புதிய பதிவுகள்2

கிவுல் ஓயா திட்டம் குறித்து ஆராய்வதற்கு களவிஜயம் மேற்கொள்ள தீர்மானம்!

5 days 23 hours ago
கிவுல் ஓயா திட்டம் குறித்து ஆராய்வதற்கு களவிஜயம் மேற்கொள்ள தீர்மானம்! ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என்பவை கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொள்வது என யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன், யாழ்.பல்கலைகழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம், யாழ்.பல்கலைழகமாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், எல்லைக் கிராமங்களை சேர்ந்த மக்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில், கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் விவகாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், யானை – மனித மோதல், போன்ற பாதகமான விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இந்த திட்டத்தின் ஊடாக அரசாங்கம் அடைய நினைக்கும் மறைமுக இலக்குகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ப.சத்திலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டினர். கலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்கள், அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் ம ற்றும் சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் செய்வது எனவும், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான கூட்டறிக்கையை உள்நாட்டிலுள்ள முற்போக்கு அமைப்புகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும், தூதுவராலயங்களுக்கும் சமர்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. https://athavannews.com/2026/1466197

மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????

6 days 1 hour ago
இருப்பது எதுவுமே இல்லாததாகுவதில்லை - அடிப்படை விடயம். வடிவங்களே மாறும் . எமக்கு இப்ப முப்பது அல்லது அறுபத்தாறு வயது என்று சொல்வதெல்லாம் , எமது உடம்பின் முதிர்வை குறிப்பதில்லை . உண்மையில் எமது உடம்பில் இருக்கும் கலங்கள் பல பில்லியன் வருடங்கள் பழமையானவை . நாங்கள் , ஒருவரல்ல , பலரின் மரணத்திற்கு பிந்திய வாழ்வை எம்மகத்தே கொண்டு நடமாடித் திரிகிறோம் .🙂

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 2 hours ago
ஏற்கனவே குழம்பி போயுள்ளேன், மாயாயாலம் நடக்கும் என மொட்டையாக சொல்லிவிட்டு பையன் போய்விட்டாரே, எந்த மாயாலாம்? என சரியாக சொல்லாமல் போய்விட்டார் என, சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாதுடன் 95 ஓட்டங்களுக்கு இலங்கை செய்த மாயாலாயாலமா? அல்லது நியுசிலாந்தினை வெல்வதனை மாயாயாலம் என்பதா என.

மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????

6 days 3 hours ago
நல்லதொரு பகிர்வு விசுகர். இந்தக்காலத்து குழந்தைகளுக்கு அறிவு அதிகம். எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், ஏதோரு ஒரு ரூபத்தில் மரணத்தின் பின்னரும் வாழ்க்கை தொடரும் என நம்புகின்றேன்.

மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????

6 days 4 hours ago
நானும் பேரப்பிள்ளை சாம்ராஜ்யத்தில் பிரவேசித்து 9 மாதங்களாகின்றது. உங்கள் பதிவை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள முடிகின்றது . எனக்கு இரு புதல்விகள் மாத்திரம் என்பதால் பேரன் என்பது கூடுதல் விசேடம் . எனது நண்பன் ஒருவனின் பேரனுக்கு ஆறு வயது . மியூசிக் நோட்ஸுகளை செவிமடுத்து , குறைந்த நேரத்தில் கூடிய ம்யூசிக் ஆக்கியோரை ( பீத்தோவன் , எல்விஸ் etc ) அடையாளம் காண்பதில் கின்னஸ் சாதனை அண்மையில் ஏற்படுத்தியிருக்கிறார் .
Checked
Tue, 03/03/2026 - 02:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed