புதிய பதிவுகள்2
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
புலிகள்-டெலோ போல… தவெக-திமுக. புலிகள்-பொதுபலசேனா போல… தவெக-பாஜக ஆண்டு 10 தமிழ் இலக்கணத்தில் போல, அன்ன, வின் அர்த்தம் பற்றி படிக்கவில்லையா?
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்…. பெண் இருப்பாள். 🙂 ஒரு பெண்ணின் தோல்விக்குப் பின்…. ஆண் இருப்பான். 😂
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
An example serves as a specific instance to illustrate a general concept or principle, while a comparison involves examining two or more things to identify their similarities and differences. ஒரு பொதுவான கருத்து அல்லது கொள்கையை விளக்குவதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஒரு குறிப்பிட்ட நிகழ்வாக செயல்படுகிறது, அதே நேரத்தில் ஒரு ஒப்பீடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்களை அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை அடையாளம் காண ஆராய்வதை உள்ளடக்கியது. ஜேர்மனி, யூகே என இரந்து வாழ்வதில் மட்டும் காலத்தை கழிக்காமல், விடயங்களை அறிவதிலும் கொஞ்ச காலத்தை செலவழித்கிருப்பின், திராவிட கோமாளிகளிடம் விளக்கம் கேட்டு பெறும் நிலை வந்திராது.
மருத்துக் கடையில் தமிழாசிரியர்
மருத்துக் கடையில் தமிழாசிரியர். :கடைக்காரரே ! என் பாவங்களை தூக்கி எறியும் மருந்து தாருங்கள் கடைக்காரர் : என்ன கேட்க்கிறீர்கள் புரியவில்லையே ? அப்படி ஒருமாத்திரை இருக்கா? ஆசிரியர் ..: எனக்கு ஆங்கிலம் பிடிக்காது இருந்தாலும் சொல்கிறேன் எரித் தொரோ மை சின்..( Erythromycin eye ointment: ) படித்து சிரித்தது ( அதிகம் படித்த ஆசிரியர் ).
முத்தமிட ஏற்ற இடம் எது? - கலவி மொழி கற்போம்
பெண்ணின் பின் கழுத்து தோள்களுடன் இணையும் பகுதியில் ஈர உதடுகளால் மென்மையாக வருடி ஈரமாக்கி அந்த ஈரமான பகுதியில் சுவாசக் காற்றை ஊதினால் பெண்மை சொக்கிநிற்கும்! காமன்கோயில் கதவுகள் தாழ்ப்பாள்கள் எல்லாம் தெறித்துவிழும்! 👀
சமையல் செய்முறைகள் சில
எனக்கு மிகமிக பிடித்தமான உணவு. வெங்காயமும் நிறைய போட்டு பொரித்து பிரட்டி எடுத்து சாப்பிடுவேன்.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!
இவரது கணவராலயே இந்தப் பெண் நீதிபதியின் வேலையும் போய் விட்டது போன்று தமிழ் ஓவியம் என்னும் ரிக்ரொக் செய்தி தளத்தில் வாசித்தேன்.இருவருமே சட்த்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் கணவர் சட்டத்தரணியாக இருந்து கொண்டு மக்களிடம் அதிக பணம் பெற்று வழக்கை கொண்டு செல்வதாகவும் அதற்கு இவர் துணை போனதனால்...வேலையிலிருந்து நீக்கப்பட்டது போல் உள்ளது.எனது புரிதல் இப்படித் தான் இருக்கிறது.
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
இந்த உலகில் கேள்விகளும் நக்கல் நையாண்டிகளும்,கடுமையான வார்த்தை பிரயோகங்களும் போட்டி பொறாமைகளும் குழுக்களும் பட்டிக்காட்டுத்தனங்களும் இல்லை என்றால்... விஞ்ஞானிகளும் உருவாகி இருக்க மாட்டார்கள் கண்டுபிடிப்பாளர்களும் உருவாகி இருக்கமாட்டார்கள் பேராசிரியர்களும் உருவாகி இருக்கமாட்டார்கள். விரிவுரையாளர்களும் உருவாகி இருக்க மாட்டார்கள். முயற்சியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். இந்த உலகமே முன்னேறி இருக்கமாட்டாது. ஏன்... ஜேசுவும் உருவாகி இருக்க மாட்டார் புத்தரும் உருவாகி இருக்கமாட்டார். குண்டுமணி குப்பையிலும் மங்காது.அதன் படி குப்பைகள் இல்லை என்றால் குண்டுமணி மிளிர்வது தெரியாது. அனைவரையும் அரவணைத்தால் ஆயிரம் வெற்றி.
ஒரு பயணமும் சில கதைகளும்
8. படமின்றி அமையாது பயணம் -------------------------------------------------- பயணம் போனால் அங்கங்கே படம் எடுத்து அங்கே இங்கே போடுவது இன்றியமையாதது. ஆனாலும் கடந்த வருடங்களுக்கு இந்த வருடம் மானிடர்களிடையே இந்தப் போக்கு கொஞ்சம் குறைந்தது போலத் தெரிகின்றது. பூமியில் குப்பை, எவரெஸ்டில் குப்பை, விண்வெளியில் குப்பை என்பது போல டிஜிட்டல் குப்பை என்றும் ஒன்று உள்ளதா என்று தெரியவில்லை. இந்த 1 அல்லது 0 என்ற எண்களின் தொகுப்பாக இருக்கும் மொத்தத்தையுமே உடனடியாகவே பூமியில் இருந்து அழிக்க வேண்டிய அவசரம் ஒன்று வந்தால், அதை எப்படிச் செய்யலாம் என்ற யோசனையும் வந்தது. விமானத்தில், இருட்டில், சுற்றிவர எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க, நான் மட்டும் கொட்டக் கொட்ட முழித்திருந்தால், இப்படியான யோசனைகள் வரத்தான் செய்யும். வேற்றுக் கிரகவாசிகளையும், என்னுடைய டிஜிட்டல் குப்பை யோசனையையும் கலந்து ஒரு கதை வந்தால், அது இயக்குனர் ஸ்பீல்பேர்க்குக்கு அடுத்த ஒரு படத்திற்கு ஒரு உதவியாகக் கூட அமையலாம். இந்தியாவில் சமீபத்தில் நடந்த விமான விபத்து பற்றியும் ஒரு யோசனை வந்தது. விசாரணையின் முடிவு என்னவானது என்று தெரியவில்லை. ஒரு விமானியின் மேல் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிங்கம் மற்றும் பல காட்டு மிருகங்கள் தங்களின் இறுதி முடிவும், அந்த நாளும் தெரிந்தவுடன், கூட்டத்தை விட்டு தனியே போய் விடுமாம். அப்படியே தனியே எங்கோ போய், அவை தங்கள் வாழ்க்கைகளை தனியே முடித்துக் கொள்ளுமாம். பல வருடங்களின் முன் ஒரு நாள் காலையில் இங்கு வீட்டின் பின் வளவுக்குள் நிற்கும் கொய்யா மரமொன்றின் அடியில் ஒரு கறுப்பு பூனை படுத்திருந்தது. நான் அதன் அருகே போய்ப் பார்த்தேன். அது அசையாமல் கண்ணை மட்டும் மெதுவாகத் திறந்து பார்த்தது. நான் அதை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் மனைவியும் அதைப் பார்த்தார். என்ன, பூனை ஒன்று அசையாமல் படுத்திருக்குதே என்றார். இன்று அல்லது நாளை அதன் காலம் முடியப் போகுது போல, அதை அப்படியே விட்டு விடுங்கள் என்றேன். அடுத்த நாள் காலை அதன் காலம் முடிந்திருந்தது. அது ஏன் தேடி இங்கே வந்தது என்று தெரியவில்லை. அந்த இந்திய விமானியும் தன் முடிவை முன்னரே அறிந்திருந்தார் என்றால், அவர் மட்டும் தனியே எங்காவது போயிருந்திருக்கலாம். இப்படியே இருந்தால் 14 மணி நேரப் பயணத்தில் 14 ஆயிரம் யோசனைகள் வரும், அதனால் ஏதாவது சில படங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று சின்னத்திரையில் தேடினேன். 'Nebraska (நெப்ராஸ்கா)' என்ற படத்தை பற்றிய சிறிய விவரம் வித்தியாசமாக இருந்தது. 2013 ம் ஆண்டில் வெளியான அது ஒரு கறுப்பு - வெள்ளை படம். நெப்ராஸ்கா என்றவுடன் மனதில் வரும் பெயர் Warren Buffett. உலகப் பணக்காரராக மாறி மாறி வந்து போகின்றவர்களில் இவரும் ஒருவர். இப்பொழுது 95 வயது. நெப்ராஸ்காவிலிலேயே வசிக்கின்றார். முன்னர் அவரிடம் அலைபேசி இருக்கவில்லை என்றார்கள். இப்பொழுதும் இருக்கின்றதா என்று தெரியவில்லை.இவரை விட இவரின் தனிப்பட்ட செயலாளர் அதிக வரிகள் கட்டுவதாகச் சொல்லி, அமெரிக்காவின் வரி முறைமையை கேள்விக்கு உண்டாக்குபவர்களும் உண்டு. இவரின் வீடு கூட ஒரு சிறு ஊரில் இருக்கும் சாதாரண ஒரு சிறு வீடாகவே படங்களில் இருந்தது. அவருக்கு ஒரு தனிப்பட்ட செயலாளரும், பங்குச் சந்தையில் பங்குகளும் உண்டு என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், என் வாழ்க்கையும் அவர் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. நான் அவரை விட அதிகமாக அமெரிக்க அரசுக்கு வரி கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் போல. நெப்ராஸ்கா படம் போல நான் சில படங்களை முன்னரேயே பார்த்திருக்கின்றேன். ஒரு மிகவும் வயதான தந்தையும், மகனும் ஒரு நீண்ட பிரயாணம் போவதே கதை. படத்தின் ஆரம்பத்தில் தந்தைக்கும், மகனுக்கும், குடும்பத்துக்கும் இடையே மன விலகல்கள், மனஸ்தாபங்கள் என்பன இருக்கும். முதலில் மகன் தந்தையுடன் பயணம் போக மறுப்பார். பின்னர் வேறு வழியின்றி போவார். வழி வழியே நிகழும் சில நிகழ்வுகளால் தந்தையை மகனும், மகனை தந்தையும் புரிந்துகொள்வார்கள். இப்படியான முன்னர் பார்த்த ஒரு படத்தில் ஒரு தந்தையும் மகனும் பிரான்ஸிலிருந்து மெக்காவிற்கு போகின்றார்கள். இறுதியில் மெக்காவில் தந்தை இறந்து போகின்றார். நெப்ராஸ்காவில் தந்தை இறக்கவில்லை, ஆனால் இப்படியான ஒரு கதைக்கு இப்படியான சில நிகழ்வுகள் இருந்தே ஆக வேண்டும் என்பது போல காட்சிகள் வந்து கொண்டிருந்தன. படம் பரவாயில்லாமல் இருந்தது. சில காட்சிகளில் நடிகர்கள் நன்றாகவே ஒன்றிப் போய் இருந்தார்கள். சில இடங்களில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது போலவும் இருந்தது. சில நாட்களின் பின்னர் இந்தப் படத்தை பற்றிய விபரத்தை இணையத்தில் தேடிப்பார்த்தேன். தூக்கி வாரிப் போட்டது என்று தான் சொல்லவேண்டும். இந்தப் படம் ஐந்து ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது. கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்ககான விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும் பற்பல விருதுகள் உலகெங்கும். நான் தான் படத்தை சரியாகப் பார்க்கவில்லை போல. எனக்குள்ளும் ஒரு புளூ சட்டை மாறன் தூங்கிக் கொண்டிருக்கின்றார், அவர் அன்று விமானப் பயணத்தில் என்னுடன் சேர்ந்து முழித்து இருந்து இந்தப் படத்தை பார்த்திருக்கின்றார் போல. அடுத்த படமாக மிகவும் பிரபலமான, விருதுகள் வாங்கிய 'லிங்கன்' படத்தை தெரிவுசெய்தேன். நல்ல படம், சிறந்த இயக்குனர், பல விருதுகள் வாங்கிய படம் என்று எனக்கு நானே சொல்லி, புளூ சட்டை மாறனை இல்லாமல் ஆக்கினேன். படம் நன்றாகவே இருந்தது. சிரிக்காதீர்கள்.......... உண்மையிலேயே நல்ல ஒரு படம். ஆபிரகாம் லிங்கன் மீது பெரும் விருப்பம் எப்போதும் உண்டு. அவர் தெருவிளக்கில் படித்தார் என்ற தகவலும் (உண்மையோ பொய்யோ), அவரது கனிந்த முகவெட்டும், அதனுடன் ஒட்டிப் போகும் தாடியும் அவர் உண்மையில் என்ன செய்தார் என்பதையும் மீறி அவர் மீது மிக நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தது. லிங்கனாக நடித்திருந்தவர் அபாரம், நான் நினைத்திருந்தத லிங்கனையே கண் முன் நிறுத்தினார். இக்கட்டான சூழ்நிலைகளில் லிங்கன் சின்னச் சின்ன கதைகள் சொல்லுகின்றார். நிகழ்வுகளையே கதையாகச் சொல்லுகின்றார். அந்தக் கதைகளில் சிரிப்பும் இழையோடுகின்றது. எந்தச் சுழ்நிலையையும் தாண்டி, செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்கின்றார். ஒரு தலைவன் எனப்படுபவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனம் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றது. இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகின்றார். நல்ல தலைவர்கள் இப்படித்தான் இறக்க வேண்டும் போலவும். இனிமேல் இந்தப் பயணத்தில் எந்த படமும் பார்க்க முடியாது. லிங்கன் மனதை விட்டு இப்போதைக்கு போகமாட்டார். எப்படியோ நேரம் ஓடி, ஒரு காலத்தில் லிங்கனின் நாடாக இருந்த நாட்டில் விமானம் இறங்கியது. (முற்றும்.) ** அனபான கள நட்புகளுக்கும், உறவுகளுக்கும் மிக்க நன்றி. உங்களின் ஆதரவும், தொடர் வாசிப்பும், கருத்துகளுமே என்னை தொடர்ந்து எழுத வைத்தது.....................🙏.
PlaneLanding.jpg
ரஷ்யப் போரை நிறுத்தாவிடில் பேரழிவு தரும் ஆயுதப் போட்டி ஏற்படும் : ஐ.நா.வில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
உக்ரேனின் நேட்டோ ஆசையையும் ஐரோப்பிய ஒன்றிய கனவையும் நிறுத்தினால் சகலதும் சுபமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.இல்லையேல் நீங்கள் சொன்ன பேரழிவுதான்..☹
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை
இன்றைய கால கட்டத்தில் பல செய்தி ஊடகங்கள் சந்தடி சாக்கில் பொய்யான தரவு செய்திகளையும் ஒப்பேற்றி விடுகின்றன இதை சரி பிழை பார்க்க நேரம் காலம் சில சமயம் கிடைப்பது அரிது ஆகவே இந்த செய்தியை நிர்வாகம் தூக்கி விடுவது நல்லது நன்றி .
மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு
ஜேர்மனியினது பல மருந்து உற்பத்திகள் இந்தியாவில் தயாரிக்கப்படுபவை என நான் அறிந்தேன். இதற்கு மேல் யாம் அறியோம் பராபரமே.🙏
சிரிக்க மட்டும் வாங்க
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
மிளகாய்த்தூள். சொல்வழி கேக்காத எந்த தாட்டான் குரங்குக்கும் மாங்காயோடை மிளகாய் தூளை கலந்து வைச்சு பாருங்கோ ...பின்னங்கால் பிடரியிலை பட தலை தெறிக்க ஓடித்துலையும். 😂 வாற கிழமை சந்திப்பம்தானே. அப்ப இன்னொரு ஐடியா சொல்லுறன்.😄
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) இந்தியா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து அவுஸ்திரேலியா 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா இங்கிலாந்து 6)அவுஸ்திரேலியா - இலங்கை அவுஸ்திரேலியா 7)இந்தியா - பாகிஸ்தான் இந்தியா 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா நியூசிலாந்து 9)இங்கிலாந்து - வங்காளதேசம் இங்கிலாந்து 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அவுஸ்திரேலியா 11)இந்தியா - தென்னாபிரிக்கா இந்தியா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் நியூசிலாந்து 13)இலங்கை - இங்கிலாந்து இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் தென்னாபிரிக்கா 16)இலங்கை - நியூசிலாந்து நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் அவுஸ்திரேலியா 19)இலங்கை - தென்னாபிரிக்கா இலங்கை 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் நியூசிலாந்து 21)இங்கிலாந்து - இந்தியா இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் இலங்கை 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அவுஸ்திரேலியா 25)இந்தியா - நியூசிலாந்து இந்தியா 26)இலங்கை - பாகிஸ்தான் இலங்கை 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து இங்கிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் இந்தியா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? இந்தியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா இந்தியா இங்கிலாந்து நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) இந்தியா 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? மும்பை 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? விசாகப்பட்டினம் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? அவுஸ்திரேலியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? பாகிஸ்தான் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இங்கிலாந்து 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா
சமையல் செய்முறைகள் சில
புரட்டாதி வந்தாலே இப்பிடியான செய்முறைகளை தேடித்தேடி வாசிக்கச்சொல்லும். ஏனெண்டால் வீட்டு நிலைமை அப்படி.😂 உங்கடை நெத்தலி செய்முறையளுக்கு ஒருத்தர் ஓடி வந்து தாங்ஸ் பண்ணியிருக்கிறார். அந்த தாங்ஸ் ஆயிரம் கதை சொல்லும்.🤣
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களை கேட்டுப்பாருங்கள் இரத்தக்கண்ணீர் வடிப்பார்கள். பட சூட்டிங் இடத்தில் புதினம் பார்க்க வரும் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சால்வை என பல பரிசு பொருட்களை கொடுக்க அவர் நடிக்கும் பட தயாரிப்பாளரையே வாங்கி வைக்க சொல்வாராம். ஆதாரம் கன காலங்களுக்கு முன் வாசிப்புகளில் கண்டு கொண்டது.
டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்
அதெப்படி? 😂 மூலைக்கு மூலை சற்றலைட்,அது இது என தொழில் நுட்பத்தில் முன்னேறிய நீங்கள் இதிலை மட்டும் எப்பிடி சறுக்கிறியள்? 😎
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed