6 days 4 hours ago
Creativity கிரியேட்டிவிட்டி · Anbu Anbu ·redonSospt450ut120t6ài44934437973fui3:c12r29i,g0941H72 eft2 · இராணித் தேனீ 🐝" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf8/1/20/1f41d.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> இராணிமார்கள் பிறக்கவில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.. இது தேனீ உலகில் ஒரு அற்புதமான கதை! ஒரு இராணித் தேனீ இறந்துவிட்டால் கூட, ஒரு நாட்டைப் போலவே தேனீ கூட்டத்தில் குழப்பம், அரசியற்ற நிலை ஏற்படுவதில்லை. அதற்கு பதிலாக, முழு கூட்டமும் அமைதியாக ஒரு இலக்கிற்காக ஒன்றிணைகிறது.. தேனீ கூட்டம் உடையாது. அது ஏற்கின்றது. அத்துடன், புதிய இராணி ஒருவருக்காக ஒரு குட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது. சாதாரண தோற்றமுள்ள குட்டிகள் பலரிலிருந்து சிலரை தேர்வு செய்கின்றார்கள். அவர்கள் சிறப்பானவர்கள் என்பதாலல்ல, அவர்கள் சிறப்பானவர்களாக மாறும் வாய்ப்பு இருப்பதால் தான். எந்த குட்டி எதிர்கால இராணியாக மாறும் என்பதை தீர்மானிப்பது விதியோ ஜீன்களோ அல்ல. அது அவருக்குக் கொடுக்கப்படும் உணவாகும். அதாவது, அவருக்கு வழங்கப்படும் சிறப்பு உணவான ராயல் ஜெல்லி (Royal Jelly) காரணமாகும். இந்த அடர்த்தியான, ஊட்டச்சத்து நிறைந்த திரவம் தான் மாற்றத்தின் அமிர்தமாக விளங்குகிறது. அதுவே ஒரு சாதாரண குட்டியை அசாதாரணமான இராணியாக மாற்றும் மாயாஜாலம். இங்கே முக்கியமானது விதியல்ல, ஊட்டச்சத்துதான். ராயல் ஜெல்லி என்பது தேனீகள் தயாரிக்கும் ஒரு தனிப்பட்ட திரவமாகும். இது வெண்மையான, கிரீம் போன்ற தோற்றம் கொண்டதாகும். தேனீ உலகில், இந்த ராயல் ஜெல்லி தான் இராணி தேனீயின் வாழ்க்கையும் வளர்ச்சியிலும் முக்கிய ரகசியமாக இருக்கிறது. இது பெரும்பாலும் நீர், புரதங்கள், சர்க்கரை வகைகள் (பிருக்டோஸ் மற்றும் கிளூகோஸ் உட்பட), கொழுப்புகள், B வகை வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்ட கலப்பாகும். இதில் உள்ள மிக முக்கியமான தனித்துவம் வாய்ந்த சேர்க்கை 10-HDA (10-hydroxy-2-decenoic acid) எனப்படும். இது ராயல் ஜெல்லியில் மட்டுமே காணப்படும், சுகாதார நன்மைகளுக்குத் தோற்றம் தரும் தன்மை கொண்டது. ராயல் ஜெல்லி தயாரிக்கப்படுவது இளம் வேலைக்கார தேனீக்களால் (worker bees). அவற்றின் உடலில் உள்ள pharyngeal மற்றும் mandibular glands என்பவற்றின் ஸ்ராவங்களை கலப்பதன் மூலம் இந்த ஜெல்லி உருவாகிறது. குறிப்பாக 5 முதல் 15 நாட்கள் வயதுடைய இளம் வேலைக்கார தேனீகள் இந்த பணிக்குத் தனிப்பட்டவை. அவர்கள் தங்கள் உடலில் உள்ள கொழுப்பு சுரப்பிகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, பின் அதை pharyngeal gland மூலம் ஜெல்லியாக மாற்றுகிறார்கள். ஒரு புதிய இராணித் தேனீ உருவாக்க வேண்டியபோது, வேலைக்கார தேனீக்கள் விசேட இராணி அறைகள் (Queen cells) கட்டுகிறார்கள். அவற்றில் முட்டை இடப்பட்ட பிறகு, அந்த குட்டிக்குத் தொடர்ந்து அதிகளவில் ராயல் ஜெல்லி வழங்கப்படுகிறது. மற்ற சாதாரண குட்டிகள் ராயல் ஜெல்லி பெறுவது வாழ்நாளின் ஆரம்ப 2–3 நாட்களுக்கு மட்டுமே. பின்னர் அவர்கள் Bee Bread எனப்படும் தேன் மற்றும் மகரந்தக் கலவையை உண்ணுகிறார்கள். ராயல் ஜெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன் போன்ற சேர்மங்கள் அந்த குட்டியின் மரபணு செயல்பாடுகளை மாற்றி, சாதாரண தேனீவைக் காட்டிலும் பெரியதாகவும், நீண்ட நாட்கள் வாழக் கூடியதாகவும், முட்டை இடக் கூடியதாகவும் மாற்றுகின்றன. இது ஊட்டச்சத்துக்களால் உயிரினரின் விதியை மாற்ற முடியும் என்பதற்கான அபூர்வமான எடுத்துக்காட்டாகும். ராயல் ஜெல்லி தொடர்ந்து பெறும் ஒரே குட்டி தான் இராணியாக மாறுகிறாள். அவள் பெரிதாக மாறுகிறாள், நீண்ட காலம் வாழ்கிறாள், கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறாள், அதை மறுபடியும் கட்டியெழுப்புகிறாள். குழப்பமிருந்த இடத்தில் ஒழுங்கும் ஒற்றுமையும் ஏற்படுத்துகிறாள். அவள் அதிகாரத்துக்காக பிறக்கவில்லை, ஆனால் அதற்கேற்ப உருவாக்கப்படுகிறாள்........! படித்ததில் பிடித்தது.. பகிர்வு பதிவு !!
6 days 4 hours ago
அதிகாரம்காட்டி பயம்காட்டி வற்புறுத்திக் கேட்டுப் பெற்றுவதுதான் லஞ்சம் ஊழலுக்குள் அடங்கும். தவறில்லாத நன்மைபெற்று அதற்கான பிரதி உபகாரத்தை மனமகிழ்ந்து செய்வதை லஞ்ச ஊழல் என்று அடக்குவது தவறு. அடக்கினால் அது மனிதத்தைப் புண்படுத்தும் செயலாகும்.
6 days 4 hours ago
இது ஒரு கோணம். ஆனால் இது உண்மை எனில் அந்த குடும்பத்தின் சுவடே இல்லாமல் அழித்திருப்பார் கே என் நேரு. சட்டத்துக்கு எல்லாம் காத்திருக்க மாட்டார். நேருவுக்கு கூட யார் செய்தது என்பது இன்றுவரை தெரியாது என்பதே உண்மை. இன்னொரு கோணம் - ஜெ கூட்டம் நடத்த விடாமல் தடுத்து, வாயில் வைக்கபட்ட உறுப்பை பற்றி ஜெயிடம் சவால்விட்டார் என்பது. சந்திப்போம்.
6 days 4 hours ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் ·dprsotSone c2919ucu711i1iulm1u6ga1a6cg6790803mt52tt45h15cufa · 1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது. கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும். இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள். ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" . அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு. இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள். அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,, இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள். 1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும். சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள். சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது. அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது. இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம். எப்படி ஆயினும் ...... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன. படித்ததில் பிடித்தது.... Voir la traduction.....!
6 days 4 hours ago
6 days 4 hours ago
6 days 5 hours ago
ஓராயிரம் பார்வையிலே படம் வல்லவனுக்கு வல்லவன்
6 days 5 hours ago
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு September 26, 2025 11:41 am அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. “வரும் ஒக்டோபர் 1-ம் திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும்.” என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதேபோல சமையலறை கேபினட்கள், குளியலறை பொருட்களுக்கு 50 சதவீதமும், தளபாடங்களுக்கு 30 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம்” என தனது ட்ரூத் சோஷியல் பதிவில் ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் அதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ‘அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டி இந்த நடவடிக்கை’ என அவர் கூறியுள்ளார். https://oruvan.com/100-percent-tax-on-medicines-opposition-to-trumps-order/
6 days 5 hours ago
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம் September 26, 2025 மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ் அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (26) தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பித்தார் . மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி ஜே. ஜே. முரளிதரன் நேற்றைய தினம் முதல் பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக தற்போது கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஜே. எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை 15.09.2025 அன்று அனுமதி வழங்கப்பட்டடுள்ளது. இந் நியமனத்தினால் குறைந்த வயதில் அரசாங்க அதிபரானவர் என்ற பெருமையை ஜே.எஸ் அருள்ராஜ் பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர், 2003 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். கிண்ணியா, சேருவில பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இருந்ததுடன், வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார். வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு விசேட சேவையை ஆற்றியிருந்தார். நேற்று (25) வரை கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமைபுரிந்து வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட செயலாளராகவும், அரசாங்க அதிபராகவும் நியமிக்கப்பட்டு, இன்று முதல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரும் பணியாற்றவுள்ளார். https://www.battinews.com/2025/09/blog-post_932.html
6 days 5 hours ago
அண்ணே நல்லா தேடி பாருங்க. ஏதாவது கோப்பு புத்தகங்கள், அத்தாட்சி கடிதங்கள், புலனாய்வு குறிப்புகள் மற்றும் குற்றவியல் தடையங்களைத்தான் இந்த கள்வர்கள் எடுத்து சென்றிருப்பார்கள். ராசபக்சாக்கள், பாதல் உலக கோஸ்டிகள் இப்படி செய்திகளில் போய்க்கிட்டு இருக்கிற இந்த நேரத்தில மின்சார கம்பியை திருட என்று திருடன் போலிஸ் நிலையத்தில், அதுவும் போலிஸ் மா அதிபரின் காரியாலத்தில் கதைவை உடைத்து ஒருபோதும் நுழைய மாட்டான்.
6 days 5 hours ago
ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை 26 Sep, 2025 | 11:02 AM ரஷ்யா ஆரம்பித்த போரை நிறுத்த உலக வல்லரசு நாடுகள் உடனடியாக உதவ வேண்டும் என்றும், இல்லையெனில் உலகம் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பங்கேற்று உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரை நிறுத்த உலக நாடுகள் தயங்கினால், அது இந்தப் போர் ஒரு கட்டுப்பாடற்ற ஆயுதப் போட்டியைத் தூண்ட வழிவகுக்கும் என்று எச்சரித்தார். உக்ரைனில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களில் ஏற்பட்டுள்ள அசுரத்தனமான புதுமைகளை விவரித்த ஜெலென்ஸ்கி, செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) வருகையால் மனித வரலாற்றில் நடந்து வரும் ஆயுதப் போட்டி மிகவும் அழிவுகரமானது" என்று கூறினார். ஆயுதங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். ரஷ்ய ஜனாதிபதி புட்டின், போரை உக்ரைனுக்கு அப்பாலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் எளிய ட்ரோனை முதலில் யார் உருவாக்குவார்கள் என்று யோசிப்பதை விட, ரஷ்யாவை இப்போதே போரை நிறுத்த வலியுறுத்தவது மேலானது என்றும் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் அவர் குறிப்பிட்டார். ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்த ஒரு நாள் கழித்தே ஜெலென்ஸ்கியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. செவ்வாயன்று டிரம்ப் பேசுகையில், ரஷ்யாவுடன் போராடி, அந்த நாட்டிடம் இழந்த பகுதிகளையெல்லாம் மீட்கும் நிலையில் உக்ரைன் இருப்பதாகக் கூறினார். ஐரோப்பிய யூனியனின் உதவியுடன் உக்ரைன் வெற்றிபெறும் என்றும், "நேரம், பொறுமை, ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக நேட்டோவின் ஆதரவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தப் போர் தொடங்கியதற்கு முன்பிருந்த எல்லைகளை உக்ரைனால் மீண்டும் அடைய முடியும்" என்றும் தெரிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு இலக்கே இல்லாமல் இந்தப் போரைத் தொடங்கியுள்ளார் என்றும், ஒரு உண்மையான இராணுவ சக்தி தலையிட்டால் இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் டிரம்ப் கருத்துத் தெரிவித்தார். இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும், நேட்டோ வழியாக உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்கா தொடா்ந்து விநியோகிக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார். நேட்டோ வான்வெளியை மீறும் ரஷ்ய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் யோசனையையும் அவர் ஆதரித்தார்.ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதலைத் தூண்டியதிலிருந்து உக்ரைன் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகச் பேரில் ஈடுபட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226113
6 days 5 hours ago
6 days 6 hours ago
6 days 6 hours ago
25 Sep, 2025 | 01:34 PM (எம்.மனோசித்ரா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? கடந்த காலங்களில் இந்த திட்டத்தை முன்வைத்தவர்கள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அரசாங்கத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள கஞ்சா உற்கபத்தி திட்டம் தொடர்பில் அகில இலங்கை மகா பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த, மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட காரணி தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கஞ்சா உற்பத்தியை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டும் ஒரு வருமான மூலமாகப் பார்ப்பதை அங்கீகரிக்க முடியாது. அப்போதைய இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதில் பிரதான காரண கர்த்தாவாக செயற்பட்டார். கடந்த அரசாங்கத்தால் இதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்ட போது மகா சங்கத்தினர் உட்பட சகல மதத் தலைவர்களும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். இறுதியில் இந்த யோசனையை முன்வைத்தவர்கள் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர். இது குறித்து அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பினார். 'இந்த கஞ்சா உற்பத்தி வெற்றியளிக்கும் வேலைத்திட்டம் என நீங்கள் கூறினால் அதற்கான சந்தை என்ன எனக் கூறுங்கள்? , எந்தெந்த நாடுகள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றன? , எந்த அளவுகளில் அவர்கள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றனர்? , ஏதேனுமொரு வகையில் வெளிநாடுகள் இவற்றை கொள்வனவு செய்யாவிட்டால் உற்பத்திகளுக்கு என்னவாகும்?' என்ற கேள்விகளே அவரால் அப்போதைய அரசாங்கத்திடம் கேட்கப்பட்டன. ஆனால் இதில் எந்தவொரு கேள்விக்கும் அன்று பதில் கிடைக்கவில்லை. இன்று நாம் அதே கேள்விகளை ஜனாதிபதி அநுரவிடம் கேட்கின்றோம். அன்று இந்த கேள்விகளை எழுப்பிய சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் இன்று நிறைவேற்றதிகாரம் கொண்;ட ஜனாதிபதியாவார். அன்று நிராகரிக்கப்பட்ட சடலங்களை இன்று மீண்டும் உயிர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா? தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிப்பதற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகக் காணப்பட்டது. எனவே ஆட்சியாளர்கள் இதனை மறந்து விடக் கூடாது. நிராகரிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க தீர்மானித்தால் அரசாங்கம் அது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எமக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் 7 நிறுவனங்களுக்கு இது குறித்த பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவற்றுடன் ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன. மீரிகம பிரதேசத்தில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு பகிரங்க கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் எமக்கு இது குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் நாம் எமது போதை;பொருள் எதிர்ப்பு பிரிவுடன் சென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தோம். ஒரு இலை கூட வெளிச் செல்லாமல் கடுமையான பாதுகாப்புடனேயே இந்த உற்பத்தியை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். எமது நாட்டுக்கு இது உகந்ததல்ல என்றால், ஏனைய நாடுகளுக்கு மாத்திரம் எவ்வாறு சிறந்ததாகும்? இது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா என நாம் அமைச்சிடம் கேட்டோம். எதற்காக நாம் தவறான முறைமையின் கீழ் வருமானம் ஈட்டுகின்றோம்? இந்த திட்டத்தை முன்வைக்கப்பட்டாதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்த பெண் தற்போது அரசாங்கம் தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகின்றார். அவர் அதற்கு வாழ்;த்துக்களையும் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? எனவே தூய்மையாகக் கழுவிய ஆடையை மீண்டும் சேற்றில் இட வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/226048
6 days 6 hours ago
பட மூலாதாரம், NASA படக்குறிப்பு, ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன். கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்தைத் தொடங்க உறுதி பூண்டிருந்த நாசா, இப்போது இந்தப் பணியை முன்கூட்டியே செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளது. 50 ஆண்டுகளாக எந்த நாடும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பயணத்தை மேற்கொண்டதில்லை. நாசா நான்கு விண்வெளி வீரர்களை அங்கு அனுப்பி, அமைப்புகளைச் சோதிக்க உள்ளது. ஆர்டெமிஸ் II திட்டம் என்பது ஆர்டெமிஸ் திட்டத்தின் இரண்டாவது ஏவுதல் ஆகும். இந்த திட்டத்தின் நோக்கம் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்க வைப்பதும், இறுதியில் நிலவின் மேற்பரப்பில் நீண்ட கால இருப்பை ஏற்படுத்துவதுமாகும். பட மூலாதாரம், NASA படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்: ஆர்டெமிஸ் II, பல ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் செல்லும் முதல் நிலவுப் பயணமாக இருக்கும். நாசாவின் (பொறுப்பு) துணை நிர்வாகி லாகீஷா ஹாக்கின்ஸ், இது மனிதர்கள் மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என்று கூறினார். "வரலாற்று நிகழ்வுக்கு மிக நெருக்கமான ஒரு தருணத்தில் நாம் உள்ளோம்," என்று அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். "ஏவுதலுக்கான வாய்ப்பு பிப்ரவரி ஐந்தாம் தேதிக்கு முன்னதாகவே ஏற்படலாம், ஆனால் பாதுகாப்புதான் எங்கள் முதன்மை முன்னுரிமை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்." விண்வெளி வீரர்களை நிலவுக்குக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பான விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS), "ஏறக்குறைய ஏவுவதற்குத் தயாராக உள்ளது" என்று ஆர்டெமிஸ் ஏவுதல் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் விளக்கினார். எஸ்எல்எஸ் உடன் இணைக்கப்படும் ஓரியன் (Orion) எனப்படும் விண்வெளி வீரர் காப்ஸ்யூல் தயாரிப்பு மற்றும் தரைவழி சோதனைகளை நிறைவு செய்வது மட்டுமே மீதமுள்ளது. ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் பணி 25 நாட்கள் நீடித்தது. அது 2022 நவம்பர் மாதம் ஆட்கள் இல்லாத விண்கலத்தை ஏவியது. அந்த விண்கலம் நிலவைச் சுற்றி பயணம் செய்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. அந்தப் பணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இருப்பினும், விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது வெப்பக் கவசத்தில் சில சிக்கல்கள் இருந்தன. அவை இப்போது சரி செய்யப்பட்டுள்ளன. ஆர்டெமிஸ் II ஏவுதலில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றுவர பத்து நாள் பயணம் மேற்கொள்வார்கள். நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி அமைப்பைச் சேர்ந்த ஜெரெமி ஹேன்சன் ஆகியோர் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இருப்பினும், 1972-ஆம் ஆண்டு அப்போலோ 17-க்குப் பிறகு குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் பயணிக்கும் முதல் குழுவினர் இவர்களாகத்தான் இருப்பார்கள். ஆர்டெமிஸ் II இன் தலைமைப் பயண இயக்குநர் ஜெஃப் ரடிகன், விண்வெளி வீரர்கள் இதுவரை யாரும் சென்றிராத அளவு தொலைவுக்கு விண்வெளியில் பயணிப்பார்கள் என்று விளக்கினார். "அவர்கள் நிலவுக்கு அப்பால் குறைந்தது 5,000 கடல் மைல்கள் (9,200 கி.மீ) பயணம் செய்வார்கள், இது முந்தைய பயணங்களைவிட மிக அதிகம்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திட்டத்தின் நோக்கம் நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ராக்கெட் மற்றும் விண்கலத்தின் அமைப்புகளைச் சோதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். விண்வெளி வீரர்கள் ஓரியன் காப்ஸ்யூலில் நுழைவார்கள். இது அவர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு வீடாக இருக்கும். இது எஸ்எல்எஸ்-இன் உச்சியில் அமர்த்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது, இரண்டு திட ராக்கெட் பூஸ்டர்களின் உதவியுடன் புவி சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படும். அவை கனமான உந்துவிசையை அளித்த பின் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு வந்துவிடும். ஏவப்பட்ட உடன் என்ன நடக்கும்? ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டின் பிரமாண்டமான கோர் ஸ்டேஜ், இடைக்கால க்ரையோஜெனிக் உந்துவிசை அமைப்பு (Interim Cryogenic Propulsion System - ICPS) மற்றும் ஓரியன் விண்வெளி வீரர் பகுதியிலிருந்து பிரிந்து செல்லும். ஓரியனின் சூரிய மின் தகடுகள் விரிந்து விண்கலத்தின் பேட்டரிகளுக்குச் சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் வழங்கத் தொடங்கும். தொண்ணூறு நிமிடங்களுக்குப் பிறகு ஐசிபிஎஸ் தனது என்ஜின்களை இயக்கி வாகனத்தை ஒரு உயர் புவி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும். அடுத்த 25 மணி நேரத்துக்கு ஒரு முழு அமைப்புகள் சரிபார்ப்பு நடைபெறும். எல்லாம் சரியாக இருந்தால், ஓரியன் ஐசிபிஎஸ்-இலிருந்து பிரிந்து செல்லும். விண்வெளி வீரர்கள், நிலவில் தரையிறங்குவதற்கான ஒரு வாகனத்துடன் இணைக்கும் செயல்முறைகளை ஒத்திகை பார்க்க, ஓரியனின் நகர்வுக்கான உந்துகருவியை (Manoeuvring thruster) கட்டுப்படுத்தி ஐசிபிஎஸ்-ஐ நோக்கிச் செல்வார்கள். இருபத்தி மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஓரியனின் சேவை அமைப்பு ஒரு 'நிலவு நோக்கி உந்துதல் (TLI) எரியூட்டலை' நடத்தும் - இது விண்கலத்தை நிலவை நோக்கி குறிவைக்கும் ஒரு உந்துவிசையாகும். அதற்குப் பிறகு ஓரியன் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து 2,30,000 மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்லும். பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் தொடர்ந்து அமைப்புகள் சரிபார்ப்புகளை மேற்கொள்வார்கள். ஒரு வகையில், குழுவினர் சோதனை எலிகளாக இருப்பார்கள். அவர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்கும் சோதனைகள் நடத்தப்படும். விஞ்ஞானிகள் விண்வெளி வீரர்களின் ரத்தத்திலிருந்து அவர்களின் பயணத்துக்கு முன்னும் பின்னும் பெறப்பட்ட திசு மாதிரிகளை அதாவது ஆர்கனோய்ட்ஸை, வளர்ப்பார்கள். விண்வெளி வீரர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஆர்கனோய்ட்ஸின் இரண்டு தொகுப்புகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று நாசாவின் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் தெரிவித்தார். "எங்களிடம் அந்த விண்வெளி வீரர்களே இருக்கும்போது ஏன் இதையெல்லாம் செய்கிறோம் என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த மாதிரிகளின் மீது புவியீர்ப்பு விசை இல்லாத சூழல் மற்றும் கதிர்வீச்சின் விளைவை ஆழமாக ஆய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். நான் நிச்சயமாக ஒரு விண்வெளி வீரருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை! ஆனால், இந்தச் சிறிய ஆர்கனோய்ட் மாதிரிகளை அறுத்து, வித்தியாசத்தை உண்மையில் பார்க்க முடியும்." என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார். விண்கலம் நிலவைத் தாண்டி செலுத்தப்பட்டபின் பூமியின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் பூமி திரும்பும் நான்கு நாள் பயணத்தைத் தொடங்குவார்கள். பூமியை வந்தடைந்ததும், விண்கலத்தின் முதன்மை உந்துவிசையமைப்பைக் கொண்ட சேவை அமைப்பு, குழு அமைப்பிலிருந்து பிரிந்துவிடும். விண்வெளி வீரர்கள் பின்னர் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்து, கலிபோர்னியாவின் கடற்கரையில் பாராசூட் மூலம் தரையிறங்குவார்கள். இது பயணத்தின் மிகவும் ஆபத்தான பகுதியாகும். பட மூலாதாரம், NASA/Robert Markowitz படக்குறிப்பு, ஓரியன் விண்கலத்துக்குள் நான்கு குழு உறுப்பினர்கள் ஏவுதலுக்கு எவ்வாறு அமர வைக்கப்படுவார்கள் என்பதை பொறியாளர்கள் (spacesuit engineers) விளக்குகிறார்கள், இவர்களே விண்வெளி வீரர்களுக்கான உயிர்காக்கும் கருவிகளை வடிவமைக்கின்றனர். இந்தப் பயணத்தின் வெற்றி, நாசா எப்போது ஆர்டெமிஸ் III-ஐ ஏவ முடியும் என்பதையும், உண்மையில் நிலவில் தரையிறங்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும். ஆனால், இந்தப் பயணம் சரியாக நடந்தாலும் கூட, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் "2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக இல்லை" என்ற இலக்கு, ஓபன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிமியோன் பார்பரின் கூற்றுப்படி, யதார்த்தமற்றது. "'முன்னதாக இல்லை' என்பது நாசாவுக்கு நன்கு தெரிந்த ஒரு சொல்தான், அதற்கு அதுதான் அர்த்தம். அதுதான் மிக விரைவான சாத்தியமாக உள்ளது," என்று அவர் கூறினார். ஆர்டெமிஸ் III-ஐ சரியான பாதையில் வைத்திருப்பதற்கான செலவு காரணமாக அது கூட அதிக நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார். "[ஈலோன் மஸ்க்கின்] ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும் தேவைப்படும். சமீபத்திய மாதங்களில், பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைப் பயணத்தை அடையவே ஸ்டார்ஷிப் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனும் நிலையில் விண்வெளி வீரர்களை அதில் அமர்த்துவது மிகவும் கடினம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czrpkd625m0o
6 days 6 hours ago
வழமை போல் தவறான சிரிப்பு விருப்பு வாக்கு என் ரத்தம் மீண்டும் இங்கே தன் கருத்தை வைப்பதை வரவேற்பதற்காக.
6 days 6 hours ago
முத்து நகர் காணி அபகரிப்பு: எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதி Published By: Vishnu 25 Sep, 2025 | 10:31 PM (செ.சுபதர்ஷனி) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது. புதன்கிழமை அன்று சுமார் 12 மணித்தியாலங்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள் அன்றைய தினம் இரவு பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுமார் 800 ஏக்கர் விவசாய காணி சூரிய மின்சக்தி திட்டத்துக்காக அரசாங்கத்தால் இந்திய தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விளை நிலங்களை தமக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் புதன்கிழமை (24) முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.30 மணியளவில் ஒன்று கூடிய ஆர்பாட்டக்காரர்கள் அன்றைய தினம் இரவு வரை உரிமைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்களை அழைத்து கலந்துறையாடியிருந்ததுடன், விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்துள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். போராட்டத்துக்காக 2 பேருந்துகளில் பொதுமக்கள் வருகைத் தந்திருந்ததுடன், சுமார் 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் அம்மக்கள் முத்து நகர் நோக்கி பயணமானார்கள். விவசாயிகளிடமிருந்த காணியை அரசாங்கம் பறித்து வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய காணியை அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளதோடு மாற்றுக் காணிகளை வழங்காது விவசாயத்துக்கு பயண்படுத்தப்பட்ட குளங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முத்துநகர் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/226089
6 days 6 hours ago
பரந்தன் இரசாயன தொழிற்சாலை குறித்து அரசாங்கத்தின் திட்டம் 25 September 2025 பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், சோடா மற்றும் குளோரின் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொது, தனியார் கூட்டுத் திட்டமான இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பரந்தன் இரசாயன தொழிற்சாலை அமைந்துள்ள வளாகத்தில், சோடா மற்றும் குளோரின் உற்பத்தி ஆலையை மீண்டும் ஆரம்பிப்பதன் சாத்தியப்பாடுகள் குறித்த ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமான பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், ஒதுக்கப்பட்ட 30 ஏக்கர் நிலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான முதலீட்டாளர்களைத் தேடும் நடவடிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனூடான, சுமார் 95 நேரடி வேலை வாய்ப்புகளையும் சுமார் 2,000 மறைமுக வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். https://hirunews.lk/tm/422208/governments-plan-regarding-paranthan-chemical-factory
6 days 6 hours ago
2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம் இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக மாறிய இலங்கை, இன்று அந்த நெருக்கடியை விரைவாக தீர்த்து வைத்த நாடாக மாறியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், "வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பெரும் ஆதரவை வழங்கினர். அவர்கள் நிதி உதவி செய்தனர். அந்த பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது. 2019 தேர்தலில் சுமார் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி நாங்கள். ஆனால் 2024 ஜனாதிபதித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற ஆசனங்களை வென்று வெற்றி பெற முடிந்தது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அப்போதைய இலங்கை, கடன்களை செலுத்த முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து எமது நாடு வங்குரோத்து நாடாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களை இலங்கை மக்கள் முதல் முறையாக வெளியேற்றினர். எங்களுக்கு இருந்த சவால்களில் ஒன்று பொருளாதார நெருக்கடியைத் தணிப்பது. மற்றொன்று இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவது. பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருந்த நாட்டை நாம் தற்போது படிப்படியாக மீட்டு வருகிறோம். அனைத்து சர்வதேச அமைப்புகளும், மதிப்பீட்டு நிறுவனங்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும், இலங்கை ஒரு நெருக்கடியின் போது விரைவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்ட ஒரு நாடாக இருந்ததாக அறிக்கைகளை வழங்கியுள்ளன. ஒரு பொருளாதாரம் இப்படி சரிந்தால், ஒரு நாடு அதன் முந்தைய நிலைக்குத் திரும்ப 10 ஆண்டுகள் ஆகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2022 ஆம் ஆண்டில் நாடு சரிந்திருந்தால், முந்தைய நிலைக்குத் திரும்ப 2032 ஆகும். ஆனால் நாடு சரிவதற்கு முன்பு 2019 இல் இருந்த பொருளாதாரத்தை அடுத்தாண்டு நாம் அடைய முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்றார். https://adaderanatamil.lk/news/cmg0a6sb300o8o29n0v72wr1x
6 days 6 hours ago
பட மூலாதாரம், ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் நடுத்தர தூர அக்னி-பிரைம் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை முதல் முறையாக ரயிலில் இருந்து ஏவியது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இந்த ஏவூர்தி (launcher) ரயில் தண்டவாளங்களில் இயங்கும், அங்கிருந்து ஏவுகணையை ஏவ முடியும். இது 2,000 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும். இந்த சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), மூலோபாய படைகள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்று டிஆர்டிஓ குறிப்பிட்டுள்ளது. இந்த சோதனை ஏன் முக்கியம் என்பதற்கான ஐந்து காரணங்களை தெரிந்துக் கொள்ளலாம். 1. இந்தியாவுக்கு இது ஏன் சிறப்பு வாய்ந்தது? இந்த சோதனை இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று கருதப்படுகிறது. பிபிசி நிருபர் அபய் குமார் சிங் இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவுடன் பேசினார். சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-பிரைம் ரயில் நெட்வொர்க் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது ஒரு பெரிய வெற்றி." என்றார். இந்த ஏவுகணை இரண்டு நிலைகளை கொண்டது, திட எரிபொருள் அடிப்படையிலான தரையிலிருந்து தரையில் மற்றொரு இலக்கை தாக்கும் ஏவுகணை என்று அவர் கூறினார். இது ஒரு கானிஸ்டர் (canister) அமைப்பிலிருந்து விரைவாக ஏவப்படலாம். (கானிஸ்டர் என்பது ஒரு சீல் செய்யப்பட்ட, உருளை வடிவிலான கொள்கலன் – இது ஏவுகணையை வைத்துக் கொள்ளவும், ஏவவும் உதவும். ) ரயிலில் இருந்து ஏவப்படுவதால், இந்த அமைப்பை அணுகுவதற்கு கடினமான பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும் என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "எங்கெல்லாம் ரயில் நெட்வொர்க் இருக்கிறதோ, அங்கெல்லாம் இதை எளிதாக பயன்படுத்த முடியும், எதிரியின் எந்த இருப்பிடத்தையும் குறிவைக்க முடியும்," என்று அவர் கூறுகிறார். இதன் காரணமாக, இது இந்தியாவுக்கு உத்தி ரீதியாக மிகுந்த வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது. 2. எந்தெந்த நாடுகள் ஏற்கனவே இதைச் செய்துள்ளன? இந்த சாதனைக்குப் பிறகு, உலகின் குறிப்பிட்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பதிவில், "இந்த வெற்றிகரமான சோதனை ரயில் நெட்வொர்க்கில்கானிஸ்டர் ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தும் திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது" என்று குறிப்பிட்டார். 'ஏவூர்தி நேரடியாக ரயில் தண்டவாளங்களில் இயங்க முடியும், முன் தயாரிப்பு தேவையில்லை, அதை நாடு முழுவதும் எளிதாக கொண்டு செல்ல முடியும்' என்றும் அவர் விளக்கினார். இது குறுகிய காலத்தில் ஏவுகணைகளை ஏவும் திறனையும் கொண்டுள்ளது, அதே நேரத்தில் எதிரியின் பார்வையில் படாமல் இதனை செய்ய முடியும். "இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த திறனைக் கொண்டுள்ளன. வட கொரியாவும் இதைச் செய்ததாகக் கூறியுள்ளது, ஆனால் அதனை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை" என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம், X/@rajnathsingh 3. அக்னி-பிரைம் ஏவுகணையின் அம்சங்கள் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்னி-பிரைம் ஏவுகணை அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2000 கி.மீ. வரை இலக்குகளை தாக்கும், எதிரியின் கண்களுக்கு புலப்படாமல் மிக விரைவாக ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முற்றிலும் தன்னிறைவு பெற்ற அமைப்பாகும், இதில் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அமைப்புகளும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இந்த சோதனை முழுமையான வெற்றி பெற்றதாகவும், அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்ததாகவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. ஏவுகணையின் பாதை பல்வேறு கண்காணிப்பு நிலையங்களால் கண்காணிக்கப்பட்டது. இந்த வெற்றி எதிர்காலத்தில் ராணுவ சேவைகளில் ரயில் அடிப்படையிலான அமைப்புகளை இணைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பல வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு சாலையிலிருந்து ஏவப்படும் அக்னி-பிரைம் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், ANI 4. தண்டவாளம் சார்ந்த ஏவுதல் அமைப்பின் முக்கியத்துவம் தண்டவாளம்-சார்ந்த ஏவுதல் அமைப்பு பல வகையில் பயனளிக்கிறது. ரயில் போன்ற ஒரு ஏவூர்தியிலிருந்து எந்த தண்டவாளத்திலும் நின்றபடி ஏவுகணையை செலுத்த முடியும். இது குறித்து, முன்னாள் ரயில்வே வாரிய உறுப்பினர் (போக்குவரத்து) ஸ்ரீபிரகாஷ் பிபிசி நிருபர் சந்தன் ஜஜ்வரேவிடம், "நாட்டில் எங்கும் ரயில் தண்டவாளங்கள் உள்ளன. இதன் பொருள், ஏவுகணையை நாடு முழுவதும் இருந்து ஏவுவதற்கான சாத்தியம் உருவாகிவிட்டது. எதிரியால் ஏவுகணை எங்கிருந்து ஏவப்படும் என்பதை விரைவாக அறிந்துகொள்ள முடியாது." என்று தெரிவித்தார். இவ்வாறான அமைப்பு, எதிரியால் அடையாளம் காணக்கூடிய நிரந்தர ஏவுதளங்களிலிருந்து வேறுபட்டது. "ஏவுகணைகளை சுரங்கப்பாதையில் மறைத்து வைக்கலாம், தேவைப்படும் போது வெளியே கொண்டு வந்து ஏவ முடியும்" என்றும் அவர் கூறுகிறார். ஆனால், ஏவுதல் நடக்கும் வரை அந்த தண்டவாளத்தில் சாதாரண ரயில் போக்குவரத்தை நிறுத்த வேண்டியது அவசியம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். மின்வசதி குறித்த கேள்விக்கு, மின்சாரம் தடைப்பட்டால் டீசல் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என ஸ்ரீபிரகாஷ் தெளிவுபடுத்தினார். "இரயில் பாதைகளில் டீசல் இயந்திரங்களும் இருக்கும். டீசல் இயந்திரங்கள் மின்சாரத்தைச் சார்ந்து இல்லை, அவற்றை எங்கும் இயக்க முடியும். அத்தகைய சூழ்நிலையில், டீசலைப் பயன்படுத்துவது மிகவும் சாதகமானது" என்றும் அவர் கூறினார். 5. டிஆர்டிஓவிற்கு பெரும் வெற்றி இந்த சாதனை இந்தியாவின் சுய-சார்பை நோக்கிய முன்னேற்றத்தின் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. இந்த வெற்றியால், தண்டவாளத்தில் நகரும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் குழுவில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். "டிஆர்டிஓ தொடர்ச்சியாக பெரிய வெற்றிகளை அடைந்து வருகிறது. இந்த ஏவுகணை அந்த வெற்றிகளுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது இந்தியாவிற்கு பெருமையான விஷயம்" என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறினார். இந்தியா இப்போது தனது ராணுவத்திற்கான மட்டுமல்லாமல், ஆயுத ஏற்றுமதிகளையும் ஊக்குவித்து வருகிறது என்றும் அவர் கூறினார். "அது ஏவுகணைகளாக இருந்தாலும் சரி, போர் விமானங்களாக இருந்தாலும் சரி, பல நாடுகள் இந்திய தயாரிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த துறையிலும் இந்தியா முன்னேறி வருகிறது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7dy2rxy24o
Checked
Thu, 10/02/2025 - 10:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed