்கிலாந்து 6)அவுஸ்திரேலியா 7)இந்தியா 8)நியூசிலாந்து 9)இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா 11)இந்தியா 12)நியூசிலாந்து 13)இலங்கை 14)இந்தியா 15)தென்னாபிரிக்கா 16)இலங்கை 17)இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா 19)தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து 21)இங்கிலாந்து 22)இலங்கை 23)தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா 25)இந்தியா 26)இலங்கை 27)அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து 29)இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? பாகிஸ்தான் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) இந்தியா நியூசிலாந்து அவுஸ்திரேலியா இங்கிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? மும்பை 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? கௌகாத்தி 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? நியூசிலாந்து 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஓம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஓம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா
4 days 19 hours ago
இதை விஜே உணர்ந்து பணம் கொடுத்தாவது ஆட்களை ஒழுங்கு செய்திருக்க வேண்டும். சரி இனி இதைக் கதைத்து பிரயோசனம் இல்லை. அடுத்தடுத்து வரும் கூட்டங்களையும் மக்களையும் எப்படி சமாளிக்கப் போகிறார் பார்ப்போம்.
4 days 19 hours ago
ஒரு அரசியல்தலைவன் என்றால் அவர் பேசும் பேச்சை தொண்டர்கள் செவி முடுக்க வேண்டும்.கூட்டத்ததைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்க வேண்டும். வியை கூட்டத்தில் பேசும் பேச்சை யார் கேட்கிறார்கள்?கத்திக் கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் விஜையைப்பார்க்க வந்தவர்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய அவர் பேசும் கருத்தைக் கேட்பதற்காக வந்தவர்கள் இல்லை.விஜையும் இந்தக் கூட்டத்தைவிரும்பி காக்க வைத்து சொன்ன நேரத்துக்கு கூட்டத்துக்கு வராமல் காக்க வைத்து மாஸ் காட்டியதன் விளைவு நீண்ட நேரமாக தண்ணீர்இன்றி சாப்பாடு இன்றி இருந்தால் மயக்கம்வரத்தான் செய்யும் அதுவும் சனநெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்படத்தான் செய்யும்.மாஸ்காட்ட வெளிக்கிட்டு back fire ஆகமுடிந்திருக்கிறது. கரூரில் விஜை ஆவேசப் பேச்சு >நாமக்கல்லை நடுங்கவைத்தை விஸஜ என்று தமது TRP ஏற்றிய அதே ஊடகங்கள் இன்று பத்திரிகையாளரை சந்திக்க மறுத்த விஜை.விஜை கைதாவாரா?கருரில் விஜை கூட்டத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் மரணம் என்றுTRP ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்.விஜைவெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கு முகம் கொடுக்க வேண்டும்.இல்லயேல் அரசியலுக்கு லாயக்கு அற்றவர்.
4 days 19 hours ago
வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவும் தனியரசு. நடிகர் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.. தனியரசு கோரிக்கை Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 1:23 [IST] தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயிருக்கு போராடும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது. நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்... மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்...!! என் மக்களை இப்படி துயரத்தில் துடிக்க வைத்த விஜய்யை காலம் மன்னிக்காது." இவ்வாறு கூறியுள்ளார். விஜைக்கு கூடும் கூட்டத்தை எல்லாம் சுத்தம் பேணும் என எதிர்பார்க்க முடியாது. சீமான் தவறானவர் என்றாலும் அவர் சொல்லும் கொள்கை சரியானது. அதை கேட்க கூடும் கூட்டமும் அப்படியே. ஆனால் விஜையை பார்க்க வருவோர் அனைத்து தரப்பினரும். ஒரு திருவிழா போல நடந்தது. ஆகவே அதே நடத்தையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் கொஞ்சம் வெளியான இடங்களை விஜை அடம் பிடித்து கேட்டிருக்கலாம். சில நாட்கள் முன்பு சவுக்கோ அல்லது இன்னொரு யூடியுபரோ - இது ஆபத்தில் முடியலாம் அதை திமுக விரும்பும் என சொன்னார்கள். அப்படியே நடந்துள்ளது. இதை விஜை உணர்ந்து தவிர்திருக்க வேண்டும்.
4 days 19 hours ago
உண்மை தான் சீமானுக்கு இவ்வளவு கூட்டம் கூடாது. ஆனால் விஜேக்கு இப்படி சனம் கூடும் என எதிர்பார்த்து அதற்கேற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முதல் நடந்த கூட்ட முடிவிலும் குண்டு விழுந்த இடமாக காட்சியளித்தது.கதிரைகள் சின்னாபின்னமாக கிடந்தது. குப்பைகளை அள்ள ஆட்களைக் காணோம். போகப்போக முன்னேற்றம் காணுவார் என எண்ணினேன். இப்போ சோகத்தில் முடிந்துள்ளது.
4 days 19 hours ago
சீமானின் முதலாவது அறிக்கை - அரசியல் தவிர்த்து வெளிவந்துள்ளது. உண்மையில் சீமானின் ஆதாரவாளர்களை விட சீமான் நாகரீகமாக அறிக்கை விட்டுள்ளார். கரூரில் மக்களின் மரண ஓலம் நெச்சை பிளக்கிறது! நாதகவினர் ரத்த தானம் செய்யுங்கள்!” - சீமான் அறிக்கை Halley KarthikPublished: Sunday, September 28, 2025, 1:40 [IST] இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக! கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன். உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்! தொடர்பு எண்: +917667412345" என்று தெரிவித்திருக்கிறார்.
Checked
Thu, 10/02/2025 - 16:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed