புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

5 days 21 hours ago
இந்த t20 உலககோப்பைக்கு முதல் நடந்த தொடர்களில் இலங்கையை இங்கிலாந்து இலங்கை மண்ணில் 3-0 கணக்கில் வீழத்தியது. பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் பல முக்கிய அவுஸ்திரேலியா வீரர்கள் விளையாடவில்லை இந்தியா மண்ணில் நியூசிலாந்து இந்தியாவிடம் 4-1 கணக்கில் தோற்றது. இதனால் இந்த சூப்பர் 8 குழு 2 இல் முதலிடம் இங்கிலாந்தும் இரண்டாம் இடம் பாகிஸ்தானும் தெரிவு செய்து விடைகளை எழுதினேன். நியூசிலாந்து இலங்கையை விட பலமான நாடாக இருந்தும் இலங்கையில் போட்டி நடப்பதினால் இலங்கையை 3 வது நாடாக தெரிவு செய்தேன். இதே போல ஆரம்ப சுற்று போட்டிகளிலும் ஒவ்வொரு குழுக்களில் அணிகளை வரிசைப்படுத்தினேன்.

உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை!

5 days 21 hours ago
உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை! ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. "உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு" என்ற பெயரிலான இந்தத் தீர்மானம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், 51 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை, இந்தியா ஆகியவற்றுக்கு மேலதிகமாக பஹ்ரைன், பங்களாதேஷ், பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நாடுகளுள் அடங்குகின்றன. இந்தத் தீர்மானத்தில், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய நீதியான, முழுமையான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், போருடன் தொடர்புடைய அனைத்துப் போர்க் கைதிகளையும் முழுமையாகப் பரிமாற்றம் செய்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவித்தல் ஆகியன ஒரு முக்கியமான படியாக இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் உட்பட உக்ரைனின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான வலுவான அர்ப்பணிப்பும் இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmm1dw0z90019356p6o2v3azf

புலிகள் மீதான தடையினை நீக்குமாறு வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

5 days 21 hours ago
புலிகள் மீதான தடையினை நீக்குமாறு வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991 இல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014 இல் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடையை நீட்டிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதீர்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி, “இலங்கையில் பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் கொத்து கொத்தாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள கோயில்கள் இடிக்கப்பட்டு, இனப்படுகொலை தொடர்கிறது. இதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சூழலில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடை விதிப்பது ஏற்புடையதல்ல. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும்.” என்று வாதிட்டார். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கடசாமி பாபு ஆகியோர், “விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 2024 ஆம் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், வைகோ 2014 இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த உத்தரவே காலாவதியாகிவிட்ட நிலையில், இந்த வழக்கும் செல்லத்தக்கதல்ல. மேலும், வைகோ பாதிக்கப்பட்ட நபரும் அல்ல. டில்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வைகோவின் ஆட்சேபனை மனுவை நிராகரித்துள்ளது.” என்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/புலிகள்-மீதான-தடையினை-நீக்குமாறு-வைகோ-தொடர்ந்த-வழக்கு-தள்ளுபடி/175-372975

மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

5 days 21 hours ago
மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் adminFebruary 25, 2026 மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எருவிட்டான் கிராமத்தில் 1.5 கிலோ மீட்டர் நீளமான வீதி புனரமைப்பு பணிகள் நேற்று செவ்வாய் (24) மாலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பு பணிகளுக்காக 57.82 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு வீதிகளின் அபிவிருத்தி பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/229713/

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஐ.நா சபை தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவு

5 days 21 hours ago
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஐ.நா சபை தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவு 25 Feb, 2026 | 12:35 PM கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவளித்த நிலையில் செவ்வாய்க்கிழமை (24) இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உட்பட 107 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. மேலும், கியூபா, ஈரான், மாலி, ப்ருண்டி, பெலாரஸ், ரஷ்யா , சூடான், நைஜர் உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. அதேவேளை, இத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ் முதலான 51 நாடுகள் பங்கேற்கவில்லை. ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான தொடர்ச்சியாக நிலவி வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இடப்பெயர்வுகளை எதிர்கொண்டுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் அதிகமான உடல், உளப் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உலக நாடுகளின் ஆதரவை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திரட்டி வருகிறார். இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை உடனடியாக நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து, ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவளித்த நிலையில், அந்த நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “முழுமையான போர் நிறுத்தம் மற்றும் எங்கள் நாட்டு மக்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கான தெளிவான அழைப்புகளுடன் கூடிய எங்களின் தீர்மானத்தை ஐ.நா பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இவை சரியான நடவடிக்கை. அமைதியை ஏற்படுத்த எங்களின் நட்பு நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/239535

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

5 days 21 hours ago
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் : 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அச்சுப்பணியை நிறுத்தியது 'தி பொஸ்டன் க்ளோப்' நாளிதழ் 25 Feb, 2026 | 11:19 AM அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக 153 ஆண்டுகால வரலாறு கொண்ட பொஸ்டன் க்ளோப் பத்திரிகை முதல் முறையாக தனது தினசரி செய்தித்தாள் வெளியீட்டுப் பணியை நிறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பொஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் பனிப்புயல் அனர்த்த நிலைமை மோசமாகி வருகிறது. குறிப்பாக, பொஸ்டன் க்ளோப் பத்திரிகை நிறுவனம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பிரிஸ்டலில் 2 அடி உயரத்துக்கு பனி மூடியுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (23) இரவு வரை 81 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனி குவிந்துள்ளதாக அங்குள்ள தேசிய வானிலை சேவை நிலையம் குறிப்பிடுகிறது. இந்த பனிப்புயலால் குறித்த பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் பணிக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், நாளிதழை அச்சிட்டு வெளியிடுவதில் கடினமான சூழ்நிலையை அந்நிறுவனம் எதிர்கொண்டு வருவதால் நாளிதழை அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் வெளியிடப்படும் பிரபலமான தி பொஸ்டன் க்ளோப் நாளிதழ் 1872இல் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இணையத்தின் வளர்ச்சி காரணமாக செய்தித்தாள்களை வாசகர்கள் வாசிப்பது குறைந்துவிட்ட நிலைமை அமெரிக்காவிலும் அதிகரித்துக் காணப்படுகிறது. Pew ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) 2025ஆம் ஆண்டு கணிப்பின்படி, அமெரிக்காவில் வளர்ந்தவர்களில் 7 வீதமானோர் மட்டுமே செய்தித்தாளை வாங்கி செய்திகளை அறிபவர்களாகவும் 56 வீதமானோர் ஸ்மார்ட்போன், கணினி, டெப்லெட் முதலிய சாதனங்களின் ஊடாக செய்திகளை அறிந்துகொள்கின்றனர் என்றும் குறிப்பிடப்படுகிறது. https://www.virakesari.lk/article/239525

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

5 days 22 hours ago
ஹெரி ப்றூக் அபார சதம்; அரை இறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தானின் வாய்ப்பு கேள்விக்குறி 25 Feb, 2026 | 09:48 AM (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான போட்டியில் 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. மிகவும் இக்கட்டான நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக் 50 பந்துகளில் குவித்த அபார சதம் இங்கிலாந்துக்கு வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் ஈட்டிக்கொடுத்தது. ஏற்கனவே நியூஸிலாந்துடனான போட்டி கைவிடப்பட்ட நிலையில் இங்கிலாந்திடம் இன்று அடைந்த தோல்வியால் பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 165 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.1 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று பரபரப்பான வெற்றியை ஈட்டியது. இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஷஹீன் ஷா அப்றிடி அபாரமாக பந்துவீசி முதல் 3 விக்கெட்களை வீழ்த்த இங்கிலாந்து 35 ஓட்டங்களைப் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தபோது நான்காவது விக்கெட் சரிந்தது. இந் நிலையில் அணித் தலைவர் ஹெரி ப்றூக், சாம் கரன் (16) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு நம்பிக்கையை ஊட்டினர். அதனைத் தொடர்ந்து ஹெரி ப்றூக், வில் ஜெக்ஸ் (28) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 155 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால் ஹெரி ப்றூக், வில் ஜெக்ஸ், ஜெமி ஓவர்ட்டன் ஆகிய மூவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜொவ்ரா ஆச்சர் பவுண்டறி அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தார். ஹெரி ப்றூக் 51 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஹெரி ப்றூக் குவித்த முதலாவது சதம் இதுவாகும். பந்துவிச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் நவாஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உஸ்மான் தாரிக் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்ற்றினர். முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. போட்டியின் நான்காவது ஓவரில் பாகிஸ்தான் 2ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 27 ஓட்டங்களாக இருந்தது. எனினும் மிகத் திறமையாகவும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் சாஹிப்ஸதா பர்ஹான் 3ஆவது விக்கெட்ல் பாபர் அஸாமுடன் 46 ஓட்டங்களையும் பக்கார் ஸமானுடன் 49 ஓட்டங்களையும் பகிர்ந்து பாகிஸ்தானை நல்ல நிலையில் இட்டார். சாஹிப்ஸதா பர்ஹான் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 63 ஒடடங்களையும் பாபர் அஸாம் 25 ஓட்டங்கiயும் பக்கார் ஸாமான் 25 ஓட்டங்களையும் பெற்றனர். கடைசி பந்தில ஆட்டம் இழந்த ஷதாப் கான் 23 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் லியாம் டோசன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஹெரி ப்றூக் https://www.virakesari.lk/article/239502

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி: பொதுமக்களுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை

5 days 22 hours ago
பொலிஸ் அதிகாரிகளின் பெயரில் முன்னெடுக்கப்படும் பாரிய மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 25 Feb, 2026 | 10:33 AM உயர் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் ஏனைய தனியார் நிறுவனங்களுக்குத் தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் மோசடிக்காரர்கள், தாம் உயர் பொலிஸ் அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். பல்வேறு வைபவங்களுக்காக உணவுப் பொருட்கள் மற்றும் பணம் தேவைப்படுவதாகக் கூறி, நிறுவனங்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் குழுவொன்று குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான மோசடி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸார் நிறுவனங்களையும் பொதுமக்களையும் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்த தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பின்வரும் இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (கொழும்பு மத்திய பிரிவு): 071-8591551 https://www.virakesari.lk/article/239519

மட்டக்களப்பின் மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்க முயற்சி – இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு

5 days 22 hours ago
மட்டக்களப்பின் மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்க முயற்சி – இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு Published By: Digital Desk 3 25 Feb, 2026 | 09:49 AM மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் விஜயம் மேற்கொண்ட லங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செயலாளர் இரங்கநாதனுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன்,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதன்போது எல்லை நிர்ணய சபையினால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, இன்று (24.02.2026) நான் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு. சோ. ரங்கநாதன் அவர்களை சந்திக்க பிரதேச செயலகத்திற்குச் சென்றேன். இச்சந்திப்பில் போரதீவுப்பற்று தவிசாளர் கௌரவ வி. மதிமேனன், பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவ அ. பிறேமாகரன், கௌரவ ம. கோபிநாத், கௌரவ கா. யோகராசா மற்றும் கௌரவ தே. ஜேனுகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக எந்தவித தகவலும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்தார். எல்லை நிர்ணயம் தொடர்பாக சில இடங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தாலும், குறிப்பிட்ட கிராமங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல், மட்டக்களப்பின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் பிரிவுகளுடன் இணைப்பதற்கான கூட்டம் நடைபெற்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதில் சில முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தின் சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25ஆம் கொலணி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட குமாரிகம கிராமத்தையும் இணைத்து, “சமகிபுர” என்ற புதிய கிராமத்தை உருவாக்கி அம்பாறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருதல். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராணமடு கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட சுகதகம கிராமத்துடன் இணைத்தல் ,மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட கோணகல கிராமத்துடன் இணைத்தல் போன்ற திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/239514

பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை

5 days 22 hours ago
கருத்துச்சுதந்திரம் பற்றிய நாமலின் கருத்து: ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி சுட்டிக்காட்டி சர்வதேச மன்னிப்புச்சபை விமர்சனம் 25 Feb, 2026 | 09:10 AM (நா.தனுஜா) ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் ஆற்றவிருந்த உரைகள் இரத்துச்செய்யப்பட்டமையை கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் மீதான முடக்கம் என்ற ரீதியில் வர்ணித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கருத்தை விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் என எவரும் இல்லாதிருந்தால் இந்த வாதம் செல்லுபடியாகியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய புகழ்பெற்ற இரு பல்கலைக்கழகங்களின் மாணவ சங்கங்களில் உரையாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவ்வழைப்பு தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் மத்தியிலிருந்து வலுத்த எதிர்ப்பை அடுத்து, பல்கலைக்கழக சங்க ஒருங்கிணைப்புக்குழுக்களால் அவ்விரு உரைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதனையடுத்து சமூகவலைத்தளங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுவரும் அதேவேளை, இவ்வுரைகள் இரத்துச்செய்யப்பட்டமையானது தெற்கில் இனவாதத்தைக் கிளப்பி அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு வாய்ப்பாக அமைந்திருப்பதாக ஒருசாரார் வெளியிட்டு வருகின்றனர். அதேவேளை தனது உரைகள் இரத்துச்செய்யப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருளக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தர்க்க ரீதியில் கருத்துக்களை முன்வைப்பதற்கும், கடினமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குமான வாய்ப்பை வழங்கக்கூடிய இந்த உரைகள் இரத்துச்செய்யப்பட்டமையானது ஒருபோதும் கருத்துச்சுதந்திரத்தையோ அல்லது ஜனநாயகத்தையோ வலுப்படுத்தும் வகையில் அமையாது எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, 'ராஜபக்ஷாக்களினால் கொல்லப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் என எவரும் இல்லாமல் இருந்திருந்தால், தற்போது நாமல் ராஜபக்ஷ முன்வைக்கின்ற கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் எனும் வாதம் செல்லுபடியாகியிருக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/239506

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான தமிழ் பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

5 days 22 hours ago
சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு புதிய தமிழ் பொறுப்பதிகாரி | Chunnakam Tamil Police | Nitharsan யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரியான சிவானந்தன் நிதர்சன் நேற்றைய தினம் 23.02.2026 தனது பதவியை உத்தியோகபூர்வமாக கடமையேற்றுள்ளார். அவர் ஆரம்பத்தில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களை வழங்கி அவரை கௌரவித்தனர்.

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

5 days 22 hours ago
4 மாதங்களில் 102,900 சந்தேக நபர்கள் கைது ; 15 இலட்சத்துக்கும் அதிக தனிநபர் சோதனைகள் - பொலிஸ் பேச்சாளர் 24 Feb, 2026 | 07:04 PM (எம்.மனோசித்ரா) முழு நாடும் ஒன்றாக - தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரையில் 5000 கிலோ கிராமுக்கும் அதிக போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 102 900 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமான தனிநபர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முழு நாடும் ஒன்றாக - தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரையில் 526 கிலோ 603 கிராம் ஹெரோயின் மற்றும் அதனுடைய தொடர்புடைய 34 360 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1419 கிலோ 121 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 38 423 சந்தேகநபர்களும், 3548 கிலோ கிராம் கஞ்சாவுடன் 24 244 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 இலட்சம் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த 4 மாதங்களில் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 900 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர்களிடமுள்ள சட்ட விரோத சொத்துக்கள் குறித்த 144 விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2018 தடுப்புக்காவல் உத்தரவுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை தவிர சுமார் 15 இலட்சத்துக்கும் அதிகமான தனிநபர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1036 சந்தேகநபர்களும், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 24 813 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 21 736 சாரதிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் சுமார் 3500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த 29 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அத்தோடு சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் அற்ற மேலும் 13 சந்தேகநபர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள மேலும் 89 சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2024இல் 1400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்ட விரோத சொத்துக்களும், 2025இல் 1549 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்ட விரோத சொத்துக்களும், இவ்வாண்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் 50 மில்லியன் பெறுமதியான சட்ட விரோத சொத்துக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 2025இல் ஜனவரி - டிசம்பர் வரை 74 டி-56 ரக துப்பாக்கிகளும், 90 பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், 63 ரிவோல்வர் ரக துப்பாக்கிகளும் உள்ளடங்களாக 2414 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இவ்வாண்டில் 3 டி-56 ரக துப்பாக்கிகளும், 4 பிஸ்டல் ரக துப்பாக்கிகளும், 10 ரிவோல்வர் ரக துப்பாக்கிகளும் உள்ளடங்களாக 237 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/239496

இஸ்ரேலுக்கு பயணிக்கும் பிரதமர் மோதி - டிரோன்கள் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

5 days 22 hours ago
இஸ்ரேலுக்கு பயணிக்கும் பிரதமர் மோதி - டிரோன்கள் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெறுவது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிரதமர் நரேந்திர மோதி இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார் கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் (பிப்ரவரி 25-26) இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்ததாகத் தெரிவித்தார். பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்தப் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் மோதி, "இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு குறித்த விஷயத்தில் நான் உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். நம்பிக்கை, புத்தாக்கம், அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஒரே மாதிரியான அர்ப்பணிப்பின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலுடனான உறுதியான நட்புக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது," என்று கூறினார். ஃபோர்ப்ஸ் இந்தியா செய்தியின்படி, 2026-ஆம் ஆண்டில் இந்தியா இஸ்ரேலுடன் 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறது. இதில், ஸ்பைஸ்-1000 துல்லியமாக வழிநடத்தப்படும் குண்டுகள், ராம்பேஜ் (Rampage) வானிலிருந்து தரையை குறிவைக்கும் ஏவுகணை, வான்வழி ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஐஸ் பிரேக்கர் ஏவுகணை அமைப்பு ஆகியவை அடங்கும். பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவும், பிரதமர் மோதியின் பயணத்தின் போது இஸ்ரேலுடன் பல முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று கூறுகிறார், இதில் நவீன டிரோன்களும் அடங்கும். முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம், அதாவது இஸ்ரேல் தொழில்நுட்பத்தை வழங்கும் டிரோன்களின் உற்பத்தி இந்தியாவில் நடைபெறக்கூடும். 'தி இந்து' நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, இந்தியா இஸ்ரேலிடமிருந்து கூடுதல் எண்ணிக்கையிலான ஹெரான் எம்கே-2 என்கிற நடுத்தர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் டிரோன்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. 'ஏர்ஃபோர்ஸ் டெக்னாலஜி டாட் காம்'படி, இந்த டிரோன் ஒரே நேரத்தில் தொடர்ந்து 45 மணி நேரம் பறக்கக்கூடியது. இது சுமார் 470 கிலோ எடையைச் சுமந்து செல்லக்கூடியது. இது சுமார் 35 ஆயிரம் அடி உயரம் வரை செல்லக்கூடியது என்பதுடன் அனைத்து வகையான வானிலையிலும் பறக்கும் திறன் கொண்டது. தற்போதைய காலகட்டத்தில் பாதுகாப்பு மற்றும் போர் துறையில் 'டிரோன்' ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். பிரதமர் மோதியின் இஸ்ரேல் பயணம் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில், "இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான உறவு இரண்டு உலகளாவிய தலைவர்களுக்கு இடையிலான ஒரு வலுவான கூட்டணியாகும்." என்று பதிவிட்டுள்ளார். "நாங்கள் புத்தாக்கம், பாதுகாப்பு மற்றும் ஒரே மாதிரியான மூலோபாய பார்வையில் கூட்டாளிகளாக இருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாடுகளின் ஒரு குழுவை உருவாக்கி வருகிறோம்." என்று அவர் தெரிவித்துள்ளார். என்ன ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பாலத்தீன பிரதேசத்தில் ஒரு இஸ்ரேலிய டிரோன் பறக்கிறது (கோப்புப் படம்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் இரண்டாவது இஸ்ரேல் பயணம் , அமெரிக்கா மற்றும் இரான் இடையே நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில் வந்துள்ளது. இதற்கு முன்பு அவர் ஜூலை 2017-இல் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டார். இதற்கு முன்னதாக இரு நாடுகளின் அமைச்சர்களும் பரஸ்பரம் பல பயணங்களை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு இஸ்ரேலின் பல அமைச்சர்கள் இந்தியா வந்திருந்தனர் மற்றும் டிசம்பர் மாதம் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோதியின் இரண்டாவது இஸ்ரேல் பயணத்தில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே பாதுகாப்புத் துறையில் பல பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இந்த ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் பகிரப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானுடன் நடந்த மோதலின் அனுபவங்களின் அடிப்படையில், இஸ்ரேலின் நவீன டிரோன்களை வாங்குவதற்கும் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். உண்மையில், மாறிவரும் காலத்திற்கேற்ப உலகின் பல நாடுகள் பாதுகாப்பு, எதிரிகளின் நிலைகளை அறிதல் மற்றும் தாக்குதல் ஆகியவற்றுக்கு டிரோன்களைப் பயன்படுத்தி வருகின்றன, இந்த டிரோன் ஒரு முக்கிய ஆயுதமாக உருவெடுத்துள்ளது. ரகசியத் தகவல்களைச் சேகரித்தல், கண்காணிப்பு, வேவு பார்த்தல், மறைவிடங்களைக் கண்டறிதல், துல்லியமாக இலக்கு வைத்துத் தாக்குதல், கடினமான பகுதிகளில் உதவி வழங்குதல், ராணுவம் அல்லது பிற பணிகளுக்கான விநியோகம், எதிரியின் சிக்னல்களைப் பாதித்தல், மீட்புப் பணிகளை நடத்துதல் போன்ற பணிகளில் டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், டிரோன்கள் ஆளில்லா வான்வழி வாகனங்கள் என்பதால், இதன் செயல்பாட்டில் மனித உயிரிழப்புக்கான வாய்ப்பு இல்லை. எதிரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில் இது போர் விமானங்களை விடப் பின்தங்கியிருக்கவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். 2020 ஜனவரி 3 அன்று பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி இரானின் அல்-குத்ஸ் படையின் தலைவர் காசிம் சுலைமானியைக் கொன்றது, அந்த அளவு துல்லியமாக இலக்கு வைக்க முடியும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து யாருக்கும் துளிகூடத் தெரியவில்லை. டிரோன்கள் ஏன் ஒரு முக்கியமான ஆயுதமாக மாறின? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,காசிம் சுலைமானியைக் கொல்ல அமெரிக்கா ஒரு டிரோனைப் பயன்படுத்தியது (கோப்புப் படம்) கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் போர் மற்றும் அதன் முறைகள் மிக வேகமாக மாறியுள்ளன. இதில், டிரோன் மிகவும் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. தற்போது நடந்து வரும் ரஷ்யா-யுக்ரேன் போராக இருக்கட்டும் அல்லது அதற்கு முன்பு ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே நடந்த போராக இருக்கட்டும், இவற்றில் டிரோன்களின் பயன்பாடு பெருமளவில் காணப்பட்டது. கடந்த ஆண்டு 'ஆபரேஷன் சிந்தூர்'-ன் போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் டிரோன்களைப் பயன்படுத்தின. முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலும், ஆர்மி ஏர் டிஃபென்ஸின் முன்னாள் இயக்குநர் ஜெனரலுமான வி.கே. சக்சேனா கூறுகையில், "தற்போதைய காலகட்டத்தில் டிரோன் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. டிரோனின் இரண்டு பெரிய நன்மைகள் என்னவென்றால், இதை பாரம்பரிய ரேடார் அமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாது, இரண்டாவதாக இதன் மூலம் துல்லியமாக இலக்கு வைக்க முடியும்." அவர் கூறுகையில், "இது நிகழ்நேர நுண்ணறிவு (Real Time Intelligence), கண்காணிப்பு (Surveillance), இலக்கைக் கண்டறிதல் (Target Acquisition) மற்றும் - வேவு பார்த்தல் (Reconnaissance) ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரிய விமானப்படையை மாற்றீடு செய்ய முடியாது என்றாலும் இதன் மூலம் தரையிலுள்ள எதிரிப் படைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும்." டிரோன்களை நாடுகள் மட்டும் பயன்படுத்துவதில்லை, பல ஆயுதமேந்திய குழுக்களும் இதைப் பயன்படுத்துகின்றன, ஏனெனில் அவர்களிடம் ஒரு நாட்டைப் போலப் பெரிய நிதி இருப்பதில்லை. விமானப்படை பாதுகாப்பு நிபுணரும் முன்னாள் மேஜர் ஜெனரலுமான அசோக் குமார் கூறுகையில், "இவை போர் விமானங்களை விட மிகவும் மலிவானவை என்பதால் பெரிய நாடுகள் தவிர சிறிய நாடுகளும் டிரோன்களை வாங்க முடியும். டிரோன் போர்க்களத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது. வலிமையான நாடுகளிடம் அதிக டிரோன்கள் இருக்கும் என்பது உண்மைதான், ஆனால் பலவீனமான நாடுகளும் இதன் உதவியுடன் போரிட முடியும்" என்றார். டிரோன்கள் போர்ச்சூழலை எவ்வாறு மாற்றியுள்ளன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவை எதிர்கொள்ளும் யுக்ரேனின் திறனில் டிரோன்கள் நீண்ட காலமாக முக்கிய காரணியாக இருப்பதாக நம்பப்படுகிறது (கோப்புப்படம்) ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே 2022 பிப்ரவரி மாதம் முழு வீச்சில் போர் தொடங்கியது. ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது யுக்ரேன் மிகச் சிறிய நாடு மற்றும் அதன் ராணுவ வலிமையும் ரஷ்யாவை விடக் குறைவு. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும், இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் இந்தப் போரில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இதற்குப் பின்னால் இந்தப் போரில் இரு நாடுகளும் டிரோன்களைப் பயன்படுத்துவது பெரிய காரணமாகக் கருதப்படுகிறது. டிரோன்களின் தாக்குதல் திறன் அல்லது எதிரிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் மிக அதிகம், ஆனால் டிரோன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது ஒரு நாட்டுக்குப் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தாது. மேஜர் ஜெனரல் அசோக் குமார் கூறுகையில், "இந்தப் போரில் டிரோன்கள் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் இதில் டிரோன்களைப் பயன்படுத்தியுள்ளன. யுக்ரேனிடம் நேட்டோ (NATO) நாடுகளின் டிரோன்கள் உள்ளன, அதன் திறனைக் கண்டு யுக்ரேனே இப்போது டிரோன்களில் அதிக முதலீடு செய்து வருகிறது." ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரைப் பற்றி மேஜர் ஜெனரல் அசோக் குமார் குறிப்பிடுகிறார். "டிரோன்கள் போர்க்களத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கின்றன, எதிர்காலத்தில் இது இன்னும் முன்னேறும். அஜர்பைஜான் ஆர்மீனியாவிடம் இரண்டு முறை தோற்றது, ஆனால் பின்னர் துருக்கி அதற்கு டிரோன்களை வழங்கியது, அதன் பிறகு, அது முழு வெற்றியைப் பெற்றது," என அவர் கூறுகிறார். மேஜர் ஜெனரல் அசோக் குமாரின் கூற்றுப்படி, "சமீபத்திய மோதலில் பாகிஸ்தானும் நமக்கு எதிராக டிரோன்களைப் பயன்படுத்தியது, ஆனால், இந்தியாவின் மேற்கு முனை மிகவும் வலுவாக இருப்பதால் அதன் தாக்கம் பெரிதாக இல்லை." கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மே 6 மற்றும் 7-ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் "ஆபரேஷன் சிந்துரை" நடத்தியது. இதற்குப் பிறகு போர்நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்னதாக நான்கு நாட்கள் இரு நாடுகளின் படைகளும் நேருக்கு நேர் நின்றன. இந்தத் தருணத்தில் இரு நாடுகளும் பரஸ்பரம் பெரிய இழப்பை ஏற்படுத்தியதாகக கூறின. பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, "டிரோன்கள் மற்றும் போர் விமானங்கள் அல்லது ஏவுகணைகளுக்கு இடையே ஒப்பீடு செய்ய முடியாது, ஆனால் டிரோன்களிலும் நடுத்தர தூர, குறுகிய தூர, நீண்ட தூர ரகங்கள் உள்ளன. ரஷ்யா-யுக்ரேன் போரில் இரு நாடுகளும் அவற்றைப் பயன்படுத்தி மிக உட்புற இடங்களுக்குச் சென்று தாக்குதல் நடத்தி எதிரி நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன." எந்த நாட்டிடம் அதிக டிரோன்கள் உள்ளன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவின் MQ9 டிரோன் டிரோன் ஒரு குறைந்த செலவிலான ஆயுதம் மற்றும் அதன் உற்பத்தியும் எளிதானது. எனவே, இந்தத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளும் மிக அதிகம். "இந்தியாவிடம் 2009-ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலிடமிருந்து கிடைத்த 'ஹாரோப்' டிரோன் உள்ளது, இதை 'தற்கொலை டிரோன்' என்றும் அழைக்கிறார்கள். இது இலக்கை அடைந்ததும் தன்னைத்தானே வெடிக்கச் செய்துகொள்ளும். இது தவிர 2002-ஆம் ஆண்டு முதல் இந்தியாவிடம் இஸ்ரேலின் 'ஹெரான்' டிரோன் உள்ளது. இந்தியாவில் டிஆர்டிஓ-வும் டிரோன்களை உருவாக்கி வருகிறது," என சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "இது தவிர இந்தியாவுக்கு அமெரிக்காவிலிருந்து சண்டையில் ஈடுபடும் போர் டிரோன்களான 30 'ரிப்பர்' (MQ9) டிரோன்கள் கிடைக்கப் போகின்றன." சிறந்த டிரோன் தொழில்நுட்பங்களைக் கொண்ட முன்னணி நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என்று மேஜர் ஜெனரல் அசோக் குமார் கூறுகிறார். இந்த நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, யுக்ரேன் மற்றும் துருக்கி ஆகியவை அடங்கும். இருப்பினும், டிரோன்களின் வெவ்வேறு பாகங்கள் மற்றும் கூறுகளின் அடிப்படையில் வெவ்வேறு நாடுகள் முன்னணியில் உள்ளன, எனவே இந்தத் தொழில்நுட்பத்தில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுவது எளிதல்ல. "டிரோன்கள் போர் விமானங்களுக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை மற்றும் இது மிகவும் மலிவானது என்பதால் அதிக எண்ணிக்கையில் வைத்திருக்க முடியும்," என மேஜர் ஜெனரல் அசோக் குமார் கூறுகிறார். எதிரிகளின் வெகுதூரத்திலுள்ள மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்த டிரோன்களைப் பயன்படுத்த முடியாது என்பது ஒரு குறையாக உள்ளது. இருப்பினும், உலகம் முழுவதும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மோதல்கள் அல்லது போர்கள் அண்டை நாடுகளுக்கு இடையேதான் காணப்படுகின்றன, அந்த வகையில் எதிர்காலத்தில் டிரோன்களின் முக்கியத்துவம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crm848jlrmzo

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

5 days 22 hours ago
ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல் : அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது! 25 Feb, 2026 | 09:58 AM அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது கைது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனல் 4 ஆவணப்படம் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் பெயரை தொடர்புபடுத்தி, பிரித்தானியாவின் ‘Channel 4’ தொலைக்காட்சி 2023 ஆம் ஆண்டு ஒரு விசேட ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. அந்த ஆவணப்படத்தில், ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையானின் செயலாளராக பணியாற்றிய அசாத் மௌலானா என்பவர், சுரேஷ் சாலே தொடர்பான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியிருந்தார். முன்னைய பதவிகள் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார். எனினும், 2024 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களால், அவர் தனது பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239511

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

5 days 22 hours ago
அக்குரேகொட துப்பாக்கிச் சூடு - இரண்டாவது துப்பாக்கிதாரி கைது? Feb 24, 2026 - 11:19 PM மொனராகலை, ஹுலந்தாவ பிரதேசத்தில் அக்குரேகொட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் இரண்டாவது துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சந்தேகநபர் அக்குரேகொட இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியா என்பது தொடர்பில், முக அடையாளம் காணும் கண்காணிப்பு முறைமையினூடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://adaderanatamil.lk/news/cmm0we7b40015356pxd0knayg

85,000 பயனாளிகள் 'அஸ்வெசும' நன்மைகளை இழக்கும் அபாயம் ; வங்கி கணக்கு இல்லாததால் 16,800க்கும் அதிகமானோர் நன்மைகளைப் பெறுவதில்லை - நலன்புரி நன்மைகள் சபை தகவல்

5 days 22 hours ago
85,000 பயனாளிகள் 'அஸ்வெசும' நன்மைகளை இழக்கும் அபாயம் ; வங்கி கணக்கு இல்லாததால் 16,800க்கும் அதிகமானோர் நன்மைகளைப் பெறுவதில்லை - நலன்புரி நன்மைகள் சபை தகவல் Published By: Digital Desk 3 25 Feb, 2026 | 11:19 AM (எம்.மனோசித்ரா) அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதால் அந்த நன்மைகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமால் கொடவலகெதர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தெரிவு செய்யப்பட்டால், அவர் 12 மாத காலத்துக்கு தடையின்றி கொடுப்பனவுகளைப் பெறுவார். அதன் பின்னர், அந்தப் பயனாளி அடுத்த 12 மாத சுழற்சிக்கும் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க வருடாந்த மீளாய்வு செய்யப்படுவது கட்டாயமாகும். இந்த மீளாய்வுக்காகத் தகவல்களைப் புதுப்பிக்கும் பணி 2025 நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் சுமார் 85,000 பயனாளிகள் இதுவரை தங்களது தகவல்களைப் புதுப்பிக்கவில்லை. அந்த வகையில் வருடாந்த மீளாய்வுக்காகத் தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் மிக ஏழை என வகைப்படுத்தப்பட்ட 85,000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது நன்மைகளை இழக்கும் நிலையில் உள்ளனர். அஸ்வெசும பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறை 2025 நவம்பர் 20 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை ஏழை பிரிவைச் சேர்ந்த 56,547 பயனாளிகளும், மிக ஏழை பிரிவைச் சேர்ந்த 28,608 பயனாளிகளும் இச்செயல்முறையைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளனர். இதற்கான புதிய காலக்கெடு கடந்த 20ஆம் திகதி வரை மீள புதுபிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தங்களது தகவல்களை இணையவழியூடாகவோ அல்லது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் ஒப்படைப்பதன் மூலமோ புதுப்பித்துக்கொள்ள முடியும். இது ஒரு பாரிய சிக்கலாகும். மக்கள் தங்கள் தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்காவிட்டால், அடுத்த கொடுப்பனவு சுழற்சியில் அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்கள். நாம் பிரதேச செயலகங்களுக்குத் தகவல் கொடுத்துள்ளோம், கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக இதன் அவசரத்தை உணர்த்தியுள்ளோம், மேலும் இணையவழியூடாக தகவல்களைப் புதுப்பிப்பதை எளிதாக்க தனியார் தகவல் தொடர்பு மையங்களுக்கு சிறப்பு அனுமதியையும் வழங்கியுள்ளோம். இம்மையங்கள் மூலம் ஏற்கனவே கணிசமானளவு தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 இலட்சத்து 70 000 பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனாளிகள் இன்னும் புதுப்பித்தல் செயல்முறையைச் செய்யவில்லை. பயனாளிகள் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதே இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். இந்த எண்ணிக்கையினரையும் எவ்வாறாவது உள்வாங்க நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் அவர்களைக் கைவிடப் போவதில்லை. பொதுமக்களுக்குச் செய்தியைச் கொண்டு சேர்க்க நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இன்னும் ஒரு தகவல் தொடர்பு இடைவெளிஇருப்பதை உணர முடிகிறது. இதற்கிடையில், தகுதி வாய்ந்த 16,800 விண்ணப்பதாரர்கள் வங்கி கணக்கு இல்லாத காரணத்தினால் நன்மைகளைப் பெறாமலுள்ளனர். இவர்களில் 8900 பேர் ஏழை பிரிவிலும், 4400 பேர் மிக ஏழை பிரிவிலும் அடங்குகின்றனர். வங்கி கணக்கு இல்லாதவர்களின் அதிகப்படியான எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. அந்த எண்ணிக்கை 4,655 ஆகும். நுவரெலியா மாவட்டத்தில் குறிப்பாக நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் சுமார் 1000 பயனாளிகள் வங்கி கணக்குகளை ஆரம்பிகாமலுள்ளனர். பயனாளிகள் வங்கி கணக்கை ஆரம்பிக்காமைக்கான காரணம் அவர்களிடம் தேசிய அடையாள அட்டை இன்மையாகும். தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் வங்கி கணக்கைத் திறக்க முடியாது. ஒன்று அவர்களிடம் அடையாள அட்டை இல்லை, அல்லது அவர்களுக்கு நலன்புரி நன்மைகளைப் பெறுவதில் ஆர்வம் இல்லை. பயனாளிகளைத் தெரிவு செய்து அந்தப் பட்டியலை வெளியிட்டதும், அவர்கள் நிதியைப் பெறுவதற்கு வங்கி கணக்கைத் திறக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் பயனாளிகளுக்கு ஒரு கடிதத்தை வழங்கும். அவர்கள் அந்த கடிதத்துடன் வங்கிக்குச் சென்று தெரிவு செய்யப்பட்ட அரச வங்கிகளில் 'அஸ்வெசும' கணக்காக (பூச்சிய மீதி கணக்கு - Zero-balance account) அதனைத் திறக்க வேண்டும். ஆரம்பத்தில் சுமார் ஒரு இலட்சம் பயனாளிகள் வங்கி கணக்கு இன்றி இருந்தனர். எனினும் தற்போது அந்த எண்ணிக்கையை குறைத்துள்ளோம். ஆனால் இன்னும் கணக்கு இல்லாதவர்கள் அல்லது தாம் இந்த நன்மையைப் பெற தகுதி பெற்றுள்ளோம் என்பதை அறியாதுள்ளனர். அவர்களுக்கு நாம் கடிதங்கள், குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளோம், ஆனால் செய்தி அவர்களைச் சென்றடையவில்லை என்றார். https://www.virakesari.lk/article/239524

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!

5 days 22 hours ago
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது! Feb 25, 2026 - 09:26 AM முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (25) அதிகாலை பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmm1i55xv0001356pfd1d2w9i

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

5 days 23 hours ago
இந்த ஆய்வில் இலங்கையின் முக்கிய ஓட்டங்களை பெறும் 3 தொடக்க ஆட்டக்காரர்கள் சுழலுக்கு குறைவான ஓட்ட விகிதங்களை கொண்டிருப்பதனையும் இங்கிலாந்து சுழலில் விக்கெட் எடுத்தது பாற்றி கூறுகிறார்கள், அதனால் மேலே கூறிய எனது கருத்து தவறாக தெரிகிறது நியுசிலாந்து கென்றியுடன் ஒரு முழு நேர சுழல் பந்து வீச்சாளரை பாவிக்க கூடும்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

5 days 23 hours ago
இன்று நடைபெறும் இலங்கை, நியுசிலாந்து போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது, கிரிகின்போ தகவலினடிப்படையில் இலங்கை அணியில் குசால் பெரேராவிற்கு பதிலாக பையனின் கமில் மிசாரா விளையாடுகிறார். இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இங்கிலாந்து அணிக்கெதிராக கமிண்டு மென்டிஸ் மற்றும் குசால் மென்டிஸின் பந்து வீச்சாளருக்கே இலகுவான பிடிகொடுத்து ஆட்டமிழப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார் , பாதுகாப்பான சிறிய ஓட்டங்களுக்கான அடித்தேர்வுகள் கூட சிக்கலான பிட்சில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது ஆனால் அவர்களின் முயற்சியினை பாராட்டுகிறார். அதே வேளை கிரிகின்போ மற்ற வீரர்களின் எத்தனிப்பின்மையினை சுட்டிக்காட்டுகிறது. நியுசிலாந்து வீரர் சாப்மன் நீண்ட எல்லைகள் கொண்ட கொழும்பு ஆடுகளத்தில் ஒற்றை இலக்கங்களை இரட்டை இலக்கமாக்குவதன் அவசியத்தினை கூறுகிறார், இந்த ஆடுகளம் புது ஆடுகளமாக இருப்பதால் (தொடர்ச்சியாக விளையாடும் போது மேலும் மேலும் மெதுவாகிவிடும்) ஓட்ட எண்ணிக்கையான 170 -175 என்பதினை கடந்து 180 - 185 ஆக இருக்கலாம் என கருதுகிறேன் (இன்று விளையாடவுள்ள ஆடுகளம் புதிய ஆடுகளம் என கிரிகின்போ கூறுகிறது). நியுசிலாந்து அணிக்காக லொக்கி பேர்குசன் இன்று விளையாடுவார் என கூறப்படுகின்ற நிலையில் ஜேகப் டபி விளையாடமாட்டார் என தற்போதய நிலவரத்தினடிப்படையில் கிரிகின்போ வீரர்கள் பட்டியல் காணப்படுகிறது, புதிய பந்தில் சிறப்பாக வேகப்பந்து வீசும் மட் கென்றி உள்ளார், அவருடன் மத்திய ஓவர்களிலிலும் இறுதி ஓவர்களிலும் சிறப்பாகபந்து வீசும் லொக்கி பேர்குசன் உள்ள நிலையில் வேகபந்து அனைத்துதுறை ஆட்டக்காரரான ஜிம்மி நீசமும் விளையாடுவார் என்பதாகவே கிரிகின்போ வீரர்கள் பட்டியல் காணப்படுகிறது. இந்த உலக கிண்ண போட்டியில்பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் திணறும் ஜிம்மி நீசம் தொடர்ந்தும் நீடிப்பாரா அல்லது அவருக்கு பதிலாக (சுழல் பந்து சகலதுறை ஆட்டக்காரரான பிராஸ்வெல் காயத்தினால் இத்தொடரில் விளையாடவில்லை) வேறு ஒரு சகலதுறை ஆட்டக்காரரை களமிறக்குவார்களா? இந்த ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதல் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்யும் வாய்ப்புக்கள் அதிகம். இலங்கை அணியின் பந்து வீச்சில் மாற்றம் இல்லை நியுசிலாந்து அணியில் லொக்கிபேர்குசனும் இஸ் சோதியும் விளையாடுவார்கள் என கிரிகின்போ வீரர்கள் பட்டியல் கூறுகிறது. இந்த ஆடுகளத்தில் ஆரம்ப ஓவர்களில் சுழல் பந்து வேகப்பந்து போல ஆதிக்கம் செலுத்தும் என கருதப்படுகின்றது, நியுசிலாந்து ஆரம்ப இணை வலது கை ஆட்டக்காரர்களாக இருப்பதால் இந்த போட்டியிலும் மதுசங்க மற்றும் வெல்லாலெகே ஆரம்ப ஓவர்களை போட வாய்ப்புள்ளது. 1-6 ஓவர்கள் முக்கியமாக உள்ள நிலையில் (50 -55 ஓட்டங்களை எடுத்தாக வேண்டிய நிலையில்) நியுசிலாந்து அணி மட் கென்றியுடன் பந்து வீசுவதற்கு ஒரு முழுநேர சுழல் பந்து வீச்சாளர்களை பாவிக்க முடியுமா? சான்ட்னர், சோதி 8 ஓவர்கள் உள்ல நிலையில் கென்றியிற்கு ஆரம்ப ஓவர்களில்3 ஓவர்களை வழங்கப்பட்டுவிடும், பவர் பிளேயில் ஒரு ஓவர் லொக்கி பேர்குசன் வீசுவார் அடுத்த ஒரு ஓவரை ஒரு பகுதி நேர சுழல் பந்து வீச்சாளர்களிடம் தான் செல்லவேண்டும் என நினைக்கிறேன் (ரச்சின் அல்லது பிலிப்ஸ்) அந்த ஒரு ஓவரை இலங்கை அணி இலக்கு வைக்கும். இந்த போட்டியில் நியுசிலாந்து அணி இலங்கை அணியினை விட சகலதுறையிலும் சிறப்பான தன்மைகள் கொண்டு காணப்படுவதால் நியுசிலாந்து அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளது, ஆனால் ஜக்கம்மா இலங்கை அணி மாயாயாலம் செய்யும் என கூறியுள்ளது. கடந்த போட்டியில் இலங்கை அணித்தலைவர் ஓப் ஸ்டம்ப்பிற்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு 3 வீரர்களை பாக்வேர்ட் பொயின்ட், பொயின்ட், கவர் என வைத்து எக்ட்ரா கவர் மிடோப் வைத்து நீண்ட நேரான எல்லைக்கோட்டினை திறந்து வைத்து முடியுமானால் நேரான எல்லைக்கோட்டிற்கு ஓப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தினை உள் வளையத்தில் உள்ள வீரர்களுக்கு மேலாக அடிக்க இறுதி ஓவர்களில் தூண்டினார், இன்றைய போட்டியிலும் அவ்வாறான ஒரு களத்தடுப்பினை எதிர்பார்க்கலாம்.
Checked
Tue, 03/03/2026 - 02:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed