புதிய பதிவுகள்2

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

5 days 3 hours ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 28 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 28 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'மன்னன் மகல்லக்க நாகனில் இருந்து மன்னன் விசயகுமாரன் வரை' மகல்லக்க நாகன் [Mahallaka Naga] கஜபாகுகாமனிக்குக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் இராசவலியிலுள்ள மஹாலு மனா [Mahalu Mana] ஆகும். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தின்படி கஜபாகு காமினியின் மாமனார், மகல்லக்க நாகன் ஆகும். இருப்பினும், இராசவலிய, கஜபாகு மன்னரின் மைத்துனர் என்றும் கூறுகிறது. மகல்லக்க நாகனின் மகன் பதுதிஸ்ஸ (Bhatutissa / மகாவம்சத்தின் படி பதிகதிஸ்ஸ [Bhatikatiss] மற்றும் ராஜாவலியின் படி பதியதிஸ்ஸ [Bhatiyatissa] ) இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவருடைய மகன் கனித்ததிஸ்ஸ அல்லது கனிட்ட தீசன் [Kannitthatissa] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால், இராசவலியத்தில் அதற்கேற்ற அரசன் இல்லை. கனித்ததிஸ்ஸவின் மகன் குச்சநாகன் அல்லது சூளநாகன் [Khujjanaga] தீபவம்சத்தின்படி இரண்டு வருடங்களும், மகாவம்சம் 36-18ன்படி ஒரு வருடமும் ஆட்சி செய்தார். இராசவலியில் அதற்குரிய அரசன் இல்லை. குச்சநாகனின் இளைய சகோதரர் குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் (Kunjanaga / Kuncanaga / மகாவம்சத்தில் குஞ்சநாகன்) தனது சகோதரனைக் கொன்று ஒரு வருடம் ஆட்சி செய்தார் (மகாவம்சம் 36-19 இல் இரண்டு ஆண்டுகள்). இராசவலியத்தில் அதற்கேற்ற அரசன் இல்லை. சிறிநாகன் [Sirinaga] அரசனை வென்று பத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். தீபவம்சத்தில் கூறப்படாத சிறிநாகனைப் பற்றிய ஒரு கதை மகாவம்சத்தில் உள்ளது. இக்காலக்கட்டத்தில், இராசவலிய மற்ற இரண்டு வரலாற்று நூல்களிலும் இருந்து மிகவும் வேறுபட்டடு காணப்படுகிறது. இராசவலியிலுள்ள குடானா [Kudana] என்பது மற்ற இரண்டிலும் உள்ள சிறிநாகனுக்கு (சிறிநாகன் 1) சமமானதாக இருக்கலாம்? குடானா இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி சிறிநாகனின் மகன் அபய [Abhaya] இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். இருப்பினும், அவர் மகாவம்சத்தில் ஒகாரிக திஸ்ஸ [Voharikatissa] ஆகும். மற்றும் இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இராசவலியத்தில் இவன் அரசன் வெரிதிஸ்ஸ [Veritissa] ஆகும். அங்கும் அவன் இருபத்தி இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்ததாக கூறுகிறது. அபயவின் [Abhaya] இளைய சகோதரன் திஸ்ஸக [Tissaka], மன்னனுக்குப் பிறகு இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மகாவம்சத்தில் இவன் அரசன் அபயநாகன் [Abhayanaga] ஆக மாறியதுடன், ஆக எட்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்கிறான்; ஆட்சி காலம் முற்றிலும் இங்கு பெரிதாக வேறுபடுகிறது. தீபவம்சத்தில் கூறப்படாத ஒரு கதையை , மகாவம்சம் கூறுகிறது. அதாவது, அபயநாகன், தன் மூத்த சகோதரனின் மனைவியுடன் [ராணியுடன்] பாலியல் உறவு அல்லது காதல் விருப்பம் கொண்டிருந்தான் என்று கூறுகிறது. தீபவம்சத்தின்படி திஸ்ஸகவின் ஆட்சியின் போது உண்மையான [புத்த] மதத்தை சிதைக்க மதவெறி முயற்சிகள் இருந்தனவென்று கூறுகிறது. ஆனால் மகாவம்சத்தில் அத்தகைய முயற்சி ஒன்றும் கூறப்படவில்லை. இராசவலியவில் இவனுக்கு ஒத்த அரசன் அபா சென் [Aba Sen] ஆகும். திஸ்ஸகவின் மகன் சிறிநாக (இரண்டாம் சிறிநாகன்) இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இராசவலியவின்படி இவனுக்கு ஒத்த அரசன் சிறி நா [Siri Na] ஆகும். அங்கும் அவன் இரண்டு ஆண்டுகள் தான் ஆட்சி செய்தான். அடுத்து வந்த மன்னன் விஜய (Vijaya மகாவம்சத்தில் விசயகுமாரன் / Vijayakumara) ஒரு வருடம் ஆட்சி செய்தான். இராசவலியவின்படி இவனுக்கு ஒத்த மன்னன் விஜயிந்து [Vijayindu], ஆனால் அங்கு அவன் ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான் எனக் குறிக்கப்பட்டுள்ளது?. Part: 28 / The Kings who ruled after Vijaya and the related affairs / King Mahallanaga to king Vijayakumara Mahallanaga ruled after Gajabahukagamani for six years. He is the Mahalu Mana in the Rajavaliya. Mahallanaga is the father in law of Gajabahukagamani as per the Dipavamsa and the Mahavamsa. The Rajavaliya, however, says Mahalu Mana is the brother in law of the King Gajaba. Mahallanaga’s son Bhatutissa (Bhatikatissa as per the Mahavamsa and Bhatiyatissa as per the Rajavaliya) ruled for twenty-four years. His son Kannitthatissa ruled for eighteen years. There is no corresponding king in the Rajavaliya. Kannitthatissa’s son Khujjanaga ruled for two years as per the Dipavamsa and one year as per the Mahavamsa 36-18.There is no corresponding king in the Rajavaliya. Khujjanaga’s younger brother Kunjanaga (Kuncanaga in the Mahavamsa) killed his brother and ruled for one year (two years in the Mahavamsa 36-19). There is no corresponding king in the Rajavaliya. Sirinaga defeated the king and reigned for nineteen years. There is a tale about Sirinaga in the Mahavamsa, which is not in the Dipavamsa. The Rajavaliya differs much from the other two chronicles in this period. Kudana in the Rajavaliya could be the equivalent of Sirinaga (say Sirinaga 1) in the other two chronicles. Kudana reigned for twenty years. Sirinaga’s son Abhaya reigned for twenty-two years as per the Dipavamsa. However, he is the Voharikatissa in the Mahavamsa and ruled for twenty-two years. The corresponding king in the Rajavaliya is Veritissa, and he reigned for twenty-two years. Abhaya’s younger brother Tissaka succeeded the king and reigned for twenty-two years. The corresponding king in the Mahavamsa is Abhayanaga and he ruled for eight years; lengths of reign are radically different. There is a tale about Abhayanaga’s affair with the queen, his elder brother’s wife, in the Mahavamsa, which is not in the Dipavamsa. There were sectarian attempts to corrupt the true religion during the reign of Tissaka as per the Dipavamsa but there is no such attempt in the Mahavamsa. The corresponding king in the Rajavaliya is Aba Sen. Tissaka’s son, Sirinaga (Sirinaga2), ruled for two years. The corresponding king as per the Rajavaliya is Siri Na and he too ruled for two years. The succeeding king is Vijaya (Vijayakumara in the Mahavamsa) ruled for one year, and the corresponding king in the Rajavaliya is Vijayindu and he ruled for six years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 29 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 28 https://www.facebook.com/groups/978753388866632/posts/31505070985808138/?

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சியா? சென்னையில் இலங்கை பெண்ணிடம் விசாரணை

5 days 3 hours ago
காகத்துக்கு... கனவிலையும், "பீ " தின்னுற நினைப்புதான். இந்தியனுக்கு.... நெடுகவும், விடுதலைப் புலிகள் நினைப்புதான். ஏனென்றால்.... அமைதிப்படை என்ற போர்வையில் வந்த இந்திய ராணுவத்துக்கு, விடுதலைப் புலிகள் கொடுத்த அடியை... ஜென்மத்துக்கும் மறக்க மாட்டாங்கள்.

குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?

5 days 3 hours ago
பாஞ்ச் அண்ணே..... உடலில் எவ்வளவு துர்நாற்றம் வீசினாலும், எல்லாவற்ரையும் ஒரே அமுக்காக அமுக்கி, நறுமணம் வீச செய்வது, Statement parfum. 😂 இந்தப் போத்தலை நீங்களும் வாங்கிப் பாவித்தால்... குளிக்கவே மனம் வராது. 🤣

விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சியா? சென்னையில் இலங்கை பெண்ணிடம் விசாரணை

5 days 3 hours ago
கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் செய்தியாளர் 26 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செயல்படாத வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 42 கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக போலி ஆவணங்களை மேரி ஃபிரான்சிஸ்கா தயாரித்தார் என்பது குற்றச்சாட்டு. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர்கள் மறுக்கின்றனர். என்ன நடந்தது? எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன? சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த மேரி ஃபிரான்சிஸ்கா என்ற 45 வயது இலங்கைப் பெண், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், விமான நிலையத்தில் பணியில் இருந்த குடியேற்ற பணியகத்தின் அதிகாரி (Bureau of Immigration) சதாசிவம், மேரி ஃபிரான்சிஸ்கா குறித்து சில தகவல்களை சென்னை கியூ பிரிவு போலீஸிடம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து மும்பை செல்வதற்கு மேரி ஃபிரான்சிஸ்கா திட்டமிட்டிருந்ததாகவும் அவரிடம் இந்திய பாஸ்போர்ட், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, இலங்கை பாஸ்போர்ட்டின் அசல் ஆவணம் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் குடியேற்ற பணியக அதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த ஒருவர், முறைகேடான வழியில் இந்திய அரசின் ஆவணங்களை வைத்திருந்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இந்த தகவலை சென்னை கியூ பிரிவு சிஐடி காவல் ஆய்வாளர் வேலவனிடம் குடியேற்ற அதிகாரி சதாசிவம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே தகவல், தமிழ்நாடு அரசின் அரசிதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. 2021-ல் மேரி ஃபிரான்சிஸ்கா கைது "இலங்கையைச் சேர்ந்த மேரி ஃபிரான்சிஸ்கா, இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார். அவர் சென்னை அண்ணா நகரில் தங்கியுள்ளார். அவரின் சுற்றுலா விசா காலாவதியாகிவிட்டதால் இந்தியாவில் வசிப்பதற்கான ஆதாரங்களை முறைகேடாக பெற்றுள்ளார்" என்று கியூ பிரிவு சி.ஐ.டி குற்றம் சுமத்தியது. இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மேரி ஃபிரான்சிஸ்காவை கைது செய்து நீதிமன்றக் காவலில் கியூ பிரிவு சி.ஐ.டி போலீஸ் அடைத்துள்ளது. காவல்துறையில் மேரி ஃபிரான்சிஸ்கா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 7 பேர் வெவ்வேறு தருணங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். '42 கோடி ரூபாயை சட்டவிரோதமாக எடுக்க திட்டம்' காவல்துறை நடத்திய விசாரணையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான பாலைய்யா, உமாகாந்தன் ஆகியோருடன் இணைந்து மேரி ஃபிரான்சிஸ்கா குற்றச்செயலில் ஈடுபட்டதாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது. இவர்கள் இந்தியா வந்ததற்கான பின்னணி குறித்தும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ஹமீதா ஏ லால்ஜி, அர்ஷியா ஏ லால்ஜி மற்றும் இஸ்கந்தர் ஏ லால்ஜி (Iskander-A-Laljee) ஆகியோரின் செயல்படாத வங்கிக் கணக்குகளில் (Inoperative bank accounts) இருந்து 42 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 172 ரூபாயை மோசடியாக எடுக்க முயற்சித்ததாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கவும் அந்த அமைப்பை ஒருங்கிணைப்பதற்காகவும் இந்த பணத்தை எடுக்க முயன்றதாக கியூ பிரிவு சி.ஐ.டி கூறுகிறது. புழல் சிறையில் மேரி ஃபிரான்சிஸ்காவிடம் விசாரணை இந்த வழக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு மறுவழக்கு பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் புழல் பெண்கள் சிறையில் மேரி ஃபிரான்சிஸ்கா அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதானவர்களில் மேரி ஃபிரான்சிஸ்கா தவிர மற்ற அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக பணப் பரிவர்த்தையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேரி ஃபிரான்சிஸ்காவிடம் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதற்காக, பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதியைப் பெற்றனர். கடந்த செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் புழல் சிறையில் வைத்து சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக மேரி ஃபிரான்சிஸ்காவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. 'ஜாமீனில் எடுக்க கூட ஆள் இல்லை' படக்குறிப்பு, மேரி ஃபிரான்சிஸ்காவை ஜாமீனில் எடுக்க உறவினர்கள் வரவில்லை என்கிறார் அவரது வழக்கறிஞர் பா புகழேந்தி "வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் மேரி பிரான்சிஸ்கா ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் புழல் பெண்கள் சிறையில் இருக்கிறார்" எனக் கூறுகிறார், மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர் பா.புகழேந்தி. மேரி ஃபிரான்சிஸ்காவின் உறவினர்கள் கனடாவில் வசிப்பதாகக் கூறும் பா.புகழேந்தி, "தமிழ்நாட்டுக்குள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக அவர் வந்துள்ளார். அவருடன் கைதான நபர்கள் பலரும் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டனர். ஆனால், அவரை ஜாமீனில் எடுப்பதற்குக் கூட உறவினர்கள் முன்வரவில்லை" என்கிறார். அவரது மனநலன் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் பா.புகழேந்தி, "புழல் பெண்கள் சிறையில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போது முன்னுக்குப்பின் முரணாகவே அவர் பேசினார்" எனத் தெரிவித்தார். 'எந்த ஆதாரமும் இல்லை' போலி பாஸ்போர்ட் மற்றும் மோசடி வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக மேரி ஃபிரான்சிஸ்கா உள்ளதை மேற்கோள் காட்டிப் பேசிய பா.புகழேந்தி, " ஹவாலா பணம் கைமாறியுள்ளதாக காவல்துறை கூறினாலும் அதனை புலிகள் அமைப்புடன் தொடர்படுத்திப் பேசுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்கிறார். "வழக்கில் கைதானவர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் பணம் அனுப்பியதாக என்.ஐ.ஏ கூறுகிறது. பொதுவாக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், தங்களின் உறவினர்களுக்குப் பல்வேறு வழிகளில் பணம் அனுப்புவது இயல்பு. அதை வைத்தே இந்த வழக்கைக் கையாள்வதாகவே பார்க்கிறேன்" எனவும் குறிப்பிட்டார். மேரி ஃபிரான்சிஸ்கா தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக மேரி ஃபிரான்சிஸ்காவிடம் அமலாக்கத்துறை விசாரணை 'பணத்தை எடுக்கவில்லை' மேரி ஃபிரான்சிஸ்கா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரும் அதே காலகட்டத்தில் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். "அனைவரும் சேர்ந்து கூட்டம் போட்டதாகவும் சொத்துகளை வாங்குவதற்கு முயற்சி செய்ததாகவும் என்.ஐ.ஏ கூறுகிறது. இவர்களை உமா காந்தன் என்ற நபர் இயக்கியதாகக் கூறுகின்றனர். ஆனால், மும்பை வங்கியில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை இவர்கள் எடுக்கவில்லை" எனக் கூறுகிறார், பாஸ்கரனின் வழக்கறிஞர் ஷர்புதீன். இந்த வழக்கில் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என, கைதான நபர்கள் கூறுவதாகவும் சர்புதீன் தெரிவித்தார். மேரி ஃபிரான்சிஸ்கா மீதான வழக்கு குறித்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் மத்திய அரசின் வழக்கறிஞர் ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. "வழக்கு குறித்து கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd72z8lpwqlo

கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

5 days 4 hours ago
உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் இறுதி அஞ்சலி! குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு பிக்குகளின் பூதவுடல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) இறுதி அஞ்சலி செலுத்தினார். கடந்த புதன்கிழமை நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் உயிரிழந்தனர். இதில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் உள்ளடங்குவதுடன் மேலும், சில பிக்குகள் காயங்களுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்கள் மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) இப்பூதவுடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். https://athavannews.com/2025/1448715

குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?

5 days 4 hours ago
சாத்தான்... ஜேர்மனியில் தண்ணிப் பஞ்சம் வர சந்தர்ப்பமே இல்லை. பெரும்பாலான ஊரை சுற்றி, நதிகள் ஓடிக் கொண்டே இருக்கும். எனக்கு சோம்பேறித்தனம் என்றும் சொல்ல முடியாது. எப்பவும், ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். முக்கிய காரணம்.... அந்த சிவன் கோயில் சாத்திரியார்தான். அவர்தான்... என்னை பயப்பிடுத்தி வைத்திருக்கிறார். 😂

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

5 days 4 hours ago
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? தென்னாபிரிக்கா ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2) இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4) பாகிஸ்தான் - வங்காளதேசம் 5) இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6) அவுஸ்திரேலியா - இலங்கை 7) இந்தியா - பாகிஸ்தான் 8) நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9) இங்கிலாந்து - வங்காளதேசம் 10) அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11) இந்தியா - தென்னாபிரிக்கா 12) நியூசிலாந்து - வங்காளதேசம் 13) இலங்கை - இங்கிலாந்து 14) அவுஸ்திரேலியா - இந்தியா 15) தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16) இலங்கை - நியூசிலாந்து 17) பாகிஸ்தான் - இங்கிலாந்து 18) அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19) இலங்கை - தென்னாபிரிக்கா 20) நியூசிலாந்து - பாகிஸ்தான் 21) இங்கிலாந்து - இந்தியா 22) இலங்கை - வங்களாதேசம் 23) பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24) அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25) இந்தியா - நியூசிலாந்து 26) இலங்கை - பாகிஸ்தான் 27) அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28) இங்கிலாந்து - நியூசிலாந்து 29) இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? அவுஸ்திரேலியா 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? வங்காளதேசம் 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா இந்தியா நியூசிலாந்து 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) அவுஸ்திரேலியா இந்தியா 34) இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) அவுஸ்திரேலியா 41, 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41, 42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? விசாகப்பட்டினம் 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? இந்தோர் 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? பாகிஸ்தான் 38) இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? வங்காளதேசம் 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? இந்தியா 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? வங்காளதேசம் 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? ஆம் 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? ஆம் 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா 46) இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா 47) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா பதில்கள் தடித்த கறுத்த எழுத்துக்களில் தந்துள்ளேன். கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு!

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

5 days 4 hours ago
வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன் பெண் : மோனிகா பெலூஜி எதிர்த்தா எனர்ஜி தலையே சுத்தவீக்கும் சூரவளி பொண்ணாச்சு பெண் : பட்டுனு பாத்தாலே பல்ஸ் ஏத்தும் பாடி கொடுவா மீனெல்லாம் கூத்தாடுமே இரவ கலராக்கும் ஜிலேபி லேடி சால்ட்டும் நான் தொட்டா ஸ்வீட்டாகுமே ஆண் குழு : மோனிகா மை டியர் மோனிகா மை டியர் மோனிகா லவ் யூ மோனிகா பேபிமா மோனிகா கிச்சுகிச்சுமா சிக்கிகிச்சு மா ஹம்மிங் : ஜும் ஜும் ஜும் ஜும்மடா ஜும்மா ஜூம் ஜும் ஜம் ஜும் ஜும்மடா ஜும்மா ஜூம் லக லக லக லக லக ஜும் ஜும் ஜும் ஜும்மடா ஜும்மா ஜூம் ஆண் : டேய் ஊதுடா அதை ஜூம் ஜூம் ஜூம் ஆண் : என்ன தொலைய வைக்குறியே கொஞ்சம் கொலைய வைக்குறியே உன்ன அடைய வைக்குறியே என் பகல் கனவுலயே ஆண் : உன் வடிவம் ஒரு கிளாசிக்கு அதை பாத்தா ஆவது ட்ராபிக்கு ஒரு உண்மை சொல்லவா (வேணா வேணா) சரி கொஞ்ச சொல்லட்டுமா எனக்கு சொத்து சுகம் வந்தா மாத்திகுறேன் உன்தா பத்தலனா மாச மாசம் கட்டுறேன் சந்தா பெண் : உரசாம பத்திக்கவா உதட்டோரம் தித்திக்கவா இருக்காத ஒத்தையில ஒத்தையில ஒருவாட்டி சந்திக்கவா மயங்காட்டி தண்டிக்கவா தயங்காத மெத்தையில மெத்தையில பெண் : சாகும் நேரத்தில் பொலம்பி அழுவாத பூஜை ஆட்டத்தில் இன்னோசென்ட் நானா தொல்லை வறுமை கோலத்தில் நேர்மை பாக்காத இளமை காலத்தில் டீசென்சி நல்லா இல்ல பெண் : நிலவ செவப்பாக்கும் தஞ்சாவூர் காரி மனச ரெண்டாக்கி வரவா கிள்ள இரும்ப கரும்பாக்கும் பப்பாளி லாரி பாட்ஷா கைபட்டு கவுந்தேன் மெல்ல.........! --- மோனிகா பெலூஜி ---

குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?

5 days 6 hours ago
எங்கள் வீட்டிற்கு இனிமேல் சிறீத்தம்பி வந்தால் நாங்கள் அனைவரும் மாஸ்க் போட்டுக்கொண்டுதான் அவருடன் பேசுவோம் என்று இன்றுமுதல் உறுதி எடுத்துக்கொண்டுள்ளோம்.😷

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

5 days 7 hours ago
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்- பொதுமக்கள் , பொலிஸார் இடையில் பதற்றம்! மன்னார் பகுதியில் நேற்று இரவு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மன்னர் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன் கழகம் அடக்கும் பொலிஸார் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில்வண்ணார் நகரை நோக்கி கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் அங்கு ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. கழகம் அடக்கும் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. https://athavannews.com/2025/1448699

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

5 days 7 hours ago
சுவைப்பிரியன்... மாங்காய் - மிளகாய்த்தூள் மிக்சிங் மருந்தை குரங்குகளுக்கு வைத்து.... எவ்வளவு வெற்றியளிக்குது என்று எமக்கும் அறியத் தாருங்கள்.
Checked
Thu, 10/02/2025 - 13:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed