புதிய பதிவுகள்2

மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை

5 days 8 hours ago
எழுதுங்க எழுதுங்க ஆவலாக இருக்கிறோம். வடக்கில் குக்கிராமத்தில் இருந்து போனநேரம் திடீரென கிளுகிளுப்பான காட்சிகளைப் பார்க்க அட இதை விட்டுவிட்டு வெளிநாடா என்ற மாதிரி இருந்தது. இதே மாதிரியே விக்டோரியா பார்க்கும். அவர்கள் பார்க்கிறவர்களைப் பற்றி கவலையே இல்லாமல் தமது கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்

5 days 8 hours ago
அதே போல் இசை உரிமை தயாரிப்பாளருக்கு என ஒப்பந்தம் போட்டு விட்டால் அதன் உரிமை தயாரிப்பாளர் அல்லது அவரிடம் உரிமையை வாங்கியோருக்கே. அதை தொடர்ந்தும் உரிமை கோருவது, ராயல்டியை தனக்கு தருமாறு கேட்பது, இன்னொருவர் சொத்தை கொள்ளை அடிப்பது. களவு. இளையராஜாவால் யாரும் தெருவுக்கு வந்ததாக நான் கூறவில்லை. ஆனால் அவர் இசை அமைத்து, இசையும், படமும் எடுபடாமல் போன பல படங்கள் உள்ளன. ஆனாலும் அவர் ஒரு அதி உச்ச கலைஞன்…. சிம்பொனி ஹால்களை வாடகைக்கு எடுத்து தனக்குதானே விசிறிக் கொள்ள தேவையில்லாத ஒரு இசை ஆளுமை…(இது பற்றி சிம்பொனி வந்த நேரம் எழுதினேன்). ஆனால் வெள்ளந்தி மனிதர் அல்ல. சராசரியான ஒரு நல்ல மனிதர் கூட அல்ல. புகழாசை, பணத்தாசை, பேராசை, பதவியாசை தன்னை விட வாழ்வில் கீழே உள்ளோரை துரும்பென நடத்தும், ஒரு ஈகோஜிஸ்ட்தான் ராஜா. சின்னதாயி மகன் டேனியல் ரொம்ம சின்னத்தனமானவர் ஆனால் அவரின் இசை வல்லமை இமயம் தாண்டி பெரியது.

குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு

5 days 9 hours ago
இந்த செய்தியில் இருந்து ....நீதி மறுப்பு தமிழனுக்கு மட்டும்தான் என்று தெரிகிறது ....தற்கொலை குண்டுதாரிகள் ...அவர்கள் என்னவழியில் சொத்து சேர்த்தார்கள் என்பது கேள்விக்குறியே ...ஆனால் இலங்கையின் நீதிதுறை சொத்தை உயிருடன் உள்ள சகோதரனிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறது ...அனுர ஆட்சியா ..இல்லை வளமைபோல் பெரும்பான்மை இன ஆட்சியா...

அன்பு ௐ

5 days 9 hours ago
வணக்கம் வாருங்கள் ... இப்பவும் இப்படி தமிழ்விளக்கம் கொடுக்கும் யாழ் தமிழரை காண்பதில் அதி சந்தோசம்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

5 days 9 hours ago
🤣............. இன்று நடந்த இலங்கை - நியூசிலாந்து போட்டியில் நான் ஆப்கானை தெரிவு செய்ததால் நாளைய போட்டியில் ஆப்கானை தெரிவு செய்ய முடியாமல் போய் விட்டது, அண்ணா................... ஆப்கான் நல்ல அணி தான்.......... அதற்காக அவர்கள் தினமும் விளையாட முடியுமா......................🤣. சகுனியின் நாடு தான் இன்றைய ஆப்கான், அன்றைய காந்தாரம்............. நான் இந்த வழியில் கொஞ்சம் யோசித்திருக்கலாமோ என்று இப்ப தோன்றுகின்றது.................🤣.

இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .

5 days 9 hours ago
கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் இது வீட்டுக்கு வீடு வாசல்படிதான் ....எனினும் கிடைக்கும் இடைவெளியில்... அந்த சிலுசிலுப்பான நேரங்கள் ...சொற்கம்தானே சுவியர் ...இதிலை கவித்திறனைவிட ...உங்கள் ஆத்மார்ந்த அனுபவிப்பு ...கவிதையை உயிரோட்டமாக்குகிறது

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

5 days 9 hours ago
இங்கே ஜேர்மனியில் 20,30 வருடங்களுக்கு முந்திய செய்திகளை திகதிகளுக்கேற்ப தினசரி மறு ஒளிபரப்பு செய்வார்கள்.அப்போது அன்றைய வானிலை அறிவுப்பும் இருக்கும். அதை பார்த்த அளவில் பாரிய மாற்றம் ஏதுமில்லை. இயற்கை அழிவுகள் என்றும் எங்கும் உண்டு. உதாரணத்திற்கு 70களில் கிழக்கு மாகாணத்தில் வந்த சூறாவளி அனர்த்தங்கள் வந்த போது யாரும் உலக வெப்பமாவதலை பற்றி பேசவில்லை. ஒரு காலத்தில் பங்களாதேசில் அடிக்கடி சூறாவளிகள் வந்து அழித்தொழிக்கும். இன்று அது அங்கில்லை? ஏன்?

இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்

5 days 10 hours ago
பணம் வாங்காமல் உதவி செய்தாலே ஏளனங்கள் தான் வரும். சீதனம் வாங்காமல் கலியாணம் கட்டும் மாப்பிளை போல்....🤣 இளையராஜா எந்தவொரு தயாரிப்பாளரையோ நடிகர்களையோ நடுத்தெருவில் விட்டது கிடையாது.😎 அதிக திரைப்படங்களுக்கு உயிரூட்டியதே இளையராஜா இசை மட்டுமே. கமல்,ரஜனி படங்கள் உட்பட......

நாம் தமிழரில் எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சீட்? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு ஜாக்பாட்

5 days 10 hours ago
நாம் தமிழரில் எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சீட்? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு ஜாக்பாட் Nantha Kumar RUpdated: Thursday, February 26, 2026, 0:43 [IST] சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்குகிறது. 234 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் எந்தெந்த சமுதாய மக்களுக்கு எவ்வளவு சீட் வழங்கப்பட்டு உள்ளது? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முழுவிவரம் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும்படி விஜய் அழைப்பு விடுத்தார். ஆனால் தற்போது வரை எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. அதேவேளையில் வழக்கம்போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். 234 வேட்பாளர்கள் அறிவிப்பு மேலும் கடந்த 21ம் தேதி திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சீமான் தனது வேட்பாளர்களை அறிவித்தார். Also Read தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். இதில் சீமான் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் எந்தெந்த ஜாதியினருக்கு எவ்வளவு சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. பறையர் - தேவேந்திர குல வேளாளர் அதன்படி தமிழகம் முழுவதும் பறையர் சமுதாயத்தினருக்கு 27 இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பொதுத்தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 15 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Recommended For You கவுண்டர் - நாடார் மேலும் கவுண்டர் 24, கள்ளர் 11, குயவர் ஒருவர், கோணார் 8, சாலியர் ஒன்று, நாட்டுக்கோட்டை செட்டியார் ஒன்று, சவுராஷ்டிரா சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடார் 11, நாயக்கர் 3, நாயுடு 3, படுகர் 2, பண்டாரம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், பழங்குடியினருக்கு 3 இடங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பொதுத்தொகுதியில் போட்டியிடுகிறார். வன்னியர் - பிராமணர்கள் அதேபோல் வன்னியர் 34, பிள்ளைமார் 8, மருத்துவர் 1, மறவர் 10, மீனவர் 5, முதலியார் 8, முத்தரயைர் 8, மூப்பனார் ஒன்று, ரெட்டியார் 2 இடங்களில், வண்ணார் ஒன்று, பிராமணர்களுக்கு 6 தொகுதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அகமுடையார் சமுதாயத்தினர் 9 பேர், உடையார் 7 பேர், அருந்ததியர் 3 பேர், ஆசாரி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், தமிழ் குறவர் ஒருவர், ஊராளி கவுண்டர் ஒருவர், ஒக்கலிக்க கவுடா ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. You May Also Like இஸ்லாமியர்களுக்கு எத்தனை? இஸ்லாமியருக்கு 10 இடங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் தமிழர் கட்சியின் விவரத்தை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/seemans-naam-tamilar-party-candidates-and-their-castes-for-tamil-nadu-assembly-election-776727.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel நாம் சாதியஒ ஒழிக்க புறப்பட்ட எளிய பிள்ளைகள். புஹா ஹா ஹா…😂

இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்

5 days 11 hours ago
இணைந்து பயணிப்பது என்பதன் வரைவிலக்கணம்தான் என்ன? வெட்கம் கெட்டு ஒரு ராஜ்ஜசபா சீட்டுக்கு கமல் மையத்தை திமுக கூட்டணியில் அடக்கம் செய்தால் - அவரை திமுக கைகூலி என்றுதானே அழைத்தோம்? அதை நானும் ஏற்றேன். அதேபோல் பிஜேபி பரிந்துரையில் ராஜ்ஜசபா எம்பி ஆனவர் இளையராஜா. அவர் திமுக கைக்கூலி. இவர் பிஜேபி கைக்கூலி. அவர் நல்லா நடிப்பார். இவர் நல்ல பாட்டு போடுவார். ஆனால் இருவரும் “வெள்ளந்தி” என்ற பட்டத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத மனிதர்கள். எனக்கு அவரின் நடிப்பும், இவரின் இசையும் மிக, மிக, மிக பிடிக்கும். ஆனால் அதனால் மட்டும் அவர்களுக்கு வெள்ளேந்தி, அல்லது “இணைந்து பயணிப்பவர்” என்ற வெள்ளை அடிப்புகளை நான் செய்வதில்லை. எனக்கு பிடித்த படைப்பாளி என்பதால் மட்டும் ஒருவர் ஏனைய விதங்களில் சொக்கதங்கம் என்றில்லை. உங்களிடத்திலும், இந்த திரியில் ஏனைய சில கருத்தாளரிடமும் நான் காண்பது கட் அவுட்டுக்கு பால் வார்க்கும் ரசிக குஞ்சு மனோநிலையின் அடுத்த கட்டத்தையே. அதேபோல் வட்டிக்கு கடன் எடுத்து சினிமாவில் முதலிட்டு படம் பப்படமானல் ராஜா கூலியை வாங்கி கொண்டு எஸ் ஆகி விடுவார். நடுத்தெருவில் நிற்பது தயாரிப்பாளர்தான். போட்டு கொண்ட ஒப்பந்தபடி யாருக்கு உரிமை உண்டோ அவர் எடுத்து கொள்ளலாம். இது படத்துக்கு படம் வேறுபடும். அத்தனையும் எனக்கே என்பது பேராசை மட்டும் அல்ல, உரிமை-திருட்டு. சினிமா நட்சத்திர பிம்பம் கண்ணை மறைத்தான் இப்படியானவை தெரியாது.

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

5 days 11 hours ago
இவையெல்லாம் இயற்கை அனர்த்தங்கள் அல்ல. சாதாரண இயற்கை நிகழ்வுகள் மட்டுமே. இன்றைய குடிசை கைத்தொழில் செய்திகளின் பிரமாண்டங்களுக்காக செய்திகளை வெளியிடுவார்கள். சென்ற 50 ஆண்டுகால காலநிலைகளை அவதானித்தால் இன்றைய சில கால நிலைகள் சர்வதாசாரணமாகவே தெரிகின்றது. எதற்கெடுத்தாலும் ஒரு சிறிய விடயத்தையும் பெரிதாக்குவது இன்றைய நடைமுறையாகி விட்டது என்பது கவலைக்குரிய விடயம்.

மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை

5 days 12 hours ago
வெளிநாடு போவதற்கு 77 களில் கொம்பனித்தெருவில் நின்ற நேரம் பிற்பகலில் தொடரூந்து ஏறி வெள்ளவத்தை தெகிவளை போய் திரும்ப வருவோம். கொஞ்ச நாளில் வெளிநாடு போகாவிட்டாலும் பரவாயில்லை பிற்பகலில் இந்த தொடரூந்து பயணம் மட்டும் கைவிட முடியவில்லை. அப்படி என்ன தான் பார்த்திருப்பேன். ஊரில் இருந்து வந்த புதிதில் கற்பாறைகளுக்குள் தாழம் பற்றைக்குள் நடக்கும் திருவிளையாடல்கள் வெளிநாட்டை விட சொர்க்கமாக தெரிந்தது. கடைசிவரை சலிக்கவே இல்லை.

இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்

5 days 12 hours ago
சரியாக சொன்னீர்கள். ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு சிந்தனைகள்,கருத்துக்கள் இருக்கும். என்னைப்போல் எல்லோரும் இருக்கவேண்டும் என நினைத்தால் அதுவும் ஒரு வித மனநோய் தான். உழைப்பவனுக்கு தான் தெரியும் உழைப்பின் வேதனை. இங்கே எப்படி பிஜேபி வந்தது? எப்படி விஜய் வந்தார் என தெரியவில்லை?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

5 days 12 hours ago
பிரமிளுக்கு வேற வேலை இல்லை. இப்பிடியா போட்டுக் கலாய்க்கிறது. இவங்களிட்ட மாட்டுப் பட்டு அந்தாள் (சிவனார்) படும் பாடு. சிவராத்திரியில் போட்ட குத்தாட்டம் காணுமே.
Checked
Tue, 03/03/2026 - 08:21
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed